• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அன்பில் வந்த ராகமே - 10

STN 23

New member
வணக்கம் மக்களே...

உடல்நிலை சரியில்லாத காரணமாக தொடர்ந்து கதையை பதிவிட முடியவில்லை. இன்னும் பத்து அத்தியாயங்களில் கதை முடிந்து விடும்.

இன்றைய பதிவுகள் எப்படி இருக்குன்னு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 🤩🤗


ராகம் - 10
‘தனக்கு திருமணம் என்றால் அது முரளியோடு மட்டுமே!!’ என்ற மகளை பார்த்தசாரதி அதிர்வோடு பார்த்திருக்க, “என்னடி பேசற?” என்றார் சுந்தரவல்லி.

“ஏன் தமிழ்ல தானே பேசுறேன் உனக்கு புரியலையா? சரி திரும்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ கெழவி..” என்று அவர் அருகே சென்றவள்,

“எனக்கு புருஷன்னா அது உன் பேரன் மட்டும் தான். வேற யாரையும் கட்டி வைக்கலாம்னு கனவுல கூட நினைக்காதன்னு சொல்றேன்” என்று அவர் காதில் சத்தமாக சொன்னாள்.

“எந்த தைரியத்துல அவனை காதலிக்கிறேன்னு என்கிட்டேயே சொல்ற?” என்றார் மகளிடம்.

“என் அப்பா காதலுக்கு எதிரி இல்லை என்று தைரியத்தால தான் ப்பா..”

“என்ன பேசற தங்கம்?”

“உண்மையை பேசறேன் ப்பா. கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்கு முன்னாடியே உங்க தங்கச்சி காதலுக்கு பக்கபலமா இருந்து ஊரையே எதிர்த்துகிட்டு கல்யாணம் பண்ணின என் அப்பா நிச்சயமா என்னோட காதலுக்கு சம்மதிப்பார் என்ற தைரியத்தில் தான் ப்பா” என்று பெருமிதத்தோடு தந்தையை பார்த்தாள்.

ஆனால் பார்த்தசாரதியோ மகளின் பேச்சு திறமையில் வாய் அடைத்து போயிருந்தார். அதை தொடர்ந்து மகளை படிக்க அனுப்பியது தவறோ என்ற எண்ணம் எழாமல் இல்லை.

அன்று சுந்தரவல்லி சொன்னது போல அவர்கள் ஊரில் இருக்கும் பெண்களை பெரும்பாலும் வெளியூரில் படிக்க அனுமதிக்க மாட்டார்கள்.

அப்படி இருக்கும் ஊரில் மிகவும் நன்றாக படிக்க கூடிய தன் பெண்ணை மேற்படிப்பிற்காக சென்னைக்கு அனுப்பியதோடு அவளை அங்கேயே தங்கி வேலை செய்ய அனுமதித்ததும் பார்த்தசாரதி மட்டுமே!

ஊரும் உறவும் சென்னையில் இருக்கும் சூழல் யாரையும் தவறான வழியில் செலுத்தி விடும் என்று அவரை எத்தனை பயமுறுத்திய போதும் தன் முடிவில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.

ராகவியும் அறிவார்ந்த பெண்! தனக்கு கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாமல் ஆக்கபூர்வமாக பயன்படுத்தி தன்னை தகுதி படுத்தி புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலையில் அமர்ந்து அவருக்கு பெருமை சேர்த்திருந்தாள்.

அதேபோல திருமண விஷயத்திலும் நிச்சயம் தன் பெண் தன்னை மீறி செயல்பட மாட்டாள் என்ற உறுதியோடு இருந்தவருக்கு இன்று அவளின் பேச்சு இனிக்கவில்லை.

“இந்த கல்யாணம் நடக்காது தங்கம்மா நீ அவனை மறந்துடு..” என்றதுமே, “ஏன் ப்பா? ஏன் மாமூவை மறக்கணும்” என்றாள்.

“சொன்னதை மட்டும் செய்!!” என்றார் கட்டளையான குரலில்.

“செய்யறேன் பா ஆனா நீங்க மாமூவை மறுத்து என்னை மறக்க சொல்றதுக்கு ஒரு நியாயமான காரணத்தை சொல்லுங்க நான் செய்யறேன்..” என்றிட பார்த்தசாரதி மௌனமாக மகளை பார்த்தார்.

“இப்போவும் சொல்றேன், எங்களோட கல்யாணம் உங்க சம்மதத்தோடவும், ஆசிர்வாதத்தோடவும் தான் நடக்கும். இதுல மாற்றமில்லை. இதுக்காக எத்தனை வருஷம் என்றாலும் நான் காத்திருக்கேன்..”

“ஒருவேளை நீங்க சம்மதிக்கலைன்னா காலம் முழுக்க உங்க மகளா இருப்பேனே தவிர்த்து இன்னொருத்தனை கல்யாணம் செய்ய மாட்டேன் ப்பா.. இது தான் என்னோட முடிவு!!” என்றவள் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள்.
அடுத்த நாள் பண்ணைக்கு வந்தவளை ஓடி வந்து கட்டிக்கொண்ட தேவமங்கை, “என் ராஜாத்தி நீ எங்கே இனிமேல் வர மாட்டியோன்னு நினைச்சேன் ஆனா என் வயித்துல பாலை வார்த்த..” என்று அவளை உச்சி முகர்ந்தார்.

“என்ன த்தை நான் சொன்னேனே இன்னைக்கு வருவேன்னு.. அப்புறமும் ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகற?!” என்றாள் அவர் கன்னத்தில் முத்தமிட்டு.

“நேத்து அண்ணன் கிட்ட இந்த வீட்டு மருமகளா தான் போவேன் இல்லை காலம் முழுக்க அவரோடவே இருப்பேன்னு சொன்னியாமே.. அண்ணன் கோபமா இனி இங்க போக கூடாதுன்னு சொன்னதா அம்மா சொன்னாங்க..”

“கெழவிக்கு வேற வேலையே இல்லை அங்க நடக்கிறதை உடனுக்குடன் இங்க சொல்லுமே தவிர முழுசா சொல்லி முடிக்காது..” என்று சலித்து கொண்டவள்,

“அப்பா சொன்னாங்க ஆனா நான் இங்கே வரும் முன்னாடி அவர் கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்…”

“அண்ணனை எதிர்த்து பேசினியாடி?” என்றார் கோபமாக.

“அடேங்கப்பா இவங்க அண்ணனை எதிர்த்துட்டேன்னு எவ்ளோ கோபம் வருது..” என்று அவர் மூக்கை பிடித்து ஆட்டியவள்,

“உன் காதலுக்காக ஊரையே எதிர்த்து நின்னவர் எங்கப்பா அதனால என்னோட எதிர்ப்பை நிச்சயம் புரிஞ்சுப்பார் அத்தை. எப்பவும் எங்கப்பாவை நான் ஹர்ட் பண்ண மாட்டேன் கவலையை விடு..” என்றவள், “சரி அபியும் மாமூவும் எங்கே?” என்றாள்.

“மளிகை கடை வரை போயிருக்காங்க..” என்று சொல்லும் போதே முரளியின் புல்லட் சப்தம் அவர்களை தீண்டியது.

“இதோ வந்துட்டாங்க.. நீ வா முதல்ல சாப்பிடுவ, நேத்து பேச்சு சுவாரசியத்துல சாப்பிடவே இல்லை..” என்றிட ராகவி சாப்பிட அமர்ந்தாள்.

மற்றவர்களும் அவளோடு இணைந்து கொண்டனர்.

மாடுகளுக்கான வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவர் வந்திருக்க முரளி அவரை அழைத்து கொண்டு பண்ணைக்கு சென்றான்.

அபிராமியும் ராகவியும் ஃபேக்டரிக்கு செல்ல அடுத்த ஒன்றாரை மணி நேரம் கழித்து அங்கே வந்தான் முரளிதரன்.

“நேத்து அபி நிறைய வீடியோ காட்டினா ராகா.. நீ சொல்ற மாதிரியே மார்கெட்டிங் பண்ணலாம். ஆனா எங்க இருந்து தொடங்கணும் எப்படி ஆரம்பிக்கணும்?”

“அதை பற்றி தான் இவ்ளோ நேரம் பாயிண்ட்ஸ் எடுத்துட்டு இருந்தேன்.. முதல்ல நம்மளோட பண்ணை ஃபேக்டரி அங்க தயாரிக்கக்கூடிய பொருட்கள் எல்லாத்தையும் தனி தனியா கவர் பண்ணி அதை சோசியல் மீடியாவுல பதிவேற்றனும்..”

“நமக்குன்னு அதாவது நம்ம கம்பனி பேருல இன்ஸ்டாக ஃபேஸ்புக் பேஜ் whatsapp சேனல்னு சோஷியல் மீடியா அக்கவுண்ட்ஸ் ஆரம்பிக்கணும்…”

“எல்லாம் சரிடி ஆனா இதையெல்லாம் யார் செய்வா?”

“என்ன இப்படி கேட்டுட்ட?! நான் எதுக்கு இருக்கேன்! நம்ம கம்பெனியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டியது என்னோட பொறுப்பு..”

“அதுக்காக தினம் தினம் அண்ணனை எதிர்த்துகிட்டு வருவியா?” என்றார் மங்கை ஆதங்கத்தோடு.

“அப்படி இல்லை அத்தை, நான் ஏன் வேலையை விட்டுட்டு வந்தேன்னு எங்கப்பா கிட்ட தெளிவா சொல்லிட்டேன்..”

“என்னன்னு சொன்னீங்க அண்ணி..”

“அன்னைக்கு எனக்கு ஒரு பிரச்சனை வந்தப்போ உன் அண்ணன் இன்னும் எதுக்கு இந்த கம்பெனியில வேலை செய்யற? நான் உனக்கு கம்பெனி வச்சு கொடுக்கிறேன்னு சொன்னார்..”

“ஏற்கனவே இருக்கிற கம்பெனியில் செய்ய வேண்டிய வேலையே நிறைய இருக்கிறதால எனக்கு எதுக்கு தனியா கம்பெனி? நீயே சொல்லு மாமூ..” என்று முரளியை பார்க்க அவன் அசந்து போய் அவளை பார்த்திருந்தான்.

“என்னைக்கு இருந்தாலும் இது நான் பார்க்க வேண்டிய வேலை தானே?! அதுதான் இனி நம்மோட கம்பெனி வளர்ச்சிக்காக உழைக்க போறேன்னு எங்கப்பா கிட்ட சொல்லிட்டேன்..” என்றவள் தன் திட்டத்தை பாதி ஆங்கிலம் பாதி தமிழ் என்று விளக்கினாள்.

“என்ன என்னமோ சொல்ற எனக்கு இதுல whatsapp தவிர வேற ஒண்ணுமே புரியலடி..” என்றான் முரளி

பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டவன் அயராத உழைப்பினால் தொழிலை முன்னேற்றிக் கொண்டிருந்தானே தவிர அனாவசியமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் அவன் சென்றது கிடையாது.

அவன் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக whatsapp குழுக்கள் வைத்திருக்கிறான்.

அவ்வளவு தான் அவனுடைய சமூக வலைத்தள ஞானம்.

இப்போது அவள் சொல்வதெல்லாம் அவனுக்கு புதிதாக இருந்தது. இத்தனைக்கும் பலர் அவனிடம் “ஃபேஸ்புக் பேஜ் இருந்தா சொல்லுங்க ஃபாலோ செய்கிறோம்” என்று சில முறை கேட்டிருக்கிறார்கள்.

முரளியோ ‘அப்படி எதுவும் தனக்கு இல்லை எதுவாக இருந்தாலும் வாட்ஸ் அப்ல அனுப்புறேன்’ என்று சொல்லி விடுவான்.

வியாபாரம் தெரிந்த அளவுக்கு அவனுக்கு அதிநவீன விளம்பர யுக்தி தெரியவில்லை என்பதுதான் நிஜம்.

“அண்ணா அண்ணி சொல்றது ரொம்ப சரி. நமக்கும் சில நேரத்துல ஸ்டாக் ரொட்டேஷன்ல போகாம நின்னுடுது. ரெண்டு நாள் அதிகம் தாண்டினா கூட டேஸ்ட் மாறுபட வாய்ப்பு உண்டு..”

“பலமுறை நம்ம ஆளுங்களுக்கு அப்படி பொருட்களை ஃப்ரீயா கொடுத்து அனுப்பி இருக்கோம்… ஹோல்சேல் மட்டுமில்லாம சில்லறை வியாபாரமும், நாமலே டைரக்டா டோர் டூ டோர் டெலிவரியும் செய்யணும்”

“எனக்கு இதைப் பற்றி அதிகம் தெரியாது ராகா நீ என்ன செய்யணும் நினைக்கிறியோ செய் அதுக்கு என்ன தேவையோ நான் கொடுக்கிறேன்..” என்றான் முரளி.

“அப்படியெல்லாம் ஜகா வாங்க முடியாது சண்டியரே.. ஹீரோ ஆஃப் த ஷோவே நீதான்!!” என்றாள் புன்னகையோடு.

“என்ன சொல்ற?”

“முதல்ல நம்ம பண்ணை மற்றும் மாடுகளை எப்படி பராமரிக்கிறோம் அதற்கான தீவனம், அதில் வேலை செய்யக்கூடிய ஆட்கள் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் பால் கறக்குறோம் அது எப்படி நெய்யா வெண்ணையா தயிரா மாத்துறோம் என்று எல்லாமே விலாவாரியா எடுத்து சொல்லணும்...”

“அடுத்து ஸ்வீட்ஸ் எப்படி சுகாதார முறையில் செய்கிறோம் அதுக்கான ரேஷியோ இதை பற்றி எல்லாம் நீ தான் எக்ஸ்பிளைன் பண்ணனும். அதை வீடியோ எடுத்துப்பேன் அதுக்கப்புறம் எடிட் பண்ணி எல்லா இடத்திலும் பதிவிட வேண்டியது என் பொறுப்பு!!”

“ஏய் என்னடி, எனக்கு அதெல்லாம் தெரியாதே..”

“எல்லாரும் பொறக்கும் போதேவா எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு வரோம்.. இதோ பாரு மாமூ நீ வழக்கமா செய்யற வேலையை எப்படி செய்யறதுன்னு நாலு பேருக்கு புரியிற மாதிரி அவங்களுக்கு உதவற மாதிரி எடுத்து சொல்ல போற..”

“அதுவும் உனக்கு சூழ்நிலையான படிப்பை தொடர முடியாமல் போயிடுச்சு. இப்படி எத்தனையோ பசங்க உலகம் முழுக்க இருக்கலாம் தானே. இன்னைக்கு விவசாயம் அது சார்ந்த தொழில்கள் எல்லாம் ரொம்பவே நலிஞ்சுகிட்டு வருது அப்படி இருக்கும் போது நம்மளால இதுலயும் சாதிக்க முடியும்னு நீ பேசுற ஒவ்வொரு பேச்சும் அவங்களுக்கான மோட்டிவேஷனா அமையும்..”

“நம்மை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு எத்தனையோ பேர் இப்படி சுயதொழில் அதுவும் விவசாயம் சார்ந்த தொழிலை செய்யலாம். இந்த காலத்துல அது ரொம்பவே அவசியமா இருக்கு..”

“ஆமா ண்ணா, அண்ணி சொல்றது கரெக்ட்!! நீ நம்ம ஊரு பெண்களுக்கு பசங்களுக்கு எவ்ளோ பெரிய முன்னுதாரணமா இருக்க தெரியுமா? என் காது படவே ஒருத்தர் அவங்க பையன் கிட்ட பேசினதை கேட்டு எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா?”

“என்ன அபி பேசினாங்க?” என்றாள் ராகவி.

“டேய் உனக்கு படிப்பு தான் ஏறலை நல்ல கறவை மாடா இரண்டு வாங்கி கொடுக்கிறேன் முரளி மாதிரி பெரிய ஆளா வாடான்னு சொன்னாங்க. இத்தனைக்கும் நீ யாருக்கும் எந்த அட்வைசும் கொடுக்காமலே சைலெண்ட்டா முன்னுதாரணமா இருக்கேனா உன்னோட பேச்சு கேட்டு எத்தனை பேரோட வாழ்க்கை அழகாகும். அதனால கொஞ்சம் யோசிச்சு பாரு ண்ணா..”

“சரி அபி பண்ணலாம் ஆனா தினமும் விடிஞ்சா நமக்கு ஆயிரம் வேலை காத்து கிடக்குது இதுக்கு நடுவுல சினிமா சூட்டிங் மாதிரி.. இதெல்லாம் ஒத்து வருமான்னு யோசிக்கிறேன்?” என்றான் சந்தேகமாக.

“மனம் இருந்தால் மார்க்கம் உண்டு முரளி..” என்றார் மங்கை.

“புரியுது மா. நாம வேணும்னா டிவியில பேசற ஆங்கர் மாதிரி யாரையாவது கொண்டு வந்து பேச வைக்கலாமா இதனால வேலையும் பாதிக்காது விளம்பரமும் சரியா நடக்கும்..”

“தேவையில்லாம என் கோபத்தை கிளறாத மாமா.. நீ பேசறது எப்படி இருக்கு தெரியுமா?” என்று அவனை முறைத்தாள்.

“எப்படி?”

“பத்து மாசம் சுமந்து பிள்ளை பெற்றவளை விட்டுட்டு இன்னும் கல்யாணமே ஆகாதவள் கிட்ட போய் பிரசவ வலியை பற்றியும் தாய்மை பற்றிய அனுபவத்தையும் பேச சொல்ற மாதிரி இருக்கு..” என்றதில் அபி சட்டென சிரித்து விட்டாள்.

புன்னகையோடு ராகவியை பார்த்தவன், “ஓகே, அந்த ஐடியா வேண்டாம்.. ரிஜெக்ட்டட் போதுமாடி?” என்றான்.

“அது!! அந்த பயம் இருக்கணும்” என்று ஒற்றை விரல் நீட்டி விளையாட்டாக எச்சரித்தவள், “எனக்கு உன்னோட வேலை பற்றி தெரியாதா? நீ எதுவும் கவலை படாத மாமூ.. தேவைக்கு இன்னும் இரண்டு ஆட்கள் கூட எடுத்துக்கலாம் பட் உன்னோட வழக்கத்தை டிஸ்டர்ப் பண்ணாத படி நான் ஒவ்வொரு நாளைக்கு ஒன்னொன்னா குட்டி குட்டி கிளிப்ஸ் எடுத்துக்கிறேன்..”

முரளி சம்மதிக்கவும் அங்கேயே அமர்ந்து என்ன மாதிரியான கேள்விகள் அவனிடம் கேட்கப்படும் என்று எழுதிக் கொடுத்தாள்.

அனைத்தையும் வாசித்துப் பார்த்தவன் அதற்கான பதில்களை அவளிடம் சொல்ல “வாவ்!! அவ்வளவுதான் மாமூ இதையே கேமரா முன்னாடி பேசு. அதுவும் கேமரா இருக்கு என்ற கான்ஷியஸ் இல்லாம இப்படியே இயல்பா இருந்தா போதும்..”

“நீயே வீடியோ எடுக்க போறியா? அப்போ இந்த கேள்வி எல்லாம் யாரு என்கிட்ட கேட்பா?” என்றான் முரளி.

“அண்ணி அண்ணா மட்டும் தனியா பேசினா அவ்வளவு எங்கேஜ்ஜிங்கா இருக்குமான்னு தெரியாது.. அதைவிட நீங்க கேள்வி கேட்டு அவர் சொல்லும் போது அது இன்னும் நல்லா இருக்கும்…”

“நம்மளோட மக்களுக்கும் இந்த மாதிரி ஜோடியா.. அதுவும் ரியல் லைப் ஜோடியா சேர்ந்து ஒரு விஷயம் சொல்லும் போது அதுக்கான ரீச் அதிகம். நம்ம மூர்த்தி மாமா பொண்ணு விஷுவல் கம்யூனிகேஷன் தான் படிச்சிட்டு இருக்கா அவளை காலேஜ் முடிச்சுட்டு வந்த பிறகு, சனி, ஞாயிறுல வந்து எடுத்து கொடுக்க சொன்னா கண்டிப்பா செய்யப் போறா..”

“இதுவும் நல்ல ஐடியா தான்” என்றாள் ராகவி உற்சாகத்தோடு.

“உனக்கு இதை பத்தி எல்லாம் தெரியுமா?” என்றான் முரளி தங்கையிடம்.

“முதல்ல என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் கூட காண்டாக்ட்ல இருக்கிறதுக்காக ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓபன் பண்ணினேன் அவங்க எல்லாம் இன்ஸ்டால் இல்லையான்னு கேட்கவும் சோஷியல் மீடியாக்குள்ள போனது தான் ண்ணா..”

“அப்போ நானே இந்த மாதிரி நிறைய ப்ரொமோஷன்ஸ் பார்த்து இருக்கேன்.. நாமளும் இப்படி செய்தா நல்லா இருக்குமேன்னு தோணி இருக்கு பட் இருக்கிற வேலைக்கு நடுவுல எப்படி முடியும்னு இதை பற்றி அதிகம் யோசிச்சதில்லை..”

“அதனால என்ன இப்போ யோசிக்க தொடங்குடி. எல்லாரோட இன் புட்டும் இருந்தா ரிசல்ட் இன்னும் நல்லா வரும்..” என்றாள் ராகவி.

“ரொம்ப நல்லதா போச்சு அப்போ வர வாரமே நல்ல நாள் பார்த்து ஆரம்பிச்சுடலாம். நான் மூர்த்தி அண்ணன் கிட்ட பேசுறேன்..” என்றார் மங்கை.

“சரி த்தை நான் முதல்ல ஷூட்டுக்கு ஏற்ற மாதிரி நம்ம பண்ணையில இருக்கிற இடங்களை பார்த்துட்டு வரேன். நீங்க வேலையை பாருங்க..” என்று கிளம்பி சென்றாள்.
 
Top Bottom