உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -11
பப்பு கடலில் இருந்து தன் அகன்ற மார்புகள் தெரிய தன் கட்டுக்கோப்பான உடலை காட்டியபடி அவன் வருவதைக் கண்டு அப்படியே அசையாமல் சாரல் நின்றுக் கொண்டிருக்க அவளருகில் வந்தவன் “சாரல் என்னைத் தேடுனியா?” என்று கேட்டான்.
அவன் குரலின் சத்தம் கேட்டு சட்டென்று திரும்பி நின்றுக் கொண்டாள்.பப்பு வித்தியாசமாக “ஹேய் என்னாச்சு? ஏன் திரும்பி நின்னுட்டு இருக்கே?”என்று கேட்டான்.
சாரல் அவன் புறம் திரும்பாமல் “முதல்ல மேல எதாவது துணி போட்டு நில்லு” என்றாள்.
அவனோ விடாப்பிடியாக “ஏன் நான் இப்படி நின்றால் என்னை பார்க்க மாட்டியோ?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
அவளோ “இல்லை அது சரியில்லை” என்றாள்.திரும்பி நின்றவளை பார்த்து புன்னகைத்தபடியே ஓரமாக வைத்திருந்த துவாலையை எடுத்து முகத்தை துடைத்து விட்டு தனது முதுகில் போட்டு அவளை தன் கரங்களால் அவளது ஒரு பக்கமாக தோளைப் பற்றி திருப்பி விட்டான்.
“எதுக்காக இங்கே வந்தே?” என்று கேட்டான்.
ராகவன் சொன்னதைக் கேட்டால் அவன் தவறாக எண்ணிக் கொள்வானோ? என்று யோசித்தவள் பேச்சை மாற்றி “உனக்கு நீச்சல் அடிக்க தெரியுமா?”
“ம்ம்… தெரியுமே”
அவன் சொன்ன பதிலைக் கேட்டு யோசனையாக நின்றாள்.அவளைப் பார்த்து “இதை பத்தி கேட்பதற்காகத் தான் என்னை பார்க்க வந்தியோ?” என்று கேட்டான்.
சாரல் இல்லை என்று தலையசைத்தாள்.பப்பு “என்ன கேட்கனுமோ நேராக என்கிட்ட கேளு” என்றான்.
சாரல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.சாரலை தேடி வீட்டிற்கு வரவும் அங்கே அவள் இல்லை.அப்பொழுது ரேவதி வீட்டில் தான் இருப்பாள் என்று நினைத்தவன் வாசலுக்கு அருகில் வரவும் ராகவன் தன்னை பற்றி பேசியதை கேட்டவன் அதற்கு மேல் நிற்காமல் நேராக கடலில் நீந்தச் சென்று இருந்தான்.
அதை எண்ணிக் கொண்டவன் சட்டென்று அவளுடைய கரங்களைப் பற்றி தன் பக்கம் இழுத்தவன் “நான் இப்பவும் உன்கிட்ட உண்மையைத் தான் சொல்றேன் சாரல்.எனக்கு என்னென்ன தெரியுதுன்னு இப்போத் தான் எனக்கே தெரிய ஆரம்பிக்குது,எப்பவும் உன்னை நான் ஏமாற்ற மாட்டேன்” என்று அவளது விழிகளைப் பார்த்து நேருக்கு நேராகச் சொன்னான் பப்பு.
அவனது இந்த செயலால் சாரலுக்கு ஒருநொடி இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.ஏன் என்று தெரியாமல் அவனது விழிகளை ஆழ்ந்து பார்த்தவள் அவளது கரங்களை அவனிடமிருந்து பிரித்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றாள்.
எப்போதும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பவள் இன்றைக்கு அமைதியாக சென்றுக் கொண்டிருப்பவளைக் காண பப்புவிற்கு சிறிது வருத்தத்தை தந்தது.செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இரவு உணவு அருந்த எப்போதும் முதலில் வந்து உட்கார்ந்து இருப்பவன் அன்றைக்கு சாரல் சாப்பிட எல்லாத்தையும் எடுத்த வைத்த பின்னரும் அவன் வரவில்லை.தாத்தா அவனை சாப்பிட அழைத்தும் வரவில்லை.
சாரல் தாத்தாவிற்கு சாப்பாட்டை பரிமாறி விட்டு அமைதியாக இருந்தாள்.தாத்தா “நீயும் சாப்பிடலையா மக்கா? ஏன் ரெண்டுபேருக்கு சண்டையா?” என்று கேட்டார்.
“இல்லை தாத்தா,நான் அவன்கிட்டே சரியா பேசலை” என்று ராகவன் பேசிய அனைத்தையும் அவரிடம் சொன்னாள்.
எல்லாவற்றையும் கேட்ட கோபாலன் “ராகவனுக்கு உன் மேல அக்கறை அதான் ரொம்ப கவலைப்பட்டு பேசியிருப்பான்.அது அவன் தப்பு இல்லை.அதே மாதிரி பப்புவையும் நாம குத்தம் சொல்ல முடியாது தன்னையே தேடிட்டு இருக்கிறவன் அவனையே புதுசா உணர ஆரம்பிக்கும் போது இது சொல்லலை அது சொல்லலைன்னு அவன்கிட்ட கேட்க முடியாது.அதனால ரெண்டுபேரையும் பொதுவா நடத்திக்க சாரல், யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கனும்னு உனக்கு தோணுதோ அதை செய் சரியா? போய் பப்புவை சாப்பிட வரச் சொல்லு நான் சாப்பிட்டுட்டு படுக்க போறேன்” என்று சாரலை அனுப்பி விட்டார்.
எதிரே இருள் சூழ்ந்த வானில் கடல் அலையின் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்த அந்த இடத்தில் மணல் படுக்கையில் கையை தலைக்கு அடவு வைத்துக் கொண்டு விழிகளை மூடியபடி படுத்துக் கிடந்தான் பப்பு.
மெதுவாக கொஞ்சம் தள்ளி அவனுக்கு அருகினில் உட்கார்ந்தாள் சாரல்.எப்போதும் அவளருகில் வந்தாலும் எதாவது அவனோ இல்லை அவளோ பேசுவார்கள்.ஆனால் இரண்டு பக்கமும் பெருத்த அமைதி நிலவியது.
சாரல் மெதுவாக “பப்பு சாப்பிட வரலையா? தாத்தா எவ்வளவு நேரமா அழைச்சாங்க நீ ஏன் வரலை” என்று கேட்டாள்.
அவனிடம் பதிலில்லை.அதே அமைதி தொடர்ந்தது.
சாரல் அவனைப் பார்த்து சிரித்தப்படி “பப்பு கோவிச்சுகிட்டியோ? உனக்கு கோபம் வருமா?” என்று கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்டதும் சட்டென்று விழிகளை திறந்து அவளை பார்த்து முறைத்தான்.
அவன் செயலைப் பார்த்ததும் சாரலுக்கு குறும்பு எட்டிப் பார்த்தது.சட்டென்று அவளையும் அறியாமல் அவனது கன்னத்தில் தனது வலது கரங்களால் லேசாக கிள்ளியவள் “ஆளையும் முறைப்பாயும் பாரு” என்று இடித்து விட்டாள்.
அவன் எதிர்பார்த்த சாரலைக் கண்டதும் அதே வேகத்தில் அவளது கரங்களை பிடித்து இழுத்தான்.சட்டென்று அவன் இழுக்கவும் எதிர்பாராமல் அவன் மேலேயே அப்படியே விழுந்தாள் சாரல்.
இதுவரை எந்தவொரு ஆடவனின் அருகாமையில் செல்லாதவளுக்கு பப்புவின் நெருக்கமும் அதே நேரம் இவ்வளவு நாட்களாக இல்லாத அவனது பார்வை இப்போது மாறி வருவதை அவளது பெண்மை கொஞ்சம் கவனிக்கத் தொடங்கி இருந்தது.
அவனது விழிகளை அசைக்காமல் அவளையே பார்த்தான்.ஒருநொடியில் சுதாகரித்து அவனிடமிருந்து பிரிந்து நகர்ந்து உட்கார்ந்தவள் “இப்படி திடீர்னு கையை பிடிச்சு இழுக்காதே பப்பு” என்று சொன்னாள்.
அவள் அப்படி சொன்னதும் எழுந்து அமர்ந்தவன் சாரலைப் பார்த்து “ஏன் எனக்கு அந்த உரிமை இல்லையா?” என்று ஏக்கத்தோடு கேட்டான்.
சாரல் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவனைப் பார்த்தவளின் விழிகளில் ஆயிரம் கேள்விகள் ஆனால் அவளது உதடுகளோ “தெரியலை பப்பு” என்று எழுந்தவள் “சாப்பிட வா நானும் சாப்பிடலை” என்று அவனைப் பார்த்து கரங்களை நீட்டினாள்.
அவன் எழுந்துக் கொள்ள அவளது கரங்களை கொடுக்கவும் அதை பிடித்து மெதுவாக எழுந்தவன் என்ன யோசித்தானோ? “இன்னைக்கு மதியம் வைச்ச அதே குழம்பு தானா?”
சாரல் சிரித்துக் கொண்டே “நேத்து என்கிட்ட சொன்னேல உனக்கு நண்டு பிடிக்கும்னு அதான் வறுத்தும் கூட்டும் வைச்சிருக்கேன்” என்றாள்.
அவளது பதிலைக் கேட்டதும் அவனது முகமும் நெஞ்சமும் மகிழ்ச்சியால் நிறைந்து இருந்தது.
அவன் தனக்கான உரிமையை அவளிடம் கேட்டான்.அவளுக்கு அதற்கான பதில் தெரியவில்லை.ஆனால் அவனின் விருப்பம் தான் தன்னுடையதும் என்று அவள் செய்கையினால் அவனிடத்தில் நிரூபித்துக் கொண்டே இருக்கிறாள்.
சாரல் முன்னே நடந்துச் செல்ல அவனோ அவளது பாதத்தின் மேல் தன் கால்களை வைத்து நடந்தான்.நாட்கள் அவர்கள் இருவருக்குள்ளும் கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆரம்பித்தது.
வீட்டின் உள்ளே இருந்து பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தவளின் முகத்தினில் முடி வந்து விழுந்துக் கொண்டே இருந்தது.அதை அவள் சரி செய்தபடி தன் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவளே கவனிக்காத நேரம் ஒரு வலிமையான கரங்கள் முன்னால் விழுந்த கேசத்தினை மெதுவாக விலக்கி அவளை முடியினில் படாதவாறு ஒரு சிறிய கொண்டை ஊசியினை அவளது தலையில் வைத்தான் பப்பு.
இடைவெளி இல்லாத அந்த இருமனங்களின் விழிகள் ஒன்றொடு ஒன்று தங்களை மறந்து கலக்கும் நேரம் சித்தப்பு வாசலருகில் வருவதற்கு முன்பே “பப்பு ஹேய் பப்பு” என்று அழைக்கும் சத்தம் கேட்டு இருவரும் வேகமாக நகர்ந்து நின்றனர்.
அப்பொழுது அங்கே சித்தப்பு “பப்பு சின்ன ஒரு வேலை இருக்கு ஏன் கூட வாயேன்” என்று அழைத்தார்.
அவனும் “இதோ வரேன் சித்தப்பு நீங்க முன்னால் போங்க” என்று சொன்னதும் அவர் சென்று இருந்தார்.
அவனைப் பார்த்தபடியே சாரலின் கரங்கள் அவளையும் அறியாமல் தன் தலையில் கைவைத்தாள்.
அதைப் பார்த்த பப்பு “இந்த கிளிப் உனக்காகத் தான் வாங்கினேன் சாரல். நீ எப்போல்லாம் எதாவது செய்யும் போது இந்த முடி முன்னால விழும் போது உனக்கு கஷ்டமா இருக்குல்ல அதுக்கு தான் வாங்குனேன் நல்லா இருக்கா?” என்று கேட்டான்.
அவன் விழிகளில் என்னவென்று தெரியாத ஒரு காந்தம் அவனது குரலில் அத்தனை அன்பாய் கேட்பவனிடம் பதில் சொல்ல முடியாமல் திக்கென்று நின்றவள் அவளையும் அறியாமல் வந்த உதட்டோரம் மெலிதான புன்னகை சிந்தி வெறுமனே தலையை மட்டும் அசைத்தாள்.
அவனுக்கு அந்த ஒற்றைப் புன்னகை மட்டும் அவளிடம் போதுமானதாக இருந்தது.அங்கிருந்து துள்ளி குதித்து சென்றவன் வாசலுக்கு அருகில் செல்லவும் திரும்பவும் திரும்பி பார்க்க சாரலும் அவனைத் தான் பார்த்தாள்.
இரண்டு பேரும் ஒரே நேரத்தில் பார்க்கவும் வெட்கமும் கள்ளத்தனமும் வந்து ஒட்டிக் கொள்ள அதே வேகத்தில் திருப்பிக் கொண்டனர்.சாரலுக்கு என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வு.
கொஞ்சம் படபடப்புமாய் திக்கென்ற இந்த நிலையை அவள் இதுவரை அனுபவித்தது இல்லை.அவன் அங்கிருந்து சென்றதும் பப்பு தலையில் வைத்த க்ளிப்பை கண்ணாடியில் போய் பார்த்தாள்.
இரண்டு சிறிய பூக்கள் ஒன்றாக இருப்பது போல் அந்த கிளிப் இருந்தது.மெதுவாக அதை தொட்டுப் பார்த்தவள் அவளையும் அறியாமல் முகத்தில் வெட்கமும் புன்னகையும் சேர்ந்துக் கொண்டது. மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும் குரலினில் “என்னை நீயே இரசிக்க வைக்கிற பப்பு” என்றாள்.
காதல் என்பது இங்கே பலவிதங்களில் அறியப்படலாம்.ஆனால் தன்னையே ஒருமுறை நின்று இரசிக்க வைப்பதில் இந்த காதல் கொஞ்சம் தன்னை இன்பமாய் மெறுகேற்றிக் கொள்கிறது.
சாரலின் சிரிப்பும் அவளது பார்வையும் அவனிடம் ஆயிரம் கதைகளை சொன்னது போல் உணர்ந்தவன் தன் தலைமுடியை கரங்களால் அழுந்த பிடித்து தடவி விட்டு புன்னகைத்து சென்றான் பப்பு.
ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாதே நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
போகாது இந்த கிறுக்கு
எனக்கு பிடிச்ச அது மாறி
உலகம் கிடக்கு அழகேறி
உன்னால ஓ ஓ ஓ….
தாத்தாவுடன் அன்பினில் கரைந்தவள் இப்போது யாரென்றே தெரியாத ஒருவனின் உண்மையான நேசத்தில் கரைய ஆரம்பித்து இருந்தாள் சாரல்.
எப்போதும் எங்கும் ஒரே தொணியிலும் தன் குறும்புத் தனத்தாலும் தனது பேச்சுத் திறமையினால் மற்றவர்களை அசர விடுபவள் இப்போது பப்புவின் அருகினில் அவள் பேசாமடைந்தையாகிப் போனாள்.
எப்போதும் அவளுடன் இருக்கும் கடலும் கடல்காற்றும் இன்றைக்கு கொஞ்சம் சில்லென்று வீசிக் கொண்டிருந்தது.அப்போது சித்தப்பு, ரேவதி அவர்களோடு பப்புவும் அமர்ந்து இருந்தான்.
ரேவதி பப்புவிடம் “பப்பு உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? சாரல் கிட்டே ஒரு நல்ல பழக்கம் இருக்கு,ஆனால் எங்களுக்கு அது பிடிக்காது,ஏன் தாத்தாக்கும் பிடிக்காது சாரலுக்காக அமைதியாக இருக்காங்க” என்றாள்.
பப்பு ஆர்வமாக “என்ன விஷயம்?” என்று கேட்டான்.
“யாராவது கடல்ல தெரியாமல் விழுந்திட்டாலோ, தற்கொலை செய்ய முயற்சித்தாலோ? என்ன ஏதுன்னு யோசிக்காமல் உடனே கடல்ல நீந்திப் போய் காப்பாற்றுவாள் அது எவ்வளவு ஆபத்தா இருந்தாலும் சரிதான்.அதைப் பற்றி அவளுக்கு கவலையில்லை” என்று சொன்னாள்.
ரேவதி பேசுவதைக் கேட்ட பப்பு உடனே சாரலைப் பார்த்தான்.அவளோ அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாக கடலைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ரேவதி விடாமல் “இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அப்போ புயல் நேரம் யாரும் கடற்கரைக்கே வரக் கூடாதுன்னு எச்சரிக்கை பண்ணாங்க.கடல் ரொம்ப சீற்றமாக இருந்துச்சு அந்த நேரத்துல ரோந்துக்கு வந்த இருந்த ஒருத்தர் அலையோட இழுப்பில் மாட்டிக்கிட்டாங்க,இந்த விஷயம் எங்களுக்கு தெரிய வந்த போது அவ உயிரைப் பத்திக் கூட யோசிக்காமல் அந்த நபரை காப்பாத்துனா” என்றாள்.
சாரல் “ரேவதி இதோட இந்த பேச்சை நிறுத்து” என்றாள்.
ரேவதி பப்புவிடம் “நீயாவது அவகிட்டே சொல்லு. இப்படி செய்யக் கூடாதுன்னு தாத்தாக்கு சாரல் செய்ற நல்ல விஷயம் பிடிக்கும் என்றாலும் அவளுடைய உயிருக்கு எதாவது ஆபத்து வந்திடுமோன்னு ரொம்ப கவலைப்படுவாரு” என்றாள்.
பப்பு சாரலை இமைக்காமல் பார்த்தவன் “இந்த மாதிரி காப்பாற்றுவதற்கு எப்போ ஆரம்பிச்சே சாரல்?” என்று கேட்டான்.
சாரல் சிரித்துக் கொண்டே “எனக்கு அப்பவே நீச்சல் தெரிஞ்சு இருந்தால் ஒரு உயிர் போறதை நின்று வேடிக்கை பார்த்துட்டு இருந்து இருக்க மாட்டேன்” என்ற போது அவளுடைய விழிகள் கலங்கி இருந்தன.
பப்பு அதிர்ச்சியாகி “இது எப்போ நடந்துச்சு?” என்று கேட்டான்.
உடனே ரேவதி “சின்ன வயசுல நடந்த விபத்துக்கு நீ எப்பவும் பொறுப்பு ஆக மாட்டே சாரல்,அதை முதல்ல புரிஞ்சுட்டு தேவையில்லாத எண்ணத்தில் இருந்து வெளியே வா” என்றாள்.
பப்பு புரியாமல் பார்த்தான்.
சித்தப்பு கேள்விக் கேட்டுக் கொண்டிருந்த பப்புவிடம் “ஒரு மணி நேரத்தில் தாத்தா வரச் சொன்னாரு” என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றார்.
போகும் வழியினில் பப்புவிடம் “திரும்ப இதைப் பற்றி சாரல்கிட்டே கேட்காதே! அவள் ரொம்ப சங்கடப்படுவாள்” என்றார்.
“ஏன் என்னாச்சு?நீங்களாவது நடந்ததை சொல்லுங்க சித்தப்பு”என்று கேட்டான்.
“சாரல் அம்மாக்கு கொஞ்சம் மனநிலை சரியில்லாதவங்க அவளுக்கு ஆறு வயது இருக்கும்,என்ன நடந்துச்சுன்னு அவளுக்கும் நினைவு இல்லை.சின்ன பொண்ணு இல்லையா? பயத்துல அவ மறந்துட்டாளா என்னன்னு தெரியலை.
ஒருமுறை அம்மா தான் என்னை கடல்கிட்டே அழைச்சிட்டு வந்தாங்கன்னு சொன்னா,இன்னொரு முறை அவளுடைய பொம்மை கைத்தவறி கடல்ல விழும் போது அவளுடைய அம்மா எடுக்க போகவும் மாட்டிக் கிட்டாங்கன்னு சொன்னாள்.ஆனால் சாரலின் அம்மா அலையில் சிக்கி உயிர் இழந்துட்டாங்க.இறுதியில் சாரல் அம்மாவை இந்த கடற்கரை ஓரமாக சடலமாகத் தான் நாங்க பார்த்தோம்.அவளும் அம்மா அம்மா என்ற வார்த்தை தவிர கொஞ்ச நாளாக எதுவும் சொல்லலை.
அதுல இருந்து சாரலுக்கு ஒரு வெறி,தான் அம்மாவை இழந்த மாதிரி யாரும் தன் கண்முன்னாலே உயிரை இழக்கக் கூடாதுன்னு ஒரு பிடிவாதம்.சின்னப் பிள்ளையா இருந்தாலும் ரொம்ப சீக்கிரமா நீச்சல் கத்துகிட்டவ பன்னிரெண்டு வயசுல சின்ன பிள்ளைகளை காப்பாத்த ஆரம்பித்தவள் இப்போ வரைக்கும் அது தன்னுடைய முழுநேர வேலையாக அவ செய்துட்டு வருகிறாள் சாரல்” என்று பெரிய விளக்கமே அளித்தார் சித்தப்பு.
பப்பு எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டே வந்தான்.
இங்கே ரேவதி பப்பு செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவள் சாரலிடம் “சாரலு எனக்கு ஒரு சந்தேகம்?”
“ம்ம்… என்ன்னனு சொல்லு”
“பப்புக்கு என்ன வயது இருக்கும்?”
சாரல் யோசனையோடு “எப்படியும் என்னையும் உன்னையும் விட பெரியவன் அதுல என்ன சந்தேகம்?” என்று கேட்டாள்.
“அது… அடுத்த தெருல இருக்காள்ல சுமதி”
“ஆமாம் அவளுக்கு இப்போ என்னவாம்?”
ரேவதி “அவளுக்கு பப்புவை ரொம்ப பிடிச்சி இருக்காம்,ஒன்சைடு லல்வாம்.பார்க்க ஆளு வேற செமையா இருக்கான்,அதனால” என்று இழுத்தாள்.
சாரல் ரேவதியைப் பார்த்து “அதுக்கு நான் என்ன செய்யனுமாம்?” என்று அவள் கேட்கும் போதே முகம் மாறத் தொடங்கி இருந்தது.
“நீ பப்புகிட்டே அவள் காதலை பேசி புரிய வைச்சு ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கனுமாம்,உனக்கு பெரிய புண்ணியமாக போகுமாம்” என்று சொல்லவும் சாரல் பக்கத்தில் ஓரமாக கிடந்த கல்லை எடுக்க தயாரானாள்.
“உனக்கும் அவளுக்கும் என்னை பார்த்தால் எப்படி தெரியுது?” என்று முகத்தை கோபமாக வைத்தபடி கேட்டாள் சாரல்.
ரேவதி பொறுமையாக “கோபப்படாதே சாரல், இப்படி சொன்னது சுமதி மட்டும் நினைக்கிறியா? இந்த வருஷம் ப்ளஸ் ஒன் போனாலே அவ பேரு சரியா தெரியலை அவளுக்கு கூட பப்புவை ரொம்ப பிடிச்சு இருக்காம்,நீ தான் யாரையும் பிடிக்கலைன்னு சிங்கிளா சுத்துறே அழகா இருக்கிற பப்புக்காவது ஒரு நல்ல ஜோடியை அமைச்சுக் கொடு” என்று கண்ணடித்துச் சொன்னாள்.
சாரல் இப்பொது கையில் கல்லை எடுத்தே விட்டாள்.ரேவதியைப் பார்த்து “இவ்வளவு நேரமா நானும் ரொம்ப பொறுமையா இருந்தால் என்னை விட மாட்டே போல இருக்கு,சரி வயிற்றுல பாப்பா வைச்சு இருக்காலேன்னு அமைதியா இருந்தால் உன் தொல்லை தாங்க முடியலை” என்று அவள் கோபத்தில் பேசிக் கொண்டிருந்தாள்.
சித்தப்புவோடு போன பப்பு திரும்ப வந்தவன் சாரல் ரேவதியை அடிக்க நிற்பதைக் கண்டவன் ஓடி வந்து அவளின் கையைப் பிடித்து தடுத்தவன் “என்னாச்சு சாரல் ஏன் இவ்வளவு கோபமா இருக்கே?” என்று கேட்டான்.
ரேவதி சாரலைப் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.
பப்பு சாரலை தன் பக்கமாக இழுத்தவன் ரேவதியைப் பார்த்து “நீ என்ன சொன்னேன்னு உன் மேல இவ்வளவு கோபப்படுறா சாரல்?சொல்லு” என்று கேட்டான்.
ரேவதி மெதுவாக எழுந்து “அதை அவகிட்டயே கேளு,நான் சொல்ல மாட்டேன்.சின்ன வயசுல இருந்து உன்னைப் பார்க்கிறேன் சாரல் என்கிட்ட மறைக்கலாம்னு நினைக்கிறியா? அது முடியாதே! நான் எப்பவோ கண்டுபிடிச்சிட்டேன்” என்று சாரலைப் பார்த்து கிண்டல் செய்தாள்.
சாரல் திருதிருவென்று விழிக்கவும் பப்பு ரேவதியைப் பார்த்து “நீ எதைப் பத்தி பேசுறேன்னு எனக்கு புரியலை” என்று கேட்டான்.
ரேவதி குறும்பாய் “அது யாருக்கு புரியனுமோ அவங்களுக்கு தெரிந்தால் போதும்.உனக்கு உண்மை என்னன்னு தெரியனும்னா சாரல்கிட்டே கேளு அவளே பதில் சொல்வாள்” என்று சொல்லவும் சாரல் தன் தலையை தாழ்த்திக் கொண்டாள்.
அவள் இன்னும் பப்புவின் முதுகிற்கு பின்னால் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
ரேவதி இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே “எத்தனை நாளைக்கு இப்படி ஒளிச்சு வைக்கிறேன்னு நானும் பார்க்கிறேன்,ஏற்கனவே துணி துவைக்கும் போது பார்த்தேன்,அடுத்த முறை எப்போ மாட்டுவேன்னு காத்திட்டு இருக்கேன்” என்று சொன்னவள் திரும்பி தன் வீட்டிற்கு நடந்தாள்.
சாரலோ தலையில் கைவைத்தவள் மனதினுள் ‘இவ கண்ணுல சிக்கிட்டோமா? இனி என் நிலைமை அவ்வளவுதான்’ என்று நினைத்தாள்.
ரேவதி அன்றைக்கு நடந்ததை நினைத்து இப்போது சிரித்தாள்.

Last edited: