இத்தனை வருடங்கள் தந்தை மீது முரளிதரன் கொண்டிருந்த கோபம் அனைத்தும் ராகவி சொன்ன உண்மையில் சூரியனை கண்ட பனித்துளியாய் மாயமாய் கரைந்து போக முரளியின் மனம் முழுக்க பாரிநேயனின் நினைவு தான்!!
“நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் இல்ல ராகா?!” என்றான் குரல் கமற…
“ப்ச் என்ன மாமூ நீ!! இதுல தப்பு முழுக்க உன் மேல கிடையாது. உண்மையை மறைச்ச மாமா மேலயும் அவர் பண்ணினது தப்பாவே இருந்தாலும் அவர் குழந்தைங்க மேல வன்மம் காட்டின ஊர் மேலயும் இருக்கு..”
“இல்லடி அம்மா அவரை புரிஞ்சுகிட்டதால ஒருநாளும் தப்பா பேசினதில்லை அதேபோல அபியும் ஆனா நான் அப்படி இல்லாம போயிட்டேனே..”
“ப்ச் என்ன மாமூ நீ?! இதோ பார் உன்னோட ஆதங்கம் கோபம் நியாயமானது தான்.. உன் இடத்துல நான் இருந்திருந்தாலும் அப்படி தான் இருந்திருப்பேன்..”
“ஸார் காஃபி” என்று இருவருக்குமான காஃபியை வைத்து விட்டு செல்லவும் முரளிக்கான கப்பை அவன் கையில் கொடுத்து, “முதல்ல காஃபி குடி அப்புறம் பேசலாம்” என்றாள்.
“இதெல்லாம் உனக்கு எப்படி தெரிஞ்சது ராகா? மாமி சொன்னாங்களா இல்லை அப்பாவா? இல்லை அம்மாவா?”
“அத்தையா? அத்தைக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அவங்களுக்கு இதெல்லாம் தெரியாது மாமூ!! அன்னைக்கு அம்மா கிட்ட சத்தியம் வாங்கின மாமா இந்த நிமிஷம் வரைக்கும் இந்த உண்மையை யார் கிட்டயுமே சொல்லலை..”
“அப்போ உனக்கு மாமி சொன்னாங்களா?”
“ஆமா, க்ரிஷ் பிரச்சனைக்கு அப்புறமா நான் ஊருக்கு ஒருமுறை வந்தப்போ தான் மாமூ தெரிஞ்சது..” என்றவள் அன்றைய நாளை நினைவு கூர்ந்தாள்.
“மாமா ஜெயிலுக்கு போன பிறகு அத்தையை அப்பா தள்ளி வச்சதுல அம்மா ரொம்பவே நொறுங்கி போயிட்டாங்க.. அத்தை குடும்பத்தை ஒதுக்க வேண்டாம்னு அப்பா கிட்ட பேசி இருக்காங்க ஆனா ஊரும் உறவும் கொடுத்த அழுத்தத்துல அவர் யார் வார்த்தைக்கும் செவி சாய்க்கலை..”
“அதுல தான் மட்டும் புருஷன், பொண்ணுன்னு குடும்பமா இருக்கிறப்போ, அத்தை இப்படி புருஷன் உடன் இல்லாம குழந்தைகளை வச்சுட்டு தவிக்கிறது அம்மாவுக்கு ரொம்பவே வேதானையை கொடுத்திருக்கு..”
“அதுவும் அன்னைக்கு அம்மா அத்தையை கோவிலில் பார்த்தது அவங்களோட கல்யாண நாள் அன்னைக்கு. அதுல அம்மாவுக்கு மனசு தாங்கல. மாமாவை நினைச்சு அன்னைக்கு அம்மா கிட்ட பேசின அத்தையோட கண்ணீர் அவங்களை ரொம்பவே பாதிச்சிடுச்சு…”
“இதுக்கு மேலயும் இதை தாங்க முடியாதுன்னு அவங்க தற்கொலைக்கு பண்ணிக்க போயிட்டாங்க.. நல்லவேளை, நான் சரியான நேரத்தில் அவர்களை பார்த்ததால காப்பாற்ற முடிஞ்சது. அப்போ என்ன நடந்ததுன்னு நான் கேட்கவும் அவங்க ரொம்பவே உடைஞ்சு போயிட்டாங்க..”
“நான் இன்னும் விசாரிக்கவும் நடந்த விஷயத்தை சொல்லிட்டாங்க. அதுவும் அப்பாவுக்கு தெரியாம மாமாவை போய் ஜெயில்ல பார்க்கும் போதெல்லாம், ‘எத்தனையோ முறை நான் உண்மையை சொல்லிடுறேன் நீங்க வெளிய வந்துடுங்க ண்ணா, எனக்காக நீங்க தண்டனை அனுபவிக்க வேண்டான்னு சொல்லி இருக்காங்க’ ஆனா மாமா ஒத்துக்கவே இல்லையாம்..”
“அன்னைக்கு நீ சொன்னியே மாமாவுக்கும் அந்த ஆளோட பொண்டாட்டிக்கும் இல்லாத தொடர்பை பற்றி ஊர் பேசினதா ஆனா அம்மா கொன்றது தெரிஞ்சிருந்தா அந்தாளோடு இணைச்சு என்னெல்லாம் பேசி இருப்பாங்க..”
“அதைவிட எத்தனை வாய் ‘அவங்க மேல எந்த தப்பும் இல்லை, தன்னை காப்பாத்திக்க தான் கொலை பண்ணினாங்க’ என்று பேசிருக்கும்னு நீயே சொல்லு மாமூ…” என்றிட அவனுக்கு நிதர்சனம் பட்டவர்த்தனமாக புரிந்தது.
“எப்போ எப்போன்னு காத்திருந்தவங்க எல்லாரும் இதுதான் சாக்குன்னு அம்மாவைப் பற்றி மோசமா திரிச்சு கதை சொல்லி, அதை நம்ப வைத்து அப்பாவுக்கு இன்னொரு கல்யாணமும் பண்ணி வச்சிருப்பாங்க…”
“ஊர் முழுக்க ‘என்னை தப்பானவளோட பெண்’ என்று பேசிடக் கூடாது, என்னோட வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்பதற்காக தான் மாமா இத்தனை வருஷம் செய்யாத தப்புக்காக தண்டனை அனுபவிச்சுட்டு இருக்காரு…” என்றவளுக்கு கண்ணீர் கரைபுரண்டோட அவளை அணைத்து கொண்ட முரளிக்கு நெஞ்சம் ததும்பியது.
“என் அப்பாவோட தியாகத்தை நிஜமாவே நான் எதிர்பார்க்கலை ராகா. எங்களை ஊருக்குள்ள அவலத்துக்கும் அவமானத்துக்கும் ஆளாக்கிடார்னு நினைச்சேனே தவிர்த்து அவர் மாமிக்கு எந்த களங்கமும் வந்துடக்கூடாதுன்னு செய்திருக்கார்..”
“ப்ச் அதை புரிஞ்சுக்காம நான் தப்பு பண்ணிட்டேன். ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன், இல்லையா?…” என்றான் குரல் தழுதழுக்க.
“இதையெல்லாம் கேட்டுட்டு எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மாமா. அம்மா அவங்களோட வாழ்க்கையை காப்பாத்திக்க நினைக்கவே இல்ல…”
“அதே நேரம் ஊரே எதிர்த்த போதும், அத்தையை அப்பா மாமாவுக்கு கட்டிக்கொடுத்ததால அவரோட குடும்பத்துக்கு எந்த தலைகுனிவும் வரக்கூடாதுன்னு நினைச்சிருக்காங்க…”
“இருபது வருஷத்துக்கு முன்னாடி இப்ப மாதிரி பெரும்பாலான பெண்கள் அப்போ குடும்பத்தை மீறி துணிச்சலா எந்த முடிவையும் எடுத்துட முடியாதே மாமா… குடும்ப சங்கிலி அவங்களை இறுக்கி பிடிச்சுட்டு இருக்கிறப்போ அதை உடைச்சா குடும்பம் உடையும்னு தியாகம் செய்தவர்கள் தான் அதிகம்..”
“படி தாண்டா பத்தினியா இருக்கணும்னு சொல்ற சமூகம் முதலில் பெண்கள் படி தாண்டி வேலைக்கு போனதை அத்தனை சுலபமா ஏத்துக்கிட்டாங்களா என்ன? சமூகத்தை விடு மாமா வீட்டுக்குள்ளையே எவ்வளவோ எதிர்ப்புக்கு மத்தியில தான் வேலைக்கு போயிருப்பாங்க..”
“இருபது, முப்பது வருஷத்துக்கு முன்னாடி இருந்த சூழ்நிலை வேற, இந்த உண்மை தெரிஞ்சிருந்தா.. அம்மா ஜெயிலுக்கு போன பிறகு அப்பத்தாவே அப்பாவுக்கு இன்னொரு கல்யாணத்தை பண்ணி வச்சிருப்பாங்க…”
“எனக்கு சித்தியின்னு யாராவது வந்திருப்பாங்க… அதுக்கப்புறம் இப்போ உன் முன்னாடி நிக்கிற இந்த ராகாவா நான் இருந்திருப்பேனான்னு கூட தெரியாது… நான் இன்னைக்கு இப்படி உன் முன்னாடி இருக்க காரணமே மாமா தான்!!…” என்றாள் கலங்கிய விழிகளோடு.
“ஊர் மட்டும் இல்ல ராகா இப்போ சட்டமே மாறி போயிருக்கு. அப்போ பெண்ணுக்கு குரல் கிடையாது இப்போ அவளுக்கு சொத்து தொடங்கி சகல உரிமையும் இருக்கு…”
“ஒரு பெண் தன்னை காப்பாத்திக்கணும்னா அவளோட நகம் கூட ஆயுதம்னு காந்தி சொன்னார்.. அப்படி பார்த்தா மாமி செய்தது கொலை இல்ல ராகா.. அது அவங்களையும் அவங்களை நம்பி இருந்த குழந்தையோட உயிரையும் காப்பாத்திக்க எடுத்த முடிவு!!”
“மாமூ…” என்று புன்னகையும் ஆச்சர்யமுமாக பார்க்க,
“ஆமா மாமி பண்ணினது தன்னை காப்பாத்திக்கறதுக்காக!! அந்த முயற்சியில் தான் அவங்களுக்கு கரு கலைஞ்சு, கர்ப்பப்பையும் எடுத்து இருக்காங்க… அன்னைக்கு ஊர் திருவிழா என்பதால எல்லாருக்குமே இந்த சம்பவம் நியாபகம் இருக்கும் நெருங்கிய உறவு இல்லாம மாமிக்கு எதிரா இருந்த ஊரே கூட இந்த விஷயத்தை மறுக்க முடியாது..”
“இருபது வருஷத்துக்கு முன்னாடி ஊர் உறவு அவங்களை நடனத்தின விதத்துல இதை மாமா கிட்ட ஒத்துக்க அவங்களுக்கு தைரியம் இல்லாம போயிருக்கலாம்… இப்போ நாம கூட இருக்கோம் நல்ல வக்கீலா பார்த்து அவங்களோட சூழலை விளக்கி தண்டனை கிடைக்காம செய்ய முடியுமே!!…”
“எல்லாத்துக்கும் மேல செய்யாத தப்புக்காக எங்க அப்பா எதுக்கு இதுக்கு மேலயும் தண்டனை அனுபவிக்கணும்?” என்ற மறுகணமே “மாமூ” என்ற விசும்பலோடு அவனை கட்டிக்கொண்டவள், “நானும் இதுதான் நினைச்சேன், நான் நினைச்சதையே நீயும் எப்படி சொல்ற?…” என்றாள் ஆச்சர்யத்தோடு.
“நீ நான் ஆகவும், நான் நீயாகவும் இருக்கிறப்போ நம்மால எப்படிடி வித்தியாசமா யோசிக்க முடியும்?” என்றான் சிரிப்போடு.
“நானும் அம்மா கிட்ட இதை சொல்லி இருக்கேன். ஆனாலும் அவங்களுக்கு அப்பா கிட்ட எப்படி இந்த விஷயத்தை சொல்றதுன்னு இன்னமும் பயம். ‘நான் கூட இருக்கேன்’ன்னு சொன்னாலும் அவங்க கேட்கல…”
“அவங்க நினைப்பு எல்லாம் மாமா வெளியே வரணும் என்பதில் தான் இருக்கு. அதுக்கு என்ன செய்ய முடியுமோ அந்த ஏற்பாடு பண்ணு அதுக்கப்புறம் உங்க அப்பாக்கு சொல்லிக்கலாம்னு சொல்லி இருக்காங்க…”
“அதுவும் சரி தான்! மாமி எந்த தயக்கமும், பயமும் இல்லாம பேசுறது தான் சரியா இருக்கும். அதுக்கு முன்னாடி நல்ல வக்கீலா பார்க்கணும். மாமியை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணின ரிப்போர்ட் இருக்கா ராகா?”
“அம்மா விஷயம் சொன்ன பிறகு அவங்களுக்கு கர்ப்பப்பை எடுத்த நாள், கரு கலைஞ்சதுக்கான ரிப்போர்ட் எல்லாம் நான் ஆல்ரெடி எடுத்து வச்சுருக்கேன். மாமாவை பார்த்துட்டு அப்புறம் வக்கீலை பார்ப்போம் மாமூ..”
“சரிடி! அதுக்கு முன்ன அப்பாவுக்கு கேக் வாங்கிக்கணும்..”
“இதெல்லாம் ஜெயிலுக்குள்ள அலோவ் பண்ண மாட்டாங்க மாமூ..” என்றவள் அவன் ஏமாற்றத்தை கண்டு, “சரி வாங்கிட்டு போவோம் அங்க போய் ஏதாவது ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்க முடியுதான்னு பார்த்துக்கலாம்..” என்றாள்.
அதேநேரம் ஊரில் அன்று ராகவிக்காக மாப்பிள்ளை கொண்டு வந்த பெரிய தலைகள் இன்று வீடு தேடி வந்து பார்த்தசாரதியிடம் அவர்களின் அதிருப்தியை தெரிவித்து கொண்டிருந்தனர்.
“தங்கம்மா பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்..” என்று சாரதி சொல்ல, “பொட்ட புள்ளையை அதிகம் படிக்க வச்சாலே இதுதான் பிரச்சனை. பள்ளிகூடம் முடிச்சதும் வீட்டோட வச்சு சமைக்க, கூட்ட, கழுவன்னு கத்து கொடுத்திருந்தா இன்னிக்கு உனக்கு இந்த நிலைமை வந்திருக்காது சாரதி” என்றார் அவர் சித்தப்பா.
“அந்த பேச்செல்லாம் இப்போ எதுக்கு மாமா? நாம வந்த விஷயத்தை மட்டும் பேசுங்க..” என்று ஜீவானந்தம் சொல்ல மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.
“சாரதி உன் பொண்ணு அவனை தான் கட்டிப்பேன்னு பட்டவர்த்தனமா சொல்லிட்டா இதுக்கு மேல நாங்க சொல்லி திருந்திற மாதிரி தெரியலை. அதனால் நாங்க ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்…”
“...”
“எங்களுக்கு மரியாதை இல்லாத இடத்துக்கு இனி நாங்க வரப்போறதா இல்லை. அதோட உன் வீட்டு விசேஷம் எதுக்கும் எங்களை அழைக்க வேண்டாம். நாங்க வர மாட்டோம்…” என்று சொல்ல சாரதி பதறி போனார்.
“என்னையா இது பெரிய மனுஷங்க பேசற பேச்சா? சின்ன புள்ள ஏதோ உரிமையா நகை போடுங்க கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டா முடியும்னா முடியும் இல்லைன்னா முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?!”
“ஆத்தா நாங்க என்ன சீர் செய்ய வக்கத்தவங்களா? ஆனா ராகவி பேசின பேச்சு எங்களை அவமானபடுத்டுறதுக்கு தான்.. அவனுக்காக எங்களை தூக்கி எரியிற மாதிரி பேசறது சரியா? அது கூடவா உனக்கு புரியலை…” என்றார் ஆதங்கத்தோடு.
“என்ன அத்தை பேரனுக்கும் பேத்திக்கும் முடிச்சு போடணும்னு ஏதாவது எண்ணம் வச்சிருக்கியா என்ன?” என்று மற்றொருவர் கேட்கவும்,
“எடுபட்ட பயலுகளா என்னை பார்த்தா அப்படியாடா தெரியுது?”
“அதெல்லாம் எங்களுக்கு தெரியாதா ஆத்தா இப்போ எங்களுக்கு தெரிய வேண்டியதெல்லாம் இனி எங்க உறவும் வேணுமா வேணாமாங்கிறது தான்?”
“என்ன ஜீவா இப்படி பேசற?”
“வேற எப்படி பேசணும்னு சொல்றீங்க மாமா? அதுவும் ராகவி பேசின பேச்சுக்கு இந்நேரத்துக்கு நாங்க இங்க வந்திருக்க கூடாது. ஆனாலும் வந்திருக்கோம் என்றாள் அது உறவு நிலைக்கறதுக்காக தான். புரிஞ்சுக்கோங்க..”
“அதுக்கு என்ன டா செய்யணும்னு சொல்றீங்க?” என்று சுந்தரவள்ளி கேட்கவும்,
“எங்களுக்கு எப்பவும் வளவள கொழகொழ பேச்சு புடிக்காது. எதுவா இருந்தாலும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசி தான் பழக்கம் அதனால நேரடியா சொல்றோம் இனிமேலும் உங்களுக்கு எங்க உறவு வேணும்னா அவன் இந்த வீட்டு மருமகனாக கூடாது”
“நாங்க இனி உன் பொண்ணு விஷயத்துல தலையிடலை. அவளோட கல்யாணத்தை உங்க விருப்பம் போல நடத்துங்க ஆனா கொலைகாரனை மகனுக்கு மட்டும் கட்டி கொடுக்க கூடாது… அப்படி நடந்தா அதுக்கு அப்புறம் எங்க முடிவு வேற மாதிரி இருக்கும்..” என்று கிட்டத்தட்ட மிரட்டி விட்டு சென்றனர்.
அவர்கள் கிளம்பவுமே நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடி கொண்ட பார்த்தசாரதியின் மனம் ஒரு நிலையில் இல்லை.
பத்து நிமிடங்களுக்கு பிறகு கண் திறந்தவர் உடனே தரகருக்கு அழைத்து ராகவிக்கு பொருத்தமான மாப்பிள்ளை பார்க்கும் படி சொல்ல, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க?” என்றார் பரிமளா.
“வாயை மூடிட்டு உள்ள போடி! இது உனக்கு தேவையில்லாத விஷயம்” என்றார் சாரதி.
“எது தேவையில்லாத விஷயம்?! அவ உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும் தான் பொண்ணு. என் பொண்ணோட விருப்படி தான் அவளுக்கு கல்யாணம் நடக்கணும்…”
“பரிமளா!!” என்றார் கோபத்தோடு..
“நீங்க கத்தினாலும் சரி கோபப்பட்டாலும் சரி முரளி தம்பி தான் இந்த வீட்டு மருமகன்..” என்றவரின் குரலில் அத்தனை உறுதி.
“என்னடி இத்தனை நாள் இருக்கிற இடம் தெரியாம இருந்தவ முதல் முறை குரல் உசத்துற.. வீணா என்கிட்டே வாங்கி கட்டிக்காத மரியாதையா உள்ள போ..”
“நான் போறது இருக்கட்டும். ராகவி தெளிவா அவ ஆசையை சொன்ன பிறகும் நீங்க இப்படி அடுத்தவங்க வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதை நிறுத்துங்க..” என்ற மறுநொடியே பளாரென மனைவியை அறைந்திருந்தார் பார்த்தசாரதி.
“டேய்!! என்னடா பண்ற?” என்று சுந்தரவல்லி அவர்களுக்கு இடையில் வர, “என்னை ஏன் மா கேட்கிற அவளை முதல்ல வாயை அடக்க சொல்லு..” என்றார்.
“முடியாது!! நான் பேச தான் செய்வேன். அன்னைக்கு எனக்காக பேச தான் முடியலை இன்னைக்கு என் பொண்ணுக்காக நான் பேச தான் செய்வேன்” என்றார் பரிமளா உறுதியான குரலில்.
“யாருடி இவ?! அவன் தான் கோபமா இருக்கான்னு தெரியுதில்லை அப்புறம் ஏன் சரிக்கு சரி நிக்கிற போடி உள்ள” என்றார்.
“முடியாது அத்தை இந்த மனுஷனுக்கு பயந்து ஒரு நல்லவரை ஜெயிலுக்கு அனுப்பிட்டு நடைபிணமா வாழ்ந்துட்டு இருக்கேன் இப்போ என் மகளையும் உயிரோட கொல்ல சொல்றீங்களா?” என்றிட இருவருமே அவரை அதிர்வோடு பார்த்தனர்.