• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் காதலால் என்னை மீட்டுவிடு - 25

Vishakini

Moderator
Staff member

உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 25

அட்சயாவிடம் செழியனின் இளம் வயது பற்றி சொல்லிக் கொண்டிருந்தான் விஜயவர்மன்


அவன் வளர்ச்சியை கண்டு அட்சயாவால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை .

அத்தனை பிரச்சினைகளையும் கடந்து அவன் சாதித்ததை கண்டு அவன் மேல் ஒரு மரியாதையே வந்தது


ஆதித்ய இளஞ்செழியனின் வளர்ச்சி அளப்பெரியது உலகமே அவன் வளர்ச்சியை கண்டு ஆச்சரியப்பட்டது.

அவனைக் கண்டு, அவனிடம் உறவு வளர்த்து கொள்ள பல நிறுவனங்கள் முன் வந்தன

பல பெரிய கம்பெனிகள் நினைத்தன ஆதித்யா கம்பேனியிடம் உறவு வைத்துக் கொண்டால் தன் கம்பெனியின் நிலை அவர்கள் அளவு உயர்ந்து விடும் என்று அதனால் பல போட்டிகள் உருவாகின.


அந்தப் போட்டிகள் செழியனுக்கு டென்ஷனை அதிகப்படுத்தின அவன் சுதந்திரம் பாதிக்கப்பட்டது அதனால அவன் உடல் நிலைகள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருந்தது.

அவனை பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு அனைத்து நிகழ்ச்சிகளும் ஆதித்ய நேடுமாறனும் ஆதித்ய விவேகன் அங்கிலும் சென்று கலந்து கொள்ள ஆரம்பித்தாங்க

பின்னால் இருந்து செழியன் அனைத்து வேலைகளையும் செய்தான் ஆனால் அது மாறன் செய்ததாகவே வெளியே உலகத்திற்கு காட்டப்பட்டது.

ஆதித்ய இளஞ்செழியன் பிசினஸ் மேற்படிப்பதற்காக வெளிநாட்டிற்கு பயணம் என்று செய்தி வெளியிடப்பட்டது
.
அதையும் தாண்டி அவன் சிலர் கண்களில் படும் பொழுது அவனை தன் பக்கம் திசை திருப்ப அனைவரும் முயற்சிப்பதை தடுக்கும் பொருட்டு கோபம் எனும் மிகப் பெரிய திரையைபோட்டுக் கொண்டான்.

தொடர்ந்து பேசினான் விஜய வர்மன்

நான் அவன் வீட்டுக்கு பலமுறை சென்று இருக்கிறேன் என்னிடம் அவன் பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

சில சமயம் நான் உள்ளே போகும் பொழுது எடுத்துச் சென்று விடுவான் நான் கூட கவுரவ குறைச்சல் என்று எண்ணியிருக்கிறேன் என்றான் பாரேன் என்ற விஜய வர்மன்

சில சமயம் அவனை தவிர்ப்பதற்காகவே மாறனை வெளியே வந்து என்னை சந்திக்க சொல்லி இருக்கிறேன்

ஒருமுறை மாறனின் பிறந்தநாளுக்கு அவன் நன்பர்களை எல்லாம் வீட்டுக்கு அழைத்து இருந்தான் நான் வரமாட்டேன் என்று சொன்னதும் அவன் என்னிடம் சண்டைக்கு வந்தான் நானும் கோபத்தில் "உன் தம்பி எனனை மதிக்கவே மாட்டேன் என்கிறான் அங்க நான் எப்படி வர்றது" என்று கேட்டு விட்டேன்

ஆதித்ய நெடுமாறன் என்னிடம் முழு விவரங்களையும் சொன்னான் எனக்கு என்ன சொல்வது எனறு தெரியாமல் அதிர்ச்சியில் திகைத்து நின்றேன்

அவனைப் பார்த்து சிரித்தேன் சில நொடிகளில் கண்டு கொண்டான் உண்மை தெரிந்து விட்டது என்று
"என்ன என்மீது இரக்கம் வருகிறதா? என் மேல இரக்கப்படாதீங்க அது எனக்கு பிடிக்காது "என்று சொல்லிவிட்டு தன்னறையில் சென்று கதவை அடைத்துக் கொண்டான்

அதன் பின்னரும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை எந்த ரியாக்ஷனும் அவன் என்னிடம் காட்டியதும் இல்லை

தாத்தா எனக்கு பிசினஸில் பார்ட்னர்ஷிப் கொடுத்த போது கூட எந்த மறுப்பும் சொன்னதும் இல்லை ஆதரவாக பேசியதும் இல்லை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருப்பான்

ஆனால் அந்த வீட்டிலேயே ரொம்ப வித்தியாசமானவள் அவர்களின் தங்கை வதனப்பிரியா மட்டும் தான், அவள் அந்த வீட்டில் இருந்தாலே வீடு களைகட்டி விடும் அத்தனை குறும்பு அவளிடம் என்று சொல்லும் போதே அவன் முகம் புன்னகையை தத்து எடுத்துக் கொண்டது

இதனை கவனிக்த அட்சயா ம..ம் இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் என்று நக்கல் செய்ய நினைத்தாள் ஆனால் சூழ்நிலையின் பொருட்டு அமைதியாக விஜய் வர்மனை பார்த்தாள்

உண்மைய சொல்லுங்க அவர் கேட்ட விக்ரம் நம்ம விக்ரமா ? என்று கேட்ட பொழுது அவளின் இதயத்துடிப்பு அவளுக்கே கேட்டது

விஜயவர்மன் மெல்ல ஆம் என்று தலை ஆட்டினான் கண்களில் நீர் நிறைந்து அவன் பார்வையில் இருந்த அட்சயாவின் பிம்பம் அலைஅலையாய் தெரிய ஆரம்பித்தது


விக்ரம் மருத்துவ துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன் என்பதும் அவன் இதய சம்பந்தமான ஆராய்ச்சி முடிவுகளை உயர் படிப்பில் ப்ராஜெக்ட் ஆக செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறான் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்

அவன் லட்சியமும் அவன் தொண்டு செய்ய வேண்டும் என்ற முனைப்பும் என்னை அவனை நோக்கி ஈர்த்தது

மாறனிடம் அவனைப் பற்றி பேசினேன் அவன் அவன் தாத்தாவிடம் பேசி நம் தாத்தாவிடம் அழுந்தாலோசித்து நம் தாத்தா விக்ரமை சந்திக்க வேண்டும் என்றார்

நான் அவனை தாத்தாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்

தாத்தா அவனிடம் விவரங்களை சொன்னார் அவன் முதலில் யோசித்தான் பின் அவன் லட்சியத்தை விரைவில் அடைந்து விடலாம் என்று சம்மதித்தான்
அவன் முதல முதலில் என் கூடத்தான் ஜெர்மனி வந்தான் நான் அவனை மாறன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அறிமுகப்படுத்தினேன்

முதலில் இவனை சந்திக்க செழியன் ஒத்துக்கொள்ளவே இல்லை அத்துடன் அவன் இந்தியா திரும்பி விட்டான் என்று தான் நினைத்தேன்

நான் சில பிசினஸ் விஷயமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று

நானும் மாறனும் பிசினஸ் விஷயமாக நியூயார்க் சென்றிருந்த பொழுது அவன் மாறனின் தாத்தா சேரமானை சந்தித்து பேசி இருக்கிறான் அவன் அவனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை நான் பார்க்க வேண்டும் என்று கேட்டிருக்கிறான்

தாத்தா அவனை மறுநாள் நான் தானே கூப்பிடுவதாக சொல்லி அவனை அனுப்பி விட்டு அவனைப் பற்றி எல்லா விஷயங்களையும் விசாரித்து தெரிந்து கொண்டு

எம் எம் மருத்துவமனையிலும் விசாரித்த போது அவனுக்கு ஆராய்ச்சி படிக்க படிப்பு ஆசை இருந்தும் பணவசதி இல்லாத காரணத்தால் ஆராய்ச்சி கட்டுரைகள் ஏற்கப்படாமல் இருப்பதால் அவன் ஆராய்ச்சி படிப்பை முடிக்கவில்லை என்று தெரிந்து இன்று இரவே நாளை காலை உன்னை நான் சந்திக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் சேரமான் தாத்தா

மறுநாள் காலை வந்த விக்ரம் தாத்தாவிடம் தாத்தா நான் இதய செயல்பாட்டின் மாற்றங்கள் அவற்றை சீரமைக்க என்னென்ன செய்ய முடியும் அல்லது அதனை சமன்படுத்த என்ன செய்ய முடியும் என்று பல உயிர்களை காக்க வேண்டும் என்று நினைப்புடன் அந்த கட்டுரையை ஆராய்ச்சி பேப்பரை ரெடி செய்து இருக்கிறேன் அதை யுனிவர்சிட்டியில் சமர்ப்பிக்கவும் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றான்

அவனை வியப்புடன் பார்த்த தாத்தா ஒன்றுமே பேசாமல் செழியனின் அத்தனை ரிப்போர்ட்டுகளையும் எடுத்து அவன் முன்னால் போட்டார் இதையும் உன் ஆராய்ச்சி பக்கத்தில் சேர்த்துக்கொள் ஆனால் அதற்கு பதில் எனக்கு நீ ஒன்று செய்ய வேண்டும் நீ அவனுடனே இருந்து அவனை பார்த்துக் கொள்ள வேண்டும் ஒரு நண்பனாய் அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்


அவனிடம் நான் பேசினால் அவன் ஒத்துக்கொள்வான் அதற்கு முன் நீ ஊருக்கு சென்று உன் வேலைகளை முடித்துவிட்டு வா காத்திருக்கிறேன் என்றார்

"நீ எங்க வரும் பொழுது உனக்கு சம்பளம் எவ்வளவு என்பது நீ செய்ய நினைக்கும் சேவை பணிகள் செய்ய என்னால் முடிந்த உதவி செய்யவும் நான் தயாராக இருக்கிறேன் "என்றார்

அத்துடன் செழியனுக்கு சிகிச்சை கொடுத்து வரும் மருத்துவரை பார்க்கவும் அவருடன் பேசவும் கூட்டிச் சென்றிருக்கிறார் ஆதித்ய சேரமான் தாத்தா

அந்த மருத்துவரும் வயது அதிகமாக விட்டதாலும் தன்னைப் போலவே துடிப்புடன் அர்ப்பணிப்புடன் உள்ள விக்ரமனை பார்த்ததும் பிடித்து விட்டது அவனுக்கு உதவுவதாக சொல்லி அவர் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க உதவினார்

அதன் பின் இந்தியா வந்த விக்ரம் என்னை சந்தித்தான்

நானும் அவனுடன் பேசிக் கொண்டிருந்தேன், நான் இங்கே வேலையை விட வேண்டாம் அங்கு எப்படி இருக்கிறது என்று பார்த்தபின் இங்கு வேலை விடுவதை பற்றி யோசிக்கலாம் என்று அவனை மெடிக்கல் விடுமுறையில் சென்று வா என்றேன்

அவனும் சரி என்று மெல்ல ....மெதுவாக தலையை அசைத்து விட்டு என் முகத்தை பார்த்து இருந்தான்

என்ன? ஏதும் பேச வேண்டுமா? என்றேன் பேச வேண்டும் தான் ஆனால் எப்படி பேசுவது என்று தெரியாமல் கிளம்பி கொண்டிருக்கிறேன் என்றான்

எதைப்பற்றி என்றேன் அவன் மௌனமாய் இருந்தான் மகிழினி பற்றியா என்றேன் அவன் அதிர்ச்சியாய் என் விழியை நோக்கினான்

அவள் தான் என் உயிர் அவள் எங்கு சென்றாலும் என்ன நடந்தாலும் எனக்கு அப்டேஷன் வந்து கொண்டே இருக்கும்
அவள் சுதந்திரத்தில் நான் தலையிட மாட்டேன் ஆனால் அவ சுதந்திரம் என்னவென்று நான் வகுத்து வைத்திருக்கிறேன்

பூக்கள் வளர்க்கும் எஜமான் தன் வீட்டின் பூக்களை தன் மதில் சுவர் வரைபடர் விடுவான் ஆனால் அடுத்த பக்கத்திற்கு போக அனுமதிக்க மாட்டான் அது போல தன்
நானும்

அவளைப் பாதுகாப்பது எனது முதல் கடமை எனவே அவள் யாருடன் பழகுகிறாள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிய எனக்கென்று ஒரு குழுவை வைத்திருக்கிறேன்

அவள் உன்னுடன் பழகுவது எனக்கு தெரியும் நீ அவளுடன் கண்ணியமாக பழகுவதால் உன்னை நான் இதுவரை எதுவும் சொன்னதில்லை

நீ மட்டும் இல்லாமல் உன் நண்பன் ராஜா அவளை என்னை விட பத்திரமாக பார்த்துக் கொள்வான் என்று எனக்கு தெரியும் அவன் உன்னுடன் பேச அவளை அனுமதித்திருக்கிறான் என்றால் அவனிடம் நீ உயர்ந்த மதிப்பை பெற்றிருக்கிறாய் என்று அர்த்தம்

இந்த பயணத்திற்கு பிறகு உன் வாழ்க்கையில் பல திருப்புமுனைகள் வரக்கூடும் திடீரென நீ பணக்காரன் ஆகலாம் பல பெண்கள் உன்னை கடந்து செல்லலாம் அப்பொழுதும் இவள் தான் வேண்டும் என்று நீ முடிவெடுத்தால் அதைப்பற்றி பேசிக்கொள்ளலாம்

என்னுடன் பேசியதையும் நான் உங்கள் காதலை தெரிந்து கொண்டதயோ இப்பொழுது மகிழினி இடம் சொல்ல வேண்டாம் என்று அவனை அனுப்பி வைத்தேன் ஜெர்மனிக்கு

நான் பேசிக்கொண்டு இருந்த பொழுதே கண்களில் இருந்து கண்ணீர் மளமளவெனவடிந்தது வார்த்தைகள் பேச முடியாமல் தடுமாறி குரல் வெளியே வரவில்லை கட்டிலின் கைப்பிடியே கூடுமானவரை அழுத்தி அழுத்திப் பிடித்துக் கொண்டான்














 
Top Bottom