ராகவியை அழைத்து கொண்டு தோட்டத்தில் இருந்து கிளம்பிய முரளி அவள் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டு வந்தவன், “ஆமா உன்கிட்ட ஏற்கனவே கேட்க நினைச்சேன் ஆனா மறந்தே போயிட்டேன்..” என்றான்.
“என்ன மாமூ?”
“உன்னோட டி.எல் அவன் பேரு என்ன?”
“க்ரிஷ். ஏன் கேட்கிற?”
“ஆமா, அந்த க்ரிஷ்ஷோட இப்போதைய நிலைமை என்ன?”
“சோஷியல் மீடியாவுல வைரல் ஆகிட்டதால போலீஸ் நேரடியா ஆக்ஷன் எடுக்க வேண்டிய சூழல்! அதோடு கம்பெனிக்கே வந்த போலீஸ் எங்க எல்லார் கிட்டயும் தனி தனியா விசாரணை செய்த போது பெரும்பாலான பெண்கள் உண்மையை சொல்லிட்டாங்க..”
“நானும் என் பங்குக்கு உண்மையை சொன்னதோடு அந்த வீடியோவில் இருந்தது நான் தான்னு சொன்னேன். ஆனா வீடியோ எடுத்தது யார் என்று தெரியாதுன்னு சொல்லிட்டேன்...”
“அது தெரிஞ்ச விஷயம் தானடி அதுக்கு அப்புறம் என்னாச்சு!!”
“அவனோட வைஃப்க்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரதுக்குள்ள விஷயம் தெரிஞ்சுடுச்சு. ஸோ நேரா ஹாஸ்பிடலுக்கு வந்தவங்க அவனை காரி துப்பிட்டு அங்கேயே போலீஸ் எதிர்லயே,
‘இனி உன்னோடு வாழறதை விட எனக்கு வேற அசிங்கம் இருந்திட முடியாது. இன்னைக்கே உன்னை விவாகரத்து பண்றேன்’ என்று சொல்லிட்டு அவனை திரும்பியும் பார்க்காமல் கிளம்பி போயிட்டாங்க.
“சொன்ன மாதிரி டிவோர்ஸ் பைல் பண்ணினவங்க அவனோட இரட்டை வாழ்க்கை பற்றி தனக்கு தெரியாது இத்தனை நாள் நல்ல புருஷனா அப்பாவா இருக்கான்னு நினைச்சேன் ஆனா இத்தனை பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சவனுக்கு தக்க தண்டனை கிடைக்கனும்னு போலீஸ்லயும் வாக்குமூலம் கொடுத்துட்டாங்க..”
“அது மட்டுமில்ல மாமூ அவனால ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டா இல்ல அவளோட அப்பாவும் புகார் கொடுத்து இருக்காரு.. அவர் கையில இருந்த ஒரு சில ஆதாரத்தை கொடுத்திருக்காரு ஸோ அவன் மேல இருக்கிற கேஸ் இன்னும் ஸ்ட்ராங்க் ஆகிக்கொண்டே போகுது..”
“இடையில ஒருமுறை பெயில் கேட்டான் ஆனா ஜட்ஜ் கொடுக்கவே இல்ல. இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?”
“என்ன?”
“அவனை பார்க்கில் அடிச்சவன் யாருன்னு கண்டுபிடிக்கணும் அவனால தான் இதெல்லாம் வெளியே வந்தது அப்படின்னு போலீஸ்கிட்ட பேசி இருக்கான்..”
“என்னடி சொல்ற?”
“ஆமா மாமா. ஆனா போலீஸ் அதுக்கும் சேர்த்து அவன் வாயிலேயே நல்ல கொடுத்திருக்காங்க..” என்று சிரிப்போடு சொல்ல முரளியும் சப்தமாக சிரித்திருந்தான்.
“நீ பண்ணின அய்யோக்கியதனத்துக்கு இன்னொருத்தன் மேல கம்ப்ளைன்ட் கொடுப்பியா? உன்னை அடிச்சவன் நீ சீரழிச்ச பொண்ணுக்கு அண்ணனாவோ, தம்பியாவோ, அப்பாவாவோ இருந்திருக்கலாம். யாரா இருந்தாலும் சரி, உன்னை ரொம்ப சரியா தான் மிதிச்சிருக்காங்க இதுக்கெல்லாம் நாங்க கேஸ் எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க..”
“சரியா தான் சொல்லி இருக்காங்க..”
