அத்தியாயம்-8
மனதைப்போட்டு அரித்துக்கொண்டிருந்த வேதனையோடு தோட்டத்தில் அமர்ந்திருந்தார் மஞ்சுளா. சற்றுமுன், கோபத்தோடு காரைக் கிளப்பிக்கொண்டு சென்ற மகனே அவர் நினைவில் நிறைந்திருந்தான்.
தான் அருமை பெருமையாகப் பெற்றெடுத்து, வீட்டின் கடைக்குட்டி என்று செல்லமாக வளர்த்த மகன், தன் வாழ்க்கையைத் தானே சிக்கலாக்கிக் கொண்டானே என்று வருந்தினார். அதுமட்டுமல்லாது, எப்படி அவர்கள் இருவரையும் இணைப்பது என்றும் தெரியவில்லை.
மகனைத் தேடிக்கொண்டு அங்கே வந்த ராகினி மஞ்சுளாவைக் கண்டுவிட்டு, “அத்தை, தனியாக இருந்து இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
பதில் சொல்லத் தோன்றாமல் மருமகளை நிமிர்ந்து வெற்றுப் பார்வை பார்த்தார் மஞ்சுளா.
“என்ன அத்தை. ஏன் ஒருமாதிரி இருக்கிறீர்கள்? தர்சனை நினைத்தா?” என்று கேட்டவள் அவரின் பதிலை எதிர்பாராது, “கவலைப் படாதீர்கள் அத்தை. இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லாம் சரியாகிவிடும். வெண்பாவின் கோபத்தில் நியாயமும் இருக்கிறது தானே.” என்றாள் தொடர்ந்து.
தனக்கு அருகிலேயே மருமகளை அமரச் சொன்னவர், “நியாயம் இருக்கிறது என்பதற்காகக் காலம் பூரா சண்டை பிடித்துக்கொண்டே இருக்க முடியாதுதானே ராகினி. இருவரும் ஒற்றுமையாகி குடும்பம் குட்டி என்று வாழ வேண்டாமா?” என்றார்.
“ம்ம்..” என்று அதை ஆமோதித்தாள் ராகினி.
“எங்களுக்கு மூன்றும் ஆண்பிள்ளைகள் என்றாலும் மூன்றையும் மூன்று கண்ணாகத்தான் வளர்த்தோம் ராகினி. அவர்களின் திருமணங்களையும் எந்தக் குறையும் இல்லாமல் வெகு சிறப்பாகச் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தோம். அப்படித்தான் உங்கள் திருமணமும் நடந்தது. அடுத்து அமலனுக்குக் கடைசியாகத் தர்சனுக்கு என்று நான் நினைத்திருக்க இவனானால் இப்படியொரு கல்யாணத்தைச் செய்துவிட்டானே என்று கவலையாக இருக்கிறது ராகினி.
“இது போதாது என்று, எங்கேயோ இருந்த தங்கையை நம் வீட்டுக்கு வா என்று கூட்டிக்கொண்டு வந்துவிட்டு அவள் மகளின் வாழ்க்கையை நாம் கெடுத்துவிட்டோமோ, இதற்கு அவள் தனியாக இருந்திருக்கச் சந்தோசமாக இருந்திருப்பார்களோ என்று உன் மாமாவுக்கு வேறு ஒரே கவலை. என்ன சொல்லித் தேற்றுவது என்றே எனக்குத் தெரியவில்லை.” என்று தன் மனக்கவலைகளை மருமகளிடம் கொட்டினார் மஞ்சுளா.
அதைக்கேட்டு ராகினிக்கும் கவலையாக இருந்தது. எப்போதுமே மஞ்சுளாவிடம் ஒருவித கம்பீரம் இருக்கும். நான் ஒன்றுக்கு மூன்று ஆண்பிள்ளைகளைப் பெற்றவள், எனக்கு என்ன வரப்போகிறது என்கிற நிமிர்வு அவரிடம் இருக்கும்.
இப்படி இலகுவில் மனதைத் திறப்பவறல்ல அவர். அப்படியிருந்தும் இன்று இப்படிப் பேசுகிறார் என்றால் மனதளவில் அவர் படும்பாடு புரிந்தது ராகினிக்கு.
இதமாக மஞ்சுளாவின் கையைப் பற்றிக் கொண்டவள், “ஒன்றுக்கும் யோசிக்காதீர்கள் அத்தை. அவர்கள் சமாதானம் ஆகிவிடுவார்கள். அதுமட்டுமல்ல வெகு சீக்கிரமாகவே நீங்களும் மாமாவும் இன்னொருமுறை அப்பப்பா அப்பம்மாவும் ஆகிவிடுவீர்கள் பாருங்கள்.” என்றாள் மருமகள்.
அந்த மகிழ்வான தருணத்தை மனக்கண்ணில் கண்டவரின் முகம் புன்னகையைப் பூச, அவளின் கையை இப்போது தான் பற்றி, “உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.” என்றார் நெகிழ்ந்த குரலில்.
“கட்டாயம் பலிக்கும் அத்தை!” என்று ஆருடம் சொன்னாள் அவள்.
“அத்தை, நாம் இப்படி வாயால் பேசிக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது, நம் பக்கத்தில் இருந்து அவர்கள் சேர்வதற்கு ஏதாவது செய்யவேண்டும்.” என்ற மருமகளைக் கேள்வியாகப் பார்த்தார் மஞ்சுளா.
“என்ன அத்தை பார்க்கிறீர்கள்? வெண்பாவை தர்சனின் அறைக்கு அனுப்புங்கள். அதோடு அவர்களின் திருமணத்தைப் பதிவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.” என்று மாமியாருக்கே திட்டம் போட்டுக் கொடுத்தாள் மருமகள்.
“இப்படிக் கீரியும் பாம்புமாக இருப்பவர்களை ஒரே அறையில் விட்டால் இன்னும் சண்டை பிடிக்க மாட்டார்களா?” என்று யோசனையோடு கேட்டார் அவர்.
“அவர்களை அப்படி விட்டால்தான் அத்தை இந்தச் சண்டையே முடிவுக்கு வரும்.” என்றாள் மருமகள், புன்னகையோடு.
பிறகு வேறு சண்டை ஆரம்பித்துவிடும் என்று மனதுக்குள் நினைத்து நகைத்துக்கொண்டாள் அந்த இனிய பெண்!
அதன்படி, அடுத்தநாள் காலையே தன் வேலையை ஆரம்பித்தார் மஞ்சுளா.
“தர்சா, இனி வெண்பா உன் அறையிலேயே தங்கிக் கொள்ளட்டும்!” என்றார் அறிவிப்பாக.
“எதற்கு? அவள் அவளுடைய அறையிலேயே இருக்கட்டும்!” என்று சிடுசிடுத்தான் மகன்.
“அதெல்லாம் முடியாது! இனி அவள் உன் அறையில்தான் இருப்பாள்!” என்றவரை மகன் முறைக்க, “என்னடா முறைப்பு?அவள் கழுத்தில் நீதானே தாலியை கட்டினாய்! அப்படியென்றால் அவள் உன் மனைவிதானே! உன் மனைவி உன் அறையில் இருக்காமல் வேறு எங்கே இருப்பது? அவளும் உன்னோடு இருப்பதாக இருந்தால் நீ இங்கேயே இரு! இல்லையானால் தனிவீடு பார்த்துக்கொண்டு உன் மனைவியோடு போய்விடு! ‘மகி வேறு, என்ன அண்ணி உங்கள் மகன் என் மகளைக் கண்டுகொள்கிறானே இல்லை’ என்று என்னுடன் சண்டைக்கு வருகிறாள். இதெல்லாம் தேவையா எனக்கு?” என்று ஒரே போடாகப் போட்டார் அன்னை.
