“உலகத்தில இருக்கிற முதல் அஞ்சு ‘லோங்கஸ்ட் சஸ்பென்ஷன் பிரிட்ஞ்’களில இதும் ஒண்டு." விரைந்து செல்லும் வாகனத்தின் முன்னால் செந்நிற ‘கோல்டன் கேட்’ பாலம் தலை காட்டத் தொடங்கியதும் சொல்லியிருந்தான், வேந்தன்.
"பிறகு...மேல சொல்லுங்கோ!" இலக்கியாவின் குரல் எழும்ப, "இந்தப் பயணத்தின் இறுதி விவரணை!" ஆரூரன் சிரித்துக்கொண்டே சொன்னது வேந்தன் இலக்கியா பார்வைகளை மோத வைத்ததென்றால், இடையில் கவியின் பார்வையும் நுழைந்து போயிற்று.
"லாண்ட் எண்டு லாபிரிந்த் அடியில நிண்டு பார்க்க இந்தளவு பெரிசா இருக்கேல்ல என்ன?” சற்று நேரம் நிலவிய அமைதியைக் கலைத்த அஜி, “அம்மாடியோவ் சரியான நீளம் போலவும் இருக்கே!" யன்னல் கண்ணாடியில் முகத்தை அழுத்தி மேலே உயர்ந்திருந்த பாலத்தைப் பார்க்க முனைந்தபடி தொடர்ந்தாள்.
"சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிற இந்தப்பாலம் கிட்டத்தட்ட ஒரு மைல் நீளமிருக்கும்." வேந்தன் தொடங்க, "1917 இலயே இந்தளவுக்குக் கட்டி இருக்கினமே! நவீன உலக அதிசயங்களில இதும் ஒண்டு!" என்றான், ஆரூரன்.
"அதோட, உலகத்தில அதிகமா ஃபோட்டோ எடுக்கப்பட்ட மிக அழகான இடம் எண்டதும் இதான்." இலக்கியாவும் சேர்ந்துகொண்டாள்.
சுற்றியிருக்கும் இயற்கையின் அழக்கொன்றும் எங்களுக்குப் புதிதில்லையென்ற அசட்டையோடு சர் சர்ரென்று வழுக்கிச் சென்ற வாகனங்களோடு கலந்து விரைந்தது, வேந்தன் வாகனம்.
அடுத்த சில நிமிடங்களில், பாலத்தின் முடிவில் வலப்புறமொடித்துத் திருப்பி வாகனத்தை நிறுத்தியிருந்தான்.
மாலைப்பொழுது, பளீரென்று எரிக்கும் ஆதவன், அவன் வெம்மையை உணர விடேனென்று இதமாய் வந்து மோதிய சில்லென்ற காற்று, எப்பக்கம் திரும்பினாலும் உல்லாசப் பயணிகளென்று அவ்விடம் மிகுந்த பரபரப்பாகவே இருந்தது.
இறங்கிய வேகத்தில், யாரும் யாருக்காகவும் காத்திராது அருகிலிருக்கும் ‘ரெஸ்ட் ரூம்’ கட்டிடம் நோக்கிச் சென்றுவிட, தயங்கி நின்றிருந்தாள், இலக்கியா.
அந்தக் கார் நிறுத்தத்திலிருந்து பார்க்கையில் கூட இயற்கை கொஞ்சமும் ஏமாற்றவில்லை. விழிகள் சுற்றிச் சுழன்றாலும் காருக்குள் எதையோ எடுத்துக்கொண்டிருந்த வேந்தனோடு சில வார்த்தைகள் கதைத்துவிடும் எண்ணம் அவளுள். பிறகு கதைக்கச் சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாதே! இன்னும் சிறிது நேரத்தில் சென்றுவிடுவான்.
“என்ன யோசன?” மனதுள் தவிப்போடு நின்றவள் பின்தலையில் மெல்லத் தட்டியபடி அருகில் வந்து நின்றவனை, சட்டென்று ஏறிட முடியவில்லை. கண்கள் கலங்கிக் கிடந்தன.
“டோய்! என்ன? வோஷ் ரூம் போகேல்லையா?”
“பச்!”
“என்ன எண்டு கேக்கிறன்.” அவள் கரத்தைப் பற்றியவனிடமிருந்து எப்போதும் போல் உதறிக்கொள்ளவில்லை. தொண்டை அடைத்தது.
“வேந்தன்!” ஏறிட்டவள் விழிகளின் கசிவில், “என்ன இலக்கியா?” அதுவரையிருந்த மலர்வைத் தொலைத்துவிட்டிருந்தது, அவன் முகம்.
“இல்ல...நாங்க இங்க நிக்க மட்டும் எங்களோட நில்லுங்கோவன்.” தான் கேட்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமென்று தெரிந்தாலும் கேட்காதிருக்க முடியவில்லை.
“டேய்! இங்க வாரும்.” விறுவிறுவென்று அவளை இழுத்துக்கொண்டு முன்னால் சென்று ஓரமாகத் தள்ளி நின்று கொண்டான். வெளியே வரும் அவள் குடும்பத்தினர் இவ்வளவு மக்களில் அவளைத் தேடித்தான் கண்டு பிடிக்க முடியும். அவன் பிடியில் நகர்ந்தவளுக்கோ வீட்டினர் பற்றி மறந்தே விட்டிருந்தது.
தூரத் தெரியும் நவீன கட்டிடங்களோடிருந்த நகர், கடலுள் தலைநீட்டி நின்ற குன்றுகள், சுற்றிலும் படர்ந்திருந்த மலைத்தொடர்கள், அங்குமிங்குமாக நீலக் கடலை ஊடுறுத்துச் செல்லும் படகுகள், மஞ்சள் ஒளியில் பளீரென்று மினுங்கும் சுற்றம் என, அச்சூழலே, இயற்கையின் இறுகிய அணைப்பில் நெகிழ்ந்து கிடந்து, பார்ப்போரை வியந்து இரசிக்க வைத்தாலும் அவ்வருவர் விழிகளால் மட்டும் அவற்றை உள்வாங்கிட முடியவில்லை!
பார்வை வெறுமனே முன்னால் படிந்திருக்க, அவன் மேல் கையை இறுகப்பற்றியபடி தலையைச் சாய்த்துக்கொண்டவள் ஒத்த வார்த்தை உதிர்க்கவில்லை.
முதல் முதலாக அவளாகவே அவனை நெருங்கி நிற்கிறாள். கரத்தை இறுகப்பற்றியிருந்த விதமே ‘விட்டு விலகிடாதே’ என்று சொல்லாமல் சொல்வதையுணர்ந்தவன் தலை சாய்த்து அவள் தலையில் மெல்ல முட்டினான். இப்படியொரு தனிமையான தருணத்துக்கு இரண்டு கிழமைகளாக ஏங்கியவனாச்சே! ஆனால், இப்போது அவள் கலங்கியல்லவா நிற்கிறாள்.

Last edited:
Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் - 37
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.