இன்று பாரிநேயனின் பிறந்த நாள் என்பதால் அதிகாலையே குளித்து முடித்து மகளோடு கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தார் தேவமங்கை.
நிச்சயமாக அவர் பெயரில் அர்ச்சனை செய்து அன்னதானமும் வழங்குவார்கள். இதற்கான ஏற்பாடுகள் எதிலும் மங்கை மகனை வலுகட்டாயமாக ஈடுபடுத்த மாட்டார்.
இது வழக்கமாக நடப்பது என்பதால் ஒருவித இறுக்கத்தோடு முரளி அவர்களை பார்த்திருந்தான்.
அவனும் சில காலம் மங்கையிடம் சொல்லி பார்த்து பின்னர் அவர் விருப்பத்திற்கு விட்டு விட்டான்.
காலை வழக்கம் போல தோட்டத்திற்கு கிளம்பியவன் பண்ணைக்கு வந்து வேலையை துவங்கிய போது ராகவி அவன் அறைக்குள் பரபரப்பாக நுழைந்தாள்.
வந்ததுமே, “கிளம்பு, கிளம்பு..” என்று அவசரபடுத்தினாள்.
“எங்கே டி?”
“சொல்றேன். நீ முதல்ல கிளம்பு ரொம்ப அர்ஜென்ட்!!”
“எங்கேன்னு சொல்லு ராகா இன்னைக்கு அம்மாவும் அபியும் வராக் லேட்டாகும்..”
“எனக்கும் தெரியும். அதனால தான் நேத்தே நளினி கிட்ட இன்னைக்கு எல்லா பொறுப்பையும் பார்த்துக்க சொல்லிட்டேன் அவளும் வந்ததுமே வேலையை தொடங்கிட்டா.. மீதியை சிசிடிவியில பார்த்துக்கலாம்..” என்ற போதும் அவன் அசையாமல் அமர்ந்திருந்தான்.
“மாமூ நான் என்ன கேட்டாலும் கொடுப்பேன்னு சத்தியம் பண்ணி இருக்க என்ன மறந்துட்டியா?”
“ஆமா, ஆனா என்னன்னு சொல்லாம..”
“இதோ பார் உன்னோட இன்னைக்கு ஒரு நாள் முழுக்க எனக்கு வேணும். எங்க போறோம் என்ன பண்ண போறோம்னு நான் போற வழியில சொல்றேன் இப்போ கேள்வி கேட்காம கிளம்பு..” என்றதும் நளினியிடம் அன்றைய ஆர்டர்கள் லிஸ்ட் கொடுத்து முடிக்க வேண்டிய வேலைகளை பற்றியும் சொல்லி விட்டு கிளம்பினான்.
அடுத்த அரை மணி நேரத்திலேயே அவள் எங்கே அழைத்து செல்கிறாள் என்பது புரிந்து போக அவன் கோபம் வண்டியை செலுத்தும் வேகத்திலேயே அவளுக்கு புரிந்து போனது.
“நிறுத்து மாமூ” என்றாள்.
“இங்கே எதுக்கு?”
“நாம மாமாவை பார்க்க போறோம் அதுல மாற்றம் இல்லை. ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட சில விஷயம் பேசணும்..” என்றவள் அவனை எதிரில் இருந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்று ஃபேமிலி ரூமிற்குள் சென்றாள்.
சர்வரிடம் இரண்டு ப்ளேட் இட்லி கொண்டு வர சொன்னவள், அவர் கொண்டு வரும் வரை காத்திருந்து “முதல்ல சாப்பிடு மாமூ பேசலாம்” என்றாள்.
அவனும் அமைதியாக சாப்பிட்டு முடிக்க, “எனக்கு கொடுத்த வாக்குக்காக என்னோடு வந்தாலும் உன் கோபத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்துறது எனக்கு புரியாம இல்லை மாமூ”
“அப்புறம் ஏன்டி?! மத்தவங்களை விட நீயே இதை செய்யும் போது தான் அதிகமா வலிக்குது ராகா…”
“எனக்கு புரியாமல் இல்லை மாமூ. ஆனா உனக்கு அவர் மேல கோபமே மாமா அந்த கொலையை பண்ணினது தானே?” என்றாள்.
ஆனால் முரளியோ அவள் பேச்சு புரியாமல் “என்னடி சொல்ற?” என்றான்.
“நீ நினைக்கிற மாதிரி, இந்த ஊர் உலகம் நினைக்கிற மாதிரி அந்த கொலையை மாமா பண்ணல…” என்றதில் அதிர்வோடு ராகாவை பார்த்தான் முரளிதரன்.
“நீ கேட்டது நிஜம்தான்!! அந்த கொலையை மாமா பண்ணல.”
“என்.. என்ன சொல்ற? விளையாடாத ராகா..”
“இது எவ்ளோ முக்கியமான விஷயம் இதுல போய் நான் விளையாடுவேனா? ஆமா மாமூ, மாமா அந்த கொலையை பண்ணலை…”
“இன்னொருத்தர் செய்த கொலையை தான் செய்ததா பழியை ஏத்துக்கிட்டு இத்தனை வருஷம் தண்டனை அனுபவிச்சுட்டு இருக்கார். உன் அப்பா கொலைகாரன் இல்லை நிரபராதி!!” என்றதில் உச்சபட்ச அதிர்வோடு எழுந்து விட்டவன்,
“என்னடி சொல்ற? உனக்கு எப்படி தெரியும்? எப்போ தெரியும்?”
“எனக்கு சில மாதத்துக்கு முன்னாடி தான் தெரிய வந்தது மாமூ… உன்னை ஜெயிலுக்கு கூட்டிட்டு வந்ததும் கூட மாமா கிட்ட பேச வச்சு, அதுக்கப்புறம் பொறுமையா உனக்கு சொல்லி புரிய வைக்கணும்னு நினைச்சேன்…”
“ஆனா நீ அந்த அளவுக்கு கோபப்படுவேன்னு நான் எதிர்பார்க்கல… அதுக்கப்புறம் உன்கிட்ட மாமா பற்றின பேச்சை எடுக்கவே சமயம் வாய்க்கலை...”
“இப்போ நீயாவே ‘என்ன வேணும்னாலும் கேள்’ என்று சொல்லவும் உடனே கூட்டிட்டு வந்துட்டேன்…”
“அதெல்லாம் இருக்கட்டும், அப்போ அந்த கொலையை பண்ணது யாரு? எதுக்காக இப்படி ஒரு பழியை சுமக்கணும்? யாருக்காக ஜெயில்ல இருக்கணும்?”
“எனக்காக!! என் வாழ்க்கை எந்த காலத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக…” என்று ராகவி உடைந்த குரலில் சொல்ல அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“உனக்காகவா? ஹே ஏதாவது புரியற மாதிரி சொல்லுடி..” என்றிட வெளியேற துடித்த கண்ணீரை உள்ளிழுத்தபடி,
“நீயாவது இன்னைக்கு ‘கொலைகாரன் பிள்ளை’ என்கிற பட்டத்தை மட்டும் சுமந்துட்டு இருக்க… ஒருவேளை அன்னைக்கு மாமா ஜெயிலுக்கு போகாம இருந்திருந்தா ஊரே என்னை ‘கொலைகாரி மகள்’ என்று மட்டும் கிடையாது..” என்றவளின் வார்த்தையில் முரளி திகைத்து போனான்.
“எங்க அம்மாவுக்கு என்னென்ன பட்டம் சுமத்த முடியுமோ.. அத்தனை பட்டமும் சுமத்தி… அந்த பேரை வச்சு என்னை கூப்பிட்டு இருப்பாங்க மாமூ…” என்றாள் கசந்த புன்னகையோடு.
“அப்.. அப்போ அந்த கொலையை பண்ணினது மாமியா?” என்றான் உச்சபட்ச அதிர்ச்சியோடு.
“ஆமாம் மாமூ. எங்க அம்மா, அவங்க மானத்தை காப்பாத்திக்கறதுக்காக பண்ணின கொலையை தான் ஏத்துக்கிட்டு தான் மாமா ஜெயிலுக்கு வந்திருக்கிறார்..”
“மா.. மாமி கொலை செய்யும் அளவு..க்கு அப்படி என்ன நடந்தது?…” என்றவனுக்குமே அடுத்தடுத்து அவன் அடைந்த அதிர்ச்சியில் வார்த்தை வசப்படவில்லை.
“உனக்கு இந்த விஷயம் தெரியுமா என்னன்னு எனக்கு தெரியலை ஆனா அப்போ எங்க அப்பாவுக்கு பொண்ணு கொடுக்க நீ நான்னு ஊருக்குள்ள பல பேர் போட்டி போட்டுட்டு இருந்திருக்காங்க…”
“அதுல சிலருக்குள்ள கை கலப்பு கூட ஆகி இருக்கு… ஆனா நம்ம தாத்தா, எங்க அம்மாவோட அப்பாவுக்கு வாக்கு கொடுத்ததால அவர் இல்லாத போதும் அதை நிறைவேற்ற அத்தை மாமா பொண்ணுங்களை விட்டுட்டு அப்பா அம்மாவை கட்டிக்கிட்டாங்க…”
“அப்பா அம்மாவை கட்ட கூடாதுன்னு அவங்களோட அத்தைகள் பிரச்சனை பண்ணி கல்யாணத்துக்கே வராம போயிட்டாங்களாம்.. அம்மாவுக்கு அப்போ 17 வயசு கூட ஆகலை, ஏற்கனவே பயந்த சுபாவம் இதுல இதெல்லாம் தெரிந்து ரொம்ப பயந்துட்டாங்களாம்..”
“இது போதாதுன்னு பெரிய குடும்பம் என்பதால ரொம்ப கவனமா இருக்கணும் யாரும் ஒரு சொல் சொல்லும் அளவுக்கு ஆளாகிடக்கூடாதுன்னு என்னோட பாட்டி, மாமா எல்லாரும் அம்மாவுக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பி இருக்காங்க…”
“அவங்க இந்த ஊருக்கு கல்யாணம் பண்ணிட்டு வந்த புதுசுல யாருமே சரியான வரவேற்பு கொடுக்கலை. ஆளாளுக்கு என்னென்னமோ பேசி ரொம்பவே பயமுறுத்தி இருக்காங்க…”
“விருந்துக்காக சொந்தக்காரங்க வீட்டுக்கு போனாலும் சரி.. அவங்க இங்க வந்தாலும் சரி., ‘என் பொண்ணு இருக்க வேண்டிய இடத்துல தான் நீ இருக்கிற…’ என்று நேரடியாகவே பல பேர் சொல்லி இருக்காங்களாம்..”
“என்னதான் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும்… வயல்ல வேலைக்கு வர ஆட்களுக்கு தினமும் மதிய சாப்பாடு கொடுக்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு…”
“அப்பா வெளியே கிளம்பின பிறகு அப்பத்தாவும் வயலுக்கு போயிடுமாம்… அதனால இவங்க தான் சாப்பாடு கொண்டு போவாங்க…”
“அப்போ ரெண்டு மூணு முறை ஆள் அரவம் இல்லாத இடத்துல அவன் இவங்க கிட்ட வழி மறிச்சு பேசி இருக்கான்… அம்மா அதுல ரொம்பவே பயந்துட்டாங்க”
“அதுக்கப்புறம் அத்தையை வர சொல்லி அவங்க துணையோட சாப்பாடு கொண்டு போவாங்களாம், இல்லனா வேற யாராவது ஆளுங்க கிட்ட கொடுத்து அனுப்புவாங்களாம்…”
“எதனால அவன் மாமியை தொல்லை பண்ணினான்?”
“எங்க அம்மா ரொம்ப அழகு மாமூ. அதனால அந்த ராஸ்கல்..” என்று கட்டுபடுத்த முடியா கோபத்தோடு முரளியை பார்த்தவள்,
“ப்ச் சுருக்கமா சொல்லனும்னா க்ரிஷ்கும் அவனுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.. செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்யாசம் தெரியாத நாய்கள். BOTH ARE PERVERTS” என்றவளை தோளோடு அணைத்து தண்ணீர் கொடுத்து தேற்றினான்.
“அன்னைக்கு மாமிக்கு என்ன நடந்தது ராகா? எதனால் கொலை செய்யற அளவுக்கு போனாங்க?”
“கல்யாணமான புதுசுல மட்டுமில்லை அதுக்கப்புறமும் அவன் தொல்லை அப்பப்போ இருந்துட்டே தான் இருந்திருக்கு..”
“எனக்கு ஒரு இரண்டு, இரண்டரை வயசு தான் இருந்திருக்கும் அப்போ ஒரு முறை கோவில்ல பொங்கல் வைக்க போன அம்மா பக்கத்துல தண்ணி பிடிக்க போயிருக்காங்க சைக்கிள்ல அந்த நாய் அவங்களை இடிக்கிற மாதிரி வந்து பயமுறுத்தினதுல தண்ணீர் கூட எடுக்காம ஓடி வந்துட்டாங்க…”
“இவ்ளோ நடந்தும் ஏன் மாமி எதையுமே மாமா கிட்ட சொல்லல…?” என்றான் கோபமும் ஆதங்கமுமாக.
“அதுதான் சொன்னேனே மாமூ, அம்மா ரொம்ப பயந்த சுபாவம். இந்த விஷயத்தை யார் கிட்ட சொல்லணும்னு தெரியாம.. அவங்களோட பாட்டி, அத்தை கிட்ட சொல்லி இருக்காங்க…”
“அவங்க “இதைப்பற்றி உன் புருஷன் கிட்ட மட்டுமில்லை வேற யார் கிட்டயும் மூச்சு விடாதே… தொல்லை பண்றவன் கிட்ட இருந்து முடிஞ்ச வரைக்கும் ஒதுங்கி இருன்னு சொல்லி இருக்காங்க…”
“ஏன் அப்படி? மாமா கிட்ட பயம் இருந்தாலும் அம்மா இல்லை ஆயா கிட்டயாவது சொல்லி இருக்கலாமே..”
“தெரியாம அவனோடு உன்னை யாராவது பார்த்துட்டா அப்புறம் கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ள செய்தி பரவிடும் அப்புறம் உன்னை அத்து விட்டுட்டு இன்னொருத்தியை கட்டி வைப்பாங்க… இன்னொருத்திக்கு வாழ்க்கையை தாரைவார்த்து கொடுக்க போறியான்னு கேட்டிருக்காங்க..”
“அப்படி வாழ்க்கையை இழந்துட்டு வீட்டோடு வந்துட்டா உன் அப்பனுக்கு அவமானம். அதுக்கப்புறம் உன் அப்பனை உயிரோட பார்க்க முடியாதுன்னு ஆளாளுக்கு பேசி இன்னும் பயமுறுத்தினதுல அம்மா இதைப் பற்றி இங்க யார்கிட்டயும் சொல்லல..”
“இந்த சம்பவம் நடந்த அன்னைக்கு ஊர் திருவிழா. மதியத்துக்கு மேல மழை வர மாதிரி இருந்ததால, அம்மா மாட்டை பிடிச்சுட்டு வரப் போயிருக்காங்க.. அப்போ அம்மா பின்னாடியே இவன் தொடர்ந்து வந்திருக்கான்…”
“மாமி இவனை கவனிக்கலையா?”
“இல்லையே?! அப்படி பார்த்திருந்தா போயிருக்கவே மாட்டாங்களே மாமூ. எல்லாம் விதி! ப்ச் அவசரமா போனவங்களுக்கு இது தெரியலை.,” என்று மெல்லிய விசும்பலோடு சொன்னவள் குரல் கமறியது.
“ஏதோ பொருள் எடுக்குறதுக்காக பம்பு செட்டுக்குள்ள போயிருக்காங்க. சத்தம் போடாம பின்னாடியே வந்து பம்பு செட் கதவை சாத்திட்டு, அம்மா கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணிருக்கான்…”
“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மாமூ?” என்று அருகில் இருந்தவனை ஏறிட்டு பார்க்க, “இதுவரைக்கும் நீ சொன்னதையே என்னால ஜீரணிக்க முடியலைடி. இன்னும் என்னாலாம் இருக்கு..” என்றான் குரல் கரகரக்க.
“அப்.. அப்போ எங்க அம்மா ரெண்டு மாசம் கர்ப்பமா இருந்தாங்க. என் தம்பியா தங்கச்சியான்னு தெரியலை ஆனா அவங்களை இந்த உலகத்துக்கு வர விடாம பண்ணிட்டான் அந்தப் படுபாவி…” என்றவளின் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியது.
“என்னடி சொல்ற?”
“ஆமாம் மாமூ ஒருவழியா பம்பு செட்டுக்குள்ள இருந்து வெளியில வந்தவங்க அவன் கிட்ட இருந்து தன்னை காப்பாத்திக்க முயற்சி பண்ணி இருக்காங்க.. அப்போ அந்த பொறுக்கி ஓட விடாம குறுக்கே கால் விட்டுருக்கான்…”
“அதுல தவறி விழுந்த அம்மாவோட வ… வயிறு அங்கிருந்த தொ.. தொட்டி முனையில மோதி இருக்கு மாமூ..” என்றவளுக்கு தொண்டை அடைக்க அதற்கு மேல் தொடர முடியாமல் பெரும் கேவல் எழுந்தது.
“ராகா அழாதடி ப்ளீஸ்..” என்ற முரளி கண்களிலும் கண்ணீர் தேங்கி நிற்க அவளை அணைத்துக்கொண்டு கண்ணீரை துடைத்து முதுகை வருடி கொடுத்தான்.
“அம்மாவுக்கு பயங்கர வலி மாமூ அப்பவும் அந்த நாய் பாவம் பார்க்காம திரும்ப தப்பா நடக்க முயற்சி பண்ணியிருக்கான்…” என்று பெருகிய கண்ணீரை துடைத்தவள்,
“வலியில துடிச்சுட்டு இருந்த அம்மா அவங்க கைக்கு கிடைச்ச கடப்பாறையை எடுத்து அவன் முகத்துல அடிச்சதுல தலையை பிடிச்சுகிட்டு அவன் கீழ விழுந்திருக்கான்…”
“அப்போவும் அடங்காதவன் திரும்ப அவங்களை பிடிக்க முற்படவும் அந்த கடப்பாறையை அப்படியே அவன் வயித்துல இறக்கிட்டாங்க..” என்று அவள் விவரிக்க, அதிர்ச்சியில் உறைந்து போனான் முரளிதரன்.
“அந்த நேரம் நல்ல மழை. அப்போ அந்த பக்கம் வந்த அப்பாவும் அம்மா போட்ட சத்தத்தைக் கேட்டு அங்க வந்திருக்கார். ஆனா அதுக்குள்ள எல்லாமே கை மீறி போயிடுச்சு… சூழலை புரிஞ்சுக்கிட்டவர் அம்மா கிட்ட இருந்த கடப்பாறையை வாங்கிகிட்டார்…”
தன் மேல எந்த தப்பும் இல்லைன்னு நடந்ததை மாமா கிட்ட சொல்லி இருக்காங்க. அதோட அப்போ அவங்க கருவும் கலைஞ்சு போயிடுச்சு.. அதை பார்த்த மாமா, “இதுக்கு மேலயும் இங்க இருக்க வேண்டாம் முதல்ல ஹாஸ்பிட்டல் போம்மானு தண்ணி கொடுத்து அவங்க கையில் புடவையில இருந்த ரத்தத்தை கழுவ சொல்லி அனுப்பி வச்சுட்டாங்க…”
“மழை பெய்ஞ்சுட்டு இருந்ததால நனைச்சுட்டு வந்த எங்க அம்மா கிட்ட இருந்த வித்தியாசம் யாருக்கும் தெரியல. ஆனா முகம் ஒரு மாதிரி இருக்கிறதை பார்த்துட்டு, “என்ன ஆச்சு?”ன்னு எல்லாரும் விசாரிச்சு இருக்காங்க…”
“அம்மாவும் கால் வழுக்கி தொட்டி மேல விழுந்த விஷயத்தை சொல்லவும் உடனே அவங்களை கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போய்ட்டாங்க. ஆனா அம்மாவுக்கு கர்ப்பம் கலைஞ்சது மட்டுமில்லை அவங்களோட கர்ப்பபையையும் எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சு..”
“ஆனா ஹாஸ்பிட்டல்ல இருந்து அம்மா திரும்பி வந்த போது, இந்த ஊர் மாமாவுக்கு கொலைகாரன் பட்டம் கொடுத்து இருந்தது. அதை கேட்டு அம்மாவுக்கு பயங்கர ஷாக். ஆனாலும் மாமா அவங்க கிட்ட சத்தியம் வாங்கிட்டதால, இந்த உண்மையை யார்கிட்டயும் சொல்ல முடியல..”
“சொல்ல முடியலையே தவிர்த்து, இத்தனை வருஷமும் எங்க அம்மா ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள்ள குற்ற உணர்ச்சியில் செத்துக்கிட்டு இருக்காங்க மாமூ…” என்றாள் கட்டுபடுத்த முடியாத கண்ணீரோடு.
அத்தனையும் கேட்ட முரளி கிட்டத்தட்ட உறை நிலைக்கு சென்றிருந்தான்.
ஒருபுறம் பரிமளா அனுபவித்த வேதனைகள் அவன் நெஞ்சை அழுத்தியது என்றால் மறுபுறம் இத்தனை வருடங்களாக தந்தை மீது அவன் சுமந்து கொண்டிருந்த வெறுப்பும் கோபமும் ஒரே நொடியில் அர்த்தமற்றதாக தோன்ற, நெஞ்சின் பாரம் இரட்டிப்பானது.
கலங்கிய விழிகளுடன் அமர்ந்திருந்தவனால் எதுவும் பேச முடியவில்லை. அதிர்ச்சி, வேதனை, வருத்தம், குற்றவுணர்வு என்று அத்தனை உணர்வுகளும் ஒன்றாக நெஞ்சை அழுத்த முரளி மூச்சு விடவே சிரமப்பட்டான்.
மௌனக்கண்ணீரோடு தன் தோள் சாய்ந்திருந்த ராகவியை பார்த்தவனின் கண்ணீரும் மெளனமாக அவன் விழிகளில் தேங்கி நின்றது.
வேதனையின் விளிம்பில் தவித்து கொண்டிருந்த இரு நெஞ்சமும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி ‘யாருடைய வலிக்கு யார் மருந்தாக இருப்பது?’ என்று புரியாமல் மௌனமாக வலியை சுமந்து தத்தளித்து கொண்டிருந்தன.