• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 14

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-14

காலதேவனின் சக்கரம் வேகமாகச் சுழன்றதில் இரண்டரை வருடங்கள் மிக வேகமாகக் கடந்திருந்தது. அன்று, உயர்தரம்(ப்ளஸ் டூ) படித்த மாணவர்கள் பிரியாவிடை கொண்டாடக் காத்திருந்தனர்.

ஆர்ட்ஸ் பிரிவு மாணவியரின் கலை நிகழ்ச்சிகளின் பொறுப்பு மகேஸ்வரிக்கு வழங்கப் பட்டிருந்தது. தன் வகுப்பு மாணவியர் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காகப் பிரியாவிடை விழா நடப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரதான மண்டபத்துக்குச் சென்றார்.

அங்கே அவர் உள்நுழைகையில் எதிரே வந்த இலக்கியாவைக் கண்டவருக்கு அவளிடமிருந்து பார்வையை அகற்றவே முடியவில்லை.

மெல்லிய தங்கச் சரிகையிட்ட ரோஜாவண்ணச் சேலையில் நிஜ ரோஜாவாகவே நடந்து வந்துகொண்டு இருந்தவளின் கையில் பலவண்ண மலர்கள் கொண்ட பூங்கொத்து இருந்தது. மலர்ந்த முகமும், விரிந்த செம்பவளச் சிரிப்புமாக அழகிய மங்கையென இருந்தவளைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவருக்கு.

“எங்கே போகிறாய் இலக்கியா?” அவளுடன் பேசும் ஆவலில் அவர் பேச்சுக் கொடுக்க,

“அங்கே, வரவேற்பு மேசையில் வைக்கவேண்டிய மலர்கொத்து மிஸ் இது. திவ்யா அதை இங்கே கொண்டுவந்துவிட்டாள். அதுதான் இதை வைப்பதற்காகச் செல்கிறேன்.” என்றாள் அவள்.

“ஓ..” என்று கேட்டுக்கொண்டவர், “அப்போ பரீட்சை முடிந்ததும் மேலே படிக்கப் போகிறாயா அல்லது முன்னர்ச் சொன்னது போல வேலைக்குப் போகப் போகிறாயா?” என்று கேட்டார்.

“வேலைக்குத்தான் போகப் போகிறேன் மிஸ். எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் நர்சரியில் வேலை கிடைத்திருக்கிறது. நல்ல சம்பளமும்.” என்றாள் இலக்கியா மலர்ந்த முகத்துடன்.

அவளைப் பார்த்த மகேஸ்வரிக்கு விநோதமாக இருந்தது. ஓரளவுக்குப் படிக்கும் மாணவர்களுக்கே மேலே படித்து நல்லதொரு உத்தியோகத்துக்குச் செல்லவேண்டும் என்பதுதான் இலக்காக இருக்கும். இவளானால் வகுப்பிலேயே கெட்டிக்கார மாணவியாக இருந்தும், மேலே படித்தால் மிகவும் நல்ல நிலைக்கு வரலாம் என்று தெரிந்தும் படிப்பை விட்டுவிட்டு வேலைக்குப் போகிறேன் என்கிறாளே, அதுவும் சிரித்த முகத்துடன்.

“தொடர்ந்து படித்தாய் என்றால் இதைவிட நல்ல வேலையும் நல்ல சம்பளமும் கிடைக்குமே இலக்கியா.”

“மெய்தான் மிஸ். ஆனால், நான் படித்தால் தம்பிகள் மேலே படிப்பது சிரமம். அவர்களை நன்றாகப் படிக்கவைத்து, நல்ல வேலைக்கு அனுப்பவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.”

“நல்ல எண்ணம் தான். ஆனால், அதற்காக நீ உன் படிப்பை விடவேண்டும் என்று அவசியம் இல்லையே! அதுதான் சொன்னாயே, இப்போதெல்லாம் சந்தையில் உன் அப்பாவுக்கு வியாபாரம் நன்றாக நடப்பதாக. பிறகென்ன?” என்று கேட்டார் மகேஸ்வரி, அதற்கு அவர்தான் வழி செய்தார் என்பதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல்.

அன்று வீட்டில் சென்று நேரடியாகக் கேட்டும் இலக்கியாவின் குடும்பத்துக்கு உதவிசெய்யத் தர்சன் மறுத்துவிடவே, ராஜசேகரிடம் பேசி அதற்கு ஏற்பாடு செய்தார். அவர்களின் தோட்டத்தில் விளையும் பொருட்களை அன்றாட விற்பனைக்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் கந்தசாமிக்கு ராஜசேகர் கொடுத்தார். அதைச் சந்தைவிலைக்கு விற்றுக் காசாக்கினார் கந்தசாமி.

“பெரிய தம்பி உயர்தரத்தில்(ப்ளஸ் டூ) விஞ்ஞானம் எடுக்கப் போகிறானாம் மிஸ். சின்னத் தம்பி இனி சாதாரணதரம்(ப்ளஸ் வன்). அவர்கள் இருவரையும் டியுஷனுக்கு விடவேண்டும். நான் தொடர்ந்து படித்தால் அது முடியாது. அதோடு அம்மா அப்பாவும் பாவம் மிஸ். எனக்குத் தெரிந்த காலத்தில் இருந்து அவர்கள் பட்டது எல்லாம் கஷ்டம்தான். இனியாவது நான் அவர்களுக்கு உதவியாக இருக்கவேண்டும்.” என்றாள் இலக்கியா தெளிவான குரலில்.

இந்த இரண்டரை வருடகாலமாக மகேஸ்வரி காட்டிய கனிவிலும் அக்கறையிலும் அவரிடம் மனம் திறந்து பேசுமளவுக்கு வந்திருந்தாள் அவள். ஆனாலும், அவரிடமிருந்து எந்தவித உதவியையும் பெற்றதே இல்லை.

“உன்னுடைய அம்மா அப்பாவைப் பற்றியும் தம்பிகளைப் பற்றியும் நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், உன்னைப் பற்றி நீ யோசிக்கவில்லையா?”

புருவங்கள் சுருங்கக் கேள்வியாகப் பார்த்தாள் இலக்கியா. “என்னைப் பற்றி யோசிக்க என்ன மிஸ் இருக்கிறது?”

“இதென்ன கேள்வி இலக்கியா? உனக்கு இப்போது பத்தொன்பது வயதாகிறது. உன் எதிர்காலத்தைப் பற்றியும் நீ நினைக்கவேண்டும்.” என்றார் மகேஸ்வரி, அவளின் மனதை அறியும் விதமாக.

அவள் இதழ்களிலோ புன்னகை மலர்ந்தது. “என் எதிர்காலம் தம்பிகளின் படிப்புத்தான் மிஸ். மூத்தவன் டாக்டராகப் போகிறானாம். மற்றவனுக்கு இஞ்சினியரிங் படிக்க விருப்பமாம். அவர்களை அதைப் படிக்கவைக்க வேண்டும். ” என்றவளிடம், தன் எதிர்காலத்தைப் பற்றிய எந்தக் கலக்கத்தையும் காணோம்.

அவளை நினைத்துப் பெருமையாக இருந்தபோதும், இதெல்லாம் நடந்துமுடிய எவ்வளவு காலம் எடுக்கும், அதன்பிறகு அவளின் நிலை என்ன என்கிற யோசனையும் தோன்றாமல் இல்லை அவருக்கு.

அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல், “உன் திருமணத்தைப் பற்றி ஏதாவது முடிவு செய்திருக்கிறாயா இலக்கியா? அதாவது யாரையாவது மனதில் நினைத்திருக்கிறாயா?” என்று கூர் பார்வையுடன் கேட்டார் மகேஸ்வரி.

அவர் மனதில் இந்த இரண்டரை வருடங்களாக இருக்கும் ஒரு விஷயத்தை நடைமுறைப்படுத்த அந்தக் கேள்விக்கான பதில் அவருக்குத் தேவைப்பட்டது.

இலக்கியாவுக்கோ அவர் என்ன கேட்கிறார் என்றே புரியவில்லை. “மனதில் யாரையாவதா.. அப்படி என்றால்..” என்று இழுக்கையிலே புரிந்துவிட, தெளிவான புன்னகை ஒன்றைச் சிந்தினாள் அவள்.

“இல்லை மிஸ். என் மனதில் இருப்பதெல்லாம் என் தம்பிகளின் எதிர்கால வாழ்க்கை பற்றிய எண்ணம் தான். அது முடியும் வரைக்குமே என் மனதில் அதுமட்டும் தான் இருக்கும்!” என்றாள் உறுதியான குரலில்.