நான் எப்போது அப்படிச் சொன்னேன் என்பதாக மகேஸ்வரி அதிர்ச்சியுடன் அவரை நிமிர்ந்து பார்க்க, ‘பேசாமல் இரு’ பார்வையாலேயே அடக்கினார் மஞ்சுளா.
கோடு போட்டுக் கொடுத்தால் அத்தை ரோடே போடுகிறாரே என்று மெச்சிக் கொண்டாள் ராகினி.
“என்னம்மா பேச்சு இதெல்லாம்?” என்று ஒருவித ஆற்றாமையோடு கேட்டவனுக்கு, தெரியாத்தனமாக ஒரு தாலியைக் கட்டிவிட்டுப் படும் பாட்டை நினைத்து சினமும் ஆத்திரமும் வந்தது.
அதுவும், முதல்நாள் அவள் பேசிய படு கேவலமான வார்த்தைகளுக்குப் பிறகு இந்தப் பேச்செல்லாம் நஞ்செனக் கசக்க, அன்னையின் கேள்விக்குச் சம்மதிக்கப் பிடிக்கவேயில்லை அவனுக்கு.
அதோடு, முதல்நாள் அவளின் அருகே சென்றதற்கே அமிலமாக வார்த்தைகளைக் கொட்டியவள், இன்று ஒன்றும் சொல்லாமல் நிற்கிறாளே என்கிற எரிச்சலுடன் வெண்பாவைப் பார்த்தான் தர்சன்.
அவள் முகத்தில் பெரிதாக மறுப்பு என்று எதையும் காணோம்! மறுப்பு என்ன எந்தவித உணர்ச்சிகளையும் காணோம்!
அதைப் பார்த்தவனுக்கு அவளுக்கே ஆட்சேபனை இல்லை என்கையில் எனக்கென்ன என்கிற அலட்சியம் வந்தது!
அதுமட்டுமன்றி, இப்போதும் அமைதியாக இருந்து தன்னை மீண்டும் தன் குடும்பத்தினரிடம் குற்றவாளியாக்க முயல்கிறாளோ என்று எண்ணிய மாத்திரத்தில் கட்டுக்கடங்காமல் ஆத்திரம் பொங்கியது.
அதற்குத் தான் இடம் கொடுக்கக் கூடாது என்று எண்ணியவன், “எதையாவது செய்யுங்கள் அம்மா. எனக்கு ஒன்றுமில்லை!” என்றுவிட்டு, எழுந்து சென்றுவிட்டான்.
அது போதாதா மஞ்சுளாவுக்கு?!
அவன் அறையை அன்றே ஒரு குடும்பஸ்தனுக்கான அறையாக மாற்றியமைத்தார் அவர்.
அதுநாள் வரை அவன் அறையில் இருந்த ஒற்றைக்கட்டில் இருவர் படுக்கக் கூடிய கட்டிலாக மாற, வெண்பாவின் அனைத்துப் பொருட்களும் புது அலமாரியோடு அவன் அறைக்கு மிக வேகமாகக் குடிபெயர்ந்தன.
வெண்பாவை யாரும் சம்மதம் கேட்கவும் இல்லை. அவள் அதற்கு மறுப்பைத் தெரிவிக்கவும் இல்லை!
இரவு நன்றாக நேரம் கழித்து வீட்டுக்கு வந்தவன், அறைக்குள் சென்றபோது அங்கே உறங்கிக்கொண்டிருந்த வெண்பாவைக் கண்டதும் ஒருநொடி திகைத்துத்தான் போனான்..
அவனுடைய அறையில் அவளைக் கண்டவனின் மனம் ஒரு நொடி அசைந்தது என்னவோ உண்மைதான்.
அடுத்த நிமிடமே அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் முகத்தில் அறைய, இறுகிவிட்ட மனதோடு குளியலை முடித்துவிட்டு வந்தவனுக்கு, எங்கே படுப்பது என்பது அடுத்தப் பிரச்சினையாக இருந்தது.
அவள் உறங்கும் கட்டிலில் உறங்கப் பிடிக்காமல், அங்கிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்து, மேசையில் கைகளைக் கட்டியபடி அதிலேயே தலையையும் சாய்த்துக் கொண்டான்.
அடுத்தநாள் வேலை முடிந்து வந்தவனோடு மூன்று பேர் அமரக் கூடிய வகையிலான ஒற்றைச் சோபாவும் டிவியும் பின்னோடு வந்தது.
புருவங்கள் சுருங்க, “இதெல்லாம் எதற்குத் தர்சா?” என்று கேட்டார் அன்னை.
ஒருநொடி பதில் சொல்ல முடியாமல் திணறியவன், “என்னம்மா கேள்வி இது? டிவியையும் சோபாவையும் வைத்து என்ன செய்ய முடியும்? சோபாவில் இருந்து டிவி பார்க்கத்தான் வாங்கினேன். போதுமா? உங்கள் விசாரணை முடிந்ததா? இனி நான் இதையெல்லாம் என் அறைக்குக் கொண்டு போகலாமா?” என்று சிடுசிடுத்தான்.
நான் அப்படி என்ன கேட்டுவிட்டேன் என்று இவன் இப்படிப் பாய்கிறான் என்று உள்ளூர யோசனை ஓடினாலும், அவர் தலை சரியென்பதாக ஆடியது.
தர்சனோ, தப்பித்தால் போதும் என்பதாகப் பாய்ந்து விழுந்து மேலேறினான்.
அவன் தன் அறைக்குள் சென்று மறைந்ததும் மஞ்சுளாவை நெருங்கிய மகேஸ்வரி, “அண்ணி, உங்களுக்குப் புரியவில்லையா? என் மருமகன் தன் மனைவி இருந்து பார்க்கத்தான் டிவியும் சோபாவும் வாங்கியிருக்கிறான்.” என்றார் குரலில் துள்ளலோடு.
அதைக் கேட்டுக்கொண்டே அவர்களின் அருகில் வந்த ராகினி, “அவசரப்பட்டுச் சந்தோசப்படாதீர்கள் அம்மா. இருவரும் ஒரே கட்டிலில் படுப்பதைத் தவிர்ப்பதற்காகவும் இருக்கலாம்.” என்றாள்.
மகேஸ்வரியின் பேச்சில் மலர்ந்த மஞ்சுளாவின் முகம் ராகினியின் பேச்சில் சற்றே வாட, “சேச்சே! அப்படி இருக்காது. பிறகு எதற்கு டிவி வாங்கிக்கொண்டு வருகிறான்?” என்று மகனுக்காக வாதாடினார்.
“ஐயோ அத்தை! சோபாவும் டிவியும் வாங்கிக் கொண்டு வந்ததற்கே இதெல்லாம் எதற்கு என்று கேட்கிறீர்கள். இதுவே சோபா மட்டுமென்றால் எத்தனை கேள்விகளைக் கேட்டிருப்பீர்கள். நாம் சந்தேகப் படுவோம் என்று யோசித்துத்தான் தர்சன் டிவியையும் சேர்த்து வாங்கியிருக்கிறார். அப்படியே அவர்கள் அமர்ந்து பார்ப்பதற்குத்தான் என்றால் எதற்கு மூவர் அமரக் கூடிய சோபாவாம்?” என்று எதிர்ப்புத் தெரிவித்தாள் மருமகள்.
“அதுதானே..” என்று சோர்ந்த குரலில் மஞ்சுளா இழுக்க, “அவர்களுக்குப் பிறக்கப் போகும் பிள்ளையைப் பற்றியும் முன்கூட்டியே யோசித்தார்களோ என்னவோ..” என்றார் மகி.

Last edited by a moderator: