• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

STN-116

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026

கதையின் பெயர்: மேகத்தில் தொலைந்த நிலவு
நாயகன்: தரிந்து சேனாநாயக்க
நாயகி: மேகலா அரவிந்தன்
நம் நாயகன் வான் படை கமாண்டர்
நாயகி ஏரோசிஸ்ட்
நாயகன் நாயகியை கண்டதும் காதல் கொள்கிறார்..
மேகாவின் பயிற்சி வகுப்புகளில் அடிக்கடி நடக்கும் சந்திப்புகளில் விபத்து ஒன்றில் நாயகன் நாயகியை காப்பாற்ற மேகாவும் தரிந்து வின் காதலை ஏற்றுக் கொண்டு காதல் பறவைகள் உல்லாசமாக கண்டி நகரை சுற்றி வருகின்றனர்😍😍😍😍
ஏஞ்சல் இருந்தால் டெவிலும் வருமே நம்ம காஞ்சனா பேயும் மேகாவோட பயிற்சி வகுப்பில் இருக்கு அதில் மேகா தோழி சுபா சரவணன் பிருந்தா என்று ஒரு குழு காஞ்சனா பேயும் தரிந்து வை விரும்ப தரிந்து பார்வை மேகா மேல் இருக்க பொறாமையில் தீ விபத்து ஒன்றை ஏற்படுத்தி எதிர்பாராத விதமாக காதலர்களை தெரியாமலே சேர் காரணமாக இருக்கிறாள்
ஆனால் இவர்கள் காதலுக்கு மிகப்பெரிய எதிரியாக இருப்பது இவர்களின் இனம் நம்ம பொண்ணு இலங்கை தமிழ் பொண்ணு பையன் சிங்கள ஆடவன்😥😥😥😥
சிங்கள இராணுவத்தால் மேகாவின் அப்பாஅரவிந்தன் ஒரு காலை இழந்து வீல் சேரில் இருக்கும் நிலை அண்ணன் முரளி சிறுவயதில் பயங்கர துன்பம் பட்டு தப்பி வந்த மருத்துவன் எனவே சிங்கள மருமகனை நிராகரிக்க இவர்களின் காதல் சேர்ந்ததா என்பதை சுவாரசியமாக எழுத்தாளர் சொல்லி உள்ளார் 😍 😍 😍
அனுஷ்கா சுபா சரவணன் இப்படி பட்டவர்கள் நம் வாழ்வில் வருவது வரம்
சாமியாராக இருக்கும் முரளி மூன்று வருடத்தில் தேவசேனா வை லோடுசேனாவாவே மாத்தி வச்சிட்டாங்க🤣🤣🤣🤣
சூப்பர் காதல் கதை காஞ்சனா பேய்க்கு சரியான தண்டனை கடவுள் கொடுத்துட்டார்
மேகா குடும்பம் அவள் காதலை ஏற்றுக் கொள்ள தயங்க காரணம் அவள் மீது உள்ள அன்பின் அடையாளம் தான் 🥰🥰🥰 ஏன்னா சிங்கள இராணுவத்தால் அவர்கள் பட்ட காயம் அதிகம்
நல்ல கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐 ❤
ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க...
முரளியே பாவம்... முப்பத்தஞ்சு வயசுவரை பொறுமையா இருந்து இருக்கிறான்...
 
STN-116

Active member
#மேகத்தில்_தொலைந்த_நிலவு_விமர்சனம்

விமானப் பணிப்பெண் மேகலாவுக்கும் விமானப்படை வீரர் தரிந்து சேனாநாயக்கவுக்குமான காதல் ♥

ஒரே இனத்தை சேர்ந்தவங்களா இருந்தாலே பிரச்சினைகளுக்கு குறைவு இருக்காது . தமிழ் பெண்ணுக்கும் சிங்களப் பையனுக்குமான காதல் அதுவும் மேகலா குடும்பம் சிங்கள இராணுவத்தினால் பாதிப்படைந்து இருக்கும் போது காதலர்களை சேர விடுவார்களா ???

இலங்கை தமிழ் கூடவே கொஞ்சமே கொஞ்சம் சிங்களம் கலந்த கதையில் அழகான மேகம்,மழை, புயல்,போர் என்ற பொருத்தமான உவமைகளுடன் படிச்சு தெரிஞ்சுக்கலாம் ❣❣

மேகலா மேகப்பெண் பெயருக்கு ஏற்றது போல மென்மையானவள் ♥
தரிந்து போர் வீரனா இவன் ஆச்சரியம் படும் அளவுக்கு காதலியிடம் இவன் காட்டும் மென்மை இருந்தது ♥
அரவிந்தன் பாசமுள்ள அப்பா .முரளி அன்பான அக்கறையான அண்ணன் . சுபா நல்ல தோழி ♥ சுபா மற்றும் சிவாவின் கலகல பேச்சு நல்லா இருக்கு 😅

காதலில் பிரிவின் வலியை நல்லா சொல்லீருக்கீங்க ❣பாசம் ஒரு பக்கம் காதல் ஒரு பக்கம் என்று நடுவில் மாட்டிக்கொண்ட வெண் மேகம் கருமேகமாக மாறி கண்ணீர் மழை பொழிந்தது உருக்கமான தருணங்கள் ♥

காஞ்சனா சரியான வில்லி இவள் 😡😡

முரளியை ஆட்கொண்ட புயல் அருமை 😍😍 பாகுபலி தேவசேனா இணை எனக்கு பிடித்தது ❤ முக்கியமாக அந்த காதல் கடிதம் 🤣🤣 அருமை 👏

உங்கள் தயவில் கொஞ்சம் இலங்கையை சுத்திப்பார்த்தேன். 😍😍கதைக்கு தக்க படங்களை மற்றும் வீடியோகளை பதி விட்டது நல்லா இருந்தது ♥ முக்கியமா திருமண உடை புகைப்படம் 👌

இந்த கதை உங்கள் முதல் முயற்சி என்பதை நம்ப முடியவில்லை 🤨

'சுது வலாகுழு' அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி...
மிக்க நன்றி சிஸ் 😊
 
ShaSri

New member
#பாவையின்றி_பார்வையில்லை_விமர்சனம்

ரிஷி கதையின் நாயகன் வானொலி புரவலராக இருக்கிறார். அவரின் குரலே நாயகி நிருஷிதாவிற்கு பல தருணங்களில் உற்ற துணையாகிறது 😍 நாளைடைவில் அந்த குரலில் இருந்த ஈர்ப்பு காதலாக மலர்கிறது 💖

ரிஷி யாரு? எப்படி இருப்பார்? அவரின் குணமென்ன? எதுவும் தெரியாமல் மலரும் காதல் ரிஷியின் உண்மை நிலை தெரிந்த பின்பு நிருஷியின் நிலைபாடு? ரிஷிக்கும் காதல் மலர்ந்ததா? நிருஷியின் காதல் வாழ்க்கை தான் குழப்பத்தில் என்றால் குடும்பத்திலும் ஒட்டா நிலைதான் ஏன்? அப்பாடா எத்தனை கேள்விகள் 😲😲 அத்தனை கேள்விகளுக்குமான பதிலும் கதையில் 😍😍

சுவாரஸ்யமான கதை ❤ எதோ ஒரு கேள்வி கடைசி வரையிலும் தொடர்ந்து வருகிறது போல கதையை அமைத்தது நல்லா இருந்தது ❤

ரிஷிக்கு பார்வையா இருந்த கதிர் மற்றும் அவர்கள் இருவரின் நட்பு அருமை 👌

மைதிலி ராஜ் இவர்கள் இருவரும் நிருஷியின் மீது கொண்ட அன்பு மற்றும் நிருஷியின் மாசற்ற காதல் நல்லா இருக்கு ❤ என்ன இவ கொஞ்சமாச்சு அம்மா ஏன் இப்படி பண்ணாங்கனு யோசிச்சிருக்கலாம்னு எரிச்சல் வந்தது 🤨

ராஜின் இந்த நிலைக்கு காரணமானவங்க யாரு என்பது கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத திருப்புமுனை 😅

மைதிலிக்கு நடந்தது எல்லாம் கொடுமை 😭 மைதிலி மற்றும் கதிரின் செயலுக்கான காரணங்களை இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக சொல்லீருக்கலாம்.

அதை தவிர்த்து சுவாரசியமான கதை❤போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍🎉🎊
 
STN - 94

Member
Staff member

Thank you so much sis.
 
Kalai Karthi

Active member
தேன் நாட்டு பைங்கிளி கதை அருமை. இலங்கையில் வானதி இந்தியாவில் அருண்மொழி வர்மன். வானதி அப்பா அம்மா இருவரும் இறக்க வானதி மற்றும் தம்பி பார்த்திபனை கூட்டிட்டு போக பெரியப்பா அண்ணா வர இலங்கை விட்டு மனமில்லாமல் போக அங்கு போய் பெரியம்மா பெரியப்பா அண்ணா என்று அழகாக தன்னையும் தம்பி பார்த்து கொள்ள மற்ற குடும்ப உறுப்பினர்கள் பிரச்சினை வர அப்போதும் பெரியப்பா அண்ணா பெரியம்மா பார்த்து கொள்ள அவளும் அன்பாக அக்கறையாக போக இதனிடையில் வர்மா மூஞ்சூறு காட்டன் மனதை கொள்ளை அடிக்க அவனின் முதல் காதல் தோல்வியில் மீண்டு வர அவனை பழைய படி மாற்ற அழகக பபோகிறது. வெண்மை ஆகாஷ் மமதி நதி நட்பு அனைவரும் சூப்பர். வெண்மதி முதலில் தவறினாலும் இரண்டாவது துணை நின்று ஜெயிக்க வைப்பது சூப்பர். வர்மாவை வைச்சு செய்வது எல்லாம் வேற லெவல். அவனின் காதலும் வெறுப்பு மாறி மாறி வந்து காதல் ஜெயிப்பது சூப்பர். மாறன் சூப்பர். சுஜி அவள் அம்மா சித்தி டூ மச். ரவி கிருஷ்ணா டூ மச். மொழி தனது காதல் ஆசையும் நிறைவேற்றுவது அழகு. வர்மா முதல் காதலி யார் சஸ்பென்ஸ் கொண்டு போனது சூப்பர். தத்துவம் சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
 
STN - 48

New member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
தேன் நாட்டு பைங்கிளி
நாயகன்: அருள்மொழி வர்மன் 💓
நாயகி: வானதி
நம்ம நாயகி பெற்றோர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தாய் உமையாள் சென்னை தந்தை யோகராஜா இலங்கையை சார்ந்தவர் கல்லூரி வந்த இடத்தில் காதல் கொண்டு இருவரும் இலங்கையில் வாழ்ந்த வாழ்க்கையின் பரிசுகளே வானதி பார்த்திபேந்திரன்
பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளை தாய்வழி சொந்தமான ஆண்டாள் உமையாளின் அக்கா குடும்பம் அரவணைக்க தன் நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் நாயகி நிதர்சனத்தை ஏற்று தமிழ் நாட்டில் காலடி பதிக்கிறார் அங்கு அவளுக்கு கிடைக்கும் அனுபவங்களே கதையின் கரு💓💓💓
சோழர்களின் பெயர்களையே தேன் நாட்டு பைங்கிளி கதை மாந்தர்கள் அனைவருக்கும் சூடி உள்ளார் எழுத்தாளர் 🥰🥰
கரிகாலன் அவனின் இறுக்கமான முகத்தின் பின்னர் பாசமான அண்ணனின் பிம்பம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது🧡🧡🧡🧡.. சகாயம் பெற்றோர்கள் இல்லாமல் வரும் குழந்தைகளை உங்கள் சூழ்நிலையில் ஏற்று கொள்வது மிகவும் பாராட்டக்கூடிய விடயம்🥰🥰
பருவ வயதில் ஏற்படும் ஈர்ப்பு அதனால் வரும் பிரச்சனைகளும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இந்த கதை மூலம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிதர்சனமான உண்மை 🥺🥺🥺
சுஜிதா நீ எல்லாம் பொண்ணா வாழதகுதி இல்லை போய் செத்துடு😈😈
அருளு நீ இந்த தேன் நாட்டு பைங்கிளியை கரம்பிடிக்க அவளோட நாட்டின் மருமகனாகசென்றது சூப்பர் 🥰🥰🥰 நல்ல வித்தியாசமான முயற்சி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 🥰 💐 ❤
விமர்சனம் தந்தமைக்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊
 
STN - 48

New member
தேன் நாட்டு பைங்கிளி கதை அருமை. இலங்கையில் வானதி இந்தியாவில் அருண்மொழி வர்மன். வானதி அப்பா அம்மா இருவரும் இறக்க வானதி மற்றும் தம்பி பார்த்திபனை கூட்டிட்டு போக பெரியப்பா அண்ணா வர இலங்கை விட்டு மனமில்லாமல் போக அங்கு போய் பெரியம்மா பெரியப்பா அண்ணா என்று அழகாக தன்னையும் தம்பி பார்த்து கொள்ள மற்ற குடும்ப உறுப்பினர்கள் பிரச்சினை வர அப்போதும் பெரியப்பா அண்ணா பெரியம்மா பார்த்து கொள்ள அவளும் அன்பாக அக்கறையாக போக இதனிடையில் வர்மா மூஞ்சூறு காட்டன் மனதை கொள்ளை அடிக்க அவனின் முதல் காதல் தோல்வியில் மீண்டு வர அவனை பழைய படி மாற்ற அழகக பபோகிறது. வெண்மை ஆகாஷ் மமதி நதி நட்பு அனைவரும் சூப்பர். வெண்மதி முதலில் தவறினாலும் இரண்டாவது துணை நின்று ஜெயிக்க வைப்பது சூப்பர். வர்மாவை வைச்சு செய்வது எல்லாம் வேற லெவல். அவனின் காதலும் வெறுப்பு மாறி மாறி வந்து காதல் ஜெயிப்பது சூப்பர். மாறன் சூப்பர். சுஜி அவள் அம்மா சித்தி டூ மச். ரவி கிருஷ்ணா டூ மச். மொழி தனது காதல் ஆசையும் நிறைவேற்றுவது அழகு. வர்மா முதல் காதலி யார் சஸ்பென்ஸ் கொண்டு போனது சூப்பர். தத்துவம் சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
நன்றி அக்கா..🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் விமர்சனத்தில் நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன்... 😊😊😊😊😊😊😊😊
 
Top Bottom