கயல்விழி தம்மோடு வந்ததில் காயுவுக்கும் பூபாலனுக்கும் மிக்க சந்தோசமும் அப்பாடா என்ற நிம்மதியும்.
“பிள்ளைகள நான் பாக்கிறன், மிச்சத்த நீர் பாரும் காயு.” என்றுவிட்டுத் தன் வேலையோடு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டாள். பாலுக்கு மட்டுமே தாயிடம் சென்றான், குழந்தை ஆதித்.
"காயு, பிள்ளைக்குப் பால் குடுக்கிறனி, கொஞ்சம் கவனம் டி. சாப்பாட வாசலில வச்சிட்டுப் போவன் நான் பாத்துக் கொள்ளுவன்."
பூபாலன் எவ்வளவு சொன்னாலும் மாஸ்க், கையுறை சகிதம் உள்ளே வந்து அவனுக்கு வேண்டியவற்றைக் கவனித்துக் கொண்டாள், காயு. அறைக்குள் அடைபட்டிருந்தவன் தனிமையை உணர விடாது சுற்றி சுற்றி வந்து கதைத்துப் பேசினாள். அவனோ மீண்டும் மீண்டும், " தள்ளிப் போடி!" என்று சொல்ல, "அப்ப எனக்கு இப்பிடி வந்தா அப்பிடியே கிட எண்டு விட்டுருவீங்க போல!" சீண்டினாள். அச்சீண்டலைக் கூட பூபாலன் விரும்பவில்லை.
"திரும்பத் திரும்ப இப்பிடி விசர்க் கதை கதையாத சரியோ! எல்லாம் என்னோட போயிறட்டும் எண்டத்துக்குச் சொல்லுறன், நீ என்னவோ சொல்லுற. சின்னப்பிள்ளைகளுக்கு வராது எண்டு சொன்னாலும் பயம் தானேடி? அதுகள் தாங்குங்களோ!" மூச்சுப்பிடித்துச் சொன்னவன், விடாது இருமினான். அவள் எதிர்ப்படுகையில், இரும்புக் கம்பியால் துவள துவள அடிவாங்கிய கணக்கில் நோகும் உடல் வருத்தத்தை, புழுவாகக் குடைந்த தலை நோவை மறைத்துவிடுபவனால் தொடர் இருமலை மறைக்கவா முடியும்? அதைப் பார்த்தே துடித்துப் பயந்து நின்றாள், காயு.
அடுத்தடுத்த நாட்களிலேயே, அவனையே சுற்றி சுற்றி வந்தவள், ஒவ்வொருமுறையும் குழந்தைகளை நாடுகையில் தன்னைச் சுத்தப்படுத்திக் களைத்தே போய்விட்டாள். லாதியிடம், “கிட்ட வராத செல்லம்.” என்றுவிட, புரிந்து கயல்விழியோடு ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டாள். சின்னவனும் அவளோடு இருந்தாலும் பால் கொடுக்கத் தூக்கத்தானே வேண்டும். "இது சரிவராது!" காலையிலேயே மகனுக்கான தாய்ப்பாலை எடுத்துக் குளிரூட்டியில் பத்திரப்படுத்திவிடத் தொடங்க, கயல் வெகுவாகவே கண்டித்தாள்.
"ஒரே வீட்டுக்க இருந்தும் உம்மட பிள்ளைகள் அம்மாவ மறக்கப் போகினம். அதையும் விட என்ன ஏதெண்டு இன்னும் சரியாத் தெரியாத நோய் காயு. வேகமாத் தொத்துது. மிஞ்சி மிஞ்சிப் போனா ரெண்டு கிழமை, நீர் கொஞ்சம் கவனமா இருந்திட்டாச் சரி. இங்க என்ன எண்டா எங்கள மட்டும் தள்ளி வச்சிப்போட்டு நீங்க ரெண்டு பேரும் கொரோனா வந்த ஆக்கள் போல இருக்கிறது...இதெல்லாம் என்ன வேல?" இப்பிடி, எவ்வளவோ கண்டித்தும் கேட்கவிலை, அவள்.
"அதான் அவைக்கு நீர் இருக்கிறீரே கயல்! ரெண்டு கிழமை தானே, பாலனுக்கு நெகட்டிவ் எண்டு வந்திட்டாத்தான் எனக்கு நிம்மதி! அதுவரை அவரைத் தனியா விடேலா. என்ன செய்யிறார், எப்பிடி இருக்கிறார் எண்டு வந்து வந்து எட்டிப் பார்த்து..." சொன்னவள் கண்கலங்க, கயலுக்குத்தான் அந்தரமாய்ப் போயிற்று.
"அவருக்கு ஒண்ணும் இல்ல காயு. நீர் தான் பெரிசு படுத்துறீர்."
"விசரா உமக்கு...நேற்று இரவு கூட பெரிசு பெரிசா மூச்சு விட்டார் கயல். அதும் நித்திரையில. எப்பிடிக் கிட்டப்போய்ப் பாக்காமல் இருக்கிறது? பேசாம அவரோட ஓரமா படுத்திருவம் எண்டுதான் நினச்சன். பிறகு மனுசன் இருமி இருமிக் கத்துவார். அதுதான் வாசலிலயே குயில்டைப் போட்டுட்டு இருந்திட்டன்.” நித்திரையின்றிச் சிவந்த விழிகளும் வீங்கிய முகமாக இருந்த காயுவைப் பார்க்க கயலுக்குக் கவலையாக இருந்தது.
‘இவா இழுத்து வைக்கப் போறா!’ மனதின் மூலையில் எச்சரிக்கை. எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேட்டால் தானே? அப்போதுதான் கயல்விழியின் பார்வை காயு சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுத் தட்டுக்குப் போனது. “காயு! என்ன செய்யிறீர்?” என்ற கயல் குரலில், வாய்க்குள் வைத்த இடியப்பத்தோடு பார்த்தாள், அவள்.
“இது பூபாலன் அண்ணன் சாப்பிட்ட சாப்பாடுதானே?” அதிர்வோடு கயல் கேட்கையில் தான், தானும் மேசையில் இருந்த தட்டைப் பார்த்தாள், அவள்.
“பழக்கதோசத்தில அவரிட ப்ளேட்டில இருந்த மிச்சத்த வாய்க்க வச்சிட்டன்.” என்று சொல்கையில், அவள் விழிகளால் கண்ணீர் உருண்டு விழுந்தது.
“பச்! சரி சரி, இனி வச்சிட்டுக் கையக் கழுவும். சுடுதண்ணி தாறன் குடிச்சிட்டுச் சாப்பிடும்.” சமாளிப்பாகச் சொன்னாலும் கயல்விழியினுள் ஒரு நடுக்கம்.
எப்போதுமே உணவை வீணாக்க மாட்டாள், காயு. அதுவே லாதி, பூபாலன் தட்டுகளில் எது மிகுந்திருந்தாலும் தானே எடுத்துக் கொள்வாள். அதே வழக்கத்தில் இன்றும் ...‘அப்ப எனக்கும் வந்திருமோ!’ மனதுள் பயம் எழுந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை.
“சாப்பிட்டாச்சு, பிறகென்ன இதிலேயே சாப்பிடுறன். பிறகு ஒண்டுக்கு ரெண்டு கப்பா சுடுதண்ணி குடிக்கிறன் சரியோ!” முறுவலோடு சொல்லிவிட்டுத் தொடர்ந்து சாப்பிட்டவளை, கோபத்தோடு பார்த்தாள் கயல். “இது சரிவராது, பேசாமல் நான் பிள்ளைகளோட ‘பேஸ்மென்ட்’ல போயிருக்கப் போறன். நீர் சின்னப்பிள்ள போல இப்பிடியெல்லாம் நடந்தா நான் என்ன செய்யிறது சொல்லும்?” அலுப்போடு தொடங்கினாள். கலங்கிப் போயிருப்பவளோடு இப்படியெல்லாம் கதைக்க விரும்பாது இருந்தாலும் இரு சிறுபிள்ளைகளின் அன்னை என்பதை மறந்தது போல அவள் நடப்பதைப் பார்க்கையில் கோபம் தான் வந்திட்டு.
“என்ன கயல், கோவிக்கிறீர்? வேலையோட பிள்ளைகளப் பாக்கிறது, வீட்டில வேலை எண்டு கரைச்சல் தான் என்ன?” என்றவளை, என்ன செய்வதாம்!
“நான் என்ன சொல்லுறன் நீர் என்ன கதைக்கிறீர்? என்னதான் என்னோட பிரச்சின இல்லாம இருந்தாலும் ஆதித் பாவம் காயு. லாதிக்கு எண்டாலும் சொன்னா விளங்கும். ஆனா, சின்னவன் உம்மக் கண்டா தூக்கச் சொல்லி கையும் காலும் அடிச்சுச் சத்தம் போடுறது உமக்குத் தெரியாதா சொல்லும்? நீர் கண்டும் காணாமல் விலகிப் போறீர் தானே?”
மேலும் வாசிக்க