• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 15

STN - 92

Member
Staff member
மனம் - 15:

சேலத்தில் குருபிரசாத் மற்றும் அட்சயாவின் திருமண வரவேற்பு விமரிசையாக நடந்துக் கொண்டிருந்தது. உறவினர்கள் மட்டுமில்லாமல் தொழில் நண்பர்களுக்கும் அழைப்பிருந்தது.

அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த தங்க நிற லெஹங்கா அட்சயாவின் மேனியை தழுவியிருக்க, அதற்கு பொருத்தமாக வெள்ளை நிற முழுக்கை சட்டை மற்றும் மெரூன் நிற கோட் சூட்டில் கண்ணை பறித்தான், குருபிரசாத்.

ஆவுடையப்பனின் ஜவுளி கடைவைத்திருப்பதாலும், சபாபதியின் உணவகம் வைத்திருப்பதாலும் வியாபரிகளின் வருகை ஏராளமாகவே இருந்தது.

வாசலில் வரவேற்க சபாபதி நின்றிருந்தான். அப்பொழுது பூர்ணிமா அங்கே வந்திருந்தாள். “உங்க வீட்ல தான் யாரையும் கூப்பிடவே இல்லையே. அப்புறம் எதுக்கு வந்த?” என முகத்தில் அறைவதை போல் சபாபதி கேட்பது உள்ளுக்குள் வலித்தாலும்,

“நான் ஒன்னும் சொந்தகாரங்களா வரல. என்னோட ஃபிரென்ட் ரிசப்ஷன்னுக்கு தான் வந்திருக்கேன்.” என்றவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.

அங்கே உறவினர்களின மத்தியில் பூர்ணிமாவும் ஒரு ஓரமாக அமர்ந்துக் கொண்டாள். அவளை கவனித்த அட்சயா மேடைக்கு அழைத்தாள். அங்கே செல்ல மறுத்துவிட்ட பூர்ணிமா, ‘ரெண்டு பேரும் அழகா இருக்கீங்க!’ என குருவையும் அட்சயாவையும் சுட்டிக்காட்டி கையிலே சூப்பர் என குறியீடு காண்பித்தாள்.

அவர்கள் இருவர்களுடன் பள்ளியில் பயின்ற தோழிகள் வந்திருந்தாலும் அவர்கள் யாரும் பூர்ணிமாவை கண்டுகொள்ளவே இல்லை. ரோஷனின் செயலை அறிந்த பொழுதே அவர்கள் அனைவரும் தானாகவே பூர்ணிமாவிடமிருந்து விலகிச் சென்றுவிட்டார்கள்.

ஒரு வீட்டின் மானத்தை அவ்வீட்டில் இருக்கும் பெண்ணின் மீது வைக்கும் சமூகத்திற்கு புரியவில்லை. சமூதாயத்தில் பெண்களுக்கான மரியாதை, அந்த வீட்டின் ஆண்மகன்கள் மற்ற பெண்களிடம் நடந்துக் கொள்ளும் முறையில் தான் இருக்கிறது என!

அங்கே அமர்ந்திருந்த பூர்ணிமாவிற்கு அந்த நிலை தான். ரோஷன் செய்த குற்றம், அவர்கள் வீட்டின் பெண்ணான பூர்ணிமாவை மற்றவரிடமிருந்து ஒதுக்கியது. மற்றவர்கள் அவளை மரியாதையை குறைவாக நடத்தும்படியும் ஆகியது.

பூர்ணிமா வீட்டில் யாரிடமும் பேசுவதே இல்லை. அட்சயாவுடன் மட்டுமே அவள் பேசுகிறாள். திருமணம் முடிந்து ஐந்து நாட்களில் வாழ்த்து சொல்ல ஒருமுறை மட்டுமே அட்சயாவிற்கு அழைத்து பேசினாள். பின்பு அவளை தொந்தரவு செய்ய வேண்டாமனே அழைக்கவே இல்லை.

உறவினர்களில் சிலர் ஜாடையாக பேசுவது தெரிந்தும் அமைதியாகவே அமர்ந்திருந்தாள், பூர்ணிமா. அனைவரின் பேச்சுக்களை கேட்ட சபாபதி தான், ‘இவ வரலனு யார் அழுதா.. வந்து இப்படி பேச்சு வாங்கனுமா?’ என மனதில் நினைத்துக் கொண்டான். மற்றவர்கள் பேசுவதை பார்த்து அவனுக்கே பாவமாக தான் இருந்தது.