“ஆமா மாமூ கேஸ் போற போக்கை பார்த்தா நிரந்தரமா ஜெயில்ல களி தின்ன போறன்னு நினைக்கிறேன்” என்றவள்,
“ஏன் மாமா சுத்திகிட்டு போற, ஊருக்குள்ள போக வேண்டியது தானே?!” என்றாள் அவன் செல்லும் வழியை கண்டு..
“எதுக்கு ராகா? ஏற்கனவே அபியோட சம்பந்தத்தை தடுத்த நல்ல உள்ளங்கள் நாம ஒண்ணா போறதை பார்த்துட்டு மாமா கிட்ட வத்தி வைக்கவா?” என்றான் அவளை கண்ணாடியில் பார்த்தபடி.
“அப்படி எந்த பரட்டையாவது பத்த வச்சா தான் என்ன தப்பு? ஏன் என்னை கழட்டி விடுற ஐடியாவுல எது இருக்கியா?” என்றவளை முறைத்தவன்,
“எதுக்குடி வம்பு? குறைந்தபட்சம் அபியோட கல்யாணம் முடிகிற வரைக்குமாவது அடக்கி வாசிக்கலாம்னு பார்க்கிறேன்..”
“அப்படி அடக்கி வாசிக்க நினைக்கிறவர் என் ஸ்கூட்டில என்னை வர விட்டு இருக்கணுமே தவிர்த்து இப்படி ஜோடி போட்டு கூட்டிட்டு வரக்கூடாது. அப்படி வந்தா சென்னையில எப்படியோ அப்படி இங்கேயும் என்னை கூட்டிட்டு வரணும்..”
“ராங்கி, இப்ப எதுக்கு நீ தேவையில்லாம என்னை உசுப்பேத்துற? ஏன்டி சென்னையில இருந்து ஒரு முடிவுவோட தான் வந்திருக்கியா?”
“அப்படி என்ன முடிவை கண்டுட்ட நீ?!”
“எனக்கு என்னமோ நீ வேலையை விட்டதும் சரி இப்போ பேசுற பேச்சும் சரி, ஏதோ ஒரு வில்லங்கத்தை இழுத்து வைக்க போறேன்னு தோணுது..” என்றவன் அவள் கேட்டது போலவே ஊருக்குள் வண்டியை செலுத்தினான்.
“பார்றா கேட்டதும் செஞ்சுட்ட.. என்ன சண்டியரே உன் மாமனார் மேல பயம் இல்லையா?” என்றாள் சிரிப்போடு.
“ஏன் மாமாவை பார்த்து நான் எதுக்கு பயப்படணும்? அவர் மேல மரியாதை தான் இருக்கணும். அது நிறையவே இருக்கு..”
“அப்புறம் ஏன் இப்படி கூட்டிட்டு வந்த?”
“பொண்டாட்டி ஆசையை நிறைவேற்ற தான்..” என்ற நேரம் ஊருக்கு யார் பார்வையில் படக்கூடாதோ சரியாக அவர்கள் பார்வையில் இருவருமே பட்டு இருந்தனர்.
‘ராகவிக்கும் அதுதானே வேண்டும்’ அதனால் மௌன சிரிப்போடு அவர்களை பார்த்திருந்தாள்.
இருவரும் பேசிய படி பண்ணைக்கு திரும்பி இருந்தனர்.
அங்கே பெண் பார்க்க வந்த சுவடு சற்றும் இல்லாமல் வழக்கம் போல இயங்கி கொண்டிருந்தது அவர்கள் பண்ணை.
வரும் வழியிலேயே அபிராமிக்கு மெசேஜ் அனுப்பி விட்டிருந்தாள் ராகவி. அதனால் அவளும் மங்கையும் வழக்கம் போல பண்ணை வேளைகளில் ஈடு பட்டிருந்தனர்.
அதை கண்ட முரளிக்கு ஆச்சர்யம். “எப்படிடி இவங்க இவ்ளோ சாதாரணமா இருக்காங்க” என்றான் ராகவியிடம்.
“பின்னே! எல்லாரும் சம்பந்தம் நழுவி போயிடுச்சுன்னு உன்னை மாதிரி உட்கார்ந்து ஒப்பாரி வைக்கனும்னு சொல்றியா மாமூ?” என்று புருவம் உயர்த்தினாள்.
“என்னடி சொன்ன?” என்ற முரளி அவள் காதை பிடிக்க வர அவனிடம் சிக்காமல் ஓட்டம் எடுத்தாள்.
