உன் காதலால் என்னை மீட்டுவிடு - 28

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 28

தன் காதல் கதையை செழியன் இடம் சொல்லிக் கொண்டிருந்தான் விக்ரம்

அவளை மீண்டும் சந்தித்தது இரண்டு மாதம் கழித்து தான் அவளை பார்த்தேன் அதுவும் எனது மருத்துவமனையில் வேறு யாரையும் ஸ்ட்ரெச்சர் தள்ளிக் கொண்டு வந்து கொண்டிருந்தாள் உடன் அவள் ஆபீஸ் யூனிபார்ம் போட்ட இரண்டு பேரும் அவளுக்கு உதவி கொண்டிருந்தனர் பின்னாலே அட்சயாவும் வந்து கொண்டிருந்தாள் இதனை சிசிடிவி கேமராவில் பார்த்தேன்

அதைப் பார்த்தவுடன் வெளியே வந்தேன் அங்கு அட்சயா ரிசப்ஷனில் நின்று கொண்டு கேண்டினை பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்

நான் அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் அதற்குள் அவளே என்னை நோக்கி ஓடி வந்தாள் அண்ணா உடனே வந்து மகிழினியை பாருங்க என்றாள் நான் சற்று குழம்பித்தான் போனேன் உள்ளே பேஷன்ட் இவள் ஏன் மதினிய பார்க்க சொல்கிறாள் என்று

தூரத்தில் இருந்தே மகிழ்ந்தியை பார்த்தேன் அவளுக்கு காயம் பட்ட எந்த அடையாளமும் இல்லை பின் ஏன் இவள் அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்கிறாள் என்று யோசித்தேன்

அதற்குள் ராஜா வந்தான் என்ன இங்க என்றான் அட்சய விடும் ..போய் மகிழினியை பாருங்கள் என்றாள் அவன் கடகடவென்று ஓட ஆரம்பித்தான் மகிழினியை நோக்கி

நானும் அவன் பின்னால் ஓடினேன் அவன் மகிழினியின் பின்புறம் சென்று
மகிழ்மா என்றான்

அதுதான் தாமதம் அவனை நோக்கி வர முயற்சி செய்தாள் வர முடியவில்லை மெல்ல மெல்ல அவள் கண்களின் கருவிழி மேல்நோக்கி சென்றது கால்கள் வலு இழந்தன துவண்டு அவள் கீழே சரியா ஆரம்பித்தாள் அவளை என் கையில் தாங்கிக் கொண்டேன் அவளை தூக்கிக்கொண்டு டாக்டர் ராஜா என்று போடப்ப்படட அறைக்குள் சென்று அவளை நோயாளி பரிசோதிக்கும் பெஞ்சில் கிடத்தினேன்

அவன் அதற்குள் ஒரு ஊசியை எடுத்து மருந்தை ஏற்றிக் கொண்டிருந்தான்

அவன் மகிழினி அருகில் வந்து அட்சயாவை வா என்றான் அழுத்தமாக அவளும் பயந்து கொண்டு அவன் ஊசி போட எதுவாக மகிழினியின் உடையை தளர்த்தி விட்டாள்

குழப்பத்தோடு நிற்பதை பார்த்து கொஞ்சம் இரு மச்சான் நான் வெளியே சென்று என்ன ஏது என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்று அந்த அடிப்பட்ட மனிதனை காணச் சென்றான் ராஜா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரின்
உடன் வந்தவரிடம் விசாரித்ததில் அந்த நபர் இவர் ஆஃபீஸில் கட்டட வேலை மேற்பார்வை பார்க்கும் பொழுது பேலன்ஸ் இல்லாமல் தவறு கீழே விழுந்து விட்டார் தலையில் அடிபட்டுவிட்டது அவரை ரத்த வெள்ளத்தில் பார்த்த மகிழினி மயங்கி கீழே விழுந்தாள் அவள் மயங்கி விழுந்ததை கண்ட அட்சயா தன் கையில் எப்பொழுதுமே வைத்திருக்கும் முதலுதவி மாத்திரையை ராஜா சொன்னது போல் தண்ணீரில் கலந்து கொடுத்தாள்

அடுத்த ஐந்து நிமிடத்தில் கண் விழித்த தமிழினி அந்த நபரை பற்றி விசாரித்தாள் அந்த நபர் ஆம்புலன்ஸ்காக வெயிட் பண்ணிக் கொண்டிருப்பதை கண்டு கோபம் கொண்டு அங்கே சென்று காரை எடுத்துக்கொண்டு அவரையும் அவரோடு இரண்டு பேரையும் ஏற்றிக் கொண்டுகிளம்பினாள் எம் எம் மருத்துவமனை நோக்கி வேகமாக வண்டியை ஓட்டினாள் பின்னால் திரும்பி அவள் அவரை பார்க்கவே இல்லை மருத்துவமனை வந்த பிறகுதான் அவள் நிம்மதி அடைந்தாள்

அதே சமயம் கேட்ட ஆம்புலன்ஸ் சத்தத்தில் அவளுக்கு பழைய தேவையில்லாத நினைவுகள் எல்லாம் வந்து மயங்கி சரிந்தாள் அவளை தான் விக்ரமா விக்ரம் தூக்கிக் கொண்டு வந்தான்

அதேசமயம் உள்ளே சென்று அந்த நபரை பார்த்த ராஜா அவர் நலமாக இருப்பதை அறிந்து அவரிடம் சேப்டி ஹெல்மெட் போடவில்லையா என்று கேட்டு அவரை திட்டி விட்டு அவன் அறைக்கு வந்தான்

வரும்போது உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையாடி என்று குரலை உயர்த்தி பேசியபடி வந்தான் உள்ளே விக்ரம் இருப்பதை பார்த்து அமைதியானான்

அவளை நான் வீட்டில் விட்டு விடுகிறேன் நீ உன் ஸ்டாப்ஸுடன் கிளம்பு பயப்படும்படி ஒன்றும் இல்லை பில்லை ஆபீஸ்க்கு அனுப்பி வைக்கிறேன் என்றான் எங்கோ பார்த்தபடி

எங்கும் நகராமல் மகிழினியையே பார்த்துக் கொண்டிருந்தாள் அதனை கவனித்த ராஜா நான் பார்த்துக் கொள்கிறேன் நீ கிளம்பு என்றால் அழுத்தமாக

அவள் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே கிளம்பினாள்

அவள் கிளம்பியதை உறுதி செய்த பின் ராஜாவின் அருகே வந்த விக்ரம் என்னடா மகிழினிக்கு என்றான் விக்ரம்

ஒன்றுமே இல்லைடா இவள் இவங்க அப்பா அம்மா சாலை விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கலந்ததை பார்த்த பொழுது மகிழ்ச்சியில் முதன் முதலில் இவளுக்கு வலிப்பு வந்தது

அந்த வழியே வந்து கொண்டிருந்த என் அப்பாவும் அம்மாவும் இவளை பார்த்து இவள் அருகில் ஓடி வந்தனர் இவள் தந்தையும் தாயும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து ஆம்புலன்ஸுக்கு சொல்லிவிட்டு இவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்

அங்கு அவளுக்கு மருத்துவம் பார்த்து அவளை அனுப்பி விட்டனர் சிறிது காலம் தூக்கம் வராமல் ஒரே திசையை பார்த்துக் கொண்டிருப்பாள்சில சமயம் ஓவென்று அழுவாள் அதிக டிப்ரஷன் ஆனால் மயங்கி விடுவாள்

சிடி ஸ்கேன் எக்ஸ்ரே எல்லாம் எடுத்து முடிந்தாயிற்று எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று மட்டும் தான் ரிப்போர்ட் வந்தது

கடைசியாக மனநல மருத்துவரை சென்று பார்த்தோம் அவர் அந்த அதிர்ச்சியில் இருந்து இவள் வெளிவந்தால் மட்டுமே இவளால் இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர முடியும் என்றார்

அத்துடன் கூடுமானவரை அவளை தனியே விட வேண்டாம் என்று என்றும் இவளின் மன அழுத்தத்தை சரி செய்ய மாத்திரைகளையும் கொடுத்து அனுப்பினார் இவள் யாருடனாவது மட்டுமே வெளியே செல்வாள் தனியாக இவளை அனுப்பியதே இல்லை எங்கள் எல்லோரிடமும் இவளுடைய மாத்திரைகள் இருக்கும் அதை சாப்பிட்டு கொஞ்சம் தூங்கி எழுந்தவுடன் நார்மல் ஆக ஆகி வடுவாள் என்று வருத்தத்துடன் சொன்னான் ராஜா

இதற்கு என்னதான் முடிவு என்றான் விக்ரம்

அவள் மனநிலை மாற வேண்டும் அவள் அந்த நிகழ்வை மறக்க வேண்டும் அதே நேரம் ரத்தத்தை பார்த்தால் கூட அவளுக்கு அந்த நினைவு வரக்கூடாது என்ன செய்வது என்று தெரியவில்லை என்றான் ராஜா

அடுத்த கால் மணி நேரத்தில் அவளிடம் மெல்ல அசைவுகள் தெரிந்தன அவள் அருகில் வந்த விக்ரம் அவள் கன்னத்தை தட்டி அர் யூ ஓகே என்றான்


அவள் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே ஓகே என்றாள் அவள் கண் விழிகள் அறையை சுற்றிப் பார்த்தன ராஜாவை தேடுகிறான் என்பதை புரிந்து கொண்டு ராஜா என்றான் விக்ரம்

வீட்டுக்கு போலாமா பாப்பா? என்று கேட்டான் அவளோ அட்சயா எங்க அண்ணா என்றாள்

அவளை உன் ஸ்டாப்ஸ் உடன் ஆபீஸ்க்கு அனுப்பி இருக்கிறேன் ஈவினிங் அவள வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறேன் வந்து விடுவாள் என்றான்


தனக்கு பெர்மிஷன் சொல்லிக்கொண்டு அவளை கூட்டிக்கொண்டு அட்சயா பேலஸ் வந்தடைந்தான் ராஜா

அவனுக்கு முன் வந்து நின்றிருந்தாள் அட்சயா சச்சிமாவிடம் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தாள்

அவனுக்கு ஏற்கனவே தெரியும் அவள் இங்கு வந்திருப்பாள் என்று என்ன சொன்னாலும் திருந்தவே மாட்டா என்று அவனும் சமையல் அறை நோக்கி வந்தான் சச்சிம்மாவிடம் பேசிவிட்டு


மீண்டும் மருத்துவமனை வந்த ராஜாவிடம் அவளை பற்றிய பல கேள்விகளை கேட்டு தெரிந்து கொண்டான் விக்ரம்

அதுமட்டுமில்லாமல் அவள் எந்த மனநல டாக்டரை பார்க்கிறாள் என்பதையும் தெரிந்து கொண்டு அவரை சந்திக்க தயாரானான் விக்ரம்
 

Author: நிதனிபிரபு
Article Title: உன் காதலால் என்னை மீட்டுவிடு - 28
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
ஓ இது தான் அவ ட்ரீட்மென்ட் எடுக்க காரணமா?????
ஏங்க ரைட்டர்.....ரத்த வெள்ளத்தில் பார்த்தா மகிழ்ச்சியில் ஆ?????
கொஞ்சம்.பிழை இல்லாம எழுதுங்க