அப்படியே அமர்ந்திருந்தாள் கயல். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒரே நிலையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்ததில் கால்கள் இரண்டும் விறைத்துப் போயிருந்தன. அவையோ, 'மெல்ல, மிக மெதுவாகவேனும் அப்பிடியே நீட்ட முடிந்தால் செய்யேன்!' கெஞ்சி நின்றன. அவள் தான் முயன்று பார்க்கிறாள் இல்லையே!
மடியில் அயர்ந்து உறங்கும் லாதிக்குச் சிறு அசைவையும் கொடுத்திட அவள் தயாராகவே இல்லை. அவள் விழித்தெழுந்துவிட்டால் எப்படிச் சமாளிப்பதென்று தெரியாத போது வேறு என்னதான் செய்வது? இப்போதும் ஆழ்ந்த உறக்கத்திலும் சிறுமியின் விழிகளோரம் கசிந்திருந்தன. இதுநாள்வரை இல்லாதவையில் எவ்வளவு அழுதாள். இனியும் அவ்விழிகளில் கண்ணீர் தட்டுவதையோ சிறுமி வெதும்பி அழுவதையோ அவளால் பார்க்க முடியாது.
‘அது சாத்தியமா?’ மனதின் குரலோடு, “காயு கெதியா வந்திரும்.” உதடுகள் முனக பக்கவாட்டில் பார்வை போனது.
ஆதித் குழந்தை; தன்னைச் சுற்றி நடப்பதை அறியாதவன்; அவனுக்குத் தேவையான உணவும் பாசக் கதகதப்பும் குறையில்லாது கிடைக்கிறது, பிறந்ததிலிருந்தே அவன் உணர்ந்த கயலிடம் இருந்து; பிறகென்ன? ஆனந்த சயனத்திலிருந்தான்; இடையில் மெல்ல உதடு சுழித்து கண்களைச் சுருக்கி அழுவது போல் பாவனை செய்தான்; மறுநொடியே, 'கிளுக்' விழிகள் இறுக மூடியிருக்க மொட்டு உதடுகளைப் பிரித்துச் சிரித்தான்.
'நரி வெருட்டுது' அத்தனை கவலையில் இருந்த கயல் முகத்தை இளக வைத்தான், சின்னக் கண்ணன்.
மடியில் இருந்த லாதியை வலக்கையால் மெல்ல அணைத்துப் பிடித்தபடி பட்டும் படாமலும் குழந்தையின் தலை வருடிய அந்தக் காட்சியை உள்வாங்கி நின்றான், வாயிலடியில் நின்ற பூபாலன்.
காயுவும் அருகில் இல்லை; சரி எங்காவது நன்றாக இருக்கிறாள் என்றும் இல்லை; வைத்தியசாலையில் பிராணவாயு உதவியோடு சுவாசித்துக் கொண்டு இருப்பதை, விழிகள் கோடாக வடிக்கும் கண்ணீரை, உள்ளங்கைக்குள் அடங்கியிருந்த பேசித் திரையில் பார்த்த பூபாலன் உள்ளம் உலர்ந்து போயிற்று. அதுவரை, சந்தோசத்தை நிம்மதியைத் தந்த அவர்கள் வீடே அவனுக்கு மூச்சு முட்டியது. இன்னும் ஒரு நாள் அப்படியே இருந்தால் விசர் பிடித்துவிடுமோ என்றளவுக்குப் பயந்து போனது, அவனுள்ளம். வீட்டுக்குள்ளே இருந்தும் மகளுக்கு முகம் காட்ட முடியாது ...
அந்நிலைக்கு ஒரு முடிவு கட்ட நினைத்தான். மகள், மகன் கண்முன்னால் இருப்பதே பெரும் துணிவு தரும் என்று முழுதாக நம்பினான். அதுவே, "எனக்கு இது சரியாப் படேல்ல பூபாலன். இன்னும் கொஞ்ச நாளைக்கு அவையள் கீழயே இருக்கட்டும். காயுவும் வர மேல வரலாம்." எவ்வளவோ சொல்லிப் பார்த்த பிரணவ்விடம் ஒரே பிடியில் நின்றுவிட்டான்.
நல்ல சுத்தமாகவே இருந்த வீட்டை அவன் உதவியோடு மீண்டும் கழுவித் துடைத்துவிட்டு, "இனி நீங்க மேல வரலாம்." என்றுவிட்டே ஓய்ந்தான்.
குளித்துவிட்டு வந்தததும் எடுக்கச் சொன்ன தந்தை கிட்டத்தட்ட மூன்று மணிநேரத்துக்குப் பின்னர் அழைக்க, கண்கள் கலங்கத்தான் பார்த்திருந்தாள், லாதி. அது பார்த்தால், "இனி எல்லாரும் மேல வரலாம்." என்று தகப்பன் சொல்ல அப்படியே மலர்ந்து போனாள். மலர்வோடு மேலே வந்த மகள்...
கன்னத்தில் ஈரமுணர்ந்து தொய்ந்து கிடந்த வலக்கரத்தை பெரும் பாடுபட்டு உயர்த்தி அழுந்தத் துடைக்க முயன்றான், பூபாலன். மனச்சோர்வு அப்படியே அவன் உடலை கதவு நிலையோடு சாய்த்திட்டு.
மனைவி வைத்தியசாலையில் இருக்கும் நாட்களின் துயரை மகள் மகனோடு சேர்த்து கடக்க நினைத்தது பிழையோ என்றளவுவுக்கு யோசிக்க வைத்துவிட்டாள், அவன் மகள்.
பேஸ்மென்டில் இருந்து முதல் ஆளாக, "அப்பா!” என்று கூவிக்கொண்டு வந்து கட்டிப் பிடித்துக் கொஞ்சி ஆர்ப்பாட்டம் பண்ணினாள்.
"ஏன் காலமையே ஃபேஸ் டைம் வரேல்ல? எனக்குச் சரியா கவலையா இருந்தது தெரியுமா!? அழுகை அழுகையா வந்திச்சு!" அவன் தோள் வளைவில் முகம் மறைத்துச் சொன்னவள் குரலில் அப்போதும் அழுகை.
மகளை இறுக அணைத்துக் கொண்டவன், "வீடெல்லாம் கிளீன் பண்ணிட்டுக் கூப்பிடுவம் எண்டு நினைச்சன் குட்டி!" மெல்லச் சொன்னான்.
அதில் சமாதானம் அடைந்து அவனோடு சந்தோசமாக கலகலத்தது சிலநிமிடங்கள்தான்.
"அம்மாட்டப் போவம். அம்மா எங்க இன்னும் வெளில வரேலாதோ அப்பா? ப்ளீஸ் அப்பா, வெளில வரலாம். ப்ளீஸ்!" சொன்னபடி அவனில் இருந்து இறங்கி மாடியில் தாயிருந்த அறை நோக்கி நகர்ந்த மகளை மீண்டும் தூக்கிக் கொண்டான், பூபாலன்.
'இப்பச் சொல்ல வேணாம்; சமாளிக்கலாம்." பிரணவ் எச்சரித்திருந்தான். அது எப்படி, அதுவும் லாதி வெகு புத்திசாலி. கேள்விகளால் குடைந்தெடுத்து விடுவாள்.
"அம்மா வீட்டில இல்ல குட்டிம்மா!" மெல்லத் தொடங்கினான்.
"இல்லையா? எங்க போய்ட்டா? இப்ப வெளில போகேலாதே!"
"அம்மாக்கு கொஞ்சம் பரீத் செய்ய கஷ்டமா இருக்க ஹொஸ்பிட்டல் போய்ட்டா குட்டிம்மா. காலம தான் போனவோ. இரவுக்கோ அல்லது நாளைக்கோ வந்திருவா." என்றுதான் சொன்னான்.
சிறுமியோ, விசுக்கென்று இறங்கிக் கொண்டாள்.
"எனக்கு... எனக்கு இப்பவே அம்மாவப் பாக்கோணும், அப்பா!" அழவே தொடங்கிவிட்டாள். கயல், பிரணவ், தொலைபேசியில் கதைத்த அப்பம்மா, தாத்தா, அம்மம்மா, சித்தி, மாமா என்று யாராலுமே அவள் மனதில் இருந்த கலக்கத்தைப் போக்க முடியவில்லை.
"குஞ்சு போகேலாது. பிள்ளைக்கு அது தெரியும் தானே?" கயல்.
"அப்ப ஃபேஸ்டைம்ல பாப்பம் ஸ்வீட்டி ப்ளீஸ்" அவள் கெஞ்சலும் அழுகையும் தான் தாயைக் காட்ட வைத்தது.
அங்கே, வயர்களும் குழாய்களுமாக படுகையிலிருந்த தாயின் தோற்றம் சிறுமியை நன்றாகவே பயமுறுத்தி விட்டுட்டு.
மேலதிகமாக வாசிக்க...