செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 95

Member
May 5, 2026
53
43
18
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026.
கதையின் பெயர்: என் துயர் நீங்க வந்த துணையே
நாயகன்: தேவா
நாயகி: சம்யுக்தா ❤🧡
நம் நாயகி சம்யுக்தா பெரிய கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறார் ஏன் என்று தெரியாமல் தன் குடும்பத்தை விட்டு விலகி இருக்க காரணம் என்ன என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம் 🥰🥰💐
பெண் பிள்ளைகள் வெளி ஆட்களை விட நமக்கு நன்றாக தெரிந்த வீட்டு ஆட்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் இதற்கு காரணம் பெற்றோர்கள் தான் 😥😥😥😥
குருமூர்த்தி பொண்ணு வயசு பிள்ளையை இப்படி கெடுத்துக் இல்லாமல் ஸ்ரீ மையும் பலவந்தப்படுத்த முயற்சி பண்ற😡😡😡
சுபாஷ் நீங்க கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருந்தா அந்த குருமூர்த்திக்கு ஒரு முடிவு கட்டி நீங்கள் வாழ்ந்திருக்கலாம் 🥺🥺🥺
அந்த காலச்சக்கரம் மறுபடியும் அந்த கடன்காரன் கையில் கிடைச்சுடுமோன்னு பயந்துட்டே இருந்தேன் இந்த மாதிரி மாந்த்ரீகம் பண்றவங்களுக்கு இதுதான் பெரிய தண்டனை 😡😡😡
விக்கி விஷயம் தெரிஞ்சும் அதுக்காக தேடவும் முடியாமல் உன் வேதனையை உனக்குள்ளே வச்சிருக்க😥😥😥😥
இது புரியாமல் இந்த தேவா வேற😥😥
ஸ்ரீ மதி உன் பிரசன்னா மாமா மேல் கொஞ்சம் நம்பிக்கை வச்சிருக்க லாம்🙄🙄🙄
சம்மு உன் வேந்து உன் மனசை தான் நேசிக்கிறான் நீ எப்படி இருந்தாலும் அவன் காதல் மாறாதது💖💖💖💖ரகு அப்பா கீதாம்மா நீங்க விஷப்பாம்பை வீட்டில் வச்சிருக்கிங்க🥺🥺கீதா ராணி அபிராமி அம்மா ரூபவதி பாட்டி எல்லாரும் சம்மு மேல் வச்ச பாசம் என்னிக்கும் குறையாது❣❣❣ நல்ல அழகான கூட்டுக்குடும்பம் அமைப்பு சூப்பர் 😍😍😍 நல்ல வித்தியாசமான முயற்சி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰🥰💐💐
நன்றி அக்கா.. ரொம்ப அழகான விமர்சனம்.. கதைய லாஸ்ட் டைம்ல முடிச்சன்.. ஒரு ஃபுல்பில் இல்லாம சுத்திட்டு இருந்தேன்.. இப்போ தான் உங்க ரிவ்யூ பாத்தேன்.. ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 😍😍
 

thanga then mozhi

Active member
May 6, 2026
160
131
43
Cheyyar
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: நேசமுகை உதிரும் இளவேனில்
நாயகி: இளவேனில்
நாயகன்: இளநேயன்
நாயகன் நாயகி இவர்கள் இருவருக்கும் பெயரில் மட்டுமே பொருத்தம் இருக்கிறது 🥺🥺🥺
இளவேனில் தவறான ஒருவனை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்தால் மனதளவிலும் உடல் அளவிலும் எப்படி எல்லாம் கஷ்டப்படலாம் என்பதை இவளின் வாழ்க்கை முறை உணர்த்தும் 🥺🥺🥺
இளநேயன் பெரிய காதல் மன்னன் மாதிரி வேணியை ஒரு திருமணத்தில் பார்த்து அவளை ஃபாலோ பண்ணி ஃபோன் நம்பர் கண்டுபிடிச்சு அவளை காதலிக்க வச்சு கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தைகளும் வந்து சரியான குடிகார பரதேசி நாய் இவன்😡😡😡
குடிச்சிட்டு வந்து குழந்தை முன்னாடியே இவன் பண்ற அலப்பறை எல்லாம் பொண்ணுங்க பொறுத்து போகனும்னு சொல்ர வேணியோட ஆம்மா கவினி😡😡
பொறுப்பில்லாத குடும்ப தலைவி பேயன் அம்மா க்ளாரின் தங்கை நிலோபர்
பிள்ளையை கண்டிக்காமல் தறுதலையா வளர்த்து விட்டு மருமகளை தேவையற்ற வார்த்தைகளால் அசிங்கப்படுத்தி இரண்டு பிள்ளைகள் மனசு எப்படி எல்லாம் வேதனை படும்🥺🥺🥺
சிலிண்டர் பிரச்சினையை சொல்லும் போதே சரி பண்ணி இருந்தால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்குமா நேயனின் பொறுப்பற்றதனம் மனைவி குழந்தைகளை விபத்தில் தள்ளிடுச்சி அந்த நேரத்தில் கூட அவ்வளவு போதை எமர்ஜென்சி காலத்தில் கூட தனது குடும்பத்தை காப்பாற்ற முடியாது ஆண் வாழவே தகுதி இல்லாதவன் 😡🔪🔪🔪
பேயன் உண்மையில் இல்லை எனில் எனக்கு சந்தோஷம் 😔😔😔
நல்ல அழுத்தம் நிறைந்த கதை ❤️🧡🧡 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰🥰💐
 

skp

Member
Nov 12, 2025
83
1
18
Madurai
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் போட்டிக்கதைகள்
#STN_06
"கண்களுக்குள் பள்ளி கொண்டேன்"
சக்தி... ஆசிரமத்தில் வளர்ந்த பெண் ஆனால் தன்னம்பிக்கையும் ஆளுமையும் நிறைந்தவள்.
"பிறப்பு என் கையில் இல்லை ஆனால் என் வாழ்க்கை என் கையில்.." என்பதும்
இறந்த காலத்தை நினைத்து வருந்தி வருங்காலத்தை நினைத்து பயந்திருந்தால் நிகழ்காலம் கொடுமையாகிவிடும் என இவள் கூறுவதும் அருமை 👏👏👏
இவளின் பழுப்பு நிற கண்களுக்குள் பள்ளி கொள்ள வருகிறான் பிரகதீஸ்வரன்.. ஈஸ்வரின் சக்தியாக அவளை மாற்ற 🥰 பாரம்பரியமான ஈஸ்வர் குடும்பத்தின் முதல் வாரிசு ஆளுமையும் அதிகாரமும் தன் தாத்தாவைக் கொண்டு பிறந்தவன். ஆனால் தற்போது ஆட்சி செய்யும் பாட்டியின் செல்லப் பேரன் இருவரின் விழி பாஷைகளும் அருமை 🥰 இவர்களின் மௌன பேச்சில் சமைந்து நிற்பவர்கள் ஈஸ்வரனின் தம்பி சர்வேஸ்வரனும் தங்கை மகாலட்சுமியும் தான் 😀 அவர்கள் இருவருக்குமான பாண்டிங் வெகு அழகு 🥰
சக்தியின் ஒரே உயிர் தோழி தாரணி.. எங்கும் சக்தியை விடாமல் தன்னோடு நிறுத்தி வைத்துக் கொள்வதும் அவளின் தனிமையை அகற்ற தன்னால் முடிந்ததை செய்து அவளை சிரிக்க வைப்பதும் அவளின் மேல் அக்கறை கொள்வதும் அருமையான நட்பு 👏
சர்வா சக்தியின் பிரண்ட்ஷிப்பும் அழகு 🥰 மகாலட்சுமியின் கணவன் பாட்டியிடம் சக்தியை பற்றி பேசும் பேச்சும் வெகு அருமை 👏🥰
பரத் சிறிது நேரமே வந்தாலும் சக்தியை புரிந்து கொண்டு அவளை வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்ள முடியாது ஆனால் காலம் முழுவதும் நட்பாக இருக்க முடியும் என கூறுவதும் அருமை 👏🥰
வரலட்சுமி பாட்டி.. குடும்ப பாரம்பரியம், குலப்பெருமை முக்கியம் என கருதும் இவர் சக்தியை ஏற்றுக்கொள்ள மாட்டார் என நினைத்தால் அதற்கு மாறாக இவரின் செயலும் சொல்லும் வேற லெவல். மேன் மக்கள் மேன் மக்களே என்பதை உணர்த்தியது 👏🥰
ஈஸ்வர்.. பார்வையாலேயே காதலை உணர்த்தி அதைப் பெண் அவளுக்கும் கடத்தி உரிய நேரத்தில் அவள் அருகில் இருந்து, தேவையில்லாதவன் ஒருவன் பேச்சினை கேட்டு தன் பிறப்பை நினைத்து தடுமாறுபவளை அதட்டி, மிரட்டி தன் வழித்து கொண்டு வருவதெல்லாம் வேற லெவல் 🥰
பலராமனை ஈஸ்வர் சகோதரர்கள் ஏதாவது செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அது மட்டும் தான் குறை 😔
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰🌹
Thank you so much ma ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
 