சிறிது நேரம் இருந்தவள் அங்கிருந்து கிளம்பிவிட்டாள். உணவு கூட உண்ணாமல் அவள் செல்வதை பார்த்த சபாபதிக்கு மனது பாரமாகியது. அவளும் அட்சயாவும் ஒன்றாக சுற்றியவர்கள் இன்று யாரோ ஒருவரின் திருமணம் போல் அவள் வந்துவிட்டு சென்றிருக்க, அவனுக்கே அவளின் நிலை வருத்தமளித்தது.

அன்றிரவு வரவேற்பு முடியவே இரவு பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. “காலைல போங்க ம்மா. நாடு ராத்திரில எதுக்கு போகணும்?” என குரு சொன்னாலும் கேட்காமல் பாக்கியம் அனைவரையும் கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்.

வீட்டிற்கு வந்த குரு அலுப்பு தீர குளித்துவிட்டு வர, உடையை கூட மாற்றாமல் அப்படியே அட்சயா படுத்துவிட்டாள். “ட்ரஸ் மாத்தலையா?” என அவளை எழுப்பினான்.

“ப்ளீஸ் ப்ளீஸ். ரொம்ப தூக்கம் வருது ஒரு டென் மினிட்ஸ் தூங்கிக்குறேன். நடுவுல எழுந்திரிச்சா என்னோட மொத்த தூக்கமும் போய்டும்.” என கண்ணை மூடிக்கொண்டே உளறியவளின் அருகில் சென்று படுத்தவன், “அது தான் எனக்கும் வேணும்.” என அவளை முழுதாக எழுப்பியே விட்டான். “உங்கள..” என கையை உயர்த்தியவளை அப்படியே வாரிக்கொண்டான்.

மறுநாள் காலையிலே உணவு அமர்களப்பட்டது. ஆவுடையப்பன், குருபிரசாத், அட்சயா மூவருமே அமர்ந்து சாப்பிட்டனர்.
“சபாபதி எங்க?” என்ற குருவின் கேள்விக்கு,

“அண்ணா அவனோட ஹோட்டலுக்கு போயிருக்கான். அங்க எல்லாம் சரியா இருக்கானு பார்த்துட்டு தான் சாப்பிட வருவான்.”

“இப்ப நீங்க ரெண்டுபேரும் ஃபிரீயா இருந்தா நம்ம கடைக்கு வாங்க மாப்ள.” என ஆவுடையப்பனின் அழைப்பை நிராகரிக்க முடியாமல் ஒத்துக்கொண்டான் குருபிரசாத்.

ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்தது அவர்களின் ஜவுளி கடை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், அழகு சாதனா பொருட்கள் மற்றும் பட்டுசேலை என தனி தனியாக ஒரு ஒரு தளத்திலும் இருந்தன.

“மாப்பிள்ளைக்கு கடையை சுத்தி காட்டு பாப்பா. அப்படியே என்ன வேணுமோ பார்த்து எடுங்க.” என்ற ஆவுடையப்பன் அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு விலகிக்கொண்டார்.

“அன்னைக்கு நான் உனக்கு சுத்தி காட்டுனேன்னு. நீ இன்னைக்கே அதையே பண்ணுறியா?” என்ற குருவின் கையிலே கிள்ளியவள், “அப்பா சொன்னதும் நீங்க தான சரின்னு சொன்னீங்க?” என்றாள். “இங்க சி சி டி வி இருக்காதா?” என குறு கேட்டதும் அவனின் கையை விட்டுவிட்டாள்.

ஒருஒரு தளமாக காட்டிக் கொண்டே வந்தவள், இறுதியில் அவனை ஆண்கள் பிரிவிற்கு அழைத்து வந்திருந்தாள்.

“உங்க சைஸ் என்ன?” என கேள்வியாக அவனை பார்க்க,

“வாட்?” என குரு பிரசாத் அதிர்ந்தான்.

“ஷர்ட் சைஸ் கேட்டேன்.” என்றவளை நமட்டு சிரிப்புடன் பார்த்தவன்,

“ஆறு நாள் என் கூடவே பூனைக்குட்டி மாதிரி நீ உரசிகிட்டே இருந்திருக்க. ஆனா இன்னும் என்னோட சைஸ் ஐ மீன் என்னோட ஷர்ட் சைஸ் தெரியலைனு சொல்லுற. ஆனா நான் அப்படியில்லை.” என்றவனின் கையை அழுத்தியவள்,

“உங்க பேச்சே சரில்லை. நானே உங்களுக்கு எடுக்குறேன். நீங்க ட்ரையல் மட்டும் பாருங்க.” என அவளே அவனுக்கு பிளைன் சட்டை, கோடுபோட்ட சட்டை மற்றும் டிஷர்ட் என எடுத்து நீட்டினாள்.

கை நிறைய அவனுக்கான துணியை வைத்திருந்தவளை பார்த்தவன், “இது போதுமா?” என நக்கலாக கேட்டான்.

“ப்ச் வாங்க. ட்ரைல் ரூம் அங்க இருக்கு..” என அவனை அழைத்துக்கொண்டு சென்றாள். அங்கு சென்றதும் ஷர்ட்டை அவனின் கையில் கொடுக்க,

“நீயும் உள்ள வரியா அச்சு. சரியா பார்த்து சொல்லுவ தான?” என்றவனின் கையில் சட்டையை கொடுத்து அவனை மட்டும் உள்ளே தள்ளிவிட்டாள்.

அவள் எடுத்ததில் மூன்று சட்டைகளை மட்டும் எடுத்துக்கொண்டான் குருபிரசாத். அப்பொழுது அவர்களை நோக்கி வந்தான் சபாபதி. “எல்லாம் பார்த்தாச்சா மாமா. நம்ம ஹோட்டலுக்கு போகலாமா?” என அழைத்தான். தோளை குலுக்கிய குருவும் அவனுடன் சேர்ந்து அவர்களின் உணவகத்திற்கு நடந்தான். அவர்கள் கடையை அடுத்த தெருவில் தான் அது இருந்தது.

“கீழே ஸ்னாக்ஸ், ஐஸ் கிரீம் மட்டும் தான் இருக்கும். முதல் மாடில டிஃபன். இரண்டாம் மாடில சாப்பாடு.” என சொன்ன சபாபதியின் முகத்தில் ஒருவித பெருமிதம் இருந்தது. பின் அவர்களை அலுவல் அறைக்குள் அழைத்து சென்றான்.

“ஜூஸ் குடிக்குறிங்களா?” என கேட்டு அவனுக்கு ஜூஸ் சொல்ல, “எனக்கு ஃபலூடா” என்றாள் அட்சயா. அவர்களுக்கு தேவையானதை வரவழைத்துவிட்டு, “நீங்க சாப்பிடுங்க. நான் வந்துடுறேன்.” என வெளியேறினான் சபாபதி.

அவன் சென்றவுடன், அட்சயா சாப்பிட்டுக்கொண்டிருந்த ஃபலூடாவை வாங்கிக் கொண்ட குரு அவளின் கையில் அவன் பாதி குடித்த ஜூஸை கொடுத்தான். முறைத்தாலும் அந்த மீதியை அவளே குடித்து முடித்தாள்.

வீட்டில் மதிய உணவினுடே, “ம்மா நாங்க ஈவ்னிங் கோவிலுக்கு போறோம்.” என்றாள் அட்சயா அறிவிப்பாக.

சாப்பிட்டுவிட்டு அவளை தனியாக அழைத்த சபாபதி எதுவோ சொல்ல அதற்கு அட்சயாவும் முறைப்புடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்களை கவனித்தாலும் அட்சயாவிடம் குறு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

மாலையில் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு இருவரும் சன்னிதானத்தில் அமர்ந்திருந்தனர்.
அந்நேரம் அங்கே பூர்ணிமா வந்தாள், “வா பூரி.” என முகமுழுக்க மகிழ்வுடன் அவளை வரவேற்ற அட்சயா குருவிடம் திரும்பி, “இவ பூர்ணிமா தெரியும்ல..” என குருவை பார்த்தாள்.

“ம்ம்.” என தலையை மட்டும் அசைத்தான் குருபிரசாத்.

“எப்படி இருக்கீங்க ண்ணா?” என ஆவலாக குருவை பார்த்து பூர்ணிமா கேட்க, பதிலுக்கு சிறு தலையசைப்பை தந்தவன், “நான் ஒரு ஃபோன் பேசணும். பேசிட்டு வரேன்.” என அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

“சாரி அச்சு. என்னால கல்யாணத்துக்கு வர முடியல..” என வருந்தியவளின் கையை பிடித்துக் கொண்டாள் அட்சயா.

ஃபோன் பேசிவிட்டு வந்த குரு, “கிளம்பலாமா அட்சயா?” என்றான் அட்சயாவிடம். பூர்ணிமா வந்து இரண்டு நிமிடங்கள் தான் ஆகியிருக்க அட்சயாவிற்கு ஒரு மாதிரி ஆகியது.

“நீ போ அச்சு. நான் அப்புறமா உனக்கு ஃபோன் பண்ணுறேன்.” எனஅவளின் காதில் சொல்லி அனுப்பி வைத்தாள் பூர்ணிமா.

வீட்டிற்கு வந்தவுடன் குரு அறைக்கு சென்றுவிட, “உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு அச்சு. இன்னும் நீ உன்னை பத்தி மட்டும் யோசிக்காம அவங்களுக்கும் சேர்த்து யோசிச்சு பழகு. உனக்கு வேணும்னா பூர்ணிமா உனக்கு வெறும் தோழியா மட்டும் இருக்கலாம். ஆனா அவங்களுக்கு அப்படியில்லை. இனி தான் நீ ரொம்ப கவனமா இருக்கனும்.” என மதியம் சபாபதி சொன்னது நினைவிற்கு வந்தது. ‘அப்படினா அவங்களுக்கு நான் பூர்ணிமா கூட பேசுறது பிடிக்கலையா?’ என யோசித்தவளிற்கு பூர்ணிமாவை நினைத்து வருத்தமாக இருந்தது. ஆனாலும் குருவுடன் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. கேட்டு அவன் ஆம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்ய முடியும் என்ற தயக்கமும் அவளுக்கு இருந்தது.

வீட்டிற்குள் நுழைந்த பூர்ணிமா யாரையும் கண்டுகொள்ளாமல் அறைக்குள் செல்ல போக, “இந்தா டி. எங்க போய்ட்டு வர நீ? உன் பாட்டுக்கு வர. உன் பாட்டுக்கு போற. இதென்ன வீடா இல்லை சத்திரமா?” என்ற தாயை முறைத்தவள் எதுவும் பேசாமல் செல்ல,

“அவ்ளோ அழுத்தம். வாய திறந்து பேசுனா தான் என்ன? இரு சீக்கிரமா உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்குறேன்.” என சுடர்மணி கத்திக்கொண்டிருந்தார்.

அவரை பார்த்து நக்கலாக சிரித்த பூர்ணிமா, “உன் பையனோட வண்டவாளத்தை தெரிஞ்சிகிட்டு தான் என்கிட்ட யாரும் பேசவே யோசிக்குறாங்க. இதுல நீ எனக்கு மாப்பிள்ளை வேற பார்க்க போறியா? கனவு கண்டுக்கிட்டே இருங்க.” என அவரின் பேச்சை கத்தரித்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

இரண்டு நாட்கள் அட்சயாவின் வீட்டில் தங்கியிருந்துவிட்டு குருபிரசாத்தின் வீட்டிற்கு புறபட்டனர். தேவைப்படும் பொருட்களை மட்டும் எடுத்து வைத்தாள் அட்சயா.

“எனக்கு தான் கல்யாணம் முடிஞ்சிடுச்சே ண்ணா. இப்பவாது பூரி கிட்ட நீ பேசு. அவ ரொம்ப பாவம். எந்த தப்பும் செய்யாம அவளுக்கு எதுக்கு தண்டனை?” என்ற அட்சயாவிடம், “கல்யாணம் முடிஞ்சதும் அச்சு பெரிய பொண்ணாகிட்டா போலயே..” என கிண்டலாக பேசிய சபாபதி அவளுக்கான பதிலை சொல்லவில்லை.

கிளம்பும் பொழுது கலங்கி நின்றவளை தாங்கிக் கொண்டான் குருபிரசாத். காரில் விசும்பிக்கொண்டே வந்தவளிடம், “நான் கூட தான் எங்க அம்மா அப்பாவை விட்டு இங்க வந்து இருந்த, நானென்ன உன்ன மாதிரி அழுகவா செய்தேன்?” என்றவனிடம்,

“எங்க அம்மா ஒன்னும் உங்க அம்மா மாதிரி மூஞ்சை திருப்பலையே?” என சொல்லிவிட்டு தான் அவனை பார்த்தாள்.

நேராக சாலையை பார்த்து வாகனத்தை செலுத்தியவனிடம், “தெரியாம சொல்லிட்டேன். சாரிங்க..” என்றாள் தன்மையாக.

“நான் ஏற்கனவே சொன்னது தான் அட்சயா. அம்மாவுக்கு கொஞ்சம் டைம் கொடு. நிச்சயம் மாறிடுவாங்க.” என்றவன் வேறெதுவும் பேசவில்லை. சிறிது நேரத்தில் அவனே சமாதானமும் ஆகி அவளிடம் சகஜமாக பேசிவிட்டான்.

அந்த வார இறுதியில் இருவருமே சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். “அதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சே குரு. இதுக்கு மேலயும் சென்னைலையே நீங்க ரெண்டு பேரும் இருக்கணுமா?” என்றார் குணசீலன்.

“கொஞ்ச நாள் தான் ப்பா. அம்மா வேற சிடுசிடுன்னு ஏதாவது சொல்லிட்டே இருக்காங்க அதான். நான் அட்சயா கிட்ட கூட இதை பத்தி பேசிட்டேன். கொஞ்ச நாள்ல இங்கயே வந்துடுவோம்.” என சொல்லி அவரை சமாதானப்படுத்தினான்.

குரு எவ்வளவு சொல்லியும் இருவரையும் தனியாக காரில் அனுப்ப பாக்கியமும், குணசீலனும் ஒத்துக்கொள்ளவே இல்லை. “பிளைட்ல போங்க.” என்ற பாக்கியத்தையும் மறுத்து, இருவருக்கும் ஏசி பஸில் பதிவு செய்தான் குருபிரசாத்.

அதுவோ கப்பில்ஸ் இருக்கையாக இருக்க, அட்சயாவிற்கு சங்கடமாக இருந்தது. “பயப்படாத டி. இங்களாம் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். இப்படி ட்ராவல் பண்ணனும்னு ஒரு ஆசை..” என்றவனை கனிவாக பார்த்தாள் அட்சயா.

அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படியே அவனின் தோளில் சாய்ந்து படுத்துக் கொண்டாள். குருபிரசாத் தான் விழிப்பும் உறக்கமுமாக அந்த இரவை கழித்தான்.

சென்னைக்கு வந்தவர்களை ஆரத்தி எடுத்து ஜெசிந்தா தான் வரவேற்றாள். “எனக்கு இது பழக்கம் இல்லை. எதோ தெரிஞ்சதை செய்யுறேன். அடஜஸ்ட் கரோ.” என சொல்லிக்கொண்டே எடுத்தாள்.

“பால் பாக்கெட் உங்க வீட்லயே வெச்சாச்சு. ரெண்டு பெரும் போய் குளிச்சிட்டு வாங்க. காலைல டிபன் நம்ம வீட்ல தான்.” என்ற ஜெசிந்தா அவர்களை அனுப்பி வைத்தாள்.

குருவின் வீடு சுத்தமாக இருந்தது. முன்தினம் தான் ஆள்வைத்து சுத்தப்படுத்தினான் அபிலாஷ். எந்த ஒரு அனாவசிய பொருளும் இல்லை. ஏன் அவசிய பொருளே அவ்வளவாக இல்லை. ஹாலில் டிவி, சோபா, ஒரு பீம் பக் அதை தவிர வேறெதுவும் இல்லை. கடைசியாக திருமணத்திற்கு ஊருக்கு செல்லும் பொழுது அட்சயா அவளின் விடுதியை காலி செய்து குருவிற்கு அனுப்பியிருந்த பொருட்கள் ஒருபுறம் இருந்தன.

முதலில் குளித்துவிட்டு வந்த அட்சயா பரிமளத்தின் அறிவுரையில் முதலில் பாலை காய்ச்சுவோம் என சமயலறைக்குள் சென்றாள்.

அங்கிருந்த அனைத்தும் துடைத்து வைத்தது போல் பளிச்சென்று இருந்தது. பேருக்கு தான் கிட்சன் போல.. என குளிர்சாதன பெட்டியில் இருந்து பாலை எடுத்தவள் அடுப்பில் வைத்தாள். அது பொங்கியதும், ஒரு டம்பளரை அங்கிருந்த பிள்ளையாரின் படம் முன்பு வைத்து வணங்கிவிட்டு, காஃபி குடிப்போம் என கிட்சனிற்குள் மீண்டும் சென்று காபி பொடியை தேடிக் கொண்டிருந்தாள்.

“என்ன தேடுற?” என்ற குருபிரசாத்தின் கேள்வியில் பதறியபடி திரும்பியவள், “நீங்க தானா?” என ஆசுவாசமானாள்.

“இங்க உன்னையும் என்னையும் தவிர வேற யார் வர போறா?” என்றவன் அவளை இடித்தப்படி அருகே வந்து நின்றான். அதில் அட்சயா மெல்ல நகர அவளை மேலும் இடித்துக் கொண்டே மேலிருந்த காஃபி போடி டப்பாவையும் சர்க்கரை டப்பாவையும் எடுத்துக் கொடுத்தான்.

“யாராவது காஃபி தூள் டப்பா, சர்க்கரை டப்பாவலாம் இப்படி அடுப்புக்கு மேல இருக்க செல்ஃப்ல வைப்பாங்களா? இங்க பக்கத்துலயே கைக்கு எட்டுற மாதிரி வைக்குறது தான? இதை எடுக்க ஏணி கொண்டு வரணும் போல..” முணுமுணுத்தப்படியே காஃபியை கலக்க துவங்கினாள்.

“அதான் நீ வந்துட்டியே? உனக்கு ஏத்த மாதிரி அரேஞ் பண்ணிக்கோ..” என்றான் குரு பெருந்தன்மையாக.

“ஆஹா! அப்படியே கிட்சனை என்க்கிட்ட விட்டுடலாம்னு ஐடியா இருக்கோ..” என்றவள் கலந்த காஃப்பி ஒன்றை அவனின் கையில் கொடுத்தாள்.

“இப்பவே சொல்லிடுறேன். தோசை, சப்பாத்தி, சட்னி இதெல்லாம் தான் எனக்கு தெரியும்..” என சரணடைந்துவிட்டான் குரு.

அபிலாஷ் வீட்டில் காலை உணவை முடித்தவர்களை மதிய உணவுக்கும் அபிலாஷ் அழைக்க அதனை மறுத்துவிட்டார்கள். வெளியே சென்று வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி வந்து அனைத்தையும் அடுக்கினார்கள்.

பின், இருவருமே சேர்ந்து தான் மதிய உணவை சமைத்தார்கள். முதல் முறை என்பதால் கேசரி செய்தாள் அட்சயா. பின் சாம்பார் ஒரு பொரியல் என முடித்துக் கொண்டார்கள்.

மாலை போல் அட்சயாவின் உடைகளை அவள் அடுக்க துவங்க குருபிரசாத் அவளுக்கு உதவி புரிந்தான். “இதென்ன அட்சயாவுடையா துணி பையா இல்ல அட்சய பாத்திரமா எடுக்க எடுக்க வந்துகிட்டே இருக்கு. உங்க அப்பா கடையை விட உன்கிட்ட தான் நிறைய துணி இருக்கும் போலயே..” என சொல்லிக்கொண்டே அவளுக்கு உதவினான்.

அப்படியே அவர்களுக்கான அந்த வாழ்க்கைக்குள் பொருந்திக் கொண்டார்கள். இருநாட்கள் பறந்திருக்க அவர்கள் எடுத்திருந்த விடுமுறை முடிந்து நாளையில் இருந்து இருவருமே வேலைக்கு செல்ல வேணடும் என்ற நாளும் வந்திருந்தது.
 

Gowri Karthikeyan

Active member
சபா இன்னும் பூரியை தண்டிக்கரது சரி இல்ல டா....
குரு உனக்கு என்ன ஆச்சி???? இதை உன் கிட்ட இருந்து எதிர்பார்க்கள 😬😬😬😬
அன்னைக்கு என்ன நடந்ததுனு உனக்கு தெரியும்.....அது இல்லாம அச்சு - பூரி பிரெண்ட் ஷிப் பத்தியும் உனக்கு தெரிஞ்சி இருக்கு.....
இப்ப என்ன மேன் அவளை அவாய்ட் பண்ற😒😒😒😒😒.....
அவ அண்ணனை வெச்சே இன்னும் எத்தனை பேர் தான் அவளை நோக்கடிபிங்க் டா🥺🥺🥺🥺🥺
 
Top Bottom