மௌனம் -8
இரவெல்லாம் தூங்காமல் யோசனையில் இருந்த வியன்செழியன் காலையில் வழக்கத்திற்கு மாறாக தாமதமாக கண் விழித்தான்.
எப்பொழுதும் போல் உடற்பயிற்சி செய்து விட்டு, குளித்து தயாராகி கீழே இறங்கி வரும் போது மணி ஒன்பதை தாண்டி விட்டது.
ஹாலில் இருந்த கவிதாவோ, “செழியா! உனக்கு உடம்பு சரியில்லையா?” என்று வினவ.
“அதெல்லாம் இல்லமா! நல்லா தான் இருக்கேன்.”
“சரி நேரமாச்சு. டிஃபன் சாப்பிட்டு, டீ குடிக்கிறியா?” என்றவாறே எழுந்தார் கவிதா.
“இல்லமா! டீயே கொண்டு வாங்க.” என்றவாறே சோஃபாவில் அமர்ந்தான் வியன் செழியன்.
பார்வையோ, தனது சரிபாதியை தேடியது.
இவன் கீழே இறங்க்கியதும், கையில் இவனுக்குப் பிடித்த விதத்தில் டீயுடன் வந்து விடுவாள்.
இன்று காணவில்லை என்றதும் அவனது பார்வை சுற்ற.
டீயுடன் வந்த கவிதாவோ, “ என்ன செழியா? ஆழினியை தேடுறியா? அவ பாட்டி ரூமுக்கு போயிருக்கா.” என்றார்.
“ம்!” என்றவாறே டீயைக் குடிக்க.
“ஆழினிய கூப்பிடவா செழியா?” என்று கவிதா வினவ.
“வேண்டாம் மா.இருக்கட்டும் மா?” என்றவன் சிறிது நேர யோசனைக்குப் பின், “ ஏன் மா அவ ட்ரெஸ் எல்லாம் அவ தான் ஸ்டிச் பண்ணுவாளா?” என்று வினவ.
“ஆமா சூப்பரா தைப்பா! எனக்கும், உங்கப் பெரியம்மாவுக்கும் கூட அவ தான் ப்ளவுஸ் தைப்பா. ரொம்ப அழகா இருக்கும்.” என்று பெருமையாக மருமகளை பற்றி சொல்ல.
‘ அப்புறம் ஏன் அவளுக்கு நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வர்றதுல விருப்பமில்லை?’ என்று தனக்குள் யோசித்துக் கொண்டிருக்க.
அப்போதுதான் அங்கு வந்த ஆழினியோ, அவன் தான் கூறியதை நம்பாமல் கவிதாவிடம் விசாரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவாறே கடுப்புடன் கிச்சனுக்குள் சென்றாள்.
கவிதாவோ அவளைப் பார்த்ததும், “ஆழி! இங்க வா. செழியன் வந்ததுல இருந்து உன்ன தான் தேடிட்டு இருக்கான்.”என்றுக் கூற.
என்ன என்பது போல வந்து அவனை அமைதியாக பார்த்தாள் ஆழினி.
“ஈவினிங் ரெடியா இரு ஷாப்பிங் போகலாம்.ஷார்ப்பா அஞ்சு மணிக்கு நான் வீட்டுக்கு வந்துடுவேன்.” என்று செழியன் கூற.
ஆழினியோ, “சரி!” என்பது போல் தலையாட்டினாள்.
சரியாக அந்த நேரம் குழந்தையை தூக்கிட்டு வந்த உமாவோ, “எங்க போற செழியா? சாயந்திரம் நயனிக்கு தடுப்பூசி போடணுமே. நீ வந்தா தான் அவளை சமாளிக்க முடியும்.” என்றுக் கூற.
குழந்தையும் டாடி என்றவாறு அவனிடம் சென்றது.
குழந்தையைத் தூக்கி மடியில் அமர்த்தியவன், ஆழினியை பார்க்க.
அவள் எப்பொழுதும் போல் முகத்தில் எதையும் காட்டாமல், உமாவைப் பார்த்து, “ வாங்க பெரியம்மா.” என்றாள்.
அவளுக்கு எந்த மறுமொழியும் அளிக்காமல் தலையை மட்டும் அசைத்து விட்டு, “என்ன செழியா? ஈவினிங் ஹாஸ்பிடல் போகலாமா?” என்று மீண்டும் வினவினார் உமா.
“வர்றேன் அத்தை.” என்று ஆழினியிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று எண்ணம் இல்லாமல் எப்பொழுதும் போல் வியன்செழியன் தானாக முடிவெடுத்தான்.
அதைக் கேட்டதும் ஆழினியின் கண்களில் கண்ணீர் வர பார்த்தது. அடக்கிக் கொண்டவள்,யாரும் கவனிக்காதவாறு அங்கிருந்து நகர்ந்தவள், அவர்களது அறைக்குச் சென்று விட்டாள்.
போன வேகத்தில் மதுராவிற்கு அழைத்தவள், ஒன்றும் கூறாமல் அழுதாள்.
அவள் அழவும் மதுராவிற்கு பதறியது.
‘ ஒருவேளை ஆழி டைவர்ஸ் கேட்டது வீட்டிற்கு தெரிந்து பிரச்சினையாகி விட்டதோ! மய்யூ அவங்க அண்ணன் கிட்ட சொல்லிவிட்டாளோ? என்னவோ?’ என்று எண்ணிய மதுரா, “அழாதே ஆழி! என்னாச்சு சொல்லு. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.”என்றுக் கூற.
“எனக்கு சீக்கிரம் டைவர்ஸ் வேணும்னுடி. டைவர்ஸ் உடனே வாங்கித் தா.” என்று சொன்னதையே திரும்ப சொல்ல.
“ கொஞ்சம் பொறுமையா ஆழி? இவ்வளவு நாள் அமைதியா இருந்துட்டு இப்போ எதுக்கு அவசரப்படுற?”
“என்னால முடியலடி. சீரியஸ்லி எனக்கு அவர் மேல கோவமெல்லாம் இல்ல. இன்னும் காதல் தான் இருக்கு. என்னால அவரோட வாழ்க்கையும் சேர்ந்து வீணாப் போகுது. சிலநேரங்கள்ல அவரு என் கிட்ட நெருங்கி வர்றது போலத் தோணும். இந்த மானம் கெட்ட மனசு சந்தோஷத்துல ஆர்ப்பரிக்கும். அப்புறம் அது ஏமாற்றத்துல பொசுங்கிடும்.”
“என்னடி உளறிட்டு இருக்க. ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றியா? எனக்கு வேலை இருக்கு. இல்லைன்னா நான் வந்து உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணுவேன். நீ வேணா இங்கே ஆபிஸுக்கு வர்றியா?” என்று மதுரா வினவ.
“நீ நினைக்குறது போல நான் இன்னும் முழுசா பைத்தியமாகலடி. ஆனால் கூடிய சீக்கிரமா பைத்தியமாகிடுவேன் போல.”
“இப்படியெல்லாம் பேசாதே ஆழி! நீ ஸ்கூல் படிக்கும் போது எப்படி போல்டா இருப்பேனுத் தெரியும். இப்போ ஏன் ரொம்ப உணர்ச்சி வசப்படுற?”
” ஆமாம் அப்போ இருந்த ஆழினி இப்போ கிடையாது. காதல்னு அவர் மேல அன்பை வச்சுத் தொலைச்சுட்டேன். அதான் அவஸ்தைப் படுறேன். இன்னைக்குக் கூட ஈவினிங் ஷாப்பிங் கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு. அப்படியே ஆகாயத்துல பறந்தேன். ஆனா அடுத்த நொடியே அவங்க அத்தை வந்து ஏதோ சொல்லவும், எப்பவும் போல கடைசி நேரத்தில் பிளான மாத்திட்டாங்க.”
“இவ்வளவு காதலை வச்சிட்டு எப்படிடி டைவர்ஸ் வாங்கிட்டு இருப்ப? செழியன் அண்ணா உனக்கு டைவர்ஸ் தர முடியாதுன்னு சொல்லிட்டா நீ என்ன பண்ணுவ?”
“என்னால ஒண்ணுமே பண்ண முடியாது. ஆனால் அப்படி சொல்ல மாட்டாரு. நான் எப்போ போவேனு தான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு. இன்பாக்ட் அந்தக் குடும்பமே வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.”
“சரி! அப்படியே அவங்க எதிர்ப்பார்க்கட்டும். அதுக்காக நீ ஏன் அவசரப்படுற?”
“ப்ச்! அவசரமெல்லாம் படல. வெட்டிங் டே கிஃப்டா கொடுப்போம்னு நினைச்சேன்.”
“ பெரிய மௌனராக மோகன் நினைப்பு. அப்படியே உன் ஹஸ்பன்டுக்கு பிடிச்சதை கிஃப்டா கொடுக்கிறியாக்கும்.” என்று மதுரா பொரும.
ஆழினிக்கு சிரிப்பு வந்து விட்டது.
சிரித்தவாறே, “என்னை நினைச்சு எனக்கே கோவம், கோவமா வருது. ஏன்னா என்னைப் பிடிக்கலைங்குற இடத்துல இன்னும் உட்கார்ந்துட்டு இருக்கேன் பாரு.”
“கோவம் வந்தா உங்க ஊர்ல இப்படித்தான் சிரிப்பாங்களா?”
“ஆமாம் டி. ஸ்ட்ரெஸ் ரிலீபாக செய்யுற தெரஃபி.” என்ற ஆழியின் பதிலை, கவலையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் மதுரா.
“நீ ஏதோ அவங்க எல்லாரையும் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கேனு தோணுது ஆழி. உன்னை வேணாம்னு நினைக்கிறவங்களா பங்ஷன் செய்யப் போறாங்க.”
“அது நடக்கும் போது நடக்கட்டும். என்னால அவருக்கு குடுக்கக் கூடிய ஒரே கிஃப்ட். டைவர்ஸ் தான். இது உண்மையிலேயே அவருக்கு பிடிக்கும்.” என்று ஆழினி கூற.
“இந்த அஞ்சு வருஷத்துல கொஞ்சம் கூட செழியன் அண்ணா மாறலையா. அவர் உன்கிட்ட நெருங்கி வர்றது போல தெரியலையா? நீ கொஞ்சம் அண்ணா கிட்ட மனசு விட்டு பேசு.”
“என்னது மனசு விட்டு பேசணுமா? முதல்ல பேசுறதுக்குக் கூட வாய்ப்பு கிடையாது . வீட்ல தான் பேச முடியலை, வெளியே எங்காவது போகலாம்னு பார்த்தா, அது எப்பவும் நடக்கவே நடக்காது. லோக்கல் எங்கேயாவது கிளம்புனா, ஒவ்வொரு ஆளா நானும் வரேன்னு எல்லோரும் கூட வருவாங்க. வெளியூருக்கு போகலாம்னு ப்ளான் போட்டா, ப்ளான் மட்டும் தான் ரெடியாகும். ப்ரோக்ராம் எப்பவும் போல கேன்ஸலாகிடும். எங்கத்தை தான் எனக்காக முயற்சி பண்ணிட்டே இருக்காங்க. “
“அவங்க அம்மாவுக்காவது அண்ணன் மாறலையா? இன்னும் வேணாம்னு போன ஒருத்திய நினைச்சிட்டு இருக்காரா? அந்த தனு மேல உள்ள கோபம் எல்லாம் குறைஞ்சிடுச்சா? ரெண்டு பேரும் பேசிப்பாங்களா? ”
“ப்ச்! ரெண்டு பேரும் பேசி நான் பார்த்ததில்லை. அவங்க அத்தை வீட்டுக்கு அவர் போக மாட்டார். தனுவும் இங்கே அவ்வளவா வர மாட்டா. ஆனால் தனுவோட பொண்ணு, இவர தான் டாடி டாடினு கூப்பிடுவா. இவரும் குழந்தை மேல ரொம்ப பிரியம்.
இப்ப என் குழந்தை மட்டும் உயிரோட இருந்துச்சுன்னா எனக்கு இந்த நிலைமை இருக்காது. “ என்றவள் அழ.
மதுராவோ, “அழாதே ஆழி. சீக்கிரமே இந்த நிலைமை மாறும்.” என்று சமாதானம் செய்து போனை வைத்தாள்.
கண்களைத் துடைத்தவாறு திரும்ப அங்கோ உணர்ச்சிகளை துடைத்த முகத்துடன் செழியன் நின்றிருந்தான்.
‘அச்சோ எப்பலேர்ந்து கேட்டாங்களோ தெரியலையே.’ என்று ஒரு நிமிடம் அதிர்ந்தவள், பிறகு தோளைக் குலுக்கிக் கொண்டாள்.’ எதுவா இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.’ என்று எண்ணியவாறே வெளியே செல்ல முயன்றாள்.
“ஈவினிங் ஹாஸ்பிடல் போயிட்டு வந்து கடைக்கு போகலாம்.” என்றான் செழியன்.
“இல்ல டைமாகிடும். நாளைக்குப் பார்த்துக்கலாம்.” என்றாள் ஆழினி.
“ எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை. நீ ரெடியா இரு. நம்ம கடை தானே. ஸ்டாப்ஸ் எல்லாரையும் இருக்க சொல்லிடுறேன்.
“இல்ல வேணாம்! அவங்களும் டயர்டா இருப்பாங்க. அவங்களை கஷ்டப்படுத்த வேண்டாம்.” என்று பிடிவாதமாக மறுத்தாள் ஆழினி.
“அவங்களுக்கு எக்ஸ்ட்ரா பேமெண்ட் கொடுத்துக்கலாம். நீ ரெடியா இரு.” என்றவன், கடைக்கு கிளம்பினான்.
பெருமூச்சு விட்டாவாறு அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
தனிமையில் அவளுக்குத் துணை பாட்டு தான். அவளது ஃபோனில் பாட்டை ஒலிக்கச் செய்து விட்டு அவளது வேலையை செய்ய ஆரம்பித்தாள்.
*****************
ஆழினியிடம் பேசிவிட்டு ஃபோனை வைத்த மதுராவின் மனம் கனத்துப் போனது. கண்களை மூடிக்கொண்டு அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளது போன் மீண்டும் ஒலித்தது. யார் என்று பார்த்தாள். அழைத்ததோ நித்ய மயூரி.
போனை எடுத்தவுடன்,
"என்னடி, போன் போட்டா கட் பண்ற?" என்று கேட்டாள் நித்ய மயூரி.
"அது ஆழினியோட பேசிட்டு இருந்தேன் டி."
"எதுக்கு காலையிலே மேடம் கால் பண்ணியிருக்காங்க? என்ன விஷயம்?"
"ஒன்னும் இல்ல டி. டைவர்ஸ் தான் கேட்குறா? அவளுக்கு இப்போ இருக்கிற பெரிய பிரச்சனை அதான். அவ அங்க ரொம்ப கஷ்டப்படுறா போல. அவளை மட்டும் சொல்லியும் குற்றமில்லை. அவளுக்குன்னு யாரும் அங்க இல்லன்னு நினைச்சு வருத்தப்படுறா."
"ஏன்? நாமெல்லாம் இல்லையா?"
"நாமெல்லாம் இருந்தாலும், அவளுக்கு தேவைப்பட்ட நேரத்துல கூட இல்லைலா. கொஞ்சம் கொஞ்சமா அவ இப்போ நம்மக் கிட்ட இருந்து கூட விலகிப் போயிட்டா. அவளோட குழந்தையாவது அவ கூட இருந்திருக்கலாம்..."
"குழந்தையா? என்னடி சொல்ற? அவளுக்கு குழந்தை பிறந்துச்சா? எங்ககிட்ட எங்க வீட்லக் கூட யாரும் ஒன்னும் சொல்லலையே!" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் நித்யமயூரி.
"அவ கன்சீவா இருந்தா டி."
"என்னடி சொல்ற? எப்போ?"
"கல்யாணம் ஆன அடுத்த மாதமே அவ பிரெக்னன்ட் ஆயிட்டா. ஆனா யார் கிட்டேயும் அவ அதை ஷேர் பண்ணல. அவ சொல்ல வரும்போது திடீர்னு உனக்கு கல்யாணம், குடும்பத்துல பிரச்சனைனு ஓடிட்டிருந்தது. அந்த டென்ஷன்ல அவ சொல்லவும் இல்ல. அதுக்கப்புறம் ஹாஸ்பிடலுக்கு போனா. ஆனால் அவ ஹெல்த் ரொம்ப வீக்கா இருக்குனு சொல்லி ரொம்ப கவனமா பார்த்துக்க சொன்னாங்க. பட் அது அபார்டாகிடுச்சு.” என்று மதுரா கூற.
"எனக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது டி..." என்று கூறியவளின் கண்கள் கலங்கின.
அதை உணர்ந்த மதுரா பேச்சை மாற்ற முயன்றாள்.
"சரி விடுடி... நீ எதுக்குப் ஃபோன் பண்ண?" என்று மெதுவாகக் கேட்டாள்.
"சும்மாதான் டி... பேசணும்னு தோணுச்சுனு போட்டேன். சரி நான் வைக்குறேன்." என்றுக் கூறி விட்டு ஃபோனை வைத்த நித்யமயூரி மனம் கனக்க பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள்.