மௌனம் -4
நித்யமயூரி சொன்னது போலவே மதுரா இவர்களுக்காக திருப்பூரில் காத்திருந்தாள். மூவரும் ஒன்றாகவே அவர்கள் வீட்டிற்குள் நுழைய.
அங்கோ கல்யாணகளை கட்டியது.
வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பெரிய வீட்டில் இருக்க.
“ஹே! என்ன இன்னைக்கு மீட்டிங்கா? அதுவும் நான் இல்லாமல்?” என்றுக் கேட்டவாறே தோழிகளுடன் அங்கு நுழைந்தாள் நித்யமயூரி.
“ வா மா! வாங்கமா.” என்று ஆழினியையும், மதுராவையும் எல்லோரும் வரவேற்க.
லட்சுமியோ, “அண்ணன் கல்யாணத்துக்கு நாத்தி முடிச்சு தானே போடணும்னு இவ்வளவு லேட்டா வந்துட்டு வாயைப் பாரு.” என்று பேத்தியை கிண்டல் செய்தார்.
“பாட்டி! எக்ஸாம் முடியவும் தானே வர முடியும்.”என்று சிணுங்கினாள் நித்யமயூரி.
“சரி! சரி! கெஸ்ட் ரூம் ரெடியா இருக்கு. உன் ஃப்ரெண்ட்ஸுங்களை கூட்டிட்டு போய் ரெஸ்ட் எடு. டீ, ஸ்நாக்ஸ் ரூமுக்கு அனுப்புறேன். நைட் சாப்பிடும் போது மத்த கதை பேசலாம்.” என்றார் லட்சுமி.
“சரி பாட்டி!” என்றவளுக்கு தான் அங்கிருந்து கிளம்ப மனதே இல்லை. ‘ கல்யாணத்துக்கான திட்டமிடல் தான் நடக்கும். ஆனால் பாட்டி என் ஃப்ரெண்ட்ஸ் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறங்களோ. அவங்களை தனியா விட்டுட்டு நான் மட்டும் எப்படி வர முடியும்.’ என்று எண்ணியவள், முக வாட்டத்தை மறைத்தவாறு தோழிகளுடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அந்த அறையைச் சுற்றி பார்த்து மதுரா,” வாவ்!”என்று ஆச்சரியப்பட.
ஆழினியோ நித்யமயூரியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன ஆழி! ரூம் பிடிச்சிருக்கா?” என்று நித்யமயூரி வினவ.
“ம்! நல்லா தான் இருக்கு. நீ ஏன் டல்லா இருக்க?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லையே.” என்று நித்யமயூரி மறுக்க.
மதுராவோ,”அவ ஏன் டி டல்லா இருக்கப் போறா. ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டா. வீட்ல வேற பங்ஷன். அப்புறம் என்ன?” என்று வினவ.
“ப்ச்! அவ முகத்தை பாரு. நமக்காக சிரிச்சிட்டு இருக்கா. மய்யூ நாங்க இங்க வந்தது உனக்கு டிஸ்டபர்ன்ஸா?” என்று ஆழினி வினவ.
“எருமை! உன்னை கொன்னுடுவேன் நான்தானே வலுக்கட்டாயமா உங்கள கூட்டிட்டு வந்தேன்.”
“அப்புறம் ஏன் இப்படி இருக்க?”
“ஒன்னும் இல்லடி! சும்மா என் முகத்தை பார்த்தே எல்லாத்தையும் கண்டு பிடி. கீழ எல்லாரும் ஏதோ முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசிட்டு இருக்காங்க. உங்களை விட்டுட்டு என்னால அங்கப் போக முடியலேன்னு யோசிச்சேன்.”
“இது ஒரு மேட்டரா. நானும் ஆழினியும் இங்க இருக்கிறோம். நீ போய் அங்க பாரு. நாங்க பேசிட்டு இருக்கோம்.”என்று மதுரா கூற
“ஆமாம் மய்யூ! நீ கீழ போ.” என்றாள் ஆழினி.
“ தேங்க்ஸ் செல்லக்குட்டி! மீட்டிங் முடியவும் ஓடி வந்துடுறேன்.”என்றவள் துள்ளி குதித்து ஓடினாள்.
லட்சுமி சொன்னது போலவே அவர்களுக்கு டீ, ஸ்நாக்ஸ் கொடுத்து அனுப்பினார்.
கீழே இவள் வந்ததும், “ இங்கே என்ன நடக்குதுன்னு தெரியலன்னா உனக்கு தலையே வெடிச்சிடுமே.” என்று நித்யமயூரியின் தலையில் கொட்டினாள் சிந்துஜா.
“ பின்ன நான் இல்லாமல் நம்ம வீட்ல மீட்டிங்கா?” என்று வினவியவாறு சலுகையாக சிந்துஜாவின் தோளில் சாய்ந்தவளுக்குத் தெரியவில்லை, இது தான் அவள் கலந்துக்க் கொள்ளப் போகும் இறுதிக் குடும்ப மாநாடு. இனி அவள் இன்றி தான் இந்த குடும்ப மாநாடு நடக்கும்.
வருங்காலத்தில் நடப்பதை அறியும் வித்தை தெரியாததால் நித்யமயூரி சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.
“பாட்டி! எதுக்கு இப்போ மீட்டிங்? சீக்கிரம் சொல்லுங்க.”
“கல்யாண ஏற்பாடை பத்தி பேசத்தான். எல்லோரையும் வரச் சொல்லியிருக்கேன்.”
“என்னப் பாட்டி பத்து நாள்ல கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்போ போய், ஏற்பாடு செய்யுறதைப் பத்தி பேசணும்னு சொல்றிங்க.” என்று ஆச்சரியமாக வினவினாள் நித்யமயூரி.
“அடியே என் பேரன், பேத்தி கல்யாணத்துக்காக ஒரு வருஷமா ஒன்னு, ஒன்னும் பார்த்து பார்த்து ஏற்பாடு செஞ்சிட்டு இருக்கேன். இன்னைக்கு முடிவெடுத்து நாளைக்கு கல்யாணமா ஏற்பாடு பண்ணேன்.” என்று லட்சுமி அங்கலாய்க்க.
“அப்புறம் நீங்க தானே பாட்டி கல்யாண ஏற்பாடைப் பத்தினு சொன்னீங்க.”
“அது ஒன்னும் இல்ல. இப்ப புதுசா
உள்ள ட்ரெண்ட்டாம். ஹல்லு ஓ என்னவோ. சிந்து அது என்னமா? உன் தங்கச்சிக்கு புரியற மாதிரி சொல்லு.” என்றுக் கூற.
“பாட்டி! அது ஹல்லு இல்லை ஹல்தி.” என்று சிந்துஜா கூற.
“ஹே! சூப்பர்!” என்று ஆர்ப்பரித்தாள் நித்யமயூரி.
“மய்யூ குட்டி அது மட்டும் இல்ல. மெகந்தி, ரிசப்ஷன்னு அஞ்சு நாளுக்கு மண்டபத்த புக் பண்ணியாச்சு. டெய்லி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான்.” என்றார் உமா.
“சூப்பர் அத்தை! எனக்கு ஒவ்வொரு பங்க்ஷனுக்கும் அதுக்கு ஏத்த மாதிரி ட்ரெஸ் வேணும். மெகந்திக்கு கிரீன் கலர்ல சுடிதார். ரிசப்ஷனுக்கு லெஹங்கா. ஹல்திக்கு எல்லோ கலர்ல சோலி. கல்யாணத்துக்கு தான் சாரி எடுத்தாச்சு.” என்று நித்யமயூரி படபடக்க.
“அதைப் பத்தி பேசத்தாத்தான் அம்மா எல்லோரையும் வரச் சொன்னாங்க.” என்ற உமா அன்னையைப் பார்க்க.
“அதான் யாருக்கு என்னென்ன டிரஸ் வேணும்னாலும் எடுத்துக்கோங்க. நம்ம கடையை தொறக்குறதுக்கு முன்னாடி போய் பாருங்க. மேனேஜர நாளைக்கு சீக்கிரம் வரச் சொல்லி இருக்கேன். மய்யூ அப்படியே உன்னோட ஃப்ரெண்ட்ஸையும் கூட்டிட்டு வா. அவங்களுக்கும் கல்யாணத்துக்கு பிடிச்ச மாதிரி புடவை எடுத்துடுவோம்.” என்றவர், மறுநாள் அவர்களது மெயின் ஷோரூமுக்கு காலையிலே சென்றனர்.
“முதல்ல கல்யாண பொண்ணு, மாப்பிள்ளைக்கு எடுத்துடுவோம் என்ன கலர் வேணும்னு சொல்லுங்க” என்று தன்ஷிகாவையும், வியான்செழியனையும் பார்த்து லட்சுமி வினவ.
“ஹல்திக்கு எல்லோரும் மஞ்சகலர்ல தான் போடணும்.
பொண்ணு, மாப்பிள்ளையும் அதே கலர் தான் போடணும்.” என்று நித்யமயூரி கூற.
“மஞ்ச கலர் எல்லாம் செழியன் போட மாட்டானே!” என்று சிந்துஜா கூற.
“அக்கா! அப்புறம் போட்டோ எல்லாம் எப்படி எடுக்கிறது? பொண்ணு… மாப்பிள்ளை ரெண்டு பேருக்கும் மஞ்சள் கலர் டிரஸ் போட்டு நம்ம மஞ்ச தடவிட்டு நம்ம கையையும் முகத்தை மறைக்கிறது போல எல்லாம் வச்சு நிறைய ஃபோட்டோ எடுக்கலாம்னு நினைச்சேன்.” என்று நித்யமயூரி கூற.
“எல்லோ கலர் தான் போடணும்னா எடுங்க. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்று வியான்செழியன் கூற.
“இங்க பாருடா! கல்யாணத்துக்கு முன்னாடியே என் தம்பி பொண்டாட்டிக்காக விட்டுக் கொடுக்க ஆரம்பிச்சுட்டான்.” என்று சிந்துஜா கேலி செய்ய.
“ஆமாம்! அத்தானைப் பார்த்து கத்துக்கிட்டேன்.” என்றவன் சிரித்தவாறு தலையசைத்தான். தன்ஷிகாவும் புன்னகைத்தான்.
“ஏன் டா மச்சி! நான் பாட்டுக்கும் சிவனேனு இருக்கேன். என்னை ஏன் வம்புக்கு இழுக்குற?” என்று விகாஷ் வினவ.
“அதான் அத்தான் நீங்க பாட்டுக்கும் யாருக்கு வந்த விருந்தோன்னு இருந்தா ஆச்சா? அதான்.” என்று வியன்செழியன் கூற.
அங்கே பேச்சும், சிரிப்பும் களைகட்டியது.
அதையெல்லாம் பார்த்த ஆழினியின் மனதில் முணுக்கென்று ஒரு வலி உணாடானது.
அதை வெளிக் காட்டாமல் மறைத்தவள், கடையைச் சுற்றிப் பார்ப்பது போல் மெல்ல நகர்ந்தாள்.
அதையெல்லாம் பார்க்காதது போல் பார்த்த நித்யமயூரிக்கும் மனது வலித்தது. ஆனால் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
நாட்கள் விரைவாக ஓட. திருமணத்திற்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்தது.
இன்று மாலையில் இருந்து மண்டபத்தில் தான் அனைவரும் தங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதற்காக எல்லோரும் அவர்களுடைய லக்கேஜ்களை பேக் செய்வதும், தேவையானவற்றை வாங்குவதுமாக பிஸியாக இருக்க.
தன்ஷிகாவோ வெளியே செல்வது போல தயாராக இருந்தாள்.
“அம்மா! என்னோட காலேஜ் மேமுக்கு மட்டும் பத்திரிகை மிஸ்ஸாகிடுச்சு. குடுத்துட்டு வந்திடுறேன்.” என்றாள்.
“என்ன தனுமா! இப்போ போய் வெளியே போவாங்களா? ஈவினிங் மண்டபத்துக்கு வேற கிளம்பணும். அப்பா வேற கம்பெனிக்கு கிளம்பிட்டாங்க. நானும், சுமதியும் மண்டபத்துக்கு கிளம்பணும். இல்லைன்னா நானே வருவேன்.” என்று உமா புலம்ப.
“ அம்மா! காலேஜ்ல தான் மேம் இருப்பாங்க. போய் குடுத்துட்டு சீக்கிரம் வந்திடுறேன்.”
“தனியா எல்லாம் போகாதே. யாரையாவது கூட்டிட்டு போ. இரு சிந்துவுக்கு கால் பண்றேன்.”என்று உமா ஃபோனை எடுக்க .
“அம்மா! அண்ணி, அவங்கத் தம்பிக்கு ஹெல்ப் பண்ண போயிருக்காங்க. மய்யூ அவ ஃப்ரெண்ட்ஸூக்கு ஆரி ப்ளவுஸ் ஸ்டிச் பண்ணக் குடுத்திருந்தா, அதை வாங்கப் போயிருக்கா. நான் சீக்கிரம் வந்திடுவேன். உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன். பயப்படாதீங்க.” என்று தன்ஷிகா கூற.
“சரி பார்த்து பத்திரமா போ. ட்ரைவரை வரச் சொல்றேன்.”
“அம்மா! அப்பா ஒரு காரை எடுத்துட்டு போய்ட்டாங்க. அண்ணி ஒரு காரை எடுத்துட்டு போயிட்டாங்க.”
பெரிய வீட்டுக் கார்ல போ தனு.”
“அங்கேயும் மய்யு ஒரு கார்ல போயிருக்கா. நீங்களும், அத்தையும் வெளியில போகணும் சொன்னீங்களில்ல. நான் இங்க இருக்க காலேஜுக்குத் தானே. டூவீலரில் போயிட்டு அரை மணி நேரத்துல வந்துடுறேன்.” என்றவள் உற்சாகமாகவே கிளம்பினாள்.
உமாவும், சுமதியும் முதலில் உப்பு, பருப்பு, சர்க்கரை, மஞ்சள் குங்குமம் என்று நல்ல பொருட்களை மண்டபத்திற்கு எடுத்துச் சென்றனர்.
நல்ல நேரத்தில் இந்தப் பொருட்களை தான் முதலில் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்காகத் தான் உமா மகளுடன் செல்லாமல் அந்த வேலையைக் கவனித்தார்.
அரை மணி நேரத்தில் வந்திடுவேன் என்றுக் கூறிச் சென்ற தன்ஷிகா நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை.
*****************
சிந்துஜா தம்பியின் உடைய வாங்கி வந்து அவனை போட்டு பார்க்கச் சொல்லி, ஃபிட்டிங் சரியாக இருக்கவும் தான் நிம்மதியானாள். தீடிர் ப்ளானாக தான் எல்லோ கலர் ட்ரஸ் எடுத்தார்கள். அதனால் தான் இந்த கடைசி நேர டென்ஷன். சிந்துஜா தம்பியை அலைய வேண்டாம் என்று சொல்லி விட்டு, அவளே அவர்களின் ஷோரூமுக்கு சென்று வாங்கி வந்தாள்.
“உனக்கு தாண்டா ரொம்ப அலைச்சல்!” என்று கவிதா தனது கொழுந்தன் மகளை நெற்றி முறித்தவர், அவளுக்கு ஜூஸ் போட்டுக் கொண்டு வந்துக் கொடுத்தார்.
அதை வாங்கி குடித்தவளோ,” என் தம்பிக்கு நான் செய்யாமல் யார் செய்வா.”என்றாள்.
“ அதானே!” என்றான் வியன்செழியன்.
“சரி! சரி! அக்காவும், தம்பியும் ஒன்னு சேர்ந்தாச்சு. நான் ஜகா வாங்கிக்கிறேன்.” என்ற சுமதி, “சிந்து! இன்னைக்கு ஈவினிங் மண்டபத்துக்கு போயிடுவோம்ல. இன்னைக்கு எதுவும் ப்ளான் இருக்கா?” என்று வினவ.
“இன்னைக்கும், நாளைக்கும் ரெஸ்ட் தான். நமக்கு போரடிச்சா பொண்ணு, மாப்பிள்ளையை ஓட்ட வேண்டியது தான்.” என்று வியன் செழியனைப் பார்த்துக் கொண்டே கூறினாள் சிந்துஜா.
“அக்கா!” என்று முகம் சிவந்தான் வியன் செழியன்.
“உன்னை இப்படி பார்க்க எவ்வளவு அழகா இருக்குத் தெரியுமா?” என்று தம்பியின் தலையை களைத்தவள், “ நான் வீட்டுக்கு கிளம்புறேன்.” என்றுச் சிரித்தவாறே கிளம்பினாள்.
இந்த சந்தோஷம், சிரிப்பு எல்லாம் இன்னும் சற்று நேரத்தில் மாறப்போவதை அறியவில்லை.
அவர்களின் வீட்டிற்கு சிந்துஜா நுழையும் போதே, உமாவும் வந்து சேர்ந்தார்.
“என்ன சிந்து! மாப்பிள்ளைக்கு தேவையானதெல்லாம் எடுத்து வச்சிட்டியா? வேலையெல்லாம் முடிஞ்சதா?” என்று வினவ .
“எல்லாம் எடுத்து வச்சாச்சு அத்தை. செழியன் ரெடி. எப்போ மண்டபத்துக்கு போகலாம் தனுவை பார்க்கலாம்னு தான் அவன் வெயிட் பண்ணிட்டு இருக்கான்.” என்று சிந்துஜா கூற.
உமாவின் முகத்தில் பூரிப்பு வர,
“ஆமாம் தனு வந்துட்டாளா?” என்று உமா வினவ.
“தனு எங்கப் போயிருக்கா?” என்று சிந்துஜா வினவ.
“பத்திரிகை வைக்கணும்னு காலேஜ் வரைக்கும் போயிருக்கா.” என்று மருமகளுக்கு பதிலளித்தவர், மகளுக்கு அழைக்க.
அவளது ஃபோனோ ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.
“ கல்யாண வேலையில சார்ஜ் போட மறந்துட்டேன்.” என்று தனக்குள் கூறிக் கொண்டார் உமா.
“பத்திரிகை வைக்கணும்னா விகாஷோட போக சொல்ல வேண்டியது தானே அத்தை.”
“ப்ச்! உன்னை போக சொல்லலாம்னு பார்த்தேன். நீ உன் தம்பியை கவனிக்கப் போயிட்ட. எனக்கு என்ன பண்றதுன்னு புரியல. சரி நான் உங்க மாமாக்கு போன் பண்றேன்.” என்றவர் வேந்தனுக்கு அழைத்து, வெளியே சென்ற மகள் இன்னும் வீடு திரும்பவில்லை என்ற தகவலைக் கூறினார்.
“என்ன உமா சொல்ற? எதுக்கு தனுவை தனியா அனுப்புன? இத்தனை பேர் எதுக்கு இருக்கோம். சரி நான் போய் பார்க்கிறேன்.” என்றவர், தன்ஷிகாவின் கல்லூரிக்கு சென்றார்
இங்கோ உமாவிற்கு எந்த வேலையும் ஓடவில்லை. ஃபோனையே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க.
சற்று நேரத்தில் வேந்தனிடமிருந்து அழைப்பு வந்தது.
“உமா! பாப்பா வீட்டுக்கு வந்துட்டாளா?” என்று வினவ.
“என்னங்க சொல்றீங்க? தனு அங்க இல்லையா?”
“ இங்க வரவே இல்லைனு சொல்றாங்க.” என்று வேந்தன் கூறியதைக் கேட்டதும், “ஐயோ! என் பொண்ணுக்கு என்னாச்சுனு தெரியலையே.” என்று கதறிய உமா மயங்கி விழுந்தாள்.