மகளின் குரலை கேட்டவனுக்கு குழந்தையை உடனே பார்த்தாக வேணும் என்ற எண்ணத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.அரைமணி நேரம் கழித்து மீண்டும் சாகம்பரியின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான். அப்போதுதான் தயா தனது அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்,"ம்மா.. யாரோ போன் பண்ணாங்க. நீங்க தூங்கறீங்கன்னு சொல்லிட்டேன் என்று விபரங்கள் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுதே மீண்டும் அழைப்பு வந்துவிட்டது.
அழைப்பை ஏற்றவள் பேச ஆரம்பிக்கும் பொழுதே அவளது தூக்கக் கலக்கம் அழைத்தவனுக்கு புரிந்தது. இவனது எண்ணை பார்த்தவள், " சாரி,லீவுன்னு தூங்கிட்டேன்.எங்கே வரணும்னு சொல்லுங்க .கிளம்பி வரேன்"என்றாள் .அவளது குரலை கேட்டவனுக்கு மனதுக்குள் அலை அடித்தது.எப்படியும் இன்று எல்லாவற்றிற்கும் தீர்வு கண்டாக வேண்டும் என்ற எண்ணம் வலுத்திருந்தது .
" ம்ம்..லொகேஷன் அனுப்பறேன். சிக்ஸ் தர்டிக்கு வந்தா போதும்.டின்னெர் சேர்ந்து சாப்பிடலாம்.சொல்லிட்டு வந்திடு. வரும்பொழுது தனியா வந்தாலும் சரி,இல்ல..வீட்டுலேந்து யாரையாவது கூட்டிட்டு வந்தாலும் சரி" என்று சாகம்பரி தங்களது மகளை கூட்டி வருவாளா எனும் எண்ணத்தில் சொல்லி வைத்தான்.
இன்னமும் மகளை அவள் தகப்பன் கண்டுகொண்டான் என்பதை அவள் அறியவில்லை.மணியை பார்த்தாள் .அது இப்போதே மணி ஐந்து என்றது. லேசாக சோம்பல் முறித்து எழுந்தவளுக்கு ஸ்ரீதயாவை அழைத்து செல்லும் எண்ணம் நிச்சயமாக இல்லை. சிறுமியும் தான் சொல்லவந்ததை சொல்லி முடிக்கவில்லை.
அவசரகதியில் ஒரு புடவையை எடுத்துக் கட்டிக்கொண்டாள். அது வித்யாசாகர் முதன்முதலில் அவளுக்காக எப்போதோ வாங்கி கொடுத்தது.பத்திரப்படுத்தி பீரோவில் வைத்திருந்தது.இன்று கையில் கிடைக்க அதைக் கட்டி கொண்டவளுக்கு தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற பிரதிக்யை சுத்தமாக இல்லை.
ஹாலில் பெற்றவர்கள் இருவரும் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்க அங்கே வந்தவள் ,அவர்களிடம் "நா இப்ப ஒரு பிரண்டை பார்க்க அடையாறு வரைக்கும் போறேன்.டின்னெர் வெளியே சாப்பிட்டு வந்திருவேன். எனக்காக ராத்திரி டிபன் செய்ய வேணா. தயாகுட்டிக்கு மட்டும் சாப்பிட குடுத்துடுங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள் .
அவளை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சநேரம் சிலை போல அமர்ந்திருந்தார்கள்.தங்களது வளர்ப்பு எங்கே சறுக்கியது?எதனால் பெண் அந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்தாள்? என்று இருவருக்கும் யோசனை ஆக்கிரமித்துக் கொண்டது.
அவ்வளவு நேரமாக தொலைக்காட்சியில் லயித்திருந்தவர்களுக்கு இப்போது அதே தொலைக்காட்சியை உடைத்துவிட்டால் என்ன என்று தோன்றுமளவுக்கான கோவம்.
அடையாறில் இருக்கும் அந்த ஐந்து நக்ஷத்திர தரம் வாய்ந்த ஹோட்டலில் இருவருக்குமான டேபிளை புக் செய்து வைத்திருந்தான் வித்யாசாகர். அவள் வருவதற்க்கு சரியாக பத்து நிமிஷங்களுக்கு முன்பே வந்து அமர்ந்திருந்தவனுக்கு நிலை கொள்ளவில்லை. அவள் குழந்தையை அழைத்துக் கொண்டு வருவாளா...என்று யோசித்த மனதுக்கு மூளையோ'இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல? அவள் தனியாத்தான் வருவா. இதுவே பெரிசு'என்று மிரட்டியது.
சொன்னபடிக்கு சரியாக ஆறரை மணிக்கு தனது துவிச்சக்கர வாகனத்தில் ஹோட்டல் வளாகத்துக்குள் நுழைந்தாள் சாகம்பரி. இவன் சொல்லியிருந்த டேபிளுக்கு வந்தவளுக்கு சட்டென்று ஒரு படபடப்பு வந்து இதயத்தில் ஆக்கிரமிப்பு செய்து கொண்டது. அவன் அணிந்திருந்த அதே லாவெண்டர் நிற ஷர்டுக்கு பொருத்தமாக இவளும் அதே வண்ணத்தில் புடவை கட்டியிருந்தாள். அதை கண்டுகொண்டதின் பிரதிபலிப்பாக வித்யாசாகரின் முகத்தில் சிரிப்பு ஒட்டிக்கொள்ள,பென்னவளுக்குத்தான் சங்கோஜமாக இருந்தது. அவள் தெரிந்திருந்தால் வேறு ஏதாவது கலரில் புடவை கட்டியிருக்கலாமே ..என்று யோசித்துக் கொண்டே அவனது எதிரில் அமர்ந்தாள்.
அவள் வந்து அடுத்த பத்தாவது நிமிஷத்தில் அவளுக்கு பிடித்த சூப் வந்தது.ஒன் பை டூ ... அவளிடம் ஒருவித நடுக்கம் பரவியது. இவர் இன்னமும் எனக்கு பிடித்த எதையுமே மறக்கவில்லை.அப்படியானால்...அடுத்து ஏதோ யோசிக்க நினைத்த மனதை 'ஆமா ... உனக்கு பிடிச்ச எதையும் அவர் மறக்கல.ஆனா பாரு, உன்னை கல்யாணம் செஞ்சுகிட்டு வாழ மட்டும் மறுத்துட்டாரு ' என்று அடி எடுத்துக்கொடுக்க லேசாக நெகிழ தொடங்கிய மனதை இன்னமும் இறுக்கி கடிவாளம் போடும் முயற்சியில் நுழைந்தாள் .
அவளது முயற்சியை கண்டு கொண்டவனாக ," ஏன் இவ்ளவு ஸ்ட்ரெஸ்ட்டா இருக்க சாகரி ..எனி ப்ரோப்லேம்? என்றான். அவனுக்கா தெரியாது அவள் இப்போது என்ன யோசிக்கிறாள் என்று?
அவள் சூப் குடித்து முடிக்கவும் அடுத்து பதார்த்தம் கொஞ்சம் நேரம் கழித்து எடுத்து வந்தால் போதும் என்று சொல்லிவிட்டு இவளிடம் பேச்சை தொடர்ந்தான்." நீ நம்ம பேபிய கூட்டிட்டு வந்திருக்கலாம். எஸ்,கூட்டிட்டு வருவேன்னு நினைச்சேன் " என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சாகரி . அவசரத்தில் குடித்த தண்ணீர் புரையேறி தவித்தாள்.
லேசாக அவளது தலையில் தட்டி முதுகை நீவி கொடுத்தவன்,"ப்ச்..என்ன அவசரம், இல்ல..என்ன அதிர்ச்சி வேண்டியிருக்கு? நா என்ன இல்லாததையா கேட்டேன்? காம் டவுன்" என்றுவிட்டு அவள் சுதாரிக்க அவகாசம் தந்தான்.
சாகம்பரிக்கோ, வித்யாசாகரின் பேச்சு ஞாபகம வந்தது.யாரையாவது கூட்டிட்டு வரணும்னாலும் ஓகேன்னாரே .அப்படினா அது தயாவா? இவருக்கு தயாவை எப்படி தெரியும்?அப்போ நா இவ்ளோ வருஷம் மறைச்சது வேஸ்ட் இல்லையா? கண்டுபிடிச்சிட்டாரா..இப்போ என்ன சொல்லுவாரு? குழந்தையை கேப்பாரா..என்றெல்லாம் மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் ஆக்கிரமிக்க துவண்டு போனது அவளது மனம்.
அவளை ,அவளது எண்ணம் போகும் போக்கை புரிந்தவனாக பேரரிடம் கண்ணசைக்க
அவளுக்கு பிடித்த வெஜிடபிள் பிரியாணி அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் டேபிளில் இருந்தது. அவளுக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை. அவள் படும் அவஸ்தை அவனுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. அதற்க்காக பேசாமல் இருந்துவிட முடியாது. பிரியாணியை பாதியை அவள் தட்டில் பரிமாறியவன்,தனக்கும் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டான். அவளோ பெயருக்கு கொறித்தாள்.
"சாப்பிடு சாகரி . பட்டினி கிடக்கிறது எதுக்கும் தீர்வு இல்ல.டின்னெர் சாப்பிடலாம்னு தானே கூப்பிட்டேன். சாப்பிடும்மா.."அவன் குரல் கேட்டவளுக்கு கண்களில் நீர் உற்பத்தியானது. அதை உள்ளிழுத்துக்கொண்டு லேசாக தலையசைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் சாப்பிட்டு முடிக்கும் வரையில் வேறு எதுவும் அவன் பேசவில்லை. அவள் பொறுமையாக சாப்பிட்டு முடிக்கட்டும் என்று அமைதியாக இருந்தான்.அவனது அந்த அமைதியே அவளை சோதித்து பார்க்க போதுமானதாக இருந்தது. ஒருவழியாக முடித்தவளிடம் ஐஸ்க்ரீமும் குலாப்ஜாமூனும் நீட்டினான் வித்யாசாகர்.
அவளுக்கு போதுமென்று ஆனது. "போதும் ப்ளீஸ், என்ன கேக்கணுமோ கேளுங்க.என்ன சொல்லணுமோ சொல்லுங்க. இங்கே தான் இருக்கேன். உங்களுக்கு பதில் சொல்ல தயாரா இருக்கேன். பட் ,சீக்கிரம் இதையெல்லாம் முடிச்சுக்கலாம்.என்னால முடியல " என்று திணறிக் கொண்டே சொல்லிவிட்டாள் .
அவள் சொல்வதை கேட்டவனுக்கு சிரிப்புதான் வந்தது.அவளது இந்த திணறல் கூட அவனுக்குப் புதியது தான். கதிரையில் இன்னமும் சாய்ந்து அமர்ந்து கொண்டான். அவளது முகம் காட்டும் உணர்வுகளை உள்வாங்க முயன்றான். அதில் இருக்கும் பதட்டம், அவன் மீதான காதல் ,எல்லாவற்றையும் தோற்க செய்யும் அவளது பிடிவாதம்.
சாகம்பரி தன் மீது வைத்திருக்கும் காதலை மட்டும் சாட்சியாக வைத்து மீண்டும் கேட்டான்.."நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்.ஏற்கனவே சொன்னேனே..உன்னோட ஒரு வாழ்ககை வாழணும் . நம்ம பொண்ணோட என்னோட தொலைந்து போன வருஷங்களுக்கு சேர்த்து பாசத்துல மூழ்கனும் .இன்னும் ரெண்டு குழந்தையாவது பெத்துக்கணும். இது எல்லாத்துக்கும் உன்னோட சம்மதம் வேணும்."
மற்ற எல்லாவற்றையும் பின்னே தள்ளியவள்,"கு..கு.. குழந்தை .. அது எப்படி உங்களுக்கு தெரியும்? " என்று கேட்டாள் . குழந்தை என்பது தெரியுமே தவிர அது ஆண் குழந்தையா..இல்லை பெண் குழந்தையா என்று கூட வனுக்கு தெரியாது.அதை அவளிடம் வெளிக்காட்ட பிடிக்காதவனாக ,"ஆமாம் ,இன்னிக்குதான் பேசினேன்.நீ தூங்கிட்டிருக்கன்னு சொல்லிட்டு..."
"சொல்லிட்டு..வேறே என்ன சொன்னா.." சாகம்பரி கேட்ட கேள்வியில் பெண் குழந்தை என்று புரிந்து கொண்டான். மேற்கொண்டு குழந்தையை பற்றி பேசாதவன்,"சரி ,சொல்லு .எப்போ என்னோட வீட்டு ஆளுங்களை உங்க வீட்டுக்கு வந்து பேச சொல்லவா..சீக்கிரமே கல்யாணத்தை வச்சிக்கலாம்."
அவன் சொன்னதில் தலையை உலுக்கி தன்னை சமன் செய்துக்கொள்ள முயன்றவள்,"கல்...கல்யாணம் எல்லாம் நமக்குள்ள சரி வராது வித்யா சார். நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு. திரும்பவும் ஒட்ட வைக்க எனக்கு இஷ்டம் இல்ல.ஆக்சுவலா நாம இதைப் பத்தி பேசி ரொம்பவே நாளாகிடுச்சு.நீங்க இதை பெரிய விஷயமா எடுக்கலைன்னு நினைச்சேன்." அவளது குரலில் இருந்தது என்ன?ஏமாற்றம்?
அவள் வெகுநாட்களாக தன்னை எதிர்பார்த்திருந்திருப்பாள் என்பது வித்யாசாகருக்கு நன்றாகவே புரிந்தது. சாகம்பரிக்கு யோசிக்க அவகாசம் தேவை என்றுதான் அவன் ஒதுங்கி இருந்தது. இப்போது அவளது வார்த்தைகளை கேட்கும் பொழுது மனம் வலித்தது. திரும்பவும் அவளுக்கு தான் ஏமாற்றத்தை கொடுத்து விட்டோமோ..என்று மயங்கினான்.இப்போது என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்கு சற்று நேரத்திற்க்கு ஒன்றுமே புரியவில்லை. இருவருக்குள்ளும் அத்தனை நேரமாக இல்லாத கனத்த மௌனம் .
"நீ என்னை தேடினியா சாகரி ? நா வருவேன்,நம்ம கல்யாணத்தை பத்தி திரும்பவும் உன்கிட்டே கேப்பேன் ,அதுக்கு என்ன பதில் சொல்லணும்னு எல்லாம் யோசிச்சியா?"
வித்யாசாகர் திடுமென்று இதுபோல கேப்பான் என்று சாகம்பரி நினைத்திருக்கவில்லை.
"இல்லையே..நீங்க வர மாட்டிங்க ,என்கிட்ட கல்யாணம்,குழந்தை இதை பற்றியெல்லாம் பேச மாட்டிங்கன்னு தானே நினைச்சேன். எப்போவுமே என்னோட எதிர்பார்ப்புகளை பொய்யாக்குறதை வேலையா வச்சிருக்கீங்க "என்று அவன் மீது குற்றம் சாட்டினாள் சாகம்பரி.கேட்டவனுக்கோ சிரிப்புதான் வந்தது.சிறு பிள்ளை போன்ற அவளது அந்த குற்றச்சாட்டில் ,"இனி இந்த ஜென்மத்தில் இவளை ,இவளின் எதிர்பார்ப்பை புரிந்து நடக்க வேண்டும் .அதற்க்கு எப்படியாவது இவளை திருமணம் முடிக்க வேணும் என்று முடிவு செய்தான்.

Last edited:
Author: Stn49
Article Title: இமைக்க மறந்தேன் உயிரே 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.