அத்தியாயம்-28
அதுவரை நேரமும் அங்கிருந்து எழுந்து ஓடிவிடத் துடித்த இலக்கியா தர்சனின் காரைக் கண்டதும் அந்த இடத்திலேயே உறைந்தாள்.
கணவனின் அன்பில் உறுதியடையாத அவள் மனது, வெண்பாவை கண்டுவிட்டு என்னை வெறுத்துவிடுவானோ, வீட்டை விட்டுத் துரத்திவிடுவானோ என்று பலதை எண்ணிக் கலங்கியது.
இவ்வளவு நாட்களும் அவனைவிட்டு தாய்வீடு செல்ல அவள்தான் துடித்தாள் என்பதை அந்தநிமிடம் மறந்தே போனாள்.
கையில் இருக்கும்வரை அருமை தெரியாமல் இருக்கும் ஒரு பொருளை இன்னொருவர் சொந்தம் கொண்டாடிவிடுவார்களோ என்று தெரிந்ததுமே, அந்தப் பொருளை எப்படியாவது தன் வசமே வைத்திருக்கப் போராடுமே குழந்தை, அந்த நிலையிலிருந்தாள் இலக்கியா.
அப்படி, அவனை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாமல் தவித்தவளின் சுவாசக் குழாயை பயப்பந்து ஒன்று உருண்டுவந்து அடைக்க, அடுத்து என்ன நடக்குமோ என்று நெஞ்சு பதறியது.
அவனாவது வெண்பாவை வெளியே போ என்று துரத்தி, அவளின் மனதைப் போட்டு வாட்டும் வேதனையையும் அவமானத்தையும் போக்கவேண்டும் என்று எதிர்பார்த்த அவளின் அதே மனது, அதைச் செய்வானா என்கிற சந்தேகத்தையும் எழுப்பித் தீயில் வெந்தது.
கணவன் தன்னுடைய எதிர்பார்ப்பை பொய்யாக்கி விடக்கூடாது என்கிற தவிப்புடன், வைத்தவிழி வாங்காது, ஏக்கமும் எதிர்பார்புமாய் அவள் தர்சனையே பார்க்க, அவனோ காரில் இருந்து இறங்கும்போதே மனைவியைப் பார்த்து அழகாய் புன்னகைத்தான்.
மஞ்சள் நிற சுடிதாரில் மலர்ந்து நிற்கும் சூரியகாந்தியாய் மனதை மயக்கியவளை ரசித்தபடி நடந்து வந்தவனின் விழிகளில், அவள் அருகில் அமர்ந்திருந்த மகேஸ்வரி படவே இல்லை.
வெண்பாவை கண்டதும் தர்சன் எப்படி நடந்துகொள்வானோ என்று எண்ணிய அவருக்கும் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. தன் பயத்தை யாருக்கும் காட்டாதிருக்க முயன்றபடி, “தர்சா..! நீ அப்பா ஆகிவிட்டாயாமே..” என்றபடி, எழுந்துசென்று சந்தோசமாக அவனை வரவேற்றார். ஆனாலும், அவர் குரலில் ஒருவித நடுக்கம் ஒன்று ஓடி மறைந்தது.
அப்போதுதான் அவரைக் கண்டு, “ஹாய் அத்தை. கொழும்பிலிருந்து எப்போது வந்தீர்கள்?” என்று உற்சாகமாகக் கேட்டுக்கொண்டு வீட்டுக்குள் வந்தவனின் விழிகளில் பட்டாள் வெண்பா.
பார்த்த கணமே சிரிப்பு மறைய, நடை நிற்க அவன் முகம் இறுகியது. ஆத்திரத்தில் கழுத்து நரம்புகள் புடைக்க, கைகள் இறுக அவன் தேகம் முழுவதும் கோபாக்கினி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. சினமும் சீற்றமுமாக உள்ளே பொங்கியதில் நெருப்புத் துண்டங்களாக மாறிவிட்ட விழிகள் இரண்டும் வெண்பாவை எரித்தன.
அக்கினிப் பிழம்புகளாய் அவளைத் தாக்கிய பார்வையில் உடல் முழுவதும் நடுங்க தானாக எழுந்துகொண்டது வெண்பாவின் தேகம்.
