உன் காதலால் என்னை மீட்டுவிடு - 26

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113

உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 26

நான்.... என்று பேசத் தொடங்கும் போதே விஜயவரமனின் கண்கள் கலங்கி நீர் வழிந்தது

நான் அவனை அங்க அனுப்பாமலே இருந்திருக்கலாம் அச்சு என்றான் விஜய வர்மன்

முதலில் அவனிடம் பேசவே மாட்டேன் என்ற செழியன் மெல்ல மெல்ல சில சந்தேகங்களை கேட்கத் தொடங்கினான் பின்னர் விக்ரம் பேசிய விதம் அவனைக் கவர்ந்தது.

மெல்ல மெல்ல அவன் குடும்பம் பற்றி கேட்க ஆரம்பித்தவன் அவர்களுக்கு இதுவும் பொருட்டு அவன் சம்பளத்தை அதிகப்படுத்தினான். அந்த அதிக தொகை அப்படியே அவன் தங்கை தாமரை திருமண செலவுக்கு என்று எடுத்து வைக்க தொடஙகினான் விக்ரம்

ஒருநாள் எதிர்ச்சையாக விக்ரம் வீட்டிற்கு சென்ற செழியன் அங்கே சுவரில் மாட்டப்பட்டிருந்த மகிழினியின் புகைப்படத்தை முதன் முதலில் பார்த்தான் அதுதான் மகிழினியின் முதல் அறிமுகம் செழியனுக்கு

விக்ரமிடம் ஒரு பழக்கம் உண்டு தைரியம் எழுதுவது இரண்டு டைரி எழுதுவான் ஒன்று பர்சனல், மற்றொன்று படிப்பு லட்சியம் பற்றியது அது இரண்டும் அவன் தலையனைக்கு அடியில் எப்பொழுதும் இருக்கும்

அதிசயமாக உள்ளே வந்த செழியனை ஆச்சரியத்துடன் பார்த்தான் விக்ரம்," சார் உடம்புக்கு ஏதும் செய்தா? எதுவும் டிபிக்கல்டா ஃபீல் பண்றீங்களா" என்றான்? செழியன் பார்த்து

கூல் கூல் எனக்கு ஒன்னும் இல்ல ...நான் சும்மா உன்ன பாக்க தான் வந்தேன் .. ஏன் நான் வரக்கூடாதா? என் அண்ணன் மட்டும் வந்து வந்து போகிறார் ,நான் மட்டும் வரக்கூடாதா? என்று கேட்டு நின்ற செழியன் விக்ரமுக்கு புரியவன்

பேசக்கூட யோசிக்கும் செழியன் பொசுசிவ்னஸ் இப்பொழுது தான் வெளிப்படத் தொடங்கியிருக்கிறது, வெளியே எங்கேயாவது போகலாமா? என்னுடன் வருகிறாயா? என்றான் விக்ரமிடம்

விக்ரம் மயங்கி விழாத குறை தான் ...வாசலை வாசலை பார்த்த விக்ரமினை கேள்வியுடன் நோக்கினான் செழியன்

அந்த நேரம் பார்த்து உள்ளே வந்தனர் மாறனும் வர்மனும் செழியனை கண்டு தங்களை கிள்ளி பார்த்துக் கொண்டனர்

என்னடா ஏதும் பிரச்சனையா ? என்று பதறியபடி கேட்டான் அண்ணன் மாறன்

பதவியபடி உள்ளே வந்த மாறன் செழியன் முகத்தினை தடவி பார்த்துக் கொண்டே கேட்டான் ஏதாவது பண்ணுதா ?என்று கேட்ட மாறனை சமாதானப்படுத்தினான் விக்ரம் அவர் என்னை டாக்டராக பார்க்க வரவில்லை ,ஒரு பிரண்டா பாக்க வந்திருக்கிறார் என்றான் அது இன்னும் ஆச்சரியத்தை கொடுத்தது மாறனுக்கு

அவன் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே நண்பர்களை வைத்திருந்தான் அதுவும் அவன் ஸ்டேட்டஸுக்கு சமமான நண்பர்களை மட்டுமே அவன் வைத்திருந்தான்

அதுவும் அவன் பள்ளி படிப்பு வரை மட்டுமே அதன் பின் அவனை நண்பர்களுடன் பழக விட்டதே இல்லை, அவனும் நண்பர்களை தேடி சென்றதே இல்லை, இப்பொழுது புதிதாக நண்பன் என்று சொல்கிறானே என்று செழியன் முகத்தைப் பார்த்தான் மாறன்

இன்று என் ஃப்ரெண்ட் செழியன் கூட ஊர் சுத்த போறேன் என்றான் விக்ரம்

ஓகேடா எப்படியும் நீ இந்தியா வந்து தானே ஆக வேண்டும் மகிழினிய பார்க்க ...அப்போது நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன் என்று வா ...நண்பா நாம் போகலாம் என்று மாறன் கையை பிடித்துக் கொண்டு வாசல் நோக்கி சென்றான் வர்மன்.

வாசல் நோக்கி சென்றவர்மனின் கையைப் பிடித்து நிறுத்தினான் செழியன்

இதுவரை வர்மனை அவன் தொட்டு பேசியதில்லை இத்தனை வருடங்களாய்..

செழியனை கண்ட மாறன் எத்தனை அதிர்ச்சியை இன்று எனக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறாய் முதலில் சொல்லிவிடு ஹாட் டாக்டர் என் கூடவே இரு எனக்கு மயக்கம் வருவது போல் உள்ளது என்று மயங்கினான் இல்லை இல்லை மயங்குவது போல் நடித்தான் மாறன்


அவனை முறைத்தான் செழியன் பின் நீங்க ப்ரோக்ராம் எதோ போட்டு வச்சிருக்கீங்க போல போயிட்டு வாங்க நான் கிளம்ப கிளம்புறேன் என்று தயாரான செழியனை தடுத்து நிறுத்தினான் விக்ரம் அவர்கள் இரண்டு பேரும் தனி என்ன தனியா விட்டுருவாங்க ஒரே பைக்கிலேயே கிளம்பி வாருவாஙாக நான் மட்டும் தனியா தான் போவேன் இன்று என்னோட வாங்களேன் என்றான் விக்ரம்

அன்று முதல் நால்வரும் நோயாளி மருத்துவர் என்ற வரைமுறையை விட்டு நண்பர்களாக ஊர் சுற்ற ஆரம்பித்தனர் முகங்களை மூடிக்கொண்டு ஊர் சுற்றுவதில் அத்தனை மகிழ்ச்சி

சில சமயங்கள் வர்மன் இருந்தால் வர்மனோடு இல்லை என்றால் மற்ற மூவரும் என்று தன் நேரங்களை ஒன்றாக செலவழிக்க துவங்கினர்

அடுத்து ஒரு நான்கு மாதங்கள் கழித்து விக்கிரமை பார்க்க சென்றிருந்தான் வர்மன்

அவனைப் பார்த்து வரவேற்று வெயிட் செய்யுங்க நான் குளித்துக் கொண்டு வந்து விடுகிறேன் என்று பாத்ரூமுக்குள் நுழைந்தான் விக்ரம்

அப்பொழுது அவனுக்கு ஒரு கடிதமும் பார்சலும் வந்தது அதை எடுத்துப் பார்த்தான் மகிழினி கேர் ஆஃப் விஜயவர்மன் என்று இருந்தது அதை பார்த்து சிரித்துக் கொண்டே ஹால் நோக்கி வந்தான் வர்மன்.

அவன் கையில் உள்ள கடிதத்தை பார்த்து உடன் புரிந்துகொண்ட விக்ரம் நாளை தானே வரும் இன்றே வந்துவிட்டதா? என்று அந்த கடிதத்தை வாங்க வந்தான். அவனை தடுத்த வர்மன் நான் இதை டேபிள் மேல் வைத்து விடுகிறேன் நான் இது உன் கையில் கொடுத்தால் என்னை அண்ணன் என்று சொல்ல மாட்டாங்க வேற பெயர் சொல்லுவாங்க என்று டேபிளில் வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தான்.

நாளைக்கு உன்னோட பிறந்தநாளா? என்றான் விக்ரமிடம்.

எப்படி கண்டுபிடிச்சீங்க என்றான் விக்ரம் வர்மனிடம்

என் தங்கை அனுப்பிய பார்சல் காட்டி கொடுத்து விட்டது அவள் அனுப்பிய பார்சலில் உள்ள சிம்பல் அந்த நாளுக்கு சொந்தமானதாக இருக்கும்,

உனக்கு வந்த பார்சலில் இரண்டு பலூன்கள் ஒரு கேக்கும் உள்ளது பார் என்றான்

எடுத்துப் பார்த்தான் விக்ரம் சிரித்துக்கொண்டான் சிறு பிள்ளை போல் மகிழினி செய்வதை நினைத்து

அதுமட்டுமல்ல உதாரணமாக பிறந்த நாள் வாழ்த்து என்றால் பலூன்களுடன் கேக்கும்

திருமணம் என்றால் இரண்டு ரோஜாக்களும் திருமண நாள் என்றால் எத்தனாவது திருமண நாளோ அத்தனை ரோஜாக்களும் குழந்தைகளின் பிறந்த நாள் என்றால் பலூன்களுடன் சாக்லேட் என்று சொல்லிக் கொண்டே போகலாம் என்றான் விஜய் வர்மன்

அடுத்த நாள் விக்ரமுக்கு தெரியாமல் அவன் பிறந்தநாளை கொண்டாட திட்டம் போட்டனர் மூவரும் சேர்ந்து ...அதேபோல தனியார் கப்பலில் கடலின் நடுவே சிறப்பாய்.. அவன் சமிப காலமாக அப்பா மரணத்திற்கு பின் அவன் கேக வெட்டுவது இல்லை என்று தெரிந்து அவனுக்கு அவன் உயர கேக்கை ஆர்டர் செய்து இருந்தனர் அதை பார்த்த பொழுது அவன் கண்கள் நீரால் நிரம்பியிருந்தன. வார்த்தைகள் தொண்டை குழியை விட்டு வெளியே வரவில்லை தொண்டை குழிக்குள் சிக்கிக் கொண்டன அது மட்டும் இல்லாமல் அவனுக்கு பிடித்த உணவு வகைகள் எல்லாம் டேபிளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அந்த கொண்டாட்டத்தை முடித்த பின்பு அவன் மிகவும் ஆசைப்பட்ட நயாகரா நீர்வீழ்ச்சி முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

அவன் அம்மாவிடமும் தங்கையிடமும் வீடியோக்காலில் பேசி அவனை மகிழ்வித்து மகிந்தனர்

மகிழினி இடம் இருந்து போன் வந்த போது மட்டும் நாகரிகம் கருதி விலகி நின்றனர்

மற்றபடி முந்தைய நாள் இரவு நள்ளிரவு 12 மணி முதல் அவன் பிறந்த நாளன்று இரவு 12 மணி வரை அவன் உடனே இருந்தனர் அவன் ரூம்பிலேயே அனைவரும் தங்கி கொண்டனர் அந்த நாள் நாலு பேருக்குமே மறக்க முடியாத நாளாக அமைந்தது

அன்று இரவு சேரமான் விக்ரமுக்கு வாழ்த்து கூறிக்கொண்டு நாளை தன்னை பார்க்க வரும்படி கூறினார் சரி என்று கூறி.. நாளை வருவதாக சொல்லி ஃபோனை கட் செய்தான் விக்ரம்

மறுநாள் காலை நால்வருடன் தாத்தாவும் சேர்ந்து அமர்ந்து கொண்டு பேசத் தொடங்கினார் சேரமான் தாத்தா,

நீ செழியன் செழியனுக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டரிடம் என்ன சொன்னாய் செழியன் தொந்தரவே இல்லாமல் வாழ மாற்று இதய அறுவை சிகிச்சை சிறந்த வழி என்று சொன்னயா? அது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு ஒரு மருத்துவனாய் பதில் சொல்ல துவங்கினான் விக்ரம்

செழியன் உடலில் இதயம் தவிர அனைத்து உறுப்புகள் சுரப்பிகள் ரத்த நளங்கள் அனைத்தும் மிக நன்றாகவே உள்ளது எனவே இதயம் மட்டும் கிடைத்து விட்டால் அதனை இவனுக்கு பொருத்தினால் இவர் வாழ்வு பல நாட்கள் என்று இருப்பது
பல வருடங்கள் என்று மாறிவிட சாத்தியக்கூறுகள் உள்ளன எனவே நான் இதயம் வேண்டும் என்று பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்றான்,

மற்றவர் இதயத்தை செழியனுக்கு வைத்தால் இதய சொந்தக்காரரின் குணங்கள் இவனுக்கு வர சாத்தியம் இருக்கிறதா? என்றார் தாத்தா

அதற்கு விக்ரம் ரொம்ப படம், சீரியல்ஸ் எல்லாம் பார்ப்பீங்களோ! என்றான்

ஏன் என்று கேட்டதற்கு எந்த ஒரு உறுப்பு மனிதன் உடலில் இருந்து பிரித்து எடுத்து விட்டால் அது எந்த உணர்ச்சியும் இல்லாத ஒன்று கிட்டத்தட்ட ஒரு மிசினின் பாகம் போன்றது அது புதிதாக யாரிடம் பொருத்தப்படுகிறதோ அவர் மூளை சொல்வதை தான் கேட்கும் என்றான் விக்ரம்

கிட்னி, இதயம், கண் எல்லாம் ...மூளையை தவிர.. மூளை மட்டும் ஒருவரின் நினைவுகளைக் உள்ளே பதிய வைத்து கொண்டே இருக்கும் அதனை முழுமையாக நம்மால் நீக்க முடியாது

சோ அதைப்பற்றி ஆராய்ச்சி நடந்து கொண்டு தான் இருக்கிறது
மூளையில் குறைபாடு ஏற்பட்டால் அதன் செல்களின் வளர்ச்சியை அதிகரித்தோ அல்லது செல்களை நீக்கியோ அதை சரி செய்ய முடியுமே தவிர அதை மாற்ற முடியாது

அதை மாற்றினால் என்ன நடக்கும் என்று ஆராய்ச்சியும் உலகில் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது

உதாரணமாக என் மூளையை செழியனுக்கு பொருத்தினால் அவர் சிந்தனை முழுவதும் என் சிந்தனையாகவே இருக்கும் என் எண்ணங்கள் என் நினைவுகள் என்று என்னுடையது மட்டுமே இருக்கும் அதாவது மூளை என்னுடையதாகவும் உடல் செழியன் உடையதாகவும் இருக்கும் இது அதிக குழப்பத்தை ஏற்படும்

அது ஒருவரின் வாழ்க்கை முறையே மாற்றி விடும் என்பதால் இந்த ஆராய்ச்சியை நடத்த இப்போதைக்கு எந்த நாடுகளிலும் அனுமதி இல்லை

இதயமாற்று அறுவை சிகிச்சை என்பது ஒருவரின் மூளை செயல் இழந்துவிட்டால் அவரின் குடும்ப நபர்கள் அனுமதியோடு அவர் இறந்த பின் அவரின் இதயத்தை எடுத்து பொருத்தும் முறையே இதய மாற்றி அறுவை சிகிச்சை தாத்தா என்றான் விக்ரம்

அவன் இறந்து விட்டால் அவன் இதைத் துடிப்பும் நின்று விடும் அல்லவா எப்படி மாற்ற முடியும் என்றார் தாத்தா

அவர் இதயத்துடிப்பு நின்ற பொழுதும் வெண்டிலேட்டர் உதவியுடன் செயல்பட வைத்து அந்த இதயத்தை மாற்ற முடியும் அதற்கு நோயாளிகளின் ரத்தவகை உடல் அளவு மற்றும் சில மருத்துவ சோதனைகளில் இறந்தவரின் ரத்த பிரிவும் உடல் அளவும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றான்

ம் ...என்று பெருமூச்சு விட்டுக் கொண்டார் தாத்தா

என்ன தாத்தா ரொம்ப யோசிக்கிறீங்க நாம ஒன்னும் நல்லா இருக்குறவங்களோட இதயத்தை எடுக்க போறதெல்லாம் இல்ல அவர் பிழைக்க மாட்டார், அவர் உடலை பூமிக்கு அல்லது நெருப்புக்கு அனுப்புவதற்கு முன்னால் அதை நாம் பயன்படுத்த போகிறோம் அவ்வளவுதான் கொஞ்சம் பிராக்டிக்கலா யோசிங்க தாத்தா என்றான் விக்ரம் டாக்டராக...










 

Author: Vishakini
Article Title: உன் காதலால் என்னை மீட்டுவிடு - 26
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.