• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இமைக்க மறந்தேன் உயிரே 5

Stn49

New member
வித்யாசாகர் தன்னறையில் தனிமையில் அமர்ந்திருந்தான். மணி இரவு பதினொன்றை நெருங்கியிருந்தது. ஒரு ஆஸ்திரேலியா கிளைண்ட். முக்கியமான ஒரு மீட்டிங். அவனது அப்பா தான் மீட்டிங்கில் இருந்திருக்க வேண்டும் .கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்று இவனிடம் பேச சொல்லிவிட்டார். மூன்று மணிநேரமாக இடைவெளி இல்லாமல் காதில் ஹெட்செட் வைத்திருந்தது காதுகளும்,வெகுநேரமாக அமர்ந்திருந்தது முதுகும் வலித்தது. மீட்டிங் வரும் முன்பு ஒரு ஹார்லிக்ஸ் குடித்தது. பிறகு தண்ணீர் தவிர வேறு எதுவும் உள்ளே செல்லவில்லை. சோம்பல் முறித்தவாறே எழுந்தவன் முதுகை கொஞ்சம் ஸ்ட்ரெச் செய்தான்.

அவனையும் அறியாமல் சாகம்பரியின் முகம் மனதுக்குள் மின்னியது.அவளுடன் இருக்கும்பொழுது இரவு நேரத்தில் இதுபோல் ஏதாவது மீட்டிங்கில் சிக்கிக்கொண்டால் ,கண்டிப்பாக இடையிடையே தண்ணீருடன் வேறு ஏதாவதும் சாப்பிட எடுத்துக்கொண்டு வந்து தருவதுதான். தொண்டை வரளவே அனுமதிக்க மாட்டாள்.

மீட்டிங் முடித்து வந்தபிறகு தோள்களை பிடித்துவிடுவதுடன் லேசாக முதுகையும் நீவி விடுவாள். இப்போது அந்த நினைவுகளில் மனம் ஏங்கியது. இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறாளோ என்று நினைத்துக் கொண்டான். நிச்சயம் அவளுக்கு திருமணம் ஆகியிருந்தால் கணவன் கொடுத்து வைத்தவன் தான் என்று பெருமூச்சு ஒன்று எழுந்தது.

இப்போது வீட்டில் என்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார்களே! எனக்கு சாகம்பரியது அவ்வளவுக்கு பிடித்திருந்தது. அவளுடனே வாழ்க்கை முழுவதும் வாழவும் சித்தமாக இருந்தேன். அப்படி இருக்கும் பொழுது அவள் கேட்டுமே நான் திருமணம் செய்து கொள்ள அவள் கேட்ட பொழுது மறுத்துவிட்டேன். அப்படி இருக்கும் பொழுது இதுவரை முன்பின் பார்த்தறியாத பெண்ணை திருமணம் செய்து கொண்டு மீண்டும் வருத்தம் கொள்ளவா..என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டான்.

அவனது முதுகு அவளது நீவளுக்காக காத்திருந்தது. அவனுக்கே அவன் மனது இவ்வளவுக்கு பெண்ணவளை தேடுவது அதிசயமாக இருக்கிறது. அவள் விட்டு சென்று ஆரம்பத்தில் இப்படி இல்லை. முதல் வாரம் எந்த பாதிப்பும் சுத்தமாக இல்லை. எப்பொழுது என்றே தெரியாமல் வேலை செய்யும் நேரத்தில் அவளது ஞாபகம் வரத்தொடங்கியது. சாப்பிடும்பொழுது அவளது வெண்டைபிஞ்சு விரலை கடித்துக்கொண்டதும், தக்காளி பழம் என்று அவளது உதடுகளை சாப்பாட்டுக்கு துணையாக்கியதும் ஞாபகம் வந்தால் அவன் எப்படி சாப்பிட முடியும். சாப்பாட்டை விடுத்து அவனது சுவை நரம்புகள் சாகம்பரியை தேடியது.

தூங்கும் பொழுதுகளில் இன்னமும் மோசம். அவளது உடம்பின் கதகதப்பு வேண்டும் எண்டு அடம்கொள்ளும் மனதை அடக்க முடியாமல் தடுமாற்றம். தன் மீதே கோவம். பிறகு தன்னை அவ்வளவு எளிதாக விட்டு சென்ற பெண்ணின் மீதும் கோவம். இருவரும் ஒன்றாக போர்த்திக்கொண்டு உறங்கிய போர்வை ,தலையணைகளை தனது பிளாட்டிலிருந்து இங்கே கொண்டுவந்ததன் மர்மமே இதுதானே!

வித்யாசாகரின் அம்மா கூட கேட்டார்"ஏண்டா ,இங்கே என்ன இல்லன்னு அங்கேந்து இதையெல்லாம் எடுத்துட்டு வர சொன்னே?"என்று. என்ன பதில் சொல்ல முடியும் .. அவள் இல்லாமல் தூங்க முடியவில்லை.அதனால் எடுத்து வர சொன்னேன் என்றா?மௌனமாக அவ்விடத்தை கடப்பதை தவிர வேறு வழி? அவன் அம்மா இவனை வித்யாசமாக பார்த்தார். முழுமையான நான்கு வருஷங்கள் கடந்த பிறகும்கூட அவளை நினைத்து மறுகும் மனதை என்ன செய்வது?


வித்யாசாகர் அடுத்தநாள் காலை எழுந்து வரவே நேரம் ஒன்பது மணி ஆனது. விடிகாலை வரை உறக்கம் வராமல் அலுவலக வேலைகளை செய்து கொண்டிருந்தான். இவன் உணவு மேசையில் சாப்பிடும் பொழுது மொத்த குடும்பமும் இவனையே அவதானிப்பதை வித்யாசாகரால் கண்டுகொள்ள முடிந்தது. சித்தப்பா மகளும், அத்தையின் மகனும் கூட அன்று காலையில் அங்கே இருப்பதை கண்டவனுக்கு ஏதோ இவர்கள் பேச தயங்குகிறார்கள் என்று புரிந்து போனது.

அத்தையின் மகன் இவர்களுடன் இல்லை. திருமணமும் ஆகியிருந்தது. அவன் பெல்காமில் இருக்கும் இவர்களது கிளை நிறுவனத்தை பார்த்துக்கொண்டு அங்கேயே இருக்கிறான். கணவனை இழந்த அத்தை மகன் வீட்டில் கொஞ்ச நாட்களும்,பெற்றவர்கள் வீட்டில் கொஞ்ச நாட்களுமாக அங்குமிங்குமாக இருப்பர்.வீட்டில் செல்லம் அவர்.அதனால் அவரை யாரும் ஒன்றும் சொல்லிவிட முடியாது.

சித்தப்பா மகளுக்கும் திருமணம் முடிந்து அவள் கோவையில் இருக்கிறாள்.அவள் கணவனுடன் வராமல் தனியே வந்திருந்தாள். வித்யாசாகரின் மனதில் "இவள் ஏன் தனியாக வந்திருக்கிறாள்?இவ்வளவு மாதங்களில் இதுபோன்று அவள் மட்டுமாக வந்தது கிடையாதே! ஒருவேளை அவள் கணவனுக்கும் அவளுக்கும் இடையே ஏதாவது... என்று எண்ணியவன் மனதுக்குள்ளேயே தனது தலையில் ஒரு கொட்டு வைத்துக்கொண்டான்.

அவன் வாய்விட்டு யாரிடமும் எதுவும் கேட்டானில்லை. ஒருவித தயக்கம் அவனை ஆட்கொண்டு இருந்தது.அதுவும் திருமண பேச்சை மீண்டும் எழுப்புவார்கள் என்றே பேரமைதியாக இருந்தான். மனம் மீண்டும்,'இப்போ புதுசா வேறே பொண்ணு ஏதாச்சும் பார்த்திருக்கங்களா... என்று ஜெர்க் ஆனான். 'ஓஹ் மை காட் 'என்று மனம் அலறியது.


அப்பாதான் ஆரம்பித்தார்,"நீ ஒரு பொண்ணுகூட ரிலேஷன்ஷிப்ல இருந்தியே. அந்த பொண்ணு பேருகூட.. என்ன ?

உண்மையில் அவருக்கு சாகம்பரி என்ற பெயர் நன்றாக நினைவில் இருந்தது. நல்ல பெயர் .பெண்தான் எப்படியோ ?என்று அப்போதே நினைத்தார்.

கடுப்பானான் வித்யாசாகர்."அது முடிஞ்சு போன அத்யாயம். நாலு வருஷம் முடிஞ்சு அஞ்சாவது அனிவெர்சரி கொண்டாடிட்டு இருக்கேன்.இப்போது என்ன புதுசா?அப்போவெல்லாம் ஒன்னும் என்கிட்ட நீங்களோ வீட்டுல வேறே யாருமோ கேட்டதா எனக்கு நினைவில் இல்லையே!"

அவனது பதிலில் அடுத்து எப்படி தொடர்வது என்று குடும்பம் மொத்தமாக சங்கடம் கொண்டது. வயது வந்த பிள்ளையிடம் இவற்றை பற்றி பேசவே தயக்கம். திருமணம் அவர்கள் பார்த்து செய்து வைத்ததுதான். பிள்ளை வாயை திறக்காமல் மனையில் உட்கார்ந்திருந்தான்.

இங்கே படிக்கும் காலங்களிலும் சரி,வெளிநாட்டில் மேல் படிப்பு படிக்க சென்ற பொழுதும் சரி,அவ்வளவு ஏன் ,தொழிலில் இறங்கிய பிறகும் கூட எந்த பெண்ணிடமும் அவன் காதல்வயப் பட்டதில்லை.தவறான பார்வை கூட பார்த்தது கிடையாதே!

மனைவி அவனை விடுத்து சென்றபிறகு இவனைப் பற்றி எவ்வளவு பேச்சுக்கள்!கேலிகள். அப்படியும் வித்யாசாகர் அசரவில்லை.துவளவில்லை. ஆனால், மனதில் இருந்த மேன்மை சுபாவம் அவனை விட்டு சென்றுவிட்டிருந்தது. அதன் பிறகு வருஷங்கள் கடந்த பிறகுதான் அவன் வாழ்வில் சாகம்பரி வந்தாள்.

அவளுடனாவது மகன் திருமணம் செய்துகொண்டு வாழ்வான் என்று எதிர்பார்ததுதானே பெரியவர்கள் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

இதையெல்லாம் சொல்லி வித்யாசாகருக்கு புரியவைக்கும் நிலையில் இப்போது அங்கே யாரும் இல்லை.

"ப்ச்..நாங்க கேக்குறதுக்கு பதில் சொல்லு வித்யா. இப்போ அந்த பொண்ணுகூட உனக்கு எந்த காண்டாக்ட்டும் இல்லனு எங்களுக்குத் தெரியும். இன்பாக்ட் ,எந்த பொண்ணுகூடவும் நின்னு நீ பேசி நாங்க பார்த்தது இல்லை .அப்படிப்பட்டவன் அவளோட ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்க. இப்போ கலியாணம் வேணாம்னு சொல்றே.இட்ஸ் ஓகே. எங்களுக்கு இன்னமும் அந்த பொண்ணு உன்னோட மனசுலதான் இருக்களோன்னு ஒரு டவுட். .அண்ட் உங்களுக்கு குழந்தை ஏதாவது பிறந்திருக்கான்னு சொல்லு. குழந்தையை உன்னோட வாரிசுன்னு நாங்க ஏத்துக்க தயாரா இருக்கோம். மனசுக்குள்ள கொஞ்சம் சந்தோசம், நிம்மதி. அட்லிஸ்ட் எங்க பையன் தனிமரமா நிக்காம ஒரு குழந்தைக்கு அப்பா ஆகிட்டான்னு."

அப்பாவின் கேள்வியில் தலையை பிடித்துக்கொண்டான் வித்யாசாகர்."உங்க கற்பனை வளத்துக்கு ஒரு அளவே இல்லையா? அவ என்கிட்டே கல்யாணம் செஞ்சுக்கலாமான்னு கேட்டா. நா, எனக்கு கல்யாணத்து மேலவெல்லாம் நம்பிக்கை இல்லன்னு சொல்லிட்டேன். பட் எனக்கு அவளை ரொம்பவே பிடிக்கும். என்னோட வெளியுலக ஸ்டேட்டஸ் அவளை பாதிச்சது இல்லை. என்னோட பணம் அவளை இம்ப்ரெஸ் பண்ணதில்லை.

நா கல்யாணம் வேணாம்னு சொன்ன பிறகு கொஞ்சம் அப்செட் ஆனா. பட் ,சரியாகிட்டா. பிறகு சீக்கிரமாவே என்னை பிரிஞ்சு அவங்க குடும்பத்தோட போயிட்டா. குழந்தை ..அதெல்லாம் இல்ல. பிலிவ் மீ."

அவனது வார்த்தைகளில் எந்த கலப்பும் இருப்பதாக அங்கிருந்தவர்களுக்கு தோன்றவில்லை.வித்யாசாகருக்குத்தான் அன்று அவளது தவிப்படங்கிய முகம் மீண்டும் மனக்கண்ணில் தோன்றி இம்சை செய்தது. ஒருவேளை அவள் கர்ப்பமாக இருந்திருப்பாளா..அதனால்தான்,அத்தனை மாதங்களில் இல்லாமல் திடீரென திருமணம் பற்றி கேட்டதும்,நான் மறுத்த பிறகு சீக்கிரமே என்னை விட்டும் சென்றாளா?

அன்று மேடிட்ட வயிற்றுடன் அவளை பார்த்தேனே. அது நிஜமா? என்று கேள்விகளை எழுப்பிக்கொண்டான். அவனிடம் அதற்கான பதில் இல்லை. அவளை எந்த விதத்திலும் தொந்திரவு செய்யக்கூடாது என்று முடிவு எடுத்திருந்தவன் அவளை பற்றி தெரிந்துகொள்ள ஆற்வம் காட்டியது இல்லை.இப்போது அதுவே பெரிய தவறாக தோன்றியது.

அவனது பெற்றவர்கள் அவன் மனதில் ஆழத்தில் குழந்தை என்ற சந்தேக விதையை விதைத்து விட்டார்கள்.அலுவலகம் சென்றும் அவனால் வேலையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை. மூச்சு முட்டுவது போல இருந்தது.

அலுவலகத்துக்கு அணிந்து வந்திருந்த ப்ளேசரை கழட்டி தனது கதிரையில் மாட்டியவன் கழுத்தை இறுக்கியிருந்த டையை தளர்த்தி விட்டுக்கொண்டான். அவனது மேசையில் இருந்த போத்திலில் இருந்து நீரை எடுத்து குடித்து ஆஸ்வாஸப் படுத்திக்கொள்ள முயன்றவன் ஏசியின் குளிரை கூட்டிவிட்டு மீண்டும் தனது கதிரையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.


இமைக்க மறந்தேன் உயிரே 5

ஒருவேளை தனக்கு குழந்தை இருக்குமோ..ம்ஹும் இருக்காது என்று இருவகையாக மனதில் கேள்விகள் கேட்டு பதிலையும் தானே சொல்லிக்கொண்டும் அவனுக்கு மனம் சமன் அடைய மறுத்தது. நான்கு வருஷங்களுக்கு முன்பாக நடந்தவைகளை மீண்டும் தனது மூளையில் கொண்டுவந்து திரும்பிப்பார்த்தான்.

அவள் மாதாந்திர நாட்களில் அவனது அருகில் கூட வரமாட்டாள்.தனியறையில் இருந்து கொள்வாள். அவர்கள் பேசிய நாளின் முந்தைய மாதத்தில் அவள் தனியறை சென்றதாக அவனுக்கு சரியாக நியாபகம் இல்லை. வேறு வழியில்லாமல் சுந்தருக்கு அழைத்தால், அவன் சமயசந்தற்பம் தெரியாமல் கப்பலில் ஒரு மாதத்திற்கு குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கான இன்ப சுற்றுலா சென்று இருந்தான்.அதுவும் அவன் கிளப்பி வெறும் ஒரு நாள் தான் ஆகியிருந்தது. மனம் நொந்து போனான் வித்யாசாகர்.

 
Top Bottom