STN-116
Well-known member
ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க...செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: மேகத்தில் தொலைந்த நிலவு
நாயகன்: தரிந்து சேனாநாயக்க
நாயகி: மேகலா அரவிந்தன்
நம் நாயகன் வான் படை கமாண்டர்
நாயகி ஏரோசிஸ்ட்
நாயகன் நாயகியை கண்டதும் காதல் கொள்கிறார்..
மேகாவின் பயிற்சி வகுப்புகளில் அடிக்கடி நடக்கும் சந்திப்புகளில் விபத்து ஒன்றில் நாயகன் நாயகியை காப்பாற்ற மேகாவும் தரிந்து வின் காதலை ஏற்றுக் கொண்டு காதல் பறவைகள் உல்லாசமாக கண்டி நகரை சுற்றி வருகின்றனர்
ஏஞ்சல் இருந்தால் டெவிலும் வருமே நம்ம காஞ்சனா பேயும் மேகாவோட பயிற்சி வகுப்பில் இருக்கு அதில் மேகா தோழி சுபா சரவணன் பிருந்தா என்று ஒரு குழு காஞ்சனா பேயும் தரிந்து வை விரும்ப தரிந்து பார்வை மேகா மேல் இருக்க பொறாமையில் தீ விபத்து ஒன்றை ஏற்படுத்தி எதிர்பாராத விதமாக காதலர்களை தெரியாமலே சேர் காரணமாக இருக்கிறாள்
ஆனால் இவர்கள் காதலுக்கு மிகப்பெரிய எதிரியாக இருப்பது இவர்களின் இனம் நம்ம பொண்ணு இலங்கை தமிழ் பொண்ணு பையன் சிங்கள ஆடவன்
சிங்கள இராணுவத்தால் மேகாவின் அப்பாஅரவிந்தன் ஒரு காலை இழந்து வீல் சேரில் இருக்கும் நிலை அண்ணன் முரளி சிறுவயதில் பயங்கர துன்பம் பட்டு தப்பி வந்த மருத்துவன் எனவே சிங்கள மருமகனை நிராகரிக்க இவர்களின் காதல் சேர்ந்ததா என்பதை சுவாரசியமாக எழுத்தாளர் சொல்லி உள்ளார்![]()
![]()
அனுஷ்கா சுபா சரவணன் இப்படி பட்டவர்கள் நம் வாழ்வில் வருவது வரம்
சாமியாராக இருக்கும் முரளி மூன்று வருடத்தில் தேவசேனா வை லோடுசேனாவாவே மாத்தி வச்சிட்டாங்க
சூப்பர் காதல் கதை காஞ்சனா பேய்க்கு சரியான தண்டனை கடவுள் கொடுத்துட்டார்
மேகா குடும்பம் அவள் காதலை ஏற்றுக் கொள்ள தயங்க காரணம் அவள் மீது உள்ள அன்பின் அடையாளம் தான்ஏன்னா சிங்கள இராணுவத்தால் அவர்கள் பட்ட காயம் அதிகம்
நல்ல கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே![]()
![]()
![]()
முரளியே பாவம்... முப்பத்தஞ்சு வயசுவரை பொறுமையா இருந்து இருக்கிறான்...