  • Like
Reactions: zeenath Sabeeha

skp

Member
Nov 12, 2025
83
1
18
Madurai
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
நாயகன்:பிரகதீஸ்வரன்
நாயகி: சக்தி
நம் நாயகி பெற்றோர்கள் இல்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்து படித்து தனக்கென தனி இடத்தை பிடித்து கட்டிடக்கலையில் பணிபுரிகிறார் நம் நாயகன் ஈஸ்வரன் பாரம்பரியமிக்க பெரிய குடும்பத்தில் பிறந்து அவரும் இதே கட்டிடதுறையைச்சார்ந்தவர் இவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சவால்கள் நிறைந்த காதல் குடும்பம் பாசம் இதுவே கதைக்களம் 🥰 💐 💐
சக்தி பெண் என்பவள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்க்கு உதாரணம் இந்த காந்த விழியால் தனக்கு யாரும் இல்லை என்று தளர்ந்து விடாமல் தனக்கென்று ஒரு கொள்கயை வைத்து அதை நோக்கி நிமிர்வாக பயணிக்கும் விதம் அருமை 🥰 🥰 🥰
சக்தி இன்றி இந்த (சிவன்) ஈஸ்வரன் இல்லை பணக்கார செருக்கு இல்லாமல் பெண்ணிடம் தான் இறங்கி போக வேண்டுமா என்று ஆணவம் இன்றி பழகும் விதம் சக்திக்கு ஏற்ற துணை💖💖💖💖
சக்தியின் நண்பர்களாக சர்வேஸ்வரன் நம் நாயகனின் தம்பி துணையாக இருக்கும் இடங்கள் எல்லாம் நட்புக்கு பேதம் இல்லை 🥰🥰🥰தாரணி சக்தி இரண்டு பேரும் நல்ல ஒரு பாண்டிங்
வரலெட்சுமி பாட்டி அவங்களுக்கு சக்தியை பிடிச்சாலும் அவங்க கௌரவம் பாரம்பரியம் எல்லாம் தடுக்க பாலகுமாரன் அதையும் தெரியப்படுத்தும் விதம் அருமை 👏 💐 ❤
பரத் சக்திக்கு கல்யாணம் செய்ய வரும் மாப்பிள்ளையாக எண்ட்ரி கொடுத்தாலும் அவளுக்கு ஒரு தோழனாக தோள் கொடுப்பேன் என்று சொல்ல எத்தனை பெரிய மனசு வேணும் ❣❣❣
இந்த பலராமன் இவ்வளவு கேவலமா நடந்தும் அவனை அப்படியே விட்டிருக்க கூடாது😡😡😡
மகாலெட்சுமி நம் நாயகனின் தங்கை நல்ல ஒரு புரிதலான உடன் பிறப்புகள் ❤❤❤
நல்ல எதார்த்தமான குடும்ப காதல் கதை ❤ 🧡 🧡 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐 ❤
Thank u so much ma ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
 

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
674
539
93
Pondicherry
#நான்_அறிய_நீ_விமர்சனம்


வடிவான இலங்கை தமிழில் திருகோணமலையில் ஆரம்பிக்கும் இயல்பான குடும்பம் மற்றும் காதல் கதை ❤


பிராத்தனாவை மையப்படுத்துன கதை ❤ குடிக்கு அடிமையாகி அனைத்தையும் இழந்த தந்தை 😓 அனுதினமும் தந்தையை வசைப்பாடும் நோயாளி அன்னை 😰 சுயநலமான தம்பி விமலன் மற்றும் தங்கை நிலானி 😓😓


இப்படி அருமையான குடும்ப சூழ்நிலை மற்றும் சுமையால் பாறையாக மாறிப்போன பிராத்தனா 😞😞 இந்த பாறையிலும் நீர் சுரக்காதா என்று அறிய முயற்சிக்கும் நாயகன் வரோதயன் 😍😍
வாங்க வரோவுடன் சேர்ந்து நாமும் பிராத்தனா, அவளின் குடும்பம், பணி, மற்றும் இலங்கையின் சில பகுதிகளையும் சேர்த்து அறிந்துகொள்வோம் ❣❣


நாயகன் நாயகி முதல் சந்திப்பு இந்த கதை மாதிரி எந்த கதையிலும் படித்ததில்லை 🤣👌👌👌👌


இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்தது இயல்புதன்மை மாறாத கதாபாத்திரங்கள் மற்றும் நேர்த்தியான எழுத்து 👏👏
ஒவ்வொரு உவமைகளும் அடிதூள் 👏👏👏


ஒரு அக்காவாக தங்கையை காணாத பரிதவிப்பு அப்பப்பா 😢😢 ஆனால் அவளை கண்டவுடன் தனாவின் எதிர்வினை அட்டகாசம் 😍😍


சுற்றியும் சுயநலக்குடும்ப உறுபினர்கள் மத்தியில் இரமணி,பாலா மாதிரி நல் உள்ளங்கள் தான் தனா மாதிரி சுமைதாங்கிகளுக்கு ஆறுதல் 😊


வறுமை, வலி, சுயநலம், பணதேவைனு போனா கதைல என்னபா சுவாரஸ்யம் இருக்கப்போகுதுனு நினைச்சா அங்க தான் யாரும் எதிர்ப்பார்க்காத திருப்புமுனையை வைத்து சிறப்பா செஞ்சுட்டாங்க எழுத்தாளர் 👏👏


வரோ வாழ்வில் யுத்தம் சார்ந்து நடந்ததா சொன்ன நிகழ்வுகள் முற்றிலும் புதிய தகவல். உயிரை காப்பாற்ற என்னென்ன வழிகள் பின்பற்றப்பட்டிருக்கு 😓


வரோவின் காதல் மட்டுமல்ல எந்த சுழல்நிலையிலும் தனாவின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் பிடித்தது ❤


பிராத்தனாவின் மேல் பரிதாபம் தான் வருகிறது. சிறுவயது பக்குவமின்மை காரணமாக அவளின் முடிவுகளை குறை சொல்லுவதற்கு இல்லை 😰 கொஞ்சம் சுயநலமும் அவசியம் பிராத்தனானு சொல்லனும்னு தோணுது ❤


பெண் கதாபாத்திரங்கள் எல்லாமே எனக்கு பிடித்தது ❤ தனா, ரமணி, மற்றும் நிலானி சுயநலமாக யாரை பற்றியும் சிந்திக்காமல் திருமணம் செய்து கொண்டாலும் இறுதியில் கொஞ்சமாவது தனாவை பற்றி சிந்தித்தது சிறப்பு ❤


நிறைய காட்சிகள் மிகவும் பிடித்தது ❤ எல்லாமே சொல்ல முடியாததுனால ஒன்று மட்டும் குறிப்பிடுகிறேன் . இங்க இருக்கவே மூச்சுமுட்டுது என்று தனா வரோவிடும் பேசும் காட்சி அருமை 😍👌 இப்படியும் சம்மதம் சொல்லலாமா என்று இருந்தது ❤


கதை எனக்கு மிகவும் பிடித்தது ❤


நான் அறிந்த பிராத்தனாவின் வரோவை அனைவரும் அறிந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
மிக அருமையான அழகான விமர்சனம்.. இந்த போட்டி நாவல்களில் நான் மிகவும் ரசித்து ஒவ்வொரு எபியையும் எதிர்பார்த்து படித்த கதைகளில் இதுவும் ஒன்று.. Hero heroine meet பண்ணும் காட்சி உண்மையில் இதுவரை படித்திடாதது..😆😆.

இதைவிட சிறந்த விமர்சனம் யாராலும் கொடுக்க முடியாது..👌👍🏻🙌🏻.
 

zeenath Sabeeha

New member
Aug 23, 2025
14
5
3
Chennai
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் போட்டிக்கதைகள்
#STN_03
"உந்தன் நெஞ்சில் உயிராக"
இனிமையான கொங்கு தமிழில் மனதை நிறைத்த அழகான கதை 🥰
திகழோவியன்.. செந்தாழினி..
இவர்களின் இரு வீடுகளும் அருகருகே இருக்கிறது அத்துடன் வயல் வரப்பும்..
அவள் வீட்டு மல்லிகை பந்தலில் பூப்பறித்துக் கொண்டிருப்பவளை கண்ணெடுக்காமல் பார்க்கிறான் திகழ் அவன் அறை பால்கனியிலிருந்து அவன் பார்ப்பதை அறிந்திருந்தாலும் அவனை ஏறெடுத்து பார்க்காமல் தன் வேலையில் கவனமாக இருக்கிறாள் செந்தா.. இருவர் கண்களிலும் காதல் கொட்டி கிடக்கிறது அத்துடன் அவன் கண்களில் கோபமும் இவள் கண்களில் பரிதவிப்பும்..
கல்லூரி கால காதல் இருவருக்கும்.. உயிராக இருந்தவர்களின் காதலை பிரிப்பதற்கு இடியாக வருகிறது ஒரு விடயம்.. அது என்ன என்பது கதையில்.
தன் தந்தை நாராயணனின் மீது அளவற்ற கோபத்தில் இருக்கிறான் திகழ். காமாட்சி.. தனக்கு நடந்த அநீதி தெரியாமலேயே வாழும் அப்பாவி பெண் 😔 மகன் படும் வேதனையை நினைத்து மறுகுவதும் அவனை மடிதாங்கி அரவணைப்பதும் நெகிழ்வு 😔
கல்யாணி... மகனின் மீது அதீத பாசம் இவருக்கு. அந்த பாசம் கணவனையும் மற்ற சொந்த பந்தங்களையும் அவரை விட்டு தள்ளி வைக்க உந்துகிறது. மகன் தன்னை விட்டு சென்று விடுவானோ என்ற பயம் எப்போதும் இவரை ஆட்டுவிக்கிறது அது ஏன் என்பது கதையில். வளர்ந்த பிறகும் சிறுபிள்ளை என அன்னை இவனை தாங்குவதில் சங்கோஜப் படுகிறான் திகழ். அத்துடன் சங்கடமும் ஆனால் அதை அன்னையிடம் சொல்லத்தான் முடியவில்லை. இவனால். கோவிந்தன்.. தந்தையாக எப்பொழுதும் பழகவில்லை திகளுடன் அது ஏன் என்பதும் கதையில்.
சுகிர்தன், மணி அருமையான கதாபாத்திரங்கள் 🥰
செந்தாழினி.. உயிரானவனை மறக்க முடியாமல் தவிக்கிறாள் தான் தவறுதலாக சொல்லிவிட்ட ஒரு வார்த்தைக்காக அவன் கோபம் மட்டு பட என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரியாமல் மறுகுகிறாள்.. அப்படி இவள் சொன்ன வார்த்தைதான் என்ன என்பதும் கதையில்..
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤️
Good luck 🥰 🌹
 

STN - 78

Member
Staff member
May 5, 2026
37
10
8
Canada
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
நாயகன்: அகிலன்
நாயகி:சௌமிகா
நம் நாயகி சௌமிகா அம்மா கமலா அப்பா சிவநாதன் தம்பி விக்ரம் என்று சிறு குருவிக்கூட்டில் வாழ்ந்து வர பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி படிப்பிற்க்காக அம்மா கமலாவின் அக்கா சகுந்தலா அவர்களின் வீட்டிற்கு வேறு ஒரு உயிர்க்கும் செல்கிறாள்😍😍😍

பெரியம்மா சகுந்தலா வுமன் பெரியப்பா ரவீந்திரன் இருவரும் தன் பெற்ற பிள்ளை போன்று பாசமாக பார்த்து கொள்கின்றனர் ❤❤❤
சகுந்தலா அம்மாவின் சிறு வயதில் இருந்தே தோழியாக வரும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பத்மாவதி அம்மாவின் பழக்கம் ஏற்படுகிறது பத்மா அம்மாவின் மகனே நம் நாயகன் அகிலன் ❤❤❤சௌமி அகிலனை கண்டதும் காதல் கொள்கிறாள்😍😍
அதை அகிலனிடமும் கூற விரிவுரையாளராக இருக்கும் அகிலன் சௌமியின் காதலை உதாசினமாக எண்ணி அவளை தவிர்க்கிறான் இனி என்ன என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம் 🥰 🥰 💐
சௌமி காதலை அகிலன் கண்டுகொள்ளாதது ஓவர் ஆட்டிட்டுயூட் பாய்😡😡😡
சௌமி எதற்க்கும் அலட்டிக்கொள்ளாத பெண்ணாக மனதை கவர்கிறார்❤❤❤
அழகிக்கு பார்க்கும் பெண்களை எல்லாம் பத்மா அம்மாவிடம் குறைகூறி நிறுத்தும் இடம் சிறுபிள்ளைத்தனமான எண்ணம் 🤣🤣🤣
அகிலன் திருமணம் பிறகு சௌமியின் நிராகரிப்பு உனக்கு வலிப்பது போல் தான் அவளுக்கும் இருக்கும் 😡😡
சிறு பெண் உனக்காக அம்மா அப்பா என்று குடும்பத்தை விட்டு வந்தவள் அவளை அடிப்பது தவறல்லவா🥺🥺🥺
நல்ல எதார்த்தமான குடும்ப கதை ❤ 🧡 🧡 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 🥰
உங்கள் விமர்சனம் எனக்கு உற்சாகத்தை தந்துள்ளது. மிக்க நன்றி.
 

ShaSri

Member
Mar 4, 2026
35
23
8
Tamilnadu
#மகேந்திரனின்_மதிவதனியிவள்_விமர்சனம்

முன்ஜென்மத்தில் சேர்ந்து வாழ முடியாமல் போன ஆசையை மகேந்திரனும் மதிவதனியும் மறுபிறவி எடுத்து எவ்வாறு சேர்ந்து மகிழ்ந்து வாழ்கிறார்கள் என்பதே கதை 😍

மகேந்திரன் என்று இரண்டு பேருக்கும் ஒரே பெயரை வைத்து யாரு நாயகனு நல்லா மண்டைய பிச்சுக்க வைத்தீர்கள் 😂😂

மகி வதும்மாவின் காதல் ரொம்ப க்யூட் 🥰 முன் ஜென்மத்திலும் சரி நடப்பிலும் சரி இவர்களின் காதல் அழகு 😍💓

மகேன் அடேய் ரொம்ப நல்ல நண்பன்டா நீ என்னனென்ன வேலையை பார்த்துவிட்டுருக்கே 😰😰 மதி அனைவரின் முன்னும் அசிங்கப்படும்போது இவன் மண்டைய ஒடைச்சா என்னனு தோணுச்சு 😡

அதியன் நல்ல அண்ணன் அப்போவும் இப்பவும் 👌

ஆதினி,வடிவாம்பாள், தர்மன் இவங்களின் நோக்கத்தை இன்னும் ஆழமாகவும் தெளிவாகவும் சொல்லீருக்கலாம். யாழினியை ஏன் தர்மன் கடத்தினான்னு தெரியல? யுகன் நிச்சயம் சாக வேண்டிய ஆள் தான் 😡

மகியும் வதுவையும் சேர்ப்பதற்க்காகவே பிறப்பெடுப்பது மற்றும் அப்போ அப்போ முன்ஜென்ம நியாபங்கள் வந்து போவது நல்லா இருந்தது 👌

இன்னும் வலுவான காட்சிகளை அமைத்திருக்கலாம் .அதை தவிர்த்து நல்ல காதல் கதை ❤

மகி மற்றும் மதியின் காதலை போல் இந்த கதையும் வாசகர் மனதை நிறைத்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
  • Love
Reactions: Umayal K

zeenath Sabeeha

New member
Aug 23, 2025
14
5
3
Chennai
NithaniPrabu Novels சிஸ்டர் அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் போட்டி கதைகள்.
#STN20
தீஞ்சுவை மலர்
கணவன் என்ன செய்தாலும் பொருத்து போக வேண்டும்..
இன்னும் இந்த நிலைதான் நம் பெண்களிடையே நிலவுகிறது நம் நாட்டில்.
கணவனுக்கு அவன் தேவைகளை தீர்த்துக் கொள்ள மனைவி வேண்டும் ஆனால் மனைவிக்கும் அது தேவைப்படும் என்பதை அவன் நினைத்துக் கூட பார்ப்பதில்லை அப்படியே அவளாக வந்து கேட்டாலும் அவள் இச்சைக்கு அடிமையாக இருக்கிறாள் என அவள் மீது பழி சொல்ல காத்திருப்பான் அந்தக் கணவனே. எப்படி மனைவிக்கு உணவு கொடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவன் கடமையோ அவளின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவளின் தேவையும் பூர்த்தி செய்ய வேண்டும். என்பதும் அவன் கடமையே ஆனால் அது நிறைய ஆண்களுக்கு புரிவதில்லை.. அழகாக அதை இந்த கதையில் கோடிட்டு காட்டிருக்கிறார் எழுத்தாளர் 👏👏
யமுனா.. தாயின் மரணத்திற்குப் பிறகு தந்தையின் மறுமணம். அதில் இவளுக்கு புதிதாக ஒரு தங்கை கிடைக்க அந்த தங்கையை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை..
கதிர்.. மனைவியை விவாகரத்து செய்த பிறகே இவனுக்கு அவளின் அருமை தெரிகிறது.
மலர்... பெயருக்கு ஏற்றது போல மென்மையானவள்.. இவளுக்கு உற்ற துணையாக அவளின் நண்பன் ஆரிவ்..
ஆரம்ப அத்தியாயங்களை படிக்கும்போது கதாபாத்திர மாற்றங்களில் சற்று குழப்பமாக இருந்தது ஆனால் போக போக சுவாரசியமாக இருந்தது கதை. நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤️
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
#பாவையின்றி_பார்வையில்லை
#கௌரிஸ்ரிவ்யூ….
அழுத்தமான காதல் கதை🥰🥰🥰🥰…
நிகா…. அம்மா வளர்ப்பில் வளரும் பெண்….தந்தை இல்ல…..
இவளின் பதினெண் வயதில் அம்மா அவளோட பாஸ் ராஜை கல்யாணம் செய்ய….
பிள்ளைகளின் கேலி, கிண்டல் தொடர….அவளுக்கு அவங்க கல்யாணமும் பிடிக்கல….அவங்களையும் பிடிக்காம போகுது…..
ஆன ராஜ் அவ மேல ரொம்ப பாசமாவே இருக்கார்…..
அவ அம்மா மைதிலி மேலயும் அன்பா நடக்க…..சில காலத்தில் மைதிலிக்கு இரட்டை குழந்தைகள் பிறக்குது…..
இது இன்னும் அவளுக்கு அவங்க மேல ஒவ்வாமையை கொடுக்க….
அவங்க கூடவே இருந்தாலும் தனிமையில் இருக்கும் பீல்….
அப்ப தான் அவளின் தனிமை பொழுதுகளை இனிமையாக்க, அவளை மோடிவேட் பண்றது RJ ரிஷி…. FM மூலமா…..
கொஞ்சம் கொஞ்சமா அவன் குரலில் ஈர்க்க பட்ட பெண்ணவள்….அவனை பார்க்காமையே காதலும் கொள்ள….
காதலை ரிஷியிடம் தெரிவிக்க….அவன் மறுக்கிறான்…..
காரணம்?????
நிகா அம்மாவை வெறுக்க…..அவங்க கல்யாணம் செய்த நிலையை அறிந்த பின் ….
அவள் எடுக்கும் முடிவு?????
இது தான் மீதி கதை…….
ரிஷி….பார்வை இல்லைனாலும்…அவனின் தன்னம்பிக்கை❤️❤️❤️❤️❤️….
நிகா காதலை மறுத்து சென்ற போது கோவமா தான் வந்தது….பட் அவன் மனசை கதிர் கிட்ட சொன்ன போது….
Aww எவளோ காதல் டா அவ மேல🫰🫰🫰🫰🫰🫰..,..
கதிர்….இவனை போல நண்பன் கிடைக்க ரிஷி ரொம்ப blessed…..ஆன இவன் பண்ண செயல்🥺🥺🥺🥺🥺….ஏண்டா இப்படி…..
நிகா….சரியான அவசர குடுக்கை….காதலை சொல்வதில், பிரிஞ்சி போனதும் தப்பா நினைப்பதில்…. இப்படி….
ரிஷி, கதிர் & நிகா காம்போ செம்ம cute 🥰 🥰 🥰 🥰 🥰
ராஜ் - மைதிலி …..முதலில் தப்பான பிம்பம் தான் இருந்தது…..பட் இவங்க past life🥺🥺🥺🥺🥺
கதை ரொம்ப நல்ல இருந்தது ரைட்டர் ❤️❤️❤️❤️❤️
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐
லிங்க்👇👇👇👇👇
F%8D%E0%AE%B2%E0%AF%88.433/
 
  • Love
Reactions: STN - 94