இன்னுயிராவாய் என்னுயிரே - 16

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
அத்தியாயம்-16

தன் முன்னால் நின்ற இலக்கியாவை நிற்பது அவள்தானா என்று நம்பமுடியாமல் விழிகளை விரித்துப் பார்த்தாள் தீபா.

தீபாவின் வீடும் இலக்கியாவின் வீடும் ஒரே தெருவில் இருந்தும், சிறுவயது முதலே தோழிகளாக இருந்தும் வீட்டுக்கு வாடி என்று தீபா எவ்வளவோ வற்புறுத்தினாலும் வராத இலக்கியா அன்று திடீரென்று அவளின் வீட்டுக்கு, அதுவும் அவளின் அறைக்கே வந்து நிற்பதைக்கண்டு ஆனந்தமாக அதிர்ந்துதான் போனாள் தீபா.

“என்னடி அதிசயம் இது? என் வீட்டுக்கெல்லாம் நீ வரமாட்டாயே?” என்று குதூகலமும் கேலியுமாக ஆரம்பித்தவள், வாடியிருந்த முகமும் இதோ இதோ என்று அழத்துடித்த விழிகளுமாக நின்றவளை அப்போதுதான் கவனித்து, “ஏன்டி ஒருமாதிரி இருக்கிறாய்?” என்று விசாரித்தாள்.

அதற்குப் பதில் சொல்லக்கூடத் திராணி அற்றவளாய் தொப்பென்று கட்டிலில் அமர்ந்தவள் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு விசும்பினாள்.

“ஹேய் லக்கி, என்னடி? ஏன் அழுகிறாய்?” என்று பதறினாள் தோழி.

அதுநாள்வரை இலக்கியா அழுது அவள் பார்த்ததில்லை. அதோடு அவநம்பிக்கையான ஒரு பேச்சு அவள் வாயிலிருந்து வராது. கொஞ்சம் பயந்த சுபாவம். அதுவும் புதிய நபர்களிடம் மட்டுமே!

அப்படியானவள் எதற்கு இப்படி அழவேண்டும்?

“அழாமல் என்ன பிரச்சினை என்று முதலில் சொல்லு லக்கி..” என்று எவ்வளவோ கேட்டும் எதுவும் சொல்லாமல் தொடர்ந்து அழுதவளை எப்படித் தேற்றுவது என்று தெரியாது சிலகணங்கள் அமைதியாக இருந்தாள் தீபா.

அவளாகவே சொல்லட்டும் என்று எண்ணியவளாக அவள் முதுகை ஆறுதலாகத் தடவிக்கொடுத்தாள்.

அந்த வருடல் கொடுத்த இதத்தினாலா அல்லது இப்படி அழுது பழக்கம் இல்லாததினாலா சற்று நேரத்திலேயே இலக்கியாவின் அழுகை மட்டுப்பட்டது.

“என் அறையை உன் கண்ணீரால் கழுவியது போதும். இந்தா, இதை முதலில் குடி!” என்று மெலிதாக அதட்டியபடி, தண்ணீரை எடுத்து நீட்டினாள் தீபா.

தன் இரண்டு கைகளாலும் கண்களையும் கன்னங்களையும் துடைத்துக்கொண்டு அதை வாங்கிப் பருகினாள் இலக்கியா.

“இப்போது சொல்லு, என்ன பிரச்சினை? எதற்கு இந்த அழுகை?”

“வீட்டில் எனக்குத் திருமணம் பேசுகிறார்கள்..”

தம்பிகள் குறித்த இலக்கியாவின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி அறிந்திருந்த தீபாவுக்கு அவளின் மனநிலை புரிந்தாலும், அதற்காக இப்படி அழவேண்டுமா என்று எண்ணினாள்.

“மாப்பிள்ளை யார்?”

“அந்தப் பிரியதர்சன்.” என்றாள் கசப்பும் வெறுப்புமாக.

“யாருடி அது?” என்று யோசனையோடு கேட்கையிலேயே புரிந்துவிட, “யார்.. நம் மகி மிஸ்ஸின் அண்ணன் மகன்.. அவரா?” என்று அதிர்ச்சியோடு கேட்டாள் தீபா.

இலக்கியா ஆமென்பதாகத் தலையை அசைக்கவும், “என்னடி சொல்கிறாய்?” என்று கேட்ட தீபாவுக்கு அவளின் அழுகைக்கான காரணம் இப்போது புரிந்தது.

அன்று திவ்யா அவனைக் காதலிப்பதாகச் சொன்னதையே ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபப்பட்டவளுக்கு அவனே மாப்பிள்ளை என்றால்?

இரண்டாம் தாரம் என்பது குற்றச் செயலோ, செய்யவே கூடாத செயலோ அல்லதான்! கண்ணிய கேடான விசயமும் அல்லதான்! எல்லோருமே தங்களை மட்டுமே நினைக்கும் ஒருவர்தான் துணையாக வரவேண்டும் என்று எதிர்பார்த்தால், துணைகளை இழந்தவர்களின் அல்லது பிரிந்தவர்களின் நிலை என்ன? அவர்களும் வாழத்தானே வேண்டும்!

ஆனால், அப்படி ஒருவரை மணக்க எல்லோராலும் முடிவது இல்லையே! வாழ்க்கைத் துணையாக வருபவர் கறை படாதவராக இருக்கவேண்டும் என்பதும் நியாயமான ஆசைதானே! அதில் தப்பில்லையே!

அதுவும் இலக்கியாவைப் போன்ற ஒருத்தியால் அதைக் கற்பனையில் கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்துகொண்டாள் தீபா.

“இது எப்போது நடந்தது?” ஒருவழியாகத் தன் அதிர்ச்சியைச் சமாளித்துக்கொண்டு கேட்டாள் தீபா.

“நேற்று முன்தினம்..” என்றவள், மகேஸ்வரியும் மஞ்சுளாவும் வந்து பெண் கேட்டதைச் சொன்னாள்.

“பிறகு என்னடி? அதுதான் உன் அப்பா சொல்லியிருக்கிறாரே உன்னிடம் கேட்டுவிட்டுச் சொல்வதாக. உனக்கு இதில் விருப்பம் இல்லை என்று நீ சொல்வதுதானே..” என்றாள் தீபா.

“சொல்லாமல் எங்கே? எல்லாம் சொல்லியாயிற்று. அப்பா என் விருப்பம்தான் கடைசி முடிவு என்றார். அம்மாதான், உன் வாழ்க்கையைக் கெடுத்து தம்பி தங்கைகளை நன்றாக வைப்பதற்குப் பதிலாக இந்தத் திருமணத்துக்குச் சம்மதித்தால் நீயும் சந்தோசமாக இருப்பாய் நம் குடும்பமும் நன்றாக இருக்கும் என்கிறார்.”

“அவர் சொல்வதிலும் பிழை இல்லையே லக்கி.” என்றாள் தீபா மெதுவாக.

“என்னடி நீயும் இப்படிச் சொல்கிறாய்? வேலைக்குப் போனால் என் வாழ்க்கை கெடுவதாக அர்த்தமா? என் குடும்பத்துக்காக நான் உழைப்பதில் என்ன தவறு? அதை நான் சுமையாகவோ கஷ்டமாகவோ நினைக்கவே இல்லையேடி. இப்போது மட்டும் என் சந்தோசத்துக்கு என்ன குறை? நன்றாகத்தானே இருக்கிறேன்.”

“நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், நன்றாக வாழ்வதற்கு ஒரு வழி இருக்கையில் வீணாக எதற்குக் கஷ்டப் படுவான் என்று ஆன்ட்டி நினைத்திருக்கலாம். அதோடு அவர்களும் நல்ல குடும்பம், அவர்களாகத்தானே உன்னைப் பெண் கேட்டும் வந்தார்கள். நாமாகச் செல்லவில்லையே என்றும் நினைத்திருப்பார்கள். அதுவும் தப்பில்லையே.” என்றாள் தீபா.

“அது தப்பில்லை என்று எப்படிச் சொல்கிறாய் தீபா? அவர்களாகக் கேட்டார்கள் என்பதற்காகப் பணத்துக்காக ஒருவரைத் திருமணம் செய்யலாமா? அப்படிச் செய்தால் என்மேல் எனக்கே மரியாதை இருக்காதே. என்னை நானே இழிவு படுத்துவது போலாகிவிடுமே! அந்தளவுக்குக் கீழிறங்கிப் போகத்தான் வேண்டுமா தீபா?” என்று கண்ணீரோடு சொன்னவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது தீபாவுக்கு.

“முதலில் நீ ஒன்றை நன்றாகப் புரிந்துகொள் லக்கி. இங்கே யாரும் பணத்துக்காக இந்தத் திருமணத்தை நடத்த நினைக்கவில்லை. அவர்களுக்கு நீ நல்ல பெண்ணாகத் தெரிகிறாய். உன் அப்பா அம்மாவுக்கு அவர் நல்ல மாப்பிள்ளையாகத் தெரிகிறார். கூடுதலாகப் பண வசதியும் இருக்கிறது. அவ்வளவுதான்! இதைப் புரிந்துகொள்ளாமல் கண்டதையும் உளறாதே! ” என்றவள், அப்போதும் முகத்தில் மறுப்பைத் தேக்கியபடி இருந்த தோழியைப் பார்த்துவிட்டு தொடர்ந்தாள்.

