"இளவரசே... இளவரசே... எங்குள்ளீர்?" என்று தூரத்தில் கேட்ட கூக்குரலால், சட்டென்று மரத்திலிருந்து கீழே குதித்தான் வளவன்.
சில நாழிகைப் பொழுதாக, தம்மைத் தாக்க வந்தவர்களின் கண்களில் படாமல் இருப்பதற்காக, அந்த மரக்கிளையில் அவன் தன்னை மறைத்து அமர்ந்திருந்தான்.
வளவன் கீழே குதித்த சத்தத்தில், அவனைத் தேடி ஓடி வந்த மாறனும் தித்தனும் திடுக்கிட்டு நின்றனர். அவனைக் கண்ட நிம்மதியை விட, அவனை சுற்றிலும் நிலவொளியில் குருதி வெள்ளத்தில் கிடந்த சதிகாரர்களின் உயிரற்ற உடல்களைக் கண்டு அவர்கள் அப்படியே அதிர்ந்து போய், நின்ற இடத்திலேயே உறைந்து விட்டனர்.
காடே நிசப்தமாக இருந்தது. எரியும் தீப்பந்தத்தின் வெளிச்சத்தில், வெட்டுண்டு கிடந்த உடல்களையும், அவற்றின் நடுவே எந்தவொரு ஆயுதமும் இன்றி அமைதியாக நின்று கொண்டிருக்கும் வளவனையும் மாறன் மாறி மாறிப் பார்த்தான். அவனது கண்களில் நம்பமுடியாத ஒரு திகைப்பு அலைமோதியது.
'ஆயுதப் பயிற்சியே இல்லாத ஒரு சாதாரண வாலிபன் என்று நினைத்தோமே... இவன் எப்படி இத்தனை கொடூரமான கொலையாளிகளை ஒற்றையாளாக வீழ்த்தினான்?' என்று மாறனின் நெஞ்சம் குழம்பியது.
"இளவரசே..." என்று மூச்சிரைக்க முன்னே வந்தவன், தரையில் கிடந்த ஒரு உடலைத் தன் காலால் திருப்பிப் பார்த்துவிட்டு,
"இவர்கள்... இவர்கள் அனைவரும் எப்படி மாண்டார்கள்? இத்தனை பேரையும் நீரேவா..." என்று இழுத்தான், அவனால் தன் கேள்வியை முழுமையாக கேட்க முடியவில்லை.
வளவன் அவர்களை மெதுவாக ஏறிட்டான். தன் உயிரைக் காப்பாற்றிய அந்த மர்ம வீரனின் அடையாளத்தை இவர்களிடம் சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. காட்டின் ரகசியம் காட்டிலேயே இருக்கட்டும் என்று முடிவு செய்தான். தன் முகத்தில் எந்தவொரு சலனமும் இல்லாமல், கள்ளமிலாச் சிரிப்போடு,
"எனக்கு ஒன்றும் புரியவில்லை மாறா! உன்னை போல தான் நானும், நாமா இவர்களை வெட்டி சாய்த்தோம் என்ற அதிர்ச்சி இன்னும் என்னை விட்டு அகலவில்லை ..." என்றான்.
அவனுடைய அந்தக் கள்ளமில்லாத சிரிப்பை மாறனால் முழுமையாக நம்ப முடியவில்லை. அவன் தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி, வளவனை ஆழமான சந்தேகத்தோடு பார்த்தான்.
தன்னைச் சிறிதும் மதிக்காமல் அலட்சியமாகப் பார்த்த இந்தத் தளபதிகளை, இன்னும் சில காலத்திற்கு இப்படியே குழப்பத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் இருந்தான் வளவன்.
மாறனைப் போலவே பெருங்குழப்பத்தில் இருந்த தித்தனின் இதழ்களில், இளவலின் பதிலைக் கேட்டு ஒரு குறும்புன்னகை துடித்தது. தொண்டையைச் செருமித் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், கீழே கிடந்த குருதி தோய்ந்த உடல்களைச் சுட்டிக்காட்டி,
"இளவலே... தாங்கள் நீரோடைக்குச் சென்ற பொழுது, கைகளில் எந்தவொரு ஆயுதமும் கொண்டு சென்றதாக என் நினைவிலே இல்லையே... பின்பு, எங்ஙனம் இவர்கள் அனைவரையும் உம்மால் வெட்டிச் சாய்க்க முடிந்தது?" என்றான் சற்றே கேலி கலந்த குரலில்.
தன் மேவாய் தாடையை மெல்ல வருடியபடி சில அடிகள் நடந்த வளவன், பின் கருமை அப்பிய வான்வெளியை வெறித்துப் பார்த்தான். ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்துவிட்டவாறே,
"என்னவென்று சொல்வது ... நீரோடையில் நீர் அருந்தச் சென்ற என்னை, ஆயுதம் கொண்டு தாக்க வந்த அந்தக் கும்பலைக் கண்டு பயந்துபோய், நான் காட்டிற்குள் ஓடினேன். சற்றும் அசராத அந்த சதிகாரர்களும் என்னை விரட்டிக்கொண்டு பெருங்காட்டிற்குள் வந்தனர். ம்ம்ம்... இந்த அடர்ந்த காட்டில், நிராயுதபாணியாகத் தனி ஆளாக நின்ற என்னால் அந்த உக்கிரமான கும்பலை எங்ஙனம் சமாளிக்க முடியும்? முடிவில் குலதெய்வத்திடம் என் உயிரைச் சமர்ப்பித்துவிட்டுச் சரணடைந்துவிட்டேன். என் முன்னோர்கள் செய்த புண்ணியம்தான் என்னை எமனின் வாயிலிருந்து காப்பாற்றியது..." என்று மிக அப்பாவியாகக் கூறியவனின் முகத்தை,
‘அடுத்து என்ன நடந்தது?’ என்ற பெருத்த ஆர்வத்தோடு பார்த்தனர் இருவரும்.
சற்றுமுன் தான் அமர்ந்திருந்த பெருமரத்தின் அருகில் சென்றவன், அதன் தடித்த மரப்பட்டையை மெல்ல வருடியபடியே தரையில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி,
"இதோ... இதோ இந்த இடத்தில் தான் அந்த அதிசய நிகழ்வு நடந்தது! நடுக்காட்டில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற என் கண்களுக்கு, ஒரு வாள் இந்த இடத்தில் சொருகிக் கிடப்பது தெரிந்தது. என் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில், 'போ... போய்ப் பற்றிவிடு அந்த வாளை!' என்று ஒரு கட்டளைக் குரல் விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. என்னை அறியாமல், ஓடிச் சென்று அந்த வாளைக் கைப்பற்றிய அடுத்த விநாடி... என்னுள் ஏதோவொரு பேராற்றல் புகுந்தது போன்ற உணர்வு! அதன் பிறகு என்ன நடந்தது என்று சத்தியமாக எனக்கு நினைவிலே இல்லை..." என்று கூறித் தன் கைகளைப் பிசைந்து கொண்டான் வளவன்.
அவன் கூறிய கதையைக் கேட்ட வெற்றிமாறனும், தித்தனும் ஒரு கணம் சிலையாக உறைந்து போயினர். காட்டின் நிசப்தத்தில் எரியும் தீப்பந்தத்தின் வெளிச்சம் அவர்கள் முகங்களில் விழுந்து ஆடியது. மாறன் தன் கையில் இருந்த வாளை மெதுவாக உறைக்குள் செலுத்தினான்.
'வாள் சொருகிக் கிடந்ததா? தெய்வ சக்தி புகுந்ததா? இவன் யாரை ஏமாற்றப் பார்க்கிறான்!' என்று மனதுக்குள் பல்லைக் கடித்தான். அந்தப் பிணங்களின் உடலில் பாய்ந்திருந்த அம்புகளின் துல்லியமும், வெட்டுக்காயங்களின் ஆழமும் ஒரு தேர்ந்த மாவீரனின் கைவண்ணம் என்பதை அவன் நன்றாகவே அறிந்திருந்தான். வளவன் தங்களை அப்பட்டமாகத் திசைதிருப்பி ஏமாற்றுகிறான் என்பதை உணர்ந்தவன், சுற்றிலும் தன் பார்வையைச் சுழலவிட்டான். காட்டின் இருளுக்குள் ஒரு நிழல் மறைந்திருந்து இவனைக் காக்கிறது என்பதை அவன் ஊகித்துக் கொண்டான்.
அதே எண்ணம் தான் தித்தனுக்கும், தன் முகத்தில் ஒரு போலிப் புன்னகையை வரவழைத்துக் கொண்டு,
"பார்த்தியா மாறா... நம் சோழ வாரிசைக் காக்க அந்த உக்கிர மாகாளியே ஆயுதம் ஏந்தி வந்திருக்கிறாள்!" என்று கேலியாக கூறினான்.
அதைக்கேட்டு மாறனின் உதடுகள் புன்னகையில் மலர்ந்தன. தான் கூறியதை அவர்கள் இருவரும் முழுமையாக நம்பவில்லை என்பதை உணர்ந்த வளவன், தனக்குள் ரகசியமாகச் சிரித்துக் கொண்டான்.
சரியான நேரத்தில் இப்படியொரு கதையைத் தட்டாமல், சற்றும் தடுமாறாமல் கட்டிவிட்டோம் என்பதை அவனாலேயே நம்ப முடியவில்லை. இவை எல்லாமே செம்பியனின் தனிப் பெருந்திறமை! இல்லாத ஒன்றையும், நடக்காத ஒன்றையும் அப்படியே நேரில் நடந்தது போலக் கதை கட்டுவதில் அவன் வல்லவன் ஆயிற்றே! அவனோடு பழகியதன் விளைவு, இன்று சோழ நாட்டின் இரு பெரும் தளபதிகளையே தன் பொய் உரையால் குழப்பிவிட்டதை எண்ணி வளவனுக்கு சிரிப்பு வந்தது.
அவன் முகம் புன்னகையில் மலர்வதை கண்ட மாறன்,
"இனி நாம் இந்த இடத்தில் ஒரு விநாடி கூடத் தாமதிக்கக் கூடாது. காற்றில் குருதி வாடை வீசத் தொடங்கிவிட்டது. இது மேலும் பல காட்டு விலங்குகளையும், எஞ்சியிருக்கும் சதிகாரர்களையும் இங்கே இழுத்து வரும். விடிவதற்குள் இந்த ஆபத்தான மலைக் காட்டைக் கடந்து விட வேண்டும், வாருங்கள் இளவரசே!" என்றான் அமைதியான குரலில். வளவனுக்கும் அவனது கூற்றில் உண்மை இருப்பதாகவே பட்டது.
மூவரும் வழிப்போக்கர் மண்டபத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர். காட்டின் இருளுக்குள் மறைந்திருக்கும் அந்த மர்மக் கண்கள் தங்களை இன்னும் கண்காணித்துக் கொண்டிருப்பதை அவர்கள் மூவருமே ஏதோ ஒரு வகையில் உணர்ந்திருந்தனர்.
மீண்டும் அந்த நள்ளிரவில் உறையூரை நோக்கிய அவர்களின் பயணம் தொடர்ந்தது. குதிரைகளை அவர்கள் வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்தாலும், மூவரின் சிந்தனைகளும் தற்போதைய பயணத்தில் இல்லை.
'பெரியவர் இரும்பிடர்த்தலையார் நம்மீது முழு நம்பிக்கை வைக்காமல், இளவலைக் காக்கும் இந்த ரகசியப் பொறுப்பை வேறொரு மர்மக் குழுவிடமும் கொடுத்துள்ளாரோ...' என்று நினைத்த மாறனின் மனதோரத்தில் ஏனோ ஒரு சிறு வலி எழுந்தது.
'இந்த இளவல்... இவன் சற்றும் சாதாரணமானவன் அல்ல. தன்னை ஒரு பேதையைப் போலக் காட்டிக்கொண்டு எங்களை அப்பட்டமாகக் குழப்புகிறான். இவனுக்குப் பின்னால் அரணாக இருக்கும் அந்த மர்மச் சக்தி யார் என்பதை நான் கண்டறிந்தே தீர வேண்டும்' என்று தித்தனும் தன் மனதிற்குள் வஞ்சகமாகத் திட்டம் தீட்டிக் கொண்டான்.
'இன்னும் நான் உறையூர் எல்லையைக்கூட நெருங்கவில்லை. அதற்குள் என் உயிரைக் குடிக்கத் துடிப்பவர்கள் யார்? நான் எங்குள்ளேன் என்ற ரகசியம் அவர்களுக்கு எங்ஙனம் தெரிந்தது? ம்ம்ம்... நான் நினைத்ததை விடவும் உறையூர் அரசியல் சதுரங்கத்தின் ஆழம் அதிகம் போலிருக்கிறதே! என்னால் இதிலிருந்து மீள முடியுமா...?' என்று எண்ணமிட்ட வளவன், குழப்பம் நீங்காத மனநிலையோடு தன் குதிரைப் பயணத்தைத் தொடர்ந்தான்.
புகார் நகரத்தின் மருவூர்ப்பாக்கத்து காவிரிக்கரையோரம், அந்தி சாய்ந்து இருள் படரத் தொடங்கிய அந்த முன்யாமப் பொழுதில், தன் நண்பர்களுடன் தீவிரமான ஆலோசனையில் ஆழ்ந்திருந்தான் செம்பியன். அவன் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த அவன் நண்பன் கலிங்கன்,
"ஏன் செம்பா... இது கூடுமா? ஆட்டுக்கறி சாப்பிட்டு எவ்வளவு நாளாகிறது தெரியுமா? நாம் போய்ப் பிடிப்பதற்குள் அந்த கள்ளப்பயல் அனைத்தையும் தின்று தீர்த்துவிட்டால் என்ன செய்வது? இப்பொழுதே என் கையும் வாயும், 'ஆட்டுக்கறியை எடுத்து உண்!' என்று எனக்கு மூர்க்கமாகக் கட்டளையிட்டுக் கொண்டிருக்கின்றன..." என்று தன் உதடுகளை நாவினால் வருடியபடிப் பேசியவனை எட்டி உதைத்துத் தள்ளினான் செம்பியன்.
"ஏலே கலிங்கா... உன் வாயைக் கட்டாததால்தான் சினைப்பன்றி போல் பெருத்துக்கொண்டே போகிறாய்! என்றாவது ஒரு நாள் இருட்டு வேளையில் காட்டில் ஒதுங்கும்போது, காட்டுப்பன்றி என்று நினைத்து ஏதேனும் ஒரு வேடுவன் உன் மீது அம்பை எய்திடப் போகிறான் பார்!" என்று அவன் கேலியாகக் கூற, அங்கிருந்த நண்பர்கள் கூட்டம் கொல்லென்று சிரித்தது.
"சரி சரி... பேச்சு போதும்! இனி காரியத்தில் கண்ணாக இருப்போம். யாரும் உறங்கச் சென்றுவிடாதீர்கள். கடந்த மூன்று நாட்களாக நள்ளிரவுக் கங்குல் பொழுதில், நம்ம குடில்களுக்குள் புகுந்து, கள்ளப் பூனை போல நம் உணவைத் திருடிவிட்டுப் போகும் கள்வன் யாரென்று இன்றிரவு விடிவதற்குள் தெரிந்துவிடும்!" என்ற செம்பியன் எழுந்து நின்று, தன் கைகளை மேலே தூக்கி உடலை வளைத்து நெட்டி முறித்தவனின் பார்வை சற்று தொலைவில் உள்ள காட்டை வெறித்தது.
"என் சந்தேகம்... அந்தப் பாவி அருகில் உள்ள காட்டில் மறைந்துகொண்டு நம் நடமாட்டத்தைக் கவனிக்கிறான் என்றுதான் தோன்றுகிறது. அதனால், சீக்கிரம் அவரவர் குடிலுக்குச் சென்று, கள்ளைக் குடித்து வெறித்தவர்கள் போல வீட்டுத் திண்ணையில் சாய்ந்து கிடக்க வேண்டும்! மறந்துவிடாதீர்கள், நடிப்பு மிகவும் முக்கியம்..." என்று கண்கள் மின்னக் கூறியவன், தன் கூட்டாளிகளுடன் குடித்தவனைப் போலத் தள்ளாடியபடி தன் வீட்டை நோக்கி நடந்தான்.
அனைவரும் தத்தமது இடத்திற்குச் சென்றுவிட, செம்பியன் மட்டும் கையில் கள் குடுவையோடு தள்ளாடியபடி, புதர்கள் மண்டிய காட்டோரத்திற்குச் சென்று சிறுநீர் கழித்தான். சற்றே தொலைவில் காட்டுப்பன்றிக் கூட்டம் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு, 'கர்... கர்...' என்று ஒலியெழுப்பியபடி நிலத்தைத் தோண்டிப் புற்களின் கிழங்குகளைத் தின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்துப் பலத்த சத்தமிட்டுச் சிரித்தவன்,
"ஏய் பன்றிகளே... அடித்துக்கொள்ளாதீர்கள்! என் குடிலுக்கு வாருங்கள். அங்கே சுடச்சுடக் கம்பஞ்சோறும்... சுட்ட கருவாடும்... நெய்யில் வாட்டிய ஆட்டுக்கறியும் இருக்கிறது! வா... வா... வா... கைநிறைய அள்ளித் தருகிறேன். என் முன்னால் யாரும் 'பசி' என்று நிற்கக் கூடாது. கொடைவள்ளல் கர்ணனுக்கு அடுத்து இந்தச் செம்பியன் தான்..." என்று நிறுத்தியவன், பின் தன் தலையை அங்கிங்கு ஆட்டி மறுத்தபடி,
"இல்லை இல்லை... கர்ணனே எனக்குப் பின்னால் தான்! இந்தச் செம்பியனின் பெயரைச் சொன்னாலே, என் முன்னால் நிற்பவரின் பசி தன்னால் மறைந்து போகும் தெரியுமா...?" என்று போதையில் உளறுவது போலக் கத்திக்கொண்டே தன் குடிலுக்குச் சென்றவன், 'தொபீர்' என்று தன் வீட்டுத் திண்ணையில் விழுந்து கிடந்தான்.
