• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் காதலால் என்னை மீட்டுவிடு - 20

Vishakini

Moderator
Staff member

உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 20

ரெசார்ட் வந்தவுடன் தமிழரசி பாட்டி அனைவரையும் பிடித்துக் கொண்டார் நான் நேரடியாகவே கேட்கிறேன் செழியா பாட்டி செழியா என்று கோபமாக இருக்கும் போது மட்டும் அழைப்பார் டேய் நீங்களாகவே பேசி முடிவு எடுக்க திருமணம் ஒன்றும் பிசினஸ் இல்லடா நேத்து நைட்டு பேசி இன்று முடிவெடுக்க வேண்டிய அவசியம் என்ன? தாத்தா என்னிடம் பேசும்போது கூட பிரியாவின் படிப்பு முடியும்போது இதைப்பற்றி பேசியிருக்கலாம் என்று தான் பேசினேன் ஆனால் தாத்தா ஒரு சில காரணங்கள் சொன்னாங்க பாஸ்கர் அண்ணா ஊருக்கு வரும்போது பேசிவிட்டு பிறகு சொல்கிறேன் என்றார்... அது சரி உனக்கு விஜயவர்மனை தெரியும் ஆனால் அவர் தங்கை மகிழினியை எப்படி தெரியும் நீ தான் அடிக்கடி சொல்லுவ ஒரே நாள்ல பார்த்து பேசினா அவங்க குணம் தெரிஞ்சு விடுமா என்று? நீ எத்தனை நாள் மகிழினியிடம் பேசி இருக்கிறாய்? சொல் என்றாள் பாட்டி

இடையில் புகுந்த பத்மினி அத்தை உங்களுக்கு மகிழினி நம்ம வீட்டு மருமகளா வருவதில் உங்களுக்கு இஷ்டம் இல்லையா? என்று கேட்க அட நீ வேற பத்து... அந்த பொண்ண யாருக்கு தான் பிடிக்காது? எனக்கு வருத்தம் எல்லாம் அவளிடம் ஒரு முறையாவது இவன் பேசியிருக்க வேண்டும் என்பது தான் முடிவு சொல்லும் முன் அவள் அனுமதி பெறாமல் இவன் மட்டுமல்ல , பத்து பாஸ்கர் அண்ணாவும் செய்தது தவறுதான் அவள் முகத்தை பார்த்தாயா அத்தனை அதிர்ச்சி! கண்ணு முழுவதும் கண்ணீர் !..சரி அவளை விடு அவள் அண்ணன் கிட்டயாவது இவன் சொன்னானா ? கேளு ?

ம்.ம் உன் அண்ணன் கிட்டயாவது பேசுனியா? அங்க ஒரு குடும்பமே இருக்கு அவங்க யார்கிட்டயாவது ஏதாவது கேட்டியா? சொன்னியா? என்று பாட்டி கேள்விகளை அடுக்கிக் கொண்டே அது.. சரி மகிழினி பற்றி உனக்கு என்ன தெரியும் சொல்லு முதல்ல என்றார் செழியன் இடம்

கிராண்ட்மா எனக்கு மகிழினியை 2 வருஷமா தெரியும், நேர்ல பார்க்கவில்லை ஆனால் அவளது எல்லா நடவடிக்கையும் எனக்கு தெரியும் நான் இரக்கப்பட்டு ,கிவ் அண்ட் டேக் பாலிசி போடுவதற்காகவோ ,இந்த திருமணம் பற்றி பேசல கொஞ்சம் டைம் கொடுங்க கிரான்மா? நான் உங்க முகம் பார்த்து பேசும் மனநிலையில் இப்போது இல்லை ஆனா ஒன்று மட்டும் சொல்வேன் நான் ஆதித்ய இளஞ்செழியன் நான் தவறு செய்ய மாட்டேன் ஐ நீட் சம் டைம் ,ரெஸ்ட் ப்ளீஸ் என்று தன் அறையை நோக்கி சென்றான் செழியன்

சரி விவேகா உனக்கு இதெல்லாம் முதலில் தெரியும் தானே? ஏன் என்கிட்ட சொல்லல? என்று மகனைப் பிடித்துக் கொண்டார் தமிழரசி பாட்டி அம்மா எனக்கு அவன், மீடியாவை சந்திக்க அஞ்சு நிமிஷத்துக்கு முன்னால தான் அம்மா தெரியும் ஆனா அப்பாகிட்டயும் மாறன் கிட்டயும் இந்த youtube பாருங்க லைவ்ல பாருங்கன்னு சொல்லிட்டு போய் தான் உட்கார்ந்தோம் என்றார்

தன் அறையில் புகுந்தவன் தன் டிராவில் இருந்த இழுவையை இழுத்தான் மேலே டாக்டர் விக்ரம் மகிழினியின் புகைப்படம் இருவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி அதனை வெளியே எடுத்த அத்தோடு கிட்டத்தட்ட நூறு கடிதங்கள் அடங்கிய தொகுப்பு அத்துடன் ஒரு டைரி ... பத்திரமா பாத்துக்கோ டா வந்தவுடன் வாங்கிட்டு போறேன் என்று சொன்ன வார்த்தை அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் மிக அருகில் கேட்டுக்கொண்டே இருந்தது தன் மார்பினை மெல்ல நீவி கொண்டான் இவைகள் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இவனிடம் இருக்கிறது திறந்து பார்த்ததும் இல்லை விக்ரமின் தனிப்பட்ட கடிதங்கள் அவன் கேட்கும் பொழுது கொடுக்க வேண்டும் என்று தன் இன்று காலை வரை நினைத்திருந்தான்

ஆனால் இன்று காலை எம் எம் ஹாஸ்பிடல் போகும் வரை இருந்த நிலைமை வேறு அங்கு சென்று டாக்டர்ஸ் டீடெயில்ஸ் பார்க்கும் பொழுது இருந்த மனநிலை வேறு இந்த மருத்துவமனையில் வேலை பார்த்த சிறந்த இதய சிகிச்சையில் தலைசிறந்த மருத்துவர் டாக்டர் விக்ரம் பற்றிய விவரங்கள் சமீபத்தில் முழுவதும் நீக்கப்பட்டிருக்கிறது

ஆனால் போன வருட பதிவேடு மற்றும் பல டாக்குமெண்ட்களில் டாக்டர் விக்ரமனின் இதய ஆராய்ச்சி, அவன் கொடுத்த மருந்துகள்,மற்றும் அதன் முடிவு பற்றிய விவரங்கள் பைல் செய்து வைக்கப்பட்டிருந்தன
 
Top Bottom