உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 30
ராஜாவின் வீட்டிற்கு சென்ற விக்ரம் முதன் முதலில் கேட்ட கேள்வி நீ அட்சயாவை காதலிக்கிறாயா ?என்று
ஏன் இப்பொழுது இந்த கேள்வி கேட்கிறாய்? என்றான் ராஜா
தாத்தா அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொன்னார் அவளுக்கு எடுத்துச் செய்ய யாரும் இல்லை என்றும் அவள் அப்பா பிசினஸ் பிசினஸ் என்று அலைந்து கொண்டிருப்பதாகவும்
அவள் அவளது வீட்டில் தனியாகத்தான் இருக்கிறாள் அவளுக்கு திருமணம் என்று செய்துவிட்டால் கணவர் குழந்தை என்று மகிழ்ச்சியாக இருப்பாள் என்றார்
எனக்கு தெரிந்த குடும்பம் ஏதாவது
இருந்தால் சொல் என்றார்
மகிழினி போல தான் அவளும் ,அவளுக்கும் எந்த வித குறையும் இல்லாமல் செய்வேன் என்றார்
நானும் எனக்கு தெரிந்த ஒரு பையன் இருக்கிறான் ஐடி பில்டில் இருக்கிறான் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது , கோபப்பட கூட அவனுக்கு தெரியாது அவர்களிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றேன் தாத்தாவிடம்
பாவம்டா அட்சயா ...தாத்தா சொன்னதுக்கு அப்புறம் தான் புரியுது அவள் எவ்வளவு தனிமையாக இருக்கிறாள் என்று சீக்கிரமே அந்த குடும்பத்துடன் பேச வேண்டும்
குடும்பம் சென்னையில் தான் இருக்கிறது அவள் அம்மா அட்சயாவை நன்றாக பார்த்துக் கொள்வாள் என்றான்
என் அம்மாவை விட அவள நல்லா பாத்துக்க யாரும் கிடையாது என்றான் கோபமாக
அது சரி தான்டா அவ உன் அம்மா கூடவே இருக்க முடியுமா அவளுக்கென்று ஒரு குடும்பம் வேண்டாமா? நமக்கு துணையாய் இருக்கிறாள் என்று நம்மோடு வைத்துக் கொள்ள முடியுமா? என்றான் விக்ரம்
டேய் சொன்னா புரியாது அவ என் அம்மா கூட தான் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்
அப்பொழுது ஒத்துக்கொள் நீ அவளை காதலிக்கிறேனென்று முதலில் ஒன்று புரிந்து கொள் காதல் என்பது வேறு பாசம் என்பது வேறு நீ மகிழினி மீது வைத்திருப்பது பாசம் அட்சயா மேல வைத்திருப்பது காதல் உன் கண்தான் காட்டிக் கொடுத்தது எனக்கு
இன்று தாத்தாவை பார்க்க போகும்பொழுது அனைவரும் அங்கிருந்தார்கள் உன் பார்வை மட்டும் அந்த இடத்தையே அலசிக்கொண்டிருந்தது
அப்பொழுது அட்சயா வந்தபோது மட்டும் நீ ஒரு பார்வை பார்த்துக் கொண்டு திரும்பிக் கொண்டாய் அவள் உன்னை பார்க்கும் பொழுது நீ கோபமாக இருப்பது போல் நடிக்கிறாய்
இன்று இல்லடா எனக்கு மார்ச் 8 அவளை பார்த்த பொழுது சின்ன டவுட் இருந்தது இதை தாத்தா என்னிடம் பேசும்போது சொன்னாங்க ராஜா அட்சயாவை சுற்றி சுற்றி வருவான் சரஸ்வதிக்கு அவளை தன் மருமகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆசை இருந்தது ஆனால் திடீரென்று இரண்டு பேரும் பேசிக் கொள்வதில்லை
ஏன் என்று கேட்டால் எதுவுமே சொல்வதில்லை இருவரும்
சில சமயம் அட்சயா ராஜா போட்டோவை அழுவதை சரஸ்வதியே பார்த்திருக்கிறார்
சரி கொஞ்சம் காலம் போனால் சரியாகிவிடும் என்று நினைத்தோம் இரண்டு வருடங்கள் ஆயிற்று அவர்கள் நேராக பார்த்தால் பேசிக் கொள்வதில்லை என்றார் தாத்தா
ஒருவேளை நாம் தான் தவறாக ஆசையை வளர்த்துக் கொண்டோமோ? என்று எணண தோன்றுகிறது என்றார் தாத்தா
நீ தாத்தா கிட்ட ஒண்ணுமே சொல்ல வேண்டாம் எல்லாத்தையும் நாங்களே பாத்துக்கிறோம் என்று கட்டிலில் போய் படுத்துக் கொண்டான் ராஜா
சரி அத விடு நீ என்ன தாத்தா கிட்ட பேசின தாத்தா உடனே ஹாஸ்பிடல் வைக்க சரி என்று சொல்லிவிட்டார் என்றான் ராஜா
நாங்களும் எத்தனை முறையோசொல்லி இருக்கிறோம் ஆனால் அவர் சம்மதித்ததே இல்லை
நீ சொன்னவுடன் மட்டும் எப்படி சரி என்றார் என்று அவன் முகம் பார்த்தான் ராஜா
அது ஒன்னும் இல்லடா மகிழினிக்காக டாக்டர் போய் பார்க்கும் பொழுது அவ ரத்தத்தை பார்க்கும் போது கூட மனசுல பயம் வரக்கூடாது ..அப்பொழுது தான் அவ மனப்பிரச்சனைகள் சரியாகும் என்றார் அதனால் தான் அவளை அடிக்கடி நம்ம ஹாஸ்பிடலுக்கு வர சொல்ல முடியாது சோ அவளிடத்திலேயே போய் தான் சரி செய்ய வேண்டும் என்று நினைத்து தாத்தாவிடம் பேசினேன் என்றான்
அது மட்டும் இல்ல டா அவன் பயப்படுற விஷயத்தை பார்த்து பயப்படும் போது
நாம் அருகில் இருந்தால் அவளுக்கு தைரியம் வரும் அது மட்டும் இல்லாமல் அவளால தனியாக ஃபேஸ் பண்ண முடிவு முடியும் என்ற தைரியம் வர வைக்க வேண்டும் த மற்ற விஷயங்களில் எல்லாம் துணிவாக இருக்கும் பெண் இந்த ஒரு விஷயத்தில் மட்டுமே இப்படி இருப்பது சரியல்ல என்றான் விக்ரம்
சரி என்ன செய்யலாம் என்றான் ராஜா அதற்கு வெயிட் அண்ட் சீ என்றான் விக்ரம்
தாத்தாவிடம் வந்த விஜய வர்மன் என்ன தாத்தா திடீர்னு உங்க முடிவு மாற்றி இருக்கீங்க என்றான்
டாக்டர் விக்ரம் சில தரவுகளை என்னிடம் காண்பித்தார் அதன்படி எதில் பயம் ஆரம்பித்ததோ அதிலிருந்து அந்த பயம் அவர்களை விட்டு சென்றால்தான் இந்த மன நோய் குணமாகும் என்கிறார் முயற்சித்துப் பார்ப்போம் என்றார் பேரனிடம்
மறுநாள் காலையிலேயே சின்ன மருத்துவமனையே உருவானது மகிழினி கன்ஸ்ட்ரக்ஷன் உள்
எம் எம் ஹாஸ்பிடல் மகிழினி கண்ஸ்ட்ரக்ஷனுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர்
அதன்படி இரண்டு மருத்துவரும், நான்கு செவிலியர்களும் எப்பொழுதும் இங்கு இருக்கும்படியும் இதை எம் எம் ஹாஸ்பிடல் என்ற பெயரை கொண்டே செயல்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது
அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர் சின்ன சின்ன உடல் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டனர்
அவசர சிகிச்சை தேவைப்பட்டால் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் எம் எம் ஹாஸ்பிடலுக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்
இது ஒரு வகையில் எம் எம் ஹாஸ்பிடலுக்கு பெருமையாகவே இருந்தது வரவுகளையும் அதிகப்படுத்தின
இதேபோல பல கன்ஸ்ட்ரக்சன் நிறுவனங்கள் மற்றும் பல தொழில்துறை நிறுவனங்கள் தங்களுடன் அவர்களை இணைத்துக் கொள்ள நினைத்தனர்
விக்ரம் மகிழினியை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது
சில சமயம் சின்ன சின்ன வேலைகளையும் மகிழியை செய்ய வைத்தான்
தனக்கு உதவி செய் என்று கேட்பவனை என்ன செய்வது என்று சில நேரங்களில் அவனுடனே இருந்து சில மருத்துவ உதவிகளையும் செய்யத் தொடங்கினாள் மகிழினி
ஒரு சமயம் நடந்த விபத்தில் ரத்தக்காயங்களுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்
அவருக்கு சிகிச்சை செய்வதற்கு மகிழினியை அழைத்து இருந்தான் விக்ரம்
அந்த இரத்தத்தை பார்த்த பொழுது மயக்கம் வந்து விடுமோ என்று மகிழினி பயந்து நின்றாள்
விக்ரமுக்கும் அது புரிந்து தான் இருந்தது ஆனால் அவளை சரி செய்ய வேண்டிய கடமை அவனுக்கு இருப்பதாகவே கருதினான்
தன்னை சமன்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் மகிழினியை அதை பற்றி யோசிக்கவிடாமல் சில வேலைகளை கொடுத்துக் கொண்டே இருந்தான்
அப்பொழுது அவள் தன்னை மறந்து அந்த வேலைகளை செய்து கொண்டிருந்தாள்
இதனை ஒரு நல்ல அறிகுறியாக உணர்ந்தான் விக்ரம் ஒரு மருத்துவனாக
அந்த வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு அமர இருந்தவளை வா வெளியே போய் காபி குடிக்கலாம் என்று அழைத்துக் கொண்டு சென்றான்
அவளுக்கு ஏதாவது சௌரியம் ஏற்பட்டால் அவளை தாங்கிக் கொள்ளும் தூரத்தில் தான் சென்றான்
சூடாக காபி குடித்துக்கொண்டு அவளிடம் மற்ற விஷயங்களை பேச துவங்கினான் அந்த மருத்துவம் பற்றிய சிந்தனை அவள் எண்ணத்தில் வராத மாதிரி அவளுக்கு பிடித்த விஷயங்களை பேசிக்கொண்டே இருந்தான் அவள் சுத்தமாக அந்த மருத்துவ விஷயங்களை மறந்து போகும் அளவுக்கு
அவன் நடந்து வந்து கொண்டிருக்கும் போதே ராஜாவுக்கும் அட்சயாவுக்கும் தகவல் அனுப்பி வர சொல்லி இருந்தான்
இவன் சில சாக்குகளை வைத்து அவர்களை அடிக்கடி சந்திக்க வைத்துக் கொண்டிருந்தான் அவர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே நெருங்கி வந்து கொண்டிருந்தனர்
அவர்கள் வந்து இவர்களுடன் இணந்து கொண்டனர்
ராஜாவுக்குத் தெரியும் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று ஆனால் அவள் முன் அதனை கேட்டு அவளை தர்ம சங்கடப்படுத்த விரும்பாமல் எதார்த்தமாக பேசிக் கொண்டிருந்தனர்
அட்சயவிடம் மகிழினியை எங்காவது அழைத்துச் செல் என்று மெசேஜ் செய்திருந்தான் விக்ரம் நான் தாத்தாவிடமும் சச்சிம்மாவிடமும் சில முக்கிய விஷயங்கள் பேச வேண்டும் என்று அனுப்பி இருந்தான்
அதன்படி அட்சயாகும் கொஞ்சம் வெளியே போகலாமா மகிழினி எனக்கு கொஞ்சம் பொருள்கள் வாங்க வேண்டியது இருக்கிறது என்று அவளை அழைத்தாள்
சரி என்று எழுந்த பொழுதுதான் அவள் மேல் சில ரத்தக் கதைகள் இருப்பதை கவனித்தாள் அட்சயா
விக்ரமுடன் பேசிக் கொண்டிருந்த ராஜாவின் கைய மெல்லத் தொட்டு கண்ணை காட்டினாள் மகிழினியை பார்க்கும்படி அவனும் கவனித்தான் அந்த ரத்தத் துளிகளை கேள்வியுடன் விக்ரமை நோக்கினான் அவனும் அமைதி காக்கும் படி செய்கை செய்தான்
சரி சரி பெருசா ஒன்னும் இல்ல அது என் கையில இருந்தா பிளட் தான் உதறும்போது அவங்க மேல பட்டுடுச்சு போல என்று அதை பெருசா எடுத்துக் கொள்ளாதபடி செய்தான் விக்ரம்
சரி ஆட்சியா அத வாஷ் பண்ணிட்டு கூட்டிட்டு போ என்றேன் எதுவும் நடக்காதது போல விக்ரம்
அவர்கள் இருவரும் கிளம்பு வரை காத்திருந்த விக்ரம் நாம் ஜெயிச்சுட்டோம்டா என்றான் ராஜாவிடம்
வா தாத்தா விஜயவர்மன் சச்சி ம எல்லாரையும் பார்த்து பேச வேண்டியது இருக்கிறது வா என்று அவனையும் அழைத்துக் கொண்டு மகிழினி பேலஸ் நோக்கி சென்றான்
அங்கு சென்றவன் மகிழினி கண்ஸ்ட்ரக்ஷனில் உள்ள மருத்துவமனையில் இன்று நடந்த நிகழ்ச்சிகளை சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் அனைவரும் பார்க்கும்படி ஓட விட்டான்
அதில் விக்ரம் மகிழினி இடம் பேசிக் கொண்டிருந்த பொழுது ரத்த வெள்ளத்தில் ஒருவனை தூக்கி வந்த காட்சி முதல் அவரகள் எல்லா வேலையும் முடித்துக் கொண்டு வெளியே கிளம்பும் வரை பதிவாகி இருந்தது
அதைப் பார்த்து முதல் முதலில் சச்சிமாமாவின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வெளி வந்தது விக்ரமின் நோக்கி கையெடுத்து கும்பிட்டார் அப்பொழுதுதான் விஜய் வருமனுக்கு அதில் உள்ள வித்தியாசங்கள் புரிய துவங்கின
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ராஜாவை கட்டி அணைத்துக் கொண்டான் நம்ம மகிழினிடா என்றான் ராஜாவும் தன்னை மறந்து அழுது கொண்டிருந்தான்
தாத்தாவை உணர்ச்சி பெருக்கில் விக்ரமனை கட்டி அணைத்துக் கொண்டு கேட்டார் "உனக்கு என்ன வேண்டும் சொல் ,உனக்கு என்ன வேண்டும் என்றாலும் செய்கிறேன் "என்றார்.
கண்டிப்பா உங்க கிட்ட கேட்பேன் தாத்தா ஆனா இப்போது இல்லை இப்பொழுதுதான் முதல் படி எடுத்து வைத்திருக்கிறேன் முழுவதும் கடந்த பின் கேட்கிறேன் நீங்கள் மறுக்காமல் தர வேண்டும் என்றான் பீடிகையுடன் .