அத்தியாயம்-16
தன் முன்னால் நின்ற இலக்கியாவை நிற்பது அவள்தானா என்று நம்பமுடியாமல் விழிகளை விரித்துப் பார்த்தாள் தீபா.
தீபாவின் வீடும் இலக்கியாவின் வீடும் ஒரே தெருவில் இருந்தும், சிறுவயது முதலே தோழிகளாக இருந்தும் வீட்டுக்கு வாடி என்று தீபா எவ்வளவோ வற்புறுத்தினாலும் வராத இலக்கியா அன்று திடீரென்று அவளின் வீட்டுக்கு, அதுவும் அவளின் அறைக்கே வந்து நிற்பதைக்கண்டு ஆனந்தமாக அதிர்ந்துதான் போனாள் தீபா.
“என்னடி அதிசயம் இது? என் வீட்டுக்கெல்லாம் நீ வரமாட்டாயே?” என்று குதூகலமும் கேலியுமாக ஆரம்பித்தவள், வாடியிருந்த முகமும் இதோ இதோ என்று அழத்துடித்த விழிகளுமாக நின்றவளை அப்போதுதான் கவனித்து, “ஏன்டி ஒருமாதிரி இருக்கிறாய்?” என்று விசாரித்தாள்.
அதற்குப் பதில் சொல்லக்கூடத் திராணி அற்றவளாய் தொப்பென்று கட்டிலில் அமர்ந்தவள் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு விசும்பினாள்.
“ஹேய் லக்கி, என்னடி? ஏன் அழுகிறாய்?” என்று பதறினாள் தோழி.
அதுநாள்வரை இலக்கியா அழுது அவள் பார்த்ததில்லை. அதோடு அவநம்பிக்கையான ஒரு பேச்சு அவள் வாயிலிருந்து வராது. கொஞ்சம் பயந்த சுபாவம். அதுவும் புதிய நபர்களிடம் மட்டுமே!
அப்படியானவள் எதற்கு இப்படி அழவேண்டும்?
“அழாமல் என்ன பிரச்சினை என்று முதலில் சொல்லு லக்கி..” என்று எவ்வளவோ கேட்டும் எதுவும் சொல்லாமல் தொடர்ந்து அழுதவளை எப்படித் தேற்றுவது என்று தெரியாது சிலகணங்கள் அமைதியாக இருந்தாள் தீபா.
அவளாகவே சொல்லட்டும் என்று எண்ணியவளாக அவள் முதுகை ஆறுதலாகத் தடவிக்கொடுத்தாள்.
அந்த வருடல் கொடுத்த இதத்தினாலா அல்லது இப்படி அழுது பழக்கம் இல்லாததினாலா சற்று நேரத்திலேயே இலக்கியாவின் அழுகை மட்டுப்பட்டது.
“என் அறையை உன் கண்ணீரால் கழுவியது போதும். இந்தா, இதை முதலில் குடி!” என்று மெலிதாக அதட்டியபடி, தண்ணீரை எடுத்து நீட்டினாள் தீபா.
தன் இரண்டு கைகளாலும் கண்களையும் கன்னங்களையும் துடைத்துக்கொண்டு அதை வாங்கிப் பருகினாள் இலக்கியா.
“இப்போது சொல்லு, என்ன பிரச்சினை? எதற்கு இந்த அழுகை?”
“வீட்டில் எனக்குத் திருமணம் பேசுகிறார்கள்..”
தம்பிகள் குறித்த இலக்கியாவின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி அறிந்திருந்த தீபாவுக்கு அவளின் மனநிலை புரிந்தாலும், அதற்காக இப்படி அழவேண்டுமா என்று எண்ணினாள்.
“மாப்பிள்ளை யார்?”
“அந்தப் பிரியதர்சன்.” என்றாள் கசப்பும் வெறுப்புமாக.
“யாருடி அது?” என்று யோசனையோடு கேட்கையிலேயே புரிந்துவிட, “யார்.. நம் மகி மிஸ்ஸின் அண்ணன் மகன்.. அவரா?” என்று அதிர்ச்சியோடு கேட்டாள் தீபா.
இலக்கியா ஆமென்பதாகத் தலையை அசைக்கவும், “என்னடி சொல்கிறாய்?” என்று கேட்ட தீபாவுக்கு அவளின் அழுகைக்கான காரணம் இப்போது புரிந்தது.
அன்று திவ்யா அவனைக் காதலிப்பதாகச் சொன்னதையே ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபப்பட்டவளுக்கு அவனே மாப்பிள்ளை என்றால்?
இரண்டாம் தாரம் என்பது குற்றச் செயலோ, செய்யவே கூடாத செயலோ அல்லதான்! கண்ணிய கேடான விசயமும் அல்லதான்! எல்லோருமே தங்களை மட்டுமே நினைக்கும் ஒருவர்தான் துணையாக வரவேண்டும் என்று எதிர்பார்த்தால், துணைகளை இழந்தவர்களின் அல்லது பிரிந்தவர்களின் நிலை என்ன? அவர்களும் வாழத்தானே வேண்டும்!
ஆனால், அப்படி ஒருவரை மணக்க எல்லோராலும் முடிவது இல்லையே! வாழ்க்கைத் துணையாக வருபவர் கறை படாதவராக இருக்கவேண்டும் என்பதும் நியாயமான ஆசைதானே! அதில் தப்பில்லையே!
அதுவும் இலக்கியாவைப் போன்ற ஒருத்தியால் அதைக் கற்பனையில் கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்துகொண்டாள் தீபா.
“இது எப்போது நடந்தது?” ஒருவழியாகத் தன் அதிர்ச்சியைச் சமாளித்துக்கொண்டு கேட்டாள் தீபா.
“நேற்று முன்தினம்..” என்றவள், மகேஸ்வரியும் மஞ்சுளாவும் வந்து பெண் கேட்டதைச் சொன்னாள்.
“பிறகு என்னடி? அதுதான் உன் அப்பா சொல்லியிருக்கிறாரே உன்னிடம் கேட்டுவிட்டுச் சொல்வதாக. உனக்கு இதில் விருப்பம் இல்லை என்று நீ சொல்வதுதானே..” என்றாள் தீபா.
“சொல்லாமல் எங்கே? எல்லாம் சொல்லியாயிற்று. அப்பா என் விருப்பம்தான் கடைசி முடிவு என்றார். அம்மாதான், உன் வாழ்க்கையைக் கெடுத்து தம்பி தங்கைகளை நன்றாக வைப்பதற்குப் பதிலாக இந்தத் திருமணத்துக்குச் சம்மதித்தால் நீயும் சந்தோசமாக இருப்பாய் நம் குடும்பமும் நன்றாக இருக்கும் என்கிறார்.”
“அவர் சொல்வதிலும் பிழை இல்லையே லக்கி.” என்றாள் தீபா மெதுவாக.
“என்னடி நீயும் இப்படிச் சொல்கிறாய்? வேலைக்குப் போனால் என் வாழ்க்கை கெடுவதாக அர்த்தமா? என் குடும்பத்துக்காக நான் உழைப்பதில் என்ன தவறு? அதை நான் சுமையாகவோ கஷ்டமாகவோ நினைக்கவே இல்லையேடி. இப்போது மட்டும் என் சந்தோசத்துக்கு என்ன குறை? நன்றாகத்தானே இருக்கிறேன்.”
“நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், நன்றாக வாழ்வதற்கு ஒரு வழி இருக்கையில் வீணாக எதற்குக் கஷ்டப் படுவான் என்று ஆன்ட்டி நினைத்திருக்கலாம். அதோடு அவர்களும் நல்ல குடும்பம், அவர்களாகத்தானே உன்னைப் பெண் கேட்டும் வந்தார்கள். நாமாகச் செல்லவில்லையே என்றும் நினைத்திருப்பார்கள். அதுவும் தப்பில்லையே.” என்றாள் தீபா.
“அது தப்பில்லை என்று எப்படிச் சொல்கிறாய் தீபா? அவர்களாகக் கேட்டார்கள் என்பதற்காகப் பணத்துக்காக ஒருவரைத் திருமணம் செய்யலாமா? அப்படிச் செய்தால் என்மேல் எனக்கே மரியாதை இருக்காதே. என்னை நானே இழிவு படுத்துவது போலாகிவிடுமே! அந்தளவுக்குக் கீழிறங்கிப் போகத்தான் வேண்டுமா தீபா?” என்று கண்ணீரோடு சொன்னவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது தீபாவுக்கு.
“முதலில் நீ ஒன்றை நன்றாகப் புரிந்துகொள் லக்கி. இங்கே யாரும் பணத்துக்காக இந்தத் திருமணத்தை நடத்த நினைக்கவில்லை. அவர்களுக்கு நீ நல்ல பெண்ணாகத் தெரிகிறாய். உன் அப்பா அம்மாவுக்கு அவர் நல்ல மாப்பிள்ளையாகத் தெரிகிறார். கூடுதலாகப் பண வசதியும் இருக்கிறது. அவ்வளவுதான்! இதைப் புரிந்துகொள்ளாமல் கண்டதையும் உளறாதே! ” என்றவள், அப்போதும் முகத்தில் மறுப்பைத் தேக்கியபடி இருந்த தோழியைப் பார்த்துவிட்டு தொடர்ந்தாள்.
“உன் அம்மாவைப் பற்றி நான் உனக்குச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை லக்கி. அவர் பணத்தைப் பெரிதாக நினைப்பவரா? உன்னைச் சுமையாக நினைப்பவரா என்று நீயே யோசித்துக்கொள். வாழ்க்கை பூராக மண்வெட்டியும் தோட்டமும் என்று வெயிலில் கிடந்தே கஷ்டப்பட்ட அவர் தன் மகளும் இதே கஷ்டத்தை அனுபவிக்கக் கூடாது என்று நினைத்திருக்கலாம். அவர்களாகவே உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்ப்பதாக இருந்தாலும் இப்படி ஒரு வசதியான வீட்டில் பார்க்கத்தான் முடியுமா சொல்லு. இல்லையே! தானாகத் தேடிவந்த நல்ல வாழ்க்கையை ஏன் விடுவான் என்று நினைத்திருக்கலாம்.” என்றாள்
“அம்மாவை நான் குற்றம் சொல்லவில்லை தீபா. ஆனால், ஏற்கனவே ஒருத்தியை காதலித்து அவளுடன் வாழ்ந்தவனை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்வதற்குப் பதிலாகக் காலம் பூராகவும் நான் கன்னியாக இருந்துவிடுவேன். ஏழை வீட்டில் பெண்ணாகப் பிறந்தேன் என்பதற்காக எனக்கு என்று ஒரு மனம் இருக்காதாடி? அதில் ஆசைகள், கனவுகள், எதிர்பார்ப்புகள் என்று எதுவுமே இருக்காதா? ஏன்டி அம்மா என் மனதை விளங்கிக்கொள்கிறார் இல்லை?”
அவளின் கேள்விகள் நெஞ்சைப் பிசைந்தாலும், “அப்படிச் சொல்லாதே லக்கி. நம் அம்மாக்களை விட நம்மை அதிகமாகப் புரிந்துகொண்டவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அவர்கள் செய்வது எல்லாமே நமது நன்மைக்காகத்தான் இருக்கும்.” என்றாள் தீபா.
“இதில் என் நன்மை என்ன இருக்கிறது தீபா? பணத்துக்கோ, நகை நட்டுக்கோ நான் ஆசைப்பட்டதே இல்லையேடி. மற்றவர்கள் மாதிரி பகட்டாக வாழவும் நினைக்கவில்லையே. பிறகு என்ன நன்மை வர இருக்கிறது எனக்கு? நான் ஆசைப்பட்டது எல்லாம் என்னை மட்டுமே நேசிக்கும் ஒருவனைத்தானே. அது அவ்வளவு பெரிய பேராசையா? அதனால்தான் அது நடக்காதா?” என்று, முகத்தில் ஏக்கத்தைத் தேக்கிக் கேட்டவளை, வேதனை தாங்க முடியாமல் கட்டிக்கொண்டாள் தீபா.
“கவலைப்படாதே லக்கி. உன் நல்ல மனதுக்கு நடப்பது எல்லாமே நன்றாகத்தான் நடக்கும். அதனால், உன்னைப் பற்றி மட்டும் யோசிக்காமல் உன் தம்பிகளைப் பற்றியும் அம்மா அப்பா பற்றியும் சேர்த்து யோசிடி.” என்றாள் ஆறுதலாக.
“அவர்களைப் பற்றி யோசிக்காமல் என்னடி? என் நினைவு எல்லாமே அவர்களைச் சுற்றித்தானே.” என்ற தோழியையே சற்று நேரம் பார்த்துவிட்டு,
“அவரைக் கட்டிக்கொள்ள உனக்கு விருப்பமே இல்லையா லக்கி?” என்று இதமான குரலில் கேட்டாள் தீபா.
விழிகள் கலங்க, மறுப்பாகத் தலையை அசைத்தாள் இலக்கியா.
“எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவே இல்லை. பிடிவாதமாகச் சொன்னால் அம்மா அப்பாவும் விட்டுவிடுவார்கள் தான். ஆனால்..” என்று இழுத்தவள், “அவர்களின் எதிர்பார்ப்பு நிறைந்த முகத்தைப் பார்த்து என்னால்தான் சொல்ல முடியவில்லை.” என்றாள் கண்ணீரோடு.
அதற்கு மேலும் தோழி மனதால் அனுபவிக்கும் வேதனையைத் தாளமுடியாது, “இப்போ என்னடி? உனக்கு இந்தத் திருமணம் வேண்டாம். அவ்வளவுதானே. இதை அந்தப் பிரியதர்சனிடமே சொன்னால் என்ன?” என்று கேட்டாள் தீபா.
“அப்படிச் சொன்னால்?” விழிகளில் எதிர்பார்ப்பு மின்னக் கேட்டவளிடம்,
“அவராகவே திருமணத்தை நிறுத்திவிடுவார் என்று நினைக்கிறேன்.” என்றாள் தீபா.
சட்டென முகம் மலர, “அவராக நிறுத்திவிட்டால் எல்லாப் பிரச்சினையுமே தீர்ந்துவிடும். நான் அம்மா அப்பாவின் மனதை நோகடிக்க வேண்டியிராது. ஆனால், செய்வாரா?” என்று கேட்டாள் லக்கி.
“உனக்கு அவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரும் வேறு என்னதான் செய்ய முடியும். பெண்களை, அவர்களின் மனதை மதிப்பவராக இருந்தால் நிறுத்துவார் என்றுதான் நினைக்கிறேன்.”
“ஓ..” என்று உள்வாங்கிக் கொண்டவள், “அவரிடம் இதை எப்படிச் சொல்வது?” என்று கேட்டாள்.

Last edited by a moderator: