அத்தியாயம்-20
துடைக்கத் துடைக்கப் பெருகிய கண்ணீரோடு கட்டிலில் அமர்ந்திருந்தாள் இலக்கியா. கணவன் அம்புகளாய் வீசிவிட்டுச் சென்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் இதயத்தை ஓரிடம் விடாமல் குத்திக் குத்தி குருதியைப் பாய்ச்சி கொண்டிருந்தது.
பார்க்கும் பார்வையில் கூடக் கண்ணியம் தவறக்கூடாது என்று நினைப்பவளை பார்த்து என்னவெல்லாம் சொல்லிவிட்டான்!
இப்படி ஒரு வாழ்க்கை அமைந்துவிட்டதே என்று தினமும் மருகியபோதும் இதைத்தாண்டி இன்னொரு வாழ்க்கையை அவள் நினைத்துக் கூடப் பார்த்ததே இல்லையே! இதிலிருந்து வெளியேறவோ தப்பவோ அவள் கனவிலும் எண்ணியது இல்லையே!
அப்படியானவளை இன்னொருவனோடு இணைத்துப் பேசிவிட்டானே.. நினைத்த மாத்திரத்தில் மீண்டும் விம்மல் வெடித்தது அவளுக்கு.
கணவனுக்கு மட்டுமே அவளின் தூய்மையான இதயத்தையும் மனதையும் காதலோடு கொடுக்கவேண்டும் என்று, அவற்றை எல்லாம் அவள் பொத்திப் பொத்திப் பாதுகாத்தது என்ன? இன்று கட்டிய கணவனின் வாயிலாக அவள் கேட்ட பேச்சு என்ன?
இது ஒருபுறம் என்றால் வேலைக்கும் போகக்கூடாது என்றும் சொல்லிவிட்டானே. அவளின் குடும்பத்துக்கு இனி அவளால் எந்த உதவியும் செய்ய முடியாதே. காலம் பூராவும் அவர்கள் அந்த மண்ணுக்குள்ளேயே கிடந்து கஷ்டப்படவேண்டும் என்பதுதான் விதியா?
அவர்களும் சந்தோசமாக இல்லை. அவளும் மகிழ்ச்சியாக இல்லை. பிறகு எதற்காக இந்தத் திருமணம் நடந்தது என்று நொந்தபடி எவ்வளவு நேரத்தைக் கழித்தாளோ தெரியாது. மீண்டும் தர்சன் அறைக்குள் நுழைந்தபோது பயத்தில் அவள் மேனி தூக்கிப்போட சட்டெனக் கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள்.
திரும்பவும் என்ன சொல்லி அவளை நோகடிக்கப் போகிறானோ என்று பயந்துபோய் அவள் நிற்க, பாறையைப் போன்றிருந்த முகத்தோடு கட்டிலில் ஒரு கைபேசியைத் தூக்கிப் போட்டுவிட்டு வீட்டுடையை மாற்றத் தொடங்கினான் அவன்.
அவன் அப்படிப் போடுவதற்காகவே காத்திருந்தது போன்று அந்தப் புதுக் கைபேசி அழகாய் இன்னிசை பாடி அழைத்தது.
யார் என்று அவள் பார்க்க, அவளது வீட்டின் இலக்கம் அதில் ஒளிரவும், கேள்வியோடு கணவனை நிமிர்ந்து பார்த்தாள் இலக்கியா.
அவனோ மனைவி என்கிற ஒருத்தி அங்கே நிற்பதாகவே காட்டிக்கொள்ளாமல் உடை மாற்றுவதிலேயே முனைந்திருந்தான்.
அந்த அலட்சியம் மீண்டும் மனதைத் தாக்கினாலும், வீட்டிலிருந்து அழைக்கிறார்களே என்று எண்ணியவள் அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள்.
“அக்கா.. அக்கா தாங்க்ஸ்கா.. மிக்க நன்றிக்கா...” என்று ஆர்ப்பாட்டமும் ஆர்வமுமாகச் சொன்னான் சுதன்.
அவள் இருந்த மனநிலையில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“என்னடா? எதற்கு என்னிடம் நன்றி சொல்கிறாய்?”
“என்னக்கா நீ? நீயும் அத்தானை மாதிரியே கேட்டால், நான் யாரிடம்தான் இதைச் சொல்வது? நன்றி அத்தான் என்று நான் சொன்னதற்கு, அவரும் உன்னைப்போல ‘அதை நீ உன் அக்காவிடம் சொல்லு. அவள்தான் இதையெல்லாம் செய்யச் சொன்னாள்’ என்கிறார். நீயும் அப்படியே சொல்கிறாயே.. சரி விடு. நான் இருவரிடமும் சொல்லிவிடுகிறேன். மிகவும் நன்றிக்கா.” என்று நெகிழ்வும் மகிழ்வுமாகக் குதூகலித்தான் அவன்.
இங்கே அவளுக்கோ தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை.
“என்னடா சொல்கிறாய்? கொஞ்சம் விரிவாகச் சொல்லு. என்ன நடந்தது? எதற்கு நன்றி?” இருக்கிற பிரச்சினையில் இவன் வேறு என்கிற சினத்தோடு அவள் கேட்க,
“போக்கா நீ. திரும்பத் திரும்ப ஒன்றுமே தெரியாதவள் மாதிரி நடிக்கிறாயே. நீ சொல்லாமல் தான் அத்தான் வந்து எனக்குப் புதுச் சைக்கிள், அதுவும் உடனேயே வாங்கித் தந்தாரா? மோட்டார்சைக்கிள் வாங்கித் தருவதாக வேறு சொல்லியிருக்கிறார். அது வாங்கத்தான் போனாராம். உடனேயே தரமாட்டார்கள் என்றபடியால் சைக்கிள் வாங்கினாராம். மோட்டார்சைக்கிள் வந்ததும் இதைப் பாலனிடம் கொடுக்கட்டுமாம். இதையும் நீதானே சொன்னாயாம். அப்பாவுக்கும் வீல்செயார் வாங்கலாம் என்றும் சொன்னார்..” என்று அவன் பரபரத்தபோது, ஒருவழியாக அவன் சொன்ன விசயத்தின் சாரம்சத்தைக் கிரகித்துக் கொண்டவளுக்கு, மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் மீண்டும் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.
இப்போது சுதனிடமிருந்து தொலைபேசியை வாங்கிச் சந்திரா பேசிக்கொண்டிருந்தார். காதுக்கருகில் கைபேசியைப் பிடித்தபடி கணவனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு, அவனது பரந்த முதுகும், இலகுவான மேல்சட்டை ஒன்றை அவன் மாட்டுவதும்தான் கலங்கலாகத் தெரிந்தது.
அவளிடம் அந்தக் கத்து கத்திவிட்டு போனவன் அவளின் குடும்பத்துக்காக இவ்வளவையும் செய்திருக்கிறானே.
அதுவரை நேரமும் இனி என்ன செய்யப்போகிறேன் என்று அவள் துடித்த துடிப்பை எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டானே!
அவளளவில் மிகப்பெரிய விசயமாகத் தெரிந்த ஒன்றை வெகு சாதாரணமாகச் செய்துவிட்டு, அதைப் பற்றி ஒருவார்த்தை தன்னும் அவளிடம் சொல்லாமல் நின்றவனின் அந்த விலகல் முதன் முறையாக அவளுக்கு வலித்தது.
அப்பாக்கு வீல்சேர் வந்தால் அவர் வேலைகளை அவரே செய்துகொள்வார். காலையிலும் மாலையிலும் அப்பாவுக்காக அம்மா சந்தைக்கும் வீட்டுக்குமாக ஓடத் தேவையில்லை. அவருக்கு ஓய்வாக இருக்கக் கொஞ்ச நேரமாவது கிடைக்கும். தம்பிகள் அலையத் தேவையில்லை. அவர்களுக்குப் படிக்கக் கூடுதல் நேரம் கிடைக்கும். எல்லாவற்றையும் ஒரு நிமிடத்தில் மற்றிவிட்டானே..
இவ்வளவையும் செய்தான் என்பதை விட அவளுக்காக ஒன்றைச் செய்திருக்கிறான் என்பதிலேயே நின்றது அவள் மனது!
அதுநாள் வரை, ஊருக்கு முன்னால் பெயருக்கு ஒரு மனைவியாகவும் உள்ளுக்குள் அவனுடைய உடல் தேவையைப் பூர்த்திச் செய்பவளாக மட்டுமே தான் இருக்கிறோம்.. அவளைப் பற்றிய, அவளின் உணர்வுகளைப் பற்றிய அக்கறை அவனுக்குக் கொஞ்சமும் இல்லை என்று எண்ணி நரக வேதனையில் உழன்றவளுக்கு, கணவனின் இன்றைய செயல் பெரும் ஆனந்தத்தைக் கொடுத்தது.
தன் மகிழ்ச்சியை, சந்தோசத்தை அவனிடம் பகிர எண்ணி, அங்கே தாய் என்ன சொல்லிக்கொண்டு இருந்தார் என்று கேட்காமலேயே, “அம்மா, நான் பிறகு பேசுகிறேன்..” என்று சொல்லி கைபேசியை அணைத்துவிட்டு அவள் நிமிர்ந்து பார்க்க, அறையில் அவனைக் காணோம்.
வேகமாகக் குளியலறையில், பால்கனியில் என்று தேடிப்பார்த்தாள். எங்கும் அவன் இல்லை.
கீழே சென்றுவிட்டான் என்று விளங்க மீண்டும் கண்ணைக் கரித்தது அவளுக்கு.
அவள் செய்தது பிழைதான். அதற்காக இப்படி முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளத்தான் வேண்டுமா?
அதுதான் தன்னால் முடிந்தவரை வார்த்தைகளால் அவளை வதைத்துவிட்டானே. இன்னுமா அவனுக்குக் கோபம் தீரவில்லை?
அவனை எப்படியாவது சமாதானப்படுத்த மனம் துடித்தது.
உடனேயே தண்ணீரை நன்கு அடித்து முகத்தைக் கழுவியவள், அழுததால் உண்டான கண்களின் சிவப்புத் தெரியாமல் இருக்க மெலிதான ஒப்பனைகளையும் முகத்துக்குச் செய்துகொண்டாள்.
தலையை வாரி, வேகவேகமாக உடை மாற்றிக்கொண்டு அவள் கீழே இறங்கியபோது, அமலன், விமலனுடன் தொழிலைப் பற்றி என்னவோ ஆலோசித்துக் கொண்டிருந்தான் அவள் கணவன்.
அமலனும் விமலனும் கையில் ஏதோ பழச்சாறுடன் இருப்பதைக் கண்டுவிட்டு, கணவனுக்கும் எடுத்துவர உள்ளே விரைந்தவள், எதிரே வந்த ராகினியின் கையில் பழச்சாறுடன் கூடிய கிளாசைக் கண்டுவிட்டு, “அவருக்கா அக்கா..” என்று கேட்டாள்.
“ம்ம்.. உன்னுடைய அவருக்குத்தான்..” என்று குறும்பும் புன்னகையுமாக ராகினி சொல்ல, லக்கியின் கன்னங்களில் மெல்லிய கதகதப்பு ஏறியது.
“தாங்கக்கா. நான் குடுக்கிறேன்..” என்று வாங்கிக் கொண்டவள், படபடக்கும் மனதோடு கணவனின் முன்னால் சென்று அதை நீட்டினாள்.
அவள் மனமோ என்னை ஒரு தடவையாது நிமிர்ந்து பாருங்களேன் என்று அவனிடம் கெஞ்சியது. அந்தக் கல்நெஞ்சுக்காரனோ அவளை நிமிர்ந்தும் பாராது ‘கிளாஸ்’ சை வாங்கிக்கொண்டான்.
மளுக் என்று கண்களில் நிறைந்துவிட்ட கண்ணீரை பெரும் சிரமப்பட்டு உள்ளுக்கு இழுத்துக் கொண்டாள் இலக்கியா.
அதற்கு மேலும் அங்கே நிற்கவும் முடியாமல், யாருடனும் சாதாரணமாகப் பேசவும் முடியாமல் மெதுவாகத் தோட்டத்துக்கு நழுவியவள், ஏன் என்றே இல்லாமல் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.
அங்கே அறையில் கணவனின் கடினமான வார்த்தைப் பிரயோகங்களை எண்ணிக் கண்ணீர் வடித்தவள் இப்போது அவனால் என்னை நிமிர்ந்து பார்க்கக்கூட முடியாதாமா என்று அழுதாள்.
இரவு உணவு முடிந்தபிறகு எல்லோருமாக அமர்ந்திருந்து எதைப்பற்றி என்றில்லாமல் சற்றுநேரம் பேசிக்கொண்டு இருப்பது அந்த வீட்டில் வழக்கம். அப்படி அன்றும் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
“அமலன், நாளைக்குக் காலையில் நீ எங்கும் போகவேண்டாம். அம்ருக் குட்டிக்கு சளி பிடித்திருக்கிறது. உடம்பும் மெலிதாகச் சுடுகிறது. நீ எதற்கும் ஆரணியுடன் போய் டாக்டரிடம் காட்டிவிட்டு வா..” என்றார் மஞ்சுளா.
“நாளைக்கா? நாளைக்குத் தர்சனும் இருக்கமாட்டான். பிறகு நான் எப்படிமா வரமுடியும்? எனக்கு வேலை இருக்கிறதே. வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். நான் என் காரை விட்டுவிட்டு அண்ணாவோடு போகிறேன். நீங்களும் ஆரணியுமாகப் போய்க் காட்டுங்கள்..” என்றான் அமலன்.
அதைக்கேட்டு திகைப்போடு கணவனைப் பார்த்தாள் இலக்கியா. நாளைக்கு எங்கே போகப் போகிறான்? அவளிடம் ஒன்றுமே சொல்லவில்லையே அவன்.
அவனோ மனைவியின் பக்கம் திரும்பவே இல்லை.
“எப்போ பார். வேலை வேலை வேலை! குடும்பத்தைக் கவனிக்காத அளவுக்கு என்ன வேலையோ உங்கள் நால்வருக்கும். ஆண்டவனுக்குத்தான் தெரியும்.” என்றார் மஞ்சுளா கோபத்தோடு.
“நாங்கள் அப்படி உழைப்பதால் தானேம்மா நீங்கள் எல்லோரும் இப்படிச் சொகுசாக வாழ்கிறீர்கள்..” என்றான் தர்சன், அன்னையை வம்புக்கு இழுக்கும் விதமாக.

Last edited by a moderator: