“நீங்க வாங்க வேண்டியதுகளப் பார்த்திட்டு வாங்க ஸ்வீட்டி, நான் இவளோட இதில இருக்கிறன்.” என்றுவிட்டு, சிறார்களுக்கென்று போடப்பட்டிருந்த தொலைக்காட்சியின் முன்னால் கிடந்த இருக்கையில் வகுப்புத்தோழியோடு அமர்ந்துகொண்டாள், லாதி.
“ம்ம்...இதிலயே இருக்க வேணும்.” என்றுவிட்டு, அவளில் ஒரு பார்வையிருக்கவே சுற்றி வந்த கயல், முதலில், லாதிக்கென்று இரண்டு பார்பி டி-சேர்ட்டுகளை எடுத்துக்கொண்டாள். அடுத்து, தங்கைக்கென்று சிலவற்றை வாங்கிக்கொண்டு அடுத்த கடைக்குள் புகுந்தார்கள். விட்டுச் செல்கையில் மலர்வோடு இருந்த லாதியின் தோழியின் முகம் சுருங்கிக் கிடந்தது. இவள் வேறு திரும்பி திரும்பிப் பார்த்து விடைபெற்றபடி வந்தாள்.
“என்னவாம் ஃபிரெண்ட், இன்னும் இருந்து டிவி பாக்கப் போறிங்களோ?”
“பச்!”
“என்ன செல்லம்?” சிறுமியின் நாடியைப் பிடித்துத் தன்னை நோக்கி நிமிர்த்திக் கேட்டாள். “பச்!” மீண்டும் அலுத்துக் கொண்டாலும் எதையும் சொல்லவில்லை, அவள். சிநேகிதியோடு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்க நினைத்தாளோ! மணியைப் பார்த்தாள், கயல்விழி.
“அப்ப வாங்க, உங்கட ஃபிரெண்ட் அந்தக் கடைக்க நிக்குமட்டும் இருந்து டிவி பார்க்கலாம்.” திரும்ப, “இல்ல இல்ல. வாங்க!” இழுத்துக்கொண்டு நடந்தவள், “எட்னா ட ஸ்டெப் மதர் ஒரு ‘விட்ச்’ லைக் Lady Tremaine.” கோபமாக முணுமுணுத்தாள். திடுக்கிட்டுப் போனாள், கயல்விழி.
“எட்னா எண்டா உங்கட அந்த ஃப்ரெண்டா?”
“ஓம். எனக்கு நீங்க வாங்கின பார்பி டி சேர்ட் மாதிரி அவவுக்கும் ஆசையா இருந்தது; கேட்க பேசிப்போட்டா ஸ்வீட்டி! பிறகு எட்னாட ஸ்டெப் சிஸ்டருக்கு மட்டும் வாங்கிறா. விட்ச்!” லாதியின் கோபத்தில், பட்டென்று என்ன சொல்வதென்று தெரியாது தடுமாறிப் போனாள், கயல்விழி. அமைதியாக இருப்பதும் சரியெனப்படவில்லை.
“லாதிம்மா, அந்த பார்பி டி சேர்ட்டில உங்கட ஃபிரெண்டுக்கு சைஸ் இருந்திராது. கடைசியா இருந்தத நான் எடுத்தனே. உங்கட சைஸ் தானே அவாக்கும்.” சமாதானமாகச் சொன்னாள்.
“இல்ல ஸ்வீடி... அந்த Tremain வேணும் எண்டே எடுக்க இல்ல. எந்த நேரமும் எட்னாவை ஏசுறதுதான் அவாக்கு வேலை. எட்னா பாவம், அம்மாட்ட போற மூண்டுநாள் தான் சந்தோசமா நிப்பாள்.”
“ஓ!”
“எட்னா மட்டும் இல்ல இன்னும் அஞ்சு... ஆறு” விரல் எடுத்து எண்ணினாள். “ ஏழுபேர் ஸ்டெப் மதரோட இருக்கினம். அதில ஜோன் ட ஸ்டெப் மதர் மட்டும் சோ ஸ்வீட்; மிச்ச எல்லாரும்... விச்!” முகம் முழுதும் கோணல் மாணலாகச் சுழித்தபடி படபடத்தவளுக்கு ‘ஸ்டெப்மதர்’ என்ற சொல்லே இனிக்காதென்று தெள்ளெனத் தெரிந்துகொண்ட கயல் தன்னையுமறியாது முறுவல் செய்துவிட்டாள். மறுநொடியே, 'ச்சே ச்சே வேதாச் சித்தி விச் எல்லாம் இல்ல.' மனதுள் பலமாகவே சொல்லிக் கொண்டவள், "எனக்கு எண்டா எட்ணாவ விட்டுட்டுப் போன அம்மால தான் கோபம் வருது." எதிர்ப்பட்ட காலணிகள் விற்கும் கடைக்குள் நுழைந்தாள், "அந்த ஷூ லாதிம்மாக்கு வடிவா இருக்கும் பாப்பமா?" என்றபடி.
‘UNICORN AND RAINBOW DESIGN’ ஷூ வாங்கித் தரும்படி கேட்டிருந்த லாதியின் கவனமும் அதன் தெரிவில் இறங்கியிருந்தது.
காலையில் பூபாலன் கதைத்த விதத்துக்கு அவன் முகமே பாராது, “பார்க் போகாட்டி என்ன வெளிக்கிட்ட நாங்க மோலுக்குப் போகப்போறம்.” என்று சொன்னவள், "நாங்க பஸ்ஸில போயிட்டு வாறம் காயு." என்று வெளிக்கிட்டு இருந்தாள்.
"அப்பிடி எண்டா லாதிய விட்டுட்டுப் போகச் சொல்லு காயு!" என்றான், பூபாலன். "ஏனப்பா நீங்களும் அவவுக்குச் சரியா நிண்டு கொழுவல் படுறீங்க?" முறைத்தாள், காயு.
"ஆர் சின்ன விசயத்தையும் பிடிச்சுக்க கொண்டு தொங்கிறது?" என்று ஆரம்பித்தவன் மனைவியின் முறைப்பில் நிறுத்திவிட்டு, "சரி சரி விடு, இப்ப என்ன, என்னில தானே கோவம் கார் என்ன செய்தது? சரி, உன்ர கார்ல கூட்டிக்கொண்டு போய் விடுறன், ட்ரைவர் எண்டு நினைக்கச் சொல்லு." என்றுவிட்டு நகர்ந்தான்.
"லாதிய விட சின்னப்பிள்ளை போல பிடிவாதம் பிடிக்காமல் போயிட்டு வாங்க." வெருட்டி காரில் அனுப்பியிருந்தாள், காயு.
முறைப்போடு வந்து அப்பெரிய ‘மோல்’ அருகில் இறங்கிக்கொண்ட வேகத்தில், "பிறகு நாங்களே வருவம்." லாதியோடு நடக்க ஆரம்பித்திருந்தாள், கயல்விழி.
"இல்ல கயல்விழி, ஃபோன் பண்ணும் கூட்டிக்கொண்டு போக வாறன்." என்ற பூபாலன், தானும் இறங்கி வந்து, "லாதிம்மா, ஷொப்பிங் முடிய அப்பாக்கு கோல் செய்யுங்கோ வருவன் என்ன?" என்றுவிட்டு, மகளைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு இறக்கிவிட்டவன் பார்வை கயல்விழியில்.
பூபாலன் என்றொருவன் அங்கு நிற்கிறான் என்றமாதிரியே காட்டிக்கொள்ளாது நின்றவள், "பிள்ள பத்திரம் கயல்விழி!" என்று அவன் தொடங்க, பார்த்தாளே ஒரு பார்வை! பக்கென்று சிரித்துவிட்டான் அவன். அதேவேகத்தில், "உமக்குப் பழக்கம் இல்லாத இடம், அதான் சொன்னன். உண்மையா வேற ஒண்டும் இல்ல." உன் முறைப்பை நான் கணக்கில் எடுக்கவில்லை என்ற கணக்கில் முறுவலோடு சொல்லிவிட்டுச் சென்றிருந்தான்.
‘விண்டோ ஷொப்பிங்’ என்ற எண்ணத்தோடுதான் வந்திருந்தாள், கயல்விழி. அது பார்த்தால், அப்படியே சுற்றி வர வர கைகள் இரண்டிலும் பைகள். வலக்கையில் பிடித்திருந்த பைகளோடு லாதியின் கரத்தையும் பற்ற, "நான் பக்கத்திலேயே வருவன் ஸ்வீட்டி!" பெரிய மனிசியாகச் சொன்னபடி அவளோடு நடந்தவள் இரு சிறிய பைகளையும் தான் தூக்கிக்கொண்டாள்.
கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அங்கே சுற்றியிருப்பார்கள். இடையே இருதடவைகள் ஐஸ், டோனட் என்று உள்ளேயும் தள்ளியிருந்தார்கள். "இனிப் போவம் என்னம்மா?" என்றதும், "அப்பாக்கு கோல் செய்ய வேணும்." நினைவாகச் சொன்னாள் சிறுமி.
மேலும் வாசிக்க…