“உன் அம்மாவைப் பற்றி நான் உனக்குச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை லக்கி. அவர் பணத்தைப் பெரிதாக நினைப்பவரா? உன்னைச் சுமையாக நினைப்பவரா என்று நீயே யோசித்துக்கொள். வாழ்க்கை பூராக மண்வெட்டியும் தோட்டமும் என்று வெயிலில் கிடந்தே கஷ்டப்பட்ட அவர் தன் மகளும் இதே கஷ்டத்தை அனுபவிக்கக் கூடாது என்று நினைத்திருக்கலாம். அவர்களாகவே உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்ப்பதாக இருந்தாலும் இப்படி ஒரு வசதியான வீட்டில் பார்க்கத்தான் முடியுமா சொல்லு. இல்லையே! தானாகத் தேடிவந்த நல்ல வாழ்க்கையை ஏன் விடுவான் என்று நினைத்திருக்கலாம்.” என்றாள்

“அம்மாவை நான் குற்றம் சொல்லவில்லை தீபா. ஆனால், ஏற்கனவே ஒருத்தியை காதலித்து அவளுடன் வாழ்ந்தவனை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்வதற்குப் பதிலாகக் காலம் பூராகவும் நான் கன்னியாக இருந்துவிடுவேன். ஏழை வீட்டில் பெண்ணாகப் பிறந்தேன் என்பதற்காக எனக்கு என்று ஒரு மனம் இருக்காதாடி? அதில் ஆசைகள், கனவுகள், எதிர்பார்ப்புகள் என்று எதுவுமே இருக்காதா? ஏன்டி அம்மா என் மனதை விளங்கிக்கொள்கிறார் இல்லை?”

அவளின் கேள்விகள் நெஞ்சைப் பிசைந்தாலும், “அப்படிச் சொல்லாதே லக்கி. நம் அம்மாக்களை விட நம்மை அதிகமாகப் புரிந்துகொண்டவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அவர்கள் செய்வது எல்லாமே நமது நன்மைக்காகத்தான் இருக்கும்.” என்றாள் தீபா.

“இதில் என் நன்மை என்ன இருக்கிறது தீபா? பணத்துக்கோ, நகை நட்டுக்கோ நான் ஆசைப்பட்டதே இல்லையேடி. மற்றவர்கள் மாதிரி பகட்டாக வாழவும் நினைக்கவில்லையே. பிறகு என்ன நன்மை வர இருக்கிறது எனக்கு? நான் ஆசைப்பட்டது எல்லாம் என்னை மட்டுமே நேசிக்கும் ஒருவனைத்தானே. அது அவ்வளவு பெரிய பேராசையா? அதனால்தான் அது நடக்காதா?” என்று, முகத்தில் ஏக்கத்தைத் தேக்கிக் கேட்டவளை, வேதனை தாங்க முடியாமல் கட்டிக்கொண்டாள் தீபா.

“கவலைப்படாதே லக்கி. உன் நல்ல மனதுக்கு நடப்பது எல்லாமே நன்றாகத்தான் நடக்கும். அதனால், உன்னைப் பற்றி மட்டும் யோசிக்காமல் உன் தம்பிகளைப் பற்றியும் அம்மா அப்பா பற்றியும் சேர்த்து யோசிடி.” என்றாள் ஆறுதலாக.

“அவர்களைப் பற்றி யோசிக்காமல் என்னடி? என் நினைவு எல்லாமே அவர்களைச் சுற்றித்தானே.” என்ற தோழியையே சற்று நேரம் பார்த்துவிட்டு,

“அவரைக் கட்டிக்கொள்ள உனக்கு விருப்பமே இல்லையா லக்கி?” என்று இதமான குரலில் கேட்டாள் தீபா.

விழிகள் கலங்க, மறுப்பாகத் தலையை அசைத்தாள் இலக்கியா.

“எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவே இல்லை. பிடிவாதமாகச் சொன்னால் அம்மா அப்பாவும் விட்டுவிடுவார்கள் தான். ஆனால்..” என்று இழுத்தவள், “அவர்களின் எதிர்பார்ப்பு நிறைந்த முகத்தைப் பார்த்து என்னால்தான் சொல்ல முடியவில்லை.” என்றாள் கண்ணீரோடு.

அதற்கு மேலும் தோழி மனதால் அனுபவிக்கும் வேதனையைத் தாளமுடியாது, “இப்போ என்னடி? உனக்கு இந்தத் திருமணம் வேண்டாம். அவ்வளவுதானே. இதை அந்தப் பிரியதர்சனிடமே சொன்னால் என்ன?” என்று கேட்டாள் தீபா.

“அப்படிச் சொன்னால்?” விழிகளில் எதிர்பார்ப்பு மின்னக் கேட்டவளிடம்,

“அவராகவே திருமணத்தை நிறுத்திவிடுவார் என்று நினைக்கிறேன்.” என்றாள் தீபா.

சட்டென முகம் மலர, “அவராக நிறுத்திவிட்டால் எல்லாப் பிரச்சினையுமே தீர்ந்துவிடும். நான் அம்மா அப்பாவின் மனதை நோகடிக்க வேண்டியிராது. ஆனால், செய்வாரா?” என்று கேட்டாள் லக்கி.

“உனக்கு அவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரும் வேறு என்னதான் செய்ய முடியும். பெண்களை, அவர்களின் மனதை மதிப்பவராக இருந்தால் நிறுத்துவார் என்றுதான் நினைக்கிறேன்.”

“ஓ..” என்று உள்வாங்கிக் கொண்டவள், “அவரிடம் இதை எப்படிச் சொல்வது?” என்று கேட்டாள்.
 
Last edited by a moderator:

Author: Vishakini
Article Title: இன்னுயிராவாய் என்னுயிரே - 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
“முதலில் நீ ஒன்றை நன்றாகப் புரிந்துகொள் லக்கி. இங்கே யாரும் பணத்துக்காக இந்தத் திருமணத்தை நடத்த நினைக்கவில்லை. அவர்களுக்கு நீ நல்ல பெண்ணாகத் தெரிகிறாய். உன் அப்பா அம்மாவுக்கு அவர் நல்ல மாப்பிள்ளையாகத் தெரிகிறார். கூடுதலாகப் பண வசதியும் இருக்கிறது. அவ்வளவுதான்! இதைப் புரிந்துகொள்ளாமல் கண்டதையும் உளறாதே! ” என்றவள், அப்போதும் முகத்தில் மறுப்பைத் தேக்கியபடி இருந்த தோழியைப் பார்த்துவிட்டு தொடர்ந்தாள்.

“உன் அம்மாவைப் பற்றி நான் உனக்குச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை லக்கி. அவர் பணத்தைப் பெரிதாக நினைப்பவரா? உன்னைச் சுமையாக நினைப்பவரா என்று நீயே யோசித்துக்கொள். வாழ்க்கை பூராக மண்வெட்டியும் தோட்டமும் என்று வெயிலில் கிடந்தே கஷ்டப்பட்ட அவர் தன் மகளும் இதே கஷ்டத்தை அனுபவிக்கக் கூடாது என்று நினைத்திருக்கலாம். அவர்களாகவே உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்ப்பதாக இருந்தாலும் இப்படி ஒரு வசதியான வீட்டில் பார்க்கத்தான் முடியுமா சொல்லு. இல்லையே! தானாகத் தேடிவந்த நல்ல வாழ்க்கையை ஏன் விடுவான் என்று நினைத்திருக்கலாம்.” என்றாள்

“அம்மாவை நான் குற்றம் சொல்லவில்லை தீபா. ஆனால், ஏற்கனவே ஒருத்தியை காதலித்து அவளுடன் வாழ்ந்தவனை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்வதற்குப் பதிலாகக் காலம் பூராகவும் நான் கன்னியாக இருந்துவிடுவேன். ஏழை வீட்டில் பெண்ணாகப் பிறந்தேன் என்பதற்காக எனக்கு என்று ஒரு மனம் இருக்காதாடி? அதில் ஆசைகள், கனவுகள், எதிர்பார்ப்புகள் என்று எதுவுமே இருக்காதா? ஏன்டி அம்மா என் மனதை விளங்கிக்கொள்கிறார் இல்லை?”

அவளின் கேள்விகள் நெஞ்சைப் பிசைந்தாலும், “அப்படிச் சொல்லாதே லக்கி. நம் அம்மாக்களை விட நம்மை அதிகமாகப் புரிந்துகொண்டவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அவர்கள் செய்வது எல்லாமே நமது நன்மைக்காகத்தான் இருக்கும்.” என்றாள் தீபா.

“இதில் என் நன்மை என்ன இருக்கிறது தீபா? பணத்துக்கோ, நகை நட்டுக்கோ நான் ஆசைப்பட்டதே இல்லையேடி. மற்றவர்கள் மாதிரி பகட்டாக வாழவும் நினைக்கவில்லையே. பிறகு என்ன நன்மை வர இருக்கிறது எனக்கு? நான் ஆசைப்பட்டது எல்லாம் என்னை மட்டுமே நேசிக்கும் ஒருவனைத்தானே. அது அவ்வளவு பெரிய பேராசையா? அதனால்தான் அது நடக்காதா?” என்று, முகத்தில் ஏக்கத்தைத் தேக்கிக் கேட்டவளை, வேதனை தாங்க முடியாமல் கட்டிக்கொண்டாள் தீபா.

“கவலைப்படாதே லக்கி. உன் நல்ல மனதுக்கு நடப்பது எல்லாமே நன்றாகத்தான் நடக்கும். அதனால், உன்னைப் பற்றி மட்டும் யோசிக்காமல் உன் தம்பிகளைப் பற்றியும் அம்மா அப்பா பற்றியும் சேர்த்து யோசிடி.” என்றாள் ஆறுதலாக.

“அவர்களைப் பற்றி யோசிக்காமல் என்னடி? என் நினைவு எல்லாமே அவர்களைச் சுற்றித்தானே.” என்ற தோழியையே சற்று நேரம் பார்த்துவிட்டு,

“அவரைக் கட்டிக்கொள்ள உனக்கு விருப்பமே இல்லையா லக்கி?” என்று இதமான குரலில் கேட்டாள் தீபா.

விழிகள் கலங்க, மறுப்பாகத் தலையை அசைத்தாள் இலக்கியா.

“எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவே இல்லை. பிடிவாதமாகச் சொன்னால் அம்மா அப்பாவும் விட்டுவிடுவார்கள் தான். ஆனால்..” என்று இழுத்தவள், “அவர்களின் எதிர்பார்ப்பு நிறைந்த முகத்தைப் பார்த்து என்னால்தான் சொல்ல முடியவில்லை.” என்றாள் கண்ணீரோடு.

அதற்கு மேலும் தோழி மனதால் அனுபவிக்கும் வேதனையைத் தாளமுடியாது, “இப்போ என்னடி? உனக்கு இந்தத் திருமணம் வேண்டாம். அவ்வளவுதானே. இதை அந்தப் பிரியதர்சனிடமே சொன்னால் என்ன?” என்று கேட்டாள் தீபா.

“அப்படிச் சொன்னால்?” விழிகளில் எதிர்பார்ப்பு மின்னக் கேட்டவளிடம்,

“அவராகவே திருமணத்தை நிறுத்திவிடுவார் என்று நினைக்கிறேன்.” என்றாள் தீபா.

சட்டென முகம் மலர, “அவராக நிறுத்திவிட்டால் எல்லாப் பிரச்சினையுமே தீர்ந்துவிடும். நான் அம்மா அப்பாவின் மனதை நோகடிக்க வேண்டியிராது. ஆனால், செய்வாரா?” என்று கேட்டாள் லக்கி.

“உனக்கு அவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரும் வேறு என்னதான் செய்ய முடியும். பெண்களை, அவர்களின் மனதை மதிப்பவராக இருந்தால் நிறுத்துவார் என்றுதான் நினைக்கிறேன்.”

“ஓ..” என்று உள்வாங்கிக் கொண்டவள், “அவரிடம் இதை எப்படிச் சொல்வது?” என்று கேட்டாள்.

“அதற்கு ஒரு வழி இருக்கிறது..” என்ற தீபா, உடனேயே மகேஸ்வரிக்கு அழைத்துத் தர்சனின் கைபேசி நம்பரை வாங்கினாள்.

இலக்கியாவின் தோழி என்கிற ஒரு காரணமே போதுமே, அவர் அதைத் தீபாவுக்குக் கொடுக்க.

தன்னுடைய கைபேசியையும் தர்சனின் இலக்கத்தையும் லக்கியிடம் நீட்டியபடி, “அவரோடு பேசு. உனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லு..” என்றாள் தீபா.

“நானா?” தயக்கத்தோடு அவள் கேட்க,

“பின்ன நானா?” என்று கேட்டாள் தீபா.

“பயமாய் இருக்குடி…”

“எதற்குப் பயம். உன் விருப்பத்தைச் சொல்ல உனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அதனால் பயப்படாமல் பேசு.” என்றவள், அப்போதும் தயங்கியவளிடம், “உனக்காக நான் பேசினாலும் அவர் நிச்சயம் உன்னிடம் பேசவேண்டும் என்றுதான் சொல்வார். அதோடு உன் வாய்வழியாக நீ சொல்வதுதான் சரியாக வரும் லக்கி. நீ பேசு, நான் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்..” என்றுவிட்டு, அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

தர்சனின் நம்பரையே சற்றுநேரம் வெறித்தவள் கைகள் நடுங்க தயக்கத்தோடு ஒவ்வொரு இலக்கமாக அழுத்தினாள்.
 
Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
அழைப்பை ஏற்படுத்திவிட்டு கைபேசியைக் காதுக்குக் கொடுத்தவளின் இதயமோ இடியோசை போன்று முழங்கத் தொடங்கியது.

அவன் எடுக்கும்வரை காத்திருந்தவளுக்கு, அவன் எடுக்காமல் விட்டுவிட்டால் நல்லதோ என்றும் தோன்றியது.

நெற்றியில் முத்துமுத்தாய் வியர்க்க ஆரம்பிக்கையில், “ஹலோ..” என்றது தர்சனின் அழுத்தமான குரல்.

“ஹ..லோ..” என்றவளின் உதடுகள் வறண்டு, தொண்டைக்குழி காய்ந்து போனதில் காற்று மட்டுமே வெளிவந்தது.

அதற்கிடையில் பொறுமை இழந்தவன், “யார் பேசுகிறீர்கள்? ஒருவருக்கு அழைத்தால் வாயைத் திறந்து பேசவேண்டும் என்று தெரியாதா?” என்று அதட்டினான்.

அந்த அதட்டலில் மேனியெல்லாம் நடுங்கத் தொடங்க, “அது.. நா..ன் இ.. அதுவந்து நீங்கள் பிரிய..” என்று அவள் தடுமாறுகையிலேயே,

“பிரியதர்சன்தான் பேசுகிறேன். நீங்கள் யார்?” என்று இடையிட்டான் அவன் பொறுமையின்றி.

“நான் இலக்கியா.” பயத்தில் அவசரமாகச் சொன்னாள் அவள்.

“அதற்கு?”

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தாள் லக்கி.

அங்கே அவனுக்குப் பொறுமை பறந்துவிட்டது போலும், “இப்போது எதற்காக எனக்கு அழைத்தாய்? அதைச் சொல்லு!” என்று சிடுசிடுத்தான் அவன்.

“அது.. இந்தத் திருமணம் வேண்டாம்..” அவசரமாக அதை ஒப்பித்தவளுக்கு அப்போதுதான் அப்பாடி என்றிருந்தது.

ஒருவழியாகச் சொல்லவேண்டியதை சொல்லியாயிற்று என்று அவள் மூச்சை இழுத்துவிட, “உனக்குத் திருமணம் வேண்டாம் என்றால் எனக்கு எதற்கு அழைத்தாய்?” என்று அப்போதும் அவன் சிடுசிடுக்க, மீண்டும் நெஞ்சுக்குழி அடைத்தது அவளுக்கு.

என்ன சொல்கிறான் இவன்? இவனுக்குத்தானே என்னைப் பெண் பார்த்தார்கள்? நம்பர் ஏதும் பிழையோ? இல்லையே.. நான்தான் பிரியதர்சன் என்று சொன்னானே என்று அவள் திகைப்போடு யோசித்துக் கொண்டிருக்க, செவிவழி நுழைந்த அவனது கடினமான குரல் அவளின் நெஞ்சுக்கூட்டையே நடுநடுங்க வைத்தது.

“உனக்கு என்ன பிரச்சினை? எதற்கு எனக்கு அழைத்தாய்? இதையெல்லாம் ஒழுங்காகச் சொல்ல முடிந்தால் சொல்லு. இல்லையானால் வை!” என்றது அவனது இரும்புக் குரல்.

கைகால்களில் ஒரு நடுக்கம் ஓடினாலும், “அது மகி மிஸ்.. மஞ்சுளா ஆன்ட்டி உங்களை எனக்கு மாப்பிள்ளை.. இல்லையில்லை என்னைப் பெண் பார்த்தார்கள்..” என்று அவள் உளறிக் கொட்டியதை ஒருவழியாக ஒன்றாகச் சேர்த்து விஷயத்தை விளங்கிக் கொண்டவனின் முகம் கல்லாக இறுகியது.

“இப்போ என்ன அதற்கு?” என்றான் கடித்த பற்களுக்கிடையில்.

“சொன்னேனே.. இந்தத் திருமணம் வேண்டாம் என்று. எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை.” என்று பட்டெனச் சொல்லிவிட்டாள் லக்கி. அதைச் சொல்வதற்கிடையில் அவளுக்கு வியர்த்து வழிந்தது.

சில கணங்கள் அமைதியில் கழிய, “நீ எவனையாவது காதலிக்கிறாயா?” என்று நிதானமான, மிக மிக நிதானமான குரலில் கேட்டான் தர்சன்.

அதற்காவது ஆம் என்றொரு பொய்யை சொல்லியிருக்கலாம் அவள்.

மாறாக, “ஐயோ.. அப்படியெல்லாம் இல்லவே இல்லை.” என்று, தன்னைப் பிழையாக நினைத்துவிடப் போகிறானே என்று அவசரமாகப் பதில் சொன்னாள் இலக்கியா.

“அப்போ கல்யாணத்துக்குத் தயாராக இரு!” என்றுவிட்டு கைபேசியை வைத்துவிட்டான் தர்சன்.

அதைக்கேட்டு அதிர்ந்துபோய் ஸ்தம்பித்து நின்றாள் இலக்கியா.

அணைப்பு துண்டிக்கப்பட்டதற்கான அடையாளமாகப் பீப் பீப் என்கிற ஒலி கேட்டபோதும், கைபேசியைக் காதிலிருந்து எடுக்கத் தோன்றாமல் சிலையெனச் சமைந்திருந்தாள் இலக்கியா.

மெல்ல மெல்ல அவன் சொன்னது மூளைக்குள் உறைக்க, இருந்த ஒருவழியும் தோல்வியில் முடிந்ததில் அவள் விழிகள் மீண்டும் கண்ணீரைக் கொட்டத் தொடங்கின.

அப்படியே எவ்வளவு நேரம் இருந்தாளோ, “பேசி முடித்துவிட்டாயா லக்கி? அவர் என்ன சொன்னார்? கல்யாணத்தை நிறுத்துகிறேன் என்றாரா?” என்று கேட்டபடி வந்தவளின் கைகளில் அவர்கள் இருவருக்குமான தேநீர் கோப்பைகள் இருந்தன.

விரக்தியாகப் புன்னகைத்தவள் இல்லை என்பதாகத் தலையை அசைத்துக்கொண்டே தன் கண்ணீரைத் துடைத்தாள்.

“இல்லையா?” அதிர்ந்துபோய்த் தீபா அவளைப் பார்க்க, ஒரு பெருமூச்சுடன் எழுந்தாள் இலக்கியா.

“சரிடி நான் கிளம்புகிறேன். அம்மா தேடப்போகிறார்.”

“இனி என்ன செய்யப் போகிறாய் லக்கி?” தோழியின் மனம் இப்போது என்ன பாடுபடும் என்பதை அறிந்து வேதனையோடு கேட்டாள் தீபா.

“சம்மதம் சொல்லப் போகிறேன்.”

“பி...றகு?”

“நடப்பதைக் கண்டுகொள்ளப் போகிறேன். அவ்வளவுதான்.” என்றாள் அவள் விரக்தி நிறைந்த குரலில்.

“ஆன்ட்டியிடம் நான் வந்து சொல்லவா லக்கி.”

“வேண்டாம் விடு. அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டும்.” என்று மரத்த குரலில் சொன்னவள், தேநீரைக் குடித்துவிட்டுப் போடி என்று தீபா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் கிளம்பிச் சென்று, பெற்றவர்களிடம் மனதை மறைத்து தன் சம்மதத்தையும் தெரிவித்தாள்.

அடுத்தநாள் காலை மகன்கள் பள்ளிக்கூடமும் இலக்கியா நர்சரிக்கும் சென்றதும், “அவர்களுக்கு எடுத்து எங்களுக்குச் சம்மதம் என்று சொல்லிவிடலாமா?” என்று கணவரிடம் கேட்டார் சந்திரா.

அவர் குரலில் மெல்லிய ஆர்வமும் பாபரப்பும் வீற்றிருந்தது. அதை உணர்ந்துகொண்ட கந்தசாமி, மனைவியை யோசனையாகப் பார்த்தார்.

“என்னப்பா யோசிக்கிறீர்கள்?”

“ம்.. எனக்கு என்னவோ லக்கிக்கு இந்தத் திருமணத்தில் பெரிதாக விருப்பம் இல்லை போல் தோன்றுகிறது. எங்களுக்காகச் சம்மதித்தாளோ தெரியவில்லை.” என்றார் அவர்.
 
Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
“இதில் என்னப்பா சந்தேகம்? பிள்ளை எங்களுக்காக மட்டும்தான் சம்மதித்தாள்.” என்றார் சந்திரா கண்ணீர்க் குரலில்.

“அது தெரிந்தபிறகும் சம்மதம் சொல்லவா என்று கேட்கிறாயே.. இந்த நொண்டிக் கணவனால் உன் மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியாது என்று நினைத்துவிட்டாயா?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டார் கந்தசாமி.

அதைக் கேட்டதும், “என்னப்பா இது... என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்க எப்படி மனது வந்தது உங்களுக்கு?” என்று அழுதுவிட்டார் சந்திரா.

“சுதனையும் பாலனையும் டாக்டரும் இஞ்சினியரும் ஆக்குவது என்றால் சும்மாவா? இந்த வீட்டுக்கு மூத்த பிள்ளையாகப் பிறந்த பாவத்துக்கு வேலைக்குப்போய் அவள் ஓடாகத் தேயவேண்டுமா, சொல்லுங்கள்? அதோடு, அந்தப் பெடியனில் என்ன குறை இருக்கிறது? அவன் நல்லபிள்ளை என்று நீங்கள் தானே சொன்னீர்கள். நல்ல குடும்பம் வேறு. அவனுக்கும் அக்கா தங்கை என்று வேறு எந்தக் கடமையும் இல்லை. மனைவி ஓடிப்போனதுக்கு அவன் என்ன செய்வான்? இவ்வளவு வசதி இருந்தும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது என்று நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோமா? நம் மகள் நிச்சயம் அந்தவீட்டில் நன்றாக வாழ்வாள் என்று நம்பித்தான் சொன்னேனே தவிர உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. அதனால்தான் லக்கியையும் கட்டாயப்படுத்திச் சம்மதிக்க வைத்தேன்.” என்றவர், “இவ்வளவு வருட வாழ்க்கையில் என்னை நீங்கள் புரிந்துகொண்டது இவ்வளவுதானா?” என்று கண்ணீரோடு கேட்டபோது, கந்தசாமிக்கும் கண் கலங்கிவிட்டது.