இதையெல்லாம் புதரின் அருகில் தன்னை மறைத்துக் கொண்டு கேட்டிருந்தாள் யாழினி. அவன், 'கம்பஞ்சோறும்... சுட்ட கருவாடும்... நெய்யில் வாட்டிய ஆட்டுக்கறியும் இருக்கிறது' என்று சொல்லும் பொழுதே, அவளை அறியாமல் அவள் நாவில் எச்சில் சுரந்தது; வயிறும் பசியால் பலமாகக் கத்தியது. கடந்த மூன்று நாட்களாக வெறும் கூழும், பழைய கஞ்சியும், வேகவைத்த கீரைகளும் தான் அவளது உணவு. பின்பு வாயில் எச்சில் ஊறாமல் தேனா வடியும் என்று நினைத்தவள், எங்கே தான் சற்றே அசைந்தாலும் அவன் கண்டுபிடித்து விடுவானோ என்ற பயத்தில், உடலைக் குறுக்கிக் கொண்டு ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தாள்.
இருண்ட காடு பயத்தைக் கொடுத்தாலும், 'நீ யார்?' என்ற கேள்வியை யாரும் கேட்கப் போவதில்லை. ஆனால், இவர்களிடம் மாட்டிக் கொண்டால் என்னவாகும் என்று நினைத்தவளுக்குப் பயத்தில் உடல் நடுங்கியது. தன் இரு கைகளால் தன்னைத் தானே அணைத்துக் கொண்டவளின் நாசியைத் தீண்டியது குடலைப் புரட்டும் ஒருவிதக் கெட்ட வாடை.
தன்னைத் தானே மோப்பம் பிடித்துப் பார்த்தவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. இங்கே வந்ததிலிருந்து, தான் அணிந்திருந்த அந்த 'குர்தா' ஆடையை அவள் மாற்றவே இல்லை. கீழ் ஆடைக்கு வழி தெரியாமல், ஆற்றின் கரையோரம் காய வைக்கப்பட்டிருந்த ஒரு துணியைத் திருடியவள், அங்கிருந்த ஆண்கள் கட்டிக் கொள்வது போலத் தன் இடுப்பில் அதை ஒரு கச்சையாக இறுக்கிக் கட்டியிருந்தாள்.
"ச்ச இந்த நாத்தம் போற அளவுக்கு நல்லா தேச்சு குளிக்கணும் ... கப்பு தாங்க முடில சாமி ... அதுக்கு முன்ன ஆட்டுக்கறியும் சுட்ட கருவாட்டையும் ஒரு புடி புடிக்கணும் " என்று நாக்கை குழைத்தவளுக்கு சற்று நெருடியது.
'இந்த கிறுக்கு பய, எதுக்கு தேவயில்லாம இங்க வந்து உச்சா போனான் ... ஆத்தங்கரைகிட்டவே போயிருக்கலாமே, எதுக்கு மெனக்கெட்டு இங்க நடந்து வந்தான் ... அதுவும் சும்மா இல்லாம ஆட்டுக்கறி கருவாடு பத்தியெல்லாம் பன்னிங்க கிட்ட பேசிட்டு போயிருக்கான் ... ஒருவேள நாம ஆட்டைய போட்டது தெரிஞ்சுடுச்சோ ... நம்மள புடிக்கத்தான் இந்த ட்ராமாவோ ...' என்று நினைத்தவளுக்கு எதை எதையோ யோசித்து மண்டையே சூடானது. கூடவே வயிறும் என்னை கொஞ்சம் கவனி என்று சத்தம் போட, வேகமாக தலையை உலுக்கிக் கொண்டவள்,
"ச்சச்ச அப்படியெல்லாம் இருக்காது ... இந்த பழங்கால ஆளுக்கு இவ்வளவு கிரிமினல் புத்தி இருக்கும்னு தோணல ... போய் பாப்போம் ... நம்மால சமாளிக்க முடியாததா ..." என்று தன்னை தானே தேற்றிக் கொண்டவள் செம்பியன் குடிலை நோக்கி மெல்ல அடிமேல் அடிவைத்து நடந்தாள்.

Author: Kavithillai
Article Title: அத்தியாயம் - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.