• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இருளில் ஓர் மோட்சம் 6

STN - 100

New member
அத்தியாயம் 6

மூன்று மாதத்திற்கு முன்பே, அருந்ததிக்கு பள்ளி விடுமுறை மற்றும் அருணுக்கு கல்லூரி விடுமுறை வரும் நேரமாக பார்த்து சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்து இருந்தனர்.

அப்பொழுதே ஒரு வாரத்திற்கு தாங்கள் வந்து தங்குவதற்கு ஏதுவாக ரிசார்ட் புக் செய்தும் இருந்தனர்.

இதோ அவர்கள் புறப்படுவதற்க்கான நாளும் வந்து சேர்ந்தது.

அருந்ததி, தாமரை மற்றும் அருண் மூவரும் அவர் அவர்களுக்கு என்ன என்ன தேவையோ, தனித் தனியாக பெட்டிகளில் அடுக்கிக் கொண்டனர்.

வடிவேலும் அவருக்குத் தேவையான உடுப்புகளை ஒரு பையில் வைத்துக்கொள்ள, சொர்ணம் மட்டும் ஏனோ தானோ என்று கிளம்பிக் கொண்டிருந்தார்.

"என்னடி.. ஊருக்கு வர்ற விருப்பம் இல்லையா??" அவர் அசமந்தமாக கிளம்புவதை பார்த்த வடிவேலன் சொர்ணத்திடம் கேட்டார்.

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நம்ம குடும்பத்தோட போகலாம்னு பார்த்தா, எதுக்கு தாமரையை கூட்டிட்டுப் போகனும்??" அவர் மனதில் உலன்று கொண்டிருந்த எண்ணத்தை வாய் விட்டே கேட்டும் விட்டார் அவரது கணவரிடம்.

கேட்டது தான் தாமதம். மனைவியை முறைக்க ஆரம்பித்து விட்டார்.

"அவளும் நம்ம குடும்பத்துல ஒன்னுதான்னு உனக்கு புரியவே புரியாதா??" கோபத்தை வார்த்தைகளில் காட்டிக் கேட்டார்.

"ம்ம்க்கும்.. அவ என்ன நான் பெத்த பிள்ளையா??" என்று தன்னுடைய வெறுப்பை அவரும் வார்த்தையில் காட்டினார்.

"நீ பெத்த பிள்ளையா வேணும்னா அவ இல்லாம இருக்கலாம். ஆனா நான் பெறாத பிள்ளை அவ.. ச்சி நீ எல்லாம் மனசு மாறி அவளை இந்த ஜென்மத்தில ஏத்துக்க மாட்ட.." என்று மனைவியை தீயாய் முறைத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

"போயா..." என்று போன தன் கணவரின் முதுகை பார்த்துக் கூறி விட்டு, அவரும் தனக்கு வேண்டிய உடுப்புகளை எடுத்து வைத்துக்கொண்டு, முன்னறையில் பையுடன் வந்து அமர்ந்து விட்டார்.

அப்படியே ஒவ்வொரு ஆளாக வந்து சேர, வடிவேலனும் அவர் ஏற்பாடு செய்து இருந்த காரில் வந்து இறங்கி, வீட்டினுள் சென்றவர், "என்ன எல்லாரும் கிளம்பியாச்சா?? தேவை ஆனது எல்லாம் எடுத்து வச்சிக்கிடீங்கங்களா?? ஒரு முறைக்கு ரெண்டு முறை சரியா இருக்கானு பார்த்துக்கோங்க.." என்று மக்களைப் பார்த்து கூற,

அவர்களும், "எல்லாம் சரியா இருக்குப்பா.." என்றனர்.

"அம்மாடி. அருந்ததி.. மெடிக்கல் கிட் எடுத்து வச்சிகிட்டியா.. ஏதாவது அவசரத்துக்கு தேவைப்படும்.." என்று மகளைப் பார்த்து கூறினார்.

அவளும், "அது எல்லாம் எடுத்தாச்சுப்பா.." என்றாள் புன்னகையுடன்.

"சரி வாங்க அப்போ கிளம்புவோம்.." என்று அனைவரையும் காரில் ஏறச் சொல்லி விட்டு, வடிவேலன் கதவை பூட்டிக் கொண்டு பின்னால் வந்தார்.

"தாமரை க்கா.. வா நம்ம பின்னாடி உட்காருவோம்.." என்று அருண் அழைக்க,

"இல்ல.. தாமரை என்கூட தான்.." என்று அருந்ததி கூறினாள்.

இவர்களின் சண்டையைப் பார்த்த சொர்ணம், "அவளைத் தனியா உட்கார விடாம, கழுதைங்க ரெண்டும் சண்டை போடுதுங்க நீ நான் ன பக்கத்துல உட்கார வச்சிக்க.." என்று மனதில் நினைத்துக் கொண்டு முகத்தை திருப்பி விட்டார்.

"எதுக்கு ரெண்டு பேரும் சண்டை போடுறீங்க?? நம்ம மூணு பேரும் ஒரே சீட்ல உட்காந்துக்கலாம்.." என்றாள்.