“இங்கே, என்னருகில் வா சாரும்மா..” என்று கரகரத்த குரலில் அழைத்தார்.

புடவை முந்தானையால் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி வந்தவரை வாஞ்சையோடு தன் அருகில் அமர்த்திக்கொண்டார் கந்தசாமி.

“என் மேல் கோபமா சாரு?” மனைவியின் ஒற்றைக் கரத்தைப் பற்றி அவர் கேட்டபோது, இல்லை என்பதாகத் தலையை அசைத்தார் சந்திரா.

ஆனாலும், மனைவியின் முகத்தில் இருந்தே அவரின் மனச்சிணுக்கத்தைப் படித்தவர், “நடக்கமுடியாத இந்தக் கால்களால் உடம்பில் ஏற்கனவே தெம்பில்லை. மனதில் இருந்த தைரியத்தால் தான் இவ்வளவு நாட்களையும் ஓட்டினேன். இப்போது வயதும் போகப்போக அந்தத் தெம்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே போகிறது. நான் நல்லமாதிரி இருந்தால் நம் மகளை ராணி மாதிரி வாழ வைத்திருக்கலாமே என்கிற கவலை வேறு. என்னால் எதுவும் முடியவில்லையே என்கிற விரக்தி ஒருபுறம். அதில் சிலநேரங்களில் அவநம்பிக்கையோடு எதையாவது யோசிக்காமல் உளறிவிடுகிறேன்மா.” என்றார் தன்மையான குரலில்.

அதைக்கேட்ட சந்திராவுக்குக் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிந்தது.

உங்கள் நிலையையும் அறிந்திருந்ததால் தானே அவளைக் கட்டிக்கொடுக்க இவ்வளவு அவசரப் படுகிறேன் என்று மனதில் எண்ணியவர், “சரி விடுங்கப்பா. உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன? நானும் நீங்கள் ஏதோ யோசிக்காமல் சொல்கிறீர்கள் என்று நினைக்காமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டேன். அதனால் அதை விடுங்கள்.” என்றவர், “இப்போது சொல்லுங்கள், அவர்களுக்கு எடுத்துச் சொல்வோமா வேண்டாமா?” என்று புன்னகையோடு கேட்டார்.

“சரிம்மா. எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவோம்.” என்றவர், மஞ்சுளா கொடுத்திருந்த அவரது கைபேசி இலக்கத்துக்கு அழைத்துத் தங்களின் சம்மதத்தைத் தெரிவித்தார்.

“மிகவும் சந்தோசம் அண்ணா. கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்று உற்சாகத்தோடு சொன்னவர், “என் மருமகள் என்ன சொல்கிறாள்?” என்று கேட்டார்.

“அவள்.. எங்கள் வீட்டு நிலையை எண்ணிக் கொஞ்சம் தயங்குகிறாள். மற்றும்படி ஒன்றுமில்லை.” என்றார் கந்தசாமி.

“அதைப்பற்றிக் கவலையே படவேண்டாம் என்று அவளிடம் சொல்லுங்கள்.” என்றவர், மேலதிகமாகப் பெண் பார்க்க வருவது, திருமணம் என்று முக்கியமான விசயங்களைப் பேசிவிட்டு வைத்தார்.

இலக்கியா குடும்பத்தினர் சம்மதிப்பார்கள் என்கிற நம்பிக்கை இருந்தாலும், தப்பித்தவறி சம்மதிக்காவிட்டால் என்ன செய்வது என்று எண்ணியே அன்று மதியம் அமலன் பெண் யார் என்று கேட்டபோது இலக்கியாவைப் பற்றிச் சொல்லாமல் கோபப்பட்டார்.

இப்போதோ அவர்கள் சம்மதித்தாயிற்று. எப்படியாவது மகனையும் சம்மதிக்க வைத்துவிட்டால் எல்லாமே சுபமாக நடக்கும் என்று நினைத்தவர், மகேஸ்வரியை தேடிச் சென்றார்.
 
இப்போதோ அவர்கள் சம்மதித்தாயிற்று. எப்படியாவது மகனையும் சம்மதிக்க வைத்துவிட்டால் எல்லாமே சுபமாக நடக்கும் என்று நினைத்தவர்,மகேஸ்வரியை தேடிச் சென்றார்.