• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் காதலால் என்னை மீட்டுவிடு - 21

Vishakini

Moderator
Staff member

உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 21

இந்த கடிதங்கள் கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு மேல் இவனிடம் தான் இருக்கிறது திறந்து பார்த்ததில்லை விக்ரமின் தனிப்பட்ட கடிதங்களை அவன் கேட்கும் பொழுது கொடுக்க வேண்டும் என்று மட்டும்தான் இன்று காலை வரை நினைத்திருந்தான்.

ஆனால் இன்று காலை எம் எம் மருத்துவமனை போகும் வரை இருந்த நிலைமை வேறு அங்கு சென்று டாக்டர் டீடெயில்ஸ் பார்க்கும் பொழுது இருந்த மனநிலை வேறு இந்த மருத்துவமனையில் வேலை பார்த்த இதய சிகிச்சையில் தலை சிறந்த மருத்துவர் டாக்டர் விக்ரம் பற்றிய விவரங்கள் சமீபத்தில் முழுவதும் நீக்கப்பட்டிருக்கிறது ஆனால் போன வருட பதிவேடு மற்றும் பல டாக்குமெண்ட்களில் விக்ரமின் ஆராய்ச்சி மற்றும் அதன் முடிவு பற்றி விவரங்கள் ஃபைல் செய்து வைக்கப்பட்டிருக்கின்றன
முன்னுக்குப் பின் முரணான விஷயங்கள் பலரிடம் விசாரித்து விவரம் பெறும் பொழுது தெரிந்த விவரங்கள் செழியனே பெரும் அதிர்ச்சி கொள்ளாக்கியது .

அது மட்டுமல்லாது இன்று மகிழ்வியின் அரைக்கும் வளைந்த போது அங்கு கடந்த ஓவியங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவன் கண்ணில் "அந்த கடிதம்" படாமலேயே இருந்திருக்கலாம்!

மகிழினி கைப்பை
அவசரக்கதியில் சரியாக மூடப்படாதால் கைப்பையில் இருந்து வெளியே விழுந்து இருக்க வேண்டும் எடுத்து டேபிள் மேல் வைக்க தான் அந்த கடிதத்தை எடுத்தான் அதிலிருந்து தனக்கு பரிச்சயமானதாக இருப்பதாக தோன்ற பிரித்துப் பார்த்தால் அதில் விக்ரமின் கையெழுத்து படிக்க மனம் இன்றி என் இனிய மகிழினிக்கு என்று எழுதிய முதல்வரியை மட்டும் படித்துவிட்டு மடித்து வைக்கும் பொழுது என்றும் உன் நினைவுடன் விக்ரம் என்ற கையெழுத்து போடப்பட்டிருந்தது

அங்கிருந்தே தன் பிஏ பிரின்சுக்கு அழைத்தான் இன்னும் ஐந்து நிமிடம் உனக்கு டைம் , டாக்டர் விக்ரம் பற்றி அந்த ஹாஸ்பிடல் டீன் இடம் பேச வேண்டும், பேச சொல் என்றான்

ஐந்து நிமிடத்தில் நான் செழியன் பேசுறேன் எனக்கு சில விபரங்கள் உண்மை ...மட்டும் வேண்டும் உண்மை என்பது மிக அழுத்தமான உச்சரிப்பிலேயே டீன் நெற்றியில் வேர்வை வழிய ஆரம்பித்தது கையில் உள்ள கர்சிப்பை வைத்து முகத்தை துடைத்துக் கொண்டார் , அருகில் பிரின்ஸ் நின்று கொண்டிருந்தான்
.
சொல்றேன் சார் என்று எம் எம் மருத்துவமனையின் பழைய டீம் பேச ஆரம்பித்தார்

டாக்டர் விக்ரம் இப்போது எங்கு இருக்கிறார்? ஏன் அவர் என் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது? என்று செழியன் கேட்டதற்கு சா....ர் நான் சொல்லலாமான்னு தெரியல ஜெர்மனியில் ஒரு தொழில் அதிபருக்கு இதயசிகிச்சையளிக்க ,அதைகுறித்து ஆராய்ச்சி செய்யவும் ஜெர்மனிக்கு இரண்டரை வருடங்களுக்கு முன்பு சென்றார் அவர் சென்ற வேலைகள் சரியாக நடந்து ரிப்போர்ட் எல்லாம் எங்களுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார் நோயாளியின் பெயரை மட்டும் எங்களுக்கு தெரிந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது

இடையில் ஒரு முறை இந்தியா வந்து இங்கு உள்ள மாணவர்களுக்கு அதைப்பற்றி விளக்கங்களையும் தான் சந்தித்த நிகழ்வுகளையும் பற்றி வகுப்பு எடுத்தார்.

பின் ஒரு வாரத்தில் கிளம்பினார் அதன் பிறகு அவர் வரவே இல்லை சிகிச்சை விவரங்களும் அதில் உள்ள சவால்கள் மருத்துவ முறைகள் மட்டும் அனுப்பி கொண்டே இருந்தார்


8 மாதங்களுக்கு முன்பு அந்த நோயாளிக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதே நிரந்தர தீர்வு என்ற நிலை என்று அனுப்பி இருந்தார் அவருக்கு இந்த அறுவை சிகிச்சை தாங்கும் அளவு ஊட்டங்களும் மனம் தெளிவாக பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகின்றன என்றார், அதற்குப்பின் எந்த ஒரு கடிதங்களோ எந்த ஒரு டாக்குமெண்ட்ஸ் எங்களுக்கு வரவில்லை.

இடையில் நடந்த ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தி மட்டுமே எங்களுக்கு கிடைத்தது மேலும் விவரங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை அவர் இறந்த விபரங்கள் அவர் குடும்பத்திற்கு அவர்களே தெரிவித்து விட்டார்கள் குடும்பத்தினரை ஜெர்மனிக்கு வர வைத்து அங்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு விட்டதாக கேள்விப்பட்டோம் அவரின் தங்கை இங்கு வந்து திங்க்ஸ் எல்லாம் எடுத்துப் போக வரும்போது சொன்னாள்.

இங்கு யாருக்குமே அவரது இறப்பு தெரிவிக்கப்படவில்லை,

அங்கு ஒரு முக்கிய.. பெரிய தொழில் அதிபரின் இருதய சிகிச்சை சம்பந்தமாக சென்றதால் அவருடனே செட்டில் ஆகி அங்கேயே தங்கிவிட்டார் என்று எல்லோருக்கும் சொல்லப்பட்டது

அவரைப் பற்றி இருவர் மட்டுமே விசாரித்தார்கள் சார் ஒன்று அவருடன் வேலை பார்த்த டாக்டர் ராஜா இன்றோன்று அட்சயா என்ற பெண் தன் தோழியின் சிகிச்சை பற்றி பேசவேண்டும் என்று விசாரித்தாள்

மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது சார் என்றார்

ஓகே தேவையானால் கூப்பிடுறேன் என்றவன் தன் மனதில் உறுதியாக முடிவு எடுத்து தான் தமிழினியின் அறையை விட்டு வெளியே வந்தான்

கொஞ்ச நேரம் தன் ஒட்டி உள்ள பால்கனியில் உலாவிகொண்டே தன் கைபேசியில் உள்ள புகைப்படங்களை பார்வையிட்டான் ,அவன் சிந்தனை முழுவதும் முதன் முதலில் டாக்டர் விக்கிரமனை சந்தித்த நாளை கண்முன் கொண்டு வந்தது

 
Top Bottom