• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 6

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-6

தன்னுடைய அறைக்குள் கூண்டுப் புலியென நடைபோட்டுக் கொண்டிருந்தான் தர்சன்.

அவனால் சற்று முன் அன்னை சொன்னதை ஜீரணிக்கவே முடியவில்லை. அந்தளவுக்கு மனம் கொதித்தது, ஆவேசம் கொண்டது, ஆத்திரப் பட்டது, வேதனையில் துடித்தது.

அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையே சிந்திக்க இயலாமல் தவித்தான்.

இப்படிச் செய்துவிட்டாளே என்பதிலேயே நின்று உழன்றது அவன் எண்ணங்கள்!

தன் மனதை அவளிடம் சொல்லியும், நீதான் என் மனைவி என்று பட்டவர்த்தனமாக அறிவித்த பிறகும் அவனை மறுத்துவிட்டாளே!

அதுவும், அவனைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் இருந்தும் அதை வேண்டுமென்றே உதறியிருக்கிறாள்!

ஒரு ஆண்மகனாகத் தன்மானம் அடிபட்டு நின்றான்!

மிகவும் சாதுர்யமாகத் திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கிறாள் என்று நினைக்க நினைக்க மனம் கொதித்தது!

அவளைத் தனது காதலியாக, வருங்கால மனைவியாக அவன் நினைக்கத் தொடங்கியது நான்கைந்து நாட்களாகத்தான் என்றாலும், அதில் எத்தனை கற்பனைகள்? எத்தனை கனவுகள்!

அனைத்தும் பொய்யாவதா?

இருளின் மறைவில் அவளுடன் அவன் கண்ட இனிய கனவுகளை அவள் இன்னொருவனுடன் நிஜத்தில் வாழ்வதா? நினைக்கவே கசந்தது!

அதுவும் தன் தமையனையே கட்டி, தன் கண்ணெதிரிலேயே அவள் நடமாட, அதைப்பார்த்துக்கொண்டு அவன் நிற்பதா?

முதலில் அது முடியுமா அவனால்?

முடியாது என்று அடித்துச் சொன்னது மனது!

இனி என்ன செய்வது?

ஒரு வழியுமே புலப்படவில்லை.

தாய் தந்தையிடம் சொல்ல முடியாது. சொன்னால், அவளுக்கு உன்னைப் பிடிக்கவில்லையே என்பார்கள்.

அமலனிடம் தன் மனதைச் சொல்லி, அவனும் அவளைக் காதலிப்பதாகச் சொல்லிவிட்டால்.. ஒரு பெண்ணுக்காக அண்ணனும் தம்பியும் சண்டையிட்டுக் கொள்வதா?

அதன்பிறகு அவளை யார் மணந்தாலும் மற்றவர் அந்த வீட்டில் இருக்கத்தான் முடியுமா?

அனைத்து வழிகளையும் அல்லவா அடைத்துவிட்டாள்!

அப்போது யாரோ மாடியேறும் ஓசையில் அவன் நடை சட்டென நின்று காதுகள் கூர்மை பெற்றன.

அந்தக் காலடி ஓசையை வைத்தே மேலே வருவது வெண்பா என்பதைக் கண்டுகொண்டான் தர்சன்!

ஆத்திரம் மேலோங்க, முகம் பாறையென இறுக தன்னுடைய அறையிலிருந்து அவன் வெளியே வரவும் அவள் மாடியேறி முடிக்கவும் சரியாக இருந்தது.

திடீரென அவனை எதிரில் சந்திப்போம் என்று எதிர்பாராததில் ஒருநொடி திகைத்து நின்றாள் வெண்பா.

உடனேயே தன்னைச் சமாளித்துக்கொண்டவள், அவனைக் கண்டும் காணததுபோல் அலட்சியம் செய்து நடந்தாள்.

ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவன் அவள் முன்னே கையை நீட்டி மறித்தான்.

“ஏன் வெண்பா இப்படிச் செய்தாய்?”

நின்ற இடத்திலேயே நின்றபடி திரும்பியவள், “நான் என்ன செய்தேன்?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள்.

“நான் உன்னை விரும்புகிறேன் என்று தெரிந்தும் அமலனைக் கட்டிக் கொள்வதாக எதற்குச் சொன்னாய்?”

புருவங்களை உச்சிமேட்டுக்கே உயர்த்தினாள் வெண்பா.

“என்னது? நீங்கள் என்னை விரும்புகிறீர்களா? இது எப்போது?” அவள் குரலில் அளவுக்கு அதிகமாக வியப்பு வியாப்பித்திருந்தது. விழிகளோ அவனைப் பார்த்து ஏளனத்துடன் நகைத்தன.

“என்னடி, என்னை முட்டாளாக்கிவிட்டதாக நினைப்பா? நீதான் என் மனைவி என்று உன்னிடம் நான் சொல்லவில்லை?” என்றான் சீறலாக.

அவன் குரலில், அதில் தெரிந்த எரிமலையின் சீற்றத்தில் அவள் மேனியில் நடுக்கம் ஒன்று ஓடி மறைந்தது.

ஆனாலும் இவனால் என்னை என்ன செய்துவிட முடியும் என்று எண்ணியவள், திமிராகத் தலையைச் சிலுப்பிக் கொண்டாள்.

“எது? அன்று உன்னைத்தான் கட்டிக்கொள்வேன் என்று கட்டளையாகச் சொன்னீர்களே.. அதுவா? அதற்குப் பெயர்தான் ‘விரும்புவது’ போல. இது எனக்குத் தெரியாதே!” என்று எள்ளி நகையாடினாள்.

ஆத்திரத்தின் அளவு மிகுந்ததில் விழிகளை இறுக மூடித்திறந்தான் தர்சன்.

“ஏன் வெண்பா, கட்டளையாகச் சொன்னால் அது காதல் இல்லையா? மற்றவர்களைப் போன்று நயமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அதற்காக என்னை விட்டுவிட்டு இன்னொருவனைக் கட்டுவாயா?” என்று வலி நிறைந்த குரலில் தன்னால் இயன்றவரை நிதானமாகக் கேட்டான் தர்சன்.

அப்படிப் பணிந்து பேசுபவனைப் பார்க்கவே அவள் மனது குதூகலித்தது!

இப்படி எத்தனை தடவைகள் அந்தச் சின்ன வயதில் அவனிடம் அவள் கெஞ்சியிருப்பாள், அழுதிருப்பாள், மன்றாடியிருப்பாள்.

அப்போதெல்லாம் அதைக் காதிலேயே வாங்காமல், அவள் செய்த சின்னச் சின்னப் பிழைகளுக்கு எல்லாம் மரத்தோடு மரமாக அவளை அவன் கயிற்றால் கட்டிய நாட்கள் எத்தனை, கம்பால் அடித்த நாட்கள் எத்தனை, அவளுக்கு இரவில் பயம் காட்டி நடுங்க வைத்த நாட்கள் தான் எத்தனை?

அது எல்லாவற்றுக்கும் திருப்பிக் கொடுக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடுவதா?

சிறு வயதில், அவனை எதிர்க்க முடியாத இயலாமையால் அவள் மனதில் கோபமாக விழுந்த விதை இன்று பெரும் வெறுப்பாக வளர்ந்து, ஆலமரமாக நின்று அவனைப் பழிவாங்கத் துடித்தது!

“அதென்ன இன்னொருவன் என்கிறீர்கள்? அமலன் உங்கள் அண்ணன் இல்லையா.. அவரைத்தானே எனக்கு மாப்பிள்ளையாகப் பார்த்திருக்கிறார்கள்.” என்று குதர்க்கமாகப் பேசி, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச முயன்றாள் வெண்பா.

“அவனை உன் மாப்பிள்ளை என்று இன்னொரு தடவை சொன்னாயானால் அடித்துப் பல்லைக் கழட்டி விடுவேன் ராஸ்கல்! நான் தான்டி உனக்கு மாப்பிள்ளை!” உக்கிரமாகச் சொன்னான் அவன்.

“இதென்ன பெருங்கொடுமையாக இருக்கிறது? இந்த வீட்டுப் பெரிய மனிதர்கள்தான் அமலனை எனக்குப் பேசி முடித்தார்கள். நீங்களானால் இப்படிச் சொல்கிறீர்கள். அப்படி என்றால் உங்கள் அம்மா அப்பாவின் பேச்சுக்கு மதிப்பே இல்லையா? அல்லது மதிக்கத் தேவையற்ற மனிதர்களா அவர்கள்?” என்று ஒருவிதக் குரூரத்துடன் அவள் கேட்டபோது வாயடைத்து நின்றான் தர்சன்.

அவன் நிலையைத் தனக்குச் சாதாமாக்கிக் கொண்டு அங்கிருந்து நடந்தாள் வெண்பா.

ஏதோ தோன்றவும் நின்று திரும்பியவள், “என் வாழ்க்கை என் விருப்பம்! எனக்கு விருப்பமானதை நான் செய்தே தீருவேன்! அதை யாராலும் மாற்றவே முடியாது!” என்றாள் அழுத்தம் திருத்தமான குரலில்.

அதற்கிடையில் தன்னைச் சமாளித்துக் கொண்ட தர்சனும், “நீ அளவுக்கு அதிகமாகவே பேசிவிட்டாய் வெண்பா. இனி உன் வாழ்க்கையில் நீ நினைப்பது எதுவுமே நடக்காது. அமலனுடன் உன் திருமணம் நடக்கவே நடக்காது!” என்றான் அவனும் அழுத்தமான குரலில்!

‘அது எனக்குத் தெரிந்த விஷயம்தானே!’ என்று உள்ளூர எள்ளலோடு எண்ணியவள், அவன் பேச்சை அலட்சியம் செய்து நடந்தாள்.

அடுத்தநாள் மாலை வேலை முடிந்து, களைத்துப்போய் வீட்டுக்கு வந்தான் தர்சன். முதல்நாள் தாய் சொன்னவைகளாலும், வெண்பாவின் எடுத்தெரிந்த பேச்சினாலும் இரவு முழுவதும் தூக்கமின்றித் தவித்தவனை அன்று வேலையும் நெட்டி முறித்தது.

நல்ல தூக்கமும் இன்றி, களைத்த முகத்துடன் காரிலிருந்து அவன் இறங்க, “தர்சா, நாங்கள் இங்கே இருக்கிறோம்..” என்று தோட்டத்தில் இருந்து குரல்கொடுத்தான் அமலன்.

மனச்சோர்வில் எதையும் கவனிக்காமல் வந்தவன், அவனது குரல் கேட்டு அங்கே திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மீண்டும் கோபத்திலும், கொதிப்பிலும் கடினப்பட்டது.

காரணம், அவனது தாய் தந்தையர் உட்பட, அத்தை மகேஸ்வரி முதல் விமலனின் குடும்பம் என்று எல்லோரும் அமர்ந்திருக்க, வெண்பாவோ அமலனுக்கு அருகில் அமர்ந்திருந்தாள்.

அதுமட்டுமின்றி இவனைக் கண்டதும் அவள் இதழ்களில் உதித்த ஏளனப் புன்னகையைக் கண்டவனுக்கோ கண்மண் தெரியாத கோபம் எழுந்தது.

அந்தக் கோபத்திலும் ஒன்றுமட்டும் மிக நன்றாகப் புரிந்தது தர்சனுக்கு.

அவனுக்கு அண்ணியாக வருபவள் அன்னையின் இடத்தில் அவன் நிறுத்த வேண்டியவள். அப்படி வெண்பாவை எந்தக் காலத்திலும் அவனால் நிறுத்தவும் முடியாது, நினைக்கவும் முடியாது!

அதோடு, இவனை வெறுப்பேற்றுவதற்காக என்று அவள் அமலனோடு நெருங்கிப்பழக, அவன் இவள்மேல் நேசம் கொண்டுவிட்டால் என்ன செய்வது?

அண்ணனும் தம்பியும் ஒருத்தியையே காதலிப்பதா? பிறகு இருவரில் யார் அவளைக் கட்டிக் கொண்டாலும் அடுத்தவரின் நிலை என்ன?

எனவே தான் நேற்றிரவு எடுத்த முடிவை உடனேயே செயலாக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்தவன், அவர்களை நோக்கி நிதானமாக நடந்தான்.

நேரே வெண்பாவை நெருங்கியவன் அடுத்து செய்த காரியத்தில் அங்கிருந்த அனைவருமே ஒருநொடி அதிர்ந்து உறைந்து நின்றனர்.

அடுத்தநொடியே,

“தர்சா..!”

“டேய்..!”
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
“இதென்ன பெருங்கொடுமையாக இருக்கிறது? இந்த வீட்டுப் பெரிய மனிதர்கள்தான் அமலனை எனக்குப் பேசி முடித்தார்கள். நீங்களானால் இப்படிச் சொல்கிறீர்கள். அப்படி என்றால் உங்கள் அம்மா அப்பாவின் பேச்சுக்கு மதிப்பே இல்லையா? அல்லது மதிக்கத் தேவையற்ற மனிதர்களா அவர்கள்?” என்று ஒருவிதக் குரூரத்துடன் அவள் கேட்டபோது வாயடைத்து நின்றான் தர்சன்.

அவன் நிலையைத் தனக்குச் சாதாமாக்கிக் கொண்டு அங்கிருந்து நடந்தாள் வெண்பா.

ஏதோ தோன்றவும் நின்று திரும்பியவள், “என் வாழ்க்கை என் விருப்பம்! எனக்கு விருப்பமானதை நான் செய்தே தீருவேன்! அதை யாராலும் மாற்றவே முடியாது!” என்றாள் அழுத்தம் திருத்தமான குரலில்.

அதற்கிடையில் தன்னைச் சமாளித்துக் கொண்ட தர்சனும், “நீ அளவுக்கு அதிகமாகவே பேசிவிட்டாய் வெண்பா. இனி உன் வாழ்க்கையில் நீ நினைப்பது எதுவுமே நடக்காது. அமலனுடன் உன் திருமணம் நடக்கவே நடக்காது!” என்றான் அவனும் அழுத்தமான குரலில்!

‘அது எனக்குத் தெரிந்த விஷயம்தானே!’ என்று உள்ளூர எள்ளலோடு எண்ணியவள், அவன் பேச்சை அலட்சியம் செய்து நடந்தாள்.

அடுத்தநாள் மாலை வேலை முடிந்து, களைத்துப்போய் வீட்டுக்கு வந்தான் தர்சன். முதல்நாள் தாய் சொன்னவைகளாலும், வெண்பாவின் எடுத்தெரிந்த பேச்சினாலும் இரவு முழுவதும் தூக்கமின்றித் தவித்தவனை அன்று வேலையும் நெட்டி முறித்தது.

நல்ல தூக்கமும் இன்றி, களைத்த முகத்துடன் காரிலிருந்து அவன் இறங்க, “தர்சா, நாங்கள் இங்கே இருக்கிறோம்..” என்று தோட்டத்தில் இருந்து குரல்கொடுத்தான் அமலன்.

மனச்சோர்வில் எதையும் கவனிக்காமல் வந்தவன், அவனது குரல் கேட்டு அங்கே திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மீண்டும் கோபத்திலும், கொதிப்பிலும் கடினப்பட்டது.

காரணம், அவனது தாய் தந்தையர் உட்பட, அத்தை மகேஸ்வரி முதல் விமலனின் குடும்பம் என்று எல்லோரும் அமர்ந்திருக்க, வெண்பாவோ அமலனுக்கு அருகில் அமர்ந்திருந்தாள்.

அதுமட்டுமின்றி இவனைக் கண்டதும் அவள் இதழ்களில் உதித்த ஏளனப் புன்னகையைக் கண்டவனுக்கோ கண்மண் தெரியாத கோபம் எழுந்தது.

அந்தக் கோபத்திலும் ஒன்றுமட்டும் மிக நன்றாகப் புரிந்தது தர்சனுக்கு.

அவனுக்கு அண்ணியாக வருபவள் அன்னையின் இடத்தில் அவன் நிறுத்த வேண்டியவள். அப்படி வெண்பாவை எந்தக் காலத்திலும் அவனால் நிறுத்தவும் முடியாது, நினைக்கவும் முடியாது!

அதோடு, இவனை வெறுப்பேற்றுவதற்காக என்று அவள் அமலனோடு நெருங்கிப்பழக, அவன் இவள்மேல் நேசம் கொண்டுவிட்டால் என்ன செய்வது?

அண்ணனும் தம்பியும் ஒருத்தியையே காதலிப்பதா? பிறகு இருவரில் யார் அவளைக் கட்டிக் கொண்டாலும் அடுத்தவரின் நிலை என்ன?

எனவே தான் நேற்றிரவு எடுத்த முடிவை உடனேயே செயலாக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்தவன், அவர்களை நோக்கி நிதானமாக நடந்தான்.

நேரே வெண்பாவை நெருங்கியவன் அடுத்து செய்த காரியத்தில் அங்கிருந்த அனைவருமே ஒருநொடி அதிர்ந்து உறைந்து நின்றனர்.

அடுத்தநொடியே,

“தர்சா..!”

“டேய்..!”

“ஐயோ.. தர்சன்..!” என்று பலகுரல்கள் அதிர்ச்சி தாங்காமல் ஒன்றாகக் கூவின.

ஆனால், அவர்கள் எல்லோருக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்தவனோ மஞ்சள் கயிறால் ஆன தாலியை மிக மிக நிதானமாக வெண்பாவின் கழுத்தில் கட்டிமுடித்தான்!

அடுத்த நிமிடமே, “முட்டாள்! என்ன காரியம்டா செய்தாய்!” என்று கர்ஜித்தபடி எழுந்த ராஜசேகர் அவனை அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு வந்தார்.

அவர் செய்யப்போவதை நொடியில் கணித்துவிட்ட விமலன், மிக வேகமாகப் பாய்ந்து தந்தையைப் பிடித்து மறிக்க, அமலனோ தம்பிக்குத் தந்தையிடமிருந்து பாதுகாப்பு அரண் அமைப்பதுபோல் கைகள் இரண்டையயும் இருபக்கமும் நீட்டிக்கொண்டு அவன் முன்னால் சென்று நின்றுகொண்டான்.

அனைத்தும் நொடியில் நடந்துவிட, மஞ்சுளா, மகேஸ்வரி, ராகினி மூவரும் சிலையெனச் சமைந்து நின்றனர்.

அங்கே தோட்டத்தில் வண்ணத்துப்பூச்சியைத் துரத்திக்கொண்டிருந்த அர்ஜூன் கூடப் பயந்துபோய் ஓடிவந்து தாயின் காலைக் கட்டிக்கொண்டான்.

சிவந்துவிட்ட விழிகளில் ஆத்திரம் கொப்பளிக்க, “தள்ளுடா..! நீ என்ன அவனைக் காப்பாற்றப் பார்க்கிறாயா?” என்றபடி அனல் கக்கும் விழிகளால் விமலனை எரித்த ராஜசேகர், அவனை விலக்கித் தள்ள முயன்றார்.

அவரின் முயற்ச்சிகளைத் தடுத்துக்கொண்டே, “அப்பா! அவசரப்படாமல் ஏன் இப்படிச் செய்தாய் என்று அவனை விசாரியுங்கள்.” என்றான் விமலன்.

“இனியும் என்னடா விசாரிக்க இருக்கிறது? எல்லாம் தான் முடிந்துவிட்டதே. இந்தக் குடும்பத்தின் மானத்தையே வாங்கிவிட்டானே!”

“மானம் போகுமளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை அப்பா. அதனால் கோபப்படாமல் ஏன் இப்படிச் செய்தாய் என்று அவனிடம் கேளுங்கள். அதைவிட்டுவிட்டுக் கையை ஓங்கினால் மட்டும் நடந்தது இல்லை என்றாகிவிடுமா?” அந்தக் குடும்பத்தின் தலைமகனாய், ஒரு குடும்பத் தலைவனாய் நின்று கேட்டான் விமலன்.

“அடிக்காமல் அவன் செய்ததற்குக் கொஞ்சவா சொல்கிறாய்? உங்கள் மூவரையும் ஒரேமாதிரித் தானேடா வளர்த்தேன். பிறகு எப்படிடா அவன் மட்டும் இப்படிச் செய்தான்?” என்று ஆத்திரத்துடன் கேட்டார் தந்தை.

முறையற்று நடந்துவிட்ட விஷயத்தை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதுவும் தன்னை நாடிவந்த தங்கையின் மகளுக்கு நடந்துவிட்ட அநியாயத்தை எண்ணி அவர் மனம் குமுறியது.

“அவன் செய்தது பிழைதான். அதை இல்லையென்று சொல்லவில்லையே! ஆனால், இதற்கு முதல் இப்படி நடந்து கொண்டிருக்கிறானா? அல்லது எங்காவது உங்களைத் தலைகுனிய வைத்திருக்கிறானா? இல்லைதானே. இன்று இப்படிச் செய்திருக்கிறான் என்றால் ஏதாவது காரணம்
இருக்கும். அதை என்னவென்று கேளுங்கள்.” என்றான் மீண்டும் தனயன்.
 

Vishakini

Moderator
Staff member
“என்னத்தையடா கேட்கச் சொல்கிறாய்? அண்ணனுக்குப் பேசிமுடித்தவளின் கழுத்தில் ஏன் தாலியைக் கட்டினாய் என்றா? கேட்கவே அசிங்கமாக இல்லை?” என்று உறுமியவரை அச்சத்தோடு பார்த்தார் மஞ்சுளா.

இந்த முப்பத்தியிரண்டு வருட வாழ்க்கையில் மிகவும் பொறுமைசாலி என்று எண்ணியிருந்த கணவரின் ருத்ரதாண்டவக் கோலத்தைக் கண்டு அவரின் நெஞ்செமெல்லாம் நடுங்கியது.

பயத்துடன் சின்னமகனைத் திரும்பிப் பார்த்தார். அவனோ வருவதை எதிர்கொள்ளும் தைரியத்துடன் தந்தையையே பார்த்தபடி நின்றிருந்தான்.

கணவரினதும், மகனினதும் நிலையைக் கண்டவருக்கு அவர்கள் இருவருக்குள்ளும் கைகலப்பாகிவிடுமோ என்று பயமாக இருந்தது. காரணம், சின்னமகன் அவ்வளவாகப் பொறுமைசாலி அல்ல என்பது அவர் அறிந்ததே!

அப்படித் தந்தைக்கும் தனையனுக்குமிடையில் சண்டை மூண்டுவிட்டால் அதன்பிறகு அவர் உயிர் வாழ்வதில் அர்த்தமே இல்லையே!

அதை நினைத்ததும் வெண்பாவுக்குத் தர்சன் தாலிகட்டிய விஷயம் கூட மனதில் ஒரு மூலைக்குச் சென்றுவிட, தந்தைக்கும் மகனுக்கும் மூளவிருக்கும் சண்டையை எப்படித் தடுத்து நிறுத்தப் போகிறோம் என்று அவர் மனம் துடிதுடித்தது.

உலகில் இருக்கும் அத்தனை கடவுள்களையும் துணைக்கழைத்தபடி கணவரை நெருங்கி, அவரின் ஒற்றைக் கையைப் பற்றிக் கொண்டார். “கொஞ்சம் பொறுமையாக இருங்கப்பா. தயவு செய்து கோபப் படாதீர்கள். எனக்குப் பயமாக இருக்கிறது.” என்று கெஞ்சினார் விழிநீர் கொட்டக் கொட்ட.

அதுவரை தமையனின் கோபத்தில் அதிர்ந்து நின்ற மகேஸ்வரிக்கும், அண்ணனை சாந்தப்படுத்துவதே அந்த நேரத்தில் முக்கியமாகப் பட அவரை நெருங்கினார். “அண்ணா, நீங்களே இப்படி அவசரப்படலாமா? வளர்ந்த பிள்ளையிடம் கைநீட்டுவது அழகில்லையே. முதலில் அவனை விசாரியுங்கள்.” என்றார் விழிகள் கலங்க.

தான் மீண்டும் வந்ததால்தான் தமையனின் குடும்பத்துக்குள் பிரச்சினை உண்டாகிவிட்டதோ என்று மனதுக்குள் வருந்தினார் அவர்.

வெண்பாவோ, எதிர்பாராமல் நடந்துவிட்ட அசம்பாவிதத்தை ஜீரணிக்க முடியாமல் திக்பிரமை பிடித்துப்போய், அமர்ந்திருந்த இடத்திலிருந்து அசையவே முடியாமல் சிலையாகிச் சமைந்திருந்தாள்.

அந்த நேரத்திலும், ஒரு பெண்ணின் கழுத்தில் அத்துமீறி ஒருவன் தாலியைக் கட்டிய பொழுதிலும் அவனைக் காக்க இரண்டு தமையன்கள், அவனுக்காகப் பேச அம்மா, அத்தை என்று எல்லா உறவுகளும் இருப்பதைப் பார்க்கையில் பொறாமையும் ஆத்திரமும் எழுந்தது.

அதுமட்டுமின்றி, தனக்கு இப்படியான உறவுகள் இல்லையே என்று நினைத்த மாத்திரத்தில் அழுகையும் வந்தது. அவளைப் பெற்ற தாய் கூட அந்த இடத்தில் தர்சனைக் காப்பாற்ற அல்லவா முயல்கிறார். அவளை ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லையே!

அவளுடைய அப்பா இருந்திருக்க, இப்படி யாராவது அவள் வாழ்க்கையோடு விளையாடித்தான் இருக்க முடியுமா அல்லது விளையாடத்தான் அவர் விட்டிருப்பாரா?

சுருக்கென்று நெஞ்சில் வலியொன்று எழுந்தது. அவளுக்குள் இருந்த ஆத்திரமும் குரோதமும் கூட இன்னும் அதிகரித்தது.

ராஜசேகரோ மனைவியையும் தங்கையையும் அனல் கக்கும் விழிகளால் பார்த்தார். “பொறுமையாக இருந்து இன்னும் என்ன அபச்சராங்களைப் பார்க்கச் சொல்கிறீர்கள்? அண்ணனுக்குப் பார்த்த பெண்ணுக்குத் தம்பி தாலி கட்டலாமா? அண்ணியாக நினைக்க வேண்டியவளை மனைவியாக நினைத்த நீசனை, நான் பெற்ற பாவத்துக்கு நானே அடித்துக் கொல்கிறேன்!” என்றார் அப்போதும் விமலனிடம் இருந்து விடுபடப் போராடிக்கொண்டே.

அதைக்கேட்ட தர்சனின் முகம் கன்றிச் சிறுத்தது. தன்னைத் தரம் கெட்டானாகத் தந்தை நினைப்பதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“அப்பா! உண்மை என்னவென்று தெரியாமல் வார்த்தைகளை விடாதீர்கள்!” என்றான் கோபக்குரலில்.

“தர்சன்! நீ கொஞ்சம் அமைதியாக இரு!” என்று விமலன் சொல்ல,
மகன் எதிர்த்துப் பேசியதில் கொதிநிலையின் உச்சத்துக்கே சென்றார் ராஜசேகர்.

“என்னடா உண்மை? அவளை உன் அண்ணனுக்குப் பேசி முடித்திருக்கிறோம் என்று தெரிந்தும் இப்படி நடந்துகொண்டிருக்கிறாய் என்றால் என்ன மனிதன் நீ? உன்னை என் பிள்ளை என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது.” என்றார் வெறுப்புடன்.

“அமலனுக்கு அவளைப் பேசிமுடிக்க முதலில், என்னிடம் அதைப்பற்றி யாராவது ஏதாவது சொன்னீர்களா? சொல்லியிருக்க என்மனதை நானும் சொல்லியிருப்பேனே.” என்றான் அவனும்.

“நாங்கள் சொல்லாவிட்டால் என்னடா? நீ வந்து சொல்லியிருக்க வேண்டியதுதானே. இப்போது இவ்வளவு கதைக்கும் உன் வாய் அப்போது மட்டும் எங்கே போனது?” என்று கேட்டார் தந்தை.

“நான் சொல்லியிருந்தால் மட்டும் உடனே எனக்கு அவளைக் கட்டிவைத்து இருப்பீர்களா? அவளுக்கு அமலனைத்தான் பிடித்திருக்கிறது என்று தட்டிக் கழித்திருப்பீர்கள்!” என்றான் அவன்.

“அவளுக்குப் பிடித்தவனுக்குத்தானே அவளைக் கட்டிவைக்க முடியும். கேவலமான வேலையைச் செய்துவிட்டு அதையும் நியாயப்படுத்த வேறு முயல்கிறாயே, உனக்கு வெட்கமாக இல்லை?” என்று கேட்டார் ராஜசேகர்.

அவமானத்தில் வெந்தவன் ஆத்திரத்துடன் பதில் சொல்லத் தொடங்கமுதலில் அவனிடம் ஓடிவந்தார் மஞ்சுளா.

“அப்பாதான் கோபத்தில் கதைக்கிறார் என்றால், நீயாவது கொஞ்சம் பேசாமல் இரேன் தர்சா..” என்று அவனிடம் கெஞ்சினார்.

“பேசாமல் இருப்பதற்கு அப்படி என்னம்மா பிழை செய்தேன் நான்? எனக்குப் பிடித்தவளின் கழுத்தில் தாலியைக் கட்டினேன். அது தப்பா?”

“உனக்குப் பிடித்தவள் எவளாக இருந்தாலும் உடனேயே தாலியைக் கட்டுவாயா? தப்பித்தவறி அவளுக்குக் கல்யாணமே முடிந்திருந்தால் என்ன செய்திருப்பாய்? ஒழுக்கம் கெட்ட செயலைச் செய்ததும் அல்லாமல் இப்படிப் பேசுவதற்கு உனக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கவேண்டும்?” அவன் தந்தைக்கும் கோபம் அடங்குவதாக இல்லை.

“நான் காதலித்த பெண்ணைத்தான் நீங்கள் அமலனுக்குப் பார்த்தீர்கள். என் காதலியை அண்ணியாக என்னால் எப்படிப் பார்க்கமுடியும்? அல்லது என் மனதில் ஒன்றுமில்லை என்பதுபோல் நடித்து அண்ணனுக்குத் துரோகம் செய்யச் சொல்கிறீர்களா?” என்று அவன் கேட்டபோது யாரிடமும் பதில் இல்லை.
 

Vishakini

Moderator
Staff member
“இதோ இருக்கிறாளே இவள்..” என்று வெண்பாவைக் சுட்டிக் காட்டியவன், “இவள் இந்த வீட்டுக்கு வந்த அன்றே என் விருப்பத்தைச் சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகும் அவள் அமலனைத் தேர்வு செய்தது என் குற்றமா? அண்ணனின் மனைவியாக வருபவளை என் காதலியாக நான் பார்த்தால் அதுதான் அசிங்கம், அவமானம். அந்த அசிங்கம் நடக்ககூடாது என்று எண்ணித்தான் அவள் கழுத்தில் தாலியைக் கட்டினேன்.” என்றான் தர்சன்.

ராஜசேகர் வாயடைத்துப்போய் நிற்க, “நான் மன்னிப்புக் கேட்கவேண்டியது அமலனிடம் மட்டும்தான்.” என்று குற்ற உணர்ச்சியுடன் அமலனைப் பார்த்துச் சொன்னவன், “அண்ணா..! என்னை மன்னித்துவிடு!” என்றான் தொண்டைக்குழி அடைக்க.

“டேய் தர்சா! என்னடா இதெல்லாம்?” என்றபடி தம்பியைப் பாய்ந்து அணைத்துக் கொண்ட அமலனுக்கும் கண்கள் கலங்கிவிடும் போலிருந்தது.

“சாரிண்ணா..”

“விடுடா! நமக்குள் எதற்கு மன்னிப்பெல்லாம். என்ன, இதை நீ முதலே என்னிடம் சொல்லியிருக்க இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்காதேடா..” என்றபடி, அணைத்திருந்த தம்பியின் முதுகைத் தட்டிக் கொடுத்தவனுக்கு நெஞ்சம் நெகிழ்ந்திருந்தது.

எப்போதும் ‘அமலா’ அல்லது ‘டேய் கண்ணாடி’ என்று தன்னை அழைக்கும் தம்பி இன்று அண்ணா என்று அழைத்ததும், யாரிடமும் தழைந்து போகாதவன் தன்னிடம் மன்னிப்புக் கேட்டதும் அவனுக்கு வலித்தது.

“இல்லடா.. அது..” என்று ஆரம்பித்தவனிடம், “டேய்!” என்றான் அமலன் அதட்டலாக.

அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த மஞ்சுளாவுக்குப் பெருமிதத்தில் நெஞ்சம் விம்மினாலும் அழுகையும் வந்தது. அருமையான பிள்ளைகளைக் கொடுத்த கடவுள் ஏன் இப்படியொரு பிரச்சினையில் தங்களை மாட்டிவிட்டான் என்று மனதுக்குள் நொந்துகொண்டார்.

ராஜசேகருக்கோ இனி என்ன செய்வது என்றே தெரியவில்லை. தர்சன் கட்டிய தாலியைக் கழட்டிவிட்டு அமலனைக் கட்டவா சொல்லமுடியும்?

ஆனால் இனி அமலனின் நிலை? தம்பியின் மீதிருக்கும் பாசத்தினால் அவனைத் தேற்றினாலும் அவனும் மனதுக்குள் ஆசைகளை வளர்த்திருந்தால்..

வேதனை நிறைந்த விழிகளோடு அவர் அமலனை நிமிர்ந்து பார்க்க, அவர் மனதிலோடும் எண்ணங்களைப் புரிந்துகொண்டவன் வேகமாக அவரருகில் வந்தான்.

“அப்பா! ஒன்றுக்கும் கவலைப் படாதீர்கள். காதல் கீதல் என்று கனவுகாண நான் ஒன்றும் சின்னப்பிள்ளை இல்லை. இன்றுவரை வெண்பா நம் அத்தையின் மகள் என்கிற பாசம் மட்டும்தான் என் மனதில் இருக்கிறது. அதனால் என்னை நினைத்து வீணாகக் கவலைப் படாதீர்கள்.” என்றான் இதமான குரலில்.

“ஆமாம் அண்ணா. நீங்கள் கவலைப்படாதீர்கள். அவள் இந்த வீட்டுக்கு மருமகளாக வரவேண்டும் என்பதுதான் என் விருப்பம். அது அமலனாக இருந்தால் என்ன தர்சனாக இருந்தால் என்ன? இருவருமே என் அண்ணன் மக்கள் தானே. தர்சன் சொன்னதுபோல அவன் வெண்பாவிடம் முதலே தன் விருப்பத்தைச் சொல்லிவிட்டான் அண்ணா. நாங்கள்தான் அதையும் விளையாட்டு என்று நினைத்துவிட்டோம்.” என்றார் மகேஸ்வரியும்.

கண்களில் கண்ணீர் வழிய கணவனை நெருங்கிய மஞ்சுளா அவரின் காலடியில் அமர்ந்துகொண்டார். “நான் தானப்பா பிழை செய்துவிட்டேன். இதெல்லாம் என்னால்தான் வந்தது. மகி என்னிடம் சொன்னாள்தான். ஆனால், வெண்பா அமலனைக் கட்டிக் கொள்வதாகச் சொல்லவும் அதைப் பெரிதாக எடுக்காமல் விட்டுவிட்டேன். என் அலட்சியத்தால் என் பிள்ளைகளின் வாழ்க்கை இப்படியாகி விட்டதே. ஐயோ இனி என்ன செய்வேன்.. என் குழந்தைகளின் சந்தோசத்தை நானே கெடுத்துவிட்டேனே…” என்றார் அழுகையோடு.

“அம்மா! இப்போது எதற்கு அழுகிறீர்கள்? ஒருவரின் சந்தோசமும் கெடவில்லை. தர்சன் தனக்குப் பிடித்தவளைக் கட்டியிருக்கிறான். எனக்கு உங்களுக்குப் பிடித்த பெண்ணாக ஒருத்தியைப் பாருங்கள். அவளை நான் கட்டிக் கொள்கிறேன். பிறகு என்ன? எல்லாமே சந்தோசம் தானே. சும்மா சும்மா அழாதீர்கள்!” என்றான் அமலன் அதட்டலும் கனிவும் கலந்து.

ஆர்வத்தோடு மகனை நிமிர்ந்து பார்த்தார் மஞ்சுளா. “நிச்சயம் கல்யாணம் செய்வாய் தானே கண்ணா..”

“கட்டாயம் அம்மா!” என்று புன்னகைத்தான் மகன்.

மகன் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த ராஜசேகருக்கு, அவன் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகத் தோன்றியது. இல்லாவிட்டாலும் இனி மாற்றி அமைப்பதற்கு ஒன்றுமில்லையே!

ஆனாலும் இதையெல்லாம் வெண்பாவிடம் எப்படிச் சொல்வது, என்ன செய்வது என்றே தெரியவில்லை அவருக்கு.

அவளை நிமிர்ந்து பார்த்தவருக்கு, கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரோடு சிலையென அமர்ந்திருந்தவளைப் பார்க்கவே நெஞ்சைப் பிசைந்தது.

தொண்டையைச் செருமிக்கொண்டு, “வெண்பா..!” என்று மெல்ல அழைத்தார்.

ஒருநிமிடம் அவரை நிமிர்ந்து பார்த்த வெண்பாவுக்கு அழுகை வெடிக்க, அதை அங்கிருந்த யாருக்கும் காட்டப் பிடிக்காமல் வேகமாக எழுந்து வீட்டுக்குள் ஓடினாள்.

ஓடும் மருமகளையே வேதனையுடன் பார்த்திருந்தவர் நெடுமூச்சினை வெளியேற்றினார். வலுக்கட்டாயத்தில் நடந்துவிட்ட கல்யாணத்தில் எதையும் சாதித்துவிட முடியாது என்று தன் மகன் என்று புரிந்துகொள்ளப் போகிறானோ என்று தோன்றியது அவருக்கு!
 
Top Bottom