உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 24
தன் தோளில் சாய்ந்து அழும் மகனை தேற்ற என்ன செய்ய என்று தவித்துப் போனார் ஆதித்ய சேர்மன்
பின் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டுவிட்டு மருத்துவரிடம் பேச ஆரம்பித்தார்
இந்த வகை நோய்கள் தாக்கம் அதிகமாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் நீண்ட காலம் சிறிது வாழ்ந்ததாக சொன்னீங்க அதுபோல இவன் வாழ என்ன செய்ய வேண்டும் என்றார்
இவர் கேட்ட கேள்வியின் பொருள் புரியவே விவேகனுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது பின் அவனும் மருத்துவரை நோக்கினான் தன் தந்தையுடன் சேர்ந்து
மருத்துவர் இன்று இவன் அப்சர்வேஷன் இருக்கட்டும் நாளை இன்னும் கொஞ்சம் மற்ற கேஸ்களை அனலைஸ் செய்துவிட்டு நாளை உங்களுக்கு முழு விவரங்களையும் கொடுக்கிறேன் இப்போதைக்கு உள்ள மருத்துவ முறைகளை சொல்கிறேன்
முடிந்தவரை அந்த தசைகள் இறுக்கம் இல்லாமல் இருக்க மருந்துகள் கொடுப்போம் என்றான் மருத்துவர்.
மருத்துவர் அறையில் இருந்து வெளியே வரும் போதே சேரமான் மகனிடம் உன் மகன் இளையவன் என் பொறுப்பு கூடுமானவரை அவனை டென்ஷன் ஆகாமல் பார்த்துக் கொள்வோம் என்றார்
தெய்வத்தான்ஆகாதெனி. னும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்
நல்லதே நடக்கும் நான் சொல்லும் வரை இதைப்பற்றி நீ யாரிடமும் சொல்லக்கூடாது நானே நேரம் காலம் பார்த்து சொல்லுவேன் அதுவரை உன் மனைவியையும் பெண் பிள்ளையும் நன்றாக பார்த்துக் கொள் என்று செழியன் அரை நோக்கி வந்தனர்
தமிழரசி அவர்களின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் அவரிடம் சேரமான் "ஒன்னும் இல்லம்மா ,அதிகமா தண்ணி குடிச்சிருக்கான் அதனால மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி இருக்கான்.
பயப்பட ஒன்றும் இல்லை இன்று ஒரு நாள் மட்டும் அப்சர்வேஷனல் வைத்துவிட்டு நாளை அனுப்பி விடுவார்களாம் என்று தன் தன் பேரன் அருகே சென்று தலையை கோதி விட்டு உன்னை விடமாட்டேன் டா என்று மனதிற்குள் சூளுரைத்து கொண்டார்.
அறையில் ஒரு ஓரத்தில் படித்து கொண்டிருந்த மாறனை அழைத்தார் "தம்பி நீ தம்பிய நல்லா பார்த்துக் கொள்வாய் என்று தெரியும் ஆனால் இனிமேல் அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்" சரியா என்றார்
தம்பி சின்ன பையன் அல்லவா ?அவன் இதயம் குட்டியா இருக்காம் அவன் டென்ஷன் ஆனாலோ, அதிகமாக சந்தோஷப்பட்டாலோ, தம்பிக்கு மயக்கம் வந்துவிடுமாம்.
அதனாலதான் அவனை கோபப்படாமலும் டென்ஷன் ஆகமாலும் அதிகமா சிரிக்காமலும் கொஞ்ச நாள் பார்த்துக் கொள்ள வேண்டும் சரியா?
அம்மாவுக்கு குட்டி பாப்பாவ பாக்க தான் நேரம் இருக்கும் அப்பாவுக்கு பிசினஸ் பார்த்த நேரம் தான் தம்பியும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் சரியா என்றார்.
மாறனுகு ஏதோ புரிந்தது போல் இருந்தது ஆனால் என்னவென்று தெளிவாக தெரியவில்லை அவனுக்கு.
அன்று முதல் அவன் தம்பிக்கு தாயாகவே மாறிப்போனான் தம்பி என்ன வேண்டும் என்று நினைப்பதற்கு முன்பே தம்பி கையில் கொடுத்து விடுவான் மாறன்.
இந்த ரகசியத்தை 5 வருடங்கள் மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது.
ஆம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் வந்த அன்று அவன் எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண் பெற்றிருந்தான் அதை அவனாலே நம்ப முடியவில்லை அந்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடி வந்தான் வீட்டை நோக்கி வீட்டு வாசல் வரை வந்தவன் வாசலிலே மயங்கி சரிந்தான்.
அவனை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த வதனப்பிரியா பார்த்து அம்மாவிடம் சென்று அண்ணன் கீழே விழுந்து விட்டான் என்றாள்
பத்மினியும் ஏதோ தட்டி கீழே விழுந்து விட்டான் என்று பார்த்து வருவதே இல்லை என்று திட்டிக் கொண்டே வந்தார் செழியன் விழுந்து கிடக்கும் கோலம் கண்டு கத்தி மாறனையும் தமிழரசையும் அழைத்தார்.
ஓடிவந்த மாறனுக்கு தம்பி கையில் இருந்த மதிப்பெண் பிரிண்ட் அவுட் பேப்பர் அவன் நிலை சொல்லாமல் சொன்னது.
கடகடவென தாத்தாவின் அறைக்குள் சென்றான் செழியனின் மருத்துவ அறிக்கையை எடுத்துக் கொண்டான்
தமிழரசியை மட்டும் தன்னுடன் வரும்படி அழைத்தான் அவரும் வீட்டில் அணிந்திருக்கும் உடையோடு வந்த காரில் ஏறினார்
வேலை செய்யும் ஆட்களின் உதவியோடு தம்பியை தூக்கி காரினுள் கிடத்தினான். அம்மாவை அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் சொல்லிவிடுங்கள்
எப்போதும் போகும் ஹாஸ்பிடல் கூட்டி போறேன் என்று சொல்லி வர சொல்லுங்க என்று காரை எடுத்தான்
அந்த ஊரின் வழக்கப்படி ஒரு பெரியவர் உடன் இருந்தால் இடையில் காரை நிறுத்தி எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள்.
வரும்போது பாட்டியிடம் டாக்டர் நம்பர் சொல்லி போன் செய்து செழியனுக்கு ஐ சி யு ரெடி செய்ய சொல்லு என்றான் அதுவரை புரியாத விஷயங்கள் தமிழரசிககு புரிய துவங்கியது.
செழியனின் நிலை கண்ணில் நீர் வர வைத்தது அதை கண்ட மாறன் "அழாதே அவன் உணர்ச்சிவசப்படக் கூடாது கிராண்ட்மா"
என்றான்.
மருத்துவமனை போட்டிக்கோவில் காரை நிறுத்திவிட்டு அவனை தூக்கிக் கொண்டு ஐ சி யுவை நோக்கி ஓடினான் மருத்துவர்கள் அவனை வாங்கி பெட்டில் படுக்க வைத்துக் கொண்டு அவனது நிலைமை தெரியும் என்பதால் அதற்குரிய சிகிச்சையை தொடங்கினர்.
பயப்பட வேண்டாம் அவன் பல்ஸ் ரொம்ப குறையவில்லை சமன்படுத்த ஊசி போட்டு இருக்கிறேன் ஆக்ஸிஜன் செலுத்தி கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அங்கு வந்தனர் சேரமானும் விவேகனும்
"இனிமேல்இந்த விஷயத்தை மறைப்பது நல்லது அல்ல இந்த முறை நெடுமாறன் இருந்தால் பிரச்சனை இல்லை
அதே சமயம் வெளியே எங்காவது மயங்கி விழுந்திருந்தால் நாம் என்ன செய்ய முடியும் சோ நீங்க உங்க குடும்பம் மற்றும் செழியனுக்கும் சொல்லி விடுங்க "என்றார் டாக்டர்
"அவன் தன் நிலைமை புரிந்து நடந்து கொள்வான்" என்றார்
அதுவே சரி என்று பட்டது அனைவருக்கும் அவன் வீடு வரும் வரை காத்திருந்தனர் மெதுவாக சேரமான் சொல்ல ஆரம்பித்தார்
செழியா உனக்கு நீச்சல் குளத்தில் மயங்குது நினைவு இருக்கா?
அப்பொழுது உன் இதயத்தில் சில பிரச்சினைகள் இருப்பதை மருத்துவர் என்னிடம் சொன்னார் ஆனால் அது உனக்கு தெரியக் கூடாது என்று நினைத்தோம்
"ஆனால் அதுவே உன் நிலைமை மோசமாக காரணமாக இருந்து விடக்கூடாது" என்று மெல்ல ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தார் பேரனிடம்.
நான் சிரித்தாலும் அழுதாலும் சீக்கிரமே செத்து விடுவேனா என்ற செழியனின் கேள்வி அனைவரையும் கலங்க வைத்தது
அவர் அவனை அழைத்துக் கொண்டு தன்னறைக்குச் சென்றார்
சில விவரங்களை சொன்னார் பின் வெளியே வந்த செழியன் சிரிப்பு,அழகை மட்டும் அல்ல உணர்வுகளையும் கடக்க பழகினான்
அவனை மடைமாற்றம் செய்ய நினைத்த சேரமான் தனக்கு தெரிந்த அத்தனை பிசினஸ் மந்திர தந்திரங்களையும் லாப நஷ்ட கணக்குகளை எல்லாம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்
எதுவுமே யோசிக்க நேரம் கொடுக்காமல் அவருடனே பயணம் செய்யப் பழக்கினார்.
பிளைட் பயணத்தின் போது டென்ஷன் ஆகாமல் இருக்க தூக்க மாத்திரை பயன்படுத்தி அவனை அமைதியாக தூங்க வைத்தார்.
மூவரில் யாராவது ஒருவர் எப்போதும் அவன் உடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர்
உலகம் முழுவதும் இவன் ப்ராஜெக்ட்டுகள் எடுக்க ஆரம்பித்தான் அண்ணனை தன்னுடன் வைத்துக்கொண்டு என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான்
அதனால் மாறன் தாத்தா அப்பா, தம்பி மூவரின் தொழில்முறை ரகசியங்களையும் தெரிந்து கொண்டு தம்பியுடன் கைகோர்த்து முன்னேற துவங்கினான் .
அனைத்து நாடுகளும் ஆதித்யாவின் பெயரில் கம்பெனிகள் தொடங்க வேண்டும்
அல்லது ஒப்பந்தம் போட்டு பார்ட்னர்ஷிப் உடன் இருக்க வேண்டும் என்று தொடங்கியது பல்கி பெறுகி உலகில் அனைவரும் அறியும் நிலைக்கு வந்து இருக்கிறது
தன் சாவு எப்போது வரும் என்று தெரியாமல் வருந்தி கொள்வதை விட அதற்குள் எத்தனை சாதனைகள் சாதிக்க முடியுமோ முயற்சி பெற்று ஜெயித்திட வேண்டும் என்று நினைத்தான் ஆதித்ய இளஞ்செழியன்