அதுவரை நேரமும் தாயின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை, நிலத்தில் விடப்பட்டதாலும், புதியவனைக் கண்டதாலும் வீறிட்டு அழத் தொடங்கியது.
ஆவேசம்மிக்க உணர்வுகளுக்குள் அமிழ்ந்துகொண்டிருந்த தர்சன் அந்த வீறிடலில் தன்னுணர்வு பெற்று அன்னையைப் பார்த்து முறைத்தான்.
செய்வதறியாது கைகளைப் பிசைந்த மஞ்சுளா எதையாவது சொல்லி மகனின் கோபத்தைக் குறைக்க எண்ணி, “அவளும் இரண்டாவது குழந்தைக்குத் தாயாகி இருக்கிறாள் தர்சன்...” என்று அவசரமாக ஆரம்பித்து, கணவன் வீட்டில் அவளை மதிப்பதில்லை என்பது உட்பட மகேஸ்வரி சொன்ன அனைத்தையும், மிக வேகமாகச் சொல்லிமுடித்தார்.
வெண்பா மீது அவருக்கு வெறுப்பே இருந்தாலும், தர்சனின் கோபத்தில் நியாயம் இருப்பது தெரிந்தாலும், கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணிடம் மகன் கை நீட்டுவதையோ அல்லது அநாகரீகமாக நடந்துகொள்வதையோ அவர் விரும்பவில்லை.
அவள் வாழ்க்கையில் நடந்தவைகளை அவள் முன்னிலையிலேயே தர்சனிடம் மஞ்சுளா சொன்னதில், வெண்பாவின் முகமோ கன்றிக் கருத்துச் சிறுத்துப் போனது. பின்னே, அவனுக்குச் சாபமிட்டுவிட்டுப் போனவள் இன்று அவளல்லவா அதை அனுபவிக்கிறாள்!
எரிக்கும் விழிகளில் ஏளனத்தையும் கலந்து அவளை நோக்கியவனின் பார்வையோ எல்லோரிடமும் சுழன்று கடைசியாக மனைவியிடத்தில் வந்து நிலைத்தது. அவள் விழிகளுக்குள் நுழைந்து அவள் மனதை ஆராய முற்பட்டது.
அவளோ பார்வையைத் தழைத்துக் கொண்டாள். ஆனாலும் வெண்பாவை வெளியே போ என்று சொல்லப் போகும் அவனுடைய சொல்லுக்காக அவள் செவிகள் கூர்மை பெற்றுக் காத்திருந்தன.
அந்த வீட்டுக்குள் வெண்பா அனுமதிக்கப்பட்டு, தான் அவமதிக்கப்பட்டதாக எண்ணியவள், தன்னுடைய மானத்தை, மரியாதையை, சுயகவுரவத்தைக் கணவனே காக்கவேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
இதுநாள் வரை, அவன் மனதில் வெண்பா இருக்கிறாள் என்று எண்ணி நித்தமும் வேதனையில் வெந்தவள், வெண்பாவை வெளியேற்றி அவன் மனதில் அவள் இல்லை என்று அவன் நிரூபிக்க வேண்டுமென்று எதிர்பார்க்க, அவனோ நொடியில் தன் முகப் பாவனையை மாற்றிக்கொண்டான்.
முகத்தில் சிரிப்பை படரவிட்டவன், “வா வெண்பா..” என்றான் இலகுவாக.
அதிர்ந்துபோய் விலுக்கென்று நிமிர்ந்த இலக்கியா, நம்ப முடியாமல் கணவனை வெறித்தாள். அவள் தலையில் இடியையே இறக்கிவிட்டானே!
எப்படி? எப்படி முடிந்தது அவனால்? அவனை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவளை சிரித்த முகமாக வரவேற்க எப்படி முடிந்தது? உங்களைப் பிடிக்கவில்லை என்று அவள் சொன்னதற்கே, அவனை அவமதித்ததாகச் சொல்லி அவளைத் திருமணம் செய்து தன் வெற்றியை நிலைநாட்டிய அதே கணவன், அவனையும் அவன் கட்டிய தாலியையும் தூக்கி எறிந்துவிட்டுப் போனவளை இன்முகமாக வரவேற்கிறான் என்றால் என்ன அர்த்தம்? அவன் இன்னும் அவளை மறக்கவில்லை என்பதா? அவள் திரும்பி வந்ததே போதும் என்று எண்ணுகிறானா?
எது எப்படி இருந்தாலும் அவன் மனதில் வெண்பா இன்னும் இருக்கிறாள்!
அப்படியானால் அவனுக்கு அவள் யார்? அவன் மனதில் அவளுக்கான இடம் என்ன?
அவனுடைய உடல் தேவைகளைத் தீர்ப்பதற்காக மனைவி என்கிற பெயரில் வரவழைக்கப்பட்டவளா? அல்லது ஊருக்கு முன்னிலையில் எனக்கும் மனைவி இருக்கிறாள் என்று காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட காட்சிப்பொருளா?
அவன்மேல் கரைகாணா காதல் கொண்டுவிட்ட நெஞ்சம் அவமானக் கன்றலில், கதறித் துடித்தது.
வெண்பாவுமே அதிர்ந்துபோய்த் தர்சனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனுடைய சுபாவத்துக்குத் தர்சன் அவளை வெட்டிக் கூறு போட்டிருக்கவேண்டும். குறைந்த பட்சம் கழுத்தைப் பிடித்தாவது வெளியே தள்ளியிருக்கவேண்டும். இது எதையும் செய்யாமல், அவன் அவளைப் பார்த்துப் புன்னகைத்ததும் அல்லாமல் வா வெண்பா என்றும் வரவேற்கிறானே. நம்பவே முடியாத அதிர்ச்சியில் சிலையாகி நின்றாள்.
அவள் மட்டுமல்ல, மஞ்சுளா உட்பட ராகினி, ஆரணி எல்லோருமே அவன் காட்டிய புதுமுகத்தில் அதிர்ச்சியும் வியப்புமாக அவனையே நோக்கினர்.
மகேஸ்வரியோ அதுவரை நேரமும் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை அப்போதுதான் வெளியேற்றினார். உடனேயே அங்கு நிலவிய அசாதாரணச் சூழ்நிலையை மாற்ற எண்ணி, “எப்படி இருக்கிறாய் கண்ணா? வேலைகள் எல்லாம் எப்படிப் போகிறது?” என்று விசாரித்து, பேச்சை மாற்ற முயன்றார்.
அவரைப் பார்த்துப் புன்னகைத்து, “எனக்கு என்ன அத்தை? மிக நன்றாக இருக்கிறேன். என்மேல் உயிரையே வைத்திருக்கும் மனைவி, அம்மா அப்பா, அண்ணா அண்ணிகள் என்று சந்தோசமாக இருக்கிறேன். போதாக்குறைக்கு விரைவில் நான் அப்பாவும் ஆகப்போகிறேன். எங்கள் குழந்தையின் ராசியாக்கும் அடுத்த மாதம் வவுனியாவில் இன்னொரு கடை திறக்கப் போகிறேன்.” என்றபடி, இலகுவாக நடந்துவந்து இலக்கியாவின் அருகில் அமர்ந்துகொண்டான். அது மட்டுமல்லாமல் அவள் பக்கம் இருந்த கையைத் தூக்கி அவளின் தோளைச் சுற்றிப் போட்டும் கொண்டான்.
அவனது செயலிலும் பேச்சிலும், உடலும் மனமும் அதிர வெறுப்பும் வேதனையுமாக அவனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு, தான் தன்னுடைய மணவாழ்க்கையில் தோற்றுவிட்டது புரிந்தது. காதலிலும்!
அவள் ஏழை வீட்டுப் பெண்ணாக இருக்கலாம். ஆனால், சுயமரியாதை அற்றவள் அல்லவே! தன்மானம் அற்றவள் அல்லவே!
அதற்குமேலும் அங்கே இருக்கமுடியாமல் மனம் கொந்தளிக்க, விருட்டென்று எழுந்தாள் இலக்கியா.
அப்படி வேகமாக எழுந்ததில் தலைசுற்றிவிட, நிற்கமுடியாமல் தடுமாறியவள் தன்னை அறியாமலேயே பற்றுக்கோலாகக் கணவனின் தோளையே பற்றிக்கொண்டாள்.
“பார்த்து பார்த்து..” என்று பதறி அவளைப் பற்றினான் தர்சன். “உடம்பு இருக்கும் நிலையில் எதற்கு இவ்வளவு அவசரம்?” என்று அக்கறையோடு அவன் கடிய, ‘ஆமாமாம்! இனி உனக்கு நான் எது செய்தாலும் பிழையாகத்தானே தெரியும்!’ என்று உள்ளம் கொதித்தது அவளுக்கு.
தலை சுற்றலோடு புண்ணாகிப்போன மனதின் வலியும் சேர்ந்துகொண்டதில், கண்கள் இருட்டத் தொடங்கியது. மயங்கி விழுந்துவிடப் போகிறோமோ என்று அஞ்சி, தலையை அவள் ஒரு கையால் பற்ற, “தலை சுற்றுகிறதா?” என்று கனிவோடு கேட்ட தர்சன், அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
அவனிடமிருந்து விலுக்கென்று விலகத்தான் மனமும் உடலும் போராடியது. ஆனால், பாறாங்கல்லாய் கனத்த தலையோ அவளையும் மீறி அவன் நெஞ்சில் சாய்ந்தது.
தன் இயலாமையை எண்ணி கண்கள் கரிக்கப் பார்க்க, எல்லோரின் முன்னும் அழுதுவிடக்கூடாது என்று பெரும் பிரயத்தனப் பட்டுத் தன்னை அடக்கப்பார்த்தாள் இலக்கியா.
அதில் கசங்கித் தெரிந்த அவள் முகத்தை நோக்கிவிட்டு “களைத்துத் தெரிகிறாய். வா.. வந்து கொஞ்சநேரம் படுத்திரு..” என்றுவிட்டு, “அம்மா! நாங்கள் மேலே போகிறோம். இவளுக்கு எதையாவது குடிக்கக் கொடுத்துவிடுங்கள்.” என்றவன், மனைவியைக் கைப்பிடியிலேயே அழைத்துச் சென்றான்.
வாயை திறந்தாலே கதறிவிடுவோம் என்கிற நிலையில் இருந்தவளின் நெஞ்சமோ, என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது, இதில் படுக்கை ஒன்றுதான் இல்லாத குறை என்று கொதித்தது.
ஆனாலும், அவனிடம் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறமாதிரி நான்கு கேள்விகள் கேட்கவேண்டுமே! அதற்கு அவனுடனான தனிமை வேண்டுமே! எனவே அவனோடு மாடிக்கு நடந்தாள்.
அறைக்குள் நுழைந்ததுமே, தலைச் சுற்றலும் சற்றே அடங்கியிருக்க, “போதும் உங்கள் நடிப்பு!” என்று சீறியவள், வெறுப்பும் ஆத்திரமுமாக அவனை உதறித் தள்ளினாள்.
மனைவியின் திடீர் கோபத்தில் குழப்பத்தோடு அவளைப் பார்த்தான் தர்சன்.
“நடிப்பா? நான் எதற்கு நடிக்கவேண்டும்?” என்று புரியாமல் அவன் கேட்க,
“அப்போதுதானே, ‘அடடா, இந்த நல்லவனைத் தவற விட்டுவிட்டோமே’ என்று, அங்கே கீழேயிருக்கிற அவள் வருந்துவாள்.” என்றாள் லக்கி ஏளனமாக.
பார்வை கூர்மை பெற, “எவள்?” என்று கேட்டான் தர்சன்.
“ஏன்? என் வாயால் அவளின் பெயரை கேட்பதில் அவ்வளவு ஆவலோ?”
“உளறாதே லயா!” என்றான் தர்சன் இறுக்கமான குரலில்.
“அவளின் பெயரைச் சொன்ன இந்த வாயால் இனிமேல் என் பெயரைச் சொல்லக்கூடாது!” என்று தன்னை மறந்து சீறினாள் இலக்கியா. “திருமணமாகி மூன்றுமாதம் கழித்துத்தான் என் பெயரே உங்கள் வாயில் வந்தது. ஆனால், அவளைக் கண்டதும் ‘ வா வெண்பா’ வா? ஓடிப்போனவளைப் பார்த்து பல்லைக்காட்ட வெட்கமாக இல்லை உங்களுக்கு?” என்றாள் ஆத்திரத்தோடு.

Last edited by a moderator: