பாரிநேயன் அபியை பெண் பார்க்க குமரன் தந்தைக்கு அழைப்பு விடுக்க குடும்பமே அடுத்த வாரம் வந்து அபியை பெண் பார்த்து பூ வைத்து உறுதி செய்தனர்.
அடுத்த நாளே குடும்பத்தோடு ராகவியை பெண் கேட்க மச்சான் வீட்டிற்கு கிளம்பி விட்டார் பாரிநேயன்.
வாசலிலேயே காத்திருந்த பார்த்தசாரதியும் பரிமளாவும் மகிழ்ச்சியோடு அவர்களை வரவேற்று அழைத்து சென்றனர்.
சர்வ அலங்காரத்தோடு அவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த ராகவி மீதிருந்த பார்வையை முரளியால் அத்தனை சுலபமாக அகற்ற முடியவில்லை.
சொந்தங்களால் நிறைந்திருந்த அவர்கள் வீட்டில் சிரிப்பும், கலகலப்பான பேச்சும், சலசலப்புமாக கொண்டாட்டத்தோடு இருந்தனர்.
அதற்கு இடையே “என்ன மாப்பிள்ளை பொண்ணை பிடிச்சிருக்கா?” என்றார் சம்பிரதாயமாக ஒருவர்.
“என்ன கேள்வி தாத்தா இது? அண்ணனுக்கு அண்ணியை எவ்ளோ பிடிக்கும்னு ஊருக்கே தெரியுமே” என்று சிரித்தான் கண்ணன்.
“இதெல்லாம் சம்பிரதாயம் டா பேராண்டி” என்றவர் மீண்டும் முரளியிடம் சம்மதம் கேட்க, “சம்மதம் சொல்றதுக்கு முன்னாடி எனக்கு பொண்ணு கூட பேசணும்” என்றான்.
இதை எதிர்பாராதவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொள்ள, “தம்பி கிட்ட சண்டை போட்டியாடி?” என்றார் பரிமளா.
“இல்லை மா” என்றவளோ முரளி எதனால் இப்படி செய்கிறான் என்று புரியாமல் அவனை பார்த்திருந்தாள்.
“புதுசா என்ன முரளி பேச போற?” என்று மங்கை கேட்க, அதற்குள்.,
“அதுக்கு என்ன மாப்பிள்ளை?! போய் பேசிட்டு வாங்க..” என்று சம்மதம் அளித்த பார்த்தசாரதி, “மாப்பிள்ளையை கூட்டிட்டு போ தங்கம்மா..” என்றார்.
“வாங்க..” என்று அவனை அழைத்து கொண்டு பின்பக்கம் செல்ல முரளி சத்தமின்றி கதவை தாளிட்டான்.
“என்ன மாமூ செய்யற நீ?!” என்றிட அவனோ சுற்றும் முற்றும் விழிகளை சுழல விட்டபடி, “இந்த பக்கம் வாடி” என்று மாமரத்து நிழலுக்கு அழைத்து சென்றான்.
“என்ன சண்டியரே சம்மதம் கேட்டா சொல்லாம புதுசா மாப்பிள்ளை மிடுக்கை காட்டுறீங்களா? என்ன மாமூ இதெல்லாம்?” என்று இடையில் கரம் வைத்து முறைத்தாள்.
“இதெல்லாம் என்னன்னு நீ தான்டி சொல்லணும்?” என்றான் அவளை இழுத்து அணைத்தபடி.
என்றும் இல்லாத வகையில் இன்றைய அவன் அணைப்பும் இறுக்கமாகவும் பார்வை வேறாகவும் இருக்க “எது.. எதை பற்றி கேட்கிற?” என்றாள் திணறலாக.
“இதெல்லாம் தான்” என்று ஒற்றை விரலால் அவள் அணிந்திருந்த நெற்றி சுட்டியில் முத்தமிட்டவன் அதை தொடர்ந்து மூக்குத்தியில் முத்தமிட்டவன் பார்வை காந்தமாய் அவளை முழுதாய் ஈர்த்தது.
மூக்குத்தி தொடர்ந்து காதில் இருந்த ஜிமிக்கியில் முத்தமிட்டவன் உதடுகள் அவள் கன்னகத்துப்பில் இளைப்பாற அவனது ஒவ்வொரு முத்தத்திற்கும் சிலிர்த்து நின்றாள் ராகவி.
“அச்சோ மாமூ ஊரே வீட்டுக்குள்ள இருக்கு, நீ என்னடா பண்ற?” என்றவளிடம் வெட்கப்புன்னகை.
“இவ்ளோ அழகா இருந்தா மனசு கட்டுப்பாடு இல்லாம கண்ட படி அலையுதுடி..” என்றான் அவள் வலக்கரத்தை உயர்த்தி விரலில் அணிந்திருந்த மோதிரத்தில் முத்தமிட்ட படி.
“அப்போ இன்னைக்கு தான் நான் அழகா இருக்கேனா இவ்ளோ நாள் இல்லையா?”
“எப்பவுமே அழகு ஆனா இன்னைக்கு கொள்ளை அழகுடி நீ!!” என்றவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக தன் அச்சாரத்தை பதித்தான்.
“நீயும் தான் இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க” என்று அவன் முன் உச்சி முடிகளை விரல்களால் மெல்ல வருடி கொடுத்து அவன் நெற்றியில் தன் இதழ்களை ஒற்றினாள்.
சட்டென அவளை விடுவித்தவன், “போதும் வா போகலாம், இன்னும் ஒரு நிமிஷம் இங்க இருக்க கூடாது..” என்று சொல்ல ராகவிடம் சிரிப்பு.
“ஏன்?” என்றவள் அங்கிருந்து அசைய மறுத்தாள்.
“சொன்னா புரிஞ்சுக்கோடி. வா போகலாம்” என்றான் தலையை அழுந்த கோதிய படி.
“முடியாது, இவ்ளோ கொடுத்துட்டு முக்கியமான இடத்துல கொடுக்காம போனா எப்படி? நீ கொடு அப்புறம் தான் வருவேன்..” என்றாள் இதழ்களை குவித்து அடக்கப்பட்ட புன்னகையோடு.
தன் எதிரில் அழகாய் குவிந்து சிவந்திருந்த இதழ்கள் அவனை முத்தாட அழைத்ததில், “சோதிக்காதடி” என்றான் ஆழ்ந்த மூச்சை இழுத்த படி.
“யார் நானா? ஆரம்பிச்சது நீ தான் மாமூ” என்றாள் சிணுங்கலாக..
“இப்போ வேண்டாம். கல்யாணத்துக்கு அப்புறம் கொடுக்கிறேன்..”
“ஏன்?”
“ப்ச், விளையாடாதடி” என்றவனை அதற்கு மேலும் சோதிக்க விரும்பாதவள் அவன் மீசையை இழுத்து தன் உயரத்திற்கு அவனை வளைத்தாள்.
“ஸ்ஸாஆ என்னடி பண்ற?”
“சொல்றேன் இரு..” என்று அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவள், “சட்டையில் குங்குமம் பாரு..” என்றவள் அங்கிருந்த டவல் கொண்டு அதை துடைத்தபடி,
“இப்படியே போனா அப்புறம் ஒருத்தருக்கு உன்னால் பதில் சொல்ல முடியாது” என்றாள் சிரிப்போடு.
முரளி ராகவி மீண்டும் கூடத்திற்கு வர, “பொண்ணு கிட்டட பேசியாச்சா மாப்பிள்ளை? இப்போ சம்மதமா?” என்றிட புன்னகையோடு முரளி தன் சம்பந்தத்தை அளித்தான்.
“உனக்கு சம்மதமா ராகவி?” என்றனர்.
அவளோ அடக்கப்பட்ட சிரிப்போடு, “எனக்கு மாப்பிள்ளை கிட்ட பேசணும்” என்றதில் முரளி திகைத்து போனான்.
“என்னது? இப்போ தானே பேசிட்டு வந்தீங்க?”
“அது அவர் பேசினார் நான் கேட்டேன். இப்போ எனக்கு பேச வேண்டியது இருக்கு.. நான் பேசி அவர் கேட்ட பிறகு தான் சம்மதம் கொடுக்க முடியும்” என்று சொல்ல அவள் விளையாட்டை புரிந்து அனைவரிடமும் சிரிப்பு.
“போங்க மாப்பிள்ளை, பொண்ணு பேசறதை பொறுமையா கேட்டுட்டு வாங்க.. முகூர்த்த தேதி குறிச்சுடலாம்..”
ராகவியை முறைத்து கொண்டே அவள் பின்னே சென்ற முரளி அவள் கதவை தாளிடவும், “ராங்கி, உனக்கு ரொம்பவே கொழுப்பு கூடி போச்சு” என்றான்.
“அப்படியா? எத்தனை கிலோ கூடி இருக்குன்னு சரியா சொல்லு பார்ப்போம்” என்றாள் சிரிப்போடு.
உடனே அவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டவன், “மூணு கிலோ” என்றான் சிரிப்போடு.
அவன் உச்சியில் முத்தமிட்டவள், “அப்பா, மாமா ஒன்னு சேர்ந்தது ஊரே நம்ம விசேஷத்துக்காக கூடி இருக்கிறதை பார்க்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமூ…” என்று அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.
“எனக்கும் தான் ராகா. இதுக்கெல்லாம் நீ தான்டி காரணம், தேங்க்ஸ்” என்றதில் அவனை விட்டு வேகமாக விலகினாள்.
“ஹே என்னடி ஆச்சு?”
“எனக்கு நீ தேங்க்ஸ் சொல்லுவியா? என்னமோ நீ வேற நான் வேற இல்லைன்னு சொன்ன?!” என்று முறைத்தாள்.
“தெரியாம சொல்லிட்டேன்டி”
“சரி கொடு!!”
“என்னது?”
“போன முறை கொடுக்காம விட்டதை…” என்றாள் ஒற்றை கண் சிமிட்டி.
“ஹே, இம்சை பண்ணாதடி. நானே ரொம்ப கண்ட்ரோலா இருக்கேன்..” என்றாள் பல்லை கடித்தபடி.
“இல்லைனா என்ன பண்ணுவியாம்?” என்று சீண்டலாக சவால் விடுத்தாள்.
“உன்னை கடிச்சு தின்னு ஏப்பம் விட்டுடுவேன்டி..” என்றதில் ராகவி சட்டென சிரிக்க அவள் அடுத்து பேச வாய்ப்பு கொடுக்காமல் கதவை திறந்து உள்ளே அழைத்து சென்றான்.
அன்றே தட்டு மாற்றி நிச்சயம் செய்து கொண்டவர்கள் திருமண தேதியை குறித்தனர்.
மேலும் ஒன்றரை மாதம் கழிந்த நிலையில்…
அன்று முரளிதரன் - ராகவி திருமணத்தை தொட்டு அவர்களின் ஊரே திருவிழா கோலம் பூண்டிருந்தது.
பத்து நாட்களுக்கு முன்பு தான் அபிராமிக்கு குமரனோடு திருமணம் முடிந்திருந்தது.
ஊரை அடைத்து பந்தல் போட்டிருந்தனர் சாரதியும் பாரியும். தனியாக மண்டபம் எடுக்காமல் அவருடைய இடத்திலேயே மகளின் திருமண மேடையை அமைத்து கோலாகலமாக முரளி ராகவியின் திருமணத்தை நடத்தி இருந்தனர்.
ஊரே திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தியது.
சம்பிரதாயமெல்லாம் முடித்து முரளியின் வீட்டிற்கு சென்று அடி மிதித்து விட்டு ராகவியின் வீட்டிற்கு திரும்பி இருந்தனர்.
அன்று இரவு அவர்களுக்கு சாந்தி முகூர்த்தம் என்பதால் ரேவதியும் அபிராமியும் அவளை அலங்கரித்து கொண்டிருந்தனர்.
“சொன்ன மாதிரியே உன் அப்பா சம்பந்தத்தோட அண்ணனை கல்யாணம் பண்ணி கட்டிட்டியே.. பலே ஆளு தான்டி நீ!! சாதிச்சு காட்டிட்ட உன் அப்பத்தா கிட்ட சுத்தி போட சொல்லு” என்று நெட்டி முறித்தாள் ரேவதி.
“மாமா சம்மதம் மட்டுமா? எங்க கூட பேச்சு வச்சுகிட்டா குடும்பத்தையே ஒதுக்கி வைப்பேன்னு சொன்ன ஊர்க்காரங்களும் உறவுக்காரங்களும் திரண்டு வந்து வாழ்த்தி இருக்காங்களே.. இது தான் பெரிய விஷயம்.. இல்லையா அண்ணி?!” என்றாள் அபிராமி.
ராகவி புன்னகைக்க, “ஒரே பொண்ணு கல்யாணத்துக்கு ஒரு வாரமா ஊருக்கே விருந்து கொடுத்துட்டு இருக்கார் உன் அப்பா.. ரொம்ப கொடுத்து வச்சவடி நீ! உன் ஆசை எல்லாமே ஒவ்வொன்னா நிறைவேறுவதில் சந்தோஷம்”
“இதுக்கெல்லாம் காரணம் என் அம்மா. இவ்வளவு நாள் பயத்துல உண்மையை மறைச்சு வேதனைப்பட்டவங்க அன்னைக்கு என்கிட்ட சொல்லாம போயிருந்தா இன்னிக்கு இது நடந்திருக்காது.. அவங்களுக்கு தான் நன்றி சொல்லணும் ரேவதி..”
“அது என்னவோ உண்மை தான். ஒருபக்கம் உன் மாமாவை பார்த்தாலும் பாவமா இருக்கு இன்னொரு பக்கம் உன் அம்மா பட்ட மனஉளைச்சல் ரொம்பவே அதிகம். அவங்களும் பாவம் தான்!!”
“என்ன செய்ய எங்க வாழ்க்கையில இவ்வளவும் நடக்கனும்னு விதிச்சிருக்கு போல.. யார் மாற்ற முடியும்” என்றிட அங்கே வந்த பரிமளா அவர்களை சாப்பிட அழைத்து சென்றார்.
****************
மணி இரவு பதினொன்றை ஆகியிருக்க “சரி மாப்பிள்ளை காலையில நிறைய சோலி கிடக்கு, நான் தூங்கறேன்..” என்று கொட்டாவி விட்டபடி சொன்ன பார்த்தசாரதியிடம், “சரி மாமா..” என்று முரளி சொல்லவும் போர்வையை இழுத்து போர்த்தி உறங்க தொடங்கினார்.
சிலுசிலுவென காற்று அடிக்க முரளி அப்போது தான் தன் கைபேசி ஒளிர்வதை கண்டான்.
“ராங்கி” என்ற பெயரை கண்டதுமே புன்னகையோடு ஆன் செய்து காதில் வைத்தான்.
“யோவ் மாமூ என் ஃபோனை எடுக்க இவ்வளவு நேரமா? என்ன பண்ணிட்டு இருக்க?”
“என்னடி தூங்கலையா? இந்நேரத்துக்கு ஃபோன் பண்ணி இருக்க?!”
“இன்னைக்கு என்ன நாள்?” என்றாள் பல்லை கடித்தபடி..,
“நம்மளோட கல்யாண நாள்!!”
“ஐயோ, நீ சரியான டியூப்லைட் மாமூ.. இப்போ இன்னைக்கு ராத்திரி நமக்கு என்னன்னு கேட்டேன்?” என்றதுமே முரளியிடம் சிரிப்பு.
“சிரிக்காத மாமூ, என்ன பண்ணிட்டு இருக்க?”
“மாமா கூட பேசிட்டு இருந்தேன் ராகா, அவர் தூங்கிட்டாரு இப்ப நானும் தூங்க போறேன்..”
“என்னது எங்க அப்பா கூட பேசிட்டு தூங்க போறியா?! உனக்கே இதெல்லாம் அநியாயமா தெரியல?”
“என்னடி அநியாயம்?” என்றான் மீசையை நீவியபடி…
“யாராவது ஃபர்ஸ்ட் நைட்ல தூங்குவாங்களா?”
“அதுதான் நீயும் தூங்காம என்னையும் தூங்க விடாம பண்றியே.. அப்புறம் என்ன?” என்றான் சிரிப்போடு.
“கடுப்பேத்தாத மாமூ ஏற்கனவே கிழவி வேண்டுதல்னு சொல்லி என்னை டென்ஷன் பண்ணிடுச்சு..”
“எதுக்குடி டென்ஷன்? ஆயா வேண்டுதல் வச்சதே நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்கனும் என்பதற்காக தானே?!”
“அதுக்காக கல்யாணம் ஆனதும் எல்லா கோவிலுக்கும் போய் வர வரைக்கும் ஒரு வாரம் தள்ளி இருக்கணுமா?”
“இருந்தா தான் என்ன?”
“ப்ச் எல்லாருக்கும் ஃபர்ஸ்ட் நைட் எந்த அளவுக்கு மறக்க முடியாததா இருக்கும்?! ஆனா எனக்கு எப்படி அமைஞ்சுருக்கு பாரு?” என்று சலித்து கொண்டவள்,
“ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் இரவு! ஆயிரம் உறவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் உறவுன்னு சும்மாவா பாடினாங்க?” என்றதில் முரளி இன்னுமே வெடித்து சிரித்தான்.
“என்ன மாமூ சிரிச்சுகிட்டு இருக்க?”
“வேற என்னடி பண்ண சொல்ற? நம்ம கல்யாணம் நடக்கணும்னு நம்மளை விட அவங்க தான் அதிகம் தவிச்சு போயிருப்பாங்க..”
“அதுக்காக உடனே எதுக்கு வேண்டனும்? ஒரு மாசம் கழிச்சு வரோம்னு வேண்டி இருக்க வேண்டியது தானே?!”
“ஹே பெரியவர்களோட வேண்டுதல் அதை மீறினால் தெய்வ குத்தம் ஆகிடும்..”
“அப்போ உனக்கு எந்த ஃபீலிங்கும் இல்லையா மாமூ?”
“ஏன் இல்லாம?!”
“அப்போ இப்போ இருக்கா?”
“இப்போ மட்டும் இல்லடி கடந்த சில வருஷமாவே இருக்கு. அதுவும் தள்ளி உட்காருடின்னு சொன்னாலும் நகராம பைக்ல ஒட்டிக்கிட்டு வரும் போது எல்லாம் என்னென்னமோ தோணும். ஆனா நல்ல பையனா அடக்க ஒடுக்கமா இருக்க எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்றான் சிரிப்போடு.
“அப்படியா மாமூ?”
“ஆமாடி! அதுவும் சில நேரம் நீ அம்சமா புடவையில தலைக்கு குளிச்சு முடியை அழகா விரிச்சு விட்டு புடவைக்கு ஏற்ற கலர்ல நெத்தியில அளவான பொட்டு விபூதி குங்குமம் கை நிறைய வளையல் காதுல அதே நிறத்துல பொருத்தமான பெரிய ஜிமிக்கி போட்டிருப்ப..”
“ஆனா கழுத்துல மட்டும் நான் போட்டு விட்ட செயின் தான் இருக்கும் வேற எதுவும் இருக்காது.. அதை பார்க்கும் போதெல்லாம் நானே உன்னோடு…” என்றவனுக்கு அதை அவன் அவளுக்கு அணிவித்த நாளும் நினைவில் எழுந்தது.