"நீ சொல்றது சரிதான் சாகரி . பட் ,எப்போதுமே நாம அடுத்தவங்க எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டவங்களா இருக்கணும். பிசினெஸ்ல அதை சின்சியரா போல்லோவ் பண்றேன்.அதுவே பர்சனல் வாழ்க்கையிலயும் ரிபெலெக்டீ ஆகுதுன்னு நினைக்கிறேன். நோ ஒர்ரி. நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா நீ என்ன சொல்லுறாயோ அதையே ,ம்ஹும் ... அதை மட்டும்தான் செய்வேன்.சந்தோஷமா? என்று கேட்டான்.
அவசரமாக " அப்போ சரி, என்றவள் தான் சம்மதம் கொடுத்து விட்டதாக உணர்ந்தவள், "ஏற்கனவே குடும்பம் நடத்தி இருக்கோமே .அந்த உரிமைல கேக்கறேன்.ஏன் நா சொல்றதை கேக்க கல்யாணம் வரை காத்திருக்கணும்?" என்றாள் .
அவளை புரிந்து கொண்டவனாக "நோ சான்ஸ் . அவசரமா உன்கிட்ட வாக்கு கொடுத்துட்டு அவஸ்தை அனுபவிக்க நிச்சயம் என்னால ஆகாது. நீ ,இந்த கல்யாணம் வேணாமே.நாம் இப்படியே இருப்போம் .உங்களுக்கு கல்யாண ஆசை வந்திருச்சுன்னா வேறே யாரவது பொண்ணை பார்த்து கல்யாணம் செஞ்சுக்கோங்கன்னு சொல்லுவே.அதுக்கு நா ஆளில்ல." என்று சரண்டர் எனும் பாணியில் கைகளை தூக்கியவனை என்ன செய்தால் தகும் என்று தான் சாகம்பரி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் சம்மதம் கொடுத்ததையும் ,அதை மாற்ற முயற்சி செய்த விதத்தையும் வித்யாசாகர் கவனித்திருந்தான் . அவனுக்கு பெருமூச்சுதான் எழுந்தது. சாகம்பரிக்கோ உணவு உள்ளெ செல்ல மாட்டேன் என்று படுத்தியது. அவளுக்கு இந்த ஹோட்டலையும் தெரியும். இதில் தண்ணீர் வாங்கினால் கூட அதன் விலையும் தெரியும். அதனாலேயே இன்னமும் மோசமாக உணர்ந்தாள்.பொதுவாகவே உணவை சாகம்பரி எப்போதும் வீண் செய்து பழக்கமில்லை.
அவளது அம்மா கூட சொல்வது உண்டு." உனக்கு சாகம்பரின்னு பேர் வச்சது ரொம்பவே பொருத்தம்.சாப்பாடை எப்போதுமே வேணு செய்யுறது இல்லை”.என்று.
இப்போது என்னவென்றால் ஒரு வாய் கூட அவளுக்கு பிடித்த அந்த வெஜிடபிள் பிரியாணி ,அதுவும் அவ்வளவு சுவை பட தயாரிக்கப் பட்ட,சூடான...எம்மி பிரியாணி உள்ளே செல்ல மாட்டேன் என்று மல்லுக்கட்டுவதை நினைத்து அவளுக்கே தன் மீது கோவமாக வந்தது."அப்படி என்ன அதிர்ச்சி வேண்டி கிடக்கு. ஏற்கனவே பேசிய விஷயம்தானே!திரும்ப கேக்க வந்திருக்காரு "என்று அலுத்துக்கொண்டாள். அவளது மனமே அவளை காரி துப்பியது."இங்கே எவ்ளோ பெரிய விஷயம் போய்கிட்டு இருக்கு.நீ என்னனா எம்மி பிரியாணி,மம்மி பிரயாணின்னு பாடிட்டு இருக்கே." என்று. அதற்கும் அவளிடம் இருக்கும் ஒரே பதில் 'சோறு முக்கியம் ' என்பது தான். கொஞ்ச நேரம் உணவையே பார்த்துக் கொண்டு இருந்தவள் பிறகு நிதானமாக ,"என்னால சாப்பிடவே முடியல.ப்ளீஸ் ,இதை பேக் பண்ண சொல்லிடுங்க.முடிஞ்சா வீட்டுக்கு போய் ஒவேன்ல சூடு செஞ்சு சாப்பிட்டுக்கறேன்"என்றுவிட்டாள் .
வித்யாசாகர் இதை எதிர்பார்த்தது தான்.அவள் உணவை பார்த்து விழிக்கும் பொழுதே புரிந்து கொண்டான். உணவை பேக் செய்து தர சொன்னவன், அவளுக்காக பலூடா ஆர்டர் செய்தான். "இதையாவது நீ சாப்பிட்டு தான் ஆகணும்.நா உன்னை டின்னருக்கு தான் கூப்பிட்டதாக ஞாபகம்" என்றுவிட்டு கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்து விட்டான். வித்யாசாகர் தன்னை மட்டுமே பார்த்துக்கொண்டு இருப்பது சாகம்பரிக்கு கொஞ்சம் கூசியது. அவனை நிமிர்ந்து பார்க்கும் தெம்பு இல்லாமல் சுற்றிவர திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆர்டர் செய்த பலூடா வந்துவிட , வேறு வழி இல்லாமல் ஏதோ கல்லை விழுங்குவது போல கடினப்பட்டு விழுங்கினாள் சாகம்பரி. அவளது தவிப்பு எதுவுமே வித்யாசாகரின் கண்களிலிருந்து தப்பவில்லை. அவன் மனதுக்குள் எக்கச்சக்க வேதனை மண்டியது.
"என்னை இவள் எவ்வளவு விரும்புகிறாள்.என்னை மட்டுமே பிடித்துதானே என்னோடு எட்டு மாதங்கள் ஒரு தாம்பத்திய வாழ்க்கையை வாழ்ந்தாள் .இவள் என்னை எதற்காகவும் நிர்பந்தம் செய்தது இல்லையே! அவள் கேட்டது ஒன்று தான்.அது திருமண வாழ்க்கை.அன்று பைத்தியக்காரத் தனமாக மறுத்துவிட்டு,இவ்வளவு வருஷங்கள் கழித்து கிழித்து எறிந்த பக்கங்களை திரும்ப ஒட்ட கேட்கிறேன். ஒட்டுவது என்ன அவ்வளவு சுலபமா?இன்னும் சாகரிக்கு என் மீது காதல் இருக்கிறது.திருமணம் வேண்டாம்.இப்படியே இருக்கிறேன் என்கிறாளே ! இவளை விட்டு ஏற்கனவே எனக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்.இதை எப்படி இவளுக்குப் புரியவைப்பது என்று மனதுக்குள் ஆயிரமாயிரம் போராட்டங்கள்.
தனக்கு சாகம்பரி மீது இருக்கும் காதலை வார்த்தைகளில் வடிவமாக்கி கொடுக்க அவனுக்குத் தெரியவில்லை.அதனாலேயே அமைதியாக இருந்தான்.அவனது அமைதி பெண்ணை இன்னமும் கொன்றது. ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தவள்
,"ஓகே,கிளம்பலாம்.எனக்கு ஏற்கனவே லேட் ஆகிடுச்சு.நம்ம கல்யாணம் செஞ்சுக்குறதை பத்தி இன்னமும் என்னால தெளிவா யோசிக்க முடியல. இப்போ நமக்கு,நம்ம உறவுக்கு சாட்சியா குழந்தை இருக்கிறதை தெரிஞ்சுக்கிட்டீங்க. அதனால என்ன மாறிடும்? இன்னிக்கு வரைக்கும் அப்பா என்கிற உறவு என்னோட பொண்ணுக்கு தெரியாது. அவளோட இனிஷியல் கூட உங்க பெயரை கொடுக்கல. உங்களுக்கு பேபி இருக்குற விஷயமே தெரியாது எனும் பொழுது உங்களோட பெயரை சர் நேமா குடுக்குறதுல என்னவாகிடும்?
இப்போ புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க எனக்கு விருப்பமில்லை.அது என்னோட உயிர் காதல் வித்யாசாகரா இருந்தாலும்.ஏதோ நா பெரிய தப்பு செஞ்ச மாதிரி,செய்யுற மாதிரி பீல் ஆகுது. என்னோட பேரன்ட்ஸ் பிரஷர் ஒரு பக்கம் ,கல்யாணம் செஞ்சுக்கோன்னு.நேற்று வரை அதை மட்டும் சமாளிச்சிட்டு இருந்தேன்.இன்னிக்கு உங்களையும் சேர்த்து சமாளிக்கணும்.ரியலி அம் டையார்ட்.
அது சரி , நாம ஒண்ணா இருந்தது உங்க வீட்டுக்கு தெரியும். நம்ம குழந்தை பற்றிய விவரங்கள் சொல்லிடீங்களா? அஞ்சு வயஸு குழந்தையோட ரெடிமேட் பேமிலியா உள்ளே நாம நுழைஞ்சா அவங்களுக்கு பிடிக்குமா..ஒத்துப்பாங்களா? அதைவிட நா எந்த முகத்தை வச்சிக்கிட்டு அங்கே உங்க வீட்டு ஆளுங்களை பார்ப்பேன். என்னால நிச்சயம் முடியாது" என்றுவிட்டு அங்கிருந்த தனது பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.
வித்யாசாகர் எவ்ளவோ வற்புறுத்தியும் அவனுடைய காரில் ஏறுவதற்கு மறுத்தவள். தனது துவிசக்கர வாகனத்தில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டாள்.அவள் பின்னாலேயே தனது காரில் ஏறி அவளை பின்தொடர்ந்தான் வித்யாசாகர்.அவனுக்கு அவளுடைய வீட்டை தெரிந்து கொள்ளவேண்டும்.அதோடு பெண்ணின் பாதுகாப்பு மிக முக்கியம்.அவளது பிடிவாதம் அவனுக்கு மிகுந்த கோவத்தை கொடுத்திருந்தது.
இருவரும் அறியாத விஷயம் சாகம்பரி வேலை செய்யும் ஹோட்டலின் நிர்வாகிகள் இருவர் இந்த ஹோட்டலுக்கு வந்திருப்பதும் அவர்கள் இந்த ஜோடியை பார்த்தது,வித்யாசாகர் இவளிடம் காரில் ஏற சொன்னது ,இவள் மறுத்துவிட்டு சென்றது எல்லாவற்றையும் ஒரு நாடகத்தை போல பார்த்தது,அதோடு அவர்கள் ஏறி வந்த காரின் டிரைவர் இதை ஒரு வன்மத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தது . சில சமயங்களில் இது போன்ற சங்கடங்கள் நமக்கு தெரியாமலே அமைந்து விடுவது உண்டு.
ஒருவழியாக பெண் வீட்டை அடைந்ததை பார்த்தவன் கொஞ்சம் நிம்மதியாக தனது வீட்டை நோக்கி சென்றான்.இரவு முழுவதும் சாகரியை திருமணத்திற்கு எப்படி சம்மதிக்க வைப்பது என்ற யோசனையிலேயே கழிந்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாக மறுநாள் அவள் வேலைக்கு கிளம்பும் நேரம் வரை பொறுத்திருந்தவன், சரியாக பதினோரு மணிக்கு கிளம்பி அவளது வீட்டை நோக்கி சென்றான்.
'பெண் கேட்கப் போகிறோமே' என்று கையில் பூ, பழம் சகிதம் வந்து காலிங் பெல்லை அடித்துவிட்டு வாசலில் நின்று கொண்டிருக்கும் வித்யாசாகரை சாகம்பரியின் பெற்றவர்கள் ஒரு மார்க்கமாக பார்த்தார்கள். இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
அவர்கள் உள்ளே அழைக்க வேண்டும் என்ற லௌகீக விஷயங்களை ஒதுக்கிவிட்டு அவனே உள்ளே வந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.வீட்டை சுற்றி ஒரு நோட்டம் விட்டவனின் கண்களில் ஒரு சுவாரஸ்யம் பிறந்தது. வீடு அவ்வளவு சுத்தமாக இருந்தது. சாகம்பரியின் கைவண்ணம் என்று புரிந்துகொண்டான்.
இருவரும் பெங்களூரில் ஒன்றாக வசித்த வீட்டை எப்போதுமே கண்ணாடி பாத்திரம் போல வைத்திருப்பாள் சாகம்பரி.அவளுக்கு வீட்டில் சிறு அழுக்கு இருந்தால் கூட பிடிக்காது. வேலைக்கு யாரையும் வைத்துக்கொள்ள மாட்டேன் என்று வேறு அவ்வளவு அடம் .வேலைக்கு சென்று விட்டு வந்து எப்போது சுத்தம் செய்வாளோ தெரியாது.இதோ இங்கேயும் அப்படிதான் இருக்கிறது. வித்யாசாகரின் முகத்தில் புன்னகை வந்தது.
சுவற்றில் மாட்டியிருந்த சாகம்பரி i-ஸ்ரீதயா இருவருமாக சேர்ந்து எடுத்துக்கொண்ட படம் வித்யாசாகரை இழுத்து பிடித்துக் கொண்டது. கண்களை திருப்ப முடியாமல் அசைவற்று அமர்ந்து விட்டான்.
அதே உறைநிலை தான் சாகம்பரியின் பெற்றவர்களுக்கும்."யாரிவன்...பார்த்தால் பெரிய மனிதன் போல இருக்கிறான். வெளியே டிரைவர் காரின் அருகே நின்று கொண்டிருக்கும் தோரணையே இங்கே அமர்ந்திருப்பவர் சாதாரண மனிதர் இல்லை என்று சொல்லியது. அவர்களுக்கு புரியாதது இவர் யார், இங்கே என்ன வேலை ?" என்று தெரியவேண்டும்.
உள்ளே சென்று சொம்பில் நீர் எடுத்து கொண்டு வந்து தந்த சாகம்பரியின் அம்மா நீரை பருக கொடுத்து , "நீங்க சார் யாருன்னு தெரியலையே? "என்றார். வித்யாசாகரை அவர்கள் இதுவரை பார்ததது கூட தெரியாது. அப்படி ஒரு தொழிலதிபர் இருக்கிறார் என்று மட்டுமே அவர்கள் அறிந்தது.
வித்யாசாகர் உடனே கொஞ்சமும் அதிரவோ,அலட்டிக்கொள்ளவோ இல்லை."நா உங்க பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க கேட்க வந்திருக்கேன் " என்றான். அவனுடைய பெப்பர் அண்ட் சால்ட் தலைமுடியை பார்த்துக்கொண்டே சாகம்பரியின் அப்பா,"அவளுக்கு இப்போ இருபத்தி ஒன்பது வயசுதான் ஆகுது.நாங்க அவளைவிட அதிகபட்ச்சம் அஞ்சு வயசு வித்யாசத்துல தான் பார்க்கிறோம்." என்றார் .
வித்யாசாகர் சிரித்துக்கொண்டு, "நா ஏற்கனவே உங்க பெண்ணோட கணவர் தான்.வித்யாசாகர் என்னோட பெயர். அப்போ முறைப்படி கல்யாணம் செஞ்சுக்க முடியல. இப்போ கல்யாணம் செஞ்சுகிட்டு அவளோட வாழணும் .அதுக்கு முறைப்படி உங்க பெண்ணை எனக்கு கல்யாணம் செஞ்சு கொடுப்பீங்களா ?" என்றான்.
சாகம்பரியின் பெற்றவர்களுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி.எப்படி இதற்க்கு நடந்துகொள்ள வேண்டும் என்று கூட புரியாமல் திகைத்து நின்றார்கள். அவர்கள் பெண்ணின் டயரி சொன்ன வித்யாசாகர் இவன் தானா?"
சாகம்பரியின் அம்மா அப்படியே தரையில் மடித்து உட்கார்ந்து விட்டார். மகளின் திருமணம் செய்து கொள்ளாத கணவனா வந்திருப்பது? அந்த துஷ்யந்தன் இவன் தானா? என் மகளை விட நிறைய வயது வித்யாசம் இருக்கும் போல இருக்கிறதே! அவள் எப்படி இவனை விரும்பினாள் ? ஒருவேளை இவன் பொய் சொல்கிறானோ என்று பார்த்தார்.
அவரது விழி சொன்ன மொழியை மொழி பெயர்த்தவன் "எஸ்,எனக்கும் அவளுக்கும் பத்து வருஷ வித்யாசம் .பட், காதலுக்கு வயசு எல்லாம் ஒரு விஷயமே இல்லனு உங்க பொண்ணு நிரூபிச்சிட்டா " என்றான்.
சாகம்பரியின் அப்பாவுக்கு இன்னமும் அதிர்ச்சி குறைந்தபாடில்லை.இவனை பார்த்தால் கேட்கவென்று அவரிடம் நிறைய கேள்விகள் உண்டு.அவை யாவும் இப்போது வெளியே வருவேனா! என்று தொண்டையில் சிக்கியது. அந்த அறையில் கொஞ்ச நேரம் வெறும் மௌனம் மட்டும் தான் ஆட்சி செய்தது.

Author: Stn49
Article Title: இமைக்க மறந்தேன் உயிரே 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.