அத்தியாயம்-9
அலைபாய்ந்த மனதோடு சீரான உறக்கம் இன்றி அன்றைய இரவைக் கழித்தான் ரவி.
காலையிலும் தெளியாத மனதுடனேயே பள்ளிக்கு கிளம்பியவனிடம், "இன்றும் பள்ளி முடிந்ததும் வீடு வந்துவிடுவாயாடா?" என்று கேட்டார் சகுந்தலா.
"தெரியவில்லை அம்மா, ராஜ் நேற்று பள்ளிக்கூடம் வரவில்லை. இன்று வந்தான் என்றால் அவனுடன் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வருகிறேன்..."
ராஜுடன் பழகுவது தாய்க்குப் பிடிக்காது என்று தெரிந்தாலும், அவரிடம் எதையும் மறைக்கமாட்டான் ரவி. அதனால் உண்மையைச் சொன்னான்.
"என்னவோ செய்....! ஆனால் இந்த வெள்ளியாவது பள்ளி முடிந்ததும் நேரே வீட்டுக்கு வா! பெரியார் மலையில், அதுதான் உன் நண்பன் ராஜின் கிராமத்துக் கோவிலில் நமது பூசை இருக்கிறது. நான் போகமுடியாது. அதனால் நீதான் போகவேண்டும்!"
அந்த நாட்கள் சகுந்தலாவின் மாதவிடாய் நாட்கள் என்பதால் ரவியை போகசொல்லி சொன்னார் அவர்.
"சரிம்மா. அதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறதே. இப்போதே ஏன் சொல்கிறீர்கள்?"
"நீதான் எபோதும் ஓய்வில்லாமல் வேலை பார்ப்பவன் ஆயிற்றே....! முதலே சொன்னால் தானே உன்னால் உன் முக்கிய வேலைகளுக்கு மத்தியில் அம்மா சொல்லும் வேலைக்கு நேரம் ஒதுக்க முடியும்...! அதனால் தான் மூன்று நாட்களுக்கு முதலே சொல்லி இருக்கிறேன்." என்றவர் "முக்கிய" என்பதில் அழுத்தம் கொடுத்துக் கிண்டலாகச் சொன்னார்.
தான் ஊர் சுற்றுவதைத் தாய் கிண்டல் செய்வது புரிந்து, அவரைச் செல்லமாக முறைத்தவன், "பார்ப்போம், எனக்கு நேரம் கிடைத்தால் போகிறேன்..." என்றான் மிடுக்காக.
அவனின் அந்தத் துடுக்கில் சிரித்தவர், "கவனமாகப் போய்வாடா வாயாடி..." என்றார் செல்லமாக.
"சரிம்மா..." என்றவனின் முகமும் மலர்ந்தது. அந்த நொடி நேற்றைய கலக்கங்களை மறந்திருந்தான் ரவி.
அந்தச் சிரிப்புடனேயே அவன் அவர்கள் வீட்டுக் கேட்டை தாண்டவும், அவனோடு வந்து இணைந்துகொண்ட கண்ணனைக் கண்டதும் நேற்று நடந்தவைகள் மீண்டும் நினைவுக்கு வந்தது. ரவியின் முகம் சிறு வாட்டத்தையும் காட்டியது.
"என்னடா, ஒரு மாதிரி இருக்கிறாய்?" என்று கண்ணன் கேட்கவும்,
"ஒன்றும் இல்லையே. எங்கேடா தேவன்?" என்று பேச்சை மாற்றினான் ரவி.
"என்னைப் போகச் சொன்னான். அவன் பிறகு வருகிறானாம். ஏன் என்று தெரியவில்லை...." என்று பேசியபடி ராஜின் கிராமத்துக்குச் சென்றார்கள்.
எப்போதும் ராஜுக்காக காத்திருக்கும் இடத்தில் சைக்கிளை நிறுத்தியதும் ரவியின் கண்கள் அவனை அறியாமலேயே கவியைத் தேடியது.
எதற்காக இந்தத் தேடல்? ஏன் இந்தத் தவிப்பு? தெரியவில்லை! ஆனாலும் மனதில் ஒருவித தாகம் அவனுக்கு! காரணம் புரியவில்லை. அது புரியாத வயதோ அவனுக்கு?
ராஜுக்காக காத்திருக்கிறேன் என்கிற பெயரில் சாலையையே பாத்திருந்தவனின் கண்கள் தேடியதோ கவியை! அதோ வருகிறாள் என்று மலர்ந்த முகத்தை, அருகில் இருந்த கண்ணனுக்கு காட்டிவிடாது மறைக்க முயன்றபடி அவளையே பாத்திருந்தான் ரவி.
"அங்கே பார், அந்தக் குண்டு கத்தரிக்காய் வருகிறாள்...." கண்ணனின் நக்கலில் உண்டான கோபத்தை அடக்க முடியாமல் தவித்தான் ரவி.
அவளைக் கேலி செய்யாதே என்று அவனிடம் எப்படிச் சொல்வது. இதுநாள் வரை அவன் செய்ததை இன்று கண்ணன் செய்கிறான். ஏன் அவளைக் கேலி செய்யக் கூடாது என்று கண்ணன் கேட்டால் என்ன காரணம் சொல்வான் ரவி. அவனுக்கே தெரியாத காரணத்தை என்னவென்று சொல்ல?
மனம் படபடக்க, உடல் பஞ்சாய்ப் பறக்க, அந்தப் பெரிய விழிகள் இன்னும் விரிய, தன்னை ஒரு முறை முறைத்து பார்க்கமாட்டாளா என்று ஏங்கியது அவனின் இளம் மனது! தன்னை மறந்து பாத்திருந்தவனின் மனமோ 'என்னைப் பாரடி, ஒரு தடவை… ஒரே ஒரு தடவை. என்னைப் பார் கவி. ஏமாற்றிவிடாதே.ஒரே ஒரு பார்வை...' என்று தவித்தவனின் தவிப்புக்குரல் அவளை சென்றடையவில்லை போலும்! எதிர்பார்ப்பு நிறைந்த விழிகளால் அவளையே பாத்திருந்தவனை நிமிர்ந்து பாராது, குனிந்த தலையோடு அவர்களைக் கடந்து சென்றாள் அவள்.
அவனைக் கடந்துசென்று அவன் பார்வையிலிருந்து மறைந்தே விட்டிருந்தாள் கவி!
மனம் சோர முகம் களையிழக்க திரும்பியவனைக் கண்ணனின் ஏளனம் நிறைந்த பார்வை எதிர்கொண்டது.
"பார்த்தாயா.. உன்னை அவள் பார்க்கவே இல்லை. இப்போதாவது புரிந்துகொள், பெண்கள் மத்தியில் உனக்கான மதிப்பு என்ன என்பதை." என்ற கண்ணனின் குரலில் கேலி இருந்தது.
அவனின் பேச்சில் விளைந்த கோபத்தை வெளியே காட்ட முடியாமல் அடக்கியதில் ரவியின் முகம் இறுகியது. அதுவும் கண்ணனின் முன்னிலையில் அவள் அவனை அலட்சியப்படுத்தியதாகத் தோன்றியது அவனுக்கு.
மனதில் பயத்துடன், தாயின் கண்ணீருக்குப் பயந்து, வாயையும் கண்ணையும் இறுக மூடியபடியே கவி அவனைக் கடந்து சென்றாள் என்பது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லையே!
ஒரு பார்வை பார்த்தால் குறைந்தா போவாள். இப்படி இவன் முன்னிலையில் என்னை அவமானப்படுத்திவிட்டாளே. அவன் சொன்னது போல அவள் பார்க்கும் அளவில் கூட நான் இல்லையா.. அந்த அளவுக்கு அழகற்றுப் போனேனா என்று தவித்தவனின் மனது காயப்பட்டுப் போனது.
"அவள் என்ன உலக அழகியா? என்னைப் பார்க்காமல் போகிறாளே என்று நான் தவிக்க....." முயன்று அலட்சியமாகச் சொன்னான் ரவி.
அதைக் கேட்டதும், பெரிய நகைச்சுவையைக் கேட்டவன்போல் பெரிதாகச் சிரித்தான் கண்ணன்.
"இவளே உன்னை நிமிர்ந்து பார்க்கவில்லை! இதில் உலக அழகி அளவுக்கு போய்விட்டாயே நீ..." என்றவனின், அந்த ஏளனச் சிரிப்பு ரவியின் மனதை இன்னும் இன்னும் ரணப்படுத்தியது.
"என்னை யாரும் பார்க்கவும் தேவை இல்லை! நானும் யாரையும் பார்க்கவில்லை!" ரவி இதைக் கண்ணனுக்குச் சொன்னானா அல்லது தனக்கே சொன்னானா? அவனே அறியான்!
"ராஜைக் காணவில்லை. வா போகலாம். இன்றும் அவன் வருவான் போல் தெரியவில்லை....." என்ற ரவி சைக்கிளை மிதிக்க, அதற்கு மேல் எதுவும் பேசாது நகர்ந்த கண்ணனுக்கு மனதில் சிரிப்பாக இருந்தது. சிறு கேலியைத் தாங்காது கோபிக்கிறானே என்று நினைத்தான்.
"இந்த தேவனையும் இன்று காணவில்லையேடா..” ரவி கோபமாக இருப்பது தெரிந்து,சமாதானத் தூதாக அந்தக் கேள்வியைக் கேட்டான் கண்ணன்.
"என்னவென்று தெரியவில்லை.." என்றவனின் சுருக்கமான பதிலே, அவன் கோபம் போகவில்லை என்பதைக் காட்டியது.
"வருவேன் என்று சொன்னான்டா. சிலவேளை பள்ளிக்கு நேரே வருகிறானோ தெரியவில்லை.." என்று, ரவி கொஞ்சம் கோபமாகவும் கண்ணன் சமாதானமாகவும் பேசியபடி பள்ளிக்குச் சென்றார்கள்.
ஒருபக்கம் கவியின் மௌனம் ஏன் என்று புரியாமல் குழப்பம் என்றால் மறுபக்கம் கண்ணன் தேவனின் கிண்டலால் தாழ்வு உணர்ச்சி என்று, ரவியின் மனது இனம்புரியா உணர்வுகளில் சிக்கித் தவித்தான். அது போதாது என்று புதிதாக உண்டான ஒருவித உணர்வொன்று ஓர் உறவுக்காய் ஏங்கியது. தான் என்ன எதிர்பார்க்கிறோம்? எதற்கு இந்தக் குழப்பம்? ஏன் இந்தத் தவிப்பு? அவனால் படிப்பில் கவனத்தைச் செலுத்தவே முடியவில்லை.
இனிக் கவியைப் பர்க்கச்செல்லக் கூடாது என்று முடிவு எடுத்தான். அடுத்த நாள் பெரியார்மலைக்குச் செல்லாமல் பள்ளிக்குச் சென்றவனுக்கு, பெரிதாக எதையோ இழந்துவிட்டது போல் மனது கிடந்து தவித்தது. இதற்கு அங்கே சென்று அவளையாவது பார்த்துவந்திருக்கலாம் என்று நினைத்தவனின் மனம் அவளின் தரிசனத்துக்காக ஏங்கியது.
அன்றும் ராஜ் வராததால் பள்ளி முடிந்தும் கவியைச் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. மனதில் சோர்வுடன் வீடு சென்றவனை அதிசயமாகப் பார்த்தார் சகுந்தலா.
ராஜ் வரவில்லை போலும் அதுதான் சோர்வுடன் வந்திருக்கிறான் என்று நினைத்தவருக்கு, அவனை நினைத்துச் சிறு பரிதாபம் கூடத் தோன்றியது. ஒற்றைப் பிள்ளையாகவே வளர்ந்தவனுக்கு சிறு வயது முதலே நண்பர்கள் தான் எல்லாமும்!
அவரும் அதைத் தடுப்பதில்லை. வீட்டில், தன் முகத்தை அவனும் அவன் முகத்தைத் தானும் பார்த்துக்கொண்டு இருப்பதற்குப் பதிலாக, வெளியே சென்றால் சந்தோசமாக நண்பர்களுடன் பேசி, விளையாடி பொழுதைப் போக்குவானே என்று விட்டுவிட்டார்.
அப்படிப் பழகியதில் அவன் மனதுக்கு மிகவும் நெருங்கிய நண்பன் ராஜ் மட்டுமே! காதலுக்கு மட்டுமல்ல நட்புக்குமே கண்ணில்லை! அதனால்தான் வசதியான வீட்டு ரவிக்கு ஏழை வீட்டு ராஜ் நெருங்கிய நண்பனானான்.
ராஜின் வீட்டுக்கு ரவி செல்வது சகுந்தலாவுக்கு பிடிக்காது என்பதால், தாயின் சொல்லையும் மீறாது, நட்பையும் விட முடியாது ராஜின் கிராமத்துச் சாலைவரை அவனுடன் செல்வது இவனின் வழக்கம். இதுவரை ஒரு தடவை கூட ராஜின் வீட்டுக்கு ரவி சென்றதில்லை.
ஆனால் ராஜிற்கு அப்படி எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாததால் தேவை என்று வந்தால் மட்டும் செல்வான்.
அதனால் ராஜின் வீட்டுக்குச் சென்று பார்க்கவும் முடியாமல், அவனுக்கு என்ன ஆனது என்றும் தெரியாமல் தலையை வலித்தது ரவிக்கு. இந்தக் கவி ஊமை போல் கதைக்காமல் செல்கிறாள். இந்த ராஜோ பள்ளிக்கும் வராமல் அதற்கான காரணத்தையும் சொல்லாமல் இருக்கிறான் என்று நினைத்தவனுக்கு சலிப்பாக இருந்தது.