உன் காதலால் என்னை மீட்டுவிடு - 35

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
அத்தியாயம் 35

செழியன் சுபாவையும் இரண்டு கார்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன அந்த சூப்பர் மார்க்கெட் முன் அவரது கார் நின்றபோது அங்கிருந்து கடகடவென பிளாக் காட்ஸ் எட்டு பேர் இறங்கி இவர்களை சுற்றி நின்றனர்

இதை பார்த்த சுபா முதலில் பயந்தாலும் அவளுக்கு தெரியும் ஜெர்மனியில் இருந்த பொழுது பார்த்திருக்கிறாள்

அவர்கள் குடும்பத்தை சுற்றி எத்தனை பாதுகாப்பு வளையங்கள் உண்டு என்று அதனால் அவளுக்கு அது பெரிதாக தெரியவில்லை

சாமான்கள் வாங்க உள்ளே சென்றாள். அவளை பின்தொடர்ந்து செழியனும் சென்றான்

இவர்கள் வருவதை பார்த்த அந்த கடை முதலாளி ஓடி வந்து என்னென்ன வேண்டும் சார் என்று சுபாவும் செழியனும் சொல்ல சொல்ல விரைவாக ஓடி ஓடி எடுத்து வந்து அவரே பேக் செய்து கொடுத்தும் விட்டார்

வேறு எங்கேயாவது போக வேண்டுமா சுபா என்றான் செழியன் இல்லை அண்ணா வீட்டுக்கு போகலாம் என்றாள் சுபா

இங்கேயே ஏதாவது சாப்பிட்டு விட்டு அம்மாவுக்கு வாங்கி செல்லலாம்
என்றான்
சுபா திருத்திரு என்று முடித்தாள் போய்... சாப்பிடுறதா என்று

வெளியே சாப்பிடுவது பிடிக்காதா? என்றான் செழியன்

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா அம்மா அப்பா இறந்ததுக்கு அப்புறம் வெளியே எங்கேயுமே போறது கிடையாது

அண்ணா வெளியே சாப்பிடலாம் என்று கூப்பிட்டது கிடையாது

அம்மாவுக்கும் சேர்த்து வாங்கிட்டு மூணு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம் என்றாள்

இன்று மட்டும் எனக்காக என்னோடு வெளியே சாப்பிடு சுபா என்றான்

இந்த செழியன் சுபாவிற்கு வித்தியாசமாய் தெரிந்தாலன் ஏனெனில் விக்ரம் இவளிடம் சொன்ன செழியன் வேறு ஒரு ரகம்

சிடுமூஞ்சி, யாரிடமும் பேசவே மாட்டான் கோபக்காரன் என்றெல்லாம் இவனை அறிமுகப்படுத்தி வைத்திருந்தான்

மகிழினிக்கு கடிதம் எழுதும் போது தங்கைக்கும் அம்மாவிற்கும் சேர்த்து எழுதுவான் அதில் பாதி இடம் பிடித்தது என்னவோ செழியன் தான் அவனிடம் ஒவ்வொரு விஷயங்களையும் பகிர்ந்து கொள்வான்

அப்படிப்பட்டவன் எனக்காக என்று கெஞ்சுவது போல் பேசினால் குழப்பம் வரத்தானே செய்யும்

அம்மாவுக்கு போன் செய்து சொல்லிவிடு நாம் வர நேரம் ஆகும் என்று
என்றான் செழியன்

உன் டிரைவரையும் சாப்பிட அழைத்தான் அவர் இல்லை நான் வீட்டில் போய் சாப்பிடுகிறேன் என்றவுடன்
சுபாவை கூட்டிக்கொண்டு ஒரு உயர்ரக ஹோட்டலில் புகுந்தான்

செழியன் கண்காட்டியதும் அந்த ஹோட்டலில் உள்ள அனைவரும் சென்று விட்டனர் தனியாக சுபா செழியுடன் மாட்டிக் கொண்டாள்

சுபா உனக்கு விக்ரமை எவ்வளவு பிடிக்கும் என்றான்

என் அப்பா இறக்கும்போது எனக்கு வயசு வந்து 10 எனக்கு எங்க அண்ணா தான் அப்பா அவனும் இல்லை என்ற பொது என்று சொல்லிவிட்டு உதட்டை பற்களால் மூடிக்கொண்டாள்

"உங்க அண்ணன் எங்க இல்லாம போய்ட்டான் எனக்குள்ளதான இருக்கிறான்" என்று சொன்னபோது ஆச்சரியமா விரிந்தன சுபாவின் விழிகள்

நீ எது வேணாலும் உங்க அண்ணன் கிட்ட கேட்டு சண்டை போடுவியாமே அந்த குட்டி பாப்பா எங்க போனா என்றான்

அண்ணா அதெல்லாம் உங்க கிட்ட சொல்லு மா என்றாள்
எல்லாமே சொல்லி இருக்கான்

உனக்கு படிக்க ரொம்ப பிடிக்கும் மாமே அடுத்து என்ன படிக்க இருக்க என்றான்

படிக்க ஆசைதான் ஆனா அம்மா தனியா இருப்பாங்களே அதனாலதான் கரஸ்ல படிக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன் என்றாள்

அதெல்லாம் வேண்டாம் நாம சென்னைக்கு போகலாம் அங்க என்ன படிக்க வைக்கணும் என்ன பண்ணலாம் என்பதை பேசி முடிவு பண்ணலாம் சரியா?
இப்போதைக்கு நம்ம போக போற விஷயம் எதுவும் அம்மாகிட்ட சொல்ல வேண்டாம் சரியா நான் சொல்லும்போது நானே வந்து உன்னை கூட்டிட்டு போவேன் என்றான்

தனக்கு நூடில்ஸ் சுபாவிற்கு பூரியையும் ஆர்டர் செய்தான் செழியன்

உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு பூரி பிடிக்கும் என்று கேட்டுக்கொண்டு நான் ஒரு லூசு அண்ணா தான் அதையும் சொல்லி இருக்குமே உங்களுக்கு என்றாள் சிரித்துக் கொண்டே

அவளின் அந்நிய தன்மையை மாற்றும் பொருட்கள் இலகுவாக அவரிடம் பேசிக் கொண்டே வந்தான் செழியன்

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டே வருவதை பார்த்த
சரோஜினியின் மனம் நிறைவாக இருந்தது

மகிழினி பேலஸ் உள் நுழைந்தான் ராஜா அங்கு உள்ள நிசப்தமே காட்டியது இன்னும் யாரும் எழுந்திரிக்கவில்லை என்று

உள்ளே சத்தமில்லாமல் வந்தான் ஹாலில் உள்ள சோபாவில் அட்சயா உட்கார்ந்து நிலையில் தூங்கிக் கண்டிருந்தாள் அவனுக்கு தெரியும் அவள் இதுவரை தூங்கி இருக்க மாட்டாள் என்று

அவளைக் கடந்து உள்ளே செல்ல முயற்சித்த பொழுது காலடி சத்தத்தில் முடித்துக்கொண்டாள் அவனைப் பார்த்ததும் ஓடிவந்து அவனை இருக்க கட்டிக் கொண்டாள்

அவன் அழுக முயற்சிக்கும் பொழுது அவள் வாயை பொரத்தினான் மூச்சு விட முடியாத அளவு இறுக்கி அணைத்துக் கொண்டான் அவனுக்கு தெரியும் அனைவரையும் இவள் பார்த்துக் கொள்வாள்

இவள் தன் உணர்வுகளை கொட்டும் ஒரே இடம் இவன்தான் என்று

மெல்ல அவள் முதுகை தடவி விட்டான் அவள் ஆசுவாசமடையும் வரை காத்திருந்தான் அந்த அணைப்பு விலகவே இல்லை

அவள் கொஞ்சம் அமைதியானதும் மகிழினியை பார்ப்போம் வா என்றான்
முதலில் தாத்தாவை பார்த்து வருவோம் என்று தாத்தாவின் அறக்குள் சென்றனர்
அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தார்
சரி தூங்கட்டும் என்று மகிழினி அறைக்குள் புகுந்தனர் அங்கு சரஸ்வதி கட்டிலில் சாய்ந்திருக்க அவர் மடியில் தலை சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் மகிழினி

சரஸ்வதியை சரியாக படுக்க வைத்து விட்டு அந்த அறையை சாத்திவிட்டு வெளியே வந்தனர் இருவரும்

இருவரும் விஜயவர்மன் அறைக்குள் நுழைந்தனர் அங்கு அவன் தூக்கம் இல்லாமல் புரண்டு கொண்டு இருந்தான்

இவர்கள் உள்ளே நுழைவதை கண்டு அடித்துப் பிடித்து எழுந்தான்

அவனிடம் ராஜா வா நம்ம கொஞ்சம் வெளியே போகலாம் என்று அவனை கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்

செல்லும்போது பாப்பாவ பாத்துக்க என்று அட்சயவிடம் சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு விஜயவர்மனோடு புறப்பட்டான் ராஜா

அதிகாலை என்பதால் பீச்சில் அவ்வளவாக கூட்டம் இல்லை அங்கு சென்ற பொழுதும் எதையோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் விஜயவர்மன்
அவனை ஒரு இடத்திலே இருக்க சொல்லிவிட்டு

இருவருக்கும் காபி வாங்கிக் கொண்டு வந்தான் ராஜா இத முதல்ல குடி அப்புறம் பேசலாம் என்றான் விஜயவர்மனிடம்

குடித்து முடிக்கும் வரை பொறுத்து இருந்த ராஜா குடித்து முடித்தவுடன் என்னடா உனக்கு பிரச்சனை

விஜய் வர்மன் பதில் ஏதும் சொல்லவில்லை

நான் சொல்றத தெளிவா கேட்டுக்கோ இறப்பு பிறப்பு எதுவுமே நம்ம கைல கிடையாது

நீ ஏதோ ஏதோ சொன்னாயாமே? அவனை நான் கூட்டிட்டு போகலேனா செத்து இருக்க மாட்டான் என்று

இல்ல நீ கூட்டிட்டு போகலைன்னா இங்க செத்து இருப்பான் அவ்வளவுதான்
அவன் விதி அவ்வளவுதான்

உங்க அம்மா அப்பா மரணத்தை உன்னால தடுக்க முடிஞ்சுதா

அப்படி சொல்லப்போனா கூட போனது மகிழினிதான்
மகிழினி கூட்டிட்டு போனதால் தான் செத்து போயிட்டாங்க என்று சொல்லுடா

கடவுள் எல்லாத்தையும் கணக்கு போட்டு தான் செய்வார் என்று சொல்லுவாங்க அம்மா

ஆனா உன்ன சந்திக்கவே இல்லை என்று சொன்னால் அவன் லட்சியம் அவனோடு கலைந்து போய் இருக்கும்


அவனோட லட்சியத்தை உனக்கும்
அவனுடைய இதயத்தை செழியனுக்கும்
அவன் உறுப்புகளால் இத்தனை பேர் வாழ வேண்டும் என்று கடவுள் தீர்மானித்திருக்கிறார்

நன்றாக யோசித்துப் பார் நீ வேற இடத்திலேயும் உன் தங்கை வேறு இடத்திலும் இருக்கப் போறது இல்ல இருவரும் கூடுமான அழகு ஒரே வீட்டில் தான் இருக்க போகிறீர்கள் புரிகிறதா

கடவுள் மகிழ்நியை நம்மோடு வைத்திருக்க வேண்டும் என்று தான் செழியனை கொடுத்து இருக்கிறார்

உன்னை நீயே அதிகம் குழப்பிக் கொள்ளாதே
, நீ காதலிக்கிறாயா இல்லையா என்று எனக்கு தெரியாது

ஆனால் வதனப்பிரியா மகிழினியையும் செழியனையும் சேர்த்து வைப்பதற்காகவே நம் குடும்பத்தில் வருகிறாள் என்பது மட்டும் தெரிந்து கொள்

தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு உன்னையும் குழப்பி அடுத்தவரின் நிம்மதியும் கெடுக்காதே தெளிவாக இரு இதுவும் கடந்து போகும்

என்னிடமே என் அம்மா உனக்குத்தான் சொந்தம் வேண்டும் என்றால் நீ வந்து இங்கு பார்த்துக் கொள் என்று என்னை வெறுப்பேத்திய உன்னால் எதையும் சமாளிக்க முடியும் என்பதை நம்பு

நம்மால் செய்ய முடிந்த காரியம் ஒன்றே ஒன்றுதான் அவனது லட்சியத்தை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவது மட்டுமே நம்மால் முடியும்

அவன் தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்து அவர்களை பார்த்துக் கொள்வது நமது கடமை
அது மட்டும் உன் மனதில் இருந்தால் போதும் மற்றவை எதையும் போட்டு குழப்பிக் கொள்ளாதே என்றான்

ராஜா பேசப் பேச விஜய வர்மனின் முகம் தெளிவடைந்தது சரிடா மச்சான் போலாம் என்றான் சிரித்துக் கொண்டே
 

Author: நிதனிபிரபு
Article Title: உன் காதலால் என்னை மீட்டுவிடு - 35
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.