அத்தியாயம் 5
முன் தினம் தன்னிடம் ஜோசியர் கூறிய அனைத்தையும் அம்பிகாவிடம் கூறிக்கொண்டு இருந்தார் காசிராஜன்.
"என்னண்ணே இப்படி சொல்றீங்க?? அந்த ஜோசியர் நல்ல தெளிவா கணிச்சு சொல்லுவாருனு தான் அங்க போனோம். ஏன் இதுக்கு முன்னாடி சொன்னப்போ கூட கரெக்ட்டா இருந்துச்சே.. இப்போ இப்படி சொல்றாரு.
அவனுக்கு கல்யாணம் கண்டிப்பா ஆகணு சொல்றாரே. நம்மளே வெளிய பொண்ணு பார்த்துட்டோம். எந்தப் பொண்ணும் இவனைக் கட்டிக்க ஒத்துக்கல. ஏன் நம்ம ரேகா கூட பைத்தியக்காரனை நான் கட்டிக்க மாட்டேன்னு சொன்னனால தான் அடுத்து விஷ்வாக்கு பார்த்தோம். இப்போ இப்படி சொன்னா, ஒரு வேலை இனி மேல எதுவும் அமைஞ்சி வருமோ அவனுக்கு.." என்று அம்பிகா தனது யோசனையை கணவர் முன்பும் அண்ணன் முன்பும் வைத்தார்.
"இதாவது பரவாயில்லை. அவனால் ஒரு உயிர் போகும்னு சொன்னது தான் எனக்கு சிரிப்பா இருக்கு.." சிரித்துக் கொண்டே கூறினார் அம்பிகாவின் கணவர் தியாகராஜன்.
"ரொம்ப சிரிக்காதீங்க. அவன் நேருல இருக்கும் போது அவனைப் பார்த்து சிரிச்சி இருக்கனும். கோவத்துல உங்கள கொன்னா கூட ஆச்சர்யப் படுறதுக்கு இல்ல.." என்று அம்பிகா கூறியதும்,
"அய்யயோ.. ஆமாண்டி.. அவன் இப்போ ரொம்ப முரட்டுத் தனமா மாறிட்டான். நெஜமாவே அவனைப் பார்த்து கேலி கிண்டல் பண்ணா, ஜோசியர் சொன்னது கண்டிப்பா நடக்கும்.." பயந்தப்படியே கூறினார் தியாகராஜன்.
"ஒரு வேலை இப்படி இருக்குமோ.. அவன் கோபத்தால யாரையாவது ஏதாவது பண்ணிருவானோ..??" காசிராஜன் கேட்க,
"நம்ம தான் அவன்கிட்ட போய் பார்த்து பேசவே பயப்படுறோம். அது மட்டும் இல்லாம நம்ம யாரையும் அவன் உள்ள விடுறது கூட இல்ல. அப்புறம் எப்படி நடக்கும். ஆ.. ஆனா.." என்று அம்பிகா ஏதோ சொல்ல வந்து நிறுத்தியத்தை கண்டு, என்னவென்று காசிராஜன் பார்க்க,
"அடிக்கடி போறது நம்ம விஷ்வா தான். அவனை எதுவும்.." என்று எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு சொல்லவும், அப்பொழுது பொறி தட்டியது போல உணர்ந்தார் காசிராஜன்.
"இதை எப்படி நான் மறந்து போனேன்.. இந்த விஷ்வாகிட்ட போக வேண்டாம்னு சொன்னா கூட கேட்க மாட்டான். இப்போ ஜோசியர் சொன்னது விஷ்வா விசயத்துல உண்மை ஆகிருமோ... " மனதில் தோன்றிய பயத்துடன் தன் முன்னால் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்துக் கேட்டார்.
"அப்படி எல்லம் எதுவும் ஆகாது. நம்ம விட்டுருவோமா என்ன?? எதுக்கும் நம்ம விஷ்வா கிட்ட ஒரு வார்த்தைச சொல்லி வைப்போம்.. " என்று அம்பிகா, ஆறுதலாக பேசினார்.
என்ன தான் சாணக்கியன் தங்களின் உடன் பிறந்த சகோதரனின் மகன் தான் என்ற பாசம் இருந்தாலும், அவனின் நடவடிக்கைகள் அனைத்தும் மாறி இருந்தன.
இதே அம்பிகா தான் அவனுக்கு விபத்து ஏற்பட்டு இருக்கும் போது அவனை கண்ணும் கருத்தாக பார்த்தவர், இப்பொழுது அவனை பார்ப்பதற்கே அஞ்சி நடுங்குகிறார்.
எல்லாம் அவனுடைய முரட்டுத் தனத்தால் தான். அவனை பார்ப்பதற்கு அஞ்சி யாரும் அவனது அறைக்குச் செல்வதில்லை.
அதையும் மீறி சென்றால், கையில் கிடைக்கும் பொருளை எடுத்து மேலே வீசி விடுகின்றான்..
ஆரம்பத்தில் விஷ்வாவின் மேலும் வீசி எரிந்தாலும் அதை பொருட்படுத்தாமல் விஷ்வா உள்ளே சென்று சாணக்கியனை அன்பாக பாசமாக கவனித்துக் கொள்வான்.
அதிலிருந்து அவனை மட்டும் அவனது அறைக்குள் விடுவதுண்டு.
மற்ற நபரை கண்டால் கத்தி கூச்சல் தான்.
காசிராஜனும் ஒரு கலக்கத்துடன் அங்கிருந்து நகர்த்து சென்றார்.
அதே சமயம், விஷ்வா சாணக்கியனை தேடிச் சென்றான்.
அவன் அப்பொழுது தான் எழுந்து உட்காந்து இருப்பான் போல..
கட்டிலில் அமர்ந்தவாறே, ஜன்னல் வெளியே தெரியும் உலகை வெறிததுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கதவை திறக்கும் சத்தம் கேட்டும் அமைதியாக இருந்தான்.
அவனுக்குத் தெரியும் விஷ்வா தான் தேடி வருவான் என்று.
விஷ்வாவைக் கண்டதும் தான் அவனுக்கு முகத்தில் புன்னகை அரும்பியது.
தினமும் காலையில் விஷ்வா வந்தால் தான் சாணக்கியன் அவனுடைய வேலைகளை அவனே செய்வது உண்டு.
அதை எல்லாம் சாணக்கியனுக்கு பழக்கப் படுத்தி விட்டு இருந்தாலும், விஷ்வா வந்தால் தான் அனைத்தையும் செய்வேன் என்று முரண்டு பிடிப்பவனிடம் என்ன சொல்ல முடியும்.
விஷ்வாவும் அதை விரும்பியே செய்தான்.
விஷ்வா கட்டிலில் அமர்ந்து இருக்க, நல்லப் பிள்ளையாக சாணக்கியன் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு குளியல் அறையில் இருந்து வெளி வந்தான்.
"வெரி குட் ." என்ற விஷ்வா, "ஓகே.. கபோர்டு திறந்து உனக்கு பிடிச்ச ட்ரெஸ் எடுத்து போட்டுக்கோ.." என்று சொன்னதும், அவனாகவே அவனுக்குப் பிடித்த டிஷர்ட் மற்றும் ஒரு பேண்ட்டை எடுத்துப் போட்டுக் கொண்டான்.
"சரி இன்னைக்கு கீழ போகலாமா சாப்பிட??" என்று கேட்டதும் சாணக்கியனின் முகம் நொடிப் பொழுதில் மாறி விட்டது.
அதைக் கவனித்த விஷ்வா, "சாணாக்கியா.." என்று அழைக்கவும், அவனை நிமிர்ந்து பார்த்த சாணக்கியன், என்ன என்பது போல பார்க்க,
"இன்னைக்கு நான் ஒரு இடத்துக்கு வெளிய கூட்டிட்டு போகப் போறேன்.." என்றவனை யோசனையாகப் பார்த்தான் சாணக்கியன்.
"நீயும் எத்தனை வருஷம் தான் இந்த ரூம்குள்ளயே அடைஞ்சி இருப்ப. உன்னை பழைய படி மாத்த வேண்டாமா?? அதான் என் பிரென்ட் டாக்டரா இருக்கான். அவனைப் போய் பாக்க போறோம்.." என்றதும், அவன் ஒன்றும் கூறவில்லை. அமைதியாகவே இருந்தான்.
ஒரு பெருமூச்சுடன், "சரி வா கீழ போகலாம்.." என்று கைப் பிடித்து அழைத்துச் செல்ல, அவனோ, "இல்ல நான் வரல.." என்று கையை உதறி விட்டு மீண்டும் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
"சாணக்கியா... இப்படி எல்லாம் முரண்டு பிடிக்காத.. என்கூட நீ வரணும்.. வந்து ஆகணும்.." என்று அழுத்தமாகக் கூற,
அவன் இவனை விட பிடிவாதக்காரன் போல..
அப்படியே சட்டமாக அமர்ந்து இருந்தான்.
"ப்ச்.." நெற்றியை தேய்த்து விட்டு, அவன் அருகில் சென்று கீழே முட்டி போட்டு அமர்ந்தவன், அவனது முகத்தைப் பார்த்து, "இங்கப் பாரு சாணக்கியா.. நீ இப்படியே எத்தனை நாளைக்கு இருப்ப?? நீயும் மத்தவங்க போல இருக்க வேண்டாமா?? உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைய வேண்டாமா??" என்று அவனிடத்தில் உள்ளுக்குள் இருந்த வலியை வார்த்தைகளில் காட்டிக் கேட்டான்.
அவனுக்கு அது புரிந்ததோ இல்லையோ??
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த சானக்கியனைப் பார்த்த விஷ்வாவிற்கு கோபம் துளிர் விட,
"அப்போ நான் சொல்றதை கேட்க மாட்டால.. சரி நான் போறேன். இனி இங்க வர மாட்டேன்.." என்று எழுந்து சென்று கதவை திறக்கும் முன், சாணக்கியனின் குரல் அவனை தடுத்தது.
"நான் வரேன்.." என்றான்.
விஷ்வா, வெற்றிப் புன்னகையுடன் திரும்பிப் பார்க்க, சாணக்கியனும் அவனையே பார்த்து இருந்தான்.
"சரி வா.." என்று விஷ்வா அழைக்க, அவனும் உடன் கீழ் இறங்கினான்.
இருவரும் சேர்ந்து கீழ் வருவதை உணர்ந்த வேலையாட்கள், சாணக்கியனை குறுகுறுவென்று பார்க்க, அனைவரும் தன்னை பார்ப்பதை உணர்ந்த சாணக்கியன் கோபமாக திரும்பிப் பார்க்க அவர் அவர், அவருடைய வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
சாப்பாட்டு மேசையில் அவனை அழைத்துச் சென்று அமர வைத்து, தானும் உடன் அருகில் அமர்ந்து கொண்டான் விஷ்வா.
அங்கே வந்த காசிராஜன், அம்பிகா மற்றும் அவரது கணவர் என அடுத்தடுத்து சாப்பிட வந்து அமர, அங்கு அமைதியாக தலை குனிந்து அமர்ந்து இருந்த சாணக்கியனை கண்டதும் அனைவரின் கண்களும் வியப்பில் விரிந்து கொண்டன.
ஏன் இப்படி தன்னையே இப்படி பார்க்கின்றனர் என்று கடுப்பான சாணக்கியன், நிமிர்ந்து கோவமாக பார்க்க, "அய்யயோ.. எதையாவது வச்சி அடிச்சிரப் போறான்.." என்று தியாகராஜன் முதலில் அங்கிருந்து சென்று விட்டார்.
அம்பிகா, "சாணக்கியா.. எப்படிப்பா இருக்க??" என்று அவன் அருகில் செல்லப் பார்க்க, அவன் மீண்டும் தலையைக் குனிந்து அமைதியாக இருந்தான்.
விஷ்வா கடுப்பாகி, " எதுக்கு அவனை இப்படி காட்சி பொருளாட்டம் பார்த்துட்டே இருக்குறீங்க?? அதுவே அவனுக்கு ஒரு மாதிரி இருக்கும். நீங்க சாப்பிடற வேலையை மட்டும் பாருங்க.." என்றதும் அம்பிகாபதி காசியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, பின் அங்கே ஒரு வித பயத்துடனே அமர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தனர்..
சாணக்கியனும். அமைதியாக உண்டு முடிக்க, இருவருமாக சேர்ந்து வெளியில் சென்றதைப் பார்த்த காசிராஜன், "விஷ்வா.. எங்க கிளம்பிடீங்க ரெண்டு பேரும்??" என்று புருவம் சுருக்கி கேட்க,
இப்பொழுது எதுவும் கூற வேண்டாம் என்று நினைத்த விஷ்வா, "ஜஸ்ட் என் ஃப்ரண்ட் வீட்டுக்கு.." என்றான்.
"அங்கப் போய் எதுவும் பிரச்சனை பண்ணிரப் போறான்.. எதுக்கு அவனைத் தேவை இல்லாம அழைச்சிட்டுப் போற??" என்று கடுப்புடன் கேட்டவரை பொறுமையாக பார்த்த விஷ்வா,
"பிரச்சனை வந்தா நான் பார்த்துகிறேன். நீங்க கவலைப் பட வேண்டாம்.." அதற்கு மேலும் அங்கு நிற்காது விறுவிறுவென அந்த இடத்தில் இருந்து இருவரும் கிளம்பினர்.
************************
விஷ்வாவின் நண்பன் மருத்துவர் ராம், சாணக்கியனின் மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதை படித்து விட்டு, மூடி மேசையின் மீது வைத்தவன், சாணக்கியனைப் பார்க்க, அவனோ அமைதியாக உட்காந்து இருந்தான்.
புருவம் சுருக்கி பார்த்து விட்டு, "சாணக்கியன்.." என்று அழைக்க,
அவனும் நிமிர்ந்து பார்த்தான்.
"உங்க பேரு என்னனு தெரியுமா??" ராம் முதல் கேள்வியை கேட்டான் .
"ம்ம். தெரியும்.."
"என்ன??"
"சாணக்கியன்.."
"வெரி குட். உங்க பக்கத்துல இருக்கிறது யாரு??" அடுத்த கேள்வி.
"இது விஷ்வா.."
"குட். விஷ்வா உங்களுக்கு என்ன வேணும்??" என்று கேட்டிட,
"அது... அது.. ஹான். தம்பி.." என்றான் முகத்தில் மலர்ச்சி தோன்ற.
அவன் தம்பி என்று சொன்னதும் சாணக்கியனின் முகத்தில் இருந்த மலர்ச்சி விஷ்வாவையும் தொற்றிக் கொண்டது.
"சூப்பர். உங்க அம்மா அப்பா பேரு நியாபகம் இருக்கா???" என்று கேட்டதும், சாணக்கியன் தீவிரமாக எதையோ யோசித்தான். அவனால் யோசிக்க யோசிக்க அவனுக்கு தலை வலிக்க ஆரம்பித்தது போலும்.
தலையைப் பிடித்துக் கொண்டு கத்த ஆரம்பித்து விட்டான்.
அவனை விஷ்வாவும் ராமும் சேந்து அமைதிப் படுத்திட, அவன் அப்படியே மயங்கி சரிந்து விட்டான்.
ஒரு ஒருமூச்சுடன் ராம் தொடர்ந்தான்.
"இந்த ரிப்போர்ட் படி பார்த்தா, சாணக்கியனுக்கு பிப்டி பெர்ஸண்டேஜ் குணம் ஆகிருச்சு. ஆனா முழுசா இன்னும் குணம் ஆகாம இருக்கிறதுக்கு காரணம் ஒன்னு. அவரோட சுற்றுப்புற சூழலா இருக்கலாம்.
சில சமயம் மனசோர்வு வரும்.. எரிச்சம் அதிகமா வரும். இதுனால அவருக்கு திடீர் பதட்டமும் தீடீர் கோபமும் வரும்.
அப்படி வரும் போது அவரால ஒரு இடத்துல கவனம் செலுத்த முடியாது. அப்போ அவங்களோட நினைவற்றல் தப்பும்.
அவரு மட்டும் தனியா இருக்கிறதா சொல்ற.
அப்போ அவரு இரவு முழுக்க நல்லா தூங்குறாரா இல்லையானு கூட தெரியாது.
ஆனா, மூளையில் இருக்குற நரம்புகள் முதல்ல இருந்ததை விட இப்போ நல்லாவே ஆக்ட்டிவா இருக்கு.
ஆனா இந்நேரத்துக்கு அவரு குணம் ஆகி இருக்கணுமே..
விஷ்வா.. நீ என்ன பண்ணு. அந்த நாலு சுவத்துக்குள்ள நீ அடைச்சி வைக்காத. வெளிய கொஞ்சம் பிரீயா அழைச்சிட்டு போ.
முடிஞ்சா அவரை எங்கயாவது பிக்னிக் மாதிரி கூட்டிட்டுப் போ.. இன்னும் முன்னேற்றம் வரும்.
அது போக அவருக்கு நான் சஜஸ் பண்ற டேப்லெட் கொடு.
ரொம்ப சீக்கிரம் அவருகிட்ட சேஞ்சு தெரியும்..
அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. உன்னப்பத்தி கேட்கும் போது நீ யார்னு சொல்றாரே. அது எப்படி தெரியும்?? " தன் மனதில் எழுந்த சந்தேகத்தை விஷ்வாவிடம் கேட்டான் ராம்.
"அது நான் ஆரம்பத்தில் சொல்லி இருந்தேன். தம்பின்னு. அதான் இப்போ சொல்றான்."
"ஓ.. ஓகே.. ஆனா அவங்க அம்மா அப்பாவை பத்தி கேட்டதும் ஏன் கத்துறாரு. சம்திங் ஏதோ இருக்கு. சரி அதை அப்புறம் பார்த்துக்கலாம். பர்ஸ்ட் நான் சொன்னதை அவருக்கு பால்லொவ் பண்ணு. ஓகே வா.." என்று விஷ்வாவைப் பார்த்து புன்னகையுடன் கூறிட,
"ரொம்ப தேங்க்ஸ் ராம்.." என்று அவனை கட்டி அணைத்து தனது நன்றியை தெரிவித்தவன், மயக்கம் தெளிந்து எழுந்ததும் சணக்கியனை அங்கிருந்து அழைத்துச் சென்றான் விஷ்வா.
இதே சமயம் வடிவேலனின் குடும்பத்தினர், ஊட்டிக்கு சுற்றுலா செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.
மோட்சம் தொடரும்...