இன்னுயிராவாய் என்னுயிரே - 7

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
அத்தியாயம்-7

ஜன்னல் வழியே தெரிந்த தெளிவான வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான் தர்சன். அவன் உள்ளமோ என்னவென்று பிரித்தறிய முடியாத பல உணர்வுகளின் கலவைகளால் தெளிவற்றுக் கிடந்தது.

வெண்பா அவனது மனைவியாகி இன்றோடு இரண்டு வாரங்கள் ஓடியிருந்தது. ஆனால், தாலி கட்டிய அன்று அவளைப் பார்த்ததற்குப் பிறகு இன்றுவரை அவன் அவளைப் பார்க்கவே இல்லை.

அதற்கு அவன் முயலவில்லை என்பதுதான் உண்மை!

வீட்டுக்குச் செல்வதைக் கூட முடிந்தவரை குறைத்துவிட்டு, அவர்களின் அங்காடியே கதி என்று கிடந்தான்.

அதுநாள் வரை அவனைக் கடிந்துதன்னும் ஒரு வார்த்தை பேசியிராத தந்தை அன்று அவனிடம் காட்டிய கடுமையையும், அவர் வீசிய கடும் சொற்களையும் அவனால் இன்னமும் மறக்க இயலவில்லை. வீட்டினரை நிமிர்ந்து பார்க்கவே வெட்கினான். அவர்கள் சாதரணமாகப் பார்த்தாலே ஏதோ அற்ப பதரைப் பார்ப்பது போன்றே தோன்றியது.

அப்படித் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய வெண்பாவின் மீது கடுங் கோபத்தில் இருந்தான்.

அவள் அமலனுடனான திருமணத்துக்குச் சம்மதம் சொல்லாமல் இருந்திருக்க, அவன் தன் மனதை அவளுக்கு மெல்ல மெல்லப் புரிய வைத்திருப்பானே! அவளையும் அவனைக் காதலிக்க வைத்திருப்பானே!

அதையெல்லாம் கெடுத்தது அவளது அவசரப் புத்தியல்லவா. ஆனால், இன்று குற்றவாளியாக அவனல்லவா நிற்கிறான். வீட்டினர் தரமற்றவனாக அவனைப் பார்க்கும்படி செய்துவிட்டாளே!

தாலி கட்டியவளை மனைவியாக நெருங்கவும் முடியாமல், அவள் மீது கொண்ட கோபத்தைக் காட்டவும் முடியாமல் கடையே கதியென்று கிடக்கும் தன் நிலையை நினைத்தும் அவனுக்குச் சலிப்பாக இருந்தது.

அலுத்துக் களைத்து வீட்டுக்குப் போனால் அவன் அம்மாவோ, “வெண்பா கோபமாக இருக்கிறாள். அவளைச் சமாதானப்படுத்து.” என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

அவர் மட்டுமல்ல யாரைப் பார்த்தாலும் ‘வெண்பாவை சமாதானப் படுத்துடா..’ என்கிற வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லினர். இதில் இலவசப் புத்திமதி வேறு.

நொந்தே போனான் தர்சன்!

அவனுக்கும் அவளைப் பார்க்கப் பிடிக்காமலோ, பேசப் பிடிக்காமலோ அல்லதான்.

ஆனால், மனதில் இருக்கும் கோபத்தில் எதையாவது கடுமையாகச் சொல்லிவிடுவோமோ என்று பயந்தான்.

காதலைக் கூட ஒழுங்காகச் சொல்லத் தெரியாதவன் என்று அன்று அவள் மறைமுகமாகக் குட்டியது வேறு மனதுக்குள் இருந்து குடைந்தது.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாது யோசித்தபடி இருந்தவனின் கைபேசி சத்தமிடவும் அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.

“சொல்லுண்ணா..” அழைத்தது விமலன் என்றறிந்து சொன்னவனின் குரலில் சுரத்து மருந்துக்கும் இல்லை.

“உன் மனதில் நீ என்னதான்டா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நடுச்சாமத்தில் வந்து தங்கிவிட்டுப் போவதற்கு வீடு என்ன லாட்ஜா? இப்படியே கடைதான் கதி என்று இன்னும் எத்தனை நாட்களுக்குக் கிடக்கப் போகிறாய்? ஒரு பிரச்சினை என்று வந்தால் அதைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்படி ஓடி ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடுமா?” என்று கோபப்பட்டான் தமையன்.

“எனக்குத் தைரியம் இல்லை என்று உன்னிடம் சொன்னேனா? சும்மா ஓடினேன், ஒழிந்தேன் என்று வாய்க்கு வந்ததைப் பேசாதே!” என்று எரிந்து விழுந்தான் தர்சன்.

“எனக்கு வேண்டுதல் பார், வாய்க்கு வந்ததைப் பேச. மரியாதையாக வீட்டுக்கு வந்து உன் மனைவியைச் சமாதனாப்படுத்தும் வழியைப் பார். இனியாவது பொறுப்புள்ள மனிதனாக நடந்துகொள். எதற்காக வெண்பாவின் கழுத்தில் அந்தப் பாடுபட்டுத் தாலியைக் கட்டினாய்? இப்படி நீயொரு பக்கமும் அவளொரு பக்கமுமாக இருக்கவா?” என்று விமலன் கேட்டபோது பதில் சொல்ல இயலவில்லை அவனால்.

அதோடு, அவளைத் தன் மனைவி என்று தமையன் சுட்டியது வேறு ஏதோ ஒரு வகையில் அவன் மனதைப் பாதித்தது.

இன்னுமே வெண்பாவின் மீது கோபம் இருந்தாலும் அவளைப் பார்க்கவேண்டும் போல், அவளுடன் பேசவேண்டும் போல், அவளைச் சமாதானப் படுத்தவேண்டும் போல் ஒரு உந்துதலை அந்த வார்த்தை அவனுக்குள் உண்டாக்கிற்று!

அதைத் தமையனிடம் வாய்விட்டுச் சொல்லப் பிடிக்காமல் அவன் அமைதி காக்க, “டேய்! நான் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்கிறாயா இல்லையா? அல்லது இவன் ஒரு விசரன், ஏதோ உளறுகிறான் என்று நினைக்கிறாயா?” என்றான் விமலன் கடுப்புடன்.

“கேட்கமாட்டேன் என்று சொன்னால் மட்டும் விடவா போகிறாய். அதனால் சொல்லித் தொலை!” என்றான், தன் மனத்தைக் காட்டிக் கொள்ளாமல்.

அந்தப் பக்கம் இதைக் கேட்ட விமலானோ, “டேய்! உன்னை..!” என்று பல்லைக் கடித்தான்.

பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில், “டேய் புரிந்துகொள்ளுடா! நீ இப்படி இருப்பதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் எப்படிடா நிம்மதியாக இருப்பது? வீட்டில் ஆளாளுக்கு ஒவ்வொரு மூலை என்று இருக்கிறோம். எவ்வளவு கலகலப்பாக இருந்த வீடு. இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதைப் பழையபடி மாற்றுவது உன் கையில்தான் இருக்கிறது தர்சா. இதுக்குமேல் எது செய்வதாக இருந்தாலும் உன் விருப்பம்!” என்ற விமலன், அவனின் பதிலை எதிர்பாராது கைபேசியை அணைத்துவிட்டிருந்தான்.

தமையனின் பேச்சில் வீட்டினரைப் பற்றி யோசிக்கத் தவறிவிட்டேனே என்று குன்றிப்போனான் தர்சன்.

அம்மா, அப்பா, அமலன் என்று ஒவ்வொருவரினதும் முகங்களும் மனக்கண்ணில் வர, அதற்கு மேலும் அங்கிருக்கப் பிடிக்காமல் வீட்டுக்கு விரைந்தான்.

இரண்டுவாரப் பிரிவா, அல்லது ஆழ்மனத்தின் ஏக்கத்தைத் தமையனின் பேச்சுக் கிளறிவிட்டதா, ஏதோ ஒன்று! வெண்பாவைக் காண மனம் ஏங்க வீட்டுக்குள் நுழைந்தவனின் பார்வையில், கையிலிருந்த போட்டோவைப் பார்த்தபடி அமர்ந்திருந்த அன்னை பட்டார்.

அவரின் முகத்திலிருந்த வாட்டம் மனதைத் தாக்க, “அம்மா..!” என்று அழைத்தான் தர்சன்.

நிமிர்ந்து பார்த்த மஞ்சுளாவின் விழிகளில் சட்டெனக் கோபத்தின் சாயல். வேகமாக எழுந்து மகனருகில் வந்தவர், “இந்தா! இந்தப் போட்டோவைப் பார்! இதுதான் அமலனுக்குப் பார்த்திருக்கும் பெண். இவளையும் நீ காதலிக்கிறாயா இல்லையா என்று இப்போதே சொல்லிவிடு. பிறகு, உன்னிடம் சொல்லாமல் நாங்கள் முடிவுசெய்ய நீ அவளின் கழுத்திலும் தாலியைக் காட்டிவிட்டாய் என்றால், திரும்பவும் என்னால் அமலனுக்கு இன்னொரு பெண்ணைத் தேடமுடியாது!” என்று பட்டெனச் சொல்லிவிட்டார்.

அதைக்கேட்ட தர்சனோ சாட்டையடி வாங்கியவனாய், விருட்டென நிமிர்ந்து வலி நிறைந்த விழிகளால் அன்னையை வெறித்தான். அவன் முகமோ அவமானத்தில் குன்றிக் குறுகிச் சிதைந்தது.

காணும் பெண்களின் கழுத்திலெல்லாம் தாலியைக் கட்டுமளவுக்குத் தரம் தாழ்ந்தவனா அவன்?

மகனின் விழிகளில் தெரிந்த அடிபட்ட தோற்றத்தைப் பார்த்தவருக்கு, அப்போதுதான் தான் என்ன சொன்னோம் என்பதே உறைத்தது.

அது உறைத்த மாத்திரத்தில் விழிகள் குளமாக, மகனின் கன்னங்களைப் பற்றியவர், “கடவுளே..! என் பிள்ளையின் மனதை நானே நோகடித்துவிட்டேனா.. தர்சா அம்மா சொன்னதைப் பொருட்படுத்தாதே கண்ணா. தெரியாமல் வாயில் வந்ததை உளறிவிட்டேனப்பா.. ” என்று பரிதவித்தார்.

தன்னை அடக்க முயன்று விழிகளை இறுக மூடித் திறந்தான். அவரின் கையைத் தன் கன்னத்தோடு அழுந்த பற்றி, “நீங்கள் கூட என்னைத் தப்பாக நினைக்கிறீர்களே அம்மா. நான் அப்படிப்பட்டவனா அம்மா?” என்று தாங்கமுடியாமல் கேட்டான்.

“ஐயோ.. இல்லை கண்ணா! என் பிள்ளை சொக்கத் தங்கமாச்சே! அம்மா ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டேன் அப்பு. அப்பா ஒருபக்கம், அமலன் ஒருபக்கம், வெண்பா ஒருபக்கம் என்று இருக்கிறார்கள். இதற்குக் காரணமான நீயாவது சந்தோசமாக இருந்தாலும் பரவாயில்லை. அதுவும் இல்லை! இப்படி எல்லோரும் ஒவ்வொரு திசையாக இருக்கிறீர்களே என்கிற கோபத்தில் யோசிக்காமல் சொல்லிவிட்டேன் தர்சா...” என்றவரின் கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.

மனம் ரணமாகிப் போயிருந்தாலும் அதைத் தாய்க்குக் காட்டாமல் மறைத்துக் கொண்டவன், “விடுங்கம்மா. ஏதோ கோபத்தில் தானே சொன்னீர்கள். அதற்காக அழுவீர்களா…” என்று அவரைத் தேற்றி, அவர் கண்களையும் துடைத்துவிட்டான்.

“அம்மா மேல் கோபமில்லையே..” அப்போதும் உள்ளே போய்விட்ட குரலில் தாய் கேட்க, “இல்லைம்மா..” என்றான் மனதை மறைத்து.

அதன் பிறகே மஞ்சுளாவின் முகம் ஓரளவுக்குத் தெளிந்தது.

“போய் வெண்பாவை சமாதானப்படுத்து தர்சா. அவள் இந்த இரண்டு வாரமாக யாருடனும் கதைக்கவில்லை. ராகினி மட்டும்தான் பிடிவாதமாக அவளைச் சாப்பிட வைக்கிறாள். மகியைக் கூடப் புறக்கணித்துவிட்டாள். போப்பா.. போய் அவளோடு கதை. கதைத்து உங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு சந்தோசமாக இருங்கள்.” என்றார் அன்னையாக.

என்றும் அதைக் காதில் வாங்காமல் போகிறவன் இன்று, “சரிம்மா..” என்றுவிட்டு வெண்பாவின் அறையை நோக்கி நடந்தான்.

இனியாவது நடப்பவை அனைத்தும் நல்லதாக நடக்கட்டும் என்று எண்ணியபடி செல்லும் மகனையே பார்த்துக்கொண்டு நின்றவர், “தர்சா..” என்று மெல்ல அழைத்தார்.

நடந்துகொண்டிருந்தவன் நின்று திரும்பிக் கேள்வியாகப் பார்த்தான்.

“அவள் ஏதாவது கோபமாகப் பேசினாலும் கொஞ்சம் பொறுமையாகப் பேசு. ஏனென்றால் பிழை உன் பக்கம் தான். அதனால் உன் முன்கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அவளிடம் தன்மையாகப் பேசு.” என்றார் மஞ்சுளா.

சரியென்பதாகத் தலையை அசைத்துவிட்டு மனைவியிடம் சென்றான் தர்சன்.
 
Last edited by a moderator:

Author: Vishakini
Article Title: இன்னுயிராவாய் என்னுயிரே - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
தமையனின் பேச்சில் வீட்டினரைப் பற்றி யோசிக்கத் தவறிவிட்டேனே என்று குன்றிப்போனான் தர்சன்.

அம்மா, அப்பா, அமலன் என்று ஒவ்வொருவரினதும் முகங்களும் மனக்கண்ணில் வர, அதற்கு மேலும் அங்கிருக்கப் பிடிக்காமல் வீட்டுக்கு விரைந்தான்.

இரண்டுவாரப் பிரிவா, அல்லது ஆழ்மனத்தின் ஏக்கத்தைத் தமையனின் பேச்சுக் கிளறிவிட்டதா, ஏதோ ஒன்று! வெண்பாவைக் காண மனம் ஏங்க வீட்டுக்குள் நுழைந்தவனின் பார்வையில், கையிலிருந்த போட்டோவைப் பார்த்தபடி அமர்ந்திருந்த அன்னை பட்டார்.

அவரின் முகத்திலிருந்த வாட்டம் மனதைத் தாக்க, “அம்மா..!” என்று அழைத்தான் தர்சன்.

நிமிர்ந்து பார்த்த மஞ்சுளாவின் விழிகளில் சட்டெனக் கோபத்தின் சாயல். வேகமாக எழுந்து மகனருகில் வந்தவர், “இந்தா! இந்தப் போட்டோவைப் பார்! இதுதான் அமலனுக்குப் பார்த்திருக்கும் பெண். இவளையும் நீ காதலிக்கிறாயா இல்லையா என்று இப்போதே சொல்லிவிடு. பிறகு, உன்னிடம் சொல்லாமல் நாங்கள் முடிவுசெய்ய நீ அவளின் கழுத்திலும் தாலியைக் காட்டிவிட்டாய் என்றால், திரும்பவும் என்னால் அமலனுக்கு இன்னொரு பெண்ணைத் தேடமுடியாது!” என்று பட்டெனச் சொல்லிவிட்டார்.

அதைக்கேட்ட தர்சனோ சாட்டையடி வாங்கியவனாய், விருட்டென நிமிர்ந்து வலி நிறைந்த விழிகளால் அன்னையை வெறித்தான். அவன் முகமோ அவமானத்தில் குன்றிக் குறுகிச் சிதைந்தது.

காணும் பெண்களின் கழுத்திலெல்லாம் தாலியைக் கட்டுமளவுக்குத் தரம் தாழ்ந்தவனா அவன்?

மகனின் விழிகளில் தெரிந்த அடிபட்ட தோற்றத்தைப் பார்த்தவருக்கு, அப்போதுதான் தான் என்ன சொன்னோம் என்பதே உறைத்தது.

அது உறைத்த மாத்திரத்தில் விழிகள் குளமாக, மகனின் கன்னங்களைப் பற்றியவர், “கடவுளே..! என் பிள்ளையின் மனதை நானே நோகடித்துவிட்டேனா.. தர்சா அம்மா சொன்னதைப் பொருட்படுத்தாதே கண்ணா. தெரியாமல் வாயில் வந்ததை உளறிவிட்டேனப்பா.. ” என்று பரிதவித்தார்.

தன்னை அடக்க முயன்று விழிகளை இறுக மூடித் திறந்தான். அவரின் கையைத் தன் கன்னத்தோடு அழுந்த பற்றி, “நீங்கள் கூட என்னைத் தப்பாக நினைக்கிறீர்களே அம்மா. நான் அப்படிப்பட்டவனா அம்மா?” என்று தாங்கமுடியாமல் கேட்டான்.

“ஐயோ.. இல்லை கண்ணா! என் பிள்ளை சொக்கத் தங்கமாச்சே! அம்மா ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டேன் அப்பு. அப்பா ஒருபக்கம், அமலன் ஒருபக்கம், வெண்பா ஒருபக்கம் என்று இருக்கிறார்கள். இதற்குக் காரணமான நீயாவது சந்தோசமாக இருந்தாலும் பரவாயில்லை. அதுவும் இல்லை! இப்படி எல்லோரும் ஒவ்வொரு திசையாக இருக்கிறீர்களே என்கிற கோபத்தில் யோசிக்காமல் சொல்லிவிட்டேன் தர்சா...” என்றவரின் கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.

மனம் ரணமாகிப் போயிருந்தாலும் அதைத் தாய்க்குக் காட்டாமல் மறைத்துக் கொண்டவன், “விடுங்கம்மா. ஏதோ கோபத்தில் தானே சொன்னீர்கள். அதற்காக அழுவீர்களா…” என்று அவரைத் தேற்றி, அவர் கண்களையும் துடைத்துவிட்டான்.

“அம்மா மேல் கோபமில்லையே..” அப்போதும் உள்ளே போய்விட்ட குரலில் தாய் கேட்க, “இல்லைம்மா..” என்றான் மனதை மறைத்து.

அதன் பிறகே மஞ்சுளாவின் முகம் ஓரளவுக்குத் தெளிந்தது.

“போய் வெண்பாவை சமாதானப்படுத்து தர்சா. அவள் இந்த இரண்டு வாரமாக யாருடனும் கதைக்கவில்லை. ராகினி மட்டும்தான் பிடிவாதமாக அவளைச் சாப்பிட வைக்கிறாள். மகியைக் கூடப் புறக்கணித்துவிட்டாள். போப்பா.. போய் அவளோடு கதை. கதைத்து உங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு சந்தோசமாக இருங்கள்.” என்றார் அன்னையாக.

என்றும் அதைக் காதில் வாங்காமல் போகிறவன் இன்று, “சரிம்மா..” என்றுவிட்டு வெண்பாவின் அறையை நோக்கி நடந்தான்.

இனியாவது நடப்பவை அனைத்தும் நல்லதாக நடக்கட்டும் என்று எண்ணியபடி செல்லும் மகனையே பார்த்துக்கொண்டு நின்றவர், “தர்சா..” என்று மெல்ல அழைத்தார்.

நடந்துகொண்டிருந்தவன் நின்று திரும்பிக் கேள்வியாகப் பார்த்தான்.

“அவள் ஏதாவது கோபமாகப் பேசினாலும் கொஞ்சம் பொறுமையாகப் பேசு. ஏனென்றால் பிழை உன் பக்கம் தான். அதனால் உன் முன்கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அவளிடம் தன்மையாகப் பேசு.” என்றார் மஞ்சுளா.

சரியென்பதாகத் தலையை அசைத்துவிட்டு மனைவியிடம் சென்றான் தர்சன்.

அவளது அறையின் கதவை பேருக்காகத் தட்டிவிட்டு உரிமையோடு அவன் உள்ளே நுழைய, ராகினிதான் வருகிறாள் என்று எண்ணித் திரும்பிப் பார்த்தாள் வெண்பா. தர்சனைக் கண்டதும் ஒருகணம் அதிர்ந்தாலும் அடுத்த நொடியே அனல் பறந்தது அவள் விழிகளில்.

ஆங்காரத்துடன் கட்டிலில் இருந்து எழுந்தவள், “வெளியே போ! என்ன தைரியம் இருந்தால் என் அறைக்குள் வருவாய். என் கண்முன்னால் நிற்காமல் போ வெளியே!” என்றாள் ஆத்திரத்துடன்.

அதைக்கேட்டு தர்சனுக்கு ஏனோ கோபம் வரவில்லை. மாறாக ஒருவிதப் பரிதாபமே தோன்றியது. அந்தளவுக்கு அழுதழுது வீங்கிய கண்மடல்களுடன் இருந்தவளின் தாமரை முகம் சோகத்திலும், துக்கத்திலும் சோர்ந்து பொலிவிழந்து கிடந்தது.

அவனையும் அறியாமலேயே முதன் முதலாக அவன் அவளைப் பார்த்தபோது அவள் முகத்தில் இருந்த பேரழகும், அதைப்பார்த்துத் தான் மயங்கியதும் கண்முன்னால் வந்துபோனது.
 
Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
என்னதான் அவள் செய்தது பிழையாக இருந்தாலும் இன்றைய அவளின் கண்ணீருக்கு, இந்த வேதனைக்கு, மனக்கவலைக்கு அவன் தானே காரணம்.

“நான் சொல்வதைக் கொஞ்சம் கேள் வெண்பா..” என்றவனிடம், “கேட்க முடியாது!” என்று உடனடியாக மறுத்தாள் அவள். “எதையும் நீ என்னிடம் சொல்லவும் வேண்டாம்! அதை நான் கேட்கவும் மாட்டேன்! உன் முகத்தில் விழிக்கவே எனக்குப் பிடிக்கவில்லை. முதலில் இங்கிருந்து வெளியே போ!”

“சரி சரி போகிறேன்! அதற்கு முதலில் என் பேச்சையும் கொஞ்சம் கேள். நான் செய்தது பிழைதான். அதை உன் மேல் கொண்ட அன்பினால் செய்த தவறு என்று எண்ணி என்னை மன்னிக்க மாட்டாயா?” என்று தழைந்து கேட்டான் தர்சன்.

அந்த அறைக்குள் வரும்வரை அவன் மனதிலும் அவள் மேல் கோபம் இருந்ததுதான்! ஆனால், அவள் இருந்த நிலையையும் அவளின் கோபத்தையும் பார்த்தவனுக்கு, அது எங்கோ பறந்துவிட எப்படியாவது அவளைச் சாமாதானப்படுத்திவிட வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இப்போது இருந்தது.

“மன்னிப்பதா? உன்னையா? இந்த ஜென்மத்தில் முடியாது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு, மன்னிப்பு என்று ஒன்றைக் கேட்டுத் தப்பிக்கலாம் என்று நினைத்தாயா?” ஆத்திரத்தில் அவள் குரல் உயர்ந்தது.

“கத்தாதே வெண்பா. உனக்கு என் மீதுதானே கோபம். என்னுடன் தானே சண்டை. நான் உன் பக்கத்தில் தானே நிற்கிறேன். பிறகு எதற்குக் கத்துகிறாய். வெளியே அம்மா நிற்கிறார். அவர் காதில் விழப் போகிறது.” என்றான் தர்சன்.

அது வெண்பாவின் ஆங்காரத்தை இன்னுமே கிளப்பி விட்டது. “நன்றாகக் கேட்கட்டும். கேட்டுவிட்டுக் கிடந்து அழட்டும். உன்னையும் ஒரு பிள்ளையென்று பெற்று வளர்த்தாரே. அதற்கு அவர் அனுபவிக்க வேண்டாமா?” என்றாள் ஆக்ரோசமாக.

அதைக் கேட்டவனின் விழிகள் கோபத்தில் சிவந்தன. முகம் பாறையாக இறுகியது. அவளின் கன்னத்தில் அறையத் துடித்த கையை அடக்குவதற்கே பெரும் பாடுபட்டுப் போனான் தர்சன்.

தன்னைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தியவன், முதல் வேலையாக அறையின் கதவைச் சாத்திவிட்டு வந்தான்.

“நான் தானே உனக்குக் கெடுதல் செய்தவன். என் அம்மா உனக்கு என்ன கொடுமை செய்தார் என்று அவரை இழுக்கிறாய். என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லு, திட்டு. ஆனால், அம்மாவை இழுக்காதே!” என்று சுட்டுவிரலை நீட்டி எச்சரித்தான்.

அதைக்கேட்டு எள்ளலாகச் சிரித்தாள் வெண்பா. “ஓ..! உன் அம்மாவைச் சொன்னதும் உனக்கு வலிக்கிறதோ?அவர் மட்டும் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கவேண்டும். ஆனால், ஊரான் வீட்டுப் பெண்ணை நீ எதுவும் செய்வாய்! அவளின் வாழ்க்கையையே நாசமாக்குவாய். அவளுக்கென்று ஒரு விருப்பம், ஆசை, எதிர்பார்ப்பு, கனவு எல்லாம் இருக்கும் என்று யோசிக்கவே மாட்டாய். அப்படித்தானே!” என்று ஆக்ரோசமாகக் கேட்டவள்,

“நானும் என் அம்மாவும் எங்கள் வீட்டில் நிம்மதியாக இருந்தோமே. சந்தோசமாக வாழ்ந்தோமே! ஒன்றாக இருக்கலாம் என்று சொல்லி ஒற்றைக்காலில் நின்று இங்கே கூட்டிவந்து இப்படி என் சந்தோசத்தைப் பறித்துக் கொண்டாயே, நீயெல்லாம் மனிதனா? இதையே உனக்கு ஒரு தங்கை இருந்து அவளுக்கு யாராவது இப்படிச் செய்தால் சும்மா விட்டுவிடுவாயா? எனக்கென்று யாருமில்லாமல் போனதுதானே உனக்கும் உன் குடும்பத்துக்கும் வசதியாகிப் போனது. தட்டிக்கேட்க நாதியற்றவள் என்கிற தைரியத்தில் தானே இப்படியெல்லாம் நடந்துகொண்டாய்!” என்றபோது, கழிவிரக்கத்தில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அதையும் ஆத்திரத்தோடு சுண்டி எறிந்தவளுக்கு, அவனைத் தன் சார்பில் தண்டிக்க யாரும் இல்லையே என்று துடித்தது நெஞ்சம்!

தந்தையின் இழப்பை என்றுமில்லாது அன்று பெரிதாக உணர்ந்தாள்.

தர்சனுக்கோ ‘எனக்கென்று யாருமில்லை’ என்று அவள் சொன்னதைக் கேட்டதும் நெஞ்சுக்குள் வலித்தது.

அதோடு, எப்போதும் கோபத்தில் சிலிர்ப்பவளின் கண்ணீர் அவனின் ஆழ்மனதுவரை சென்று பாதிக்க, “ப்ச் வெண்பா! உன் கோபம் இன்னும் தீரவில்லை என்றால் என்னை இன்னும் திட்டு. வேண்டுமானால் நான்கு அடி வேண்டுமானாலும் அடி! அதைவிட்டுவிட்டு சும்மா அழாதே!” என்றவன், அவளின் கண்ணீரைத் துடைக்க எண்ணி அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தான்.

“அங்கேயே நில்! கிட்ட வராதே!” அதிகாரமும் ஆங்கராமுமாகச் சொன்னவளைப் புரியாமல் பார்த்தான் தர்சன்.

“என்ன? எப்போதுடா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்தாயோ?”

அப்போதும் அவள் சொல்வதன் அர்த்தம் பிடிபடாமல், “என்ன சந்தர்ப்பம்? எதற்காக நான் காத்திருக்க வேண்டும்?” என்று புருவங்கள் சுருங்கக் கேட்டவனுக்கு, அவள் சொன்னதன் அர்த்தம் புரியத் தொடங்குகையிலேயே,

“உனக்கா புரியாது? எமகாதகன்டா நீ. புருஷன் என்று சொல்லி நெருங்கி என்னைச் சீரழிக்கலாம் என்று நினைத்தாயா? அது மட்டும் கனவிலும் நடக்காது!” என்றாள் அவள்.

அதைக் கேட்டவனின் முகம் கடுத்தது. எவ்வளவு கேவலமாக அவனை நினைக்கிறாள்!

“அறிவுகெட்ட தனமாக எதையாவது உளறி திரும்பத் திரும்ப என் கோபத்தைக் கிளப்பாதே வெண்பா. அப்படியே உன்னை நான் தொட்டால் தான் என்ன? நான் உன் புருஷன். கணவன் மனைவி உறவு அது. அதை அசிங்கமாகப் பேசாதே!” என்றான் ஆத்திரத்தோடு.
 
Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
அவளின் எடுத்தெரிந்த ஒவ்வொரு பேச்சுக்களும் அவனின் காதல் கொண்ட மனதை மெல்ல மெல்ல சிதைக்கத் தொடங்கியிருந்தது.

“என்னது? நீ என் புருசனா?” என்று ஆத்திரத்தோடு நக்கலாகக் கேட்டவள், தன் கழுத்தில் தொங்கிய தாலிக்கயிறை எடுத்து, அவன் முன்னால் நீட்டி, “இந்தக் கயிறு என் கழுத்தில் தொங்குவதால் அப்படி நினைக்கிறாயோ? அதனால் எந்தக் கருமத்தையும் செய்யலாம் என்று நினைத்தாயா? என் கழுத்தை நெரிக்கும் இந்தக் கயிறை வெகு விரைவில் உன் முகத்திலேயே தூக்கி எறிகிறேன் பார்!” என்றாள் அலட்சியமும் ஆத்திரமுமாக.

அதுவரை இழுத்துப் பிடித்திருந்த தர்சனின் பொறுமை முற்றிலுமாகப் பறந்தது!

மனிதனாய் இருந்தவனை ‘தாலியைக் கழட்டி எறிவேன்’ என்கிற அவளின் பேச்சு மிருகமாய் மாற்றிவிட, வேட்டையாடும் எண்ணம் கொண்டு மிக வேகமாய் அவளை நெருங்கியவன் வலுக்கட்டாயமாக அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டுவந்தான்.

அதை எதிர்பாராமல் ஒருநொடி ஸ்தம்பித்து நின்றவள் மறுநொடியே, “விடுடா என்னை!” என்று சீறினாள். “விடு என்னை.. விடுடா!” என்று அவனிடமிருந்து விடுபடப் போராடினாள்.

அவளை மிக இலகுவாகச் சமாளித்தபடி, “முடியாது! என்ன சொன்னாய்? என்னடி சொன்னாய்? தாலியை கழட்டி எறிவாயா? பார்ப்போம், இன்றைக்குப் பிறகு நீ எப்படித் தாலியைக் கழட்டுகிறாய் என்று நானும் பார்க்கிறேன்! தப்புச் செய்துவிட்டோமே என்று எண்ணிப் பொறுத்துப் போனால் அளவுக்கு அதிகமாகவே துள்ளுகிறாயே, என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது உனக்கு? இளிச்சவாயன் மாதிரியா? உன் உணர்வுகளை மதித்து இவ்வளவு நாளும் உன்னை விட்டு வைத்ததுதான்டி நான் செய்த பெரும் பிழை.” என்றவன், அவள் முகம் நோக்கிக் குனிய, அவனின் வலிமையின் முன்னால் தான் தோற்கப் போகிறோம் என்பது திட்டமாகத் தெரிய, அழுகை வந்தது அவளுக்கு.

அவனிடம் எப்போதுமே அவள் தோற்றுப் போகிறாளே! ஐயோ கூடாது! இதில் மட்டும் அவள் தோற்கவே கூடாது!

அவனிடமிருந்து எப்படியாவது தப்பித்து விடவேண்டும் என்பது மட்டுமே அந்த நிமிடத்தில் அவள் குறியாக இருக்க, “மனிதனாடா நீ? மிருகம்.. விடுடா என்னை! ஒரு அப்பனுக்குத்தான் பிறந்தவன் என்றால் விடுடா என்னை!” என்றாள் ஆங்காரத்தோடு.

அதைக் கேட்டவன் ஒருநொடி அப்படியே உறைந்தான். வெறுப்போடு அவளை வெறித்தவன் அடுத்த நொடியே நெருப்பைத் தொட்டவன் போல் அவளை உதறித் தள்ளினான், “ஒரு குடும்பப் பெண் மாதிரியடி பேசுகிறாய் !” என்று கேட்டபடி.

சுவரோடு சென்று அவள் மோதியபோதிலும், ஆத்திரம் அடங்காமல் அவளை நெருங்கிப் பளார் என்று கன்னத்தில் அறைந்தான் தர்சன்.

“பெண்ணாடி நீ? பிசாசு! என் நிம்மதியைக் குலைக்க என்றே வந்த பிசாசு. போயும் போயும் உன்னைப்போய்க் காதலித்தேனே! ச்சே!” என்றவன், அதற்குமேலும் அவள் முகத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்காமல் வெளியே விரைந்தான்.

அறையின் வாசல் அருகில் வந்ததும் நின்று திரும்பி, “இனி எந்தக் காலத்திலும் என் கை உன்மேல் படாது. ஆனால், இந்த வாழ்க்கையில் இருந்து உனக்கு விடுதலையும் கிடையாது. இது உனக்கும் தண்டனை. உன்னைப் போன்ற கேவலமான ஒருத்தியைக் காதலித்த எனக்கும் தண்டனை!” என்று உறுமியவன், அறைக் கதவைப் படார் என்று திறந்துகொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

அவன் சொன்னவைகளைப் பற்றியோ, அவனின் கோபத்தைப் பற்றியோ எந்தக் கவலையும் இன்றி நின்றவளுக்கு, எந்தச் சேதாரமும் இன்றி அவனிடமிருந்து தப்பிவிட்ட நிம்மதி மட்டுமே
அந்த நொடியில் இருந்தது.