அதுவும் சரி என்று மூவரும் நடு சீட்டில் அமர, சொர்ணத்தை கடைசி சீட்டிற்கு தள்ளி விட்டனர்.

வடிவேலன் ஓட்டுனரின் அருகில் உள்ள சீட்டில் அமர்ந்து கொண்டார்.

கிளம்பும் முன் நான்கு சக்கரங்களின் முன்னால் எலும்பிச்சை பழத்தை வைத்து விட்டு வந்து தான் வடிவேலன் காரில் அமர்ந்தார்.

ஒரு நிமிடம் தனது குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, "போலாம் பா.." என்று ஓட்டுநரிடம் கூற, அவரும் சரி என்று காரைக் கிளப்பினான்.

இளசுகள் "ஓஓஓஓ..." என்று உற்சாகத்தில் சத்தம் போட்டன..

அவர்களின் பயணம் உதகமண்டலத்தை நோக்கி புறப்பட்டது.

**********************

அதே சமயம், காலையில் தனது நண்பனை பார்த்து விட்டு வந்த விஷ்வாவிற்கு ஒரே யோசனையாக இருந்தது.

'இவனை எங்கேயுமே கூப்பிட்டு போகாம நாலு சுவத்துக்குள்ளயே அடைஞ்சி இருக்குறனால தான் இப்படி இருக்கானோ?? '

'நம்மளும் வேலை வேலைனு ஓடிட்டே இருந்தனால, அவன் எப்படி யோசிப்பான் எந்த மாதிரி உணர்வானு கவனிக்கத் தவறிட்டோம்..'

'ராம் சொன்ன மாதிரி அவனை எங்கயாவது பிக்னிக் மாதிரி கூட்டிட்டு போய் வந்தா என்ன?? அவனுக்கும் கொஞ்சம் மைண்ட் பிரீயா இருக்கும்.' என்று நினைத்து முடிவு செய்தவன் அதை உடனே செயலாற்றவும் செய்தான்.

ஊட்டியில் உள்ள தனது நண்பனின் ரிசார்ட்டில் தங்கிக் கொண்டு, ஒரு வாரம் சுற்றிப் பார்த்து வரலாம் என்று நினைத்தவன் அதற்கு ஏற்பாடும் செய்தான்.

காசிராஜன் வீட்டிற்கு வந்ததும், "அப்பா.. நானும் சாணக்கியனும் ஒரு ஒன் வீக் பிக்னிக் போல போய்ட்டு வரலாம்னு இருக்கேன்.." என்று கூற,

காசிராஜன் அவனைப் புருவங்கள் இடுங்க யோசனையுடன் பார்த்தார்.

"என்ன தீடிர்னு??" அவரது குரல் வித்தியாசமாக இருந்தது.

அதை உணராத விஷ்வா, "இல்லப்பா.. அவன் வீட்டுக்குள்ளே அதுவும் நாலு சுவத்துக்குள்ளயே இருக்கிறது அவனுக்கு மேலும் மேலும் புத்தி பேதழிச்சி தான் போகும். அவன் சீக்கிரம் குணமாக இது போல வெளிய கூட்டிட்டு போகலாம்னு தான்.." என்றான் ஒரு பெருமூச்சுடன்.

"நம்மளையே அவன் ஒரு வழி பண்ணிருறான். நீ வெளிய கூட்டிட்டுப் போய் யாரை என்ன பண்ண போறானோ.." என்று கடுப்பாக கூறினார் அவர்.

மேலும் அவரே தொடர்ந்தார்..

"இங்க பாரு விஷ்வா.. அவனை வெளிய எங்கயும் கூட்டிட்டுப் போக நான் அனுமதிக்க முடியாது.." என்றார் உறுதியாக.

அவரை இப்பொழுது கூர்ந்து பார்த்தான் விஷ்வா.

"ஏன்.." ஒற்றைக் கேள்வி தான். ஆனால் அதில் ஆயிரம் அர்த்தம் பொதிந்து இருப்பதாக உணர்ந்தார் காசிராஜன்.

"ஏன்..னா.. ஏன் னா.." என்று தடுமாறியவர், "அவன் வெளிய எங்கயும் போனா, அவன் கோவப்பட்டு வேற யாருமேலயாவது அதை காமிச்சு, அவனால யாருக்கும் பிரச்சனை வந்துரும்னு தான் வேண்டாம்னு சொல்றேன். " என்றார் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு.

"அவனை கூட்டிட்டு போவேன். அப்டியே பிரச்சனை வந்தாளும் அதுக்கு முழு பொறுப்பு நான் ஏத்துக்கிறேன்.. இதுக்கு மேல இதைப் பத்தி நீங்க பேச வேண்டாம். நான் அவனை கூட்டிட்டு போறது உறுதி.." என்று சொல்லி விட்டு தன் அன்னையயை காண, அவரது அறைக்குச் சென்றான்.

கோபமாகவும் அழுத்தமாகவும் பேசிவிட்டுச் சென்ற தன் மகனை, முகத்தில் வியர்வை வடிய பார்த்துக் கொண்டிருந்தார்.

அன்னையின் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, அங்கு இருந்த செவிலியர் அவரைக் கண்டதும் வெளியே சென்றார்.

அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டத்தில் மருத்துவமனையில் சில நாட்கள் வைத்து பார்த்து விட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமல் போக, அவரை வீட்டிற்கே மாற்றி இருந்தான்.

அவருக்கு எப்பொழுதும் கூடவே இருந்து பார்த்துக் கொள்ள ஒரு செவிலியரையும் ஏற்பாடு செய்து இருந்தான்.

அவருக்கு உடலை சுத்தப்படுத்தி விட்டு உடை மாற்றவும், வேலாவேலைக்கு திரவ உணவுகளையும் கொடுத்து மருந்து மாத்திரைகளையும் கொடுத்து கவனித்துக் கொண்டாள் அந்த செவிலியர்.

கடந்த ஒரு வருடமாக அப்படித்தான் இருக்கிறது அவனது அன்னைக்கு..

அருகில் சென்று வாஞ்சையாக அவரது தலையை தடவிக் கொடுக்க, அவருக்கோ பேச்சுக்கு பதில் கண்களில் இருந்து கண்ணீர் தான் வந்தது.

அவரது கண்ணீரை துடைத்து விட்டவன், "உங்க வேதனை எனக்கு புரியுதும்மா.. நீங்க கவலைப் படாதீங்க.. நான் பார்த்துகிறேன். உங்களையும் சரி.. சாணக்கியனையும் சரி.. கூடிய சீக்கிரம் குணப்படுத்துவேன்.." என்று கூறியவன், தாயின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

"அம்மா.. இன்னைக்கு நானும் சாணக்கியனும் ஊட்டிக்கு போறோம்.." என்றதும் அவரும் அவனை யோசனையாகப் பார்த்தார்.

"அவன் வீட்டுக்குள்ளயே இருக்கிறதை விட, இது போல வெளிய கூட்டிட்டுப் போய்ட்டு வந்தா அவன் மனசுக்கும் மைண்டுக்கும் கொஞ்சம் பிரீயா இருக்கும்னு என் ஃப்ரண்ட் ராம் சொன்னான். அதான் போகலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். " தாயின் பார்வையை உணர்ந்து அவனே அவருக்கு விளக்கம் கொடுத்தான்.

அவரும் சரி என்பதாய் மெல்ல தலை அசைத்திட, அவனும் அவரிடம் இருந்து விடை பெற்றான்.

அன்னையின் அறைக்குச் சென்று விட்டு, மாடிப்படியில் கீழே இறங்கிக் கொண்டே அவனது நண்பன் தீரனுக்கு அழைத்தான்.

"சொல்லு மச்சி.." என்று நண்பனின் அழைப்பை ஏற்று பேசிக் கொண்டே அந்தப் பக்கம் அவனது வேலையை தொடந்தான் தீரன்.

"தீரா.. நான் ஊட்டிக்கு ஒன் வீக் போக பிளான் பண்ணி இருக்கேன். நீயும் வரியா டா??" தன் நண்பனையும் அழைத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில் அவனிடம் கேட்க,

அவனோ, "ஒன் வீக்கா .. வேலை இருக்கே மச்சி.. இங்க மாத்தி விடுறதுக்கும் இப்போ ஆளு இல்ல.. வேணும்னா ஒரு 3 டேஸ் கழிச்சி முடிஞ்சா வரப் பாக்குறேன்.. "என்றான் தீரன்.

"அப்படியாடா.. சரி ஓகே.. பட் உண்ண கண்டிப்பா எதிர்பார்ப்பேன். வந்து சேரு ஒழுங்கா.. சரியா.." என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்து இருந்தான் விஷ்வா.

அப்படியே சாணக்கியன் அறைக்குச் சென்று பார்க்க, அங்கு அவன் மருந்தின் வீரியத்தில் உறங்கிக் கொண்டிருந்தான்.

அவனுக்கு ஏற்கனவே இந்த பழைய மருந்து மாத்திரைகளை எல்லாம் தூக்கி வீசி விட்டு, ராம் கூறிய மருந்து மாத்திரைகளை கொடுத்து இருந்தான் விஷ்வா.

"சரி நல்லா தூங்குறான் போலயே.. சரி நம்ம எடுத்து வைப்போம் அவனுக்கு.." என்று நினைத்தவன், அவனுக்குத் தேவையான துணிகள் மற்றும் மருந்துகளை ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டான்.

அதே போல அவனது அறைக்குச் சென்று அவனுக்கும் எடுத்து வைத்துக் கொண்டான்.

சாணக்கியன் தூங்கி எழுந்ததும், மாலை போல இருவரும் ஊட்டியை நோக்கி பயணம் செய்தனர்.


மோட்சம் தொடரும்...
 
Top Bottom