உன்னிடத்தில் மனம் மயங்குதே - 1

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,543
6,382
113



உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் - 1



விதவிதமான வண்ணங்களில் உள்ள விளங்குகளால் அந்த அரங்கமே தயாராகிக் கொண்டிருந்தது.ஒருபக்கம் ஓடுபாதையிலும் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்க இன்னொரு புறம் முக்கியமான பிரபலங்களும்,தொழிலதிபர்களும்,பெரும் பணக்காரர்கள் அமர்வதற்கு என்று இருக்கைகள் சரியான இடத்தில் தேர்வான நபர்களின் பெயர்கள் அடங்கிய காகிதம் ஒட்டப்பட்டுக் கொண்டிருந்தது.



இன்னொரு புறம் அன்றைய மாலை நிகழ்ச்சிக்கு தேவையான சிற்றுண்டியும் தயாராகிக் கொண்டிருந்தது.அதோடு மேடையில் எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் நிறுவனத்தின் பெயர் தாங்கிய பலகை ஒன்று நிறுவப்பட்டிருந்தது.


இங்கே நடப்பதை எல்லாம் மூட்டி வரை அளவுள்ள வானத்தின் நீலநிறத்து குட்டைப் பாவடையை உடையை அணிந்துக் கொண்டு முகத்தில் புன்னகையோடு சிவந்திருந்த விரல்களையும் கண்டுக் கொள்ளாமல் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் நிகழ்வினை தன் கையில் வைத்திருந்த புகைப்படக் கருவியால் எல்லாவற்றையும் படமாக்கிக் கொண்டிருந்தாள் சித்தாரா.



அப்போது அங்கே வந்த பாலா அவளைப் பார்த்து சிரித்தப்படி “இங்கே நடக்கிற ஏற்பாட்டை மட்டும் கேப்சர் பண்ணா போதுமா? ப்ரோகிராம் ஒழுங்கா நடக்க வேண்டாமா?” என்று கேள்வியாகக் கேட்டான்.


அவன் கேட்டக் கேள்வியில் யோசனையாக தன் நெற்றியை சுருக்கியவள் படம் பிடிப்பதை நிறுத்தி விட்டு “என்னாச்சு எதாவது பிரச்சினையா?” என்று கேட்டாள்.


அவனோ கையில் வைத்திருந்த சீப்போடு “முக்கியமான பிரச்சினையாக இருப்பதால் தான் உன்னை நேர்ல பார்க்க வந்தேன்”


அவளோ “என்ன விஷயம்னு முதல்ல சொல்லு அதுக்கு முன்னாடி எதுவாக இருந்தாலும் போன் போட்டு பேசலாம்ல அப்போ வாய் பேசினாலும் உன் கை அது தன்னோட வேலையைச் செய்யும்” என்று கோபமாகச் சொன்னாள்.


அதைக் கேட்டு சிரித்தவன் தன் சட்டைப் பையில் இருந்த கைப்பேசியை எடுத்து அவளுடைய எண்ணிற்கு அழைத்தான்.அது மறுபுறம் அழைப்பை தொடர்ந்துக் கொண்டிருக்க இவளோ தன் பாக்கெட்டில் கைப்பேசியை தேடிக் கொண்டிருந்தாள்.


பாலா “தாரா நான் உனக்கு போன் போட்டு நீ எடுக்கலைன்னு தான் நேர்ல வந்தேன்.இங்கே எல்லா மாடல்ஸ் உடைய ஹேர் ஸ்டைல்ஸ் முடியப்போகுது ஆனால் நம்முடைய முக்கியமான மாடல் இன்னும் வரலை,அவங்களுக்குத் தான் மேக்கப் அண்டு ஹேர் ஸ்டைல் பண்ண நேரமாகும் அதனால சீக்கிரமா உன் ஆளை வரச் சொன்னால் தானே நீ டிசைன்ஸ் பண்ண டிரெஸ் போட வேண்டாமா?” என்று பாலா கண்களை சிமிட்டியபடி கேட்கவும் தாரா மெதுவாக “சத்தம் போடாமல் பேசு பாலா யார் காதுலயாவது விழுந்திடப் போகுது அப்புறம் உன் பேவரைட் மாடல் கோவிச்சுக்கப் போறான் நீ உன் வேலையை பாரு நான் ஏன் இன்னும் வரலைன்னு கேட்கிறேன்” என்றவள் வேகமாக தன் கைப்பையை தேடப் போனாள்.


அங்கே இவளின் அறையில் ஓரமாக இருந்த தனது கைப்பையை எடுத்தவள் அதில் தன்னுடைய கைப்பேசியை எடுத்து டார்லிங் என்று இருந்த பெயரில் அழைப்பை தொடர்ந்தாள்.


மறுமுனையில் அழைப்பு சென்றதே தவிர யாரும் எடுத்த பாடில்லை.திரும்ப அழைக்கவும் எந்த பதிலும் வராததால் கோபமானவள் உடனே டிரைவர் என்ற பெயரில் இருந்த எண்ணிற்கு திரும்ப அழைத்தாள்.உடனே அழைப்பை எடுத்ததும் “ஏய் அறிவுக் கெட்டவனே எங்கே இருக்கே?” என்று கோபத்தில் உச்சியில் இருந்தபடி கேட்டாள்.


மறுமுனையில் இருந்த ஓட்டுநர் “மேடம் நாங்க ப்ரோகிராம் நடக்கிற இடத்துக்கு இன்னும் பதினைந்து நிமிஷத்தில் வந்து விடுவோம்” என்று சொன்னான்.


அதைக் கேட்ட தாரா “சார் என்ன பண்றாரு? நான் போன் பண்றேன் அதை எடுக்காம அவாய்ட் பண்றாரா?” என்று வெறுப்பில் கேட்டாள்.


“இல்ல மேடம் சார் போனை சைலன்ட்ல போட்டுட்டு நல்லா தூங்கிட்டு இருக்காரு” என்று சொன்னான்.


உடனே தாரா “சார் போன் சைலன்ட்ல போட்டு இருக்காங்கன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்று கேள்வியாகக் கேட்டாள்.


அவனோ கொஞ்சம் பயந்தவாறு “ரொம்ப தலை வலிக்குது கொஞ்ச நேரம் தூங்க போறேன். நான் போன் சைலன்ட்ல போட்டு இருக்கேன்னு என்கிட்டே சொன்னாரு” என்றான்.


“ம்ம்… சரி ப்ரோகிராம் நடக்கிற இடத்துக்கு உள்ளே வந்ததும் எனக்கு கால் பண்ணு நான் வந்து சாரை எழுப்புறேன்” என்று பேசி விட்டு அழைப்பை துண்டித்தாள் தாரா.


ஓட்டுநர் சொன்ன விஷயத்தையே ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

‘எதுக்காக இவனுக்கு அடிக்கடி தலைவலி வருதுன்னே தெரியலை என்னன்னு டெஸ்ட் பண்ணி பார்த்தால் தெரியும்’ என்று நினைத்துக் கொண்டாள்.


அவளது யோசனையை கலைக்கும் விதமாக அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கிப் போனவளுக்கு அவனுடைய நினைவு வரவே இல்லை.மாறாக திரும்பவும் அதே இடத்தில் தன் கைப்பேசியை வைத்துச் சென்றாள்.


ஒருமணிநேரம் கழித்து தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவளுக்கு அவன் இந்நேரம் வந்து இருக்க வேண்டுமே? என்று யோசனையோடு ஒப்பனை அறைக் கதவை திறக்கவும் அங்கே கண்ணாடியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் அவளின் ஆதித்யா.


கூர்மையான நீல நிற விழிகளோடு ஆறடி உயரமாய் அளவான உடலமைப்பில் வெண்மை இல்லாத செக்கச்சிவந்த தேகத்தோடு மாடலிங் உலகில் முண்ணனி நபராக அவன் திகழ்வதற்கான காரணம் ஏன் என்று கேட்காத அளவிற்கு அவனுடைய வெளிப்புற தோற்றத்தோடு அமர்ந்திருந்தான்.


அவனைப் பார்த்ததும் முகத்தில் புன்னகையோடு தாரா அருகில் வந்து “ஹாய் டியர் எப்போ வந்தீங்க? பாதி மேக்கப் முடிஞ்சிடுச்சு போல” என்று தோளின் மீது கைவைத்து கேட்டாள்.


அவள் புறம் திரும்பி பார்த்தவன் “என்னை இன்வைட் பண்ண வருவேன்னு வெயிட் பண்னேன்.ஆனா மேடம் ரொம்ப பிஸி போல அதான் நானே வந்துட்டேன்” என்றான்.



அவள் ஓட்டுநரிடம் சொன்னது நினைவில் வந்தது.வேலையில் அவள் மறந்து போனதைத் தான் அவன் அப்படி சொல்லுகிறான் என்று புரிந்துக் கொண்டவள் புன்னகையை இன்னும் அதிகமாக்கி அவன் முன்னால் நெருங்கி வந்து “நான் மறந்ததுக்காக வேணும்னா என் காதை ரெண்டையும் பிடிச்சிட்டு சாரி சொல்லட்டுமா?” என்று அவள் தோப்புகரணம் போடுவது போல் செய்யத் தயாரானாள்.


உடனே ஆதித்யா “ப்ளீஸ் இங்கே நீ இருக்கிற பொஸிஷன்னுக்கு இந்த மாதிரி நடந்துக்காதே தாரா,காரணம் கேட்டால் ஒரே பதில் தான் வரும் அதான் நானே வந்துட்டேன்னு சொன்னேன்,அதெல்லாம் விடு என்னோட டிரெஸ் எங்கே?” என்று ஆர்வமாகக் கேட்டான்.


உடனே தன் உதவியாளரை திரும்பிப் பார்த்தாள்.அவனோ “எஸ் மேம்” என்று வெளியே சென்றான்.அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கையில் இரண்டு துணிகளோடு வந்தான்.ஒன்று அடர்நீல நிறத்தில் வைரக்கற்கள் பதித்த மேற்கத்திய நாட்டு உடையும் சந்தன நிறத்தில் விலைமதிப்பற்ற பட்டால் ஆன இந்திய கலாச்சார உடையான குர்தியும் இருந்தது.


அந்த உடையைப் பார்த்து ஒருநொடி எல்லோரும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தனர்.அந்தளவிற்கு உடை அவ்வளவு நேர்த்தியாக இருந்தது.


ஆதித்யா அந்த உடையை மெதுவாக தன் கைகளால் தொட்டுப் பார்த்தான்.அதன் மிருதுவான தன்மையில் “அழகு கொள்ளை அழகு தாரா இந்த துணியோட மென்மையே அதனுடைய தரத்தை சொல்லுது நீ எவ்வளவு பெரிய கலையும் இரசனையும் சேர்ந்த தனித்துவமான டிசைனர்னு ஒவ்வொரு முறையும் உன்னோட படைப்பு அது நிரூபிக்குது” என்று அவன் சொன்னதும் தாராவின் முகம் பெருமையிலும் கர்வத்திலும் இன்னும் அழகாய் இருந்தவளின் முகம் பொழிவாகி மிளிர்ந்தது.


பாலாவும் அந்த உடையைப் பார்த்து இரண்டு கைகளையும் தட்டி சத்தமாக “வெல்டன் வொர்க் தாரா வாழ்த்துக்கள்” என்றான்.


தாரா “ப்ச் என்னை ரொம்ப புகழாதீங்க போதும் பாலா. டியர் இது உனக்காக நானே ஸ்பெஷலான கவனமாக உருவாக்கின டிரஸ் அது எப்படி நல்லா இல்லாமல் போகும்?” என்றவள் தொடர்ந்து “ஆதித்யா இதில் எந்த டிரெஸ்ஸை முதலிலும் ரெண்டாவது கடைசியாக என்னோடு ராம் வாக்ல போட்டு வரனும் என்பதை நீ முடிவு செய்யனும் ஏன்னா உன் செலக்ட் எப்பவும் சரியா இருக்கும்” என்று அன்பான கட்டளை இட்டாள்.அதைக் கேட்டு ஆதித்யா சரியென்பது போல் தலையசைத்தான்.



அடுத்தடுத்த வேலைகள் எல்லாம் வேகமாக நடைப்பெற ஆரம்பித்தது.இந்தியாவின் முன்னனி நிறுவனமான விங்ஸ் மாடல் உலகில் உடைகள் எல்லாம் தாராவின் கை வண்ணத்தில் தனித்துவம் வாய்ந்தது என்றால் அந்த உடைகளை அணிந்து வரும் ஒவ்வொரு மாடல் அழகன் மற்றும் அழகிகளும் அதற்கு ஏற்றார் போலத் தான் தேர்வு செய்வாள் தாரா.அதில் அவளின் தனித்துவமான உடைக்கு எப்பவும் ஆதித்யா தான் சரியான தேர்வாக இருப்பான்.அதோடு அந்த உடையும் அவனுக்கே என்று தைத்து போன்ற தோற்றத்தை தரும்.அவ்வளவு நேர்த்தியான இருக்கும்.



பெங்களூரில் சித்தாராவின் புதிய ஆடைகளுக்கான கண்காட்சியோடு லண்டனில் உள்ள சில வடிவமைப்பாளர்களின் உடையும் சேர்ந்து அதில் இடம் பெறுவதால் நிறைய முக்கியமான பிரபலங்கள் பார்வைகள் எல்லாம் அவள் நடத்தப் போகிற நிகழ்ச்சியில் தான் கவனம் இருந்தது.


நிகழ்ச்சி இன்னும் சில நிமிடங்களில் தொடங்கப்போகிறது.

அதற்கான வேலைகள் தான் எல்லாம் தயாராகிக் கொண்டிருந்தன.


மெல்லிய இசையின் ஆரம்பத்தில் வண்ண விளக்குகளின் ஜாலத்தில் புகைப்படக்கருவியின் ஒளியில் விதவிதமான வண்ணங்களில் புதிய மாடலில் உடையணிந்து ஒவ்வொருவராக உடை அணிவகுப்பு ஆரம்பம் ஆனது.அதன் மத்தியில் ஆதித்யா தாராக் கொடுத்த குர்தியை அணிந்து வந்து வணக்கம் சொன்னான்.


அவனுக்கு என்றே இரசிகர்கள் பட்டாளம் உண்டு.அவர்களின் கரகோஷத்தில் எல்லோரின் முன்னிலும் மெல்லிய புன்னகையோடு தோன்றியதும் கைத்தட்டல்களை பெற்றான். அடுத்து மற்ற ஆடை வடிவமைப்பாளர்களின் உடையும் வந்தது.



இறுதியில் எல்லா ஆடை வடிவமைப்பாளர்களுக்கு வரவும் அவர்களுக்கு மத்தியில் தாரா மேற்கத்திய உடையில் வரவும் அவளின் கையைப் பிடித்துக் கொண்டு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட மேற்கத்திய உடையோடு ஆதித்யா வந்தான்.


அவர்கள் இருவரையும் பார்க்க அத்தனை பொருத்தமாக இருந்தது.

நிகழ்ச்சி அவர்கள் நினைத்ததை விட பெரிய வெற்றி பெற்றது.


ஆதித்யா,பாலா இருவரும் ஒரே வயதுடையவர்கள்.

ஆனால் தாரா இவர்களை விட இரண்டு வயது சிறியவள் பள்ளியிலிருந்து ஒன்றாக படித்தவர்கள்.பின்பு அவர்களுக்கு பிடித்த பிரிவில் படித்தவர்கள் இப்போது மூவரும் ஒன்றாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்கின்றனர்.


தாரா பெரிய தொழிலதிபரின் மகள்,பாலாவும் ஆதித்யாவும் தொழிலதிபரின் மகன்கள் தான்.ஆனால் தாரா அளவிற்கு வசதியும் செல்வமும் கொஞ்சம் குறைவு தான்.ஆனால் மூவரும் ஒன்றாக விங்ஸ் ஆடைவடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.


இதில் தாரா ஆடை துறையையும்,பாலா சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனையை கவனித்துக் கொள்கிறான்.ஆதித்யா மாடலிங் மற்றும் நிர்வாகத்தை அவன் தான் கவனித்துக் கொள்கிறேன்.


இப்படியே நண்பர்களின் கூட்டு முயற்சினால் விங்ஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக ஐந்தாண்டுகளாக நடத்தி வருகின்றனர்.


நிகழ்ச்சியின் முடிவினில் எல்லொரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஆதித்யாவிற்கு லேசாக தலைசுற்ற ஆரம்பிக்கவும் தலையை பிடித்தவன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அப்படியே மயங்கி சரிந்தான்.
 

Author: Vishakini
Article Title: உன்னிடத்தில் மனம் மயங்குதே - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.