உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 23
வீட்டுக்கு வந்த அட்சயா டீ யை அனைவருக்கும் போட்டு கொடுத்து இரவு கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, அனைவரையும் சாப்பிட வைத்து தாத்தாவை மாத்திரைகள் போட வைத்து, மகிழினிக்கு பாலில் தூக்க மாத்திரை போட்டு தூங்க வைத்து விட்டு ராஜாவிற்கு கால் செய்ய எடுத்து நேரத்தை பார்த்து ஒருவேளை தூங்கி இருக்கலாம் என்று அனைவரும் சாப்பிட்டார்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம் யூ டேக் கேர் என்று ஒரு எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு தன் லேப்டாப்பை எடுத்து எதையோ தேடிக் கொண்டிருந்தாள் அதில் அதில் உள்ள செய்திகளை படிக்கும் போது அவள் புருவங்கள் ஆச்சரியமாக மேல் எழுந்தன,
அதில் உள்ள படங்களை கூர்ந்து பார்த்த பொழுது குழப்பமாய் விழிகள் இடுங்கியது
பின் அதனை டேபிள் மீது வைத்துவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த மகிழினிஅருகில் வந்து அமர்ந்தாள் பின் அவள் தலையை மெல்ல வருடிக் கொண்டே தன்னில் சொல்லிக் கொண்டாள் இப்படி நடக்க வேண்டும் என்று நீயும் பழைய விஷயங்களை மறந்து பழைய மகிழ்னியாய் மகிழ்ச்சி நிறைந்து வாழ வேண்டும் என்று தான் நினைத்தேன்
"ஆனால் இன்று தடாலடியாக எல்லாம்... நடக்க வேண்டும் என்று நினைக்கவில்லையடி" என்றாள் அட்சயா விழி மூடி தூங்கிக்கொண்டு இருக்கும் மகிழினியை பார்த்து
உன்னை சுத்தி மட்டும் ஏனடி இத்தனை குழப்பங்கள் என்று யோசித்துக் கொண்டே
செழியன் சாருக்கு உன் நிலைமை நன்கு தெரியும் ஏனெனில் உன்னை விட அதிக வலியை பெற்று வந்திருக்கிறான் என்று என் கிட்ட தாத்தா சொன்னாங்க ஏன் எதுக்குன்னு புரியல அண்ணா கிட்ட பேசினா தான் விடை கிடைக்கும் என்று யோசித்துக் கொண்டே மெல்ல நடந்தாள் பால்கனியை நோக்கி...
கீழே தோட்டத்தை எட்டிப் பார்த்தாள் அந்த தோட்டத்தில் சச்சிமா மடியில் விஜயவர்மன் படுத்து இருக்க சச்சிம்மா. அவனின் தலையை வெல்ல கோரிக்கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்
கீழே போகலாமா? வேண்டாமா ? என்று சற்று நேரம் யோசித்து விட்டு மெல்ல படி வழியே கீழே உள்ள தோட்டத்திற்குச் சென்றாள் அங்கு ஒரு மூலையில் பாஸ்கர வர்மன் , சண்முகவேல் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்
சச்சிமா என்று குரல் கேட்டு விஜய் வர்மன் எழுந்து அமர்ந்தான் பாப்பா என்ன செய்றா? தூங்கிட்டாளா? ஏதாவது பேசினாளா ?என்று பல கேள்விகளை அடுக்கினான் விஜயவர்மன்
நான் உங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அண்ணா தனியா... என்றாள் அட்சயா
அவள் முகத்தை கூர்ந்து கவனித்து சரஸ்வதி அக்ஷயா நாளைக்கு பேசிக்கொள்ளலாம் டா என்றார்
நீ ரொம்ப டயர்டா இருக்க என்ற சச்சிம்மா சொல்லும் முன் இல்ல சச்சிம்மா எனக்கு சில விஷயங்கள் இன்றே தெரிந்தாக வேண்டும் என்ற உறுதியில்
தாத்தா என்னமோ பிரச்சனை என்று ..என்ன பேச வேண்டும்
என்று கேட்க...
தாத்தா மகிழினியின் வாழ்வு என் வாழ்வை விட முக்கியம் எனக்கு என்றாள் உறுதியாக
அங்கு சற்று மௌனம் நிலவியது
சரி... அதுக்கும் நீ பேச வேண்டும் என்று சொல்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்றார் .
இருக்கு தாத்தா செழியன் சார் பத்தி எனக்கு தெரிய வேண்டும் அவரைப் பற்றிய விவரங்களை கூகுளில் தேடினேன் அவர் ...,
அவரின் நிகழ்வுகள் வித்தியாசமாக இருக்கு
என்றபடி நான் கொண்டு வந்த லேப்டாப்பை அங்கிருந்து கல் இருக்கையில் வைத்து கூகுளில் ஆதித்யா குருப் கம்பெனியின் தற்போதைய போர்டு ஆப் டைரக்டர் ஆதித்ய இளஞ்செழியன் பற்றிய விவரங்கள் என்று டைப் செய்த போது...
கீழே ஆதித்திய இளஞ்செழியனின் படத்துடன் அவர் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்களும் அவர் கலந்து கொண்டு கையெழுத்திட்ட புகைப்படங்களும் வெளியாகி இருந்தன அதில் இரு புறங்களும் ஆதித்ய விவேகன் ஆதித்ய நெடுமாறன், அல்லது ஆதித்ய சேரமான் நின்று கொண்டிருந்தனர்
ஆனால் பேச்சுவார்த்தை பற்றிய படங்களில் எல்லாம் அவர் இருந்ததற்கான அடையாளங்களைளே.. இல்லை
அது மட்டுமில்லாமல் ஒப்பந்தம் போட்டு முடித்து இந்த புகைப்படங்கள் எதிலும் அவன் முகத்தில் அத்தனை கோடி பணம் லாபம் கிடைக்கும் என்ற பெருமையோ மகிழ்வோ இல்லை
அதில் உள்ள புகைப்படங்களில் ஆதித்ய இளஞ்செழியன் முகத்தில் தீர்க்கமான பார்வையும் சிரிக்க காசிக்கும் இறுகிய தாடை நடந்தால் காட்சி தருகிறார் கிட்டத்தட்ட போனா வருடம் வரை இப்படித்தான் இருந்திருக்கிறார்
இதுவரை போட்ட ஒப்பந்தங்கள் எதுவுமே மருத்துவம் சேவை உதவி போன்ற எதுவுமே இல்லை திடீரென்று ஏன் இந்த மருத்துவத்துறையில் நுழைவு எது இவரின் உண்மையான முகம்.
விஜய் அண்ணா நீங்க மட்டும் தான் அவங்களோட நெருங்கி பழகிருக்கீங்க அதனால தான் உங்களிடம் பேச கேட்கிறேன் என்றாள் அட்சயா
அது மட்டும் இல்லாமல் இன்று செழியன் சார் உங்களிடம் டாக்டர் விக்ரம் தெரியுமா என்று கேட்டார் நீங்கள் எதுவுமே சொல்லவில்லை அதில் ஏதாவது ரீசன் இருக்கா என்று பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் அட்சயா
விஜய வர்மன் தாத்தாவை பார்த்தான் தாத்தாவும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார் தாத்தாவின் அனுமதியை பெற்று கொண்டு
என் கூடவா அச்சும்மா என்று விஜயவர்மன் அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் தன் அறைக்குள் சென்று உட்கார் என்றான்
இப்போது சொல் உனக்கு என்ன கேள்விக்கு பதில் வேணும்
எனக்கும் அவன் அண்ணன் மாறனுக்கும் நெருங்கிய பழக்கம் உண்டு என்பது உனக்கு தெரியும் கிட்டத்தட்ட 20 வருடங்களாக அவரை எனக்கு தெரியும்
ஆனால் செழியனை நான் அத்தனை நெருங்கி பார்த்து பழகியதில்லை ஜெர்மனிக்கு மேற்படிப்பு படிக்கப் போகும் போது தான் செழியனை நான் பார்த்திருக்கிறேன் அதற்கு அப்புறம் கூட அவன் அவ்வளவாக என்னிடம் நெருங்கி பழகியதில்லை
ஆதித்திய நெடுமாறன் தான் பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து இருக்கிறான் அதை உன்னிடம் சொல்கிறேன் கேள் என்றபடி அவள் அருகில் அமர்ந்தான்
அந்த அறை முழுவதும் நிசப்தம் நிலவியது ..
விஜய வர்மன் இருக கண்களை மூடி ஒரு நெடிய பெரும் மூச்சை விட்டு கொண்டான்
மாறனுக்கும் செழியனுக்கும் மூன்று வருடம் வித்தியாசம் செழியனுக்கு பத்து வயது இருக்கும் பொழுது இருவரும் கோடைகால நீச்சல் வகுப்பிற்கு சென்றனர் அங்கு திடீரென செழியன் மயங்கி விழுந்தான் அவனை தூக்கிக் கொண்டு மருத்துவமனை விரைந்தனர்.
மருத்துவர் சோதித்து பார்த்துவிட்டு விவேகமன் மற்றும் சேரமானையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றார்
அங்குதான் செழியன் வாழ்க்கையை , அந்த குடும்பத்தின் மகிழ்ச்சியை புரட்டிப் போடும் அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார் மருத்துவர்
இதுவரையில் இதயத் துடிப்பு மெதுவாக இருந்த பொழுதும் அதில் வித்தியாசம் குழந்தைக்கு தெரியவில்லை ஆனால் நீச்சல் பழகும் பொழுது அவன் இதயத்துடிப்பு அதிகரித்து இருக்கிறது அதனால் அவன் மயங்கி விழுந்திருக்கிறான்
"உங்கள் மகனின் இதயத் தசைகள் வழக்கத்தை விட அதிகமாக தடிமனாக வளர்ந்திருக்கின்றன. இந்த நோயுடன் பலர் நீண்ட காலம் வாழ்கிறார்கள். ஆனால் அதிக மன அழுத்தம் அல்லது சில கடின சூழ்நிலைகளில் இதயத் துடிப்பில் ஆபத்தான மாற்றங்கள் ஏற்படலாம். அவனை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்..."
"செழியனின் இதய தசைகள் அசாதாரண செயல்பாட்டில் உள்ளது அதனை HYPERTROPHIC CARDIOMYOPATHY என்போம்"
இந்த வகை நோயாளிகளின் இதயத்துடிப்பு எப்பொழுது எப்படி இருக்கும் என்பதை கணிக்கவே முடியாது என்றார் மருத்துவர்
இதை எப்படி அப்பா பத்துவிடம் சொல்ல இப்பொழுது தான் பெண் குழந்தை பிறந்திருக்கு என்று மகிழ்ச்சியிலிருந்தோம்
அந்த மகிழ்ச்சி கடவுளுக்கு பொறுக்கவில்லை போல என்று தந்தை தோள் மீது சாய்ந்து அழ ஆரம்பித்தான் விவேகன்