• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் காதலால் என்னை மீட்டுவிடு - 18

Vishakini

Moderator
Staff member

உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 18

சரஸ்வதி மகிழினி அருகே வந்த அமர்ந்து பாப்பா என்ன நடந்தாலும் அமைதியா இருக்க வேண்டும் எது என்றாலும் வீட்டில் போய் பேசிக்கொள்வோம் சரியா? என்றார்

தாத்தா முன்ன பின்ன யோசிக்காமல் எதுவும் செய்ய மாட்டாங்க தெரியும் தானே? என்று அவர் அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார் அப் பொழுது அவர்களின் பின் தொளைத்தொட்டது டாக்டர் ராஜாவே தான் என்ன பாப்பா டென்ஷனா இருக்கா? என்று மகிழினி கையை தன் கையினுள் புதைத்து வைத்துக் கொண்டான் அதற்கு முன்பே மகிழினியின் உள்ளங்கை வியர்த்து வடிய தொடங்கியது

அட்சயாவை கேள்வி கேட்டே துளைத்துக் கொண்டிருந்தார் தமிழரசி தலையும் புரியாமல் வாலும் புரியாமல் முடித்துக் கொண்டிருந்தாள் அட்சயா

செழியன் அவர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கொடுத்துக் கொண்டிருந்த பொழுதும் பாஸ்கரவர்மனின் பார்வை முழுதும் தன் பேத்தியின் மேலே இருந்தது ராஜா வந்தவுடன் ஒரு பெரிய நிம்மதி அவன் அவர்களைப் பார்த்துக் கொள்வான் இப்பொழுது தைரியமாக தான் அறிவிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து மெல்ல மிடியாவை நோக்கி நான் கொஞ்சம் பேசலாமா? என்றான் செழியன் ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தி திரும்பி பாஸ்கரவர்மனை பார்த்தான் பின் அமைதியாக அமர்ந்து அவரை பேச அனுமதித்தான்

அனைவருக்கும் வணக்கம் என்னை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும் இது போல ஒரு நல்ல நாளில் நல்ல நேரத்தில் என் பேத்தி பேரன் இருவரின் திருமணம் குறித்து அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி இந்த முடிவு இப்போது எடுக்கப்பட்டது அல்ல பல வருட முன்பே எனக்கும் என் நண்பன் சேரனுக்கும்தற்கும் உள்ள ஆசை என் பேத்தி மகிழினியை அவரின் பேரன் ஆதித்ய இளஞ்செழியனிற்கும் அவரின் பேத்தி வதனபிரியாவை என் பேரன் விஜய வர்மனுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தோம் சில காரணங்களால் காலம் கடந்து இன்று தான் நாங்கள் பேசி முடிவு செய்தோம் அதை முறையாக இந்த மருத்துவமனை ப்ராஜெக்டுகள் முடிந்தவுடன் அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தோம் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் இன்று வெளியிட வேண்டியதாயிற்று ஆனாலும் எங்களுக்கு மகிழ்ச்சியே என்று முடித்தார்

மீடியாக்கள் அவர்கள் குடும்பத்தினர் புகைப்படம் எடுக்க திரும்பிய பொழுது அவர் குடும்பத்தினர் அனைவரும் செழியனின் கருப்பு படை வீரர்களால் சூழப்பட்டிருந்தனர்


திடீரென்று செழியன் எழுந்து வெல்.. நீங்கள் என்னிடம் பேச வேண்டும் என்று கேட்டீர்கள் நாங்களும் உங்களை மதித்து எங்கள் பக்கம் விளக்கங்களை கொடுத்தோம் உங்களுக்கு எங்கள் குடும்ப உறுப்பினர்களை புகைப்படம் எடுக்கவோ... அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ உரிமை இல்லை சோ திருமண அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் அப்பொழுது உங்களுக்கு எங்கள் குடும்பத்தினர் மற்றும் எங்களின் புகைப்படங்களும் போட அனுமதி கிடைக்கும் என்று கூறிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான் விஜய வர்மனுடன் அலுவலக அறை நோக்கி

அட்சயா மற்றும் செழியன் குடும்பத்தினர் அனைவரும் விருந்தினர் அறை நோக்கி அழைத்துவரப்பட்டனர

மகிழினியுடன் சரஸ்வதியும் ராஜாவும் அவள் அறை நோக்கி சென்றனர்

மீடியாக்காரர்கள் அனைவரின் கேமராக்களும் செக் செய்யப்பட்டு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்

அவர்களை அனுப்பி விட்டு ஒரு பெருமூச்சுடன் பாஸ்கர வர்மனை பார்த்தார் விவேகன் அவரோ இங்கு என்ன நடந்தது என்பதை அவர் தன் நண்பனுக்கு நேரடி வர்ணனை கொடுத்துக் கொண்டிருந்தார்

நான் அம்மாவையும் பத்துவையும் சமாதானமும் படுத்த வேண்டும் போய் பார்க்கிறேன் என்று அவர்களை நோக்கி நடந்தார் விவேகன்


செழியனை தொடர்ந்து வந்த விஜய் வர்மன் என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல சார் இத பத்தி தான் பேச போறேன் என்று என்ற விஜயவர்மனை ஆழமாக பார்த்து ஏன் அண்ணனிடம் சொன்ன பொய்யை என்னிடமும் சொல்லவா?

உங்களை அப்படியே நம்ப நான் மாறன் அல்ல நான் ஆதித்ய இளஞ்செழியன் என்னை பார்த்து சொல்லுங்க பிரியாவை உங்களுக்கு பிடிக்காது என்று வர்மனின் சேரில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து என்ன பதிலை காணும் என்றான் செழியன்

தாத்தா உங்க ரெண்டு பேரின் திருமணம் பற்றி தான் முதலில் பேசினாங்க சரி அவர் ஆசைப்படுகிறார் என்று தான் முதலில் சம்மதித்தேன் உங்களைப் பற்றி 90% எனக்கு தெரியும் என்பதாலும் தான்

இப்பொழுது அல்ல தாத்தா உங்களுக்கு கொடுத்த ஷேர்ஸ்சை நீங்கள் வாங்காமல் திருப்பிக் கொடுத்த பொழுதே இந்தியாவில் உங்களைப் பற்றி அனைத்து விவரங்களையும் டிடெக்டிவ் மூலம் விசாரித்து விட்டேன்

அதில் உங்கள் குடும்பம் சச்சிம்மா குடும்பம், உங்கள் தங்கை அட்சயா, அலுவலகம் உட்பட எல்லாரின் ஜாதகமும் என் கையில் வந்து விட்டது

அது எனக்கு திருப்தியாக இருந்த பின் தான் இந்த பிசினஸ் டீலுக்கு எல்லாம் ஓகே சொன்னேன் நீங்க பேப்பரை படித்து பார்த்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும் இந்த டீல்ஸ் எல்லாமே 99 வருடங்களுக்கு போடப்பட்டது என்று

பிகாஸ் என் காலத்துக்கு பின்பும் என் அண்ணன் பிசினஸ் சாம்ராஜ்யத்தில் முதல் இடத்திலேயே இருக்க வேண்டும் என்று நினைத்தேன் அதற்கு உங்கள் ஒத்துழைப்பும் தேவை என்றுதான் நீங்கள் பிரியாமல் இருக்க அந்த ஒப்பந்தத்தின் இடையில் எக்காரணம் கொண்டும் ரத்து செய்ய முடியாத படி செய்தேன்


இப்பொழுது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது

டாக்டர் விக்ரம் வரும் வரை ...எந்த நிமிடத்திலும் சாவை எதிர்கொள்ளும் திடம்
இருந்தது என்னிடம்.

டாக்டர் விக்ரமுடன் பழகிய நாட்கள் அழகானவை என்னை இப்படி மாற்றியது அவர்தான்

அந்த விபத்திற்கு பிறகு அவரை எத்தனையோ முறை தொடர்பு கொள்ள முயற்சித்தேன் முடியவில்லை என்றான் செழியன்.

இதை கேட்டுக் கொண்டிருந்த விஜய வர்மன் டேபிளில் வைத்து இருந்த ஒரு பாட்டில் தண்ணீரையும் கடகடக் குடித்து முடித்தான்.

 
Top Bottom