“அப்போ உனக்கு மேலே படிக்க விருப்பமே இல்லையா?”

“அது இருக்கிறதுதான் மிஸ். ஆனால், அதைவிட என் குடும்பத்தை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் அதிகமாக இருக்கிறது மிஸ்.” என்றவள் மகளாகக் கிடைத்ததில் அவளது பெற்றவர்கள் பெரும் தவம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டார் மகேஸ்வரி.

அடுத்தக் கட்டமாகத் தான் செய்யவேண்டியதை மனதில் கணித்தவர், “உன் விருப்பங்கள் எல்லாமே நிறைவேறும் இலக்கியா. அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் உனக்கு என்றுமே இருக்கும்!” என்று மனமார வாழ்த்திவிட்டுச் சென்றார்.

இரண்டு அறைகளையும், ஒரு விறாந்தையையும் கொண்ட அந்தச் சின்ன வீடு தென்னோலையினால் வேயப்பட்டு இருந்தது. அதற்குக் கொஞ்சம் தள்ளி சின்னக் குடில் போன்ற அமைப்பில் சமையல்கட்டு இருந்தது. பெரிதாக நிலப்பரப்பு இல்லாதபோதும், ஒருபக்கம் காய்கறிகள் நடப்பட்டிருக்க, இன்னொரு பக்கம் மா, வாழை, தென்னை, பலா மரங்கள் என்று அந்தத் தோட்டம் முழுவதுமே சோலையாகக் காட்சியளித்தது.

வீட்டு முற்றத்துக்கு அருகில் இருந்த பலாமரத்தில் ஊஞ்சல் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதில் அமர்ந்து மெதுவாகக் காலால் உந்தியபடி ஆடிக்கொண்டிருந்த அவன், சிறுவனும் அல்லாத இளைஞனும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட வயதில் இருந்தான். கையில் புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தான்.

அந்த வீட்டின் படலையருகில்(கிராமப்புறத்து வீடுகளின் கேட்) காரில் வந்திறங்கிய மஞ்சுளா, “இந்த வீடுதானா?” என்று மகேஸ்வரியிடம் விசாரித்தார்.

“இந்த வீடுதான் அண்ணி. எனக்கு நன்றாகத் தெரியும்.” என்றவர், அங்கு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தவனைக் காட்டி, “அவன் இலக்கியாவின் தம்பிதான். ஒருசில முறை அவளைக் கூட்டிக்கொண்டு போகப் பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்கிறான். அப்போது பார்த்திருக்கிறேன்.” என்றார்.

“அப்போ வா, உள்ளே போகலாம்.” என்றபடி, மஞ்சுளா படலையைத் திறக்க, அந்தச் சத்தத்தில் படித்துக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தான்.

யார் என்பதாகப் புருவங்களைச் சுருக்கியவன், மகேஸ்வரியை இனங்கண்டு, “மிஸ்..! நீங்களா? வாங்க மிஸ்..! நீங்களும் வாங்க மிஸ்.” என்று பரபரப்புடன் ஓடிவந்தவன், மகேஸ்வரியுடன் வந்ததால் மஞ்சுளாவையும் ஆசிரியை என்று நினைத்து இருவரையும் வரவேற்றான்.

“அவள்தான் ஆசிரியை. நான் அவள் அண்ணி.” மகேஸ்வரியைக் காட்டிப் புன்னகையோடு அவனிடம் சொன்னார் மஞ்சுளா.

“ஓ.. சரி மிஸ்.” அவர்களை அங்கே எதிர்பாராததில் உண்டான தடுமாற்றத்தில் மீண்டும் மஞ்சுளாவை மிஸ் என்றான் சுதன்.

புன்னகை விரிய, “என்னை ஆன்ட்டி என்று சொல்லப்பா..” என்றார் மஞ்சுளா.

“சரி ஆன்ட்டி, உள்ளே வாருங்கள்.”

“வீட்டில் வேறு யாரும் இல்லையா சுதன்? நீ மட்டும்தான் இருக்கிறாயா?” என்று கேட்டார் மகேஸ்வரி.

“அம்மா, தோட்டத்தில் இருக்கிறார் மிஸ். சந்தைக்குப் போன அப்பாவைக் கூட்டிக்கொண்டு வர அக்கா போய்விட்டாள். தம்பி டியுஷன் போயிருக்கிறான் மிஸ்.” என்று முழுக் குடும்பத்தின் விபரத்தையும் அவசராமகத் தெரிவித்தான் அவன்.

அதற்கிடையில் அவர்கள் வீட்டின் வாசலுக்கு வந்துவிட்டிருக்க, “உள்ளே வாருங்கள் மிஸ். ஆன்ட்டி, நீங்களும் வாருங்கள்.” என்று அழைத்தவன், ஒரு பாயை எடுத்து நிலத்தில் விரித்தான்.

“ஓ..! உன் அப்பாவும் அக்காவும் இந்தநேரம் வீட்டில் இருப்பார்கள் என்று நினைத்தேனே..” என்றபடி மகேஸ்வரி பாயில் அமர, மஞ்சுளாவும் அமர்ந்துகொண்டார்.

“அவர்கள் வருகிற நேரம்தான் மிஸ். நீங்கள் இருங்கள். நான் ஓடிப்போய் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்.” என்றவன், தோட்டத்துக்குள் தாயைத் தேடி விரைந்தான்.

“எளிமையாக இருந்தாலும் வீடும் தோட்டமும் துப்பரவாகத்தான் இருக்கிறது மகி.” என்றார் மஞ்சுளா திருப்தியோடு.

“இலக்கியாவும் அப்படித்தான் அண்ணி. அவளைப் பார்த்துவிட்டு நீங்களே சொல்வீர்கள் பாருங்கள். அவ்வளவு அழகும், அடக்கமும், பணிவும் நிறைந்த பெண். எனக்கு அவளைப் பார்த்த நொடியிலிருந்து நம் தர்சனுக்கு அவளை எப்படியாவது கட்டி வைத்துவிட வேண்டும் என்று ஒரே ஆசை.” என்றவர், “ஓடிப்போனவளே கணவன் குழந்தை என்று வாழ, அவன் மட்டும் எதற்காகத் தனியாக இருக்கவேண்டும்.” என்றார் ஒருவிதக் கோபத்துடன்.

கொழும்பிலிருக்கும் தன்னுடைய சக ஆசிரியத் தோழிகளின் மூலம் வெண்பாவைப் பற்றி அறிந்துதான் வைத்திருந்தார் மகேஸ்வரி. அவளுக்கு ஒரு மகள் இருப்பதாகவும், இப்போது ஏதோ வேலைக்கு அவளும் போவதாகவும். ஆனாலும் அவளைச் சென்றுபார்க்க பிரியப்படவே இல்லை அவர்.
 
Last edited by a moderator:

மகேஸ்வரியின் வெண்பா பற்றிய பேச்சுக்கு எந்தப் பதிலும் சொல்லாதபோதும், “என் பிள்ளையும் குடும்பம் குட்டி என்று சந்தோசமாக வாழவேண்டும் மகி. அதுமட்டும் தான் இப்போதெல்லாம் என் வேண்டுதல்.“ என்றார் மஞ்சுளா.

அப்போது அரக்கப்பரக்க ஓடிவந்தார் இலக்கியாவின் தாயார். கைகால்களை அவசரமாக அலம்பியிருக்கிறார் என்பது நனைந்திருந்த கைகால்களின் மூலம் தெரிந்தது. மெல்லிய தேகம், நைட்டி அணிந்திருந்தார். வெயிலில் நிற்பதால் கருத்து வாடியிருந்த முகத்தில் பூத்திருந்த வியர்வை அவரது தொழிலின் கடினத்தைப் பறைசாற்ற, அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“வாருங்கள் வாருங்கள்... இவரும் லக்கியும் இப்போ வந்துவிடுவார்கள். என்ன குடிக்கிறீர்கள்?” என்று உபசரித்தார்.

“எங்களுக்கு ஒன்றும் வேண்டாம். நீங்கள் முதலில் இப்படி அமருங்கள். களைத்துத் தெரிகிறீர்கள்.” என்றார் மஞ்சுளா.

ஏனோ அவருக்கு இலக்கியாவின் தாயை மிகவும் பிடித்திருந்தது. நடக்க முடியாத கணவனையும் வைத்துக்கொண்டு, தன்னால் முடிந்த வேலைகளைச் செய்து மூன்று பிள்ளைகளை ஆளாக்குவது என்பது சாதாரணக் காரியம் அல்லவே!

“இதென்ன கதை? வீட்டுக்கு வந்தவர்கள் ஒன்றும் குடிக்காமல் இருப்பதா? பொறுங்கள் வருகிறேன்..” என்றபடி, அந்த வீட்டிலிருந்து தனியாக இருந்த சமையல்கட்டுக்குச் சென்று வெகு விரைவாகவே பழரசத்துடன் திரும்பினார்.
 
Vishakini

Moderator
Staff member
“எங்கள் தோட்டத்துப் பழங்களில் செய்தது. அருந்துங்கள்.” என்று பழரசத்தை அவர் நீட்ட, வாங்கிக்கொண்டார்கள் இருவரும்.

திடீரென்று ஏன் வந்திருக்கிறார்கள் என்கிற கேள்வியும் யோசனையும் மனதில் இருந்தாலும், நாகரீகம் கருதி அதைக் கேட்காமல் அவர்களாகச் சொல்லட்டும் என்று காத்திருந்தார் சந்திரா- இலக்கியாவின் அம்மா.

அதை அவர் முகத்திலேயே படித்தாரோ என்னவோ, “ஒரு நல்லவிசயம் பேசத்தான் வந்திருக்கிறோம். உங்கள் கணவரும் வந்துவிடட்டுமே என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார் மஞ்சுளா.

அப்போது ஆட்டோ ஒன்றின் சத்தம் கேட்கவே, “அக்காவும் அப்பாவும் வந்துவிட்டார்கள்..” என்றபடி வெளியே விரைந்தான் சுதன். அவனுக்குப் பின்னாலேயே சந்திராவும் சென்றார்.

சற்று நேரத்திலேயே மூவருமாகச் சேர்ந்து கந்தசாமியை தூக்கிக்கொண்டு வந்தனர். முழங்காலுக்குக் கீழே தொய்ந்து தொங்கிக்கொண்டிருந்த கால்கள் அவரது நிலையை உணர்த்த இரு பெண்மணிகளுக்கும் மனம் கனத்துப் போனது.

என்ன சொல்வது என்று அறியாமல் வாய்மூடி அவர்கள் இருக்க, “வாருங்கள்..” என்று வரவேற்ற கந்தசாமியை, அந்தச் சிறிய வராண்டாவில் ஓரிடத்தில் இருக்க வைத்தனர் அவரின் மனைவி பிள்ளைகள்.

தந்தை அமர்ந்ததும், “வந்து நிறைய நேரமா மிஸ்..” என்று கேட்டபடி மகேஸ்வரியின் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள் இலக்கியா.

“இப்போதுதான் வந்தோம் இலக்கியா. அதுசரி, உன் வேலை எப்படிப் போகிறது? உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று விசாரித்தார் மகேஸ்வரி.

“ஓ..! வேலை எனக்கு மிகவுமே பிடித்திருக்கிறது மிஸ். குட்டிக் குட்டிக் குழந்தைகளுடன் விளையாடுவதும், சிரிப்பதும், அவர்களின் சண்டைகளைத் தீர்த்து வைப்பதும் என்று நினைத்தாலே எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது.” என்று விழிகள் பளிச்சிட, முத்துப் பற்கள் பளீரிட புன்னகை சிந்திய முகத்துடன் பேசியவளைப் பார்த்து ரசித்தார் மஞ்சுளா. அவளை அந்த நிமிடமே தன் மகனுக்கு மனைவியாக்கிவிடும் ஆசை எழுந்தது அவருக்குள்.

தன்னையே விழியகற்றாது பார்க்கும் மஞ்சுளாவைப் பார்த்து மெல்லிய கூச்சத்துடன் புன்னகைத்தாள் இலக்கியா.

அவளின் பார்வையை உணர்ந்து, “இவர் என் அண்ணி இலக்கியா.” என்று மஞ்சுளாவை மகேஸ்வரி அறிமுகப்படுத்த, வெளியே ஒன்றும் சொல்லாதபோதும், ‘அந்தப் பிரியதர்சனின் அன்னை’ என்று நினைத்துக்கொண்டாள் அவள்.

“இங்கே, என் அருகில் வாம்மா..” என்று வாஞ்சையோடு மஞ்சுளா அழைக்க, மகேஸ்வரியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவரின் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள் இலக்கியா.

அவளின் தலையை ஆசையோடு வருடிய மஞ்சுளா, “இவளை என் வீட்டுக்கு மருமகளாகத் தந்துவிடுகிறீர்களா?” என்று தன் மனதின் ஆவலையும் ஆசையையும் அடக்க முடியாது, எந்தச் சுற்றிவளைப்பும் இன்றிக் கந்தசாமியையும் சந்திராவையும் பார்த்துக் கேட்டுவிட்டார்.

அந்த வீட்டில் இருந்த அனைவருமே அதிர்ந்துதான் போயினர். அவர்கள் சற்றுமே எதிர்பாராத விஷயம். இலக்கியாவின் விழிகளோ தெறித்துவிடுமோ என்கிற அளவுக்கு அதிர்ச்சியோடு விரிந்தது.

அவளை உணர்ந்தவராக, “இதை நீ எதிர்பார்த்திருக்க மாட்டாய் என்று தெரியும். நீ பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் உன்னைப்பற்றித் தினமும் மகி வீட்டுக்கு வந்து சொல்வாள். அவள் சொல்வதைக் கேட்டுக்கேட்டே எனக்கு உன்னை நிரம்பவும் பிடித்துப் போய்விட்டது. இப்போ நேரில் பார்த்ததும் இன்னமும் பிடித்துவிட்டது. அப்படியே கோவிலில் இருக்கும் தங்க விக்கிரகம் மாதிரியே இருக்கிறாய். என் வீட்டுக்கு கடைசி மருமகளாக வா. உன்னை என் மகளைப் போன்று நான் பார்த்துக்கொள்வேன்.” என்றார் மஞ்சுளா இலக்கியாவிடம்.

திருமணத்தைப் பற்றி அவள் சிந்தித்தது இல்லைதான். ஆனால், அப்படி ஒன்று நடந்தால் ஒழுக்கச் சீலனான, அவளை மட்டுமே உலகமாக நினைக்கும் ஒருவனுடன் எளிமையான இனிமையான வாழ்க்கையை மட்டுமே எதிர்பார்த்தாள்.

இப்படி இரண்டாம் தாரமாகவா? நினைக்கவே கசந்தது..

அதிர்ச்சியில் அவள் உறைந்து நிற்க, “திடீரென்று நாங்கள் வந்து கேட்பதால் உங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்று தெரியும். ஆனால், நாங்களோ இவளின் பரீட்சை முடியட்டும் என்று இரண்டு வருடமாகக் காத்திருந்தோம். இனியும் காத்திருக்கப் பொறுமை இல்லாமல் வந்துவிட்டோம். என்றாலும் நீங்கள் நன்றாக யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்.” என்றார் மஞ்சுளா இலக்கியாவின் பெற்றோரிடம்.

அவர்களுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. “அவளுக்கு இப்போதுதான் பத்தொன்பது வயது. அதோடு திருமணத்தைப் பற்றி நாங்கள் இன்னும் யோசிக்கவில்லை.” என்று மெல்ல இழுத்தார் சந்திரா.

“பத்தொன்பது என்பது கல்யாணம் செய்துகொள்ளும் வயதுதானே. எங்கள் மகனுக்கு இருபத்தியெட்டரை ஆகிறது.” என்றவர், “அவள் வேலைக்குச் செல்வதால் உங்கள் குடும்பத்துக்கு உதவியாக இருக்கிறாள் என்றும் தெரியும். என் மகனுடன் திருமணம் நடந்தால், அவள் என்னவெல்லாம் செய்வாளோ அதற்கும் மேலாக உங்கள் குடும்பத்துக்கு அவன் செய்வான். அவள் தம்பிகளின் படிப்பு முதல்கொண்டு, அண்ணாவின் உடல்நிலைக்கும் வைத்தியம் பார்க்கலாம். இதையெல்லாம் எங்கள் மகனாக அல்ல உங்கள் மருமகனாகச் செய்வான்.” என்றார் தொடர்ந்து.

“அவளின் சம்பளம் வீட்டுக்கு உதவியாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதும் உண்மையே! அதனால் அவள் திருமணமாகிப் போகும் வீட்டிலிருந்து, அது எந்த வீடாக இருந்தாலும் எந்தவித உதவியையும் நாங்கள் எதிர்பார்க்க மாட்டோம்!” என்றார் கந்தசாமி உறுதியான குரலில்.

“அது எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் அண்ணா. மகி இலக்கியாவைப் பற்றி எல்லாமே சொல்லியிருக்கிறாள். அவளே அப்படி என்றால் அவளை வளர்த்த நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று தெரியாமல் இல்லை. அதேபோல நீங்கள் உதவியை எதிர்பார்க்கிறீர்கள் என்று நானும் சொல்லவில்லை. அதற்கு ஒரு வழியிருந்தால் அவளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பதற்கு உங்களுக்கு இலகுவாக இருக்குமே என்றுதான் சொன்னேன்.” என்றவர் ஒருகணம் தயங்கி,
 
Vishakini

Moderator
Staff member
“எங்கள் மகனின் வாழ்க்கையிலும் சில பிசகுகள் நடந்திருக்கிறது அண்ணா. எல்லாவற்றையுமே சொல்கிறேன். அதையெல்லாம் கேட்டுவிட்டு, அதன்பிறகும் உங்களுக்கு எங்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ளப் பிடித்திருந்தால் நான்கு பேரிடம் விசாரித்துவிட்டு உங்கள் முடிவைச் சொல்லுங்கள்.” என்ற மஞ்சுளா, தர்சன் வெண்பா கழுத்தில் திடீரென்று தாலி கட்டியதையும், மூன்றுமாதம் அமைதியாக வீட்டில் இருந்தவள் எனக்கு இன்னொருவனைத்தான் பிடித்திருக்கிறது என்று எழுதி வைத்துவிட்டு ஓடியதையும் சொன்னார்.

அதைக்கேட்ட இலக்கியாவுக்கோ அருவருப்பில் உடலும் உள்ளமும் கூசியது. ஏற்கனவே மூன்றுமாதம் ஒருத்தியுடன் வாழ்ந்தவனுடன் அவளுக்குத் திருமணமா? அதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அவளால்.

அவளின் பெற்றவர்களின் முகங்களிலோ கலவையான உணர்வுகள். “முதலே ஓரளவுக்குக் கேள்விப்பட்டோம் தான். உங்கள் மகனின் நிலையை எண்ணிக் கவலையாக இருந்தாலும், எங்கள் மகளை இரண்டாம் தாரமாகக் கொடுப்பதா என்று இருக்கிறது..” என்று யோசனையோடு சொன்னார் கந்தசாமி.

அதுவரை மூச்சடைக்க அமர்ந்திருந்த இலக்கியா, அப்பாவுக்கும் பிடிக்கவில்லை என்று தெரிந்ததும்தான் சற்று ஆசுவாசமாக உணர்ந்தாள்.

மஞ்சுளாவுக்கு இரண்டாம் தாரம் என்ற சொல்லிலேயே அழுகை வந்துவிடும் போலிருந்தது. அந்தளவுக்கு அவர் மகனின் நிலை தாழ்ந்து போனதா என்று நெஞ்சம் தவித்தாலும், “அப்படிச் சொல்லாதீர்கள் அண்ணா. தாலியை மட்டும்தான் அவசரப்பட்டுக் கட்டினான். அதுவும் எங்கள் முன்னிலையில் தான். அந்தத் திருமணத்தைப் பதியவும் இல்லை. ஊருக்கு அரசல் புரசலாகத் தெரியுமே தவிர ஊரைக்கூட்டி நாங்கள் எதுவுமே செய்யவில்லை. அதனால், முறைப்படியும் சட்டப்படியும் நடக்கப்போகும் திருமணம் இதுதான்.” என்றார் வேகமாக.

அவர்கள் அப்போதும் யோசனையோடு இருப்பதைப் பார்த்துவிட்டு மகேஸ்வரி பேசினார். “அவளைப் பெற்றவள் நான் சொல்கிறேன் அண்ணா. என் மகள்தான் தப்புச் செய்தவள். அவன் பத்தரைமாற்றுத் தங்கம். என் மகளை ஆசைப்பட்டதைத் தவிர வேறு எந்தப் பிழையுமே அவன் செய்யவில்லை. எனக்குக் கணவர் இல்லை. மகள் மட்டுமே உலகம் என்று அவளுக்காகவே வாழ்ந்தவள் நான். அப்படியான நானே என் மகள் இருக்குமிடம் தெரிந்தும் இந்த இரண்டரை வருடங்களாக அவளோடு கதைக்கவும் இல்லை. அவளைப் போய்ப் பார்க்கவும் இல்லை. காரணம், அவள் செய்தது பெரும் தவறு, துரோகம். என் மருமகன் எந்தப் பிழையுமே செய்யாதவன். அதனால் இதை ஒரு விசயமாக நினைத்து அவனை வேண்டாம் என்று சொல்லிவிடாதீர்கள். உங்கள் மகளுக்குக் கிடைக்கவிருக்கும் நல்ல வாழ்க்கையைக் கெடுத்து விடாதீர்கள். எங்கள் வீட்டைப் பற்றி நீங்களே ஊருக்குள் விசாரித்துப் பார்த்துவிட்டு, அதன்பிறகு சொல்லுங்கள்.” என்றார் மகேஸ்வரி.

“ராஜசேகர் குடும்பம் என்றாலே ஊருக்குள் மதிப்புத்தான். அது எனக்கு நன்றாகவே தெரியும். உங்கள் மூன்று பிள்ளைகளும் நல்ல பிள்ளைகள் என்று கேள்விப்பட்டும் இருக்கிறேன், அவர்களைப் பார்த்தும் இருக்கிறேன்..” என்றார் கந்தசாமி.

மஞ்சுளாவின் நெஞ்சு பெருமிதத்தால் விம்மியது. இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு தாயாக அவருக்கு?

“பிறகு என்ன அண்ணா? சம்மதம் என்று சொல்லுங்கள்.” என்று உரிமையோடு கேட்டார்.

“நான் எதற்கும் வீட்டில் எல்லோரோடும் கலந்து பேசிவிட்டுச் சொல்கிறேனே.” என்றார் அவர் அப்போதும் பிடிகொடுக்காமல்.

முகம் வாடினாலும், “சரியண்ணா. உங்களுடைய நல்ல பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். முடிந்தவரை விரைவாகச் சொல்லுங்கள். நீங்கள் சம்மதித்தால் இவளை இன்றே என் மருமகளாக வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்விடுவேன்.” என்று சொன்ன மஞ்சுளா, மனம் தாங்காமல் தன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி ஒன்றை கழட்டி அவள் கழுத்தில் போட்டுவிட்டார்.

நொடியில் அது நடந்துவிட, சற்றே அதிர்ந்து போயினர் இலக்கியா குடும்பத்தினர்.

மறைமுகமாக அவர்களின் சம்மந்தத்தை மறுக்கமுடியாத நிலையில் நிறுத்த முயல்கிறாரோ என்று எண்ணிய கந்தசாமி, “இல்லையம்மா. இதெல்லாம் வேண்டாம். நீங்கள் அதைத் திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள்.” என்றார் சற்று அழுத்தமான குரலில்.

இலக்கியாவும் அதைக் கழட்டப்போக, “உன் கழுத்திலேயே இருக்கட்டும். கழட்டாதே.” என்ற மஞ்சுளா, பாயிலிருந்து எழுந்தார்.

“உங்களை மறைமுகமாகக் கட்டாயபடுத்தவோ அல்லது மறுக்க முடியாத இடத்தில் நிறுத்தவோ இதை நான் அவளுக்குப் போடவில்லை. என் மகளாக நினைத்துத்தான், பாசத்தோடுதான் அதைப் போட்டுவிட்டேன். இந்தச் சங்கிலிக்கும் நாங்கள் பேசிய திருமணப் பேச்சுக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. மறுக்காதீர்கள்.” என்று அவர் சொன்னபோது, அவர் முகத்திலும் பேச்சிலும் இருந்த மெய்யான அன்பில் அதற்கு மேலும் மறுக்க முடியவில்லை அவர்களால்.

என்றாலும், “நீங்கள் காட்டும் அன்பே போதும். எதற்கு நகை நட்டெல்லாம்..” என்று இழுத்தார் சந்திரா.

“பரவாயில்லை. அவளும் எனக்கு ஒரு மகள் மாதிரித்தான்.” என்றவர், “அப்போ நாங்கள் வருகிறோம். உங்களின் பதிலை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.” என்றவர், எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு மகேஸ்வரியுடன் புறப்பட்டார்.
 
Top Bottom