அத்தியாயம் - 32
அப்போ, அவள் கணவன் முதன் முதலாக அவளோடுதான் வாழ்ந்திருக்கிறான். அவனுக்கு அவள் இரண்டாம் தாரம் அல்ல! ஊருக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். அவனுக்கு.. அவனுடைய தாரம் அவள் மட்டும்தான்!
அதுநாள் வரை அவளைப்போட்டு அழுத்திய மனப்பாரம் கற்பூரமாகக் கரைந்து போனது. நினைக்க நினைக்க மனம் இனித்தது. இரண்டாம் தாரம் என்கிற வாழ்க்கையையே அவன்மேல் வைத்துவிட்ட அன்பினால் ஏற்றுக்கொண்டவளுக்கு, இன்று சொர்க்கமே கிட்டியதுபோல் மனம் மகிழ்ந்தது.
இவ்வளவு நாட்களும் அர்த்தமற்ற எத்தனை எத்தனை கற்பனைகளைக் கண்டு வேதனையுற்றாள். அத்தனையும் வீண்! அவனையும் வருத்தி, அவளும் வருந்தி.. கடவுளே..
“இதையேன் நீங்கள் முதலே சொல்லவில்லை அத்தான்?” ஆற்றாமையோடு கேட்டாள்.
“ஏன்? உனக்குத் தெரியாதா?” என்று கேட்டான் அவன்.
மறுப்பாகத் தலையை அசைத்தாள் அவள். “உங்களைப் பிடிக்கவில்லை என்று ஏன் சொன்னேன் என்று தெரியுமா? அதையாவது நீங்கள் என்னிடம் கேட்டிருக்கலாமே அத்தான்.”
“நான் கேட்டு நீ சரியான காரணம் எதையாவது சொல்லிவிட்டால், அதன்பிறகு எப்படி உன்னோடு வாழ்வது?”
அதைக்கேட்டு ஐயோ என்றிருந்தது அவளுக்கு. “அதை நீங்கள் கேட்டிருக்க எந்தப் பிரச்சினையும் வந்திருக்காதே. நீங்கள் இன்னொருத்தியை காதலித்து, மணந்து, அவளோடு உடலாலும் வாழ்ந்தவர் என்று எண்ணித்தான் உங்களைப் பிடிக்கவில்லை என்று சொன்னேன்.” என்றாள் அவள்.
அதைக் கேட்டுக்கொண்டவன் அவளையே பார்த்தான்.
அந்தப் பார்வையின் பொருள் புரியப் புரிய அவள் முகம் கசங்கத் தொடங்கியது.
இதழ்கள் துடிக்க, “அ.. அவளைக் கா..தலித்தீர்களா?” என்று கேட்டவளின் விழிகள், இல்லை என்று சொல்லிவிடு என்று மன்றாடியது.
அந்த விழிகளைப் பார்க்கமுடியாமல் பார்வையைத் திருப்பிக் கொண்டான் தர்சன். “என்றைக்கு அவள் நான் கட்டிய தாலியை கழட்டி எறிந்துவிட்டு எங்கள் வீட்டை விட்டு வெளியே போனாளோ, அன்றே என் மனதிலிருந்தும் வெளியே போய்விட்டாள் லயா. அதன்பிறகு என் மனதில் இருந்தது எல்லாம் அவள் செய்த துரோகம் மட்டும்தான். அதனால் நான் பட்ட அவமானமும், உண்டான கடுங்கோபமும், ஆத்திரமும் தான். ஆனால்… அதற்கு முதலில்.. “ என்றவன் மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.
கண்களில் நிறைந்துவிட்ட நீரோடு நின்றவளைப் பார்க்கமுடியாமல் மீண்டும் முகத்தைத் திருப்பிக்கொண்டு, “நெஞ்சாரக் காதலித்தேன்.” என்றான் தர்சன்.
அவள் விழிகளில் இருந்து அருவியாகக் கண்ணீர் வடிவதை உணர்ந்தாலும், ஒரு வேகத்துடன் சொல்லத் தொடங்கினான். “சின்ன வயதிலேயே எனக்கு அவளை மிகவும் பிடிக்கும். அதை வாயால் சொல்லத் தெரியாமல் தான் அவளை எப்போதுமே சீண்டுவேன். பிறகு பத்து வருடங்கள் கழித்து அவளைப் பார்த்ததுமே பிடித்தது. பார்த்த அன்றே என் காதலைச் சொல்லியும் விட்டேன். அவளை எதற்காகவும் இழக்க முடியாது என்றுதான் வலுக்கட்டாயமாகத் தாலியும் கட்டினேன். அவளுக்காக அப்பாவையே எதிர்த்து நின்றேன்.” என்று அவன் சொன்னபோது, சோபாவில் தொய்ந்து விழுந்து, முகத்தை மூடிக்கொண்டு குமுறிக் குமுறி அழத்தொடங்கினாள் இலக்கியா.
“லயா..” பாய்ந்துவந்து மனைவியைத் தாங்கினான் தர்சன்.
“அழாதே லயா. அதெல்லாம் என் வாழ்க்கையில் முடிந்துபோன அத்தியாயங்கள். வெறும் குப்பைகள். இன்று என் மனதில் இருப்பவள் நீதான். நீ மட்டும்தான்! அதை நீ நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் கண்ணம்மா. அவள் அப்படி ஓடியது கூட நல்லதற்குத்தான் என்றுதான் இப்போதெல்லாம் நினைக்கிறேன். அதனால்தானே என் வாழ்வில் வசந்தமாக நீ வந்தாய். என்னை நம்புடா. நீ இல்லாவிட்டால் என் வாழ்க்கையே சூன்யமாகியிருக்கும் லயா..” என்று அவன் கெஞ்சியபோது,
“மெ..மெய்தானே. நீங்கள் பொய் சொல்லவில்லையே..” கண்களில் உயிரைத்தேக்கி கேட்டாள் இலக்கியா.
நெஞ்சம் உருக மனைவியை இறுக்கி அணைத்துக்கொண்டான் தர்சன்.
அவள் நெற்றியில் இதழ்களை ஒற்றியெடுத்து, “உன் கணவன் என்றைக்காவது பொய் சொல்லி நீ கேட்டிருக்கிறாயா?” என்று கேட்டான் அவன்.
அவன் பேச்சை அவள்தான் நம்பாமல் இருந்திருக்கிறாளே தவிர, அவன் பொய் சொன்னது இல்லைதான்.
“இல்லை..” என்று அவள் முணுமுணுக்க,
“பிறகு என்னடா?”
“பிறகு.. பிறகு ஏன் அவளைக் கண்டதும் வீட்டை விட்டுத் துரத்தாமல் புன்னகையோடு வா என்று கூப்பிட்டீர்கள்.” அழுகையில் இதழ்கள் துடிக்க அவள் கேட்டபோது,
“ப்ச்! என்ன லயா இது? முதலில் இப்படி அழுவதை நிறுத்து. இனி என் மனைவிக்குப் பிடித்தமாதிரி மட்டும்தான் நடக்கவேண்டும் என்று நான் நினைத்திருக்கும் இந்த நேரத்தில் இப்படி அழுது கரைகிறாயே. இனியும் அழுதாய் என்றால் நான் ஒன்றுமே சொல்லவில்லை.” என்று கடிந்தவன், அவள் கன்னங்களைத் துடைத்துவிட்டான்.
வேகமாகத் தானும் தன் கண்களைத் துடைத்தபடி, “இல்லை. இனி அழவில்லை. நீங்கள் சொல்லுங்கள்.” என்றாள் லக்கி.
மனைவியின் அந்தச் செயலில், முழுவதையும் அறிந்துகொள்ளாமல் அவளால் அமைதியாக இருக்க முடியாது என்று அவனுக்குப் புரிந்தது. அவனுக்குமே இன்றோடு அனைத்தையும் பேசி முடித்துவிட்டால் நல்லது என்றுதான் தோன்றியது.
எனவே மனைவியின் அருகிலேயே அமர்ந்து, அவள் கை ஒன்றை எடுத்துத் தன் கைகளுக்குள் அடக்கிக்கொண்டு, “என்மேல் பிழையை வைத்துக்கொண்டு அவளை நான் எப்படித் துரத்தமுடியும் லயா?” என்று கேட்டான்.
“நீங்கள் என்ன பிழை செய்தீர்கள்? வீட்டைவிட்டு ஓடு என்று அவளிடம் நீங்களா சொன்னீர்கள்? அவளுக்காகச் சும்மா வக்காலத்து வாங்காதீர்கள்!” என்றாள் லக்கி கோபத்தோடு.
அவள் தாடையைப் பற்றித் தன் புறமாகத் திருப்பி, அவள் விழிகளையே பார்த்து, “என் மனதில் நீ மட்டும்தான் இருக்கிறாய் என்பதை நம்புகிறாயா?” என்று கேட்டான்.
இப்போது எதற்கு இந்தக் கேள்வி என்று தோன்றினாலும், “நிச்சயமாக!” என்று, அவளும் அவன் விழிகளைப் பார்த்துச் சொன்னாள்.
“அப்படியென்றால், இனி நான் சொல்லப்போவதை ‘அவளுக்காகப் பேசுகிறேன்’ என்கிற தவறான எண்ணம் இல்லாமல் நீ கேட்கவேண்டும். சரியா?” என்று கேட்டான்.
அவனை அவள் சந்தேகப்படுவதாக நினைத்துவிட்டானா?
“உங்கள் மீது நீங்களே பிழையைப் போடுகிறீர்களே என்கிற கோபத்தில்தான் அப்படிச் சொன்னேனே தவிரச் சந்தேகத்தில் இல்லை.” என்றாள் தெளிவான குரலில்.
“அந்தக் கோபத்தையும் விடுத்து நான் சொல்வதைப் பற்றி யோசி.” என்று ஆரம்பித்தான் தர்சன்.
“முதன் முதலாக அவர்களின் வீட்டு வாசலில் வைத்து என்னைப் பார்த்துவிட்டு எங்கள் வீட்டுக்கே வரமாட்டேன் என்று சொன்னவளை மிரட்டித்தான் கூட்டிக்கொண்டு வந்தேன். அவளைப் பார்த்துவிட்டு எங்கள் வீட்டுக்கு அவளை மருமகளாக்கப் போவதாகச் சொன்னது அம்மா. எனக்கும் அவளைப் பிடித்திருந்ததால், அம்மா சொன்னதையும் கேட்டுவிட்டு அவளைக் காதலிப்பதாகச் சொன்னேன். அன்றே, அந்த நிமிடமே என்னைப் பிடிக்கவில்லை என்று அவள் சொல்லிவிட்டாள். அவளின் மறுப்பை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், என்னுடனான திருமணத்துக்குத் தயாராக இரு என்று அவளை அதட்டி உருட்டினேன். காதலை நேசித்துப் பெறலாம். யாசித்தும் பெறலாம். ஆனால், அதிகாரமாகப் பெறமுடியுமா?” என்றவன், சற்றுநேரம் அமைதியாக இருந்தான்.
செய்துவிட்ட தப்புக்களை எண்ணி வருந்தினான் போலும், சிறு அமைதியின் பின் மீண்டும் தொடர்ந்தான்.
“யோசித்துப்பார். அன்புக்கு அடங்கலாம். பாசத்துக்கு அடங்கலாம். ஆனால், அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் அடங்க முடியாதே. உரிமையற்ற அதிகாரத்துக்கு யாராலும் பணிந்துபோக முடியாதே! அடக்குமுறை எங்கே அதிகரிக்கிறதோ அங்கேதானே வெடிக்கத் தோன்றும். அதைத்தான் அவள் செய்தாள்..
“என் செய்கைகள், என்னுடைய பிடிவாதங்கள் அவளைக் கோபப் படுத்தியிருக்கிறது. அத்தையிடமும் நான் காதலிப்பதாகச் சொன்னதை, மிரட்டியதை சொல்லியிருக்கிறாள். அதை அவரும் பெரிதாக எடுக்கவில்லை, என் அம்மாவும் பெரிதாக எடுக்கவில்லை. எல்லோருமே அவர்களை அறியாமலேயே எனக்குச் சாதகமாகத்தான் நடந்துகொண்டார்கள். அதில் கோபமுற்றவள் என்னை வெறுப்பேற்ற வேண்டும் என்றே அமலனுடனான திருமணத்துக்குச் சம்மதம் சொல்லியிருக்கிறாள். அந்த ஆத்திரத்திலும், அவளை இழக்க முடியாமலும் தாலி கட்டிய நானும், அவளுக்கும் ஒரு மனதிருக்கும். அதிலும் ஆசைகள் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை.” என்றான் குற்ற உணர்ச்சியுடன்.
இவர்களுக்குள் இவ்வளவு நடந்திருக்கிறதா என்கிற அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள் இலக்கியா. அவள் அறிந்தது எல்லாம், தர்சனுக்கும் வெண்பாவுக்கும் திருமணம் நடந்தது. அதுவும் காதல் திருமணம். பிறகு வெண்பா வீட்டை விட்டு இன்னொருவனோடு ஓடிவிட்டாள் என்பதே!
இங்கே கதையே வேறாக இருக்கிறதே!
ஒருவழியாகத் தன்னைச் சமாளித்துக்கொண்ட லக்கி, “அவளாவது, ‘நான் வேறு ஒருவரைக் காதலிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கலாமே அத்தான். அப்படிச் சொல்லியிருக்க நீங்கள் தாலி கட்டியிருக்க மாட்டீர்களே..” என்று அவனுக்காக, அவனிடமே கேட்டாள்.
மனைவியின் மனம் புரிந்து, அவளைப் பார்த்து வெறுமையாகப் புன்னகைத்தான் தர்சன். “அவள் சொல்ல நினைத்திருந்தாலும் என் பேச்சு சொல்ல விட்டிருக்காது லயா. ஏனெனில், ‘இதற்குமுதல் உனக்கு வேறு யாரையாவது பிடித்திருந்தால் அவனை இன்றோடு மறந்துவிடு’ என்று நானே அவளிடம் சொல்லியிருக்கிறேன். சும்மாவல்ல, அதிகாரமாக. பிறகு எப்படி என்னிடம் சொல்வாள்? சொல்லியிருந்தாலும் அப்போது நான் நம்பியிருப்பேனா என்று கேட்டால் இல்லைதான்.” என்றான் தர்சன் குன்றளோடு.
அதைக்கேட்டபோது, இதென்ன அநியாயம் என்றுதான் தோன்றியது அவளுக்கு. நமக்குப் பிடித்தவர்களுக்கு நம்மைப் பிடித்திருக்கிறதா என்று தெரிந்துகொள்வது எவ்வளவு முக்கியம். அதை எப்படி யோசிக்காமல் விட்டான் இவன்?
உன் மனதில் இருக்கிறவனைத் தூக்கி வெளியே போடு என்றதும் தூக்கிப்போட அது என்ன குப்பையா? தர்சனை மறந்துவிடு என்று யாராவது சொன்னால் அவளால் முடியுமா என்ன?
நெஞ்சார நேசிக்கும் எந்தப் பெண்ணும் காதலனை கணவனின் இடத்தில்தான் நிறுத்தியிருப்பாள். அப்படியிருக்க, காதலித்தவனை மறக்க வெண்பாவாள் மட்டும் எப்படி முடியும்?
மனதில் யாரும் இல்லாதபோதும், அவன் அதிகாரமாக அவளைத் தொட்டு, கணவன் என்கிற உரிமையை நிலை நாட்டியபோது அவள் பட்ட துன்பம் எத்தனை? விட்ட கண்ணீர் எத்தனை? அப்படியிருக்க, இன்னொருவனை விரும்பியவளின் கழுத்தில் தாலியை திடீரென்று கட்டினால் அவளுக்கு எப்படி இருந்திருக்கும். மனதளவில் எவ்வளவு வேதனைகளை அனுபவித்திருப்பாள்?
நினைக்கவே மனதுக்குள் என்னவோ செய்தது இலக்கியாவுக்கு.
நாம் வெறுக்கும் ஒருவர், நமக்குப் பிடிக்காத ஒன்றை அதிகாரமாகச் செய்யச் சொன்னால், அதற்கு எதிராக நடக்கவேண்டும் என்கிற வெறி தோன்றுவது இயல்புதானே. எல்லோரும் மனிதர் தானே. கோபங்களும், ஆத்திரங்களும் எல்லோருக்கும் பொதுதானே. வெண்பா அதற்கு விதிவிலக்கல்லவே!
ஆனாலும், தன் மனதை அவள் வேறு யாரிடமாவது சொல்லியிருக்கலாமே. அதை விட்டுவிட்டு தாலியை கழட்டி எறிந்துவிட்டு, அதுவும் அமலனின் திருமணத்தன்று பழிவாங்கும் எண்ணத்தோடு வீட்டை விட்டு வெளியேறியதை சரி என்று சொல்ல முடியாதே!
அதைக் கணவனிடமே கேட்டாள் இலக்கியா.
“இல்லை. அவள் செய்தது சரி என்று நானும் சொல்லவில்லை. மிகப்பெரிய பிழைதான். மன்னிக்கவே முடியாததுதான். ஆனால், அந்தப் பிழையை அவளைச் செய்யவைத்தது யார்?” என்று கேட்டான் அவன்.
பதிலின்றி அவள் பார்க்க, “கிளிநொச்சிக்கே அத்தையின் வற்புறுத்தலால் தான் வந்திருக்கிறாள். பிறகும், என்னிடம் இருந்தும், எங்கள் வீட்டிலிருந்தும் விலகத்தான் நினைத்தாள். எங்கள் மீது முழு வெறுப்போடு இருந்தவளை, அமலனுடனான திருமணம் என்று வீட்டினரும், என்னுடனான திருமணம் என்று நானும் என்று, ஏதோ ஒருவகையில் அவளைத் துன்புறுத்தியது நாங்கள். அதனால் உண்டான ஆத்திரத்தோடு, சிறு வயதுமுதல் என் மீது அவள் வளர்த்துக்கொண்ட வெறுப்பும் சேர்ந்துகொண்டதில் எங்களைப் பழிவாங்க நினைத்திருக்கிறாள். அது பிழைதான் என்றாலும், அவள் அப்படிச் செய்வதற்குக் காரணம் நானும் என்னுடைய செய்கைகளும் தானே.” என்றான் தர்சன் சுயவெறுப்புடன்.
“தப்புச் செய்தவர்களை விட அதைச் செய்யத் தூண்டியவர்கள் மீதுதானே பிழை அதிகம். அப்படிப் பார்த்தால் பெரும் தப்பு செய்தவன் நான்தானே.” என்றான் வேதனையோடு.

Last edited by a moderator: