உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 31
வீட்டுக்கு வந்த விக்ரம் வேடம் என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு...
"என் தங்கையை பரிசா கேட்கும் எண்ணம் எதுவும் இருக்கா என்ன?" என்ற என்ற கேள்விக்கு பதிலாக விக்ரம் கேட்ட கேள்வியில் வாயடைத்து நின்றான் ராஜா
உன் தங்கைக்கு விலைமதிப்பு இருக்கா? அவளுக்கு என்று உன்னால் மதிப்பை நிர்ணயம் செய்ய முடியுமாடா? எனக்கு தெரியும்டா மகிழினியை ஒரு தராசில் வைத்து உங்கள் அனைவரின் சொத்துக்களையும் ஒரு தராசில் வைத்தாலும் நீங்கள் எல்லாம் மகிழினியின் பக்கம் தான் இருப்பீர்கள் என்று அவளை என்றும் பரிசுப் பொருளாக நினைக்க மாட்டேன் என்றான் விக்ரம்.
அதன் பின் அவர்களது வாழ்க்கை சகஜமாக மாறற தொடங்கியது
மகிழினியிடம் அதிக மாற்றங்கள் தெரிந்தன அவளே சில விஷயங்களை செய்ய ஆரம்பித்தாள்
அலுவலக பணியாளர்களின் குழந்தைகளுக்கும் மருத்துவம் கொடுக்க முன்வந்து அவர்களையும் வர வைத்து மருத்துவ முகாம் வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்தாள்
எம் எம் ஹாஸ்பிடல் நடத்து மருத்துவ முகாம் அனைத்திலும் மகிழினி கண்ஸ்ட்ரக்சன் பங்கு அதிகமாக இருந்தது
அது அவர்களுக்கு மேலும் நல்ல பெயரை வாங்கித் தந்தது
ஒரு நாள் மழை சோ என்று கொட்டி தீர்த்தது அதில் நனைந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தனர் ராஜாவும் விக்ரமும்
என்னடா வயிறு பசிக்குது என்ன இருக்கு சாப்பிட என்று கிச்சனுக்குள் சென்றான் விகரம் அவனுக்கு சமைத்துக் கொடுக்கும் வேலைக்கார அம்மா மாலையில் வர முடியாது என்று காலையில் செய்து வைத்துவிட்டு சென்ற உணவு பொருட்களை பார்த்து எல்லாம் ஆறி போயிட்டு சூடு பண்ணவா என்றான் ராஜாவிடம்
இரு நானும் வருகிறேன் என்றான் ராஜா
ராஜா உடைகளை மாற்றிவிட்டு கிச்சனுக்கு செல்லும்போது காலிங் பெல் சத்தம் கேட்டு இருவரும் வந்து கதவை திறந்தனர்
வெளியே விஜயவர்மன் கையில் கேரியர் உடன் நின்று கொண்டு இருந்தான்
எப்படி நான் என்ன வரணுமா? வேண்டாமா இருவரும் வாசலில் நின்று கொண்டிருந்தால் நான் எப்படி உள்ளே வருவது என்றான் இருவரையும் பார்த்து
இருவரும் விலகி வழி வட நேராக டைனிங் டேபிள் சென்றான்
அவன பின் தொடர்ந்த ராஜா உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டான் அவனை திரும்பிப் பார்த்து கேட்டான் விஜயவருமே என்னடா சிரிப்பு என்று
எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்று விக்ரம் அது ரொம்ப சரிதான் டா என்றான்
அவனைக் கேள்வியுடன் பார்த்த விக்ரமிடம் ஒரு காலத்தில் நாங்கள் எங்கள் வீட்டில் இருந்து பாப்பாவுக்கும் சாருக்கும் சாப்பாடு கொண்டு போவோம் ...ஆனா இப்போது அங்க இருந்து இங்க வருது எல்லாம் காலத்தின் கையில் உள்ளது என்றான் ராஜா
சரி... "நீ யாருக்கு சாப்பாடு கொண்டு வந்த எனக்கா அல்லது சாருக்கா" என்று விக்ரமை கை காட்ட எனக்கு என்று சமையலறையில் சென்று மூன்று தட்டுகளை எடுத்து வந்து பரிமாற துவங்கினான் விஜயவர்மன்
இதற்கு மேல் இவனை கலாய்த்தால் நம்மை கொன்று விடுவான் என்ற மனதில் நினைத்துக் கொண்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான் ராஜா
முன்பு போல் இருவரும் அக்னி நட்சத்திர பிரபு கார்திக் போல் சண்டை போட்டுக் கொள்வதும்மில்லை
நகமும் சதையும் போல உறவாடிக் கொள்வதும் இல்லை இருவரையும் இணைக்கும் புள்ளியும் இணைத்த புள்ளியும் மகிழினிதான்
அந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபின் உணர்ச்சி பெருக்கில் ராஜாவை அணைத்தும் கொண்ட விஜய வர்மனை மறுப்பு சொல்லாமல் அணைத்துக் கொண்டான் ராஜா
அதன் பின்பு பட்டும் படாமலும் மகிழினியை குறித்து பேசும் பொழுதும் அவர்களை இணைக்கும் பாலமாக இருந்தான் விக்ரம்
இன்று இரவு மழை அதிக மானதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவே முடியவில்லை
விக்ரம் விஜயவர்மனை அங்கே தங்கி விடும்படி கேட்டுக் கொண்டான்
ஒரு பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர் பின்னர் படுக்கைக்கு செல்லும் பொழுது விக்ரம் இரண்டு டைரிகளை எடுத்துக் எழுதிக் கொண்டிருந்தான்
அதனைப் பார்த்த விஜய் வர்மன் என்ன இது எல்லாரும் ஒரு டைரி எழுதுவாங்க நீ மட்டும் ரெண்டு எழுதற என்று கேட்டான்
அது ஏண்டா கேக்குற ஒன்னு சாரோட பர்சனல் டைரியாம் இன்னொன்னு அவன் லட்சிய டைரியாம்
தினமும் அவன் லட்சியத்தில் எவ்வளவு தூரம் வந்து இருக்கோம் அப்படின்னு எழுதுவானாம் என்றான் ராஜா
அது விஜய வர்மனுக்கு சுவாரசியத்தை தந்தது அதை பற்றி கேட்க தொடங்கினான் உன் லட்சியத்தை சொல்லு அது எனக்கு பிடித்திருந்தால் நானும் அந்த லட்சியத்தில் இணைந்து கொள்கிறேன் என்றான் அது மட்டும் இலலாமல் நானும் உனக்கு முடிந்த உதவியை செய்கிறேன் என்றான்
முதலில் சென்னையில் ஒரு பெரிய மல்டி மருத்துவமனை கட்ட வேண்டும் அதில் இல்லாத வசதிகளை இருக்கக் கூடாது
ஆனால் அவை அனைத்தும் ஏழைகளுக்கும் கிடைக்கும் படி செய்ய வேண்டும்
இடையில் புகுந்த ராஜா ஏண்டா ஏழைகளுக்கு கிடைக்க வேண்டும் என்றால் இலவசமாக செய்யப் போகிறாயா? அப்பொழுது எப்படிடா எல்லோருக்கும் சம்பளம் கொடுக்க முடியும் என்றான்
நீ என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை ஏழைகளும் பயன்படுத்திடும் படி செய்ய வேண்டும் என்று தான் சொன்னேன் தவிர இலவசமாக செய்கிறேன் என்று சொல்லவில்லை.
பணத்தின் தேவையும் அருமையும் எனக்கு உங்களை விட நன்றாகவே தெரியும் என்றான் விக்ரம்
உதாரணமாக நம் மகிழினி கண்ஸ்ட்ரக்ஷனில் வேலை செய்யும் அனைவருக்கும் சம்பளம் மதிப்பிற்கு ஏற்ப மருத்துவ பாலிசி எடுத்து கொடுக்க வேண்டும்
மிகக் குறைந்த அளவு தொகை கட்டினாலே அதிக பலன் தரும் பல பாலிசி கம்பெனிகள் இருக்கின்றன அவர்களுடன் டை அப் செய்ய வேண்டும்
அது நம் மூவருக்குமே அதாவது வேலை செய்பவர்களுக்கு பாலிசி ஆபிஸ் அதுமட்டுமில்லாமல் நமக்கும் லாபம் வந்துவிடும் புரிகிறதா? என்றான் விக்ரம் விஜயவர்மனிடம்
விஜய வர்மனால் வியக்காமல் இருக்க முடியவில்லை அவன் சிந்தனை இவனை வியக்க வைத்தது
சற்று நேரம் விஜயவர்மன் அமைதியாய் அவனை பார்த்துக் கொண்டிருந்தான்
இதை கவனித்த ராஜா கழுதை மேய்க்கும் பையனுக்கு இவ்வளவு அறிவா? என்று கவுண்டமணி டயலாக் பேசி நிலைமையே கலகலப்பாகினான்
இதுல ஒரு பர்சனல் டைரி வேற எழுதுகிறார் சார் அதுல ஒரே ஒரு பேரு மட்டும் தான் இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கலகலவென சிரித்தான் ராஜா
அது ஒரு நாள் நிச்சயமா படிப்பேன் டா என்றான் ராஜா விக்ரமிடம்
விக்ரம் அந்த டைரியை மார்போடு அணைத்துக்கொண்டு
முடியவே முடியாது டா நான் இருக்கிற வரை என்றான்
சரி சரி நேரமாகி விட்டது தூங்கு என்றபடி மூவரும் படுக்கைக்கு சென்றனர்
படுக்கையில் விழுந்த விஜயவர்மனின் மனம் எல்லாம் இவனின் லட்சியமே சுற்றிக் சுற்றி
வந்தது
மறுநாள் காலையில் டாக்டர் விக்ரம் மகிழினி கன்ஸ்ட்ரக்சன் மருத்துவமனையில் இருக்கும் பொழுது அவனுக்கு ஒரு சுற்றறிக்கை வந்தது
படித்துப் பார்த்தவன் என்ன செய்வது என்று தெரியாமல் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தான் உடனே ஓடி வந்தான் விஜயவர்மன் அறையை நோக்கி
அங்கு விஜய வர்மன் மகிழினி மற்றும் அட்சயாவிடம் அவன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்
ஓடி வந்த விக்ரம் அவனை ஆர தழுவிக் கொண்டான் தேங்க்யூ பாஸ் என்றான் உணர்ச்சி பெருக்கில் அவன் கண்கள் கலங்கின
மீண்டும் ஒருமுறை இறுக்கிய அனைத்து. அவன் கன்னத்தில் முத்தமிட்டு இதை எதிர்பார்க்கவே இல்லை பாஸ் என்றான்
நானும் தான்டா இத எதிர்பார்க்கவில்லை என்றான் விஜயவர்மன்
சாரி சாரி என்று அவனை விட்டு கொஞ்சம் விலகி நிற்க முயற்சித்தான்
அவனை மீண்டும் அணைத்துக் கொண்ட விஜயவர்மன் உன் லட்சியத்தை நான் திருடி இருக்கிறேன்
ஆனால் எனக்கு எவ்வளவு வரவேற்பு தெரியுமா? என்றான்
இவர்கள் பேசுவது மகிழினிக்கும் அட்சயாவுக்கும் புரியவில்லை
அவர்களின் இந்த சம்பாஷனைகளை வாயைத் திறந்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்
"பாஸ் உங்களுக்கு தெரியுமா? இல்லையா? என்று தெரியவில்லை ஆனால் என் லட்சியத்தில் முதல் படியில் ஏற்றி விட்டீர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் "
இல்லை நான் இதை கடக்க மூன்று நான்கு வருடங்கள் ஆயிருக்கும்
"
நீங்கள் ஒரே நாளில் என்னை நான் நான்கு ஐந்து படிகள் முன்னேற வைத்து விட்டீர்கள் என்றான்
உள்ளே வரலாமா? என்று குரல் கொடுத்தான் ராஜா என்னடா நடக்குது இங்க இன்னிக்கி ...இன்னிக்கி மீடியாவுல டாப் அப் தி நியூஸ் நம்ம கம்பெனி தான் டா என்றான் பெருமையோடு
ஸ்வீட் எங்கடா விக்ரம
உன் லட்சிய பாதையில பல படி ஏறிட்ட போல இருக்கே என்றான்
இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து விஜய் வர்மனுக்கு போன் மேல போன் அனைத்து பாலிசி கம்பெனிகளில் இருந்தும் எங்கள் கம்பெனியில் பாலிசி போடுங்கள்
உங்கள் கம்பெனியில் வேலை செய்பவர்களின் குழந்தைகளுக்கு எங்கள் கம்பெனியில் பாலிசி போடுங்கள் குறைந்த அளவு கட்டினால் போதும் என்று சில பாலிசிக்காரர்கள் சலுகை தர முன் வந்தனர்.
நாங்கள் மீட்டிங்கில் பரிசீலித்து சொல்கிறோம் என்று விஜய வரமன்போனை கட் செய்தான்