அத்தியாயம்-30
மனதைப்போட்டு அலைக்கழிக்கும் கணவனின் நினைவுகளில் இருந்து தப்பிக்க எண்ணி, ஆசையாசையாக அவள் நட்டு வளர்த்த ரோஜாத் தோட்டத்துக்கு வந்திருந்தாள் இலக்கியா. அதனருகே இருக்கும் பலாமரத்தின் கீழே தந்தையின் சாய்மனைக் கதிரையைப் போட்டு, அதிலே சாய்ந்திருந்தாள்.
விழிகளோ, ஆசையாசையாக அவள் நட்டு வளர்த்த ரோஜாத்தோட்டத்தையே சுற்றிச் சுற்றி வந்தன.
ஆரம்பத்தில் கசப்போடு கழிந்தாலும் பிறகு பிறகு அங்கு மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்த மலர்களைப் போல்தானே அவளது மணவாழ்க்கையும் இருந்தது. திடீரென்று என்ன ஆகிற்று? அவள் செய்த பாவம்தான் என்ன? எதற்காக எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டாள்? அவளைச் சூழ்ந்துவிட்ட வெறுமைக்கு என்ன காரணம்? ஒன்றுமே புரியவில்லை!
ஆனால், கணவனைப் பிரிந்து வந்துவிட்டதன் வலி ஒருகணமும் அகலாது, அவளைப் போட்டு வருத்திக் கொண்டிருந்தது.
அங்கிருந்து வரும் வரைக்கும், அவன் மீது கோபமும், ஆத்திரமும் இருந்தது என்னவோ உண்மைதான்! அவளுக்கு மரியாதை இல்லாத இடத்தில் இருக்கக் கூடாது என்று எண்ணித்தான் அம்மா வீட்டுக்கு வந்தாள்.
அப்படித் தனியாக வந்தவளிடம், ஏன் வந்தாய்? எதற்கு வந்தாய்? மாப்பிள்ளை எங்கே? அவர் ஏன் வரவில்லை? என்று தாய் சந்தேகத்தோடு துருவித்துருவி கேட்ட கேள்விகளுக்கு, மழுப்பலாக, அவர் நம்பும் வகையில் பதில் சொல்லி முடிக்கும் வரையிலும் கூட அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை.
மஞ்சுளாவும் தன் பங்குக்கு அழைத்து, மருமகள் அம்மா வீட்டில் கொஞ்ச நாட்களுக்கு இருந்துவிட்டு வரட்டும் என்று சொல்லிவிடவும் சந்திரா முழுவதுமாகச் சமாதானமாகிவிட்டார்.
அதற்குப் பிறகு, தாய்மை அடைந்த மகள் வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்று பெற்றவர்கள் அடைந்த சந்தோசத்திலும், சகோதரர்கள் காட்டிய மகிழ்ச்சியிலும், அவளைப் பார்த்துப் பார்த்துக் கவனித்ததிலும் மனம் கணவனை நாடி ஓடத் தொடங்கியது.
ஒற்றை ஆளாகா நின்று அவன் அவளைத் தாங்கிய விதமும், நேசத்தோடு அரவணைத்துச் சென்றதும், ஏதேதோ மனக்குழப்பங்களில் ஆழ்ந்திருப்பவள் சில வேளைகளில் அவனிடம் சீறிச் சினந்த போதும், கோபக்காரனான அவனே அவளை அனுசரித்துப் போனதும் கண்முன்னால் வந்துநின்று, அது இன்னுமின்னும் வேண்டும் என்று ஏங்க வைத்தது.
அவன் கையணைப்பில் அடங்கவேண்டும் போலிருந்தது. முடிச்சுருள்கள் நிறைந்துகிடக்கும் மார்புக்குள் முகத்தைப் புதைக்கவேண்டும் போலிருந்தது. அவன் தேகச்சூட்டில் குளிர் காயவேண்டும் போலிருந்தது. அவனுடைய அக்கறையான கவனிப்புக்குள் கரையவேண்டும் போலிருந்தது.
அங்கிருந்து வரும்வரைக்கும் வந்துவிட வேண்டும் என்று இருந்த நிலை மாறி, ஏனடா வந்தோம் என்றிருந்தது இப்போது. அந்தளவுக்குக் கணவனின் நினைவுகள் அவளைப்போட்டு ஆட்டிப் படைத்தன.
வெறுமையாய் இருந்த அவளின் இதயக்கூட்டுக்குள் வீறுநடை பயின்றுவந்து அவன் சிம்மாசனம் இட்டுவிட்டது அவள் அறிந்ததுதான்! ஆனால், அவளின் உடலின் அணுக்கள் தொடங்கி, உயிரின் துடிப்பில் நிறைந்து, உணர்வுகளின் ஆதிக்கத்தில் கூட நிறைந்திருப்பான் என்பது அவள் எதிர்பாராதது!
தான் இவ்வளவு தூரத்துக்குக் கணவனை நேசித்த போதிலும் அதன் எதிரொலி அவனிடம் சற்றும் இல்லையே!
இருந்திருக்க அவளை இப்படித் தாய்வீட்டில் விட்டு வைத்திருப்பானா? இதோ, அவள் வந்து இரண்டு நாட்கள்.. நீண்ட நெடிய இரண்டு நாட்கள் ஆகிவிட்டதே!
அவளுக்கு இருக்கும் இந்தத் துடிப்பும், தவிப்பும், ஏக்கமும் அவனுக்கு இல்லையா?
உடலிலும், உயிரிலும் கலந்துவிட்ட கணவனை நினைவுகளிலும் சுமந்தபடி இருந்தவளின் முன்னால், நிஜத்திலும் அவனே வந்து நின்றபோது, நம்ப இயலாமல் விழிகளை விரித்துப் பார்த்தாள் இலக்கியா.
அவன்தானா? அல்லது அவளின் கற்பனையா?
கண்களைக் கசக்கிவிட்டு திரும்பவும் பார்த்தாள்.
பார்த்தவளின் விழிகள் வியப்பாள் அகன்றன!
முகம் அதிகாலைத் தாமரையாய் மலர்ந்தது!
வந்துவிட்டான்! அவளைத் தேடி அவள் கணவன் வந்தே விட்டேன்!
இது போதுமே!
“அத்தான்..” ஆவலும் ஆசையுமாகச் சத்தமாகத்தான் அழைத்தாள். ஆனால், உதடுகள் அசைய, அதனூடாகக் காற்று மட்டுமே வெளிவந்தது.
மலர்ந்து விகசித்த மனைவியின் முகத்தைப் பார்த்து அழகாய்ப் புன்னகைத்த தர்சன், கைகளை விரித்துக் கண்களால் வாவென்று அழைத்தான்.
வில்லிலிருந்து புறப்பட்ட நாணாய், சாய்கதிரையில் இருந்து வேகமாக எழுந்தவள், புள்ளிமானாய் துள்ளியோட முயல, “ஏய்! பார்த்து பார்த்து!” என்று பதறியவன், ஒரே எட்டில் மனைவியை எட்டி அவளைத் தன்னுள் புதைத்துக் கொண்டான்.
“உடல்நிலையைக் கொஞ்சமும் யோசிக்க மாட்டாயா?” என்று கரிசனத்தோடு கடியவும் தவறவில்லை அவன்.
அவளும் மெல்லிய விசும்பலுடன், அவன் கைகளுக்குள் அடங்கிப்போனாள். மனைவியின் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்த தர்சன், “அதுதான் நான் வந்துவிட்டேனே. இன்னும் எதற்கு அழுகிறாய்?” என்றான், இதமான குரலில்.
“உடனேயே ஏன் வரவில்லை? நான் பயந்தே போனேன்.” என்று விசும்பினாள் இலக்கியா.
அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறாள்!
மனம் நெகிழ, “என்னை வேண்டாம் என்றுவிட்டு வந்தவள் எதற்காக என்னைத் தேடினாயாம்?” சிரிப்பும் சலுகையுமாக அவன் கேட்க, விசுக்கென்று அவன் நெஞ்சிலிருந்து நிமிர்ந்தவள், அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.
“ஓ! இதுதான் சாக்கென்று நான் இல்லாமல் நிம்மதியாக இருந்தீர்கள் போல..” என்று வேகமாகச் சொல்லத் தொடங்கியவளின் விழிகளில், அப்போதுதான் அவன் முகம் பட்டது.
சவரம் செய்யப்பட்ட முகமாக இருந்தபோதிலும், விழிகளில் தெரிந்த சோர்வும், முகத்தில் தெரிந்த களைப்பும் அவள் இல்லாமல் அவனும் சந்தோசமாக இல்லை என்று சொல்லின.
மனம் கசங்க, விழிகளில் நீர் கோர்க்க, ஒரு கையை உயர்த்தி அவன் கன்னம் பற்றி, “சாப்பிட்டீர்களா?” என்று தழுதழுத்தாள்.
அவள் கரத்தின் மீது தன் கரத்தை வைத்து கன்னத்தோடு சேர்த்து அழுத்தி, விழிகளை ஒரு தடவை மூடித் திறந்து, “ம்..” என்றவன், “நீ?” என்று கேட்டான்.
“ம்ம்.. எனக்கு என்ன? வேண்டாம் வேண்டாம் என்றாலும் வாய்க்குள் திணித்துவிடுவார்கள் எல்லோருமாகச் சேர்ந்து..” என்றவளை, அவன் விழிகளும் இப்போது அளந்தன.
அதன் பயனாய் சற்றே கோபமுற்றவனாய், “இதென்ன கோலம்? பழைய நைட்டியும், கலைந்த தலையும், ஓட்டுப்பொட்டுமாய்.. என்ன இது? உன் அம்மா கூட ஒன்றும் சொல்லவில்லையா?” என்றான், அவளின் தோற்றத்தில் அதிருப்தி உற்றவனாய்.
அவனுக்கு எப்போதும் அவள் குங்குமம் இட்டுக்கொள்வதுதான் பிடிக்கும். அதனாலேயே பார்த்துப் பார்த்து நெற்றியிலும் வகிட்டிலும் இட்டுக்கொள்வாள் இலக்கியா. ஆனால், இந்த இரண்டு நாட்களும் கணவன் இல்லாமல் எல்லாமே கசந்து வழிந்தது அவளுக்கு.
“அம்மா சொன்னார்தான். எனக்குத்தான் ஒன்றுமே பிடிக்கவில்லை..” என்றாள் அவள் சலிப்புடன்.
“ஏன்?”
“ப்ச்! யார் பார்க்க என்று சீவி சிங்காரிக்கச் சொல்கிறீர்கள்?”
கலைந்துகிடந்த முடிகளை அவள் காதோரமாக ஒதுக்கிவிட்டபடி, “நான் பார்க்கத்தான்!” என்றான் அவன் அமர்த்தலாக.
“அங்கே இருந்துகொண்டு என்னைப் பார்ப்பீர்களாக்கும்..”
“எங்கே இருந்தாலும் என் கண்கள் உன்னை மட்டும்தான் பார்க்கும்!” என்றான் அவன்.
இவன் என்ன சொல்கிறான்? புரியாமல் அவள் அவனை நிமிர்ந்துபார்க்க, “என்னை ஆறுதலாகப் பார்க்கலாம். முதலில் வா, வந்து முகத்தைக் கழுவு..” என்றவன், மனைவியோடு கிணற்றடிக்கு நடந்தான்.
அன்றுபோலவே, கிணற்றில் இருந்து நீரை அள்ளி அவன் வாளியில் ஊற்றவும், முகம் கழுவிக்கொண்டாள் இலக்கியா.
“எங்கே ஒருவரையும் காணோம்?”
“அப்பா க..” என்று ஆரம்பித்தவள், சொல்லத் தொடங்கியதை நிறுத்திவிட்டு கணவனை முறைத்தாள். அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.
“புதிதாகக் கடை ஒன்றைத் திறந்து கொடுத்தவருக்குத் தெரியாதா அப்பா எங்கே போயிருப்பார் என்று?” என்று அவள் வெடுக்கென்று கேட்க, புன்னகை அகன்றதே ஒழிய ஒன்றும் பேசவில்லை அவன்.
“தம்பிகள் பள்ளிக்கூடம். அம்மா தோட்டத்தில்.” என்றாள், வீடு நோக்கி நடந்தபடி.
அங்கே, அவளின் அறைக்குள் சென்று முகத்துக்குப் பவுடர் ஒற்றி, நெற்றியிலும் வகிட்டிலும் அவன் விரும்பியது போலவே குங்குமத்தை இட்டும் கொண்டவள், தலையை வாரி ஒற்றைப் பின்னலாகப் பின்னிக்கொண்டாள்.
இதையெல்லாம், முதுகுக்குத் தலையணை வைத்துக் கட்டிலில் அமர்ந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தான் தர்சன்.
அலமாரியைத் திறந்து ஒரு சேலையை வெளியே எடுத்தவளுக்குத் திடீரென்று ஒரு தடுமாற்றம். அவன் முன்னால் சேலை மாற்றுவதா? அவர்களுக்குள் எந்தப் பிணக்குகளும் இல்லை என்று இருந்த நாட்களில் அதெல்லாம் சாதாரணம் தான். இல்லாவிட்டாலும், அந்த வம்புக்காரன் வெளியே போகமாட்டான் தான். வெளியே கோபமாக நடித்தாலும் அவளுக்கும் அவனுடைய அந்த ஆதிக்கம் பிடிக்கும் தான். ஆனால் இப்போது…
கையில் பற்றியிருந்த சேலையோடு அவனைத் திரும்பிப் பார்த்தாள் இலக்கியா.
இதழ்கடையோரம் துளிர்த்த சிரிப்பை உதட்டுக்குள் அடைத்து, என்ன என்பதாய் ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டான் அவளின் காதல் கள்வன்!
‘நான் சேலை மாற்றவேண்டும், வெளியே போ’ என்றா சொல்லமுடியும்?
முதலில் அது எவ்வளவு அபத்தமானது?
அதோடு, இவள் சொன்னதும் அவன் செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான்!
கன்னங்களில் கதகதப்பு ஏறினாலும், ஒன்றுமில்லை என்பதாகத் தலையை அசைத்தவள், வேறு வழியின்றி அவனுக்கு முதுகாட்டி நின்று சேலையை மாற்றத் தொடங்கினாள்.
நெஞ்சுக்குள் ஒருவித படபடப்பும், எதிர்பார்ப்புமாய்ச் சேலையைச் சுற்றிக்கொண்டு இருந்தவளை பின்னாலிருந்து கட்டிக்கொண்டான் தர்சன்.
எதிர்பார்ப்பு நிறைவேறியதில், நெஞ்சம் துள்ளியது.
கழுத்தோரமாய் அவனுடைய சூடான உதடுகள் அழுந்தியபோது, அதற்காகவே ஏங்கிக்கிடந்தவளின் உடல் அவன் கரங்களில் குழையத் தொடங்க, கையில் பற்றியிருந்த சேலை முந்தானை நழுவியது. விழிகளோ மயக்கத்தோடு மூடிக்கொண்டன.
கொடியெனத் துவண்டவளை தன்னோடு சாய்த்துக்கொண்டு, “கட்டிய புருஷனை வெளியேற்றிவிட்டு சேலை மாற்றும் திட்டமா?” என்று கேட்டவனின் உதடுகள், அதற்குத் தண்டனையாக அவளின் இதழ்களைச் சிறையிட்டன.
நொடிகள் பல கடந்தும் சிறைப்பிடித்த உதடுகளே மனமிரங்கி விடுதலை செய்யும்வரை, அவள் இதழ்கள் அந்த விடுதலையை வேண்டவே இல்லை!
முகம் புன்னகையால் விரிய, விழிமூடி மயங்கிக் கிறங்கி அவன் மார்பிலேயே துவண்டு கிடந்தவளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் தர்சன்.
சில கணங்கள் அந்தச் சுகத்தை அனுபவித்துவிட்டு மெல்லத் திறந்தவளின் விழிகளில், கள்ளுண்ட வண்டாய் அவனது முத்தங்களைத் தின்ற காதலின் மயக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது. முகமோ அவன் பார்வையில் செக்கச் சிவந்து போனது.
“மிகுதிச் சேலையை நான் கட்டிவிடவா?” கள்ளச் சிரிப்புடன் கேட்டவனின் கைகள் சில்லறைச் சில்மிசங்களில் ஈடுபடத் தொடங்க, அபோதுதான் தான் நிற்கும் நிலையை உணர்ந்தாள் இலக்கியா.
வெட்கிப்போய் வேகமாக அவனிடம் இருந்து விலகி, விழுந்துகிடந்த முந்தானையை எடுத்துத் தன்னைச் சுற்றிக்கொண்டவள் அவனைப் பார்த்து முறைக்க முயன்றபோது, சத்தமாக நகைக்கத் தொடங்கினான் தர்சன்.

Last edited by a moderator: