• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு - 11

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-11

கண்ணனும் தேவனும் செய்த கேலியில் காயப்பட்டிருந்த ரவியின் மனது, ஆறுதல் தேடி அலைந்துகொண்டிருந்தது. ராஜ் அருகில் இருந்திருக்க இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திராமல் போயிருக்கலாம்.

ராஜுக்கும் ரவிக்கும் ஒரே வயது என்றாலும், பொறுப்புணர்ச்சி ரவியை விட ராஜுக்கு சற்று அதிகமே! வறுமை அவனுக்கு அதை உணர்த்தி இருந்தது.

வாழ்வின் நிதர்சனங்களை அறிந்த ராஜின் வழிநடத்தல் தேவையான நேரத்தில் கிடைக்காததிலும், எபோதும் வம்பிழுக்கும் கவி திடீரென்று அமைதி காத்ததிலும் காயப்பட்டு இருந்த ரவியின் மனது பெருமளவில் தடுமாறியது.

அந்தத் தடுமாற்றம் அவனின் சுயத்தை இழக்க வைத்து கவியின் வாழ்வில் விதியாக மாறி விளையாடிவிட்டது.

கோவில் பிரகாரத்தில் அமர்ந்து முகத்தைக் கைகளால் மூடிக் கதறி அழுதுகொண்டு இருப்பவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது ரவிக்கு. இதுவரை அவள் அழுது அவன் பார்த்ததில்லை! எவ்வளவுதான் கிண்டல் செய்தாலும் கோபம் கொண்டு முறைக்கும் முகம், இன்று அழுகையில் கசங்குவதைத் தாங்கமுடியாமல், "அழாதே கவி...!" என்றான் மெல்ல.

"இதைக் கழட்டிவிடுகிறாயா...?" கன்னத்தில் வழிந்த கண்ணீரோடு, நிமிர்ந்துபார்த்துக் கேட்டவளின் கண்களில் இறைஞ்சல் இருந்தது.

"நீ முதலில் அழுவதை நிறுத்து..!"

அவன் அழுத்திச் சொல்லவும், "கழட்ட மாட்டாயா.....?" பரிதாபமாகக் கேட்டாள் கவி.

ரவிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவனுமே நினைத்ததில்லையே. ஆனால் நடந்துவிட்டது! இனி என்ன செய்வது என்றும் புரியவில்லை.

கோவிலைச் சுற்றிப் பார்வையை வேகமாக சுழற்றியவனுக்கு, ஐயரும் ஆட்டோகாரனும் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடலாம் என்று தோன்றியது. அதற்கிடையில் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தாலும் கட்டிய தாலியைக் கழட்டும் எண்ணம் சிறிதும் இல்லை அவனுக்கு!

"முதலில் அழுவதை நிறுத்திவிட்டு எழுந்திரு கவி...! யாராவது வந்தால் என்ன நினைப்பார்கள்...."

அப்போதுதான் தானிருக்கும் சூழலை உணர்ந்து பதறி எழுந்தவளின் கைகள் தானாகத் தாலியைத் தாவணிக்குள் விட்டு மறைத்துக்கொண்டது. அவளின் கைகள் செய்த செயலைத் தன் கண்களால் படம் எடுத்தவனின் உடலில், ஒருவித உணர்வுகளின் தாக்கம். தாலி மறைந்துகொண்ட இடத்தை சிலநொடிகள் தீண்டிசென்றது அவன் விழிகள்!

இது எதையும் உணராத கவி, "இருட்டுகிறது வர்மா. நான் வீட்டுக்குப் போகவேண்டும். இதைக் கழட்டித் தந்துவிட்டு நான் போகவா......" நயமாகக் கேட்டவளின் விழிகளும் அச்சத்துடன் அந்த கோவிலையே வலம் வந்தது. 'நல்ல காலம் ஐயரைக் காணவில்லை' என்றும் அந்த இளம் மனது எண்ணிக்கொண்டது.

தாலியை கழட்டுவதிலேயே அவள் குறியாக நிற்கவும், தடுமாறிய அவன் மனது மீண்டும் கோபம் கொண்டது!

"என்னடி? வாய் ஓயாமல் கழட்டு கழட்டு என்கிறாய். இதைக் கழட்டுவதற்கா உன் கழுத்தில் கட்டினேன்.." என்று அவன் சிடுசிடுக்கவும், மறுபடியும் பயத்தில் நடுங்கியது அவள் மேனி.

இதுவரை அவள் அறியாத ரவிவர்மனை அல்லவா இப்போது பார்க்கிறாள். கல்லால் அடித்து மண்டையை உடைத்தபோது கூட சிரித்தபடி நின்றவன் இன்று இப்படி கோபத்தோடு நிற்கவும் மீண்டும் கண்களில் கண்ணீர் திரண்டது அவளுக்கு!

தாலி ஒன்றைக் கட்டிவிட்டாலே, ஒருவித ஆதிக்கத்தை மனைவி மேல் செலுத்துவது ஆண்களின் இயல்பு! ஆனால் அதைப் புரிந்துகொள்ளும் வயது கவிக்கு இல்லாமல் போனதுதான் பரிதாபம்!

"இல்லாவிட்டால் நான் வீட்டுக்குப் போகமுடியாது வர்மா. அம்மா அடித்தே கொன்றுவிடுவார்கள். எனக்குப் பயமாக இருக்கிறது!" கோபம், அதட்டல், அழுகை எதுவும் அவனிடம் எடுபடாமல் போனதில் இப்போது கெஞ்சியது அவள் குரல்.

"வளவளகாமல் கொஞ்சம் பேசாமல் இரடி...!" அவளிடம் எரிந்து விழுந்தவனுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை.

யாரும் வந்துவிடுவார்களோ என்கிற பதட்டம், இனி என்ன செய்வது என்கிற தடுமாற்றம். இந்த அவதி எல்லாம் அவனுக்கு பழக்கமில்லாத விடயங்கள். எனவே சிந்திக்காது,

"நீ வீட்டுக்கு போ. உன் அம்மா அடிக்கமாட்டார்கள். நான் ராஜிடம் சொல்லிவிடுகிறேன்..." என்று, என்ன செய்வது என்று புரியாமலேயே ஒரு பதிலைச் சொன்னான்.

"வீட்டுக்கா..? ம்கூம்....! நான் போகமாட்டேன்! இப்படியே நான் போகமாட்டேன்... எனக்கு இந்தத் தாலி வேண்டாம்....நீயே வைத்துக்கொள்!" என்றபடி அவள் மீண்டும் தாலியைப் பற்றபோக,

அவளின் பின் பிடரியில் கைவைத்துத் தன்னை நோக்கி இழுத்து, "ஏய்!!, அதை கழட்டினால் உன்னை கொன்றுவிடுவேன் என்று சொன்னேனா இல்லையா...!?" என்று உறுமினான் ரவி.

ஏற்கனவே பயத்தில் நடுங்கியவளின் மேனி, எதிர்பாராமல் அவன் இழுத்ததில் அவனின் மார்பிலேயே வந்து மோதியது. அவன் நெஞ்சில் வந்து விழுந்தவள் பயத்தில் அவன் கைகளையே இறுகப்பற்றி, உதடுகள் துடிக்க, மூக்கு விடைக்க, அகன்ற கண்களில் கண்ணீரையும் அச்சத்தையும் நிரப்பி அவனை அண்ணார்ந்து பார்த்தாள்.

அவளைக் குனிந்து பார்த்தவனுக்கு, அவள் மனதின் போராட்டம் அந்த குழந்தை முகத்தில் தெரிந்தது போலும், முகம் கனிய கைகள் இரண்டாலும் அவளை சுற்றிவளைத்தான் ஆறுதலாக.

ஒரு கையால் அவள் தலையைத் தன் மார்போடு அழுத்திக்கொண்டு, "பயப்படாதே...! நான் இருக்கிறேன்...!" என்றான் இதமாக தன்னையும் மீறி!

அந்த நொடியில் அந்த இதம் அவளுக்கும் தேவை பட்டது போலும், "பயமாக இருக்கிறது வர்மா....." கேவலுடன் சொன்னவள் அவன் நெஞ்சிலேயே தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

"ச்சு, அழாதடி...! அதுதான் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேனில்லையா....!" என்றான் மெல்லிய அதட்டலாக.

"ம்...ம்..." கேவல் குறைந்தபோதும் கண்ணீர் வழிந்தது கண்களில்.

இனி என்ன செய்வது என்கிற யோசனை இருவருக்குமே வரவில்லை. அதற்கான அனுபவம் இல்லாத வயதல்லவா! இப்போது என்ன செய்வது என்று மட்டுமே சிந்தித்தனர்.

பொது இடத்தில் அதுவும் கோவிலில் நிற்கிறோம் என்பதை மறந்து அணைத்தபடி நின்றவர்களுக்கு, ஒருவரின் அருகாமை மற்றவருக்கு மிகவுமே தேவைப்பட்டது அந்த நேரத்தில்!

அதுவும் கவிக்கு, அம்மாவின் அடியில் இருந்து தன்னைக் காக்கப்போகிறவன் அவனே என்று நம்பியதில், அவனை இறுகக் கட்டிக்கொடு கண்ணை முடி அவனில் சாய்ந்திருந்தாள்.

தூரத்தில் ஐயர் வருவதைக் கண்ட ரவி, "கவி, எழுந்திரு! ஐயா வருகிறார்." எனவும்,

"ஐயோ! அவர் பாத்தால் அவர் மூலம் அம்மாவுக்கு எப்படியும் தெரிந்துவிடும்." என்றவளின் உதடுகள் மறுபடியும் அழுகையில் வளைந்தது.

"பேசாமல் இருடி லூசு..!" என்று சினந்தவன், "வா வெளியே போகலாம். இல்லையில்லை.. நீ வெளியே போ. நான் வருகிறேன்..." என்றான் அவசரமாக.

"வருவாய் தானே வர்மா...." பயத்தில் நடுங்கியவளை முறைத்தவன், "வராமல் எங்கே போகபோகிறேன். போ வருகிறேன்...!" என்றான் மீண்டும் அதட்டலாக.

ஐயர் நெருங்குவதைக் கண்டவள் வேகமாக வெளியே செல்லவும், கஷ்டப்பட்டு சாதாரணமாகப் புன்னகைத்து, "வருகிறேன் ஐயா...." என்று அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

"தம்பி! பூசைத் தட்டை விட்டுவிட்டுப் போகிறாயே...." என்று அவர் சொல்லவும், அசட்டுப் புன்னகை ஒன்றைச் சிந்தி, "மறந்துவிட்டேன் ஐயா.” என்றபடி தட்டை எடுத்தான்.

"நான் வரும்வரை இருந்ததுக்கு மிகவும் நன்றி தம்பி! கவனமாகப் போய்வா.... அம்மாவிடம் நான் கேட்டதாகச் சொல்லிவிடு...!" என்றுவிட்டுத் தன் வேலையைப் பாக்கப்போனார் அவர்.

வெளியே வந்தவனைக் கண்டவுடன், அவன் அருகில் ஓடிச்சென்று அவன் கையைப் பிடித்துக்கொண்டாள் கவி.

அவள் கையை உதறியவன், "லூசு, யாராவது பார்த்துவிட்டால் பிரச்சினை ஆகிவிடும். தள்ளி நில்லு!" என்று சிடுசிடுத்தான்.

"ஆமாமில்லை...." என்றவள் அவன் பின்னுக்கு மறைந்து நின்றுகொண்டாள். அந்த நேரத்தல் அவன் முதுகுப்பகுதியே அவளுக்கு மறைவிடமாகத் தோன்றியது போலும்....

இப்போது தாய்க்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவன், தாயைக் கைபேசியில் அழைத்தான். "அம்மா, இங்கே என் நண்பன் ஒருவனின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை... அதனால் அவனுடன் மருத்துவமனைக்குப் போகிறேன்..." என்று வாயில் வந்த பொய்யை அப்படியே சொன்னான்.

"ரவி...?!? ரவி கொஞ்சம் மெதுவாகச் சொல்லு. எதற்குப் படபடக்கிறாய்? யாருக்கு என்ன?"

"அது... அம்மா... அது, என் நண்பனின் தாய்க்கு உடம்பு சரியில்லை... அதனால் அவனுடன் மருத்துவமனைக்குப் போகிறேன்..." சொன்னதையே மறுபடியும் ஒப்பித்தான்.

"யாரின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை? அவரின் உடம்புக்கு என்ன? நீ ஏன் போகவேண்டும்?"

அவரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் முழித்தவன், "அம்மா...! அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை என்று அவன் உதவிக்கு கூப்பிடுகிறான். நீங்களானால் கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர்கள்?" என்று தாயிடமே எரிந்து விழுந்தான்.

பின்னே, இல்லாத நண்பனை யார் என்று சொல்வான்?

சில நொடிகள் அமைதியில் கழிய, "உனக்கு எதற்கு இவ்வளவு கோபம் என்று எனக்குப் புரியவில்லை! உன்னை உதவி செய்ய வேண்டாம் என்று நான் சொல்லவில்லையே... ஒருவருக்கு ஒன்று என்றால் என்னவென்று விசாரிப்பது இயல்பான ஒன்று! சரி, நீ உதவியைச் செய்! ஆனால் நேரம் கடத்தாமல் வீடு வந்துசேர்." சிறு கண்டிப்புடன் பதில் சொன்னவர்,

"பூசையை முடித்துவிட்டாயா..? ஐயா என்ன சொன்னார்?" என்று கேட்கவும், குற்ற உணர்ச்சியில் தொண்டை அடைக்க, "ம். பூசை செய்துவிட்டேன் அம்மா. ஐயா உங்களைக் கேட்டதாக சொல்லச் சொன்னார்..." என்று இழுத்தவன், "சாரிமா...." என்றான் உள்ளத்தில் இருந்து.

அவன் மனதே அவனைக் குற்றம் சாட்டியது! தான் சொன்ன பொய்யை நம்பி, யாருக்கு என்ன என்று விபரத்தைக் கூடச் சரியாகக் கேட்காது, தன் கோபத்துக்கு மதிப்பளித்த தாய்க்கு துரோகம் செய்துவிட்டோம் என்பது புரிந்தது அவனுக்கு.

அந்தக் குற்ற உணர்ச்சியில் அவன் மன்னிப்புக் கேட்க, சகுந்தலாவோ மகன் கோபத்தில் பேசியதற்கு மன்னிப்புக் கேட்பதாக நினைத்து, முகம் மலர, "சரிதான்! உன் மன்னிப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்..!" என்று சிரிப்புடன் சொன்னவர், "நீ சைக்கிளிலும் போகவில்லையே ரவி... ஆட்டோகார அண்ணா வந்துவிட்டானா... அவனுடனேயே நீ மருத்துவமனைக்கு போ..." என்றார் மகனின் நலனில் அக்கறை உள்ள தாயாக.
 

Vishakini

Moderator
Staff member
"இல்லைமா. நான்.. அது, என் நண்பன் வேறு ஏற்பாடு செய்துவிட்டான். நான் அதிலேயே போகிறேன். முடிந்தால் இரவு வரப்பாக்கிறேன். இல்லாவிட்டால் நாளை வருகிறேன்...." என்று இழுக்கவும்...

"என்னடா சொல்கிறாய்..? அதெல்லாம் சரியாக வராது...." என்றவரைப் பேசவிடாது, "அம்மா, ஆட்டோக்கார அண்ணாவுக்கு அழைத்து இங்கே வரவேண்டாம் என்று நீங்களே சொல்லிவிடுங்கள்! நான் கிளம்புகிறேன். நண்பன் வரசொல்கிறான்..." என்றவன் தாயின் பதிலுக்காய் காத்திராது பேசியை அணைத்தான். தாய் மறுபடியும் தன்னை அழைப்பார் என்று ஊகித்து அப்படியே அதனை முற்றாக அணைத்துவைத்தான்.

இதுவரை கண்கள் விரிய அவனையே பாத்திருந்தவளைப் பார்த்தவனின் முகம் முழுவதும் வேர்வையில் நனைந்திருந்தது. தாயிடம் பொய் சொன்னது அவனை அந்தளவுக்கு உறுத்தியது.

"வா....!" என்று அவளை ஒற்றைச் சொல்லில் அழைத்துவிட்டு விறு விறு என்றுநடந்தவனை வேட்டி தடுக்கவும், " ச்சே, இது வேறு...!" என்றபடி அதன் ஒரு நுனியைத் தூக்கிப் பிடித்தவாறே நடந்தான் ரவி. அவன் பின்னால் கிட்டத்தட்ட ஓடினாள் கவி.

இரவை நெருங்கிய பொழுது இருட்டி விட்டதில் கொஞ்சம் ஆறுதலாக வேறு உணர்ந்தாள் கவி. பின்னே, யாரும் பார்த்து, அதை அம்மாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டால், அடிபின்னி விடுவார்கள் அல்லவா.... இதுவரையில் தான் அவள் சிந்தனை இன்னும் இருந்தது.

ஒரு தாலிக்கயிற்றைத் தன் கழுத்தில் கட்டி, தன் வாழ்க்கைப் பாதையையே தலைகீழாக மாற்றியவன் அவன் என்பது புரியாமல், அதை இன்னுமே அழிக்கப் போகிறான் என்பதும் தெரியாமல், அவனே தன்னைத் தாயிடமிருந்து காப்பவன் என்று நம்பி அவன் பின்னாலேயே ஓடியது அந்தச் சின்னம் சிறு மொட்டு!

சிறிது தூரம் நடந்தவர்கள் எதிரே, ஒரு ஆட்டோ வரவும், அதைக் கைகாட்டி நிறுத்தினான் ரவி.

"எங்கே போகவேண்டும் தம்பி?" என்று நிறுத்திய ஆட்டோக் காரரிடம், "மலையக டவுனுக்கு வரமுடியுமா...?" என்று கேட்டான்.

"இருநூறு ரூபாய் என்றால் வருகிறேன்..."

"சரி.." என்றவன், "உள்ளே ஏறு...!" என்று கவியை ஏற்றிவிட்டுத் தானும் ஏறிக்கொண்டான்.

கவிக்கோ உதறலாக இருந்தது. முதன்முதலாகத் தாய்க்குத் தெரியாமல், அதுவும் ஒரு ஆணுடன் அவளின் கிராமத்தைத் தாண்டிச் செல்கிறாள். கைகால்கள் நடுங்கி, வேர்த்துக்கொட்டவும் ரவியின் அருகில் இன்னும் நகர்ந்து அவன் கையை இறுகப் பற்றிக்கொண்டாள்.

தான் ஒரு அந்நிய ஆணின் அருகாமையில் இருக்கிறோம் என்பதெல்லாம் அவள் உணரவில்லை! அதை உணரும் நிலையில் அவள் இல்லை!

ரவிக்கு வெளியே சுற்றித்திரிவதற்கு சகுந்தலா தடை போடுவது இல்லை என்றாலும், ஒரு பெண்ணுடன் அதுவும் தாலியைக் கட்டி மனைவி என்கிற பெயருடன் ஒருத்தியை அழைத்துச் செல்வது அவனுக்குமே மனதினுள் நடுக்கமாக இருந்தது.

அதனால் அவளின் மனநிலை அவனுக்கும் புரிந்தது. அவளின் கையை அவனும் பற்றிக்கொண்டான்.

இருட்டும், பதினைந்தே வயதானாலும் அவள் தோற்றம் பருவப்பெண்ணைப் போன்றே இருந்தபடியாலும், எந்தவிதச் சந்தேகமும் இன்றி அந்த ஆட்டோகாரரும் ஆட்டோவை எடுத்தார்.

ஒருவழியாக டவுனுக்கு வந்து இறங்கிய ரவி, கவியை அழைத்துக்கொண்டு ஒரு விடுதிக்குச்(ஹோட்டல்) சென்றான்.

அங்கே ஒரு அறையைப் பதிந்து திறப்பை(சாவி) வாங்கி, வேகமாக அவர்களுக்கான அறைக்குள் சென்று கதவடைத்தபிறகே மூச்சு வந்தது அவனுக்கு. கவிக்கோ அம்மாவிடம் இருந்து தப்பிவிட்டேன் என்று சந்தோசமாகக்கூட இருந்தது.

இதுவரை இருந்த பதட்டம், நடுக்கம் தீர இருவருமே ஆசுவாச மூச்சுக்களை எடுத்துவிட்டனர். மனதின் பதட்டம் சற்று அடங்கவே, பசி வயிற்ரை கிள்ளியது ரவிக்கு.

"நீ இரு. நான் சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன்..." என்று அவன் சொல்லவும், முதன் முறையாக அதிர்ந்து விழித்தாள் கவி.

"சாப்பாடா....?"

"பின்னே? இரவுக்குச் சாப்பிட வேண்டாமா? பட்டினியாகவா தூங்கப்போகிறாய்..?"

"என்னது? தூங்குவதா...? எங்கே இங்கேயா?" அதிர்ச்சியோடு கேட்டாள் கவி.

"ஹேய்! என்ன ஆச்சு உனக்கு..? தூங்காமல் இரவிரவாக முழித்திருக்கப் போகிறாயா...?"

அவளின் புரியாமை, அவனுக்குச் சினத்தைக் கொடுத்தது. அவளின் கழுத்தில் தாலியைக் கட்டி, அம்மாவிடம் பொய்யைச் சொல்லி, விடுதியில் அறை எடுத்து அவளைக் கொண்டுவந்துவிட, அவளோ இது எதையும் புரிந்துகொள்ளாமல் பேசுவதாகப் பட்டது அவனுக்கு.

"இங்கேயே இரு. உணவை வாங்கி வருகிறேன்..!" இழுத்துப்பிடித்த பொறுமையோடு சொன்னான்.

"தனியாகவா.....?"

அவள் பயத்தில் நடுங்குவதைக் கண்டு, "பயப்படாதே! நான் கதவை வெளியே பூட்டிவிட்டுப் போகிறேன். விரைவாக வந்துவிடுவேன். இரு...! இருப்பாய்தானே...?" அவளின் தயக்கத்தை உணர்ந்து கேட்டான்.

ஆமென்பதாக அவள் தலையை ஆட்டவும், "இப்போதே வந்துவிடுகிறேன்..." என்றுவிட்டு வெளியேறினான். மறக்காமல் வெளிப்புறமாகக் கதைவைப் பூட்டித் திறப்பை எடுத்துக்கொண்டான்.

கவிக்கோ அழுகை வந்தது. பிழை செய்துவிட்டோமோ என்று அப்போதுதான் தோன்றியது. இங்கே சாப்பிடுவதா? இரவுக்கு இங்கேயே தூங்குவதா? அதெப்படி?

அடித்தாலும் பரவாயில்லை என்று அம்மாவிடம் சென்றிருக்க வேண்டுமோ? ஆனால் அம்மா அடித்தால் வலிக்குமே.... அவரின் அடியில் இருந்து எப்படித் தப்பிக்கலாம்....? இந்தத் தாலி என் கழுத்துக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை என்று பொய்யைச் சொல்லலமா? இதைக் கட்டும்வரை நீ என்ன செய்தாய் என்று கேட்டால் என்ன சொல்வது..? கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

என்னைக் காணவில்லை என்று அம்மா தேடுவார்களே... பள்ளியால் நான் வீட்டுக்குப் போவதற்குப் பிந்தினாலே என்னைத் தேடி வருவார்களே. இப்போது இரவு வேறு. பாவம் அம்மா..! என்னைக் காணவில்லை என்றதும் அன்றுபோல் இன்றும் அழுகிறாரோ தெரியவில்லை.

தாய் அழுவார் என்று நினைத்தமாத்திரத்தில் அழுகை பொங்கவும் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தவள் கேவிக்கேவி அழுதாள். அம்மாவின் அருகாமை வேண்டும்போல் இருந்தது. அடித்தாலும் அடித்தபின் அணைக்கும் அந்த தாயின் தொடுகை, அவரின் மடியில் சுருள்கையில் கிடைக்கும் அன்னையின் சூடு, அதட்டலுடன் பேசும் அவரின் குரலில் ஒழிந்திருக்கும் பாசம் அனைத்துமே இந்த நொடி வேண்டும் என்று அவள் மனது கதறியது.

இருவருக்கும் இரவு உணவை வாங்கிக்கொண்டு அறைக்கதவைத் திறந்த ரவி அதிர்ந்து நின்றான். காரணம், சத்தமாக அழுதுகொண்டிருந்தாள் கவி. ஏற்கனவே, அடுத்து என்ன செய்யலாம்? எத்தனை நாளைக்கு இங்கே இருப்பது? என்று மண்டை காய்ந்து வந்தவனை அவளது அழுகை வரவேற்கவும், எரிச்சல் வந்தது. ஆனாலும்,

"கவி.. என்ன ஆச்சு? எதற்கு அழுகிறாய்....? கவி, இங்கே பார். நான் வந்துவிட்டேன். அழாதே..." என்று பொறுமையாக அவன் கேட்டும் தலை நிமிரவில்லை கவிநயா.

பக்கத்து அறைகளில் இருப்பவர்களுக்கு இவள் அழுகை கேட்டு, அது வேறு பிரச்சினை ஆகிவிடுமோ என்று வேறு பயமாக இருந்தது அவனுக்கு!

எவ்வளவு சொல்லியும் அவள் கேட்காமல் தொடர்ந்து அழவும், "கவி!!" என்று அவன் போட்ட அதட்டலில் அதிர்ந்து, நிமிர்ந்து விழித்தவளிடம் , "இப்போது எதற்கு ஒப்பாரி வைக்கிறாய்..?" என்று எரிந்து விழுந்தான்.

"நான்.. நான்.. அம்மா... அம்மாவிடம் போகவேண்டும்.." என்றாள் பயத்தில் நடுங்கியபடி.

ரவிக்கோ கண்மண் தெரியாத கோபம் வந்தது.

"லூசு லூசு லூசு! அதைத்தானேடி முதலே சொன்னேன்! அம்மாவிடம் போ என்று...! அப்போது மாட்டேன் மாட்டேன் என்று என் உயிரை வாங்கிவிட்டு, இப்போது போகவேண்டும் என்றால்.... என்ன? என்னோடு விளையாடுகிறாயா? என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது உனக்கு? விசரன் பைத்தியகாரன் போலவா?" என்றான் கண்களில் கனல் பறக்க.

"இல்லை. அது.. எனக்குப் பயமாக இருக்கிறது...." என்றாள் அழுகையின் ஊடே!

"முதலில் இந்தக் கண்றாவி அழுகையை நிறுத்து! உன்னை பார்க்க எனக்கு எரிச்சலாக இருக்கிறது! எப்போது பார்.. ஊஊ என்று அழுதபடி. சை!" என்றான் வெறுப்புடன்.

உடல் நடுங்க பயத்துடன் வேகவேகமாகத் தன் முகத்தைத் துடைத்துக்கொண்டவள், ஆழ மூச்சுக்களை எடுத்து அழுகையை நிறுத்த முயற்சி செய்தாள்.

அவளையே பாத்திருந்தவன், "முதலில் இதைச் சாப்பிடு! எனக்குப் பசியில் உயிர் போகிறது..." என்று அவளிடம் ஒரு பார்சலை நீட்டிவிட்டுத் தானும் ஒன்றைப் பிரித்தான்.

அந்த அறையின் ஒரு மூலையில் போட்டிருந்த மேசையில், ஒரு பக்கம் அவன் சாப்பாட்டுடன் அமர, இவள் அடுத்த பக்கம் அமர்ந்துகொண்டாள். பசி தாங்கிப் பழக்கம் இல்லாத ரவி வேக வேகமாகச் சாப்பிட, கவியோ உணவில் கையை வைத்து அளைந்தபடி இருந்தாள்.

ஒரு கட்டத்தில் நிமிர்ந்து பார்த்தவன், "சாப்பிடு கவி. அதன்பிறகுதான் இனி என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும்." என்று அவன் சொல்லவும்,

ஒருவேளை சாப்பிட்டு முடித்ததும் வீட்டுக்குக் கூட்டிச் செல்வான் போலும் என்று நினைத்தபடி உள்ளே இறங்க மறுத்த உணவைக் கஷ்டப்பட்டு விழுங்கினாள்.

ஒரு வழியாக உணவு வேளை முடியவும், கட்டிலில் வந்து சாய்ந்து அமர்ந்தவன், அவளையும் அமரச் சொன்னான்.

கைகழுவி வந்தவள், "என்ன...?" என்றாள் மறுபடியும் அதிர்ந்து.

அவன் கையை அவளே பிடித்திருக்கிறாள், அவன் அருகாமையில் ஒண்டியிருகிகிறாள். ஏன், அவன் மார்பில் சாய்ந்து அழுதும் இருக்கிறாள். ஆனாலும் இதெல்லாம் அவள் சுயத்தில் இல்லாமல் தடுமாறி நின்ற பொழுதுகளில்!

இப்போது சற்று நிதானம் திரும்பி இருக்க, அவன் அமரச் சொல்லவும், ஒரு அந்நியனின் அருகில் அமர்வதா என்று அவள் தயங்கவும், "என்ன? உன்னைத் தூக்கி இருத்தினால்தான் இருப்பாயா...?" இலகுவான குரல் என்றாலும் அதட்டினான் அவன்.

கட்டிலில் அவன் இருந்த பக்கத்துக்கு எதிர்ப் பக்கத்தில் பட்டென்று அமர்ந்துகொண்டாள் கவி. பின்னே, சொன்னதுபோல் செய்துவிட்டான் என்றால்...

கைகளை ஒன்றுடன் ஒன்று பிணைந்தபடி, தலை குனிந்து இருந்தவளையே சிறிது நேரம் பாத்திருந்தவன், "இப்போது சொல்லு..." என்றான் தன்மையாக.

மெல்லிய திடுக்கிடலோடு அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் கேள்வி இருந்தது.

"நான் வரும்போது எதற்காக அழுதுகொண்டு இருந்தாய்...?" என்று கேட்டான் அவள் முகத்திலேயே பார்வையைப் பதித்து.

"அம்மா... எனக்கு... பயமாக.. இருக்கிறது.. அம்மாவிடம் போக வேண்டும்..." என்றாள் திக்கியபடி.

இதுவரை இருந்த அவனின் இலகுத்தன்மை கொஞ்சம் குறைந்தது.

"சரி! போகலாம் வா..." கட்டிலில் இருந்து எழுவதுபோல் அவன் செய்யவும்,

"இ..தைக் கழட்டி விடவா...?" என்று தாலியைக் காட்டி ஆர்வத்துடன் கேட்டாள்.

கோபம் கொண்ட விழிகளால் அவளை உறுத்தபடி, "முடிந்தால் கழட்டு...!" என்றான் கடினமான குரலில்.

அந்தக் குரலின் கடினத்தில் அவள் மேனி நடுங்கியது.

"இல்லை... இல்லை.. " என்றது அவள் வாய் தானாக.
 

Vishakini

Moderator
Staff member
கண்களில் தெரிந்த வெற்றிக்குறியுடன், "இப்படியே உன் அம்மாவிடம் போகிறாயா...?" விடை தெரிந்த குரலில் கேட்டான் ரவி.

இல்லை என்பதாக தலை தானாக ஆடியபோதும், "ஆனால்.....ஆனா..." என்று திக்கியது அவள் குரல்.

"இதோ பார் கவி! எனக்கும் இப்படி வந்து இங்கே இருக்க விருப்பம் இல்லைதான்! நீ உன் வீட்டுக்குப் போகமாட்டேன் என்று சொன்னபடியால் தான் இங்கே வந்திருக்கிறோம். எனக்கும் வீடு இருக்கிறது. அம்மா இருக்கிறார், நானும் உன்னைப் போலவே அவரை விட்டுவிட்டு இங்கே வந்து உன்னுடன் இருக்கிறேன். அதைப் புரிந்துகொள் முதலில்!" உத்தரவாகச் சொன்னவனின் பேச்சுக்கு வேகவேகமாக ஆம் என்பதாக மண்டையை உருட்டினாள் கவி.

'ஓ.. இப்படியே போனால் அவனின் அம்மாவும் அவனுக்கும் அடிப்பார்கள் போல. அவனும் பாவம்!" என்று அவனுக்காகப் பரிதாபப்பட்டது அந்தக் குழந்தை மனதுக்காரியின் உள்ளம்!

அவன் கழுத்தில் தாலியும் இல்லை, அவன் தன் வீட்டுக்குப் போனால் எந்தப் பிரச்சினையும் வராது என்பதைக் கூட யோசிக்கும் திறன் இல்லை அவளுக்கு!

"எனக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை கவி. நாளைக்கு ஏதாவது செய்யலாம். சரிதானா..." என்றான் பொறுமையாக.

கண்களில் கலக்கம் மீண்டும் சூழ, "எனக்குப் பயமாக..." என்று மீண்டும் ஆரம்பித்தவளை,

"கவி!!" என்று அவன் அதட்டவும், மீண்டும் அழுகை வந்தது அவளுக்கு.

அவள் கண்களில் நீர் நிறையவும், "புரிந்துகொள் கவி! இப்போது இரவு பத்து மணி ஆகிறது. இனி ஒன்றும் செய்ய முடியாது. நாளைக் காலை என்ன செய்வது என்று பார்க்கலாம்! இப்போது படுத்துத் தூங்கு!" அதட்டலாக இருந்தபோதும், நான் சொல்வதைப் புரிந்துகொள் என்கிற மன்றாடலும் இருந்தது அவன் குரலில்.

அதற்கு மேல் அவனுடன் கதைக்கப் பயமாக இருந்தது அவளுக்கு! எனவே சரி என்பதாக மண்டையை ஆட்டியவள், அப்படியே அமர்ந்து இருந்தாள்.

"தூங்கவில்லையா..?"

"தூக்..கம் வர..வில்லை..." தழுதழுத்த குரலில் சொன்னாள்.

அவளுக்கு எப்போதும் தூங்குகையில் தாயின் அருகாமை வேண்டும்!
தாயோடு சண்டை என்றாலுமே, அவள் தூங்கிய பின்னர் அவளை அணைத்தபடி தூங்குவதுதான் மரகத்தின் வழக்கமும். அந்தத் தாயின் கதகதப்புக்கு ஏங்கியது அவள் மனது.

ஒன்று அருகில் இல்லாத போதுதான் அதன் அருமை புரியும் என்பார்கள். கவியே இதுவரை உணர்ந்தது இல்லை, தாய் மேல் தான் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறோம் என்பதை....

அப்படியே இருந்தவளை, "படுத்துக்கொள் கவி...!!" என்கிற அவனின் அதட்டல் கட்டிலில் சாயவைத்தது!

கட்டிலின் ஓரத்தில், முடிந்தவரை ஒடுங்கிக் குறுகிப் படுத்திருந்தவளையே பாத்திருந்தான் ரவி.

மெலிதாகக் குலுங்கிய மேனி அவள் அவள் அழுவதைக் காட்டிக்கொடுக்க, எப்போதும் சண்டைக்காக்காவைப் போல் அலைந்தவளை இப்படி அழுகையில் குலுங்க வைத்துவிட்டோமே என்று கவலையாக இருந்தது அவனுக்கு.

நிதானம் வந்துவிட்ட இப்போது, குற்ற உணர்வு ஒன்று அவனைத் தாக்கியது! நண்பர்கள் செய்த கேலிக்கு சின்னப் பெண்ணான கவியின் கழுத்தில் தாலியைக் கட்டிப் பிழை செய்துவிட்டோம் என்று விளங்கியது!

ஆனாலும், அவன் மனதின் இதுவரையான தவிப்புக்கு ஒரு முடிவு வந்தது போலும் இருந்தது! அமைதி இன்றித் தவித்த மனதுக்கு அவளைத் தன் உடைமை ஆக்கிக்கொண்டோம் என்பதில் அமைதியும் கிடைத்திருந்தது. அதனாலேயே அவள் தாலியைக் கழட்டவா என்று கேட்டபோதெல்லாம், அவன் எரிந்து விழுந்தான்.

மனதில் அவள் மீதான ஒரு சொந்தம் தோன்றவே, அவளை ஆவலுடன் பார்த்தான். அவன் மனதில் இனம்புரியா உணர்வுகளின் தாக்கம் உதயமானது! இப்போதும் அவள் மேனி குலுங்கவே, அவளின் அருகே நகர்ந்து, "கவி..." என்று அழைத்தான் மிக மிக மென்மையாக.

அவள் அசையாமல் இருக்கவே, சரிந்து ஒருபக்கமாக, அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவளின் கையின் மேல் தன் கையை வைத்து, அவளைத் தன் புறமாகத் திருப்பினான்.

திரும்பியவளின் மார்பில் புரண்ட தாலிக்கயிறு அவனுக்குள் ஒருவிதக் கர்வத்தைக் கொடுக்கத் தவறவில்லை.

அழுதழுது வீங்கிய கண்மடல்களும், விடைத்த மூக்கும், பிதுங்கிய உதடுகளும் அவன் மனதை அள்ளியது! கண்ணீரில் நனைந்திருந்த அவள் கன்னங்களை இதமாக துடைத்துவிட்டவன், "அழாதே கவி..!" என்றான் அன்பாக.

அவனின் அந்த அன்பான பேச்சில் அவளுக்கு விம்மல் வெடித்தது.

"அழாதே கவி. சொல்கிறேன் இல்லையா. அழாதே!" என்றவனின் கைகள் அவள் கண்ணீரை துடைத்து, கன்னங்களை தடவி, உதட்டில் வந்து உறவாடியது.

அனிச்சைச் செயலாக முகத்தைத் திருப்பியவள், "என்ன செய்கிறாய்...?" என்றாள் அழுகுரலில்.

"ம்...என்ன செய்கிறேன்...?" என்றான் அவனும் சிறு சிரிப்புடன். கைகளோ தன் வேலையைத் தொடர்ந்தது.

அவன் கையைத் தட்டி விட்டுவிட்டு, "சும்மா இரு வர்மா...!" என்று அதட்ட முயன்றவளின் குரல் கூச்சத்தில் மெலிந்திருந்தது.

"ஏன்...?"

'என்னது ஏன்' என்பதாக விழிகளை விரித்துக் கேள்வி கேட்டாள் கவி. விரிந்திருந்த அவள் விழிகளுக்குள் மூழ்கி விடுவோமோ என்று தோன்றியது அவனுக்கு!

ஆசையுடன் அவள் விழிகளைப் பார்த்தவனின் கண்களோ அவளைக் கழவாட அழைப்பை விடுத்தது! புரிந்துகொள்ளும் பருவம் இல்லாமல் போனதில், புரியாது விழித்தாள் கவி.

சிறு பெண்ணாக இருந்தாலும் பெண்ணல்லவா அவள்! ஏதோ ஒன்று மனதுக்கு உகந்ததாய்த் தோன்றாததால், "தள்ளிப்படு வர்மா...." என்றாள் துணிவை எல்லாம் திரட்டி.

மீண்டும், "ஏன்..?" என்றவனின் தொனி மாறி இருந்தது.

ஏன் என்று அவள் சொல்வாள்? என்னவென்று அவளுக்குமே புரியவில்லையே! ஆனால் நடக்கப்போவது சரியில்லை என்பதை மட்டும் உள்ளுணர்வு உணர்த்தியது.

"அந்தபக்கம் போ வர்மா...." பயமாக இருந்தபோதும் தைரியத்தைத் திரட்டி மீண்டும் சொன்னாள்.

"ஏய்! நான் உன் கணவன்! என்னைத் தள்ளிப் படுக்கச் சொல்கிறாயே...."
என்றவனின் கைகள், இப்போது அவன் கட்டிய தாலியை வருடியது! உரிமை உள்ளவன் நான் என்று உணர்த்தவோ?!

மேனி சிலிர்த்துக் கூச, அவன் கைகளைத் தட்டிவிட்டவள் சடாரென்று எழுந்தமர்ந்தாள்.

ரவிக்கோ கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலை. கோபமும் வந்தது.

அவள் கையைப் பிடித்து இழுத்துத் தன் மேலேயே சாய்த்துக்கொண்டவனின் உணர்வுகள் விழித்துக்கொள்ள, கைகளால் அவளை இறுக்கிக்கொண்டான்.

"விடு வர்மா...." என்று அவள் உதறவும், "பேசாமல் இரு..." என்றவனின் கைகள் எல்லை மீறவும் தன்னால் முடிந்தவரை அவனைத் தடுத்துப்பார்த்தாள் கவி!

பெண்மையின் கூச்சம் அவனை எதிர்க்க சக்தியைக் கொடுத்தாலும், அவனின் அத்து மீறல்களை அவளால் அடக்கவே முடியவில்லை!

உடல் வேதனையில் துடிக்க, உள்ளம் கதறியழ, "விடு வர்மா. வலிக்கிறது..." என்ற அவளின் மன்றாடல்கள் பயனில்லாமல் போக, அவன் கைகளுக்குள் அடங்கிப்போனாள் அவள்! அல்லது அடக்கப்பட்டாளோ....

இதயங்கள் இடம்மாறி, உயிர்கள் உறவாடி அதன்பின்னர் இணைந்திருக்க வேண்டிய உடல்கள், இன்று இனக்கவர்ச்சியின் பாதிப்பில் ஒன்றானது!
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom