அத்தியாயம் 1
"ஏய். இந்தாடி.. விடிஞ்சி எம்புட்டு நேரம் ஆச்சு. இன்னும் தூங்கிட்டு இருக்க. இருக்குற வேலை எல்லாம் யாருடி பாக்குறது. எந்திரிடி.." என்று சொல்லிக்கொண்டே அவள் மேல் நீரை ஊற்றினார் சொர்ணம்.
ஏற்கனவே உடல் நிலை முடியாமல் படுத்து இருந்தவள் தான். இதில் குளிர்ச்சியான நீர் பட்டதும் உடம்பு மேலும் குளிரில் நடுங்கியது.
பதறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள் நடுங்கியபடி.
"சித்தி உடம்பு முடியல. அதான் படுத்துட்டு இருக்கேன்.. எதுக்கு இப்படி மேல தண்ணி ஊத்துறீங்க??" என்று சோர்வுடன் கேட்டாள் அவள்.
அவள் தான் தாமரை. 24 வயது மங்கை. ஐந்தரை அடி உயரம். தேனைக் குழைத்து பூசியது போல நிறம். சராசரியை விட, சற்றே ஒல்லியான உடல்வாகு.
தாமரையின் தந்தை கொரோனா தொற்று மூலம் நோய்வாய்ப்பட்டு இறந்து விட, அதற்கு அடுத்த வருடத்திலே அவளது அன்னையும் உயிரை விட்டு இருந்தார்.
அவளுக்கு உடன் பிறந்தவர்கள் என்று யாரும் இல்லை.
வயதுப் பெண்ணை எப்படி தனியாக விட முடியும் என்று எண்ணிய அருந்ததயின் தந்தையின் உடன் பிறந்த தம்பி, அவளது சித்தப்பா வடிவேலன் அவளின் பாதுகாப்பு கருதி அவரது இல்லத்திற்கு அவளை அழைத்து வந்தார்.
ஏனோ, வடிவேலனின் மனைவி சொர்ணத்திற்கு அதில் அவ்வளவு விருப்பம் இல்லை.
இருந்தாலும் இந்த சூழ்நிலையில் தான் பேசினால், தன் பேச்சு எடுபடாது என்று கருதி அமைதி ஆகி விட்டார்.
தாமரைக்கும் தனிமையில் இருந்து விடுபட்ட உணர்வு.
அக்கா மற்றும் தம்பி என இருவர் கிடைக்க, அவர்களுடன் பேசி சிரித்துப் பழகி, அவளுக்குள் இருந்த கவலையை போக்கிக் கொண்டாள்.
பட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்பது அவளது ஆசையாக இருந்தது.
அதனால் சித்தப்பாவின் குடும்பத்தில் பிரச்சனை வருவதைப் பார்த்த பின், அந்த ஆசையை கரைத்து விட்டாள்.
ஆரம்பத்தில் சித்திக்கு கூட மாட உதவியாக இருந்தவள், நாட்போக்கில், அவளே அனைத்து வேலைகளையும் செய்யும்படி ஆகி விட்டது.
வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வீட்டில் வெட்டியாக பொழுதைக் கழித்தவள், அருகில் இருக்கும் மழலையர் பள்ளிக்குச் சென்றாள்.
சிறு சிறு குழந்தைகள் செய்யும் சேட்டைகளை எல்லாம் ரசித்து விட்டு அவர்களோடு ஒருவராக மாறி அவர்களுடன் விளையாடி, அவர்களை கவனித்து பத்திரமாக அவர்கள் பெற்றோரிடம் அனுப்பி விட்டு மதியம் ஒரு மணி போல வீட்டிற்கு வருவாள்.
அதற்குப் பிறகு வீட்டில் வேலையை கவனித்து வந்தவள், அவளுக்கு கிடைத்த வருமானம் மூலம் அவளது சித்தப்பாவிடம் கேட்டு அவளே கல்லூரியில் பகுதி நேர படிப்பில் சேர்ந்து விட்டாள்.
இதில் அவளது சித்திக்கு விருப்பம் இல்லை என்றாலும், அவளால் ஒன்றும் பேச முடிய வில்லை.
"சரி, நமக்கு வேலை ஆனா சரிதான்.." என்று அமைதியுடன் இருந்து கொண்டார்.
பகுதி நேரப் படிப்பு என்பதால், நான்கு வருடப் படிப்பு. இன்னும் இரண்டு மாதத்தில் அவளது இளநிலைப் படிப்பு முடிந்து விடும்.
அதற்குப் பிறகு, ஏதாவது நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட வேண்டும் என்பது அவளது எண்ணம்.
கடவுள் அவளது வாழ்க்கையில் அவளது எண்ணத்தை நிறைவேற்றுவாரா அல்லது வேறு மாதிரி மாற்றுவாரா என்பதை கதையின் போக்கில் பார்ப்போம்.
இப்பொழுது நிகழ்காலத்துக்கு வருவோம்.
தனது சித்தி சொர்ணத்திடம் கேட்க, "ஏன்டி. வேலை எல்லாம் அப்படியே கெடக்கு. நீ பாட்டுக்கு தூங்கிகிட்டே இருந்தா யாருடி செய்வா.." என்று சத்தம் போட,
அவளோ, "எதுக்கு இப்படி கத்துறீங்க. எனக்கு தான் முடியலன்னு படுத்துட்டு இருக்கேன்ல.. ஒரு நாள் நீங்க பண்ணா என்ன??" என்று கேட்டாள்.
"நான் செய்யணும்னா, நீ எதுக்குடி இங்க இருக்க??" என்று கேட்டிட,
அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது. பதிலுக்கு பதில் பேச முடியவில்லை. அவள் உடல் நிலையும் அதற்கு ஒத்துழைக்கவில்லை.
"என்னடி முறைக்கிற.. எந்திரிச்சி ஏதாவது சுருக்கமா பண்ணி வை.." என்று சொல்லிவிட்டுச் செல்ல,
அவளும் ஒரு பெருமூச்சுடன் மெல்ல எழுந்து, அவிழ்ந்து இருந்த தலை முடியை தூக்கிக் கொண்டை போட்டவள் அடுப்படிக்குச் சென்றாள்.
முகத்தை கழுவி விட்டு, சுடு தண்ணீர் வைத்து குடித்தவள், பாலைக் காய்ச்ச ஆரம்பித்தாள்.
அதே சமயம் காலை நேரத்திற்க்கு ரவா உப்புமா செய்து விட்டு, மதியத்திற்கு தயிர் சாதம் செய்யலாம் என்று நினைத்தவள், ஒரு பக்கம் ரவையை போட்டுக் கிளறிக் கொண்டிருக்க, இன்னொரு அடுப்பில் சாப்பாட்டிற்கு உலை வைத்தாள்.
அவள் வேலை செய்து கொண்டிருக்க, அங்கே வந்து நின்றாள் அருந்ததி.
வடிவேலன் மற்றும் சொர்ணத்தின் புதல்வி.
தாமரையை விட ஒரு வயது மூத்தவள். தாமரை அவள் பெற்றோருக்கு சில வருடங்கள் கழித்தே பிறந்தாள்.
"என்னடி.. நேத்து உடம்பு முடியலன்னு சொன்ன.. அதுக்குள்ள இங்க வேலை செய்ய வந்து நிக்குற. நான் பார்க்க மாட்டேனா??" என்று அவளிடம் கடிந்து கொண்டாள் அருந்ததி.
"ப்ச். தூங்கிட்டு தான் இருந்தேன். சித்தி தான் வந்து எழுப்பி விட்டாங்க." என்றாள் சலித்தபடி.
"ச்ச. இந்த அம்மாக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாது. எப்போ பாரும் உன்னையே வேலை பாக்க சொல்றது. நான் எங்க போய்ட்டேன். நான் பார்த்துக்க மாட்டேனா. உடம்பு முடியாதவளை போய் வேலை செய்ய சொல்லிக்கிட்டு.. இரு நான் போய் என்னனு கேட்டுட்டு வரேன்.." என்று பல்லைக் கடித்தபடி பேசியவள், அங்கிருந்து செல்லப் போக, அவளது கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள் தாமரை.
"அக்கா.. விடு. எதுக்கு அவங்ககிட்ட காலங்காத்தல்ல சத்தம் போட்டுக்கிட்டு. என்கிட்ட வேலை வாங்குறதுல அவங்களுக்கு ஒரு சந்தோசம். இருந்துட்டு போகட்டும். சரி, அரிசியை கழுவிப் போடு. உலை கொதிச்சிருச்சி." என்று தன் தமக்கையிடம் கூற, அவளும் அரிசியை கழுவி போட்டவள், அதனை வேக வைத்தாள்.
அக்காளும் தங்கையுமாக இருவருமாக சேந்து பேசிச் சிரித்தபடி வேலை செய்து கொண்டிருந்தனர்.
சத்தம் கேட்டு, சொர்ணத்திற்கு புரிந்து விட்டது அருந்ததியும் அங்கு இருக்கின்றாள் என்று.
"இவ ஒருத்தி.. அவகூட போய் நின்னுகிறா.. ம்ம்க்கும்.." என்று உதட்டைச் சுழித்தபடி வாசலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்தார்.
அந்தக் காலத்து வீடு என்பதால், திண்ணை வைத்து கட்டப்பட்டிருந்தது.
வீட்டின் உள்ளே மாற்றி அமைத்தாலும் வெளியில் திண்ணை இருக்கட்டும் என்று பிள்ளைகள் கூறி விட்டதால், வடிவேலனும் அதை அப்படியே விட்டு விட்டார்.
இரவு நேரத்தில் காத்தோட்டமாக வெளியில் வந்து பிள்ளைகள் மூவரும் சிறிது நேரம் வந்து அன்றைய கதைகளை பேசி விட்டு, அதன் பிறகே தூங்கச் செல்வர்.
அதே திண்ணையில் காலையில் வருவோர் போவோரை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருப்பது சொர்ணத்தின் வேலை.
வடிவேலன் விடியற்காலையில் எழுந்து வயல் பக்கம் சென்று விடுவார்.
தேநீர் தயார் ஆகி விட, அதனை எடுத்துக் கொண்டு தன் அன்னைக்குக் கொடுக்க அருந்ததி கிளம்பினாள்.
வெளியில் வந்தவள், "எம்மா.. இந்தாப் பிடி.." சுட சுட ஆவிப் பறக்க அப்படியே கொடுக்க, வாங்கிய சொர்ணம் சூடு தாங்காமல் டம்ளரை கீழே வைத்தார்.
"அடப்பாதகத்தி. ஏண்டி இப்படி கொடுக்கிற. கை வெந்து போய் இருக்கும் போல.." என்று அவளிடம் கடிந்து கொண்டார்.
"ம்ம். வேகட்டும்னு தான் கொடுத்தேன்.." என்றாள் வெடுக்கென்று அருந்ததி.
"அப்படி என்னடி வஞ்சம் உனக்கு என் மேல." என்று கையை ஊதிக் கொண்டே கேட்க,
"அவளுக்கே உடம்பு முடியல. எதுக்கு அந்தப் பிள்ளையை எழுப்பி விட்டு வேலை வாங்குற. நான் வந்து பண்ண மாட்டேனா. தினமும் எனக்கு முன்னாடி எந்திருச்சி எல்லா வேலையும் பாக்குறா. ஒரு நாள் படுத்தா உனக்கு என்ன ஆகிறப் போகுது. இனிமே இப்படி நடந்துகிட்ட, இன்னைக்கு டீ தான் சுட்டுச்சு. நாளைக்கு என்ன சுடும்னு தெரியாது." என்று எச்சரித்து விட்டுச் சென்றாள் அவள்.
"அடியேய்.. நான் உங்களப் பெத்த அம்மாடி.. நீயும் உன் தம்பிக்காரனும் வேற ஒருத்திக்கா சப்போர்ட் பண்றீங்க. வச்சிக்கிறேன்டி ஒரு நாளு.." என்று அவர் பேசியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் உள்ளே சென்று விட்டாள் பெண்ணவள்.
இதை எல்லாம் அறையின் ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்த சொர்ணத்தின் தவப் புதல்வன் அருணோ சத்தம் போட்டு சிரித்து விட்டான்.
சிரிப்பு சத்தம் கேட்டு கோபத்துடன் சொர்ணம் திரும்பிப் பார்க்க, அவனோ டக்கென்று ஜன்னல் கதவை மூடி விட்டு, "அப்பாடா.. நல்ல வேலை கதவைச் சாத்திட்டேன். இல்லனா காபி டம்ளர் நம்ம மேல விழுந்து இருக்கும்.." என்று நினைத்தவன், எழுந்து குளியல் அறைக்குள் சென்று தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தவன், நேராக முன் அறைக்குச் சென்றான்.
அங்கே சோபாவில் கண்ணை மூடி படுத்துக் கொண்டிருந்தாள் தாமரை.
சமையல் அறையின் உள்ளே அருந்ததி இருப்பது தெரிந்தது.
தாமரையின் அருகில் வந்து, அவள் நெற்றியில் கையை வைத்துப் பார்க்க, அவளின் உடம்பு நெருப்பாய் சுட்டது.
"அக்கா.. அக்கா.." என்று அவளை எழுப்ப, தாமரை மெல்ல கண் திறந்துப் பார்த்தாள்.
"உடம்பு ரொம்ப சுடுதே.. ஹாஸ்பிடல் போகலாமா??" என்று அருண் கேட்க,
"இல்லடா. தூங்கி எழுந்தா சரி ஆகிரும்.." என்றாள் மீண்டும் கண்களை மூடியபடி.
"அது எத்தனை நாள் ஆகுமோ. அதுவரைக்கும் அம்மா சும்மா இருக்க மாட்டாங்க. எனக்கு இன்னைக்கு பிராக்டிகல் இருக்கு. அதனால சீக்கிரம் கிளம்பனும். நீ அருந்ததி அக்கா கூட கிளம்பு ஹாஸ்பிடலுக்கு. நான் அவகிட்ட சொல்லிட்டுப் போறேன்.." என்றவன், அடுகளைக்குள் சென்று அருந்ததியிடம் விஷயத்தைக் கூறினான்.
அவளும், "நானும் கவனிச்சேன் டா. வேலைக்குப் போகும் போது அவளை கூட்டிட்டுப் போய் காமிக்கிறேன். நீ சாப்பிட்டுக் கிளம்பு.." என்றாள் அருந்ததி.
அருந்ததி வேலையை முடித்து விட்டு, குளித்து விட்டு வந்தவள், மூவருமாக சேர்ந்து உண்டனர்.
வடிவேலனும் சொர்ணமும் தாமதமாகத் தான் உண்பர்.
இவர்கள் வெளியில் செல்ல வேண்டி இருப்பதால், சீக்கிரம் நேரத்திற்கு சாப்பிட்டு விட்டு கிளம்பி விடுவர்.
அருந்ததி மற்றும் அருணுடன் சேர்ந்தே, தாமரையும் உணவை முடித்துக் கொள்வாள்.
அருண் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட,
அருந்ததியும் அவளது வண்டியை எடுத்து ஆன் செய்து விட்டு அமர, பின்னே தாமரை அமர்ந்தாள்.
"அருந்ததி.. இவ எங்க உன்கூட வர்றா.??" என்று சொர்ணம் கேட்க,
"அவளுக்கு உடம்பு கொஞ்சம் அதிகமா சுடுது. அதான் ஹாஸ்பிலுக்கு கூட்டிட்டு போறேன்.." என்று கூற, சொர்ணம் வாயை திறப்பதற்கு முன்பே, வண்டியைக் கிளப்பி விட்டாள் அருந்ததி.
"சித்தி நாங்க போய்ட்டு வரோம்.." என்ற தாமரையின் குரல் தான் காற்றில் பறந்து வந்து சொர்ணத்தின் செவியை எட்டியது.
மோட்சம் தொடரும்...