அத்தியாயம் - 3

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
மனம் - 3:

ஒருவாரம் சென்றிருக்க,

“ஓகே மனோஜ். உங்க டவுட்ஸை ஒரு மீட்டிங் அரேஞ் பண்ணி டிஸ்கஸ் பண்ணலாம்.” என ஃபோன் பேசியபடியே லிஃட்டின் உள்ளே நுழைந்த குருபிரசாத்தின் காலில் ஒரு ஐடி கார்ட் கயிறில்லாமல் தட்டுப்பட்டது. அதை கையில் எடுத்தவன் செக்யூரிட்டியிடம் கொடுக்கலாம் என அதனை திருப்பி பார்த்தான்.

அதில், மஞ்சள் நிற உடையில், உதட்டில் உறைந்த புன்னகையுடன் அட்சயாவின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தை வருட நீண்ட அவனின் வலக்கை கட்டைவிரலை மடக்கிக்கொண்டான்.

அவனது தளம் வந்ததும் வெளியேற, அங்கே அட்சயா அவளின் ஐடி கார்டை தேடிக் கொண்டிருப்பது தெரிந்தது. லிஃப்டில் இருந்து வெளியே வந்தவன் அவளை பார்த்து, “எக்ஸ்க்யூஸ் மீ மேடம்.” என சத்தமாக அழைத்தான்.

யார் என திரும்பி பார்த்தவள் குருவை கவனித்து, “என்னையா?” என கையால் அவளை சுட்டிக்காட்டி கேட்டாள்.

மெரூன் நிற சட்டையை முழங்கைவரை மடித்துவிட்டிருந்தவன் அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றிருந்தபடியே ‘ஆம்’ என தலையை மட்டும் அசைத்தான். மனதில் மூண்ட பயத்துடன் அவனை நோக்கி நடக்க தொடங்கினாள்.

விரைவாக அலுவலகம் வந்திருந்த அட்சயா, அவளின் அலுவலக அறைக்குள் செல்ல அக்சஸ் வைக்கும் பொழுது தான் ஐடி கார்ட் இல்லாமல் கையில் வெறும் கயிறு மட்டும் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தாள். லிஃட்டின் கூட்டத்தில் அது கீழே விழுந்ததை அவளால் கவனிக்கவில்லை.

“எதுக்கு எப்பவும் ஐடி கார்டை கழுத்துல போடாம கைலையே வெச்சிக்கிட்டு இருக்க அச்சு? ஒருநாள் எங்கயாவது அது விழுந்தாதான் தெரியும்.” என பவ்யா அன்றொருநாள் அவளை எச்சரித்தது நினைவு வந்தது. “இந்த பவ்யா வாயை வெச்சாதால தான்..” என புலம்பிக்கொண்டே லிஃட்டின் அருகில் தேடிக் கொண்டிருந்தவளை தான் குருபிரசாத் அழைத்தான்.

அருகில் வந்தவளிடம், “இது உன்னோடது தான.” என ஐடி கார்டை அவளின் முகத்திற்கு நேராக குரு உயர்த்தினான்.

‘ஆம்.’ என தலையை மட்டும் அசைத்தவளை பார்த்து, ‘பேசுனா முத்து உதிர்ந்திடும் போல..’ என மனதோடு நினைத்துக்கொண்டு அவளின் கையில் கொடுத்தான்.

அதனை வாங்கி ரோப்பில் மாட்டியவள் “சாரி..” என்றாள். அதில், அவன் புருவம் சுருக்கியதை பார்த்து, “இல்ல. இல்ல. அது வந்து தேங்க்ஸ்..” என உளரி கொண்டு வேகமாக ஓடியேவிட்டாள். அவள் செல்வதையே பார்த்த குருபிரசாத்தும் அமைதியாக உள்ளே சென்றான்.

“நிகில். இந்த வேலையை புதுசா வந்தவங்களை பார்க்க சொல்லிட்டு நீங்க வேற ஒர்க் பாருங்க?” என முன்னிருந்தவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் குருபிரசாத்.

“இப்ப வர ஜூனியர்ஸுக்கு ஒன்னொண்ணும் பத்து முறை சொல்லிக்கொடுக்கிற மாதிரி இருக்கு குரு. அதுக்கு நானே பண்ணிடுவேன் போல..” என அவன் அலுத்துக்கொள்ள.

“ரெண்டு மூணு நாள் அவங்க கூட கனெக்ட் பண்ணி சொல்லிக் கொடுத்துட்டு, அடுத்து அவங்களையே பண்ண சொல்லுங்க. அவங்களுக்கு எந்த வேலையும் கொடுக்காம நீங்களே எல்லாத்தையும் பார்த்தா எப்படி?” என அழுத்தமாக கேட்டான் குருபிரசாத்.

“ஓகே குரு. நான் அவங்களுக்கு சொல்லிக் கொடுக்குறேன்” என்றான் நிகில்.

அவன் அப்படி சொன்னாலும் அன்று மதியம் ஒருமணி போல் குருபிரசாத்தே அவர்களின் டீமிற்கு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தான். அவர்கள் குழுவில் வேறு மாநிலத்தில் இருப்பவர்களும் பணிபுரிவதால் அனைவருமே இணைய வழியில் தொடர்பில் இருந்தனர்.

புதிதாக சேர்ந்தவர்களை பற்றி கேட்டறிந்த குருபிரசாத்,
பொறுமையாக என்ன செய்யவேண்டும் எப்படி செய்ய வேண்டும் என அனைத்தையும் விளக்கியவன், “டவுட்ஸ் இருந்தா நிகில் கிட்ட கேளுங்க. அவர் உங்கள கைட் பண்ணுவாங்க.” என்று தொடர்ந்தான். அதனை பவ்யா ஸ்பீக்கரில் போட்டுவிட்டு நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள். அவளின் அருகில் அமர்ந்திருந்த அட்சயாவின் காதிலும் அட்சரம் பிசகாமல் குருபிரசாத்தின் குரல் தெளிவாகவே கேட்டது.

“குருபிரசாத், வெரி ஹண்டசம்ல அச்சு” என பவ்யா அவளிடம் ஏற்கனவே கூறியிருக்க, காரணம் தெரியாமலே அவளின் மீது எரிச்சல் வந்தது அவளுக்கு.

குருவின் குரல் அட்சயாவின் செவியில் விழ விழ அவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றன. ‘அன்றும் இப்படி தானே! அவள் குடும்பம் மொத்தத்தையும் எதிர்த்து அவளுக்காக நின்றான். அவள் குடும்பம் மட்டும் இல்லாமல் அவனின் குடும்பத்தையும் எதிர்த்து தான் நின்றான். அனைத்தையும் பார்த்துக் கொள்வேன் என்ற திடம் அவனிடம் நிறையவே இருந்ததே! ஆனால் நடந்தது வேறாகி போனதே!’ என அவளின் மனம் எடுத்துக்கொடுக்க, தலையை உலுக்கி அந்த எண்ணத்தை புறக்கணித்தவள் அவ்விடத்தில் இருந்து எழுந்து சென்றாள்.
 

Author: STN - 92
Article Title: அத்தியாயம் - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
அந்த வார விடுமுறையில் குருபிரசாத்தின் அக்கா, நளினியும் அவரின் கணவர் அசோகனும் சென்னைக்கு ஒரு உறவினரின் திருமணம் என்று வந்திருந்தனர்.

“போனதுமே உன்னோட தம்பி கல்யாணத்தை பத்தி பேச கூடாது.” என்ற எச்சரிக்கையுடன் தான் நளினியை அழைத்து வந்திருந்தார் அசோகன்.

மாலை வரவேற்பிற்கு செல்ல வேண்டும் என்றிருந்த நிலையில் அசோகனும் குருபிரசாத்தும் காலையிலே வெளியே கிளம்பி சென்றனர். இன்னும் இரண்டு மாதத்தில் தீபாவளி வருவதால் சென்னையில் இருக்கும் அசோகனுக்கு தெரிந்த பட்டாசு கடைகளிடம் வியாபார நிமித்தம் பேச சென்றனர்.

மாலை வரவேற்பு மறுநாள் திருமணம் என நிற்காமல் சென்றதால், “என்னால இதுக்கு மேல இவனை சமாளிக்க முடியாது.” என இரண்டு வயது யாழனை குறிப்பிட்டு சொன்ன நளினி மகனுடன் படுக்கைக்கு சென்றுவிட்டாள்.

“வெளியே செல்ல வேண்டும்.” என அடம்பிடித்த அவர்களின் மகள் ஷ்ருதியை சமாளிக்க முடியாமல் அருகில் இருக்கும் மாலிற்கு அழைத்துக்கொண்டு குருபிரசாத்தும் அசோகனும் மட்டும் கிளம்பினர்.

அதே மாலிற்கு தான் அட்சயாவும் பவ்யாவுடன் வருகை தந்திருந்தாள். வேலைக்கு சேர்ந்து இரண்டு நாட்கள் முன்பு தான் அவளது முதல் மாத சம்பளம் அவளின் வங்கி கணக்கிற்கு வந்திருந்தது.

அடுத்த வார விடுமுறையில் ஊருக்கு செல்வதாக இருக்க, வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆடை வாங்க வந்திருந்தாள். அவளின் ஊரிற்கு சென்று அனைவரையும் அழைத்து செல்லலாம் என்று நினைத்தாள் தான். ஆனால், “கடல் மாதிரி நம்மகிட்டயே கடை இருக்கப்ப வெளிய எதுக்கு பாப்பா எடுக்கணும்.” என ஆவுடையப்பன் நிச்சயம் தடுத்துவிடுவார் என யோசித்தவள் இங்கேயே வாங்கிச்செல்ல பவ்யாவையும் துணைக்கு அழைத்து வந்துவிட்டாள்.

மனதிற்கு பிடித்தமாதிரி அனைவருக்கும் உடை வாங்கியவர்கள் உணவு உண்ணும் இடத்திற்கு வந்து அமர்ந்தார்கள்.

ஸ்ருதியை சிறுப்பிள்ளைகள் விளையாடும் இடத்திற்கு அழைத்து சென்ற குருவும் அசோகனும் அவள் விளையாடும் வரை அங்கேயே இருந்தனர். பின் அவர்களும் உணவு உண்ணும் இடத்திற்கு சென்றார்கள்.

“அப்பா பாத்ரூம் போகணும்..” என ஸ்ருதி நச்சரிக்க துவங்கினாள். ஸ்ருதிக்கு ஆறு வயது ஆகிறது தான். ஆனாலும் அவளை தனியாக எப்படி கழிவறைக்கு அனுப்புவது என அசோகன் தயங்கினார்.

இதுவரை நளினி இல்லாமல் தனியாக ஸ்ருதியுடன் வெளியே சென்றதில்லை. உள்ளே அறிமுகம் இல்லாதவர்கள் யாரேனும் எதுவும் செய்துவிட்டால் என்ன செய்ய? என மகளை தனியே அனுப்ப பயந்தார். அவரின் யோசனைக்கு நம் சமூகமும் பொறுப்பு தானே! எங்கே எந்த நேரம் எந்த குற்றம் நடக்கும் என பீதியுடனே இருக்கும்படி உள்ளது.

அப்பொழுது தான் அவரின் கண்ணில் விழுந்தாள் அட்சயா. அவளை குறிப்பிட்டு, “அன்னைக்கு உன்கூட வந்தது அந்த பிள்ளை தான மாப்ள?” என குருவிடம் கேட்டார்.

அட்சயாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஆமா அத்தான். வாங்க நாம வேற எங்கயாவது போகலாம்.” என்றான்.

“அந்த பொண்ணு இப்ப சென்னைலையா இருக்கா? அந்த பொண்ணுகிட்ட உதவி கேட்போமா?” என அட்சயாவை கைகாண்பித்தார் அசோகன். பதிலுக்கு குருபிரசாத் அவரை முறைத்தான்.

“என்னால வெளியாள நம்ப முடியாது மாப்ள. நான் அந்த பொண்ணு கிட்டயே பேசிக்குறேன்.” என அட்சயாவிடம் சென்றனர். குருபிரசாத்தும் அவரை தொடர்ந்து சென்றான்.

குருபிரசாத்தை பார்த்த பவ்யா, “ஹாய் குரு சார்.” என கையசைக்க அட்சயா அமைதியாக அமர்ந்திருந்தாள். பவ்யாவின் செயலில் அசோகன் குருவை கேள்வியாக பார்த்தார்.

“ஆபிஸ் மேட்ஸ்.” என்றான் குரு.

அட்சயாவிடம் திரும்பிய அசோகன், “நல்லாருக்கியா மா?” என நலம் விசாரித்தார்.

‘அவர் யாரென்றே அவளுக்கு தெரியவில்லை. குருவுடன் இருப்பதால் தலையை மட்டும் அசைத்தாள். அவளின் முழியை வைத்தே அவளுக்கு தெரியவில்லை என குரு, அசோகன் இருவருக்கும் புரிந்தது.

அதில் குருவிற்கு சுள்ளென்று கோபம் ஏற, “எங்க அக்கா வீட்டுக்கார். என்னோட அத்தான்.” என பல்லிடுக்கில் கூறினான். அதற்கும் அவள் மண்டையை உருட்டினாள்.

அவர்கள் இருவரையும் கவனித்த அசோகன், அட்சயாவிடம் ஸ்ருதியை பற்றி சொல்லி அவளிடம் உதவி கேட்க, தயங்காமல் அவளை கழிவறைக்கு அழைத்து சென்றாள்.

அதற்குள் பவ்யா, அசோகன், குருபிரசாத் என அனைவரும் ஒரே டேபிளில் அமர்ந்துவிட்டனர். ‘வெளியே வந்ததும் கிளம்புவோம்.’ என அட்சயா நினைத்துக்கொண்டு வர அவளுக்கும் சேர்த்து ஜூஸ் வாங்கி வைத்திருந்தாள் பவ்யா.

அசோகனிடம் சென்ற ஸ்ருதி அட்சயாவை பார்த்து,
“தேங்க்ஸ் அக்கா.” என சிரித்தாள். அசோகனின் அருகில் அமர்ந்து ஜூஸை குடித்துக் கொண்டிருந்த குருபிரசாத்திற்கு புரையேறியது. அசோகனும் சிரித்துவிட்டார்.

“அக்கா இல்ல டா ஸ்ருதி. அவங்க உனக்கு அத்தை முறை.” என அசோகன் சொல்ல அட்சயாவிற்கு பதட்டமாகியது.

அவளை பார்த்து சிரித்த அசோகன், “வீட்ல எல்லாரும் சௌக்கியமா மா? இப்ப சென்னைல தான் இருக்கியா?” என்றார் பொறுமையாக.

“எல்லாரும் நல்லாருக்காங்க. இப்ப இங்க தான் வர்க் பண்ணுற” என அவஸ்தையுடன் சொல்ல, அவளின் தவிப்பை பார்த்து குருபிரசாத்திற்கு சிரிப்பாக வந்தது.

“உன்னோட அண்ணா தான அன்னைக்கு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு சண்டை போட்டது. அவங்க பெரு என்ன..” என அசோகன் யோசிக்க,

“சபாபதி.” என்றவள் பவ்யா கொடுத்த ஜூஸை ஒரே மடக்கில் குடித்து முடித்தாள்.

குருபிரசாத் பார்வையால் தடுத்தாலும், “உங்க அண்ணா என்ன பண்றங்க?” என மேலும் பேச்சை வளர்த்தார் அசோகன்.

“அண்ணா, அப்பா கூட ஜவுளி கடையை பாத்துக்குறாங்க. அவங்க தனியா ஹோட்டல் கூட வெச்சிருக்காங்க..” என்றவளை பவ்யா குறுகுறுவென என பார்த்தாள்.

பின், “கிளம்புறோம்..” என அசோகனை பார்த்து சொன்னவள் குருவிடம் சிறு தலையசைப்புடன் கிளம்பிவிட்டாள். அவளை நச்சரித்த பவ்யாவிடம், “தூரத்து சொந்தம்.” என சொல்லி சமாளித்தாள்.

“அந்த பிள்ளைக்கு என்னைய அடையாளமே தெரியல போல மாப்ள..”

“நீங்க வேற அத்தான். அவளுக்கு என்னையவே தெரியல. முழிச்சு முழிச்சு பார்த்து தான் கண்டுபிடிச்சா..”

“அதுல மாப்பிளக்கு ரொம்ப கஷ்டம் போலயே.. சொல்லுங்க மாப்பிள என்ன விஷயம்?” என அசோகன் விஷமமாக கேட்டார்.

“அவ என்னோட கம்பெனில தான் வேலை பார்க்குறா அத்தான். வேற ஒன்னும் இல்லை..” என தோளைக்குலுக்கினான்.

“எல்லார்கிட்டயும் முடிஞ்சு போனதுன்னு சொல்லிட்டு நீ இப்ப என்ன பண்ணிட்டு இருக்க மாப்ள? நீ தான் அந்த பிள்ளைக்கு வேலையே வாங்கி கொடுத்துருப்ப போல..”என சந்தேகத்துடன் பார்த்தார்.

“வீட்டிற்கு போலாம் அத்தான். அக்கா தனியா இருப்பா.” என எழுந்துக் கொண்டவனிடம், “என்னைக்கு இருந்தாலும் விஷயம் வெளிய வந்து தான ஆகணும். நீயும் அந்த பிள்ளையும் ஒன்னு சேர்ந்தா எனக்கு சந்தோசம் தான்.” என அவரும் எழுந்துக் கொண்டார்.

ஸ்ருதி நல்ல பிள்ளையாக மாலில் நடந்ததை நளினியிடம் சொல்ல, “யாருங்க அந்த பொண்ணு?” என கணவரை ஏறிட்டாள்.

“உன் தம்பிக்கூட ஆபீஸ்ல வேலை பார்க்குற பொண்ணு. நாம நைட் கிளம்பனும் எல்லாம் ரெடியா?” என பேச்சை மாற்றினார் அசோகன்.

கிளம்பும் பொழுது தான் தம்பியிடம் திருமணத்தை பற்றி பேசினாள் நளினி. கல்யாணம் என்றதும் பிடிகொடுக்காமல் நழுவுபனை பார்த்தவள், “எல்லாத்துக்கும் அம்மாவையே சொல்லாத டா. சும்மா அவங்கள காரணமா சொல்லி வேணும்னே உன்னோட கல்யாணத்தை தள்ளிபோடுறன்னு தெரியுது. அவங்க பிடிவாதம் தான் உன்கிட்ட அப்படியே இருக்கு.” என நளினி சரியாக அவனை கணித்து கேட்டாள்.

அதில் அவன் சிரிக்க, “இப்படி சிரிக்காத டா. அந்த பொண்ணு வீட்லயே போய் பேசலாமா.. அவளுக்காக தான நீயும் கல்யாணம் பண்ணாம இருக்க.”

“வேணாம் க்கா. நம்ம வீட்ல இருந்து யாரும் அவங்க வீட்டுக்கு போய் பேச கூடாது.” என அவளிடம் சொல்லியவன் வேறேதும் பேசவில்லை.

“விடுடி. சீக்கிரமே நல்லது நடக்கும்.” என நளினியை சரிகட்டி அழைத்து சென்றார் அசோகன்.

இரண்டு நாட்கள் அக்கா, அத்தான், அவர்களின் பிள்ளைகள் என இருந்த வீடு வெறிச்சோடி இருந்தது. அபிலாஷும் அவனின் மனைவியோடு வெளியூருக்கு சென்றிருக்க தனிமையில் அமர்ந்திருந்தான்.

“நான் தான் அவளை நினைச்சிருக்கேன் போல. அவளுக்கு என்னையும் தெரியல. என்னோட உறவுகளையும் தெரியல.” என மனதோடு மன்றாடினான்.
 

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
இரவில், ஹாஸ்டலில் செய்த காய்ந்த சப்பாத்தியை சாப்பிட்டு வந்த அட்சயா பூர்ணிமாவிற்கு அழைத்தாள். பூர்ணிமா, அட்சயாவின் தந்தை ஆவுடையப்பனின் தங்கை சுடர்கொடியின் மகள். ஒரு பிரச்சனையால் அவர்கள் இருகுடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை நின்றிருக்க, அட்சயா மட்டும் இவளிடம் பேசிக்கொண்டிருக்கிறாள்.

அட்சயாவின் அழைப்பை எடுத்த பூர்ணிமா நலம் விசாரித்த பிறகு, “குரு அண்ணா கிட்ட ஏதாவது பேசினியா அச்சு?” என கேட்க,

“நான் என்ன டி அவங்க கிட்ட பேசணும். எனக்கு அவங்கள பாத்தாலே நடுங்குது.” என்ற அட்சயாவின் குரலில் பயம் தெரிந்தது. பயத்தையும் மீறி அதில் குற்றவுணர்வும் இருந்தது.

“ஓ.. அவங்களும் உன்கிட்ட எதுவுமே பேசலையா?”

“இல்ல பூர்ணி..” என்றவளின் மனதில் அவன் அவளை பார்ப்பது தெரிந்து தான் இருந்தது.

அட்சயாவின் பதிலில் மண்டையை பிச்சு கொள்ளலாம் போல் பூர்ணிமாவிற்கு இருந்தது. ‘அவ அண்ணன் சபாபதியை மாதிரி தான இவளும் இருப்பா..’ என மனதோடு திட்டியவள், “அச்சு என்கிட்டே மட்டும் உண்மையை சொல்லு. உனக்கு அவங்க மேல தான் விருப்பம் இருக்கா? அதனால தான் கல்யாணத்தை பத்தி உங்க வீட்ல பேசுனாலே வேணாம்னு சொல்லுறியா?”

அவளுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. அவள் மனம் என்ன எதிர்பார்க்கிறது எனவும் அவளால் உணர முடியவில்லை. அவர்கள் வீட்டில் எப்பொழுது திருமண பேச்சை எடுத்தாலும் அவளின் மனதில் குருபிரசாத்தின் முகம் தான் வருகிறது. ஆனால், நிச்சயம் அவனிடம் மீண்டும் சேர முடியாது என்பது அவள் அறிந்த ஒன்று தான்.

உறவே வேண்டாம் என பேசி, செய்த திருமணத்தை முறித்து விவாகரத்தையும் வாங்கியபின் அந்த உறவுக்கு மதிப்பில்லை தானே!

“உனக்கே என்னை பத்தி தெரியும்ல பூரி. என்னால எதையும் மறக்க முடியல. கல்யாணம்னாலே அன்னைக்கு எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டு நின்னது தான் ஞாபகம் வருது.” என மனதோடு அட்சயாவின் கண்களும் கலங்கின.

தோழியின் இந்த நிலைக்கு தானும் ஒருவகையில் காரணம் என பூர்ணிமாவின் மனமே எடுத்து சொல்லியது. “சாரி அச்சு. என்னால அந்நேரம் எதுவுமே செய்ய முடியல. சாரி..” என்றிட,

“ப்ச். லூசா நீ? நடந்ததுக்கு நீ என்ன பண்ணுவ?” என்ற அட்சயா அதட்டி உருட்டி அவளிடம் பேசிவிட்டு வைத்தாள்.

பூர்ணிமாவின் கை தானாகவே சபாபதியின் வாட்சப்பிற்கு சென்றது. நான்கு வருடம் முன்பு பக்கம் பக்கமாக மன்னிப்பை தட்டச்சு செய்து எழுத்து வடிவிலும், குரல் வடிவிலும் அவனுக்கு அனுப்பியிருக்க, அவை அனைத்தையும் ஒரே நொடியில் பார்த்தவன் ஒன்றையும் கேட்கவுமில்லை படிக்கவுமில்லை.

“இப்ப நீ மெசேஜ் அனுப்புறதை நிறுத்தலனா உன்னோட நம்பரை ப்ளாக் பண்ணிடுவேன் பூர்ணிமா.” என சபாபதி பதிலுக்கு அனுப்பியதே கடைசியாக இருந்தது.

அதன் பிறகு அவள் அவனுக்கு எதுவும் அனுப்பவில்லை. உறவினர் விசேஷத்தில் அல்லது என்றாவது அட்சயாவின் மூலம் அவனை சந்தித்துக்கொள்வாள். அப்பொழுதும் அவனின் தீபார்வையில் பொசுங்காமல் இருப்பதே பெரியது என இருந்துக் கொள்வாள்.

காலத்தின் கோலத்தில், இரு இணைகளுக்கிடையே எழுப்பப்பட்ட இரும்புத்திரை, நான்காண்டு காத்திருப்பின் பலனாக துருப்பிடித்து உதிரும் நிலையில் தான் காதலும் துளிர்க்குமோ!
 

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
குரு மனதில் இருந்தாலும் அச்சு நினைப்பது சரிதானே.

ஆமா😌 அச்சு மனசுல தான் என்ன இருக்குனு தெரியல க்கா😜
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
அடடே குரு மனதில் அச்சு தான் இருக்கு போல....
அச்சு உம் குருவை நினைச்சி தான் கல்யாணம் வேணாம்னு சொல்றா....
இந்த குரு அம்மா தான் எல்லா problem உம் பண்ணினது போல😒😒😒😒😒😒
இவன் அச்சுக்கு stand பண்ணி இருக்கான் அப்படினாலும் இப்ப டிவோர்ஸ் ஆகிட்டு போல🥺🥺🥺🥺🥺

சபா...பூரி மேல என்னா டா கோவம் உனக்கு????
Interesting epi🥰
 
  • Love
Reactions: STN - 92

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
அடடே குரு மனதில் அச்சு தான் இருக்கு போல....
அச்சு உம் குருவை நினைச்சி தான் கல்யாணம் வேணாம்னு சொல்றா....
இந்த குரு அம்மா தான் எல்லா problem உம் பண்ணினது போல😒😒😒😒😒😒
இவன் அச்சுக்கு stand பண்ணி இருக்கான் அப்படினாலும் இப்ப டிவோர்ஸ் ஆகிட்டு போல🥺🥺🥺🥺🥺

சபா...பூரி மேல என்னா டா கோவம் உனக்கு????
Interesting epi🥰

நன்றி dear😍
 
  • Love
Reactions: Gowri Karthikeyan