“ராகா நில்லு.. ஹே ராங்கி நில்லுடி” என்று வேட்டியை ஒரு கையால் பிடித்தபடி வேக நடையோடு அவளை துரத்த அவன் கையில் அகப்படாமல் மங்கையிடம் சென்று நின்று கொண்டாள்.
ராகவியை துரத்தி கொண்டு வந்த மகனின் முகத்தில் இருந்த புன்னகையை கண்ட மங்கையின் முகம் அத்தனை நேரம் கொண்டிருந்த இறுக்கம் தளர்ந்து அப்போது தான் தெளிந்தது.
“என்னடி சொன்ன இப்ப சொல்லு?” என்று வேட்டியை மடித்து கட்டினான்.
“எங்களுக்கும் மடிச்சு கட்ட தெரியும்..” என்று அவள் சுடிதார் டாப்சை ராகவி மடித்து கட்டுவதை கண்ட மங்கை, “என்னடி ஆச்சு? எதுக்கு இப்ப அவன் கூட மல்லு கட்டிட்டு நிற்கிற?” என்றார்.
“சொல்றேன் இரு த்தை..” என்றவள், “இதோ பாரு மாமூ, அபிராமிக்கு அப்படி என்ன வயசு ஆகிடுச்சு? இத்தனைக்கும் என்னை விட இரண்டு வருஷம் சின்ன பொண்ணு. அவளுக்கு இந்த மாப்பிள்ளைய விட்டா வேற ஆள் கிடைக்க மாட்டாங்களா என்ன?”
“அதை விட உன் தங்கச்சி யாருக்கும் குறைஞ்சவ இல்லை. அவளோட குணத்துக்காக, மனசுக்காக, அவளை புரிஞ்சிக்கிற ஒருத்தன் கண்டிப்பா வருவான். இதை அபியும் அத்தையும் புரிஞ்சுகிட்டாங்க அதனால அவங்கவங்க வேலையை பார்க்கிறாங்க. இப்ப நீயும் வரியா நாம நம்ம வேலையை பார்க்கலாம்..”
“என்ன வேலை?” என்றவனை அழைத்துக் கொண்டு அவன் அலுவலக அறைக்கு சென்ற ராகவி உடன் அபிராமியையும் மங்கையையும் அழைத்துக் கொண்டாள்.
“மாமூ டைரி ப்ராடக்ட்ஸ்க்கு அதுவும் சுத்தமான பசும் நெய்யினால் செய்யப்பட்ட ஆர்கானிக்கான டைரி ப்ராடக்ட்ஸ், ட்ரடிஷனலான இனிப்பு வகைகளுக்கு உலகம் முழுக்க நல்ல டிமாண்ட் இருக்கு..”
“ஆர்கானிக்னா என்னடி?”
“எந்த கெமிக்கலும் இல்லாம, கலப்படம் இல்லாம,
சுத்தமா இயற்கை முறையில தயாரிச்சது.. சரியா சொல்லனும்னா நீ செய்ற நெய்யே ஆர்கானிக் மாமூ!!
ஆனா அதை அப்படின்னு சொல்லி விற்க தெரியல உனக்கு..” என்று அவனை வம்பிழுத்தாள்.
முரளி முறைக்கவும், “அண்ணி சொல்றது சரி தான் அண்ணா. நம்மோட லேபில்ல ஆர்கானிக் க்ஹீன்னு மென்ஷன் பண்ணினா டபுள் மடங்கு வியாபாரம் ஆகும்..”
“அப்படி சொல்லு அபி!!” என்றவள் முரளியிடம், “என்ன தான் நீ மாங்கு மாங்குன்னு உழைச்சாலும் அதை மார்கெட்டிங் செய்ய வேண்டியது ரொம்ப முக்கியம்..” என்றாள்.
“என்ன அண்ணி சொல்றீங்க? அண்ணா இப்பவே நம்ம ஊர் மட்டுமில்லாம அதை சுத்தியும் இருக்கிற ஊருல பிசினஸ் பண்ணிட்டு தானே இருக்காரு..”
“ஆமா அபி ஆனா அது மட்டும் போதாது. நம்ம தயாரிப்புகளோட தரம் எவ்ளோ உசத்தின்னு உங்களுக்கே இன்னும் புரியல. அதுக்கான மார்க்கெட்டிங் சரியா செஞ்சா இப்போ வர்றதை விட… இன்னும் பெரிய அளவுக்கு போகலாம் மாமூ…”
“இந்தியா முழுக்க மட்டுமல்ல உலகம் முழுக்க நம்முடைய நெய், வெண்ணை, தயிர், ஸ்வீட்ஸ் எல்லாத்தையும் இன்னும் நல்ல விலையில் நம்மளால விற்க முடியும்…”
“என்னடி பேசற? நம்ம பொருள் இந்தியா முழுக்க வியாபராம் ஆகும்னு நீ சொல்றதையே என்னால நம்ப முடியல இதுல ஆலகம் முழுக்கவா? ஏதாவது நம்புற மாதிரி சொல்லு ராகா..”
“ப்ச், மாமூ பெருசா குவாலிட்டி இல்லாம முறையா தயாரிக்காமல் எத்தனையோ பேர் இன்ஸ்டாலயும் ஃபேஸ்புக்லயும் விளம்பரம் பண்றது மூலமா அவங்களோட சரக்கை உலக லெவல்ல வித்துக்கிட்டு இருக்காங்க இப்படி இருக்கும் போது தரமா செய்யக்கூடிய நாம ஏன் இன்னும் குண்டு சட்டிக்குள்ளையே குதிரை ஓட்டணும்?”
“என்னடி சொல்ற? இப்போவே முரளி நல்லா தானே வியாபாரம் பண்ணிட்டு இருக்கான்..”
“இல்லைன்னு சொல்லலை அத்தை ஆனா முதல் கட்டமா நம்மளோட ப்ராடக்ட்ஸ்சை தமிழ்நாடு அளவுலயாவது கொண்டு சேர்க்கணும் அதுக்கு நமக்கு மார்க்கெட்டிங் தேவை…”
“அப்போ நான் சரியா வியாபாரம் செய்யலைன்னு சொல்றியா டி?”
“நான் எப்போ அப்படி சொன்னேன்?! நீ செய்யறது சின்ன விஷயம் இல்ல மாமூ, நீ அதை சின்ன அளவுல வச்சுக்கிட்டு இருக்கறது தான் பிரச்சனை..”
“நம்ம யோசனை எவ்வளவு தூரம் போகுதோ… அவ்ளோ தூரம்
நம்ம வாழ்க்கையும் உயரும்னு சொல்லுவாங்க. அதுக்கு தான் சொல்றேன், என்ன தான் நாம குறி வைக்கிறது தமிழ்நாடா இருந்தாலும் நமக்கு தெரியாமல் அது இந்தியா முழுக்க நம்மளை கொண்டு சேர்க்கும். அடுத்த கட்டமா நமக்கு உலக அளவில் இருந்து கஸ்டமர்ஸ் வர தொடங்கிடுவாங்க..” என்று சொல்ல அபிராமி சந்தோஷத்தில் ஆர்பரித்தாள்.
“நீங்க சொல்றது ரொம்ப சரி அண்ணி” என்றவள் “இப்போ எல்லாத்திலும் தரத்தை விட… மார்க்கெட்டிங் தான் அதிகமா பேசுது ண்ணா. அதுவும் கண் கவர் விளம்பரங்கள் வித்தியாசமா புதுமையா ரீல்ஸ்லயும் ஷார்ட்ஸ்லயும் கொடுக்கும் போது அது மக்களே இன்னும் சீக்கிரமே சென்றடையும்…”
“ஆமா முரளி நம்ம ஊர் பொம்பளைங்களே இன்ஸ்டா பேஜ்ஜில் இருந்து புடவையை வாங்கினேன்னு சொல்லி இருக்காங்க..” என்றார் மங்கையும்.
“அதேதான் அத்தை…” என்றவளுக்கு அவள் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்கப்பா…”
“எங்கே தங்கம்மா இருக்க?”
“வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன் ப்பா..”
“சரி வாம்மா..” என்றவள் அழைப்பை துண்டிக்கவும்,
“அண்ணே என்னடி சொன்னாங்க? நீ இங்க இருக்கிறது தெரிஞ்சுடுச்சா?” என்றார் பதறிக்கொண்டு.
“இப்போ எதுக்கு அத்தை நீ டென்ஷனாகுற? அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என்றவள்,
“அபி மாமூவுக்கு இதை பற்றி இன்னும் எலாப்ரேட்டா சொல்லு நான் நாளைக்கு வரேன்..” என்று தன் வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.
ராகவி வீட்டினுள் நுழையவுமே, “எங்கே போயிட்டு வர்ற?” என்றவர் கேள்வியில் அத்தனை கடுமை.
“அத்தை வீட்டுக்கு பா..” என்றதுமே, “எந்த தைரியத்துல அந்த வீட்டுக்கு போயிட்டு வர? எத்தனை நாளா இது நடக்குது?” என்றார் பார்த்தசாரதி.
“ஏன் ப்பா அது என் அத்தை வீடு தானே! எனக்கு அங்க போக உரிமை இல்லையா?”
“இல்லை. நமக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் போய் வருஷம் இருபதுக்கும் மேல ஆச்சு.. அப்படி இருக்கிறப்போ நீ எப்படி உறவாடலாம்?..”
“ஆடு பகையா இருந்தா குட்டி உறவாட கூடாதுன்னு சட்டமா ப்பா?”
“தங்கம்!!” என்ற பார்த்தசாரதிக்கு தங்கை மீதும் அவர் குடும்பத்தின் மீதும் தனிப்பட்ட கோபமோ வன்மமோ கிடையாது. இவ்வளவு ஏன் அவரின் பதின்ம வயதில் தந்தை இறந்த பின்னர் தேவ மங்கைக்கு தமையனாக மட்டும் இல்லாமல் தந்தையாகவும் பாதுகாத்து, உறுதுணையாக உடன் இருந்து பாசம் கொட்டி வளர்த்தவர் தான் அவர்!!
ஆனால் அப்படி உயிராக வளர்த்த தங்கையிடம் இருபது வருடங்களுக்கு முன் தாலியை கழற்றி போட்டு குழந்தைகளை அழைத்து கொண்டு தன்னோட வர சொல்லி கெஞ்சிய போதும் ‘வர மாட்டேன்..’ என்று மங்கை உறுதியாக நின்று தன்னை அவமானபடுத்தியதில் மொத்தமாக அவர் குடும்பத்தை ஒதுக்கி விட்டார்.
ராகவியும் முரளியும் பழகி கொண்டிருப்பது அரசல் புரசலாக பார்த்தசாரதிக்கும் தெரிய வந்தது ஆனால் அது ‘எந்தளவு உண்மை’ என்று தெரியாமல் தானாக மகளிடம் எதையாவது கேட்க போய் அதுவே அவருக்கு பாதகமாய் போய் விடுமோ என்று அதை பொருட்படுத்தியதில்லை.
ஆனால் இன்று இருவரும் ஒன்றாக ஊருக்குள் சென்றதை கண்ட உறவுகள் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அதை கண்டிக்கவே மகளை அழைத்து பேச முடிவு செய்தார்.
ஆனால் அவளின் தெளிவான பேச்சிற்கு அவர் பதிலை தேடிக்கொண்டிருக்க தன் பேச்சை தொடர்ந்த ராகவி,
“மாமா கொலை பண்ணினாருன்னு ஜெயில்ல இருக்கிறவரை நீங்க பார்க்க போகலை சரி. ஆனா அத்தை, மாமூ, அபியை ஏன் ப்பா ஒதுக்கி வச்சுருக்கீங்க? அவங்க என்ன தப்பு பண்ணினாங்க?”
“நீ சின்ன பொண்ணு உனக்கு என்ன தெரியும்னு கேள்வி கேட்டுட்டு இருக்க? பெரியவங்க சொன்னா அமைதியா கேட்டு பழகு தங்கம்மா..”
“நீங்க சொல்றது சரியா இருந்தா அதை என்னைக்குமே மதிக்கவோ மறுக்கவோ மாட்டேன் பா, ஆனா பாதிக்கபட்டவங்களை நாமளுமே சேர்ந்து தண்டிக்கிறது எந்த விதத்துல சரின்னு நீங்களே சொல்லுங்க?..” என்றிட பதில் அளிக்க முடியாமல் முகத்தை அழுந்த துடைத்த பார்த்தசாரதி,
“உனக்கும் முரளிக்கும் எவ்ளோ நாளா பழக்கம்?” என்றார்.
“பழக்கம் இல்லை ப்பா நானும் உங்க தங்கச்சி பையனும் உயிரா காதலிக்கிறோம். எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என் மாமூவோட மட்டும் தான்..” என்று தன் மனதை மறைக்காமல் திறக்க அதிர்ந்து போனார் பார்த்தசாரதி.

Last edited: