நித்திலப் பேரொளி-3

ஆதேஷ், அவனது மாமா அருள்மொழி மற்றும் அவனது உடன் பிறந்த இரட்டையான லிங்கேஷ் மூவரும் வனக்குடிலின் உணவுக் கூடத்தில் ஒரு வட்ட மேஜையைச் சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள்.

அருள்மொழி இவனின் ஆஸ்தான ஆலோசகர் என்றால் லிங்கா சிறந்த தோழனாக இருந்தான்.

வாரம் ஒரு முறை இப்படி கூடி தனது தொழில் பற்றியும் தங்களது பரம்பரைத் தொழில் பற்றியும் கலந்தாலோசிப்பது வழக்கமாக இருந்தது.

அது ஒரு வெள்ளிக் கிழமையின் முன்மாலை நேரம்.   பாரம்பரிய கேரளக் கட்டிடக்கலை முறையைப் பயன்படுத்தி அந்த உணவுக் கூடம் அமைக்கப்பட்டிருந்தது.  இந்த கட்டிட முறைகளில் ஆணிகள் பயன்படுத்தப்படுவது இல்லை, அதற்குப் பதிலாக மர இணைப்பு நுட்பங்களைக் கொண்டு கட்டப்படுகிறது. ஆதேஷ் இங்கு பயன்படுத்தி இருக்கும் இந்த இணைப்பு நுட்பத்திற்கு படவிலானி என்று பெயர்.

ஆங்காங்கே மக்கள் அமர்ந்து சிற்றுண்டி மற்றும் காபி தேனீர் அருந்திக் கொண்டிருந்தனர்.

இவர்கள் மூவருக்கும் ஆர்டர் செய்த கும்பகோணம் டிகிரி காபி வந்தது.  ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டவர்கள் ரசித்து ருசித்து அருந்தலானார்.

“என்ன சொல்லுங்க மாமா, இந்த காபிக்கு ஒரு மணமும் ருசியும் இருக்கு, இட்ஸ் எ டிவைன் பீலிங் (அது ஒரு தெய்வீக உணர்வு), இறைவனை வேண்டி பல நாள் தவமிருந்த பிறகு பட்னு ஒரு நாள் அவர் முன்னாடி வந்து இந்தா பிடிச்சுக்கோன்னு ஒரு வரம் கொடுத்தா எப்படி இருக்கும், அப்டி இருக்கு” என்ற ஆதேஷ்

“பஸ்ட் டிகிரி டிக்காச்சனில் தண்ணி கலக்காத பாலை ஊற்றி கொஞ்சம் இனிப்பு கலந்து…ம்ம்ம் பேஷ்… இதுக்காகவே எத்தனை ஜென்மம் வேணும்னாலும் பிறக்கலாம், இல்ல லிங்கா” லயித்திருந்தான் காபியில்

இவனின் காபிக்கான வர்ணனையில் சிரித்த லிங்கா, “நீ எதைத் தான் டா ரசிக்கல, ரோட்டில் கல்லு மண்ணைக் கூட ரசிக்கற.  உன்னோட பிரகதி ஒரு லிங்கமா தான் இருக்கார்.  அப்டி என்ன இருக்கோ அவர்ட், அதைப் பார்த்து தினமும் பிரமிக்கிற”

“போடா இடியட், கல்லு மண்ணுன்றது  கவிதைடா, யூ நோ ஒன் திங்க், ஒரு பிரபல மொழியியல் கோட்பாடு சொல்லுது, சில பகுதியைச் சார்ந்த மக்கள் இந்த காபியில் உள்ள ‘சிக்கரி’ என்ற மூலப்பொருளை ‘டைகரி’ என்று தவறாக உச்சரித்ததாகவும், அது காலப்போக்கில் ‘டிகிரி’ என்ற சொல்லாக உருவானதாகவும். இன்டெரெஸ்ட்டிங் இல்ல” சிலாகித்தான் ஆதேஷ்

“ஹாஹாஹா…எங்க இருந்து சாமி இதெல்லாம் படிப்ப, எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் வச்சுருக்க.  ஆனா பாரு விக்ரமச் சேரமான் முன்னே மட்டும் வாய் பூட்டு போட்டுடும்” லிங்கா சிரிக்க

“ஆமா நான் ஒன்னு சொன்னா அவர் பத்து பதில் சொல்லுவார், தேவையா எனக்கு, தென் அம்மாவும் அத்தையும் பேசாதே பெரியவனே, அப்பா தானே பொறுத்து போயா, கருத்து சொல்லாதேன்னுவாங்க” என இவன் நீட்டி முழக்கினான்.

“ஹாஹாஹா…ஆமா இந்த கேசவனை வேலையில் இருந்து தூக்கிட்டியா? கிச்சனில் ஒரு சமையல்காரர் குறைவாங்களே என்ன பண்ற ஆதி”  இளையவர்களின் சம்பாஷணையை மென் சிரிப்போடு கேட்டிருந்த அருள்மொழி விபரம் கேட்க

“ஆமா மாமா, தெரியும் தானே அவனைப் பத்தி உங்களுக்கு.  ஆள் பத்தல தான், தேடிட்டு இருக்கேன். பார்க்கலாம்” என்றவனை சலீம் தேடி வந்தான்

“சார், கிளம்பலாமா?” என்று கேட்க

“நீ உட்கார்ந்து ஏதாவது குடிச்சிட்டு வா டா, தென் கிளம்பலாம்” என்றான் ஆதேஷ்

“எங்க போறீங்க ஆதி, ஏதாவது மீட்டிங்கா?” என லிங்கா கேட்க

“மீட்டிங் இல்ல பட் மீட்டிங் மாதிரி” என்றான் புன்னகையோடு

“என்னடா குழப்புற” என புரியாது லிங்கா பார்க்க

“புரியனும் ஆனா புரியக் கூடாது, எங்க சாரை என்ன நினைச்சீங்க லிங்கா சார்” தனக்கான காபியை அருந்திக் கொண்டே சொன்னான் சலீம்

“டேய் என்னைக் கேலி பண்ணறது இருக்கட்டும், முதலில் காபிக்கு சுகர் போட்டுக்க நீ” என தன் அருகிலிருந்த இனிப்புக் கிண்ணத்தை சலீம் புறம் நகர்த்தினான் ஆதேஷ்

“அச்சோ மறந்துட்டேன் பாருங்க, அது தான் கசக்குதா” என்ற சலீம் இனிப்பைக் கலந்து அருந்தலானான்

“நம்ம மெடிக்கல் காலேஜ் பக்கம் ஒரு தெருவோரக் கடை இருக்கு, வித்தியாசமான ஆனா நல்ல ஆரோக்கியமான உணவு கிடைக்கும்ன்னு சலீம் சொல்றான்.  போய் பார்க்கலாம்ன்னு நினைக்கிறேன்.  நம்ம ரெஸ்டாரன்டில் பயன்படுத்தலாம் இல்லையா” என்று தன் தாடையைத் தடவியவாறு ஆதேஷ் சொல்ல

“சரி அப்போ நாங்களும் வீட்டுக்கு கிளம்பறோம். என்ன மாமா கிளப்பலாமா” என லிங்கா மாமனைப் பார்க்க

” ஓகே ஆதி, டின்னர்ல மீட் பண்ணலாம்” என எழுந்து கொண்டார் அருள்மொழி.

சலீமும் தயாராகிவிட இருவரும் ஆதேஷின்  மகிழுந்து இருக்கும் இடத்திற்கு வந்தார்கள்.

இன்றைய இப்பயணமும் சந்திப்பும் தன் வாழ்க்கையை மாற்றும் என்று யாராவது சொன்னால் கண்டிப்பாக ஆதேஷ் நம்பி இருக்க மாட்டான்.

காலம் தனக்கான கணக்குகளை கைகளில் வைத்துக் கொண்டு காத்திருந்தது.

தஞ்சையின் மருத்துவக் கல்லூரி நுழைவு வாயிலில் இருந்து ஐம்பது மீட்டர் தூரத்தில் இருந்த அந்த தெருவோரக் கடைக்கு அருகில் வந்து தனது காரை நிறுத்தினான் ஆதேஷ்.

சடார் என ஒருவனின் கன்னத்தில் அடித்த  சுடிதார் போட்ட அழகிய பெண்ணொருத்தி ஆக்ரோஷமான காளி அவதாரம் எடுத்திருந்தது மாதிரி நின்று கொண்டிருந்தாள் அந்த தெருவோர தள்ளுவண்டி கடையில் உட்புறமாக.

அக்கினியை அவளின் கண்களின் கருவிழியில் யாரோ பொருத்திவிட்டது போன்று இருந்தது.

என்ன ஆச்சு என கேட்டுக் கொண்டு கூட்டம் கூடியது. அடி வாங்கியவன் முன் நாற்பதுகளில் இருந்தான். அடி கொடுத்தவள் இருபத்து ஐந்து மதிக்கத்தக்க தோற்றத்தில் இருந்தாள்.

“என்ன ஆச்சு நித்திலாம்மா, ஏன் அடிச்சே” ஒரு வாடிக்கையாளர் போல அக்கறையோடு வினவ

“கேப்பை புட்டு கேட்டான் சார் இந்த ஆளு, கொடுத்தா தட்டைப் பிடிக்கிற சாக்கில் என் கையைப் பிடிச்சுட்டு, நைட்டுக்கு…தப்பா பேசறான் சார்” சொல்ல முடியாமல் கண்களில் கண்ணீர் கோர்க்க நின்றாள்

அவளையே பார்த்திருந்த ஆதேஷுக்கு அவளை அணைத்துக்  கொள்ளும் பேராவல் பிறந்தது கண்டு திடுக்கிட்டுப் போனான்.

‘என்ன மடத்தனமான யோசனை எனக்கு, பாவம் அவள் நியாயமா ஒரு தொழில் செய்கிறாள். இந்த சமூகம் பெண் என்பதால் இழிவு படுத்துகிறதா, என்ன திமிர் இந்த ஆளுக்கு.  இன்னும் நாலு கொடுத்திருக்கணும் இவள்” என நினைத்துக் கொண்டான்

பிறகு ஆள் ஆளுக்கு அந்த மனிதனின் சட்டைப் பிடிக்க ஒரு களேபரம் நடந்தது.

யாருக்கோ ஏதோ என்று ஒதுங்காமல் தனக்கானதாக நினைக்கும் சமூகம் தான் நம்முடையது.

ஒரு பதினைந்து நிமிட சலசலப்புக்கு பிறகு கூட்டம் திட்டிக் கொண்டே நகர்ந்து சென்றது.

அந்த யுவதியும் தனது அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்

அதன் பிறகு தான் அந்த தள்ளுவண்டியில் எழுதி இருந்த வாசகத்தைப் பார்த்தான் ஆதேஷ்.

‘தெருவோரம் தேடி உண்போம், உணவே மருத்துவம் உணர்வோம் மகத்துவம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது  கண்டு புன்னகைத்துக் கொண்டான்

“சலீம் உன் அக்காட்ட பேசணுமே, பார்க்க பத்ரகாளி வேஷத்தில் இருக்காங்க. என்ன செய்யலாம்?” ஆதேஷ் சலீமைப் பார்க்க

“நித்திக்கா ரொம்ப ஸ்வீட் சார், இந்த மாதிரி மனுசனுக்கு பத்ரகாளி வேஷமில்லாம, பார்பி டால் சேஷமா எடுக்க முடியும்?” கேலி பேசிய சலீம் முன்னே நடந்தான்

“ஹேய் சலீம்… வா வா வா…என்ன ஒரு வாரமா இந்த பக்கம் ஆளைக் காணல, உன் சேர மன்னன் எப்டி இருக்கார்” தன் வேளையில் ஆழ்ந்திருந்த நித்திலா மெல்லிய புன்னகையுடன் கேட்டாள்

அவள் தன்னைத் தான் குறிப்பிடுகிறாள் என புரிந்து கொண்ட ஆதேஷ் தன் கீழுதட்டை கடித்து புன்னகைத்துக் கொண்டான்

“க்கா, மன்னன் உங்க கடைக்கு விஜயம் செய்திருக்கிறார்” சலீம் சிரிக்க

சட்டென நிமிர்ந்து பார்த்த நித்திலா தன் நுனி நாக்கைக் கடித்துக் கொண்டாள்

அவளது அத்தனை அசைவுகளையும் தன்னை அறியாமலே தன்னுள் வரித்துக் கொண்டான் சேர மன்னன்

நொடி நேரத்தில் சுதாரித்துக் கொண்டவள், “ஹலோ சார், சலீம் உங்களை ராஜ பரம்பரைன்னு சொல்வான், அது தான் நானும் கேட்டுட்டேன். சாரி தப்பா எடுத்துக்காதீங்க” எந்தவித அலட்டலும் தயக்கமும் இன்றி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவள், தான் அவனை கேலி செய்தது தவறோ என வருத்தமும் தெரிவித்தாள்.

“இட்ஸ் ஓகே மிஸ் நித்திலா, சேர மன்னனின் வழித்தோன்றல் சேர மன்னன் தானே, தப்பில்லை” இவன் முகம் புன்னகையைத் தத்தெடுத்திருந்தது.

“என்ன சார் சாப்பிடறீங்க, உனக்கு என்ன வேணும் சலீம்?” தன் எதிரே கேட்பவர்களுக்கு கொடுத்துக் கொண்டே வினவினாள்.

“சாரி மிஸ்.நித்திலா, உங்களை டிஸ்டப் செய்றோம்ன்னு நினைக்கிறேன். நீங்க எப்போ முடிப்பீங்க, சொல்லுங்க அப்போ வரோம் நாங்க” அவளது பிஸியான சூழ்நிலையைக் கண்டு இவன் தயங்க

“அதெல்லாம் பிரச்சனை இல்லை சார், உங்களுக்கு ஏதாவது தர்றேன் சாப்பிடுங்க, இன்னும் அரைமணி நேரத்தில் கடையை மூடிவிடுவேன். பிறகு பேசலாம்” என்றவள்

“ம்ம்.இந்த வெள்ளைச் சோளம் அதாவது சொர்க்கம்ன்னு இங்கிலீஷுல சொல்வாங்க, அதில் ஒரு கொழுக்கட்டை பண்ணியிருக்கேன் சார், சாப்பிடுங்க நல்லா இருக்கும்” என்றவள் இரண்டு தட்டுக்களில் வைத்தது ஆளுக்கு ஒன்று தந்தாள்.

ஒரு விள்ளல் பிட்டு வாயில் இட்டவனுக்கு அதன் ருசி நாவில் ஒட்டிக் கொண்ட உணர்வு.

“ம்ம் அப்பா, இட்ஸ் டிவைன், மெல்டிங் இந்த மை மவுத் (வாயில் கரைகிறது)” என்றான் அத்தனை ருசித்து

“ஆரம்பிச்சசுட்டார் எங்க தல, அக்கா நீங்க என்ன கொடுங்க டிவைன் தான் வரும் இங்க இருந்து.  அப்டி ஒரு ஜென்மாந்திர பந்தம் எங்க தலைக்கும் அந்த டிவைனுக்கும்” நொடித்தான் சலீம்

“ஹாஹாஹா….” சிரித்தவள் ” இந்த வெள்ளைச் சோளத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு சார், அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, இயற்கையாகவே குளூட்டன் இல்லாத ஒரு பழங்கால தானியம் இது. செரிமானத்திற்குத் தேவையான அதிக நார்ச்சத்து, இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும் மெதுவாகச் செரிக்கும் மாவுச்சத்து, மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய பி வைட்டமின்கள் இப்டி எல்லாம் உள்ள ஒரு செறிவான தொகுப்புன்னு வச்சுக்கோங்க” புன்னகை இவளில்

தன் புருவங்களை வெற்றியோடு முட்டி இறக்கினான் ஆதேஷ்.  விற்பனை செய்பவளின் செறிந்த அறிவு இவனுக்கு ஆச்சரியம் அளித்தது.

மௌனமாக உண்டு கொண்டே அவளின் அருகே அந்த வண்டியில் வைக்கப்பட்டிருந்த சிறுதானிய உணவுகளின் பட்டியலைப் பார்வையிட்டான்.

அக்கடை முழுக்க முழுக்க சிறுதானிய உணவுகளை வழங்கும் இடமாக இருந்தது.

நாள் ஒன்றுக்கு ஒரு தானியம் என்பது இவளது விற்பனை யுக்தி.  இன்று வெள்ளைச் சோளம்.

வெள்ளைச் சோளத்தில்  கஞ்சி, புட்டு, காரக் கொழுக்கட்டை, இனிப்புக் கொழுக்கட்டை, காரப் பணியாரம், இனிப்புப் பணியாரம், குழந்தைகளைக் கவரும் வண்ணம் வாஃபிள்ஸ் இப்படி மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்த உணவுகளாகவும்  இருந்தது.

ஒருவாறாக அன்றைய நாளுக்கான விற்பனையை முடித்தவள், “அப்புறம் சொல்லுங்க சார், ஏதோ என்ட இருந்து உங்களுக்கு சில ஐடியா வேணும்ன்னு சலீம் சொன்னான். ஐம் வெரி ஹேப்பி இப் ஐ கேன் ஹெல்ப் யூ ( உங்களுக்கு உதவ முடிந்தால் நான் மகிழ்வேன்) என்றாள்

“மிஸ் நித்திலா,  இப் யூ டோன்ட் மைன்ட், நீங்க என்ன படிச்சிருக்கீங்க?” அவளின் அழகிய முகவடிவை அளந்தவாறே கேட்டான்

“பிஎஸ்சி புட் அண்ட் நியூட்ரிஷன் சார், எனக்கு இந்த சிறுதானிய உணவு மேல் ஒரு காதலன்னு கூட சொல்லலாம்” புன்னகை இவளில்

“இந்த காரக் கொழுக்கட்டை எப்டி பண்றது?”

“சிம்பிள் தான் சார், சோள மாவை முதல்ல நல்லா வறுத்துக்கணும், வாணலியில் ஒரு சட்டி வச்சு கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, கிள்ளிய காய்ந்த மிளகாய் அண்ட் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, கொஞ்சம் உப்பு தண்ணீர் சேர்த்து மாவைக் கொட்டி கிளறணும்.  கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு மாவு திரண்டு வந்ததும் ஆற வச்சு பிறகு கொழுக்கட்டை பிடித்து வேட்டில் அவிச்சு எடுக்க வேண்டியது தான்”  செய்முறையை தெளிவாக விலக்கினாள்.

“நீங்க உங்க தொழில் ரகசியம் எல்லாம் சொல்றீங்களே, யாராவது திருடிவிட்டால் பரவாயில்லையா?” மெலிதாக சிரித்தான்

“நல்ல விஷயத்தை யார் செய்தால் என்ன சார், ரகசியம் தான் அடுத்தவங்களுக்கு, பட் என் கைப்பக்குவம் என்னிடம் தான் இருக்கும்” என இலகுவாகச் சொல்லியவள் பிறகு அவனது கேள்விகளுக்கு பதில்களும் யோசனையும் தந்தாள்.

அவளது தொழில் ரகசியம் மட்டுமல்ல, அவளது கை பக்குவத்தையும் பல தகிடுதத்தம் செய்து  திருடுவான் பிறகு அவளையும் திருடிக் கொள்வான் இந்த சேர மன்னன் என இப்பொழுது யாராவது சொன்னால்  நம்புவாளா என்ன இந்த நித்திலா?!

நித்திலப் பேரொளி-4

“உங்க வனக்குடிலுக்கு இந்த சிறுதானிய உணவெல்லாம் கொண்டு வரப் போறீங்களா, நைஸ் சார். செய்யுங்க” என்றாள் நித்திலா

“ஆமாம் மிஸ்.நித்திலா, ஒரு இயற்கையான சூழ்நிலையில் முடிந்தவரை உடல் ஆரோக்கியம் பேணும் மாதிரி, சுத்தமான காற்று, குடிநீர், உடற்பயிற்சி இப்டி எல்லாம் பார்த்து பார்த்து தான் செய்திருக்கோம்.  ஏன் உணவும் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வோடு இருக்கக் கூடாதுன்னு ஒரு ஐடியா வந்தது.  அப்போ தான் சலீம் உங்க கடை பற்றி சொன்னான்.  எனக்கு ஒரு மெனு லிஸ்ட் குறைந்தபட்சம் இருபது வகை உணவுகள் அண்ட் அதோட செய்முறை வேணும்.  பட் உங்க உதவியை நான் இலவசமாக ஏற்றுக் கொள்ள விரும்பல.  இப் யூ டோன்ட் மைன்ட் உங்களுக்கு இதுக்கு ஒரு அமௌன்ட் கொடுக்க விரும்பறேன்”  கடைசி வரிகளை மிகத் தயக்கத்துடன் சொன்னான் ஆதேஷ்.

“பணம் எதிர்பார்த்து நான் செய்யல சார், சலீமை எனக்கு இரண்டு வருஷமா தெரியும்.  பணம் மட்டும் பிரதானமான இல்லாம,  உங்க வனக்குடில்ல நீங்க பண்ற நல்ல விஷயங்கள் பற்றியும் சொல்லியிருக்கான். ஸோ என்னால் முடிந்த சிறு உதவி அவ்ளோதான்.  அப்படி பணம் தான் தருவேன்னு நீங்க உறுதியாக இருந்தால், நான் குடியிருக்கும் தெருவில் சின்ன நூலகம் இருக்கு.  சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதும் மாணவர்கள் அங்க புத்தகம் இல்லாமல் சிரமப்படுறாங்க.  கொஞ்சம் புக்ஸ் வேண்டுமானால் டோனட் பண்ணுங்க”  மிக தீர்க்கமாகவும் அமைதியாகவும் இருந்தது அவளது குரலும் முகமும்.

வியந்து பார்த்தான் அவளை, “யூ ஆர் எ வொண்டர்ஃபுல் பெர்சன், கண்டிப்பா செய்றேன்” என்றவனிடம், இரண்டு நாட்களில் ஆதேஷ் கேட்டதை  சலீமிடம்  கொடுத்து விடுவதாக சொன்னாள்.

பிறகு ஒரு தலையசைப்போடு விடைபெற்றான் ஆதேஷ்.

நித்திலா தன்னுடைய பொருட்களை எல்லாம் ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் அடுக்கி தன் வீட்டை நோக்கி பயணித்தாள்.

சலீமை வனக்குடிலில் இறக்கி விட்டு வீடு திரும்பிய ஆதேஷ் மாமாவைச் சந்திக்கச் சென்றான்.

“ஆதிம்மா, ஏதாவது குடிக்கிறியா” அறைக்குள் நுழைந்தவனிடம்  அத்தை வசுந்தரா கேட்க

“அத்தை ஒரு அருமையான வெள்ளைச் சோள காரக் கொழுக்கட்டை சாப்பிட்டேன் தெரியுமா” என்றவன் மாமா அத்தை இருவரிடமும் நித்திலா பற்றியும் அவளது கடை பற்றியும் அடுத்த அரை மணி நேரத்திற்குப் பேசிக் கொண்டிருந்தான்

“ஹேய் அத்தான், இங்க தான் இருக்கீங்களா, என்னை ஷாப்பிங் கூட்டிட்டு போங்களேன்” உற்சாகமாக உள்ளே நுழைந்தாள் நயனா.  அவளைத் தொடர்ந்து லிங்கா, பிருத்வி மற்றும் ஜான்வியும் வந்தார்கள்.

“எப்போ பார் எங்காவது போக வேண்டியது, கையில் நாலு பையைத் தூக்கிட்டு வீட்டு வர வேண்டியது” முறைத்தான் லிங்கா

“உங்களுக்கு என்ன பிரச்சனை?  நான் உங்கள்ட  கேட்டனா?  சம்மன் இல்லாமல் ஏன் ஆஜர் ஆகறீங்க. அடுத்தவங்க விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைச்சா, கட் பண்ண நோஸ் தான் கிப்ட்டா கிடைக்கும். ஞாபகம் இருக்கட்டும் ” சிலிர்த்துக் கொண்டு பாய்ந்தாள் நயனா

“ஏன் கேட்டால் என்ன தப்பு, அப்பா என்ன வாய் பேசற.  உன்னை கட்டுறவன் பாடு திண்டாட்டம் தான்” லிங்காவும் மல்லுக்கு நின்றான்

“நீங்க கலவைப் பட தேவையில்லை, அது என் பாடு என் வீட்டுக்காரர் பாடு, உங்களை கட்ட போற பொண்ணு எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தாளோ.  டாமினேட்டிங் டெவில்” அத்தனை கோபம் கிளர்ந்தது நாயனாவில்

“ஷ்ஷ்…இரண்டு பேரும் வாயை மூடப் போறீங்களா இல்லையா.  டேய் லிங்கா, நயன் என்ட தானே கேட்டாள். உனக்கு என்ன பிரச்சனை.  ஆக்ட் டு  யுவர் ஏஜ் (உங்கள் வயதுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள்) என கடிந்து கொண்டான் ஆதேஷ்.

முறைத்து நின்ற சண்டைக்கோழிகள் தலையைத் திருப்பிக் கொண்டு அமைதியாகியது.

“விடு நயனாக்கா, நான் கூட்டிட்டு போறேன்.  இப்போ என் கேள்விக்கு பதில் சொல்லு.  காந்தி ஏன் ரூபாய் நோட்டில் சிரிச்சுட்டே இருக்கார்?”  பிருத்வி கேட்க

“தலையைச் சொறிந்த நயனா, “ம்ம்ம்…அவரு மகாத்மா டா சிரித்தால் தான் அழகு” என்றாள்

“இல்ல… அந்த பழுப்பு நிற பொருளை கொஞ்சம் யூஸ் பண்ணுக்கா” என இளையவன் சொல்ல

“எது மூளையா, க்கும் இருந்தால் தானே” மெல்லிய குரலில் நொடித்தான் லிங்கா

“வேணாம்…அத்தான் பேசாம இருக்கச் சொல்லுங்க உங்க உடன்பிறப்பை” தன்  பிரியமான அத்தான் ஆதேஷிடம் நயனா முறையிட

தலையில் கை வைத்துக் கொண்ட அதேஷைப் பார்த்த அனைவரும் சிரித்தனர்

“சொல்லித் தொலைடா இடியட், ஏன் சிரிக்கிறார் காந்தி தாத்தா” ஆர்வமாக ஜான்வி கேட்க

“அவர் அழுதா ரூபாய் நோட்டு நனைஞ்சுடாது?”  மிக அமர்த்தலான பார்வையுடன்  நக்கலாக  கேட்டான் பிருத்வி.

தலை அடித்துக் கொண்ட ஆதேஷ், “இவன் வாயைக் கட்ட இந்த உலகத்தில் யாருமே இல்லையா. ஜோக்ன்ற பேரில் கழுத்தை அறுக்கறானே…..தேவுடா” என்றான்

“உன்னை கொல்லாமல் விடமாட்டேன் டா” என பிருத்வியை விரட்டிக் கொண்டு சென்றாள் ஜான்வி.

இரவு உணவிற்குப் பிறகு தனது படுக்கைக்கு வந்து கால் நீட்டி சாய்ந்து அமர்ந்து கொண்ட ஆதேஷ் அருகிலிருந்த கல்கியின் பார்த்திபன் கனவு புத்தகத்தை எடுத்து முன் தினமும் விட்ட பக்கத்திலிருந்து படிக்கலானான்.

பார்த்திபனுக்கும் அவனது ராணிக்கும் இடையிலான காதல், கண்ணியத்துடனும் உணர்ச்சி வலிமையுடனும்  படிப்போரை உருக்கும் ஒரு காவியமாக கல்கியால் சித்தரிக்கப்பட்டிருந்தது.

கல்கியின் கதை சொல்லும் பாணி, காதல் தருணங்களை நாடகத்தன்மையுடன் காட்டாமல், அர்த்தமுள்ளதாக உணர வைத்தது.

புத்தகத்தில் லயித்தருந்தவன் நினைவுகள் நித்திலாவை நோக்கி பயணித்து மெல்ல இவனிடம் திரும்பி வந்தது.

‘நல்ல பொண்ணு, வெரி போல்ட். வெரி ஸ்வீட், சார்மிங்…” அவளை அளவிட்ட நினைவலைகள் அப்படியே நின்றது

“அழகி தான்…ம்ப்ஸ்…தப்புடா சேரா, அவளை நீ அழகின்னு நினைக்கிறது தெரிஞ்சாலே அங்க கொடுத்த அறை அடுத்து உனக்குத் தான் தம்பி” என வாய் விட்டு சொல்லி சிரித்துக் கொண்டவன்

“கொடுத்தால் வாங்கிக்கிறேன் என்ன இப்போ குறைஞ்சிடும்” தன் நாவை இடது பக்க கன்னத்தில் முட்டி சிரித்துக் கொண்டான்.

அடுத்த இரண்டு நாட்களை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்த ஆதேஷ், இரண்டாம் நாள் முன் மாலையில் சலீமை இன்டர்காமில் அழைத்தான்

“சலீம், கிளம்பு வெளியில் போகணும்”

“எங்க சார், உங்களுக்கு வெளியில் அப்பாயிண்ட்மென்ட் எதுவும் இல்லையே” சலீம் இழுக்க

“டேய்..உன் ஞாபக மறதியும் நீயும், நித்திலா வரச் சொன்னாங்க தானே, போலாம் வா” என்றான்

“சார்..எனக்கு நல்லா  ஞாபகம் இருக்கு. அக்கா என்னை வந்து வாங்கிக்க சொன்னாங்க.  நான் போன் பண்ணி கேட்டுட்டு ரெடின்னா அப்புறம் போய் வாங்கிட்டு வந்துடறேன்”  சலீம் இவனது எண்ணம் புரியாமல் முட்டுக்கட்டை போட்டான்

சிறு யோசனைக்குப் பிறகு, “டேய் எனக்கு சில டவுட்ஸ் கேட்கணும், ஸோ நானும் வரேன். கார் தானே சுமக்குது உனக்கு என்ன பிரச்சனை?”

“என்ன டவுட் என்ட்ட சொல்லுங்க பாஸ், நான் கேட்டுட்டு வரேன்”

“ம்ம்ம்…கம்பு தோசை பண்ணனும்னா, கம்பின் நீளம் எத்தனை சென்டிமீட்டர் போடணும்ன்னு  கேட்டுட்டு வரணும்” ஆதேஷ் இடக்காக சொல்ல

“ஹாஹாஹா, குத்து மதிப்பா ஒரு அளவில் வெட்டி போட வேண்டியது தானே” சலீம் சிரித்தான்

“உன்னை டிஸ்மிஸ் பண்றேன் டா இடியட், அந்த கேசவன் கூட போய் நீயும் தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டின்னு பாடிட்டு ரோட்டில் உருளு” ஆதேஷ் கடிக்க

“அப்டின்றீங்க, சரி வாங்க சேர்ந்து போய் உருளலாம்” என்றவன் அழைப்பைத் துண்டித்த பாதாவது நிமிடத்தில் தன் பாஸின் கார் முன்னே நின்றான்.

“சலீம்…..நித்திலா தரப்போற மெனுவை நம்ம ரெஸ்டாரண்டுக்குக் கொண்டு வாரத்துக்குப் பதில்…..ம்ம்ம் நித்திலாவையே நம்ம வனக்குடிலுக்கு கொண்டு வந்துட்டா என்ன?”  ஒரு கை காரின் ஸ்டீயரிங் சக்கரத்தில் இருக்க, மறு கை கொண்டு தாடையைத் தடவியவாறு கேட்டான் ஆதேஷ்.

“ஆஆஆ….” என வாய் பிளந்தான் சலீம்

“டேய்…என்ன கோல்கேட் விளம்பரமா செய்யறோம், பல்லு எல்லாம் காட்டிட்டு இருக்க.  மூடிக்கோ டா இடியட்” இவன் சொல்ல

“இது நம்ம லிஸ்ட்லையே இல்லாத ஆயிட்டமா இருக்கே தல, எப்டி இப்டி…..இரண்டு நாளா ரூமுக்குள்ள குட்டி போட்ட பூனை இல்லல்ல புலி மாதிரி சுத்திட்டு இருந்தீங்களே, இந்த  மாஸ்டர் பிளான் போடத் தானா “

“ம்ப்ஸ்..கேட்டதுக்கு பதில் சொல்லுடா, பூனை சிங்கமுன்னு நேஷனல் ஜியோகிராபி பேசிட்டு இருக்கான் இடியட்”  ஆதேஷ் சலீமின் தோளில் தட்ட

“சார்..நல்ல ஐடியா தான். பட் அக்கா ஒத்துக்குவாங்களா தெரியலையே” சலீம் யோசனையாக

“அதுக்கு தான் நீ இருக்கியே, உங்க அக்கா நம்ம வனக்குடிலிக்கு வர ஒத்துக்கும் வரை அவங்க கடை முன்னாடி உண்ணாவிரதம் இருப்பேன்ன்னு சொல்லிடமாட்ட” இவன் புன்சிரிப்போடு சொல்ல

“எதே…உண்ணாவிரதமா…எந்த கடையில் விற்கும் பாஸ்ட் புட் தல அது” சலீம் திருப்ப

“ஹாஹாஹா…” சிரித்துக் கொண்டான் ஆதேஷ்.

கார் நித்திலாவின் கடையின் முன்னே சற்று தள்ளி வந்து நின்றது.  இறங்கி அவளை நோக்கி நடந்து வந்த ஆதேஷின் கண்களில் அத்தனை ஆர்வம் கொட்டிக்கிடந்தது.

ஒரு அழகிய வெள்ளை நிற சுடிதாரில் கருப்புப் பூக்கள் அள்ளித் தெளித்திருக்க, துப்பட்டாவை தோள்களின் இருபுறமும் பின் செய்திருந்தவளின் தோற்றம் நேர்த்தியும் அழகும் நிறைந்து இருந்தது.

நித்திலாவிடம் எப்போதும்  ஒரு நிமிர்வு இருக்கும், இது என் வேலை நான் சரியாகச் செய்கிறேன் அது தெருவோரமாக இருந்தாலும் என்ன? பெரிய தொழில் அதிபர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால் அடிமட்ட நிலையில் இருந்து தான் வந்தவர்களாக இருப்பார்கள். அப்படியான பெரு வெற்றிக்கு இது என் சிறு முயற்சி என்ற கொள்கை உடையவள்.

தரமான உணவை நியாயமான விலையில் கொடுக்க வேண்டும், தாங்கள் உண்ணும் உணவின் சிறப்பறிந்து மக்கள் உண்ண வேண்டும்.  இன்றைய பல்வேறு நோய்களுக்கு நம் உணவுப் பழக்கம் தான் முதன்மைக் காரணமாக இருக்கிறது என்பதை எல்லோரும் உணர வேண்டும் என்பது தான் நித்திலா படிக்கும் காலத்திலிருந்தே அவள் மனதில் இருந்தது. ஒரு உணவகமாக ஆரம்பிக்க வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் இந்த தள்ளு வண்டியில் ஆரம்பிப்பது என்ற முடிவுக்கு வந்தாள்.  கடந்த மூன்று வருடங்களாக வெற்றிகரமாக நடத்திக் கொண்டும் இருக்கிறாள்.  அவளின் ‘தெருவோரம் தேடி உண்’ பலரது கவனத்தை ஈர்த்து தேடி வர வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.

சுற்றுப்புறம் மறந்தவள் போல் தனது வேலையில் மும்முரமாக இருந்தாள் நித்திலா.

சற்று கூடுதலான சிவந்த நிறத்தில், ஐந்தடி ஆறங்குல உயரத்தில், விதவையின் உச்சம் (விடோஸ் பீக்) என்று சொல்லக் கூடிய நெற்றி மையத்தின் மயிர்க்கோட்டில் அமைந்துள்ள V-வடிவப் புள்ளி அவளுக்கு இருந்தது. அந்த வடிவமைப்பு அவளின் சுருள் முடிக்கு அத்தனை அழகு சேர்த்தது

நீண்ட கருமையான புருவமும், கூர்மூக்கும் அவளது தீர்க்கம் நிறைந்த முகத்தில் தீட்டிய ஓவியம் போல் இருந்தது.

தன் பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டுக் கொண்டு அவளையே அளவிடும் படி நடந்து முன்னேறியவன் மனதில் பல வண்ண மலர்கள் பூத்து மணம் பரப்பியது.

சேர மன்னன் தன் ராணியைக் கவர்ந்து செல்லும் யுக்திகளை நடைமுறைப்படுத்தும் முதற்கட்ட வேலைகளுக்கான முதல் படியில் கால் அடிகள் எடுத்து வைத்தான்.

error: Alert: Content selection is disabled!!