• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் காதலால் என்னை மீட்டுவிடு - 29

Vishakini

Moderator
Staff member

உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 29

மகிழினியை அந்த நிலையில பார்த்த பின் உடனே ஏனோ தெரியவில்லை இவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது விக்ரமிற்கு

அவனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் மட்டுமல்லாமல் மனநல சம்பந்தப்பட்ட அவனுக்கு தெரிந்த அனைத்து மருத்துவர்களையும் சந்தித்து அவர்களிடம் இவனுக்கு தேவையான விளக்கங்களை பெற்றுக் கொண்டான்

இதில் முடிவாக அவனுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான் அன்பு மட்டுமே அவளை சரி செய்யும் ஆயுதம் என்று தெரிந்து கொண்டான்

அவன் ஒரு நாள் ராஜாவிடம் வந்து நான் உன்னிடமும் விஜயவர்மன் சாரிடமும் பேச வேண்டும் மகிழினியை பற்றி என்றான்

முதல் யோசித்தாலும் விக்ரம் பற்றி தெரியும் அதனால் ராஜா நான் விஜய வர்மனை பார்க்க அந்த அலுவலகம் வரமாட்டேன் என்ன வேண்டுமோ நீ அவரிடம் சென்று கேட்டுக்கொள்க்கொள்

வேண்டுமென்றால் அவனோடு பேச உனக்கு நேரம் வாங்கித் தருகிறேன் என்றான்


அவனுக்கும் அதுதானே வேண்டும்
ஒரு அரை மணி நேரத்தில் வந்த ராஜா விக்ரம் உன்னை விஜயவர்மன் சார் வீட்டில் இன்று மாலை 6 மணிக்கு சந்திப்பதாக சொல்லி இருக்கிறார் உனக்கு நேரம் இருந்தால் அங்கு சென்று பார் பாஸ்கர வர்மன் தாத்தாவும் வந்திருப்பதாக கேள்விப்பட்டேன்.

நீயும் வந்தால் நன்றாக இருக்கும் ராஜா தாத்தா இருப்பதால் சில விஷயங்களை பேச வேண்டியிருக்கிறது அது மட்டும் இல்லாமல்

அவர்கள் அலுவலகத்தில் உள்ளன அனைத்து ஊழியர்களுக்கும் சில மருத்துவ வசதிகள் செய்ய வேண்டியது உள்ளது என்றான் விக்ரம்

அவனை குழப்பத்துடன் பார்த்தான் ராஜா பின் அவரை அழைத்துக்கொண்டு தன்னரைக்கு சென்று சில விஷயங்களை அவனிடம் பகிர்ந்து கொண்டான் பின் அவனும் ஒத்துக்கொண்டான்

இருவரும் மகிழினி பேலஸ் நோக்கி சென்றனர் அங்கு தாத்தாவுடன் பேத்தியும் பேரனும் பேசிக் கொண்டிருந்தன அவர்கள் சத்தம் அதிகமாக கேட்டது அவர்களுக்கு காபியை கொண்டு வந்து கொடுத்தாள் அட்சயா


அங்கு வந்து வருகின்ற இருவரையும் யோசனையாய் பார்த்தாள அட்சயா வர்மன் இருக்கும் இடத்தில் ராஜா வருவதில்லை
அதேபோல ராஜா இருக்கும் இடத்தில் விஜயவருமன் வருவதில்லை

அவர்களில் இருக்கும் பிரச்சனை அட்சயாவுக்கு நன்றாகவே தெரியும் அதனால் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை

பாஸ்கர வர்மன் தாத்தா இவர்கள் இருவரையும் பார்த்து வாங்க எப்படி இருக்கீங்க தம்பி ?நல்லா இருக்கீங்களா ? உட்காருங்கள் என்று சொல்லிவிட்டு அட்சயா சச்சிமாவை வர சொல்லு என்றார்

இங்கேயே பேசலாமா? அல்லது உள்ளே செல்லலாமா? என்றார் தாத்தா விக்ரமைய் பார்த்து
எங்குனாலும் பரவாயில்லை ஆனால் நான் பேச வந்தது பேசணும் என்றான் அவன் ஆழமான அழுத்தமான வார்த்தைகள் பாஸ்கர வர்மனை நிமிர்ந்து பார்க்க வைத்தது

விக்ரம் சில நொடிகள் யோசித்து விட்டு சுற்றி சுற்றி பார்த்தான்

பின் மெதுவாக விஜயவர்மன் மற்றும் பாஸ்கர்வர்மனை நோக்கி இத்தனை வசதிகள் செய்து கொடுக்கும் நீங்கள் ஏன் தாத்தா அங்கு வேலை செய்யும் நபர்களுக்கு முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை மையம் அமைக்காமல் இருக்கிறீர்கள் என்றான்

இந்த கம்பெனி தொடங்கும் போது எல்லாம் இருந்தது விக்ரம்

ஆனால் என் பேத்தியே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது அங்கே வரும் ஆம்புலன்ஸ் சத்தம், ரத்தம் போன்ற வற்றை அன்றாட ம் என் பேத்தி பார்க்க வேண்டியது வரும் அது அந்த நிகழ்வுகளை ஞாபகபடுத்தும் அவள் மனம் அசைபோடும் என்பதால் என்பதால் தான் அலுவலகத்தின் உள் எந்த ஒரு ம மருத்துவமனை சம்பந்தப்பட்ட எந்த ஒன்றும் வைத்திருப்பதில்லை என்ற தாத்தா.

இதைக் கேட்ட விக்ரம் கலகலவென சிரிக்க ஆரம்பித்தான்

சார் நான் ஆப்ரேஷன் பண்ற டாக்டர் ஒரு பிரச்சனை இருந்தால் அந்த இடத்தில அதை கிளியர் பண்ண தான் யோசிப்பேனே தவிர

அந்த இடத்தில் தொடாமலே எப்படி சரி செய்வது என்று யோசிக்க மாட்டேன் என்றான்

இந்த வார்த்தைகள் தாத்தாவுக்கு ஏதோ புரிவது போல் இருந்தன சரி தம்பி நான் கொஞ்சம் என் வீட்டில் உள்ள ஆபீஸ் ரூம் வர போக வேண்டியது இருக்குது நீ என் கூட வருகிறாயா? அப்படியே பேசிக்கிட்டே போகலாம் என்று நடக்க ஆரம்பித்தார் அவனும் தாத்தா உடனே நடக்க ஆரம்பித்தான்

இங்கே மகிழினியின் ஒருபுறமும் ஒருபுறமும் விஜய வர்மனும் மறுபுறம் ராஜாவும் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்காமல் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு இருந்தனர்

அது எப்படிங்க ரெண்டு பேரும் என் விஷயமனா மட்டும் ரெண்டு பேரும் ஒண்ணா வந்துடுறீங்க என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் மகிழினி.

உனக்காக மட்டும் தான் பாப்பா எல்லாத்தையும் விட்டு கொடுத்துட்டு இருக்கேன் இல்லன்னா என் அம்மாவை அப்பவே தூக்கிட்டு போயிட மாட்டேன் ஏன்றான் ராஜா

ஆமா ஆமா தூக்கிட்டு போயிடுவாரு நாங்க விட்டுருவோம் என்றான் விஜய வர்மன்

ஆரம்பிச்சிட்டீங்களா டா என்றபடி அங்கு வந்தார் சரஸ்வதி ஏன்டா அப்பொழுது தான் விவரம் தெரியாம சண்டை போட்டுக்கிட்டீங்கனு நினைச்சேன்

இப்ப இவ்வளவு வளர்ந்து ஒவ்வொருவரும் பெரிய பதவில இருக்கீங்க ஆனாலும் சண்டை போடுறீங்க

உங்களை என்னன்னு சொல்றது என்றாள் பலகாரங்களை கொண்டு வந்து அவர்கள் முன்வைத்து சாப்பிடுங்க என்றார்

அவருடனே வந்த அட்சயா அவர்களுக்கு தனித்தனி தட்டில் எடுத்து வைக்க போக அட்சயா எடுக்காதம்மா அப்படியே சாப்பிடட்டும் அவங்க என்றார் சரஸ்வதி

இருவருப்பே எதையுமே எடுக்காமல் இருக்க உங்கள திருத்தவே முடியாது டா என்று ஆளுக்கு ஒன்று என்று ஊட்ட ஆரம்பித்தார் சரஸ்வதி

சரிடா தம்பி மேல கோவம் சரி அதுக்கப்புறம் என்ன அட்சயாபிள்ளை கிட்ட பேச மாட்டேங்குற என்றார் சரஸ்வதி ராஜாவை பார்த்து

அவளைப் பார்த்துக் கொண்டே சொன்னான் அவள் எப்போதுமே எனக்கு சப்போர்ட் பண்றது இல்ல சாருக்கு தானே சப்போர்ட் பண்றா அப்ப சாரோடவே இருக்கட்டும் என்றான் ராஜா

அதற்குள் வீட்டுக்குள் சென்ற தாத்தாவும் விக்ரமும் வந்தார்கள்

தாத்தா உடனே அறிவித்தார் தம்பி நம்ம ஆபீஸில் மருத்துவமனை, ஒன்றும் அவசர சிகிச்சைக்காக இரண்டு டாக்டரும் சில நர்சுகளும் எப்பொழுதும் இருக்கும் படி பார்த்துக்கொள் என்றார்
அத்துடன் ஒரு ஆம்புலன்ஸ் வசதியும் எப்பொழுதும் வேண்டும் என்றார்

அங்கு முதலுதவிக்கு ஒரு அறையும் காயங்களை சரி செய்யும் வகையில் சில வகை மருந்துகளும் வைக்க ஒரு அறையும் ஏற்பாடு செய் என்றார்

அத்துடன் 5 பெட் மற்றும் அதில் அவர்களுக்கு மருத்துவம் செய்ய சகல வசதிகளும் ஏற்பாடு செய் என்றார்

தாத்தா சொல்ல சொல்ல அனைவர் பார்வையும் விக்ரமும் மேல் திரும்பியது

அவன் எந்தவித அலட்டாலும் இன்றி தேங்க் யூ தாத்தா என்றான் அவன் போகும்போது சார் என்றும் வரும் பொழுதும் தாத்தா என்று சொல்வதை மகிழினி கவனித்தாள்

என்ன தாத்தா டாக்டர் விக்ரமும் உங்கள் பேரன் பட்டியலில் ஐக்கியமாகிவிட்டாரோ என்றாள் நக்கலாக.

அவளின் உரிமையான நக்கலை ரசித்துக்கொண்டாலும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் விக்ரம்

நான் சொல்றது நாளையிலிருந்து செயல்பட ஆரம்பிக்கணும் தம்பி என்றார் சரி தாத்தா ஆனா எனக்கு ஒரே ஒரு டவுட் என்றான் விஜய வர்மன்

எனக்கு தெரியும் தம்பி நீ பயப்படாத அவள் சரியாக வேண்டுமென்றால் சில துணிச்சலான முடிவுகள் எடுத்தே ஆக வேண்டும் என்றார் தாத்தா

சரஸ்வதி அம்மாவும் யோசித்துக் கொண்டுதான் இருந்தார் தம்பி முள்ளை முள்ளால் எடுக்கும் முயற்சி தானே என்றார்

நானும் எத்தனை முறையோ பாப்பாவிடம் சொல்லி இருக்கிறேன் பயப்படாதே அந்த விஷயத்தை நீ மறக்க நினைக்க கூடாது அதை கடக்க பழக வேண்டும் என்று

என்னவோ இந்த ஒரு விஷயத்துல மட்டும் தாத்தாவும் பேரனும் என் பேச்சை கேட்கிறதே இல்லை
அவளை மட்டும் அவ்வளவு பாதுகாப்பா வைக்க தான் நினைக்கிறாங்க அது எத்தனை காலம் செல்லுபடி ஆகும் என்றார் சரஸ்வதி கவலையாக.

சரஸ்வதி உனக்கு நல்லாவே தெரியும் நீ சொல்றத நாங்க என்னைக்குமே மீறுவதில்லை ஆனால் இதற்கு எதற்கு யோசித்தோம் என்றால் அவளுக்கு ஏதாவது ஒன்னுனா நம்ம யாராலும் தாங்க முடியாது

ஆனால் அதே விஷயத்தை தம்பியும் சொல்லும் போது கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன் என்றார் தாத்தா பாஸ்கர வர்மன்

அதுமட்டுமில்லாம 24 மணி நேரமும் ஒன்று விக்ரமோ அல்லது ராஜாவோ உடன் இருப்பார்கள் அலுவலகத்திலும்

நான் எம் எம் ஹாஸ்பிடல் பேசி விட்டேன் என்றார்
அண்ணா சூப்பர் அண்ணா என்று சொல்லிக் கொண்டே உங்களைப் பார்க்க அவ்வளவு தூரம் வரவே வேண்டாம் நீங்க இங்கேயே இருப்பீங்க என்றாள் அட்சயா

அங்கே ஏதாவது ஆபரேஷன் என்றாலோ முக்கியமான வேலைகள் என்றாலும் அங்கு போய தானே பாப்பா ஆகணும் என்றான் விக்ரம்.

அது வேற அண்ணா ஆனா கூடுமான அளவு நீங்க எங்க கூட இருப்பீங்க இல்ல

தாத்தா இங்க சுடுமூஞ்சி டாக்டர் எல்லாம் வேண்டாம் வேற நல்ல டாக்டரா அப்பாயின்மென்ட் பண்ணுங்க தாத்தா என்றாள் அட்சயா

உள்ளே பற்களை கடித்து கொண்டாலும் வெளியே ஒன்றும் சொல்லாமல் அவளை முறைத்துக் கொண்டிருந்தான் ராஜா

தம்பி பலகார எடுத்துக் கொள்ளுங்கள் ஒரு காபி கொண்டு வரேன் என்று உள்ளே செல்ல முயன்ற சரஸ்வதி அம்மாவை நிறுத்தி ஒரு நிமிஷம் நான் உங்கள சச்சிம்மா எனறு கூப்பிடலாம் இல்ல என்றான் விக்ரம்

அம்மானு கூப்பிடுறதுக்கு என்கிட்ட எதுக்குமா அனுமதி கேட்கணும் என்று அவனுக்கும் ஒருவாய் பலகாரத்தை எடுத்து ஊட்ட ஆரம்பித்தார் சரஸ்வதி அம்மா

இதை கண்டு யாருக்கு கோபம் வந்ததோ இல்லையோ ராஜாவுக்கு கோவம் வந்தது நான் வெளியே வெயிட் பண்றேன் நீ வா. விக்ரம் என்று ராஜா வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்

அவன் பின்னாலே கொஞ்சம் பலகாரங்களையும் எடுத்துக்கொண்டு அட்சயா வந்தாள் இப்பவும் நீங்க மாறவே இல்லை என்றாள் ராஜாவை பார்த்து

நமக்கு மட்டும் சொந்தமான பொருளை அனைவருக்கும் விட்டுக் கொடுப்பது முடியுமா என்றான்

உங்களுக்கு மட்டுமே சொந்தமான பொருள்கள் எவ்வளவு தூரம் போனாலும் உங்களுக்கு மட்டும் தன் சொந்தம் அதை புரிந்து கொள்ளுங்க என்றாள் அட்சயா

என்னிடம் அடிவாங்கிறாத போயிடு என்றான் ராஜா

இந்த வார்த்தையை கேட்டுக் கொண்டே வந்தான் விக்ரம் சரி நான் கிளம்புறேன் டா நீ உள்ள போ என்று அந்த பாக்ஸை வாங்கிக்கொண்டு

சரிடா கிளம்பலாம் வா என்றான் ராஜாவிடம் ராஜாவும் தன் பைக்கில் ஏறி அமர்ந்தான் பைக் கிளம்பியது வெளிய நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் அட்சயா கண்ணீருடன்

அவனும் அவள் கண்ணீரை சைடு மிரர் வழியாக பார்த்துக் கொண்டுதான் இருந்தான்

அவனுக்கு அவளை எவ்வளவு பிடிக்கும் என்பது அவனுக்கு தெரியும் அவளுக்கு தெரியாது

ஆனால் ஒரு ஒவ்வொரு சமயமும் மற்ற சமயங்களில் எல்லாம் எங்களோடு இருப்பவள விஜயவர்மன் என்று வந்துவிட்டால் மட்டும் அவனுக்கு தான் சப்போர்ட் செய்கிறாள் என்று மனதில் பொறுமிக் கொண்டான அவனுக்கு வருத்தமே தவிர அவள் மேல் வெறுப்பு இல்லை

என்னடா சைடு மிரர்ல நியூ எல்லாம் பயங்கரமா இருக்கு என்றான் விக்ரம்

ஒன்னும் இல்ல... இப்ப ஆபீஸ் போணுமா உன்ன ரூம்ல கொண்டு விடணுமா என்றான் ராஜா

உன் வீட்டுக்கு தான் போகணும் போடா என்றான் விக்ரம் பைக் ராஜாவின் வீடு நோக்கி சென்றது















 
Top Bottom